பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2008

குடி குடியை கெடுக்கும்!!! (பாகம் # 2)

இதன் முதல் பாகத்தை இங்கே பாருங்கப்பா!!

எல்லோரும் ரவுண்டு கட்டி உக்காந்து கிட்டை பிரித்து பாட்டிலை எடுத்தா அவனவன் "டேய் இங்க குடுடா இங்க குடுடா"ன்னு போட்டி போட்டுகிட்டு என்னவோ பிறந்த குழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சி முத்தம் எல்லாம் குடுத்துகிட்டு இருந்தானுங்க. அப்ப ராதா "டேய் இன்னும் 10 நிமிஷத்திலே புது வருஷம் பிறக்க போவுது அப்போ ச்சியர்ஸ் சொல்லனும் வருஷம் புதன் கிழமையிலே வேற பிறக்குது. பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுடா பாட்டிலை இங்க குடு நான் பல்லாலயே திறந்துடுவேன்"ன்னு சொல்லி வாங்கிகிட்டான். அவனவன் வீட்டிலிருந்து கொண்டு வந்த டம்ளரை ரெடியா வச்சுக்க தூக்கு சட்டி தண்ணீரும் ரெடியா இருக்க ராதா 20 சதவீத உதடு சேதாரத்தோட திறக்க சைக்கிளில் சில்க் சுமிதா மாதிரி வந்த காரணத்தாலும், பசங்க தூக்கி போட்டு விளையாடியதாலும் புஸ்ன்னு பொங்கி பாதி பீர் போச்சு. ராதா வாயெல்லம் நுரை. அவன் அத நக்கிகிட்டு அவன் முகம் போன போக்கு இருக்கே மீன் கழுவின தண்ணியை குடிச்ச பூனை மாதிரி..ஆனா அவன் சொல்றான் "பேஷ் பேஷ் தேவாமிர்தமா இருக்கு". "டேய் என்னடா பொங்குது"ன்னு கேட்டப்போ ராதா "டேய் நான் தான் சொன்னல்ல மஞ்சு ஒயின்ஸ்ல சரக்கு ஒருஜினலா இருக்கும்ன்னு, இப்பதான் காய்ச்சி இருப்பாங்க அதான் பொங்குது"ன்னு வியாக்யானம் குடுக்குறான். பாதி பீர் கீழே போனது எல்லாருக்குமே கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருந்துச்சு. ஏன்னா பயம். நாங்களோ பிகினர்ஸ் இதிலே போய் ஃபுல் அடுக்க முடியுமான்னு பயம்.


முதல்ல ராதா எனக்கு ஊத்த அது கால் டம்ளர் ஊத்தின பின்னே இன்னும் பொங்கி புல் டம்ளரா ஆச்சு. பின்னே எல்லாரும் நுரை அடங்கின பின்னே தூக்கு சட்டியிலே இருந்து அந்த கால் டம்ளர் பீரில் தண்ணிய ஊத்தி முழு டம்ளரா ஆக்கி புது வருஷத்தை எதிர்பார்த்து உக்காந்து இருந்தோம். எல்லார் மூச்சியும் பேஸ்த்தடிச்ச மாதிரி இருக்கு. ஆச்சு 12 மணி எல்லாரும் ச்சியர்ஸ் சொல்லி எடுத்து எல்லா துவாரத்தியும் அடச்சிகிட்டு ஒரே மொடக்கு. ராதா அந்த டம்ளரை கீழே வச்ச ஸ்டைல் பார்க்கனுமே. ஆஹா அப்படி ஒரு ஜிவாஜி ஸ்டைல். கீழே வச்ச உடனே அடுத்த வார்த்தை "டேய் எனக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா போயிடுச்சு டோஸ்". கொஞ்ச நேரம் ஆச்சு. எனக்கு எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லை. எனக்கு பயம் வந்துடுச்சு. என் உடம்பிலே என்னவோ பிரச்சனை போல இருக்கு அதான் போதை ஏறலைன்னு. மத்தவனுகெல்லாம் எப்படி இருந்துச்சுன்னு தெரியலை. சரி போதை ஏறலைன்னு சொன்னா இத்தன கஷ்டப்பட்டு காசு செலவழிச்சு குடிச்சதுக்கு அர்த்தமே இல்லாம போயிடுமேன்னு கவலை வேற. சரி போதை வந்த மாதிரி நடிச்சிட வேண்டியது தான்ன்னு மெதுவா அந்த பிட்டை போட்டேன். "டேய் நான் ஜிவ்வுன்னு பறக்கிறேன். எனக்கு முன்னாடி இந்திராகாந்தியும் அவங்க கைய பிடிச்சுகிட்டு சஞ்சய்காந்தியும் பறக்கிறாங்கடா"


