"அடியேன் ராமானுஜதாசன்" என்கிற அதிரடியில் ஆரம்பிக்கும் படம் படமுடிவில் கே.எஸ்.ரவிக்குமார் "உலகநாயகனே" என பாட தொடங்கும் வரை நீடிக்கிறது. நடு நடுவே அஸினோடு பிசின் போல ஒரு டூயட் பாடியிருந்தால் கூடவோ, அல்லது கமலின் கூட்டாளிகள் வையாபுரி,சந்தானபாரதி,ரமேஷ்கண்ணா,சிட்டிபாபு,பாஸ்கர் ஆகியோர் கொஞ்சம் நீட்டி வாசிச்சு இருந்தாலோ படம் பப்படமாகியிருக்கலாம். பண்ணிரண்டாம் நூற்றாண்டில் நடந்த அல்லது நடந்ததாக நம்பப்படும் ஒரு நிகழ்வோடு அதற்கான கமலின் விளக்க பின்னனி குரலோடு ஆரம்பிக்கிறது படம்.
அடுத்த காட்சி நேராக வாஷிங்டன் தாவிவிடுகிறது நிகழ்காலத்திக்கு. அதாவது சமீபத்து நான்காம் தேதி, டிசம்பர் மாதம் 2004 அன்று ஆரம்பமாகும் கதை டிசம்பர் 26ம் தேதி வேளாங்கண்னி சுனாமியில் முடிவடைகிறது. இந்த இருபத்தி இரண்டு நாட்கள் ஓட்டம் தான் படத்தின் கதை.
அமரிக்க விஞ்ஞானியான கமல் கண்டிபிடிக்கும் ஒரு வஸ்து ஒரு நாட்டையே அழிக்க கூடிய அளவிலான சக்தி கொண்டதாக இருக்கிறது என்பதை அந்த லாபரட்ரியின் 'அனு' குரங்கின் மூலமாக சின்னதாய் ஆனால் பிரம்மாண்டமாய் நமக்கு புரிய வைத்த கோவிந் என்கிற விஞ்ஞானி கமல் சென்னையில் கொல்டி பாலாஜிக்கு ஸாரி பல்ராம்நாயுடுவுக்கு புரிய வைக்க "சார் உங்களை விட கொஞ்சம் சீனியர் யார்கிட்டயாவது நான் பேசனும்"ன்னு மாட்டிகிட்டு விழிப்பது அருமையோ அருமை.
லைட்டர் மாதிரியான டப்பாவில் இருக்கும் அந்த வஸ்து அமரிக்காவிலிருந்து ஒரு "பேக்கு" நண்பனின் சொதப்பலால் சிதம்பரம் கீழசன்னதிக்கு கூரியர் அனுப்பப்படுகிறது. ஆங்கிலேய வில்லன்(அதுவும் கமல் தான்) தன் குபீர் மனைவி மல்லிகாஷெராவத்துடன் அதை துரத்தி சென்னை செங்கல்பட்டு, பாண்டி வழியாக சிதம்பரம் வர, விஞ்ஞானி கோவிந்தும் வர கீழ சன்னதியில் தான் அய்யங்கார் ஆத்து பொண் அசின், அவரின் 94 வயது பாட்டி கிருஷ்னவேணி (அதுவும் கமல்) இருவரும் கதையில் பிசின் போல ஒட்டுகிறார்கள். அந்த டப்பா கோவிந்தராஜரின் உற்ச்சவமூர்த்தியின் உள்ளே போய் விடுகிறழ்து பாட்டியின் லீலையால். அதற்கு மேல் மல்லிகாவின் கால்ஷீட் கிடைக்காதமையால் கீழசன்னதியிலேயே அவர் கதை முடிகிறது.
