பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 17, 2008

சின்ன திரை நட்சத்திரங்களுடன் நான்!!!




ஆகஸ்ட் 13-17 வரை துபாய் விவேகானந்தர் தெருவில் கடைசி முட்டு சந்தில் குனியமுத்தூர் கைவினை பொருட்கள் மற்றும் வீட்டுமனை விற்பனையாளர்களின் கண்காட்சி நடைபெறுகிறது. நானும் சென்று வந்தேன். அவ்வளவு கூட்டமில்லை. மீன், கருவாடு வாங்க வந்த கைலி கட்டிய கொஞ்சம் தமிழர்களை தவிர. கண்காட்சிக்கு உள்ளே வருபவர்களுக்கு 2 திர்காம் தரப்பட்டது. அது மிகவும் குறைவு என்பதால் கூட்டம் அத்தனை இல்லை. ஏன் அந்த 2 திர்காமை விடுவானேன் என நான் சென்றேன்.

வியாழன், வெள்ளி என்றால் மக்கள் வெளியே கிளம்புவதே அறிது. மானாட மயிலாட பார்க்க உக்காந்து விடுவார்கள் அதுவும் கண்காட்சிக்கு 2 திகாம் தான் தருவார்கள் என்றால் யாரும் வர மாட்டார்கள் என்பதால் 5 திர்காமாக தந்தார்கள்.

மூன்றாவது மூத்திர சந்தில் நான் நுழைந்த போது மணி 2.30 ஆகி இருந்தது. இந்த கண்காட்சிக்கு கூட்டம் சேர்க்கும் விதமாக சின்னதிரை நட்சத்தினர் கொண்டுவரப்பட்டிருந்தனர். சில கைலி ஆசாமிகள் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். நான் அங்கிருந்த ஒரு கடையில் குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொண்டு பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன். நான் அதை கபளீகரம் செய்துவிட்டு அவர்களிடம் போய் புகைப்படம் எடுத்து கொண்டேன்.

மேடையில் டவுசர் போடுவது எப்படி என்கிற நிகழ்ச்சி வைத்திருந்தனர். டவுசரை 200 வகையாக கூட போட முடியுமாம். யாராவது கேள்விபட்டதுண்டா? 10 வகையான ஒரே டவுசரை போட்டு காட்டினார்கள். ஒரு தாலிபான் பையனைதான் டவுசர் போட காட்சி பொருளாக வைத்து இருந்தார்கள். நம் தமிழ் பசங்க பொது இடத்தில் இதற்கெல்லாம் ஒப்புகொள்ள மாட்டார்கள் என்பதால் தாலியான் பையனை பிடிச்சு போட்டிருந்தார்கள். அவனும் மானம் கெட்டவனாக இருந்ததால் சொரனையே இல்லாமல் இருந்தான். டவுசர் போடுவதை கலையாக பார்த்தால் கலை. கொலையாக பார்த்தால் கொலை. எனக்கு அது கொலையாகவே பட்டது.

அதன் பிறகு வறட்டி தட்டும் போட்டி நடந்தது. சாணியை மட்டும் கொடுத்தவர்கள் அதில் மிக்ஸ் பண்ண வைக்கோல் தரவில்லை. அவர்களிடம் கேட்ட போது "by mistake we forgot to bring the vaikool, we are very sorry" என சொல்லிவிட்டார்கள். குபீர் எலக்கியவாதி தம்பி உமாகதிர் போட்ட "வறட்டி தட்டுவது எப்படி?" என்கிற பதிவு எனக்கு நன்றாக ஞாபகம் இருந்ததால் என்னால் அருமையாக தட்ட முடிந்தது.

இப்படியாக இந்த வெள்ளிகிழமை போனது.


கோவியார் போட்ட இந்த பதிவுக்கும் என் பதிவுக்கும் 6 வித்யாசத்தை கண்டுபிடிங்க.

55 comments:

  1. பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன்.
    //

    அபிஅப்பா! விழுந்து விழுந்து சிரித்தேன்.:))

    ReplyDelete
  2. அபிஅப்பாவுக்கு தொப்பை வந்திருச்சு, ஹையா, அபி அப்பா கனம் தாங்காம நாய் கடிச்சுருச்சுன்னு நான் சொன்னப்ப நம்பாதவங்க எல்லாரும் இந்த போட்டோவைபாத்தாவது நம்புங்கப்பா!!!::}

    ReplyDelete
  3. கலக்கீட்டீங்க அபி அப்பா...
    :))
    தீபா வெங்கட்கூட அவர் போட்டோ எடுத்தப்பவே தெரியும், இதுபோல எதிர்வினை வருமின்னு...
    :)))))))))))))

    ReplyDelete
  4. இன்னும் எத்தனை எதிர்வினைப்பதிவுகள் வரப்போவுதுன்னு ஆவலுடன் தமிழ்மணத்தையே உக்காந்து பாத்திட்டிருக்கேன்.