உடனே சங்கர் கேட்டான்"டேய் அவங்க தான் செத்து போயிட்டாங்களே" நான் சொன்னேன் அதுக்கு "டேய் நான் இப்போ சொர்கத்திலே இருக்கேந்தா". சங்கர் சுதாரிச்சுகிட்டான். உடனே அவன் "டேய் எனக்கு இப்பவே நம்ம மிலிட்டரியிலே சேர்ந்து இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்கனும் போல இருக்குடா. இப்ப விட்டா எல்லா வெள்ளைகாரனையும் பிச்சுபுடுவேன் பிச்சு"ன்னு சொல்ல அவனவன் தனக்கும் கிக் ஏறி போனது மாதிரி டயலாக் விட ஆரம்பிச்சுட்டான். எனக்கு தான் பயம். அவனுங்க எல்லாம் நெசமான போதை போல இருக்கு. நம்ம நாளைக்கே நம்ம ராமூர்த்தி டாக்டர்கிட்டே போகனும்ன்னு.சரி இப்ப ராதா பேச்சை வச்சு இதல்லாம் உண்மையான போதையா இல்லியான்னு கண்டுபிடிக்கனும்ன்னு அவன் என்ன பேசுகிறான்ன்னு கவனிச்சேன். அவன் கூலா "சரிடா இப்போ இந்த பாட்டிலை தூக்கி போடனும்டா எங்க போடுறது?"ன்னு தெளிவா கேட்டான். எனக்கு பயம் அதிகமா போச்சு. ஏன்னா ராதா எப்பவும் உளருவான். இப்ப அடுத்தகட்ட நடவடிக்கை பத்தி தெளிவா பேசறானே. அப்ப அவனுக்கும் போதை ஏறிடுச்சு. எனக்கு மட்டும் என்ன ஆச்சு ஏறவே இல்லியே.உடனே கந்தசாமி "ஆமாடா ராதா பாட்டிலை காவிரியிலே கொண்டு போய் போட்டுடுவோம். இல்லாட்டி 1 தென்னைமர அளவு ஆழமா தோண்டி புதைச்சிடுவோம். காலையிலே வந்து இந்த இடத்திலே மிளகாய் பொடி போட்டிடுவோம். அப்பதான் மோப்ப நாய் பிடிக்காது"ன்னு சொன்னான். நான் அதுக்கு "நாம என்ன கொலையா செஞ்சோம்"ன்னு கேட்டதுக்கு அவன் "இப்ப கொலை தான் செய்ய போறேன். இத்தன போதை ஏற வச்ச ராதாவை போட்டு தள்ள போறேன்"ன்னு சொன்னான். அதுக்கு ராதா "வேண்டாம்டா அப்படி எதுனா நீ என்னை கொலை செஞ்சிட்டா தினதந்தியிலே போதையில் இருந்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்ன்னு வரும் அதை படிச்சுட்டு அப்பா படவா ஏண்டா குடிச்சன்னு திட்டுவார். சொல்ல முடியாது அடிச்சாலும் அடிப்பார்"ன்னு சொன்னான். எனக்கு அப்பதான் ப்யம் தெளிஞ்சுது. ராதா எப்போதும் போல உளற ஆரம்பிச்சுட்டான். ஆக அவனுக்கு சத்தியமா போதை இல்லை. செத்து போன ராதாவை அவன் அப்பா அடிப்பாரம். ராதா செல்லம்னா செல்லம் தான்.


இதிலே நடிக்க தெரியாத 4 பேர்"டேய் எங்களுக்கு கிர்ருன்னு வருது மட்டையாக போறோம்"ன்னு சொல்லி அழகா படுத்துட்டானுங்க. அவனுங்களை எழுப்பி வாங்கடா சைக்கிள்ல கடைதெருவை ஒரு ரவுண்ட் அடிப்போம்ன்னு கூப்பிட்டா எழுந்து ஒருத்தன் "சொல்லுங்க யாரை போட்டு தள்ளனும் கொஞ்சம் இழுங்கடா"ன்னு சொல்றான். சரின்னு அவன் கைய புடிச்சு இழுத்தா "டேய் ஏண்டா இழுக்குறீங்க நான் கொஞ்சம் இருங்கடான்னு சொல்றதை தான் நாக்கு குழறி கொஞ்சம் இழுங்கடான்னு சொன்னேன் அப்படீன்னு சொன்னான். எனக்கு மைல்டா ஒரு டவுட் இப்ப மட்டும் இருங்கடான்னு தெளிவா சொல்றானேன்னு.


