காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வாங்கி வந்த ஒரு மர்ஃபி ரேடியோவை நான் தொடக்கூடாது என கூறியதால் மிகுந்த சிரமத்துக்குப் பின் இருபத்தி ஐந்து ரூபாய் சேர்த்து டெல்லி சரோஜினி நகருக்கு பதினைந்து பைசா தபால் கார்டில் "அய்யா, நான் மிகுந்த சிரமப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் இருபத்தி ஐந்து ரூபாய்க்கு அப்பாவின் மர்ஃபியை விட சத்தமாக பாடக்கூடிய ரேடியோவை V.P.P பார்சலில் அனுப்பி வைத்தால் நான் காமராஜ் அப்பாவிடம் (போஸ்ட் மேன்) பணத்தை கொடுத்துவிட்டு ரேடியோவை வாங்கி கொள்கிறேன்" என கடிதம் போட்டுவிட்டு ஒரு மாதம் கழித்து காமராஜ் அப்பா கையிலே நக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ என சந்தேகப்பட்டுக் கொண்டே தலை துவட்டி கொண்டு ஆபீஸ் வந்துவிட்டேன்.
ஆனாலும் அந்த கென்யாகாரனை விட மனசில்லை. அதே நம்பருக்கு விளித்தேன். போனை எடுத்த பெண்ணிடம் "ரொம்ப சந்தோஷம்ங்க அம்மணி, என்னால இப்ப இருக்கும் சூழ்நிலையிலே அவ்விட வரமுடியாது போல இருக்கு. காரை போஸ்டல்ல அனுப்பிடுங்க" என்று சொன்னதுக்கு "பரவாயில்லங்க அபிஅப்பா, ஒரு 1000 டாலர் சர்வீஸ் சார்ஜ் அனுப்பி வையுங்க நாங்க உங்க வண்டிய நல்லா நாய் தோல் போட்டு துடைச்சு பள பளன்னு அனுப்பி வைக்கிறோம்"ன்னு சொன்னதும் எனக்கு பத்திகிச்சு. சுதாகரன், திவாகரன் மாதிரி பின் சீட்டிலே உக்காந்து போகலாமா இல்லாட்டி முன் சீட்டிலே உக்காந்து வடகரை பாய் மாதிரி போகலாமா என எல்லாவிதத்திலும் யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் திரும்ப அந்த அம்மனிக்கு போன் செய்து அந்த 1000 டாலரை கழித்து கொண்டு மீதி 79000 டாலரை மணிஆர்டரில் அனுப்ப முடியுமா என கேட்க அந்த பிடிவாதகார அம்மணி "அபிஅப்பா நீங்க 1000 டாலர் அனுப்பினா நாங்க 81000 டாலரா வேண்டுமானா அனுப்பறோம். ஆனா நீங்க தான் முதல்ல 1000 அனுப்ப வேண்டும்" என சொல்லிவிட்டது.
நானும் விடாபிடியாக பேரம் பேசிகொண்டு இருக்கிறேன் SMS வழியாக. ஒரு வழியாக " ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்"ன்னு அழ ஆரம்பித்துவிட்டது அந்த அம்மணி. நான் ஒரு பெப்சிக்கு பேரம் படியுமா என யோசித்து வருகிறேன். கென்யாவிலே ஏதாவது பதிவர் இருந்தா சொல்லுங்கப்பா. நான் அவங்களுக்கு பரிசா அந்த டொயோட்டோவை தந்துவிடுகிறேன்.
கொஞ்ச நேரம் முன்னே ஒரே ஃபயர் அலாரம் சைட் முழுக்க அலறியது. சேஃப்டி ஆளுங்க அங்கயும் இங்கயும் பயர் பயர்ன்னு ஓட ஒருத்தனும் அசம்பிளி பாயிண்டுக்கு வரலை. அவனவன் அவனவன் வேலையை பார்த்துகொண்டு இருக்கான். search team ஆளுங்க சாண்ட்விச் சாப்பிடுறானுங்க. ரிஸ்க் டீம் ஆளுங்க ரிலாக்ஸா இருக்கானுவ. இது சாதாரண சேஃப்டி டிரில் தான் என எல்லோருக்கும் தெரிந்து விட்டிருந்ததே காரணம். ஆக சேஃப்டி டிரில் பெயிலியர் ஆகிப்போச்சு. காரணம் சேப்டி டிரில் 11 மணிக்கு என்கிற பரம ரகசியம் எப்படியோ கசிந்து விட்டிருக்கிறது. அது பெரிய விஷயமில்லை தான். ஒரு 100 பேருக்கு ரகசியம் கசிந்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். இப்படியாக மணி இப்போது மதியம் ஒன்று ஆகிவிட்டது. சாப்பிட்டுவிட்டு பொட்டி தட்டி கொண்டிருக்கிறேன் இப்போது!
நேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....1. திண்டுக்கல் சர்த்தாரும் உண்மை தமிழனும் ஒரே ஆள் தானா என்கிற சந்தேகம். 2. மனைவிக்கும் துணைவிக்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கோவியார் கண்டுகொண்டாரா. 3. பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமா?புஸ்ஸா போகுமா? 4. யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா. 5. ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது? 6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க? 7. ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும்? (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா) 8. ஆயில்யனின் 500 பதிவு இன்னும் எத்தனை நாளில் அரங்கேறும்.9. வெட்டி பாலாஜியின் கவுண்டர் பதிவு பாலாஜி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டதை காட்டுகிறது.10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.
மிக அதிகமாக தூக்கம் வந்ததால் கீழே வந்து ஒரு டீ சாப்பிட்டு போய் படுக்க நினைத்த போது என் கூட டீ சாப்பிட வந்த ஆள் ஒரு சேஃப்டி இன்ஜினியர். விடிந்தால் சைட்டில் காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்." போப்பா எனக்கு தூக்கம் வரவேண்டி நான் டீ சாப்பிட வந்தேன்" என சொல்லிவிட்டு வந்து படுத்துவிட்டேன். காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்................
//ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். //
ReplyDelete:)) அனேகமா இன்னிக்கு சேப்டி டிரில் 11 மணிக்குன்னு யாரோ உங்ககிட்ட நேத்தே சொல்லியிருக்கணும் கரெக்ட்டா?????
/1. திண்டுக்கல் சர்த்தாரும் உண்மை தமிழனும் ஒரே ஆள் தானா என்கிற சந்தேகம்//
ReplyDelete????????
//2. மனைவிக்கும் துணைவிக்கும் உள்ள ஆறு வித்யாசங்களை கோவியார் கண்டுகொண்டாரா//
ReplyDeleteகண்டுகொள்வார் :))
//பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமா?புஸ்ஸா போகுமா?//
ReplyDeleteபோகலாம் அல்லது போகாமலும் போகலாம்!
//யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா.//
ReplyDeleteகண்டிப்பாக....!
//5. ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது?///
ReplyDeleteசீரியஸ் பின்னூட்டமா????
(அப்ப நான் எஸ்ஸு!)
மீ தி பர்ஸ்ட்டு போடலாம்னு அவசரமா வந்தேன் ஆயில் முந்திகிட்டார்!!
ReplyDelete//6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க?//
ReplyDelete:)
//ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும்? (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா)//
ReplyDeleteநிறைய மட்டிலும் பாதிக்கலாம் :))
//8. ஆயில்யனின் 500 பதிவு இன்னும் எத்தனை நாளில் அரங்கேறும்//
ReplyDeleteமீ த எஸ்கேப்பூ:))
/
ReplyDeleteநக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ
/
நாமல்லாம் யாரு????
இப்ப இவனுங்க எஸ்.எம்.எஸ். அனுப்பற அளவு முன்னேறிட்டாய்ங்களா?? மெயில்தானே அனுப்பிட்டிரூந்தாங்க
:)))))
/
ReplyDeleteபள பளன்னு அனுப்பி வைக்கிறோம்"ன்னு சொன்னதும் எனக்கு பத்திகிச்சு. சுதாகரன், திவாகரன் மாதிரி பின் சீட்டிலே உக்காந்து போகலாமா இல்லாட்டி முன் சீட்டிலே உக்காந்து வடகரை பாய் மாதிரி போகலாமா என எல்லாவிதத்திலும் யோசனை செய்து
/
:)))))))))))
//9. வெட்டி பாலாஜியின் கவுண்டர் பதிவு பாலாஜி பழைய ஃபார்ம்க்கு வந்துவிட்டதை காட்டுகிறது///
ReplyDeleteஅனேகமாக அண்ணன் திமு காலத்துக்கு டூர் போயிருக்காரு போல :)))
/
ReplyDeleteஅம்மனிக்கு போன் செய்து அந்த 1000 டாலரை கழித்து கொண்டு மீதி 79000 டாலரை மணிஆர்டரில் அனுப்ப முடியுமா என கேட்க அந்த பிடிவாதகார அம்மணி "அபிஅப்பா நீங்க 1000 டாலர் அனுப்பினா நாங்க 81000 டாலரா வேண்டுமானா அனுப்பறோம். ஆனா நீங்க தான் முதல்ல 1000 அனுப்ப வேண்டும்" என சொல்லிவிட்டது.