    ReplyDelete
  5. வாங்க அப்துல்லா, நன்றி!!!

    ReplyDelete
  6. வாங்க அப்துல்லா, நன்றி!!!

    ReplyDelete
  7. நன்றி ஆயில்யா!!

    சின்ன அம்மணி, என்ன ஒரு சந்தோஷம் உங்களுக்கு நேத்து நீங்க போட்ட பதிவுக்கு சப்போர்ட்டா இருக்குதா இந்த போட்டோ!!!

    நன்றி ஜகதீசன்!!! வருகைக்கு!

    ReplyDelete
  8. :) ம்,

    'அந்த' படத்தில் நடித்தது(?) நான் இல்லை அது எதோ கிராபிக்ஸ் ஒட்டுவேலை என்று சில நடிகைகள் ஏன் சொல்கிறார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது !
    :)

    ReplyDelete
  9. ஹா..ஹா.ஹா. நல்ல கற்பனை!

    ReplyDelete
  10. இவ்வளவு சீக்கிரமா?படு ஸ்பீடாத்தான் இருக்கீங்க.

    ReplyDelete
  11. தலைபெரிசா இருந்தப்ப இது க்ராபிக்ஸ் குசும்பு..குசும்பன் உபய்மா இரூக்கும்ன்னு தெரிஞ்சுகிட்டேன்..ஆனா எதிர்பதிவுன்னு தெரியாது.. அங்கயும் போயிட்டு வந்தேன்.. ஓகே.. ஓகே.. நடத்துங்க..:) வசதியா போட்டோ போட்டா விடுவீங்களா என்ன? ஆனா வழக்கமா இது குசும்பன் செய்யும் வேலையாச்சே எதிர்பதிவு கலாய்ப்பெல்லாம்.. ஒருவேளை குசும்பன் இன்னிக்கு பிசியோ..?

    ReplyDelete
  12. ஜொள்ளுகளின் ஜொள்ளே வணக்கம்! :)

    ReplyDelete
  13. :))

    போட்டோஷாப் கத்துக்கிட்டீங்க போல இருக்கு?

    ReplyDelete
  14. //குசும்பன் said...
    :))

    போட்டோஷாப் கத்துக்கிட்டீங்க போல இருக்கு?//

    கத்துக்கொடுத்ததே நீங்கதானாமே?

    ReplyDelete
  15. செம நக்கல் அபி அப்பா.. இந்த வார இறுதியோட சூப்பர் காமெடி பதிவு இதுதான்...

    ReplyDelete
  16. ஹா ஹா ஹா ஹா :-))

    அபி அப்பா செமையா கலாய்க்கறீங்க ...

    இனி கடித வாரம் போய்..இந்த வாரம் முழுவதும் சின்னத்திரை வாரமா..

    ஸ்ஸ்ஸு இப்பவே கண்ணை கட்டுதே ..

    கோவி கண்ணன் இனி அவரோட சொந்தகாரங்க கூட படம் எடுத்து போடுவதுன்னா கூட யோசிப்பாரு போல :-))

    ReplyDelete
  17. //:) ம்,

    'அந்த' படத்தில் நடித்தது(?) நான் இல்லை அது எதோ கிராபிக்ஸ் ஒட்டுவேலை என்று சில நடிகைகள் ஏன் சொல்கிறார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது !
    :)//

    கோவியாரே! இந்த பின்னூட்டம் உங்க பதிவிலே இருக்கும் போட்டோவுக்கா?

    நான் தான் ஒரிஜினல் அக்மார்க்:-)))

    ReplyDelete
  18. // வீரசுந்தர் said...
    ஹா..ஹா.ஹா. நல்ல கற்பனை!//
    வாங்க வீரசுந்தர், மிக்க நன்றி வருகைக்கு!!!

    ReplyDelete
  19. // வடுவூர் குமார் said...
    இவ்வளவு சீக்கிரமா?படு ஸ்பீடாத்தான் இருக்கீங்க//

    வாங்க குமாரண்ணே! பின்னே நாங்க எப்பவும் ஸ்பீடு தானே இது போல விஷயத்திலே:-))

    ReplyDelete
  20. // VIKNESHWARAN said...
    ஆஹா.... சரிதான்...//

    நன்றி விக்கி!

    ReplyDelete
  21. // VIKNESHWARAN said...
    ஆஹா.... சரிதான்...//

    நன்றி விக்கி!