ஓக்கே குடிச்சு முடிச்சாச்சு. இப்ப கடைதெருவுக்கு போய் லந்து பண்ண வேண்டியது தான்னு வெளியே வந்தா வுமன்ஸ் காலேஜ் ஹாஸ்டல் வாசல்ல வாட்ச்மேன் ஓமகுச்சி நரசிம்மனுக்கு சிக்கன்குனியா வந்த மாதிரி உக்காந்து இருக்கார். சங்கர் உடனே எங்க கிட்ட "நா வேண்ணா இவரை போட்டு தள்ளிடவா"ன்னு கேக்க மத்தவன்க "வாடா கொலை எல்லாம் செய்ய கூடாது உன்க்கு அப்படி ரொம்ப ஆசையா இருந்தா ஒரு கைய வேண்ணா வெட்டிடு"ன்னு சொல்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவர்கிட்ட போய் கொஞ்சம் கைய குடுங்கன்னு கேட்டா அவரே கிள்ளி குடுத்துடுவார். அவரை போய் எதுக்கு வெட்டனும். சரி போதையிலே இதல்லாம் ஜகஜமப்பான்னு நெனச்சுகிட்டேன். எல்லாரும் தண்ணி வீரத்தை காமிச்சுகிட்டே காய்கறி மார்கெட் வழியா போயிகிட்டு இருந்தோம். நான் ரொம்ப கவலையா போதை ஏறலையே நாம யாரை வெட்டுறது?? சரி பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான், நாம பன்னாவது திம்போமேன்னு மெதுவா சைக்கிளை மிதித்தேன். அப்போ மார்கெட் எதிரே ஒரு பன்னி கூட்டம் குடும்ப சகிதமா ஃப்ரஷ்ஷா பியர்லெஸ் தியேட்டர் அருகே இருந்த பழங்காவிரியிலே குளிச்சு முடிஞ்சு விடிகாலை நாஷ்டா துன்ன மார்கெட் எதிரே இருந்த சாக்கடையில் புரண்டு கிட்டு இருந்தன. விடிகாலை 2 மணி வாக்கிலே முட்டை கோஸ் மேல் தோலும், அழுகிய தக்காளியும் அந்த குடும்பத்துக்கு தான்.


நானே எனக்கு மட்டும் போதை ஏறாத கடுப்பிலே வந்துகிட்டு இருக்கேன். அவனுங்க எல்லாம் போதையிலே மனுஷனை வெட்ட ரெடியா இருக்கானுங்க சரி நாம இந்த பன்னி கூட்டத்தை ஒரு கை பார்த்துடுவோம்ன்னு சைக்கிளை விட்டு இறங்கி ரோட்டிலே ரோடு போட கொட்டி கிடந்த கல்லை எடுத்து சரமாரியா அர்ஜுனன் அம்பு விட்ட மாதிரி விட்டேன். அந்த கூட்டம் சர புரன்னு சாக்கடையிலே இருந்து வெளியே வந்து நாலா பக்கமும் ஓட ஆரம்பிச்சுது. நான் விடுவேனா. நானும் நாலா பக்கமும் விட்டேன் கல்லை. ஆண்டவன் ஒரு கதவை மூடினா ஒரு கதவை திறப்பான்ன்னு சொல்லுவாங்க, பன்னி கூட்டத்துக்கு இருந்த ஒரே வழி மார்கெட் தான். எங்க ஊர்காரங்களுக்கு நல்லா தெரியும் அந்த பெரிய மார்கெட் எப்படின்னு. அதுக்குள்ளே பன்னிகுடும்ப தலைவர் ஓட பின்னாலயே மொத்த குடும்பமும் ஓட (எப்பவும் அந்த நேரம் கூட்டம் இருக்கும் மார்கெட்ல, சில்லரை வியாபாரிகள் வாங்கிகிட்டு இருப்பாங்க) மார்கெட் 3 அடி சந்து சந்தா இருக்கும்....எலேய் எவண்டா பன்னிய இங்க விரட்டுனதுன்னு மார்கெட்காரங்க வெளியே வர என்னை பார்த்துட்டாங்க கையிலே கல்லோடு. பின்னே என்ன எங்க பசங்க நேரா முன்னாடி போயிட்டாங்க கடைதெருவுக்கு. நான் அப்படியே சைக்கிளை திருப்பி செட்டி தெருவுக்கு உள்ளே புகுந்து அப்படி ஒரு மிதி சைக்கிளை. நேரா அம்பாபாய் கல்யாண மண்டபத்து பின் பக்கம் வந்து பரப்பிகிட்டு விழுந்தேன். அடி உடம்பெங்கும். அப்ப யாரும் துரத்தலை. சரின்னு மெதுவா எங்க ஸ்பாட் பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்தா பசங்க அங்க நின்னுகிட்டு இருந்தாங்க.என்னை பார்த்து "என்னடா எங்க பின்னாடி தானே வந்த மார்கெட் வரைக்கும் அப்புறம் காணும். இப்ப என்னடான்னா இந்த செட்டி தெரு வழியா வர்ரியே உடம்பெல்லாம் காயமா இருக்கு"ன்னு கேட்டானுங்க.


