இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!
இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!
இடைப்பட்ட நேரத்தில் ஒரு ஆங்கிலேயர் நடத்தும் மேஜிக் நிகழ்சியும் அதை சுற்றியும் இருக்கும் குழந்தைகளும்
கமான் கமான் என கத்தும் ஒரு நாதாறி:-))(ஆனா அவன் எழுதி போட்ட ஒரு நாயும் ஜெயிக்கலை என்பது உபரி செய்தி)
எல்லாம் தட்டாமாலை சுத்துது! இங்க தான் உள்ளங்கால் பிடிச்சி ஓனர் ஜாக்கியை தூக்கி விடுவார்!
இடைப்பட்ட நேரத்தில் சீட்டு ஆட்டம்!
இரண்டாம் பந்தயத்தில் ஜெயித்த குதிரை! என்ன ஒரு ஜம்பம்? ங்கொய்யால என் குதிரையை தோக்க அடிச்சிட்டல்ல! நீ மட்டுமா 12 குதிரையில் 11 அப்படி தான் செஞ்சுது, ஹும்!!!
சரி போனா போவுது வெற்றி எனதே! ஜெயிச்சது எல்லாம் நானே!
நான் 1987 ல் சென்னையில் சில மாதம் இருந்த போது எல்லாம் கிண்டி பாலத்தில் ஞாயிறு பகல் பொழுதுகளில் கையிலே ஏதோ பாட்டு புத்தகம் மாதிரி வைத்து கொண்டு எதிரே நமீதா நடந்து வந்தா கூட தெரியாத மாதிரி சில ஆசாமிகள் போய் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இருந்து அந்த புத்தகத்தை தவிர அவர் அரைஞான் கயிறு முதல் கொண்டு யாரும் லவட்டி விடலாம். குதிரை ரேஸ்க்கு போறாராமா! அதுல ஒரு கொடுமை என்னன்னா கிண்டில குதிரை ஓடாதாம். பெங்களூர்ல ஓடும் குதிரைக்கு இங்க பணம் கட்டி லைவ் ரிலே கேட்டு "கமான் கமான்"ன்னு கத்திகிட்டு ச்சே எனக்கு சுத்தமா அதல்லாம் பிடிக்காது.
பாருங்க விதியை நான் இப்போ வேலை பார்ப்பதே உலகின் மிக பெரிய குதிரை பந்தய மைதான கட்டுமான பணி தான். கிட்ட தட்ட அமீரகத்தின் மிக பெரிய பிராஜக்ட். அந்த இடத்துக்கு பக்கத்திலே தான் ஆசியாவின் மிக பெரிய மைதானமும் இருக்கின்றது. அதிலே இப்போ உலக அளவிலான பந்தயம் இப்போது 2 மாதத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றது. எனக்கு அத்தனை இஷ்டமில்லாமல் தான் இருந்தது. ஆனாலும் போய் தான் பார்போமே என போனேன்.
வாரா வாரம் வியாழன், வெள்ளி தான் பந்தயம். மொத்தம் 48 நாடுகள் கலந்து கொள்கின்றன. கலந்து கொள்ளும் குதிரைகளில் பாதிக்கும் மேலாக இந்த நாட்டு ராஜாக்கள் குதிரையும், அவங்க பசங்க குதிரைகளும் தான். மொத்தம் 8 பந்தயம். முதல் பந்தயம் சரியாக அதாவது மிக சரியாக இரவு 7.15 க்கு ஆரம்பம். ஒரு பந்தயத்துக்கும் அடுத்த பந்தயத்துக்கும் இடையே 30 நிமிஷம் இடைவேளை.