    ReplyDelete
  22. // முத்துலெட்சுமி-கயல்விழி said...
    தலைபெரிசா இருந்தப்ப இது க்ராபிக்ஸ் குசும்பு..குசும்பன் உபய்மா இரூக்கும்ன்னு தெரிஞ்சுகிட்டேன்..ஆனா எதிர்பதிவுன்னு தெரியாது.. அங்கயும் போயிட்டு வந்தேன்.. ஓகே.. ஓகே.. நடத்துங்க..:) வசதியா போட்டோ போட்டா விடுவீங்களா என்ன? ஆனா வழக்கமா இது குசும்பன் செய்யும் வேலையாச்சே எதிர்பதிவு கலாய்ப்பெல்லாம்.. ஒருவேளை குசும்பன் இன்னிக்கு பிசியோ..?//

    குசும்பன் முன்ன மாதிரி இல்லப்பா, வாடா வியாழகிழமை வீட்டுக்கு லீவை ஜாலியா கழிச்சுட்டு சனி காலையிலே இங்கிட்டு இருந்தே ஆபீஸ் போலாம்ன்னு சொல்லி பார்க்கிறேன் வர மாட்டேன் போ ன்னு சொல்றான்.

    ReplyDelete
  23. // நல்லதந்தி said...
    ஜொள்ளுகளின் ஜொள்ளே வணக்கம்! :)//

    லொல்லின் லொல்லே நன்றி:-)))

    ReplyDelete
  24. // குசும்பன் said...
    :))

    போட்டோஷாப் கத்துக்கிட்டீங்க போல இருக்கு?
    //

    குசும்ம்பா கோவியார் பதிவிலே போட வேண்டிய பின்னூட்டத்தை இங்க மாத்தி போட்டுட்டப்பா:-))

    ReplyDelete
  25. // நிஜமா நல்லவன் said...
    கலக்கிட்டீங்க....//

    நன்றி! நீங்க நெசமாவே நல்லருங்கோ:-))

    ReplyDelete
  26. // வெண்பூ said...
    செம நக்கல் அபி அப்பா.. இந்த வார இறுதியோட சூப்பர் காமெடி பதிவு இதுதான்...//

    மிக்க நன்றி வெண்பூ! வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  27. // கிரி said...
    ஹா ஹா ஹா ஹா :-))

    அபி அப்பா செமையா கலாய்க்கறீங்க ...

    இனி கடித வாரம் போய்..இந்த வாரம் முழுவதும் சின்னத்திரை வாரமா..

    ஸ்ஸ்ஸு இப்பவே கண்ணை கட்டுதே ..

    கோவி கண்ணன் இனி அவரோட சொந்தகாரங்க கூட படம் எடுத்து போடுவதுன்னா கூட யோசிப்பாரு போல :-))
    ///

    வாங்க கிரி, மிக்க நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்!:-))

    ReplyDelete
  28. இந்த ஒரு நாளுக்காக தானே இத்தனை வருசம் துபாயில் குப்பை கொட்டிறீங்க



    40 வயசுக்கும் பிறகு ஆண்டி(தீபா குசும்பன்) சூப்ப்ர்


    ஆஹா ஆஹா


    வெடிகுண்ட்டு
    முருகேசன்

    ReplyDelete
  29. கலக்கல்!

    சூப்பர்!!





    தீபா வெங்கட் சூப்பர்னு சொன்னேன்!!

    ReplyDelete
  30. /
    ஆயில்யன் said...

    சூப்பரூ :))))
    /

    ஆயில் நீங்களும் அதேதானே சொன்னிங்க!?!?

    ReplyDelete
  31. உங்க சார்பா கோவி பதிவுல கண்டனம் தெரிவிச்சிருக்கேன் பொட்டி வந்திரணும் சொல்லிட்டேன்

    ReplyDelete
  32. /
    சின்ன அம்மிணி said...

    அபிஅப்பாவுக்கு தொப்பை வந்திருச்சு, ஹையா, அபி அப்பா கனம் தாங்காம நாய் கடிச்சுருச்சுன்னு நான் சொன்னப்ப நம்பாதவங்க எல்லாரும் இந்த போட்டோவைபாத்தாவது நம்புங்கப்பா!!!::}
    /

    :)))))))))
    நம்புறோங்க அம்மிணி நம்புறோம்!!