/
அவங்கதானே எஸ்.எம்.எஸ் மொதல்ல அனுப்பினாங்க அப்ப பணம்
நீங்கதான் முதல்ல அனுப்பனும்!!
அட பொன் வண்டு தான் பர்ஸ்ட்டா??
ReplyDelete//10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.
ReplyDelete//
கவிதை எழுத ஆரம்பித்திருக்கிறார் என்றால் இன்னா அர்த்தம்?
//காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்." /
ReplyDeleteஆஹா வலிய வந்து மாட்டிருக்காரு போல அந்த சேப்டி :))
/
ReplyDelete" ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்"ன்னு அழ ஆரம்பித்துவிட்டது அந்த அம்மணி.
/
அன்ப்பிடுங்க அபி அப்பா!! பாவம் பொண்ணுங்க அழுதா இந்த மங்களூரான் பஞ்சு மனசு தாங்காது
:)))
அபி அப்பா இதுலெர்ந்து தெரியுதா பதிவு படிச்சதுமே சூடச்சுட நான் கமெண்ட் போட்டுட்டேன்னு :)))
ReplyDelete/
ReplyDeleteஇது சாதாரண சேஃப்டி டிரில் தான் என எல்லோருக்கும் தெரிந்து விட்டிருந்ததே காரணம். ஆக சேஃப்டி டிரில் பெயிலியர் ஆகிப்போச்சு. காரணம் சேப்டி டிரில் 11 மணிக்கு என்கிற பரம ரகசியம் எப்படியோ கசிந்து விட்டிருக்கிறது.
/
இது எப்பிடின்னுதான் தமிழ்மணத்துல இருக்க எல்லாருக்கும் தெரியுமே!!
:)))))))))
/
ReplyDeleteநேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....
/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/
ReplyDeleteகார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்................
/
தசாவதார எஃபக்ட்ல பதிவா சுத்தி வந்து அங்கயே முடிச்சிருக்கீங்க!?!?!?
விட்ருங்கப்பா பாவம் அவங்க!!
:))))))))))))
இப்ப போன் வரைக்கும் வந்திடுச்சா? நல்ல முன்னேற்றம். அப்ப எப்ப காரை இறக்குமதி செய்யப் போறீங்க?
ReplyDelete///ஆயில்யன் said...
ReplyDelete//ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள். //
:)) அனேகமா இன்னிக்கு சேப்டி டிரில் 11 மணிக்குன்னு யாரோ உங்ககிட்ட நேத்தே சொல்லியிருக்கணும் கரெக்ட்டா?????///
;)))) ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
;-))
ReplyDeleteஆமா....டோயோட்டோ வேற லெக்ஸஸ் வேறல்லோ?
ReplyDeleteடொயோட்டோ லெக்ஸஸ் பரிசு என்றதுமே முழிச்சிருக்க வேண்டாமோ?
எத்தனை SMS வேஸ்ட். நேரே போய்
வண்டியை கிளப்பிட்டு வந்திருக்கவேண்டாமோ?
கார், மடிக்கணினி, ஐபாட், விமான டிக்கெட்..ஏன் அமெரிக்காவே விழுந்திருக்குன்னாலும் அசரக் கூடாது என்று சொல்லியிருக்காங்களே! உங்களுக்கு சொல்லலையா?
ஒரு மொக்கை பதிவுக்கு ஒரு மொக்கை
பின்னோட்டம்!!!
பூனைக்கதைதானே போட்டாப் போச்சு!
ReplyDeleteகென்யாக்காரனுக்கு எப்படி தெரிந்தது உங்க வீட்டுல இருந்துயாரோ தகவலை லீக் அவுட் செய்துருக்காங்க விசாரிக்கவும்.
