பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 5, 2009

வாந்திய' தேவன் அபிஅப்பா!!

நான் ஏற்கனவே குதிரை பந்தயம் பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தேன். எனக்கு எப்பவுமே வந்தியதேவன் மாதிரி எனக்கும் எப்பவுமே குதிரையின் மேல் ஒரு அலாத காதல். அன்றைக்கு அந்த போட்டியின் போதே 2 மாதத்துக்கு 1800 திர்காம் கட்டி குதிரை ரைட் டிரைவிங்க்கு பணம் கட்டியாச்சு.

மேலும் அப்போ 900 திர்காம் கட்டி 1மாதத்துக்குன்னு சொல்லிட்டு 7.8 மெகா பிக்சில் காமிராவும் வாங்கிட்டேன்.எனக்கு என்ன 200 வருஷம் பின்ன ஒரு கல்கியா எழுத போறார்! ம செ மாதிரி என்னை படம் வரையா போறாங்களா? இல்லியே அதனாலத்தான் அந்த கேமிராவும் வாங்கியாச்சு! சரித்திரம் முக்கியம் சாரே!

முதல் நாள் கிளாசுக்கு போன பின்னே குதிரை கிட்ட என்னை கூட்டி போய் "இதான் லைன் பிளட்"ன்னு அந்த ஆஸ்திரேலியாகார வாத்தி சொன்னப்ப குசும்பன் தான் நியாபகம் வந்தான். ஒரு முறை என் ஆபீஸ்க்கு குசும்பன் வரும் போது பெருமையா சொன்னேன் "இந்த பிராஜட் 5.5 பில்லியன் திர்காம்டா தம்பி"ன்னு. அதுக்கு தம்பி கேட்டான் "என்ன பிராஜட்?"ன்னு. நான் பெருமையா சொன்னேன் "உலகின் மிக பெரிய குதிரை பந்தய மைதானம் இது"ன்னு. நல்லா நாக்கை புடுங்குவது போல கேட்டான் "இது அந்த குதிரைக்கு தெரியுமா??"" லைன் பிளட்டாம் லைன்பிளட் அந்த பேரை சொல்லி கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா??

கிரிக்கெட் மாதிரி இது "கீழ்" தரமால்லாம் "காட்" கட்ட வேண்டாம். முதுகிலே கட்டிகிட்டா போதும். ஆனா இதிலே சம்புரதாய்ம் எல்லாம் அதிகம். அதாவது நம் வலது காலை அந்த குதிரையில் வலப்பக்கம் தொங்கும் பட்டியில் (இதானா தமிழ் பேரு??) வைத்து ஒரு உந்து உந்தினா 3 அடிதான் உயர முடியும். ஆனா குதிரையோ 7 அடி உஅயரம். அப்ப நம்ம கோச்சின் அஸிஸ்டண்ட் நம் இடது உள்ளங்கால் பிடிச்சு ஒரு தூக்கு தூக்கி விடுவார். அப்ப தம் இருந்தா நாம் எகிறி குதிரையின் மேல உட்காந்துடலாம்.
என் வெயிட் கம்மி என்பதால் முதன் முறையே எம்பி உட்காந்தாச்சு. ஆனால் கடிவாளத்தை என் கோச் இன்னும் ஒரு குதிரை மேல உட்காந்து பிடிச்சுகிட்டு போக "அய்யோடா நான் பீச்& ஊட்டி குதிரை ரசிகனாயிட்டேனே"ன்னு ஒரு ஆதங்கம் வந்துடுச்சு.

ஒரு பர்லாங்க் போன பின்ன அவர் என் கிட்ட கடிவாளத்தை விட்டுட்டு "சொடுக்கு"ன்னு சொன்னார். பின்ன என்ன நான் வந்திய தேவனா ஆகியாச்சு. அது பறக்குது மின்னல் மாதிரி! ஆஹா ஆஹா என்ன ஒரு சந்தோஷம்! அப்படியே குந்தவை பக்கத்தில் வந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சுகிட்டு குந்தினா குந்த வைக்கும் இடத்தில் இருந்த அந்த சீட் நழுகி போயிருந்துச்சு. பின்ன என்ன குந்த வைக்கும் இடத்துக்கு "டீப் ஹீட்" போட வேண்டியதா போச்சு. அப்படியே முதல் 1 வாரம் போன பின்னே அடுத்து "சரி நம்ம போட்டோ செஷன் எடுத்து பிளாக்ல போட்டு வந்திய தேவனுக்கு முற்றும் போட்டுடலாம்"ன்னு நெனைச்சு கேமிராவை எடுத்து கிட்டு போனேன் 1 வாரம் முன்ன!

