பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 6, 2009

ஆ.வியில் வந்த இந்த பாவி:-)) (மீண்டும்)

எங்க ஊர் பக்கம் ஒரு பழக்கம் உண்டு. இந்த கும்மி, கோலாட்டம் எல்லாம் இருக்கே சும்மா ஆடிட முடியாது. கும்மி கோலாட்டம் எல்லாம் ஆட நல்ல டைமிங் சென்ஸ் கொண்ட, அந்த நளினம் தெரிந்த பெரிய பெரிய ஜாம்பவிங்களால் மட்டுமே முட்டியும். இதுல பாடிகிட்டே வேற ஆடனும்.

பெரிய பில்டிங் கட்டும் போது சர்வேயர் வேலை இருக்கே அது ரொம்ப முக்கியம். அந்த சர்வேயர் பாயிண்ட் எடுத்து கொடுத்த பின்னே அந்த பாயிண்ட்டை மையமா வச்சுகிட்டு தான் அந்த வேலையே நடக்கும். அது போல கும்மி, கோலாட்டத்துக்கும் நடுவே ஒரு சின்ன ஆம்பள பையனை கூட்டி "நீ தான் இன்னிக்கு புள்ளயாராம்"ன்னு (அதாவது செண்டர் பாயிண்ட்) சொல்லி நடுவே அவனை குத்தவச்சு அவனை சுற்றியும் கோலாட்டம் தான்.

இதுல டைமிங் தப்பாச்சுன்னா புள்ளையார் மண்டை பணால். கிட்ட தட்ட தலைமேல ஆப்பிள் வச்சு சுடுவது மாதிரி.

அப்படித்தான் நம்ம ஆனந்த விகடன் - சக்தி 2009 மகளிர் தின சிறப்பு மலரில் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை அதாங்க செண்டர் பாயிண்ட் புள்ளயார் வாய்ப்பை விகடன் கொடுத்தது

அது போல கும்மி, கோலாட்ட ஜாம்பவிகள்,உஷாஅண்ணி,ஷைலஜா, பிரண்ட் ராமலெஷ்மி(இவங்க தான பாடிகிட்டே ஆடினது, அதாவது கவிதையும்கட்டுரையும்),புதுகை தென்றல்(தலைப்பு மாதிரியே போட்டோவிலும் சிரிப்பு),மதுமிதா ஷக்திபிரபா, தங்கச்சி ரம்யா ,
கவிநயா ,சகோதரி சந்தனமுல்லை , லெஷ்மி(இந்த எழுத்த எங்கயோ முற்றத்தில் உட்காந்து படிச்ச மாதிரி இருக்கே), பொன்ஸ்(ஹாங் இது அப்பளம் சுடுவது எப்படி மொக்கை புகழ் பொன்ஸ் அக்கா) ஆகியோர்.

எல்லா இந்த ஜாம்பவிகள் என்னும் மலர்களுக்கு மத்தியில் இந்த அபிஅப்பா என்னும் நார் கூட வாசம் பெற்றது. ஆனந்த விகடனுக்கு நன்றி!

முகப்புக்கு இங்க வாங்க!

51 comments:

  1. ஆகா! தம்பி ரிஷானை விட்டுட்டனே! சரி அவன் தான் நிரந்தர புள்ளையாராச்சே! வாழ்த்துக்கள் ரிஷானுக்கும்!

    ReplyDelete
  2. எங்க ஊர்ப்பக்கம் நடுவுல புள்ளையார உக்கார வெச்சி "புள்ளாயா புள்ளாயா" ன்னு சொல்லி கும்மியடிப்பாங்க!

    நீங்கதானா அது!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் அபி அப்பா!

    சக்தி 2009 ஐ அலங்கரித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. என்ன அபி அப்பா பிளாக்லே கமெண்ட் மாடுரேஷனா?

    என்ன கொடுமை சாமி இது?

    ReplyDelete
  5. இரண்டு பிள்ளையார்களுக்கும் கூடவே கோலாட்டம் ஆடி பாரதியாரின் கும்மிப் பாட்டும் பாடிய அத்தனை தோழியருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! அபி அப்பா, கவிநயாவும் இருக்கிறார்கள் அங்கே:)!

    ReplyDelete
  6. வாழத்துகள் அபி அப்பா, ஆனால் உங்களைப் பார்க்க முடியலை, திரும்பவும் போய்ப் பார்க்கிறேன். இடம் பெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் என் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. நன்றி அண்ணா!!

    உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அண்ணா!!

    சக்தி 2009 ஐ அலங்கரித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நட்டு போட்டோவை எடுத்துட்டீங்களா? :(((((((

    ReplyDelete
  10. ஆவியில் வந்த பாவின்னு சொன்ன உடன் "சிபி" காற்று உங்களுக்கும் தொற்றி கொண்டு விட்டதோன்னு
    பயந்துட்டேன் அண்ணா !!!

    நல்ல வேளை அப்படி ஒன்னும் அசம்பாவிதம் நடக்கலை!!!

    ReplyDelete
  11. //ஆவியில் வந்த பாவின்னு சொன்ன உடன் "சிபி" காற்று உங்களுக்கும் தொற்றி கொண்டு விட்டதோன்னு
    பயந்துட்டேன் அண்ணா//

    ஆவி என்றாலே சிபி தானா?

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அண்ணா!

    ஆனா மகளிர் தின சிறப்பிதழ்லே எதனால என்னைப் பத்தி, இந்தத் தங்கச்சியைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை நீங்க?

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் தொல்ஸ்!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அபி அப்பா! :)

    சக்தி 2009 ல் எழுதியஅனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  15. //

    நாமக்கல் சிபி said...
    //ஆவியில் வந்த பாவின்னு சொன்ன உடன் "சிபி" காற்று உங்களுக்கும் தொற்றி கொண்டு விட்டதோன்னு
    பயந்துட்டேன் அண்ணா//

    ஆவி என்றாலே சிபி தானா?

    //

    நூறு சதவிகிதம் ஆமா ஆமா ஆமா !!!

    ReplyDelete
  16. வாங்க பிரண்ட்! முதல் வருகைக்கு நன்றி!

    நீங்க சுட்டிகாட்டிய கவிநயாவுக்கும் சுட்டி கொடுத்தாச்சு. ரெண்டு புள்ளயாரை வச்சு நல்லா அடிச்சீங்கப்பா கும்மி, கலக்கியாச்சுல்ல மகளிர் தினத்தை!:-)

    ReplyDelete
  17. \\"புள்ளாயா புள்ளாயா" ன்னு சொல்லி கும்மியடிப்பாங்க\\

    சிபி ஏன் "இர்"விட்டுட்டீங்க!:-)
    வாழ்த்துக்கு நன்னி!

    ReplyDelete
  18. //
    தீபா வெங்கட் said...
    வாழ்த்துக்கள் அண்ணா!

    ஆனா மகளிர் தின சிறப்பிதழ்லே எதனால என்னைப் பத்தி, இந்தத் தங்கச்சியைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை நீங்க?

    //

    இவங்க அந்த தீபா வெங்கடா அண்ணா!!

    அதான் சின்னத்திரை நட்சத்திரம்

    ReplyDelete
  19. வாங்க கீதாம்மா அதிலயே சுட்டி கொடுத்து இருப்பேனே! அது 2 வருஷம் முன்ன மகளிர் தின பதிவு.

    நட்டு போட்டோவை எடுக்கலையே!

    ஆ.விக்கூ போட்டோ தரலை. கண்ணு பட்டு போகக்கூடாதுன்னு தான்:-))

    ReplyDelete
  20. ரம்யா வாம்மா வணக்கம்! கலக்கிட்ட எல்லாரையும் உன் பதிவின் மூலமா! வாழ்த்துக்கள்!

    என்னது சிபிக்கும் ஆவிக்கும் என்ன சம்மந்தம், புரியலையே:-))

    ReplyDelete
  21. //
    அபி அப்பா said...
    ரம்யா வாம்மா வணக்கம்! கலக்கிட்ட எல்லாரையும் உன் பதிவின் மூலமா! வாழ்த்துக்கள்!

    என்னது சிபிக்கும் ஆவிக்கும் என்ன சம்மந்தம், புரியலையே:-))

    //

    அவரு எப்போ பார்த்தாலும் எனக்கு பேய் கதை சொல்லி பயமுர்த்துவாறு
    அண்ணா!!

    பேய் பதிவு லிங்க் வேறே கொடுப்பாரு அதான் சிபிக்கு ஆவி சிபின்னு நான் பெயரு வச்சிருக்கேன்!!