பின்னெ என்ன கோவிந், அசின்கூட கோவிந்தராஜரும் பயணிக்கிறார். அப்படியே வேளாங்கண்ணிக்கு போயிடறாங்க. நடுவே ஏழு அடி உயர கலிபுல்லாகான் கமல் அவங்க அப்பா நாகேஷ், அம்மா விஜயா எல்லாம் எதுக்கு வந்தாங்கன்னு சொல்ல முடியலை.
அதே போல பஞ்சாபி அவ்தார்சிங்(கமல் தான்) மனைவி ஜெயப்ரதா அண்ட் கோ வர்ராங்க. அதை எல்லாம் விடுங்க. இப்படியே போய் அந்த வில்லனையும் அந்த வஸ்துவையும் சுனாமி வந்து அழிச்சிடுது. 12ம் நூற்றாண்டில் கடலின் உள்ளே போன கோவிந்தராஜ பெருமாள் வந்து கரை ஒதுங்கி இருக்கார். இந்த காட்சிகளின் போது சுனாமி பிணங்கள் மீது நம் கவனம் போய் விடுவதால் கமல் அசினிடம் பேசும் வசன விளக்கம் எதுவும் நம் காதில் விழாமல் போய் விடுகிறது.
இதன் நடுவே வின்செண்ட் பூவராகவன் என்கிற நாகர்கோவில் தமிழ் பேசும் பாத்திர கமல். என்ன திடீர்ன்னு கருப்பு எம்ஜிஆர்ன்னு பார்த்தா அவரும் கமல். அருமையான நடிப்பு.
இதன் நடுவே ஜப்பான் கமல். பத்து வேஷம் போடனும் என முடிவு செஞ்சாச்சு. அதனால அவரும் படத்தில் உண்டு.
இதுதாங்க படம்.
இப்போ என் கருத்து. படம் நல்லா இருக்கு. அருமையான உழைப்பு இருக்கு. அர்பணிப்பு அப்பட்டமா தெரிகின்றது. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி "இன்ஷா அல்லா"ன்னா இன்னா அர்த்தம் என டைரக்டருக்கு தெரியல, சிதம்பரம்-வேளாங்கண்ணி ரூட் சரியா இல்ல. அது நொட்டை இது சொத்தை என்று சொல்வதெல்லாம் மகா பாவம். அது அந்த உலக கலைஞனை உற்சாகம் இழக்க செய்யும். படம் பாருங்க. ஆனால் அதுக்கு முன்னால செய்ய வேண்டிய விஷயத்தை சொல்கிறேன்.
1. தயவு செய்து விமர்சனங்களை படிக்காதீர்கள். குறிப்பாக தமிழ்மண விமர்சனங்களை படிக்காதீர்கள்.
2. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை பக்கத்தில் உள்ளவர்கள் பேசுவதை கேட்க வேண்டாம்.(என் பக்கத்தில் ஒரு பொண்ணு அநியாயம் பண்ணிடுச்சு. ராமானுஜதாசரின் மகனாக ஒரு 5 வயசு பையன் வருவான். அவனையும் கமல் தான் என சத்தியம் செய்கிறது. அதன் கூற்று படி 547 வேஷத்திலே கமல் வர்ரார் படத்திலே.
3. ஆளவந்தான், அன்பேசிவம் மாதிரி ஆயிடுமோன்னு பயந்துகிட்டே போகாதீங்க!
4. சின்ன சின்ன லாஜிக் உதைத்தால் தள்ளி உக்காந்துக்கவும்.
5. படத்தில் எனக்கு பிடிச்ச ஒரு நகைச்சுவை வசனம், ஒரு அய்யங்கார் கேட்ப்பார் சிபிஐ பல்ராம் நாயுடுவிடம் "அழகிய சிங்கர்" தெரியுமான்னு, அதுக்கு பல்ராம் நாயுடு சொல்வார் "மடோனா வான்னு"
6. மல்லிகாவை சிதம்பரம் கீழசன்னதியில் தூக்கி சொருகாமல் வேளாங்கண்ணி வரை தள்ளிகிட்டு போயிருக்களாம். அதுவும் மயிலாடுதுரை வழியா போயிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.