6 மணிக்கே பார்வையாளர்கள் அனுமதி. யார் காரில் வந்தாலும் அதுக்குன்னு இருக்கும் பார்கிங்ல போட்டுட்டு வரிசயிலே நின்னு அவங்க மினி பஸ்ல தான் அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் "ஷேக் முக்டம் மில்லீனியம் கிராண்ட் ஸ்டேண்டு"க்கு கூட்டி போவாங்க. மிக அழகான உகாண்டா நாட்டு கருத்த பையன்கள் செக்யூரிட்டியால மிக அழகா வரிசையா எல்லாரும் உள்ளே போனோம். நுழைவாயிலிலே இலவச குலுக்கல் கார் (ஃபோர்டு கார்) பரிசுக்கான கூப்பன், பின்னே நம்ம IAS பரிட்சை மாதிரி ஒரு கம்பியூட்டர் கேள்விதாள், பின்னே ஒரு 8 பக்க புக்லெட், அதிலே எத்தனை பந்தயம், எந்த எந்த மணியில் ஆரம்பம், குதிரை பேர் என்ன, ஜாக்கி பேர் என்ன, ஓனர் பேர் என்ன, ஜாக்கி வெயிட் என்ன, குதிரை வயசு என்ன, குதிரை நாடு எது, அதன் அப்பா யாரு அம்மா யாரு, எத்தனை சுழி, இதுக்கு முன்ன ஜெயிச்ச வரலாறு, அதன் பேரு எல்லா கந்தாயமும் இருக்கு.
முதல் பந்தயம் இந்த இலவசகாரர்களுக்கு இல்லை. எல்லாம் கிளப் மெம்பர்களுக்கு. கிளப் மெம்பர்ன்னா ஏ.சி. முத்தையா, விஜய் மல்லையா போன்ற சிலரே இந்தியர்கள்!
ஒரு பந்தயத்துக்கு சராசரியா 10 குதிரைகள். அதிகமா 14 குதிரை, குறைவா 6 குதிரை.
நமக்கு கொடுத்த அந்த IAS கேள்வி தாளில் நாம சுழிக்கனும் எந்த பந்தயத்தில் எது முதல்ல வரணும் என்று. அதை முடித்து ஒரு டப்பாவில் போடனும். அது எல்லாம் கம்பியூட்டர்ல ஃபீட் செய்யப்படும்.
குதிரைக்கு எல்லாம் மாலை 5 க்கே வந்துடும் கிரவுண்டுக்கு. அதுக்கு ஒரு இடம் இருக்கு. அதிலே அந்த குதிரை ரெஸ்ட் எடுக்கும். அது வருவதே சூப்பரான ஏ.சி கோச் கேரவன்ல! கேரவன் - குதிரை எல்லாம் வச்சி நீங்க எதுனா நினைச்சா நான் பொறுப்பு இல்லை. இந்த குதிரை எல்லாம் டிரஸ் இல்லாமத்தான் இருக்கும். ஜெயிச்சா ஒரு போர்வை போத்துவாங்க அத்தனையே
டிரஸ் தான் இல்லியே த்விர எல்லா குதிரைக்கும் 4 பேர் தனி தனியா முடி வெட்ட, சடை பின்ன, அதன் முதுகில் டிசைன் டிசைனா டைமன், ஆட்டின், ரோஜாப்பூ, இப்படி டிசைன் பண்ண, ஆயில் மசாஜ் பண்ண இப்படி ராஜ போக வாழ்க்கை. எல்லாம் 6 அடி உயரம் இருக்கு.
சரி வந்தாச்சா இதான் அந்த கிரவுண்ட்! முதல்ல DIRT என்னும் புல் தரை ட்ராக், அதை அடுத்து TURF என்னும் புல் தரை. அதுக்கு அடுத்து ஒரு தார் ரோடு. அதிலே இரு ஜீப்பிலே மூவி கேமிராவை கிரேனில் கட்டிய ஜீப், அதுக்கு முன்னும் பின்னுமாக 2 ஆம்புலன்ஸ்.
மேட்ச் தூரம்ன்னு பார்த்தா 1200 மீட்டர், 1600 மீட்டர் இப்படியாக அதிக பட்சமாக 2400 மீட்டர். அத்தனையே. இந்த 8 பந்தயத்தில் 5 புள் டிராக் போட்டி. மீதி 3 மண் தரை போட்டி!