"சார் நான் இப்ப ஒரு கைதேர்ந்த குதிரை வீரனா ஆகியாச்சுன்னு நினைக்கிறேன். அதனால நீங்க இந்த கேமிராவை பிடிங்க படத்தை புடிங்க. ஆனா இனி எனக்கு இந்த சொங்கி குதிரை எல்லாம் வேண்டாம். அதனால லக்கிலூக் பதிவு மாதிரி இருக்கும் இந்த நமீதா தான் வேண்டும்ன்னு சொல்ல அவரோ "நோ நோ உனக்கு இன்னும் குதிரையிலே நல்ல எக்ஸ்பீரியன்ஸ் வரும் வரை இதை கொடுக்க வேண்டாம்ன்னு பார்க்கிறேன்"ன்னு சொல்ல "சார் நாளை அடுத்த மாச பீஸ் எடுத்து வரேன்"ன்னு சொல்ல அவரும் சரி எதுல வேணா போன்னு சொல்ல நானும் ஏறிட்டேன்.

நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு. இதிலே ஒரு வேடிக்கை என்னான்னா நம்ம குதிரையிலே ஏறின பின்னே வாயிலே 15 அல்லது 20 உளுந்து மாதிரி ஒரு உருண்டை போடுவாங்க

நாம் வேகமா ஓட்டனும்ன்னு நினைச்சா அப்படியே குனிஞ்சு அதிலே ஒரு 2 அல்லது 3 உருண்டையை அதன் காதில் வேகமா படும் படி ஊதனும். அப்படியே சிட்டா பறக்கும். எனக்கு என்ன ஒரு கெட்ட பழக்கம்ன்னா அது 1 பர்லாங் போன பின்னயே அந்த உருண்டை எல்லாம் அது குதிக்கும் குதியிலே என் வயித்து உள்ளே போயிடும். விட்டா நான் குதிரையை விட வேகமா ஓடி வந்து டாய்லெட்டுக்கு ஓடிடலாம்ன்னு தோணும்!

வாத்தி அப்பவே சொன்னாரு! எலேய் காதுல அந்த உருண்டை விழுந்தாலே பிச்சுகிட்டு போகும். ஆனா தவறி போய் கூட உன் கால அதன் காதிலே படாம பார்த்துக்கோ" அப்படின்னு.

ஒரு கட்டத்துல என் கால் எங்க இருக்கு அது எங்க இருக்குன்னு எல்லாம் தெரியலை! அந்த வேகத்திலே என் கால் அதன் காதிலே உரசிச்சு. அவ்வளவுதான்!

கால் விரல் மாத்திரம் அப்ப உணர்ந்துச்சு ஆகா சார் சொன்னதுக்கு ஆப்போ சிட்டா செய்றியேடா அபிஅப்பா அப்ப உனக்கு ஆப்பு சிட்டா வந்துடும் பாருன்னு ! அது போலவே அதுவரை மணல் தரையிலே சிட்டா பறந்துகிட்டு இருந்த என் நமீதா ட்ராக் மாடி புல் தரைக்கு மாறின பின்ன எனக்குள் இருந்த வந்தியதேவன் வயித்தை பிசைய ஆரம்பிச்சுட்டான்
.
பின்னவே செம ஸ்பீடுல வந்த என் கோச் (அது ஒரு ட்ரைனி குதிரை நம்ம நமீதா மாதிரி இல்லை) என் ஸ்பீடுக்கு பக்கத்தில் கூட வர முடியாம போக எனக்கு வயித்தை மாத்திரம் இல்லை எல்லா பாகமும் கலங்கி போச்சு!
ஒரு வழியா கடிவாளம் பிடிச்சு இழுத்து நிறுத்தலாம்ன்னு நான் நினைக்கும் போது தான் அது என் கையில் இல்லாமல் கீழே தவழ்ந்து வந்துகிட்டு இருப்பது தெரிஞ்சுது.அந்த கெரகத்தாலத்தான் நான் இப்படி கஷ்டப்படுவதும் அப்போதான் தெரிஞ்சுது.
நமீதாவோ "ஒரு நல்ல வடிவேலு கிடைச்சாண்டா நமக்கு"ன்னு கும்மு கும்முன்னு கும்மிகிட்டு இருக்கு! அது ஏன் அப்படி வெறி பிடிச்ச மாதிரி ஓடுதுன்னு யோசிப்பதான் தெரியுது நான் ஒரு லூசு கடிவாளத்தை விட்ட காரணத்தால் அதன் காதை பிடிச்சுகிட்டு இருக்கேன்:-))