7. தமிழ் எந்த அளவு தெரியும் என்பதற்கு தனக்கு பெரிய அளவில் தமிழ் தெரியும் என மல்லிகா சொல்வது கமலின் உத்தியா ரவிகுமாரின் புத்தியா என எல்லாம் ஆராயாமல் அனுபவிக்கனும்.
8. படத்தில் காமடி வசனம் என் பார்த்தால் கலிபுல்லாகான் வசனம் தான். ஆனாலும் அந்த உச்சரிப்பால் புரியாமல் போய்விடுகிறது.
9. அந்த ஜப்பான் பொண்ணு பேசும் தமிழ் அப்படியே டிபிக்கல். சூப்பர்ப்..
10. பாட்டி கமல் கலக்கல். கருப்பு கமலை மடியில் போட்டு பேசும் வசனம் "அவனுக்கு உள்ளே வெள்ளை மனசு. அய்யோ கொழதே வைகுண்டம் போயிட்டியா" ன்னு கலங்க வைக்கிறார்.
11. ஜெயப்ரதா, சிங் கமல் அருமை.
12. ஒளிப்பதிவும் சூப்பர், ஒலிப்பதிவும் சூப்பர்( என்னத்துக்கு வம்பு ளி,லி ன்னு குழம்பிகிட்டு)
13. கமலின் வசனம் அருமை. ஆனா குழப்பம் அதிகமா இருக்கு. கடவுள் இல்லைன்னு சொல்ரீங்களான்னு கேட்டா ஆம் இல்லைன்னு பதில் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும். இருந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு சொன்னா அது வழக்கம் போல கமல்தனமாவே இருக்கு.
14. முகுந்தா முகுந்தா பாட்டும், கல்லை மட்டும் கண்டால் பாட்டும் கேட்டுகிட்டே இருக்கலாம்.
அபிஅப்பா பதிவு படிக்காமலே விமர்சனம் போட்டார் என யாரும் சொல்ல முடியாத அளவு ஒரு சேதி சொல்கிறேன். என் கூட லொடுக்கு, பாஸ்ட் பவுலர் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்தார்கள். இது என் முதல் விமர்சனம். எப்படி இருக்குன்னு சொல்லுங்க மக்கா!!
//தயவு செய்து விமர்சனங்களை படிக்காதீர்கள். குறிப்பாக தமிழ்மண விமர்சனங்களை படிக்காதீர்கள்//
ReplyDeleteமுரண் :))))
(அய்யோ பாதி படிச்சிட்டோமே!!!)
//மல்லிகாவை சிதம்பரம் கீழசன்னதியில் தூக்கி சொருகாமல் வேளாங்கண்ணி வரை தள்ளிகிட்டு போயிருக்களாம். அதுவும் மயிலாடுதுரை வழியா போயிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.//
ReplyDeleteநானும் கூட சந்தோஷப்பட்டிருப்பேன் :)))
//இதன் நடுவே ஜப்பான் கமல். பத்து வேஷம் போடனும் என முடிவு செஞ்சாச்சு. அதனால அவரும் படத்தில் உண்டு.//
ReplyDeleteபடத்துல மத்த வேஷங்களில் மத்த கேரக்டர்கள் இருக்கா இல்லையா
ஒரே கமல் ஆக இருக்கு! ( ஒரே கமலா இருக்குன்னு போட்டா யாரு கமலான்னு ஒரு ? வருது!)
//இந்த படத்துக்கு விமர்சனம் எழுதி "இன்ஷா அல்லா"ன்னா இன்னா அர்த்தம் என டைரக்டருக்கு தெரியல, சிதம்பரம்-வேளாங்கண்ணி ரூட் சரியா இல்ல. அது நொட்டை இது சொத்தை என்று சொல்வதெல்லாம் மகா பாவம். அது அந்த ,உலக கலைஞனை உற்சாகம் இழக்க செய்யும்.//
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி!