விடுங்கடா நான் சொல்றதை கேட்டு சண்டைக்கு போக மாட்டேன்ன்னு சத்தியம் பண்ணுங்கடா. அப்பதான் சொல்லுவேன். நீங்க வேற போதையிலே இருக்கீங்க. எனக்கோ சரியான போதையா. ஏற்கனவே மார்கெட் குரூப்புக்கும் எனக்கும் ஒரு சின்ன பிரச்சனை. நான் இன்னிக்கு இருந்த நெலமை தான் தெரியுமே. அதான் எதிர்க்க ஒருத்தன் வந்தான். அவன் ஒதுங்கி தான் போனான். இந்த பாழா போன கிராதகன் ராதா பண்ணின வேலை புதுவருஷம் தண்ணி அடிப்போம்ன்னு சொல்லி நாமளும் அடிச்சு... நானும் கண்ணு மண்ணு தெரியாம சாத்திட்டேன். நல்ல வேளை பொருள் ஏதும் என் கையிலே இல்லை.....நான் பேச பேச பசங்க "அய்யய்யோ இவன் பொருள் கிருள்ன்னு எல்லாம் பேசறானே"ன்னு பயந்துட்டாங்க.


சரிடா நாம காலையிலே எப்போதும் போல பார்ப்போம்ன்னு எல்லாரும் பிரிஞ்சு அவனவன் வீட்டுக்கு போயாச்சு. காலையிலே 10 மணிக்கு ராதா வந்தான். "என்னடா போதை எப்படி இருக்கு"ன்னு கேட்டேன். அதுக்கு அவன் கொஞ்சம் கூட கூசாம "போடா இன்னும் இறங்கவே இல்லைடா இப்ப கூட பாரு நம்ம பெரிய கோவில் யானை வந்துச்சு. தம்மு தம்முன்னு வேகமா வேற நடந்து வந்தாக. எனக்கு கோவம் பின்னால வாலை பிடிச்சு திருகினேன். அப்படியே பின் பக்கத்தை ஜங்கு ஜங்குன்னு ஆட்டிகிட்டே ஓடிடுச்சு" டேய் ராதா இதல்லாம் அடுக்குமாடா? நானும் என் பங்குக்கு "நான் கூட ஒரு புலி வாலை...."என்னால அதுக்கு மேல முடியல. மெதுவா ராதாகிட்டே போனேன். "டேய் நாம கலைஞரும் எம்ஜியாரும் போல எத்தன வருஷம் பழகியிருக்கோம், சத்தியமா சொல்லு உனக்கு போதை இருந்துச்சா? என் தலையிலே அடிச்சு சொல்லு"ன்னு சொன்னேன். ஒத்துகிட்டான். "இல்லடா. அப்ப உனக்கும் ஏறலையா, அந்த மஞ்சு ஒயின்சே இப்படித்தாண்டா ஒரே டுபூப்ளிகேட் சரக்கா விப்பான்"ன்னு பல்டி அடிச்சான்.