மண் தரை போட்டியிலே அதிக குதிரை கிடையாது. சும்மா 7 அல்லது 8 தான்.
குதிரை பேர் எல்லாம் என்ன தெரியுமா? ALMAJIT, BEAVER PATROL, GRANTLY ADAMS, LEAGUE CHAMPION, LEANDROS,NIGHT CROSS, NOTA BENE, PRINCE TAMINO, MISS GORICA, MONTPELLIER, CONFUCHIES, LIPOCCO, CONCEAL எதுனா உங்களுக்கு புரியுதா? சரி விடுங்க! அந்த குதிரைக்கு அந்த பெயர் புரியுமான்னு சோதிக்க miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.
ஒரு பந்தயம் ஆரம்பிச்ச உடனே அதாவது 10 நிமிஷம் முன்ன பரிசு கொடுக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் வரும் ஆனா அதன் மேல ஜாக்கி இருக்க மாட்டாங்க. அதன் பராமரிப்பாளர் 2 பேர் வதன் கடிவாளத்தை பிடிச்சுகிட்டு அந்த பரிசு கோப்பையை சுத்தி வருவாங்க. கூடவே அதன் ஓனர் வருவார். அவர் குதிரையை தடவி கொடுத்துகிட்டே ஓடிவருவார். அவர் அந்த குதிரைக்கு முத்தம் கொடுப்பதும், அது அவருக்கு முத்தம் கொடுப்பதும் காண கிடைக்காத காட்சி. பின்ன தான் ஜாக்கி ரோல்ஸ்ராய் காரிலே வருவார். ஆனா பாருங்க அந்த ஜாக்கி வெயிட் குறைந்த பட்சம் 40 கிலோ, அதிக பட்சம் 57 தான். எல்லாம் முதுகிலே கார்டு, காலில் கம்பூட்டு, தலையில் ஹெல்மெட் சகிதம் வருவாங்க. அதுல பாருங்க இந்த கோடீஸ்வர ஓனர் தான் இவரின் இடது உள்ளம் காலை தூக்கி விடனும். இவரும் அப்ப ஒரு ஜம்ப். அவர் குதிரை மேல உட்காந்துடுவார்.
பின்ன ஒரு மணி அடிக்கப்படும். பின்ன எல்லா குதிரையையும் ஒரு "கைடு" குதிரை அழைச்சுகிட்டு போகும் போட்டி துவங்கும் இடத்துக்கு. அதாவது நாம் பார்க்கும் கிராண்ட் ஸ்டாண்டு இருக்கே அது போட்டி முடியும் இடம் தான். ஆனா போட்டி துவங்கும் இடம் நமக்கு கண்ணுக்கு தெரியாது. ஆனா 3 பெரிய 70 mm ஸ்கிரீன் இருக்கும். அங்கே எல்லா குதிரையும் போன பின்ன ஒரு கூண்டு மாதிரி இருக்கும். அதிலே அடைத்து மூடிவிட்டு சரியான நேரத்திலே திறந்து விட்டா செம ஓட்டம் தான்!
நம்ம கிட்ட குதிரை 1 நிமிஷத்துல வந்துடும். மண் தரையா இருந்தா புழுதி பறக்கும். ஜெயிச்சவனுக்கு பரிசா 1 லட்சம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை பரிசு.
சரி 6.45க்கு ஆரம்பிச்ச குதிரை பந்தயம் 6.46க்கு முடிஞ்சுதா? மீதி அரை மணி நேரம் என்ன செய்வது என கவலை வேண்டாம். ஃபேஷன் ஷோ இருக்கு, மேஜிக் இருக்கு, இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான். அதை எல்லாம் விட பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம்.