நீங்களுமா?...விமர்சனம்?படம் பாத்தீங்க;ளா பார்த்தவங்க சொன்னதைக் கேட்டீங்களா?
ReplyDeleteஎது எப்படின்னாலும் கமலின் ஒவ்வொரு புது முயற்சிக்கும் அவரின் ஈடுபாட்டிற்கும் இணையில்லை.
//இது என் முதல் விமர்சனம்.//
ReplyDeleteஅண்ணாச்சி, இப்படி படத்தோட கதை முழுக்க சொல்லிட்டு விமர்சனம்னா எப்படிங்க? :-(
படத்தைப் பாக்குற ஆவலை நிறையவே தூண்டி விட்டுட்டிங்க.
ஆஹா,படத்தை விட பதிவு நல்லா இருக்கே.
ReplyDeleteரொம்ப நாளாச்சு ,இப்படி சிரிச்சு. நன்றி அபி அப்பா.:)
Sify.com வின் விமர்சணம் வெளிந்துள்ளது. விருப்பம் உள்ளாவர்கள் கீழே உள்ளே Linkஐ க்ளிக் செய்யவும்
ReplyDeletehttp://sify.com/movies/tamil/review.php?id=14693882&ctid=5&cid=2429
வாங்க ஆயில்யன்! பாதி படிச்சாச்சுல்ல மீதியயும் படிங்க!!
ReplyDelete***************
மல்லிகாவை மாயவரம் கூப்பிடனும்ன்னு நம்ம எம்பி கிட்டே ஒரு மனு தட்டுங்க, நடக்கும்!!!:-))
***************
ஆமாம் பத்தும் நல்லாத்தான் இருக்கு! ஆனாலும் பாட்டி சூப்பர், பூவராகவன் மொழி உச்சரிப்பு நல்லா இருந்துச்சு. பல்ராம் நாயுடு பாடிலாங்குவேஜ் அதிலும் குறிப்பா அவருக்கு ஒரு செல் போன் வரும் அதிலே ரிங் டோன் ஒரு தெலுகு பாட்டு. அதை அவர் அட்டெண்ட் பண்ணும் போது ஒரிஜினல் தெலுகுதான் போங்க!!
ஜோ! நீங்க ஜெயிச்சாச்சு! உழைப்பு வீணாக போகலை!
ReplyDeleteடீச்சர்! என்ன இப்படி கேட்டுட்டீங்க, ராத்திரி தியேட்டர்ல இருந்து வீடு வரும் வரையே டைப்பியாச்சு. (துபாய்ல டிக்கெட் இல்லாம ஷார்ஜாவிலே போய் பார்த்தேன்) ஆனா நெட் சொதப்பியதால் காலை எழுந்து பப்ளிஷ் பண்ணேன். இல்லாட்டி பெனாத்தலாரை முந்தியிருப்பேனாக்கும். அவரும் நான் பார்த்த அதே தியேட்டர் தான். அதே காட்சி தான். ஆனா சந்திக்க முடியலை!!
ReplyDeleteவாங்க ஸ்ரீதர், படம் நல்லா இருக்கு கண்டிப்பா பார்க்கலாம். குடும்பத்தோட பார்க்கலாம். எந்த விரசமும் இல்லை படத்திலே!!!
ReplyDeleteஅஸினோட டூயட் இல்லியா, என்ன கொடுமை அபி அப்பா, அப்பறம் எப்படி உக்காந்து முழுப்படமும் பாத்தீங்க
ReplyDelete"தசாவதாரம்"
ReplyDeleteHOUSE FULL HOUSE FULL HOUSE FULL
HOUSE FULL HOUSE FULL HOUSE FULL
HOUSE FULL HOUSE FULL HOUSE FULL
HOUSE FULL HOUSE FULL HOUSE FULL
PUDUVAI SIVA.