ReplyDelete:) ரசித்தேன்.
//ஒரு பத்து டாலராவது அனுப்புங்க ப்ளீஸ்//
ReplyDeleteடெம்ப்போலாம் வச்சாங்களாம்பா... பாவம்பா ஒரு பத்து டாலர் அனுப்பி வச்சிடுங்க..
//ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது?//
ReplyDeleteபதில் தானே? நான் உங்களுக்கு குடுத்து இருக்கேன். போய் பாருங்க. :p
அந்த கென்யாவிலிருந்து அப்படியே என் பெயரில் உள்ள பேங்க் அக்கவுண்டில் இருந்து 50 ஆயிரம் டாலர் பணத்தை உங்க கார்ல மூட்டையா போட்டு விட சொல்ல முடியுமா? :))
//விடிந்தால் சைட்டில் காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்.//
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம்...இப்படித்தான் 1+1+1 ஆகி 5000 பேருக்கும் தெரிஞ்சுருக்கும்...:)).
கென்யா sms போல, பெங்களூரில் போன மாதம் ஆளாளுக்கு ஃபோன் ரூ 6000 மதிப்புள்ள பொருட்கள் இலவசம் என. எப்பவுமே இம்மாதிரி கூப்பிடுகிறவர்களை 'நாட் இண்ட்ரஸ்டட்' என கட் செய்யும் நான் சரின்னு சும்மா விவரம் கேட்டால் (இதான வேண்டாங்கிறது.. சும்மா கிடைக்குதுன்னு கேட்டேன்னு சொல்லுங்கங்றீங்களா, சரி:) )
ReplyDeleteஹெல்த் ப்ராடெக்ட்ஸ்-ஹீட்டிங் பேட், எலக்ட்ரிக் மஸாஜர்,ஸ்டீமர் என பட்டியலிட சரி கொடுங்க என்றால் ரூ.500 டெலிவரி சார்ஜாம். எல்லாம் சைனா மேக். யாருக்கு வேணும்:)!
//நேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு.//
அப்போதே கவனித்தேன். எனக்கு நீங்கள் பின்னூட்டமிடுகையில் நடுஇரவு தாண்டி 1.30.
// ராமலெஷ்மி கவிதையில் நான் போட்ட பின்னூட்டத்துக்கு என்ன பதில் வர போகிறது?//
அப்பவே போட்டாச்சுங்க.
//யானை பற்றிய பதிவு போட்ட நானானியக்கா அடுத்து பூனை பற்றிய பதிவு போடுவார்களா.//
:)))! அவங்க சளைக்க மாட்டாங்க. ஐடியா கொடுத்தீட்டங்கள்ல. பின்னிடுவாங்க!
//பொடியன் சஞ்சய்க்கும் லக்கியாருக்கும் இருக்கும் பனிப்போர் கைகலப்பு வரை போகுமா?புஸ்ஸா போகுமா? //
ReplyDeleteஅது மனைவி - துணைவி பதிவில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்பறம் உ.த - தி.ச வேற வேற ஆளா என்று இருவரையும் சந்தித்துதான் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
****
டெல்லி ரோடியா ? பலருக்கு அந்த அனுபவம் இருக்கு 3 x 3 கட்டத்தில் கூட்டினால் 15 வந்ததா ?
:)
அபி அப்பா!!
ReplyDelete:):):)
ஆயில்யன் எல்லா வரிகளையும் காப்பி பேஸ்ட் செய்துட்டதால எனக்கு வேலை இல்லாம செய்துட்டார்னு பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்:)
நேற்றும் இன்றும் தொடர்ந்து SMS உங்களுக்கேவா?
ReplyDeleteஉங்கள் எண் ரொம்ப பிடித்து விட்டதா அல்லது விடா முயற்சியா?
பொன்வண்டு ! ந்ன்றிப்பா! சிரிச்சமைக்கு:-))
ReplyDeleteஆயில்யா திரும்ப ஒரு தடவை பதிவை படிப்பா! நான் தான் தெளிவா சொல்லியிருக்கேனே:-))))
ReplyDeleteமங்களூர் சிவா! நன்றி !!! மிக்க நன்றி!
ReplyDeleteதமிழ்பிரியன்! வாங்க நலம் தானே! மிக்க நன்றி! வருகைக்கும் கருத்துக்கும்!:-)))
ReplyDeleteநன்றி மிஸ்ட்டர் கோபி!!!
