April 11, 2009
அழகிரியும் ஸ்டாலினும் குடும்ப அரசியலும்!!!
தலைப்பை பார்த்து விட்டு அரசியல் பதிவுன்னு ஆசையா வந்து ஏமாந்து போன கனவான்களே, அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே! இது ச்சும்மா ஒரு சுயபுலம்பல் பதிவு தான்.
அவன் எனக்கு இரண்டு வயது இளையவன். வயது வித்யாசம் குறைவாக இருந்த போதும் நெம்ப மரியாதையா இருப்பான் என் மீது:-)) "எலே அண்ணன் இங்க பாரண்டா" என ஏகப்பட்ட டா டா டட்டடா டால்பா டப்பா எல்லாம் போட்டு கூப்பிட்டாலும் அண்ணன் பெயரை சொல்லி எல்லாம் மரியாதை குறைவா நடந்துக்க மாட்டான். நாங்க பிறந்தது முதல் லக்கிலுக் வலைப்பூவுக்கு ஆன ஆனா ஹிட் எண்ணிக்கையை விட பத்தோ இருபதோ எண்ணிக்கை குறைவாகத்தான் சண்டை போட்டிருப்போம்.
ஆனால் பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே அதிக பட்சமாக. உடனே "உனக்கும் எனக்கும் செத்தா வாழ்ந்தா கிடையாது" அப்படீன்னு இரு பக்கமும் இருந்து சவால்களும் சாபங்களும் பறக்கும். எப்போ அதல்லாம் ஒரு ஏழு, எட்டு வயசிலேயே.
பின்ன சமாதான உடன்படிக்கை எல்லாம் போட்டுப்போம். சில சமயம் அதிக சேதாரம் ஆனவங்களுக்கு ஜெயிச்சவங்க உண்டியல் காசு எல்லாம் நிவாரண நிதியாகக்கூட போகும். சில சமயம் நானும் அவன் என்னை வாடா போடான்னு கூப்பிட கூடாது ஒரு வருஷத்துக்குன்னு நான் சொல்ல அந்த ஒரு வருசம் என்பது எங்க சமாதான உடன்படிக்கை முடியும் போது ஒரு மணி நேரமா ஆகியிருக்கும்.உடன்படிக்கையின் அந்த சிறப்பு தீர்மானத்திலே உட்பிரிவா "அந்த ஒரு மணி நேரம் எது என்பதை அவனே முடிவு செய்வது" என சொல்லி சேர்த்துடுவான். பின்னே அதன் படி அவன் இரவு தூங்கும் போது அந்த ஒரு மணிநேரத்தைன்னு சொல்லிடுவான்.
இப்படியாக நாளொரு சமாதானமாகவும் பொழுதொரு சண்டையுமாக வளர்ந்தோம்.தூங்கும் போதும், சாப்பிடும் போதும், அத்தனை ஏன் தென்னந்தோப்புக்கு காலைகடன் கழிக்க போனா கூட ஒன்னாதான் இருப்போம். சாப்பிட ஆரம்பிக்கும் போது இரண்டு பேர் தட்டையும் அவன் கழுவிட்டு வந்து "டேய் உனக்காக நானே தட்டு கழுவிட்டேன்"ன்னு சொல்லும் போது ஆஹா இப்படி ஒரு தம்பி கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்ன்னு அப்படியா ஜிவாஜி ரேஞ்சுக்கு அவன் உச்சி முகர்ந்து பீலிங்ஸ் விடுவேன். அதுக்கு அவன் "வுடுடா வுடுடா உனக்கு நான் தட்டு கழுவாம யாருக்கு கழுவ போறேன் நோ பீலிங்ஸ் ஆஃப் இந்தியா"ன்னு சொல்லும் போது எங்க பாசத்தை பார்த்து அம்மாவும் படக்குன்னு தாலிய எடுத்து கண்ணு ஒத்திப்பாங்க( எது எதுக்கு தாலிய கண்ணுல ஒத்திகிறதுன்னு இல்லியா)
சாப்பிட்டு முடியும் போது மெதுவா சொல்லுவான் "டேய் நான் சாப்பிடும் முன்ன கழுவினேன்ல அதனால நீ இப்ப என் தட்டை கழுவிடு"ன்னு சொல்லிட்டு ஓடிடுவான். ஆகா கழுவின தட்டை சும்மா அலசிட்டு இப்ப கொத்ஸு எண்ணெய் பிசுக்கு தட்டை நான் கழுவும் படி ஆகிடுச்சென்னு சண்டை ஆரம்பமாகும். அம்மா அநியாயமா அவசரப்பட்டு ஒரு தாலி ஒத்தல் வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு வருத்தப்பட்டு பாரபட்சமே இல்லாம ரெண்டு பேருக்குமே வெளக்குமாறு மந்திரித்தல் வைத்தியம் பண்ணுவாங்க.