இதிலே வேற என் நினைப்பு எல்லாம் வாத்தி போட்டோ எடுத்தாரா இல்லியான்னு மட்டும் தான் இருந்துச்சு. (அடங்கொப்புறானே)
அப்படியே என் கோச் துரத்தி வர நான் ஒரு அழகான புல் மெத்தை பக்கம் ஒதுக்கப்பட்டேன். அவர் என்னை "குதி குதி" என கத்த நான் பதிலுக்கு "சார் உங்க குதிரை மேல இருக்கும் பாசம் என் மேல இல்லியா நான் நாளைக்கு அடுத்த மாசம் ஃபீஸ் தருவதா சொன்னேன்ல" அப்படி நினைச்சுகிட்டேன்.
"எலேய் மேன் அந்த புல் மேலே விழுந்துடு"ன்னு சொன்ன போது தான் புரிஞ்சுது அவர் என்னை தான் குதி குதின்னு கத்தியிருக்கார்ன்னு. ஆமாம் குதிரையா என் மேல உட்காந்து இருக்கு நான் தானே அதன் மேல உட்காந்து இருக்கேன், அப்படியே கலக்கிய வயித்தோட கீழே விழுந்தேன் கூடவே குடம் குடமா வாந்தி!!!! அட அப்ப நான் தான் லூசா????

ஆக ஒரு வந்தியதேவனை வாந்திய தேவனா ஆக்கிய நமீதாவுக்கு என் கண்டனங்கள்!!

25 comments:

  1. :) கடைசியில் போட்டோ எடுக்கவே இல்லையா..??

    என் பொண்ணு அழகா குதிரை ஓட்டுவாளே.. மூணாறு போனப்ப அங்க குதிரைக்காரன் தனியாவே ஓட்டவிட்டான் எல்லாரும் ஆச்சரியமா பாத்தாங்க..

    ReplyDelete
  2. சித்தப்பூ,
    ஏற்கனவே சாட்ல கதைய கேட்ருந்தாலும், முழுக் கதையையும் இங்க படிச்சுட்டு வயிறு குலுங்க சிரிச்சு, வயிறு வலிக்குது சித்தப்பூ.

    குதிரை ஓடுன வேகத்தோட வேகமா செம நகைச்சுவையா இத எழுதியிருக்கீங்க. அதோட நான் வேற சம்பந்தம் இருக்கோ இல்லையோ அந்த 23ஆம் புலிக்கேசி குதிரைமேல போறத வேற நினைச்சுக்கிட்டேனா, சிரிப்பு தாங்கவே முடியல.

    ReplyDelete
  3. :)) மீண்டும் சவாரிக்கு போகலையா?

    ReplyDelete
  4. ஹிஹி
    வாந்தி எடுத்தது நீங்க தானா?
    இப்போ எத்தனை மாசம் தொல்ஸ் அண்ணே? :))

    //குதிரையில் வலப்பக்கம் தொங்கும் பட்டியில் (இதானா தமிழ் பேரு??)//

    நீங்கல்லாம் ஒரு குதிரை வீரன், மதுரை வீரன்?
    ஹைய்யோ, ஹைய்யோ! :)

    ReplyDelete
  5. //என் பொண்ணு அழகா குதிரை ஓட்டுவாளே.//

    அண்ணே...
    கயல் அக்கா பொண்ணு கிட்ட அந்த திர்ஹாமைக் குடுத்து கத்துக்குங்க! :)
    அக்கா, ப்ளீஸ், திர்ஹாம் வாங்கிக்கோங்க! :)

    ReplyDelete
  6. ஹா ஹா ஹா ஹான்னு சிரிச்சுக்கிட்டே இருந்தாலும் டமால்ன்னு கேப்ல ஒரு கொஸ்டீனு....!??

    நமீதாவுடன் நான்!

    இந்த டைட்டில் வைச்சா என்னவாம் குதிரைக்கும் ஒரு கில்பான்ஸியா இருந்திருக்கும்ல...!

    :)))))))))))

    ReplyDelete
  7. ///ஆக ஒரு வந்தியதேவனை வாந்திய தேவனா ஆக்கிய நமீதாவுக்கு என் கண்டனங்கள்!!///

    நமீதாவை நான் மனதார வாழ்த்துகிறேன்..!

    இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை..!

    ReplyDelete
  8. //ஒரு வந்தியதேவனை வாந்திய தேவனா ஆக்கிய நமீதாவுக்கு என் கண்டனங்கள்!!//


    ரிவர்சுல ஆகாம விட்டதுக்கு சந்தோஷப்படுவீங்களா....

    ReplyDelete
  9. என்னை பத்திதான் பதிவா :)

    ReplyDelete
  10. ஹிஹி
    வாந்தி எடுத்தது நீங்க தானா?
    இப்போ எத்தனை மாசம் தொல்ஸ் அண்ணே? :))
    //


    யோவ் ஒன்னுமே நடக்கலையா

    சொன்னா கேளு..:)

    ReplyDelete
  11. அந்த வாந்திக்கு நான் காரணம் இல்லை இல்லை இல்லை

    அவரு அடிச்சிருந்த நெப்போலியன் தான் காரணம்

    :)

    ReplyDelete
  12. ஊவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வே...

    ;)))

    படம் எங்கே படம் எங்கே

    நீங்க குப்புற விழுந்த படம் எங்கே?

    ReplyDelete
  13. //அந்த 23ஆம் புலிக்கேசி குதிரைமேல போறத வேற நினைச்சுக்கிட்டேனா, சிரிப்பு தாங்கவே முடியல.//

    ஹாஹாஹா
    :)))

    ReplyDelete
  14. வீட்டில உட்கார்ந்து படிச்சேனோ தப்பிச்சேன். சிரிச்சுகிட்டே இருக்கேன்.

    சூப்பர்.

    ReplyDelete
  15. டிபிக்கல் கமெடி :)

    ReplyDelete
  16. ஜோசப் பால்ராஜ் said...
    //அந்த 23ஆம் புலிக்கேசி குதிரை மேல போறத வேற நினைச்சுக்கிட்டேனா,//


    அதே:)!


    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கயல் அக்கா பொண்ணு கிட்ட அந்த திர்ஹாமைக் குடுத்து கத்துக்குங்க!:)//

    அதே அதே:))!

    ReplyDelete
  17. //பரிசல்காரன் said...
    //ஒரு வந்தியதேவனை வாந்திய தேவனா ஆக்கிய நமீதாவுக்கு என் கண்டனங்கள்!!//


    ரிவர்சுல ஆகாம விட்டதுக்கு சந்தோஷப்படுவீங்களா....//

    இதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை...உங்களுக்கு புரிகிறதா? அபி அப்பா?

    ReplyDelete
  18. வாங்கோ அபி நைனா.........


    இன்னிக்கு என்ன மொக்கைய போட்டிருகுரீங்கன்னு பாக்கலாமுங்கோவ்............!!!



    // எனக்கு எப்பவுமே வந்தியதேவன் மாதிரி எனக்கும் எப்பவுமே குதிரையின் மேல் ஒரு அலாத காதல். ///


    ஐயயோ ....!! அபி நைனா......???? என்னது இது......????



    // அன்றைக்கு அந்த போட்டியின் போதே 2 மாதத்துக்கு 1800 திர்காம் கட்டி குதிரை ரைட் டிரைவிங்க்கு பணம் கட்டியாச்சு. //


    அட .....!! நமூருல தோட்டத்த குத்தகைக்கு எடுப்பாங்களே ....... அதுமாதிரிங்களா அபி நைனா......????



    // மேலும் அப்போ 900 திர்காம் கட்டி 1மாதத்துக்குன்னு சொல்லிட்டு 7.8 மெகா பிக்சில் காமிராவும் வாங்கிட்டேன் .... //


    அட .... பரவால்லையே.......!! துபாய் நெம்போ முன்னேரிருச்சாட்ட .......??? நெம்ப சந்தொசமுங்கோ அபி நைனா......!!!!!



    // எனக்கு என்ன 200 வருஷம் பின்ன ஒரு கல்கியா எழுத போறார்! ம செ மாதிரி என்னை படம் வரையா போறாங்களா? இல்லியே அதனாலத்தான் அந்த கேமிராவும் வாங்கியாச்சு! சரித்திரம் முக்கியம் சாரே! //


    ஆமா .... ஆமா.....!!! சரித்திரம் நெம்ப முக்கியமுங்கோ அபி நைனா.....!!! நீங்கோ பத்தாவது படிக்கும்போது ( சந்தேகம்தான் ) சரித்திர பாடத்துல பத்து மார்க்குக்கு மேல தாண்டவே மாடீங்கலாமா ......?? நேத்துதான் B.B.C ல சொன்னாங்கோ........!!!!