ReplyDeleteநானானியக்கா மிக்க நன்றி!!!! மிக்க நன்றி!!! பூனை பதிவு போடுவீங்க தானே!!! அப்பதானே கோபாலகிருஷ்ணா சந்தோஷப்படுவாரு:-)))))
ReplyDeleteமுத்துலெஷ்மி! வாங்க வணக்கம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!
ReplyDeleteநம்ம வீடு என்பதே தமிழ்மணம் தானே:-))))) யார் கசிஞ்சு இருப்பாங்கன்னு தெரியலை:-))))
முடியவே முடியாது பு பட்டியான்! பெப்சிக்கு ஓக்கேன்னா ஓக்கே டீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்:-)))
ReplyDeleteஅம்பி நான் அங்கே போய் உங்களுக்கு பதில் சொல்றேன்:-)) உங்க அழும்பு தாங்கலைப்பா:-)))
ReplyDeleteநியூபீ! நீங்களுமா!!! நான் ரகசியம் காப்போனாக்கும்:-))))
ReplyDeleteராமலெஷ்மியக்கா! நீங்க திண்ணையிலே எல்லாம் உக்காந்து எழுதும் பெரியபதிவரா! தெரியாம போச்சே!!! இனி ஜாக்கிரதையா வருவேன்!!! நமக்கு கவிதைன்னா கொஞ்சம் அலர்ஜி, அதுக்காகவே நம்ம தங்கச்சிக இருக்காங்க அவங்க பார்த்துப்பாங்க!!!
ReplyDeleteஆனா மெகா சீரியலை விட்டுடாதீங்க பல பதிவுக்கு மேட்டர் கிடைக்கும்::-)))))
கோவியாரே! இங்க வந்தாச்சா! நான் அங்கே போறேன்!!!:-)))
ReplyDeleteவல்லியம்மா! வருகைக்கும் கருத்துக்கும் நன்னி! நாளை போனில் மீதி சொல்லிக்கறேன்!!!!:-)))
ReplyDeleteசுல்தான் பாய்! தங்கள் வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி!!!!!போன் பண்ணுக ப்ளீஸ்! எனக்கு உங்க நம்பர் இப்போ இல்லை!!!
ReplyDelete:)
ReplyDeleteசூப்பரு...
ReplyDelete//10. மங்களூர் சிவா ஏன் கவிதைக்கு கண்வர்ட் ஆகிவிட்டார்.
ReplyDelete//
இதுக்கு ஆவன செய்யுறதுக்கு யாருமே இல்லையா...?
//6. சினிமா நிருபர் போட்ட நயந்தாரா படத்தை நான் பார்க்கவில்லை என நான் எந்த கோவிலில் போய் சத்தியம் செய்தால் மக்கள் நம்புவாங்க?//
ReplyDeleteசத்தியமெல்லாம் தேவையில்லை நீங்க சாதாரணமா சொன்னாவே நம்புவாங்க...:)
//ரஷ்ய மருத்துவர்அய்யா ராமனாதன் போட்ட லேட்டஸ்ட் பதிவு பதிவுலகத்தை எந்த மட்டிலும் பாதிக்கும்? (அய்யனார் உனக்கு கோவில் கட்டி கும்பிடலாமய்யா)//
ReplyDelete?????
புரிந்த வரை பாதிக்கும்..
மங்களூர் சிவா சொன்னது...
ReplyDelete///நக்கி நக்கி எண்ணி இருபத்தி ஐந்து செலுத்தி ஒரு அருமையான செங்கல்லை வாங்கியவன் இந்த ஆபீஸர் என்பது அந்த கென்யாகாரனுக்கு தெரிந்திருக்குமோ
/
நாமல்லாம் யாரு????///
ரிப்பீட்டு...
//காலை 11 மணிக்கு சேஃப்டி டிரில் இருப்பதால் அதற்கான வேலை எல்லாம் செய்து கொண்டு இருப்பதாகவும் தூக்கம் கலைக்க ஒரு டீ சாப்பிட வந்ததாகவும் சொன்னான்." //
ReplyDelete"சொ-செ-சூ" வுல இதுவும் ஒரு வகை...:))
///நேற்று இரவு நான் தூங்க போகும் போது மணி விடியற்காலை இரண்டு. அதுவரை தமிழ்மணத்திலே மேய்ந்து கொண்டிருந்ததில் சில விஷயங்கள்....///
ReplyDeleteஇப்பவும் இதுதான் நடக்குது போல...