அதிக சேதாரம் இரு தரப்புக்கும் ஆகிவிடும் சிலசமயம். அப்போதே முடிவு செஞ்சிடுவோம். 'வாடா இன்னிக்கு கச்சேரி பிள்ளையாருக்கு போய் சத்தியம் செஞ்சிடுவோம் இனி சண்டையா போடாம ஒத்துமையா இருந்துடுவோம்"ன்னு சொல்லிட்டு சூடம் வாங்கிட்டு கிளம்பி போய் சூடத்தை கொளுத்தும் போது சொல்லுவான் "டேய் அண்ணா உன் கையால அடிச்சு சத்தியம் செய்வதா வேண்டிகிட்டேன் அதனால கையால அந்த சூடத்தை அடி"ன்னு சொல்லுவான். நான் எப்படா வேண்டிக்கிட்டன்னு கேட்டா "ஜஸ்ட் நவ்"ன்னு கூலா சொல்லுவான். பின்ன என்ன ஒத்துமையா இருப்போம்ன்னு சத்தியம் பண்ண போன இடத்திலே கட்டி புரண்டு சண்டை தான். இப்படி அடிக்கடி கச்சேரி பிள்ளையாரை டார்ச்சர் கொடுக்க டார்ச்சர் கொடுக்க எங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்டுட்டாளே அவருக்கு குலை நடுங்கி போய் திரும்பி உட்காந்துப்பார்.
இப்ப அதுக்கு என்னன்னு கேட்குறீங்களா? இப்படி அழகா போய்கிட்டு இருந்த எங்க சண்டை வளர வளர அதும் பெரிசா வளர்ந்துச்சு. ஈசல் ஆயுளா இருந்த "அந்த பேசா" நேரமும் அதிகமா ஆகிடுச்சு. சமீபத்துல ஒரு ரெண்டு வருஷமா சுத்தமா பேச்சுவார்த்தை இல்லாம போயிடுச்சு:-((
நல்லா எழுதுவான். அரசியல் அருமையா பேசுவான். நல்ல உக்கிரமா எழுதுவான். அவனும் ஒரு மூனு வருஷமா தொழிலில் பிசியாகிவிட்ட காரணத்தால் எழுதுவது கிடையாது. ஆனா நேத்து சீமாச்சு அண்ணா, முத்துகுமார் இருவரும் ஒரு லிங் கொடுத்து இருந்தாங்க. ஓப்பன் பண்ணி பார்த்தா ஆச்சர்யம். அவன் தட்ஸ் தமிழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கான். இதோ அந்த லிங்.தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு.
மேலே போட்டோ பார்தீங்களே அது நானும் அவனும். பார்த்தா அழகிரி ஸ்டாலின் மாதிரி இருக்கீங்க. அவங்களே ஒன்னு சேர்ந்தாச்சு. நீங்க அது போல ஒன்னு சேர்ந்தா என்ன? அப்படின்னு என் பிரண்ட் ஒருத்தாங்க கேட்டாங்க! அதுக்கு நான் "அழகிரி ஸ்டாலின் எல்லாம் சரிதான் பிரண்ட், நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும் "அப்படீன்னு பெருமூச்சு விட்டுகிட்டேன்.
Subscribe to:
Post Comments (Atom)
நான்தான் பர்ஸ்ட்டாக்கும்..