இரவு 10.45க்கு முடியும் அந்த பந்தயத்துக்கு பின்ன 11 மணிக்கு இலவச பரிசு கூப்பன் முடிவு வரும் மைக்கிலே. பின்ன ஒவ்வொறு பரிசா வரும். நாம இப்ப அபீட் ஆகலைன்னா வண்டிக்கு 1 மணி நேரம் கியூவிலே நிக்கனும் அப்பீட் ஆகுவுமா?
மீ த பர்ஸ்ட்டூ :))
ReplyDeleteரேசுக்குப் போற கெட்டப் பழக்கம் வேற இருக்கா உங்களுக்கு?
ReplyDelete:)
ம்கும் இந்த நிஜ குதிரைகளை பற்றி எழுதி இருக்கீங்க, நான் கூட வேற என்னமோன்னு ஓடி வந்தேன்:)))
ReplyDelete//பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு //
உங்களுக்குதான் ஒரு டீஸ்பூனே போதுமே:)))
//miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை//
ReplyDeleteஅவங்கதான் குதிரை ஓனரின் மகள். நம்ம குதிரையை அதற்குள் கூப்பிடாறங்களேன்னு அன்பா திரும்பிப் பார்த்திருக்காங்க. பயந்துட்டீங்களா?
ஆவது படத்துக்கும் 3 ஆவது படத்துக்கும் என்னால் 6 வித்யாசம் கண்டுபிடிக்க முடியல :)
ReplyDeleteஅங்க வந்தா எதாவது அரேபிய குதிரை எதாவது தள்ளிகிட்டு வரமுடியுமா?.
ReplyDeleteஅச்சச்சோ... அபி அப்பா கூட ரேஸில பணம் போடுறார் போல இருக்கே.. ;-)
ReplyDeleteஆயில்ஸ் உங்க வருகை முதல் வருகை தான்!!
ReplyDelete\\ கைப்புள்ள said...
ReplyDeleteரேசுக்குப் போற கெட்டப் பழக்கம் வேற இருக்கா உங்களுக்கு?
:)
\\
கைப்ஸ் இதுல நான் ரேஸ்க்கு போனது உண்மை தான் ஆனா பணம் கட்டினேனா: ஆனா ஃப்ரீயா வந்த கூப்பன்ல பரிசு கிடைச்சுதான்னு பார்த்தேன் அத்தனையே ஹி ஹி ஹி:-))
\\ குசும்பன் said...
ReplyDeleteம்கும் இந்த நிஜ குதிரைகளை பற்றி எழுதி இருக்கீங்க, நான் கூட வேற என்னமோன்னு ஓடி வந்தேன்:)))
//பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு //
உங்களுக்குதான் ஒரு டீஸ்பூனே போதுமே:)))
வாய்யா குசும்பா! நீ இன்னிக்கு வால் பையன் பதிவ பார்த்தது முதல் அப்படித்தான் இருக்க:-))
என்னது எனக்கு டீஸ்பூனா! இப்ப 4 மாசமா அது கூட ஆகாதுப்பா!!
\\ சுல்தான் said...
ReplyDelete//miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை//
அவங்கதான் குதிரை ஓனரின் மகள். நம்ம குதிரையை அதற்குள் கூப்பிடாறங்களேன்னு அன்பா திரும்பிப் பார்த்திருக்காங்க. பயந்துட்டீங்களா
\\
வாங்க பாய்! ஆனா அது அயர்லாந்து குதிரையாச்சே!:-))
\\ கோவி.கண்ணன் said...
ReplyDeleteஆவது படத்துக்கும் 3 ஆவது படத்துக்கும் என்னால் 6 வித்யாசம் கண்டுபிடிக்க முடியல :)
\\
கோவியாரே எல்லாரையும் கெடுத்து வச்சுட்டான் வாலு:-))
\\ வால்பையன் said...