வாங்க ஸ்ரீதர்! என்ன பின்னே சுரேகா, பெனாத்தலார் எல்லாம் உசுப்பேத்திவிட்டு அதனால் நீ ங்க போய் பார்த்து .............அதல்லாம் வேண்டாம் இது என்ன அதே கண்கள் கதையா இல்லியே... படம் சூப்பர் போய் பாருங்க:-))
ReplyDeleteவல்லிம்மா! நன்றி! போய் பாருங்க! சிதம்பரம் கோவில் செட் அருமை! ஆனா கீழ சன்னதியிலே எந்த கோவிந்தராஜ பெருமாள் மடமும், பட்டாச்சாரியார் வீடும் இல்லை என்பதும் உண்மை! படம் தானே! ஆனா முதல் 10 நிமிஷம் ஆஹா ஓஹோ... பிரமாதம்....அந்த கூட்டத்திலே சிவாச்சாரியார் குறிப்பாக சொல்வதெனில் தீட்ஷிதர்கள், இந்த பக்கம் வைணவர்க்ள் எல்லாம் அச்சு அடிச்ச மாதிரியே.....வாவ்... அதாவது....
ReplyDelete## Bleachingpowder said...
ReplyDeleteSify.com வின் விமர்சணம் வெளிந்துள்ளது. விருப்பம் உள்ளாவர்கள் கீழே உள்ளே Linkஐ க்ளிக் செய்யவும்
http://sify.com/movies/tamil/review.php?id=14693882&ctid=5&cid=2429##
நன்றி கிட்டதட்ட இந்திய ரூவா 1000 ஓக்கேவாச்சு!!!:-))))
சின்ன அம்மனி! அசின் டூயட்ன்னா அத்தன இஷ்ட்டமா! அப்பன்னா அவங்க நடிச்ச வேற படம் பார்க்கிரது தான் ஒரே வழி!:-)))))
ReplyDeleteபுதுவை சிவா! நன்றி, ஹவுஸ் புல்ன்னு சொல்றது!!!!!
ReplyDeleteபடம்ம் பார்க்க ரொம்ப வருஷம் ஆகும், அதனால் விமரிசனம் படிச்சதே போதும், :P
ReplyDeleteஎன் கூட லொடுக்கு, பாஸ்ட் பவுலர் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்தார்கள்//enna ithu?...:))
ReplyDelete.(என் பக்கத்தில் ஒரு பொண்ணு அநியாயம் பண்ணிடுச்சு. ராமானுஜதாசரின் மகனாக ஒரு 5 வயசு பையன் வருவான். அவனையும் கமல் தான் என சத்தியம் செய்கிறது. அதன் கூற்று படி 547 வேஷத்திலே கமல் வர்ரார் படத்திலே.//nalla joke ponga!naan padam paarkumpothum ithu kamala? enru ovvoru pudhu character warumpothum pakkathila kettathu nyabagam waruthu.japan kamal athanai sulabama kandu pidikka mudiyalai.kaaranam avaroda kangal.kamaloda mutta kannai appadi maathinathu arumaithaan!!!
ReplyDeleteநடுவே வின்செண்ட் பூவராகவன் என்கிற நாகர்கோவில் தமிழ் பேசும் பாத்திர கமல். என்ன திடீர்ன்னு கருப்பு எம்ஜிஆர்ன்னு பார்த்தா அவரும் கமல். அருமையான நடிப்பு.//intha kamal naditha katchigal pichavarthila eduthathaam.spotla kamal wanthirupathai arinthu meenavargal paarka poi emanthu thirumbinatha kumudham padichen.appo nambalai.netru athu nijamnu welankichu!excellent...!!!