ReplyDeleteபடிச்சிட்டேன்.. உங்களோட பாசப்பிணைப்பை கேட்டு கண்ணு கலங்குது..
ReplyDelete//நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும்//
ReplyDeleteஇந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!
//
ReplyDeleteஅதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே!
//
உங்க வில்லத்தனம் வகை தொகை இல்லாம வளர்ந்துகிட்டு இருக்கு :0))
ஹைய்ய்ய் இவுருதான் உங்க தம்பியா அண்ணே!
ReplyDeleteபார்த்ததே இல்ல! இன்னிக்குத்தான் பாக்குறேன்!
/தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு///
ReplyDeleteஅதானே பார்த்தேன் எங்க ”சதை” போட்டிருந்தீங்க கன்னா பின்னான்னு கண்டனத்திற்கு ஆளாகியிருப்பீங்க :))))))
//தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு.//
ReplyDeleteஏதோ ஒன்னு ஆடுனா சரி!
வெறும் ரெண்டு வயசு வித்தியாசத்துக்கு அவரைப் போட்டு இவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கீங்க.
ReplyDeleteஅவருதான் பாவம்.
அபி அப்பா ஆனாலும் உங்களை அவங்களோட கம்பேர் பண்ணி இப்படி மட்டப்படுத்திகலாமா
ReplyDelete//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDelete//நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும்//
இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!
//
அபிஅப்பா, உண்மைத்தமிழன் ஒரு ஆளு கிடைச்சிட்டாரு.. இன்னும் 2 பேர் தான் வேணும்.. எஙக வெச்சிக்கலாம்? மயிலாடுதுறையா, சென்னையா?
// அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே! //
ReplyDeleteஅது எப்படி எங்களை இது மாதிரி நினைக்கலாம். இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எந்த பதிவா இருந்தாலும் படிப்போம். பின்னூட்டம் சில பதிவுகளுக்கு மட்டும்தான்.
// Seemachu said...
ReplyDeleteஅபிஅப்பா, உண்மைத்தமிழன் ஒரு ஆளு கிடைச்சிட்டாரு.. இன்னும் 2 பேர் தான் வேணும்.. எஙக வெச்சிக்கலாம்? மயிலாடுதுறையா, சென்னையா? //
யப்பா என்னாது இது.. படு பயங்கரமா இருக்கே..
ஹையா நான் ஏமாறவே இல்லையே
ReplyDelete//பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே//
ReplyDelete:-)))))
:)))
ReplyDeleteகாலம் மாற்றத்தை தரும் அண்ணாச்சி...
ஆனா உங்க தம்பியை எங்கையே பாத்த மாதிரி இருக்கு, இந்த போட்டோவை பார்ப்பதற்கு முன்பே சொல்லிப்புட்டேன் :)
ஹய்யோ :))
ReplyDeleteஇங்க கமெண்ட் போடவே பயம்மா இருக்கே.. எரிக்க இன்னும் இரண்டு பேரை தேடறீங்க போலயே..
உங்க தம்பியின் கட்டுரை நல்லா இருக்கு.
ReplyDelete//இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!//
இதுக்கு பேர் தான் சொ.செ.சூ.வ
வாய்யா உனா தானா! நான் என்ன பதில் சொல்லனுமோ அதை சீமாச்சு அண்ணாசொல்லிட்டாரு:-))))
ReplyDeleteமீதி 2 பேரையும் தேர்ந்தெடுத்து சொல்லிட்டா விஷயம் ஜெக ஜோரா ஆகிடும்:-)
\\ அது சரி said...
ReplyDelete//
அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே!
//
உங்க வில்லத்தனம் வகை தொகை இல்லாம வளர்ந்துகிட்டு இருக்கு :0))
\\
அது சரி! வில்லத்தனம் எல்லாம் இல்லைப்பா எல்லாம் காமடித்தனம் தான்:-))
\\ ஆயில்யன் said...
ReplyDeleteஹைய்ய்ய் இவுருதான் உங்க தம்பியா அண்ணே!
பார்த்ததே இல்ல! இன்னிக்குத்தான் பாக்குறேன்!
April 11, 2009 9:16 PM
ஆயில்யன் said...
/தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு///
அதானே பார்த்தேன் எங்க ”சதை” போட்டிருந்தீங்க கன்னா பின்னான்னு கண்டனத்திற்கு ஆளாகியிருப்பீங்க :))))))
\\
வாப்பா ஆயில்ஸ்! இப்பதான் பார்த்தீங்களாப்பா போட்டோவிலே!!!!
சதை ஆடுதுன்னு தவறி போய் கூட சொல்லுவனா, சொன்னா பிரிச்சு மேஞ்சிட மாட்டீங்களா????
\\ குசும்பன் said...
ReplyDelete//தான் ஆடாட்டியும் தன் எலும்பு ஆடும்ன்னு சொல்வாங்களே அது போல ஆகிடுச்சு எனக்கு.//
ஏதோ ஒன்னு ஆடுனா சரி!
\\
ஹி ஹி ஹி:-))
\\ வடகரை வேலன் said...
ReplyDeleteவெறும் ரெண்டு வயசு வித்தியாசத்துக்கு அவரைப் போட்டு இவ்வளவு டார்ச்சர் பண்ணியிருக்கீங்க.
அவருதான் பாவம்.
\\
வாங்க அண்ணாச்சி! நன்றி வருகைக்கு:-)
\\ Seemachu said...
ReplyDelete//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
//நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும்//
இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!
//
அபிஅப்பா, உண்மைத்தமிழன் ஒரு ஆளு கிடைச்சிட்டாரு.. இன்னும் 2 பேர் தான் வேணும்.. எஙக வெச்சிக்கலாம்? மயிலாடுதுறையா, சென்னையா?\\
வாங்க சீமாச்சு அண்ணா! உ.த வையே அடுத்த 2 பேரையும் செலக்ட் பண்ண சொல்லியிருக்கேன். தேர்வானதும் கச்சேரியை மதுரையிலே வச்சிப்போம்! அதான் சரியான இடம்:-))
\\ மின்னல் said...
ReplyDeleteஅபி அப்பா ஆனாலும் உங்களை அவங்களோட கம்பேர் பண்ணி இப்படி மட்டப்படுத்திகலாமா
\\
வாம்மா மின்னல்! நெம்ப தான் தகிரியம் உங்களுக்கு! என் கிட்டயே வந்து சொல்றீங்களே:-))))
\\ இராகவன் நைஜிரியா said...
ReplyDelete// அதே போல "அய்யய்யோ அரசியல் பதிவு போலயிருக்கு" என எட்டி பார்க்காமல் தான் ஏமாந்து போனதே தெரியாம ஏமாந்து போன என் விசிறி(?????) களே! //
அது எப்படி எங்களை இது மாதிரி நினைக்கலாம். இதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். எந்த பதிவா இருந்தாலும் படிப்போம். பின்னூட்டம் சில பதிவுகளுக்கு மட்டும்தான்.
வாங்க ராகவ் அண்ணா! மிக்க நன்னி நன்னி!!!!
\\ சின்ன அம்மிணி said...
ReplyDeleteஹையா நான் ஏமாறவே இல்லையே
வாங்க சின்ன அம்மனி! என்ன ஒரேயடியா எங்களை மறந்துட்டீங்க! சரி ஸ்டாட் மீசிக்! பதிவ போட்டு தாக்குங்க!
\\ T.V.Radhakrishnan said...
ReplyDelete//பேசாமல் இருப்பது ஈசல் ஆயுள் நேரமே//
:-)))))
\\
வாங்க வாங்க ராதா! மிக்க நன்றி!
\\ நாகை சிவா said...
ReplyDelete:)))
காலம் மாற்றத்தை தரும் அண்ணாச்சி...
ஆனா உங்க தம்பியை எங்கையே பாத்த மாதிரி இருக்கு, இந்த போட்டோவை பார்ப்பதற்கு முன்பே சொல்லிப்புட்டேன் :)
\\
வாங்க சிவா! மிக்க நன்றி! கரெக்டான பார்ட்டை நீங்க தான் பதிவின் நோக்கத்தை புரிஞ்சு பதில் போட்டிருக்கீங்க! மிக்க நன்றி!