    // முதல் நாள் கிளாசுக்கு போன பின்னே குதிரை கிட்ட என்னை கூட்டி போய் "இதான் லைன் பிளட்"ன்னு அந்த ஆஸ்திரேலியாகார வாத்தி சொன்னப்ப குசும்பன் தான் நியாபகம் வந்தான். ///

    நா கேள்விப்பட்டதெல்லாம் ஸ்டீல் ப்லேட்டுதான் ......!! அதேனுங்கோ அபி நைனா லைன் ப்ளட் ......???

    அடங்கொன்னியா.......!!! அவுரு பெரிய கப்பல் வியாபாரியாச்சே.........!! நல்லாருக்காருங்களா அவுரு ......???


    //
    கிரிக்கெட் மாதிரி இது "கீழ்" தரமால்லாம் "காட்" கட்ட வேண்டாம். முதுகிலே கட்டிகிட்டா போதும். //


    ஆமா ......!!! கட்டிகிட்டா போதும்....... திரும்பி பாக்காம அப்புடியே வெறிக்க ... வெறிக்க ஓடும்........!!!!!



    // அந்த குதிரையில் வலப்பக்கம் தொங்கும் பட்டியில் (இதானா தமிழ் பேரு??) வைத்து ஒரு உந்து உந்தினா 3 அடிதான் உயர முடியும். ஆனா குதிரையோ 7 அடி உஅயரம். //


    அப்போ ..... குதரையோட கழுத்த காட்டி ஒரு உந்து ... உந்த்னம்முனா ...... ரிவர்சுல பிச்சுகிட்டு ஓடுமாங்கோ அபி நைனா.......????



    // அப்ப நம்ம கோச்சின் அஸிஸ்டண்ட் நம் இடது உள்ளங்கால் பிடிச்சு ஒரு தூக்கு தூக்கி விடுவார். //

    எப்புடியோ ... குப்புற தள்ளாம இருந்தா சேரி.......!!!!!



    // அப்ப தம் இருந்தா நாம் எகிறி குதிரையின் மேல உட்காந்துடலாம். ///



    ஓஓஓஒ ........!!! இதுக்கு இந்த பழக்கமெல்லாம் வேணுமா.....!!!! அடங்கொன்னியா.....!!!!



    /// என் வெயிட் கம்மி என்பதால் முதன் முறையே எம்பி உட்காந்தாச்சு. ///


    பாத்துங்கோ அபி நைனா......!!! வெயிட்டுக்கு கல்ல....கில்ல கட்டீட்டு ஒக்காருங்கோ....!!! இல்லீனா காத்துல பட்டமுட்டுட்டு இருப்பீங்கோ.......!!!!!!


    // ஆனால் கடிவாளத்தை என் கோச் இன்னும் ஒரு குதிரை மேல உட்காந்து பிடிச்சுகிட்டு போக "அய்யோடா நான் பீச்& ஊட்டி குதிரை ரசிகனாயிட்டேனே"ன்னு ஒரு ஆதங்கம் வந்துடுச்சு. //



    அடப்பாவமே......!!! நீங்கோ இவ்வளவு பெரிய அப்பாவியா .......??? அங்கெல்லாம் குதிரைக்கு ஒரு ரவுண்டுக்கு பத்து ரூவாய்தான்.....!!!!



    அய்யோ .... சாமி .......!!! மொக்க இன்னும் தொடருதா.......!! நம்பநாள முடியாது சாமி.....!!!!


    போயிட்டு வரனுங்கோவ் அபி நைனா......!!!!!!

    ReplyDelete
  19. நீங்கல்லாம் ஒரு குதிரை வீரன், மதுரை வீரன்?
    ஹைய்யோ, ஹைய்யோ! :)

    :-) ஹ அஹா

    ReplyDelete
  20. //அவரு அடிச்சிருந்த நெப்போலியன் தான் காரணம்
    //

    ஹிஹி, நமீதா உண்மை சொல்றாங்க

    ReplyDelete
  21. ஹைய்யோ

    வாந்திய தேவன்

    அப்புறம் லூசு....

    இருங்க சிரிச்சிட்டு வந்து மீதிய சொல்றேன்.

    ReplyDelete
  22. அபி அப்பா, கடைசி வரைக்கும் போடோவே எடுக்கலையா?

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))