ReplyDeleteஅங்க வந்தா எதாவது அரேபிய குதிரை எதாவது தள்ளிகிட்டு வரமுடியுமா
\\
எலேய் வாலுதம்பி! நீ கெடுத்தது ஒரு ஆளை இல்ல ஒரு சமூகத்தையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-))
//ALMAJIT, BEAVER PATROL, GRANTLY ADAMS, LEAGUE CHAMPION, LEANDROS,NIGHT CROSS, NOTA BENE, PRINCE TAMINO, MISS GORICA, MONTPELLIER, CONFUCHIES, LIPOCCO, CONCEAL எதுனா உங்களுக்கு புரியுதா? சரி விடுங்க! அந்த குதிரைக்கு அந்த பெயர் புரியுமான்னு சோதிக்க miss gorica ன்னு கூவினேன்!//
ReplyDeleteஅம்புட்டு பெயர் இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு மிஸ் னு போட்டு இருக்க பெயரை மட்டும் அழைத்து சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது என்பதை நீங்கள் இங்கு விளக்கியே ஆக வேண்டும்...
அரபிய குதிரைகள் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறோம் :)
\\ தமிழ் பிரியன் said...
ReplyDeleteஅச்சச்சோ... அபி அப்பா கூட ரேஸில பணம் போடுறார் போல இருக்கே.. ;-)
\\
கைப்ஸ்க்கு போட்ட அதே பதிலை ரிப்பீட்டிகிறேன்!!!:-))
\\அம்புட்டு பெயர் இருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு மிஸ் னு போட்டு இருக்க பெயரை மட்டும் அழைத்து சோதித்து பார்க்க வேண்டிய கட்டாயம் என்ன வந்தது என்பதை நீங்கள் இங்கு விளக்கியே ஆக வேண்டும்...
ReplyDeleteஅரபிய குதிரைகள் பற்றி ஒரு பதிவு வேண்டுகிறோம் :)
\\
நாகை சிவா அண்ணே! நல்ல கேள்வி கேட்டீங்க! நானும் பதிவு போட்ட பின்ன அதை யோசனை பன்ணி பார்த்தேன். உங்க கேள்வி நல்ல கேள்வி! ஆனா நான் இதை ச்சாய்ஸ்ல விட்டுடரேன்:-))
அரபி குதிரைகள் பத்தி பதிவு போடவே ஒரு கேமிரா வாங்கியாச்சு! ஆனா இது நிஜ குதிரைகள் தம்பிரீஈஈஈஈஈஈஈ:-))
Ungalai nambi oru chinna paiyanai anupi vecha ippadi thaan kuthirai raceu, seetatamnu kedupeengala?
ReplyDeleteநல்லா எழுதி இருக்கீங்க, எனக்கு இந்த ரேஸ் எல்லாம் தெரியாது.
ReplyDeleteஆனா நீங்க எழுதி இருப்பதை பார்த்து நல்லா சிரிக்க முடிஞ்சுது. உங்க படமும் பார்த்தேன்.
//
ReplyDeleteசரி 6.45க்கு ஆரம்பிச்ச குதிரை பந்தயம் 6.46க்கு முடிஞ்சுதா? மீதி அரை மணி நேரம் என்ன செய்வது என கவலை வேண்டாம். ஃபேஷன் ஷோ இருக்கு, மேஜிக் இருக்கு, இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான். அதை எல்லாம் விட பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம்.
//
அன்ன இது சுபேரா இருக்குதே இந்த மாதிரி எல்லாம் கத்துவாங்களா?
ஃபேஷன் ஷோ இது பார்க்கலாம்.
அட இதுவும் (இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான்.)
பரவா இல்லை. இதுதான் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம். ஒரே சிரிப்பா இருந்தது.
//
ReplyDeleteஇரவு 10.45க்கு முடியும் அந்த பந்தயத்துக்கு பின்ன 11 மணிக்கு இலவச பரிசு கூப்பன் முடிவு வரும் மைக்கிலே. பின்ன ஒவ்வொறு பரிசா வரும். நாம இப்ப அபீட் ஆகலைன்னா வண்டிக்கு 1 மணி நேரம் கியூவிலே நிக்கனும் அப்பீட் ஆகுவுமா?