ReplyDelete//. தயவு செய்து விமர்சனங்களை படிக்காதீர்கள். குறிப்பாக தமிழ்மண விமர்சனங்களை படிக்காதீர்கள்.//
ReplyDeleteஇந்த பதிவு தமிழ்மணத்தில் வராதா? :))
யார் எப்படி விமர்சனம் எழுதினாலும் தலைவர் படத்தை தியேட்டர் போய் பாப்போம்ல :))
//தயவு செய்து விமர்சனங்களை படிக்காதீர்கள். குறிப்பாக தமிழ்மண விமர்சனங்களை படிக்காதீர்கள்//
ReplyDeleteஐயய்யோ முழுசும் படிச்சிட்டேன், அம்பி பதிவும் படிச்சிட்டேனே
:((((((((
//சின்ன சின்ன லாஜிக் உதைத்தால் தள்ளி உக்காந்துக்கவும்.
ReplyDelete//
:))))))
நல்லாயிருக்கு விமர்சனம்.
இது தசாவதாரம் சம்பந்தமா நான் படிச்ச ஏழாவது பதிவு....
ReplyDeleteபடம் கட்டாயமா பாக்கணும்...
ReplyDelete(அபி அப்பா விமர்சனம் பண்ணியிருக்காரே:)
//மல்லிகாவை சிதம்பரம் கீழசன்னதியில் தூக்கி சொருகாமல் வேளாங்கண்ணி வரை தள்ளிகிட்டு போயிருக்களாம். அதுவும் மயிலாடுதுரை வழியா போயிருந்தா சந்தோஷப்பட்டிருப்பேன்.//
ReplyDeleteஇதுக்கு பதிலா 'நொய் நொய்னு' பேசியே தாலிய அறுத்த அசினை தூக்கி சொருகிருந்தா படம் விறுவிறுப்பாவே இருந்திருக்கும்!
டோட்டல் டேமேஜ் பண்ணீட்டா :((
/
ReplyDeleteSridhar Narayanan said...
//இது என் முதல் விமர்சனம்.//
அண்ணாச்சி, இப்படி படத்தோட கதை முழுக்க சொல்லிட்டு விமர்சனம்னா எப்படிங்க? :-(
/
ரிப்பீட்டே
மத்தவங்க சொல்றதுக்கு எதும் மிச்சம் வைக்கலை :)))))
பெருமாள் சிலைக்காக அக்ரகாரத்து மாமி அசின்(!) ஒரு இண்டர் நேஷனல் கிரிமினல் !?!?
ReplyDelete(அட ESPN, Star Sports ல எல்லாம் தமிழ்ல ஸ்க்ரோல் போட்டாங்களே!!!!!)
கூடவே சீர்காழில இருந்து வேளாங்கண்ணி வரைக்கும் வந்திருவாங்கன்னா பேசாம நானே போய் அந்த சிலைய கடத்திகிட்டு வந்திருப்பேன்
:)))))))))))))))
/
ReplyDeleteஅபி அப்பா said...
வல்லிம்மா! நன்றி! போய் பாருங்க! சிதம்பரம் கோவில் செட் அருமை! ஆனா கீழ சன்னதியிலே எந்த கோவிந்தராஜ பெருமாள் மடமும், பட்டாச்சாரியார் வீடும் இல்லை என்பதும் உண்மை! படம் தானே! ஆனா முதல் 10 நிமிஷம் ஆஹா ஓஹோ... பிரமாதம்....
/
அவ்ளோதான் !!
/
ReplyDelete.(என் பக்கத்தில் ஒரு பொண்ணு அநியாயம் பண்ணிடுச்சு. ராமானுஜதாசரின் மகனாக ஒரு 5 வயசு பையன் வருவான். அவனையும் கமல் தான் என சத்தியம் செய்கிறது. அதன் கூற்று படி 547 வேஷத்திலே கமல் வர்ரார் படத்திலே.