    ReplyDelete
  33. /
    நம் தமிழ் பசங்க பொது இடத்தில் இதற்கெல்லாம் ஒப்புகொள்ள மாட்டார்கள் என்பதால் தாலியான் பையனை பிடிச்சு போட்டிருந்தார்கள். அவனும் மானம் கெட்டவனாக இருந்ததால் சொரனையே இல்லாமல் இருந்தான்.
    /

    :)))))))))))

    ReplyDelete
  34. //பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன்.//
    நிச்சயமாக இருக்காது. அப்போது உங்கள் கைகள் எந்த இடத்திலே இருந்தன என்பதை பொறுத்துத்தான் அது பாகிஸ்தானி மாதிரி இருந்ததா இல்லையா என்று தெளிவாகச் சொல்ல முடியும். :))

    ReplyDelete
  35. :-))))))))

    ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா. முடியல... வாய் விட்டு சிரித்தேன்....

    ReplyDelete
  36. சூப்பரோ சூப்பரு.. :)))

    ReplyDelete
  37. எவ்ளோ தைரியம் இருந்தா கோவியார் தீபா வெங்கட் பக்கத்துல நின்னு போட்டோ எடுத்திருப்பார்,.. சாதாரனமா விட முடியுமா அவரை? :))

    ReplyDelete
  38. அபிஅப்பா,

    தலையை இன்னும் கொஞ்சம் சின்னதாக்கிப் போட்டு இருக்கலாம், வயிறுக்கு பொருத்தமில்லாமல் டயனசர் மாதிரு இருக்கு !
    :)

    ReplyDelete
  39. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இதில யார் போட்டோ ஷாப் பாவிச்சீங்க? நீங்களா கோவியாரா? ;-)))

    ReplyDelete
  40. ஒரே ஒரு ஃபோட்டோ ஆசையா எடுத்ததுக்கு போயி இப்படி போட்டு தாக்கிட்டீங்களே...பாவம் அவரு...

    ReplyDelete
  41. \\இந்த ஒரு நாளுக்காக தானே இத்தனை வருசம் துபாயில் குப்பை கொட்டிறீங்க



    40 வயசுக்கும் பிறகு ஆண்டி(தீபா குசும்பன்) சூப்ப்ர்


    ஆஹா ஆஹா


    வெடிகுண்ட்டு
    முருகேசன்\\

    யாருப்பா நீர்! அப்பப்ப வந்து வெடிகுண்டு வீசிட்டு போயிகிட்டே இருக்கியேப்பா?????????????????????????

    ReplyDelete
  42. சிவா! வணக்கம்! வீட்டுல கேட்டேன்னு சொல்லுங்க! ஆமா என்ன ஒரு கொல வெறி!!!!!!!:-))

    ReplyDelete
  43. \\Blogger சுல்தான் said...

    //பாகிஸ்தான் பட்டான் மாதிரி குத்துகாலி இட்டு ஒரு இடத்திலே குந்திகிட்டேன்.//
    நிச்சயமாக இருக்காது. அப்போது உங்கள் கைகள் எந்த இடத்திலே இருந்தன என்பதை பொறுத்துத்தான் அது பாகிஸ்தானி மாதிரி இருந்ததா இல்லையா என்று தெளிவாகச் சொல்ல முடியும். :))\\

    பாய் பாய் வேண்டாம் விட்டுடுங்க தனியா செல்லில பேசிக்கலாம்! எனக்கு சிரிப்பை இப்போ அடக்கவே முடியலை! :-)))

    ReplyDelete
  44. ச்சின்ன பையா! வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகுமப்பா:-)))

    ReplyDelete
  45. வாப்பா சஞ்சை!உன்னை தான் லக்கி தேடிகிட்டு இருக்காராம்! என்ன சவுக்கியமா?????????????????????????????

    ReplyDelete
  46. கோவியாரே! இது உங்க பதிவுக்கான பின்னூட்டமா என் பதிவுக்கான பின்னூட்டமா:-))))))))நான் தாங்க ஒரிஜினல்! நம்ம தலையே அப்படித்தான்! ஆஹ நான் தான் இனி "தல":-)))

    ReplyDelete
  47. வாங்க கானா பிரபா! நான் தமிழீழம் வரும் போது என் கூட வர ஏகப்பட்ட கூட்டம் இருக்குப்பா! (உங்க வீட்டுக்கு வர) தெரியுமா அந்த சேதி:-)))

    ReplyDelete
  48. வாங்க தமிழன்! வருகைக்கு மிக்க நன்றி!!!!

    ReplyDelete
  49. வருகைப் பதிவு, அபி அம்மா பார்த்தாச்சா இந்தப் படங்களை?? அதிலும் தீபா வெங்கட்டை???? :P

    ReplyDelete
  50. அட graphics ரொம்ப நல்லா இருக்கு. கோவி.கண்ணன் ப்ளாக் போய் பார்த்தப்புறம் தான், இது graphics'ன்னு கண்டுபுடிக்க முடிஞ்சிது. super.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))