//
சரி சரி கியூவிலே நின்னு எதுனாச்சும் பரிசு கிடைச்சா இந்த தங்கச்சியை மறந்துடாதீங்க அண்ணா.
பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்!!
ம்ம்ம் நல்ல குதிரை படம் ஒன்னுகூட இல்ல.....
ReplyDelete//ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.//
ReplyDeleteரசித்து சிரித்தேன். அதையும் ஒரு போட்டோ எடுத்து போட்டு இருக்கலாம்.
//ஆனா அவன் எழுதி போட்ட ஒரு நாயும் ஜெயிக்கலை என்பது உபரி செய்தி//
ReplyDeleteஆமா எழுதி போட்ட நாய்(குதுர) பேரு “miss gorica ” தானே? :))
//கைப்புள்ள said...
ReplyDeleteரேசுக்குப் போற கெட்டப் பழக்கம் வேற இருக்கா உங்களுக்கு?
:)
//
றிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!
தல ரேசுக்கு போறன்னால - போதுமே கெட்ட பழக்கம் வேற எதுக்கு எக்ஸ்ட்ரா எல்லாம் அண்டர்ஸ்டுட் :))))
//என்னது எனக்கு டீஸ்பூனா! இப்ப 4 மாசமா அது கூட ஆகாதுப்பா!!//
ReplyDeleteநோட்டீஸ்டு
இன்பர்மேஷன் செண்ட் டூ ஹோம் மினிஸ்ட்ரி :))))
//Anonymous said...
ReplyDeleteUngalai nambi oru chinna paiyanai anupi vecha ippadi thaan kuthirai raceu, seetatamnu kedupeengala?
//
றீப்பிட்டேய்ய்ய்ய்!
அந்த தம்பி நொம்ப்ப்ப நல்ல தம்பி என்னிய கூட ஆசையா அண்ணே அண்ணே கூப்பிடும் அதை போயி இப்படி கெடுத்துப்புட்டீங்களேண்ணா :(
துபாய் குதிரை பந்தயம் பற்றிய புல் டீடெயில்டு ரிப்போர்ட் அபி அப்பா
ReplyDeleteசூப்பர் :)
நமீதா ரேஞ்சுக்கு ஏதாவது குதிரை படம் காணிப்பீங்கன்னு பார்த்தா...ஹ்ஹூம் ஏமாந்துட்டேன்
ReplyDelete//கைப்ஸ் இதுல நான் ரேஸ்க்கு போனது உண்மை தான் ஆனா பணம் கட்டினேனா: ஆனா ஃப்ரீயா வந்த கூப்பன்ல பரிசு கிடைச்சுதான்னு பார்த்தேன் அத்தனையே ஹி ஹி ஹி:-))//
ReplyDeleteஆகா...தானமா கொடுத்த...:-)
//ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.
//
அடி வாங்கின கதையெல்லாம் சொல்லவேயில்ல!!
எனக்கு தெரிந்து துபாய் பற்றி போட்ட முதல் பதிவு இது தானே?
ReplyDeleteகிண்டியில் வேலை செய்த போது,ரேஸ் நாளில் ரயில்வே பாலத்தில் இந்த புத்தகம் விற்கும் ஆட்கள் தொல்லை தாங்கமுடியாது.
//பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு //
ReplyDelete:))))
//miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா //
ReplyDelete:)))))))))))
ROTFL
சித்தப்பூ அடுத்த தடவ ஊருக்கு வர்றப்ப 3 குதிரக் குட்டி வாங்கிட்டு வாங்க. எனக்கு ஒன்னு, அபி பாப்பாவுக்கு ஒன்னு, நட்டு தம்பிக்கு ஒன்னு. சரியா?
ReplyDeleteவாங்கிட்டு வரல, அப்றம் நட்டுக்கிட்ட சொல்லி உங்கள சரியா கவனிக்க சொல்வேன்.
naadhaari kudhirai
ReplyDelete