(ஆடுமாடுன்னு பெயர்வச்சு ஒருத்தரு எழுதறது சரியாத்தான் இருக்கு)
சூப்பரா முடிச்சீங்க :-)
ReplyDeleteஇன்னுமா தூங்கல நீங்க...
ReplyDelete-- வடகரை பாய் மாதிரி போகலாமா --
ReplyDeleteஅபி அப்பா இது என்ன நம்மள போட்டு தாக்குற மாதிரி தெரியுது? ஊரு வரைக்கும் வந்துட்டீங்க அப்படியே என்னை யாருன்னு கண்டுபிடிங்களேன் பார்ப்போம்.
நன்றி ராம்!!!
ReplyDeleteநன்றி தமிழன்!!வருகைக்கும் கருத்துக்கும்!! தூங்க போயாச்சு! குட் நைட்!!!
வாங்க வெட்டி பாலாஜி!! எப்படியோ ஆரம்பிச்ச இடத்திலே முடிச்சுட்டேன்:-)))
சும்மா இப்ப்ப்ப்ப்ப்படி பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன், பதிவை இன்னும் படிக்கலை, பின்னூட்டங்களைப் பார்த்தால் நல்ல பதிவுனு தோணுது!!! கடைசியிலே பின்னூட்டம் கொடுத்திருக்கேனே, வழக்கம்போல் பதிலா சொல்லப் போறீங்க??? வரேன்!!!!!!!! :P
ReplyDelete//அது பெரிய விஷயமில்லை தான். ஒரு 100 பேருக்கு ரகசியம் கசிந்தால் பரவாயில்லை. ஒட்டுமொத்த 5000 பேருக்கும் எப்படி கசிந்தது என எல்லோரும் ஆச்சர்யமாக காரணத்தை யோசித்து கொண்டிருக்கிறார்கள்//
ReplyDeleteஅந்த ரகசியம் எனக்கு மட்டும் தான் தெரியுமா? :P.. திருவாரூர்ல இருந்து மாயவரம் வர வரைக்கும் பஸ்ல இருக்கிற எல்லாரும் என்னை கேனையனு நெனைக்கிற அளவுக்கு சிரிக்க வச்ச அந்த ரகசியம் எனக்கு மட்டுமே தெரியுமோ.. :))))
//:)) அனேகமா இன்னிக்கு சேப்டி டிரில் 11 மணிக்குன்னு யாரோ உங்ககிட்ட நேத்தே சொல்லியிருக்கணும் கரெக்ட்டா?????//
கலக்கல் ஆயில்ஸ்... ஆனா அவரு சாதரனமா சொல்லி இருந்தா பரவால்ல.. இதுக்கு முன்னாடி அபி அப்பாவை பகைச்சிகிட்டது மறந்து கொஞ்சம் கொஞ்சம் அப்டி இப்டி இருக்கும் போது உளறிட்டார்.:))
அது டீ குடிக்கும் போது நடந்த சம்பவம் இல்லை...அபி அப்பா உல்ட்டா பண்ணிட்டார்... :P
இதையெல்லாம் மொக்கைன்னா நாங்க எழுதறத என்னான்னு சொல்றது?
ReplyDelete:-) இங்க ஒருத்தர் ரகசியம் சொல்ல உங்கள தேடிட்டு இருக்கார் அண்ணா..!! ;-)
ReplyDelete//. காலை ஐந்து மணிக்கு எல்லாம் ஒரு SMS என் கைபேசியில். எனக்கு 80000 அமரிக்க டாலர் மதிப்புள்ள டொயோட்டோ லெக்சஸ் கார் பரிசு விழுந்திருப்பதாகவும் அதை நான் கென்யாவில் வந்து பெற்றுக்கொள்ள வர வேண்டுமாய் கேட்டுக்கொண்டது அந்த் SMS. எழுந்து குளிக்க போய்விட்டேன்.................
ReplyDelete//
அப்போ,எதாவது பரிசு விழுந்தாத்தான் குளிப்பது என்ற அபி அப்பாவின் விரதம் இப்படியாக முடிவுக்கு வந்ததுன்னு சொல்லுங்க:P