\\ முத்துலெட்சுமி-கயல்விழி said...
ReplyDeleteஹய்யோ :))
இங்க கமெண்ட் போடவே பயம்மா இருக்கே.. எரிக்க இன்னும் இரண்டு பேரை தேடறீங்க போலயே..
\\
தேடுறீங்க இல்ல முத்து! தேடுறோம்ன்னு சொல்லுங்க. நீங்க எல்லாம் இந்த பக்கம்!
\\ ராஜா said...
ReplyDeleteஉங்க தம்பியின் கட்டுரை நல்லா இருக்கு.
//இந்த உதவிக்கு மட்டும் நான் ரெடியா இருக்கேன்.. எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்..!//
இதுக்கு பேர் தான் சொ.செ.சூ.வ
\\
வாங்க ராஜா! வருகைக்கும் அந்த லிங்கை படிச்சு பாராட்டினதுக்கும் நன்றி!!
இப்படி ஒரு பதிவு போட்டது காமெடி இல்ல.. மேல யாருக்கு ஓட்டு கேக்குறீங்க....அதான் ராசா அல்டிமேட் காமெடி
ReplyDeleteஅதென்னங்க எல்லா ஊட்லயும் அண்ணன்க ஒல்லியாவும், தம்பிங்க ஊட்டமாவும் இருக்காங்க.
ReplyDeleteபடத்தைப் பார்த்துவிட்டு, நீங்களும் நாமக்கல் சிபி ன்னு நெனச்சேன்.
ReplyDeleteஅப்பால, அபி அப்பா எஸ்கர்ஷன் சஸ்பென்ஸ் பாதில நிக்குதே?
Photo vum Thalaippum romba porutham
ReplyDeleteஅஆவ்வ்வ்வ்வ்வ்......!!!! நெம்ப ட்ச் பண்ணிபோட்டீங்கோ அபி நைனா.....!!
ReplyDeleteபாச மலர்களாய்...... !!!! ஆஆவ்வ்வ்வ் ....!!!
நகமும் சதையுமாய்.......!!! அஆவ்வ்வ்வ்வ்வ்......!!!
cpu வும் மாநிட்டருமாய்........ !! ஆஆவ்வ்வ்வ்வ்....!!
சத்யமும் சாப்ட்வேருமாய்.....!! ஆவ்வ்வ்வ்வ்....!!
உங்கள் இணைபிரியா நட்பினை..!! அஆவ்வ்வ்..!! நான் என்னவென்று பாராட்டுவது..!!! ஆஅவ்வ்வ்வ்...!!!
இப்புடி ஒரு மொக்க பதிவ போட்டு மனுஷ உயிர வாங்குறியே அபி நைனா....!!!
நாங்க ஒத்துமையா ஆகனும்ன்னா எங்க மாமா பையன் எவனாவது எங்க ரெண்டு பேர்ல யார் உசத்தின்னு கருத்து கணிப்பு நடத்தனும். நாங்க அவங்க வீட்டுல போய் அட்லீஸ்ட் மூனு பேரை போட்டு எரிக்கனும் பின்ன ஒத்துமையாகனும்....ஹும் "அப்படீன்னு பெருமூச்சு விட்டுகிட்டேன்.
ReplyDeleteஅது அரசியல் அபி அப்பா,
இது குடும்பமில்லையா
படிச்சு பக்குவானவங்களுக்குள் புரிதல்
சுலபமே.
மேற்கொண்டு ஆகவேண்டியத கவனிங்க...
கச்சேரி பிள்ளையாருக்கு ....
எல்லாம் சரி அபி அப்பா,
ReplyDeleteஎப்ப அவரும் நீங்களும் பேசிக்கபோறீங்க?
மாற்றம் ஒண்ணுதான் மாறாதது, உறவுகளில் ஈகோ வேண்டாம். காலம் திரும்பாது.
இதெல்லாம் கடல் கடந்து போய் குடும்பத்துக்காக உழைக்குற உங்களுக்கு நான் சொல்லித்தான் புரியனுமா?.
நல்ல மாற்றம் ஏற்பட வாழ்த்துக்கள்!!