//
விமர்சனம் எல்லாம் படிச்சிட்டு போயிருந்த எனக்கு சோழ ராஜாவா யானைமேல உக்காந்திருந்தது கமலோ!?!? அப்படின்னு சந்தேகம் இருந்துச்சு. அவர் பேச ஆரம்பிச்சதுக்கப்புறம்தான் அட நெப்போலியன்னு தெரிஞ்சிகிட்டேன்
:)))))
//சின்ன சின்ன லாஜிக் உதைத்தால் தள்ளி உக்காந்துக்கவும்.
ReplyDelete//
சின்ன சின்னதா இருந்தா பரவால்ல எல்லாம் பெருசு பெருசா உதைச்சிடுச்சு
:((
பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
ReplyDelete:((
சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!?
ReplyDelete(எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா)
ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.
நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது
:)))))))))
Anbe Sivam Padathukku enna Kurai? Parka theiryala makkalukku.. atha vera blogla eluthurathu..
ReplyDeleteAlavanthaan Ok konjam neeti mulakki irukkum...
Vimarsanam padikka koodathunnu vimarsanam eluthurathum ''kamalthanamave'' irukku...
Muthal Vimarsanam? Good..
அது எப்படி அபி அப்பா, சரியா என்னோட பின்னூட்டத்திலே ஆரம்பிச்சு பதில் கொடுக்காம நிறுத்தறீங்க??/ மறுபடியும் பால்பாயாசம் கதையா ஆயிடுச்சோ??? :P :P :P
ReplyDeletegrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ReplyDeleteபாத்துட்டுவந்துட்டேன்..நேத்துவரைக்கும் தமிழ்மணத்துல தசான்னு ஆரம்பிக்கற எந்த பதிவையும்படிக்கல.. அத்தனை ஜாக்கிரதை. .. தலைப்பே அதுக்குமேலபடிக்கலன்னா பாத்துக்குங்களேன்..
ReplyDeleteரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க்க..
நகைச்சுவையாளரின் விமர்சனம் தனியாத்தெரியுது தமிழ்மணம் விமர்சனங்களில்...
//Anbe Sivam Padathukku enna Kurai? Parka theiryala makkalukku.. atha vera blogla eluthurathu..
ReplyDeleteAlavanthaan Ok konjam neeti mulakki irukkum...//
:)))))))
லேட்டா படம் பார்த்துட்டு பதிவர்களின் பார்வைகளைப் பார்வையிட்டுக் கொண்டுள்ளேன்.கமலின் உழைப்பையும் ஒரு தமிழ் படத்தை இன்னும் ஒரு படி மேலே பொழுதுபோக்கு படமாகவாவ்து தயாரிக்க முயன்ற முயற்சியை அங்கீகாரம் செய்துள்ளீர்கள்.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை //1. தயவு செய்து விமர்சனங்களை படிக்காதீர்கள். குறிப்பாக தமிழ்மண விமர்சனங்களை படிக்காதீர்கள்// என்பது மட்டுமே சரியாக இருக்கிறது(விதிவிலக்குகள் உண்டு). நீங்கள் அருமை என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் அறுவை.
ReplyDeleteதசாவதாரம் பார்த்த பிறகு விமர்சனங்களைத் தொடாமலே இருந்தேன். ஆனால், உங்கள் கருத்தை அறிய முயன்ற எனக்கு ஏமாற்றமே!
"பாட்டு உன், காதிலே, தேனை வார்க்கும்" என்று பழுக்கக் காய்ச்சிய இரும்பைக் காதிலே சொறுகுறானே கமல், "அய்யோ...................................." அது ஒன்றே போதும்.
பாயின்ட் பதினாலும் கலக்கல்.
ReplyDelete//ஆளவந்தான், அன்பேசிவம் மாதிரி ஆயிடுமோன்னு பயந்துகிட்டே போகாதீங்க!//
அன்பே சிவம் நல்ல படம்ங்க. அதற்கு பதில் 'ஹே ராம்'னு வச்சிக்கலாமே!