சரின்னு காலேஜ் போன பின்னே தங்கதுரைன்னு நல்லா தண்ணி அடிக்கும் ஒருத்தனை பிடிச்சு கேட்டோம். அவன் இந்த விஷயத்திலே கில்லாடி. எல்லாம் ஒன்னுவிடாம சொன்னோம். அதன் பிறகு அவன் 4 மணி நேரம் 27 நிமிஷம் 11 செகண்டு சிரிச்சுட்டு "பீர்ல தண்ணி கலந்து குடிச்சது நீங்க தாண்டா இந்த உலகத்திலே. பீர் கம்பனிகாரனுக்கு இது தெரிஞ்சுது அவனை நீங்க அவமானபடுத்தியதா மான நஷ்ட கேஸ் போடுவான். அதுவும் அரை பீரிலே எட்டு பேர்...ஹய்யோ ஹய்யோ... நானெல்லாம் 4 பீரை முழுசா முழுங்கிட்டு பத்தலைன்னு கத்துவேன் தெரியுமா? போங்கடா போய் லாலிபாப் வாங்கி சப்புங்கடா"ன்னு சொன்னான். உடனே ராதா "சரிடா தங்கதுரை விஷயம் நமக்குள்ளயே இருக்கட்டும்"ன்னு சொல்லிட்டு வந்தான். அடுத்த நாள் காலேஜ் சைக்கிள் ஸ்டாண்டில் "அரை பீரில் 8 பேர் தண்ணி கலந்து குடித்த வீரர்கள்" என எழுதி எங்க 8 பேர் பெயரும் எழுதியிருந்துச்சு. கீழே எங்க பிரின்சி கையெழுத்தை வேறு போட்டிருந்தானுங்க. (எங்க காலேஜ் சேர்ந்த உடனே பசங்க முதல்ல கத்துக்கும் விஷயம் அவரின் கையெழுத்து போட கத்துப்பது தான். அத்தனை ஈசியா கூட்டெழுத்தில் போட்டிருப்பார்)


அப்ப தான் ராதா சொன்னான் "குடி குடியை கெடுக்கும்"ன்னு. நான் சொன்னேன்"ஏண்டா நாதாறி இப்பதான் புத்தி வந்துச்சா" அதுக்கு அவன் சொன்னான்"இல்லடா தண்ணி ஒரு குடிபானம். அது போல பீர் ஒரு குடிபானம். பீரிலே தண்ணிய நாம ஊத்தினதால தண்ணி பீரை கெடுத்து போதை வராம செஞ்சுடுத்தா அதனாலத்தான் சொன்னேன் "குடி குடியை கெடுக்கும்"

12 comments:

  1. சூப்பர் காமெடி பதிவு :)))))

    ReplyDelete
  2. பாகம் 2 ரெண்டு தடவை இருக்கு ...

    ReplyDelete
  3. //பீர்ல தண்ணி கலந்து குடிச்சது நீங்க தாண்டா இந்த உலகத்திலே. பீர் கம்பனிகாரனுக்கு இது தெரிஞ்சுது அவனை நீங்க அவமானபடுத்தியதா மான நஷ்ட கேஸ் போடுவான்.///


    :))))))))))))))))))))))))))

    ReplyDelete
  4. Dear Abiappa,

    Finish super, Kalakuringa.

    Cheers
    Christo

    ReplyDelete
  5. வியாபாரக் காந்தம்,
    குடி குடியை கெடுக்கும் இரண்டுக்கும் சேர்த்து பின்னூட்டம் போட்ரேன்,

    Superb... இரண்டுமே என் வாழ்விலும் நடந்தவை.. 10 பைசா 20 பைசாவை தண்டவாளத்தில் வைத்து நசுக்கி டாலராக்கி விக்க முயன்றோம். எங்க ஊர்ல தண்டவாளம் இல்ல. So பக்கத்து ஊர் பாம்புக் கோயில்சந்தைக்கு ஜப்பான் பஸ் (Bus name yaar, Don't think this is a imported bus. Still we call the road as jappan road, because of the bus. now jappan bus n kattabomman bus is no more)பிடிச்சி போனோம்.. 1 Ticket இரண்டு ரூவா அம்பது பைசா. நானும் என் தம்பியும் போய் நட்டப்பட்டு, அப்பாட்ட(He is teacher, so he have more social responsibility(?)) நஞ்சி போன பைசாவை பெருமையா காட்டும் போது ரயிலை கவிழ்க்க(?) முயன்ற குற்றத்திற்காக நான் கிழக்கு தூணிலும், தம்பி மேற்கு தூணிலும் கட்டி வைக்கப் பட்டு அடிக்கப் பட்டோம்...

    ReplyDelete
  6. //"குடி குடியை கெடுக்கும்" //
    இப்படி ஒரு கோணம் இருக்கா இதிலே ? ஆஹா !!!!!!!

    ReplyDelete
  7. அடடா, இப்படிப் போகிறதா கதை:)
    அபி அப்பா , சூப்பர் காமெடி.
    கொஞ்சம் குழப்பம்தான் உங்க நிலைமை அப்ப!!!!ஐய்யோ பாவமே!!

    ReplyDelete
  8. நல்லா ரசிச்சு, சிரிச்சேன் அண்ணா..!! :)))))))

    ReplyDelete
  9. நல்லா சிரித்தேன்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))