    ReplyDelete
  22. சக்தி 2009 ஐ அலங்கரித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!//

    ரிப்பீட்டே ;)

    ReplyDelete
  23. paarthutu vanthen Api appaa, unga postile krishnan padathai parthutu keten, appuram than purinjathu, athu thaniya potirukinganu! ellam blogger pannara velai! :))))))))

    ReplyDelete
  24. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. //அவரு எப்போ பார்த்தாலும் எனக்கு பேய் கதை சொல்லி பயமுர்த்துவாறு
    அண்ணா!!

    பேய் பதிவு லிங்க் வேறே கொடுப்பாரு அதான் சிபிக்கு ஆவி சிபின்னு நான் பெயரு வச்சிருக்கேன்!!//


    அது சரி! விட்டா இந்த ஆவிகளுக்கெல்லாம் கூட நாந்தான் டீம் லீடர் னு சொல்லுவீங்க போல இருக்கே!

    http://amanushyaaavi.blogspot.com/2007/02/blog-post_15.html

    ReplyDelete
  26. தோழியருக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.!

    ReplyDelete
  27. வாழ்த்துகள் அனைவருக்கும்!

    //தீபா வெங்கட் said...

    வாழ்த்துக்கள் அண்ணா!

    ஆனா மகளிர் தின சிறப்பிதழ்லே எதனால என்னைப் பத்தி, இந்தத் தங்கச்சியைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலை நீங்க?
    //

    LOL!

    ReplyDelete
  28. சந்தனமுல்லை வாழ்த்துக்கள்! நீங்கள் இப்போதானே வந்து சேர்ந்தீர்கள். நாங்கள் சொல்ல மறந்ததாகச் சொல்லக் கூடாதும்மா:)!

    ReplyDelete
  29. ஆச்சியின் பப்புதான் அங்கு முகப்புக்கே அழகு!

    ReplyDelete
  30. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. எல்லார் கட்டுரைகளும் மிக அருமை.வாழ்த்துக்கள்.


    உங்களதுல ஒரு உள்குத்து இருக்கே. :p

    ReplyDelete
  32. எல்லாருக்கும் வாழ்த்துக்களுங்கோ :)

    ReplyDelete
  33. அபி அப்பா
    நல்லா இருக்குதுங்க உங்களோட வலை பக்கம் . என்னையும் உங்க வலை குடும்பத்தில் சேர்த்து கொள்விர்களா ??

    தோழமையுடன்
    ஜீவா

    ReplyDelete
  34. வாங்க வாங்க வாழ்த்து சொன்ன ஜமால், கவிதா,ஸ்ரீமதி, வெயிலான்,தம்பி கானா பிரபா, நிஜமாநல்லவன்,சிபியார், தாமிரா,சந்தமுல்லை,அமித் அம்மா, அம்பி, முத்து,ஜீவா எல்லாருக்கும் நன்றி!

    ReplyDelete
  35. ஆனா இதுல யார் அந்த கருங்காலி! தீபாவெங்கட் பேர்ல பினாமி பின்னூட்டம் போட்டது???

    பாவம் அந்த புள்ள மனசு என்ன வருத்தப்படும் இப்படி போட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  36. //பாவம் அந்த புள்ள மனசு என்ன வருத்தப்படும் இப்படி போட்டா? அவ்வ்வ்வ்வ்வ்வ்//

    பின்னே! உம்ம பாசமான தங்கச்சி தீபா வெங்கட் புள்ளைய பத்தி நீங்க ஒண்ணுமே எழுதலைன்னா வருத்தப் படாதா?

    ReplyDelete
  37. எங்களைப் பத்திதான் ஏதோ எழுதி இருக்கீங்கன்னு வந்தா ஆனந்தவிகடன்ல வர ஆவியா?

    சரி சரி வாழ்த்துக்கள் அபி அப்பா!

    ReplyDelete
  38. நட்டப்பா, கட்டுரையில அபிபாப்பா, தங்கமணி போன்ற பெயர்கள் தமிழ்மண வாசகர்கள் அல்லாமல் புதியவர்களுக்கு குழம்பும்மில்லே, எடிட் செய்து போட்டிருக்கலாம் இல்லே?

    ReplyDelete
  39. சக்தி 2009 ஐ அலங்கரித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் அண்ணாச்சி !

    கும்மிச்சத்தம்...குலவைச்சத்தமா கேக்குது!
    :)

    ReplyDelete
  41. /ஆகா! தம்பி ரிஷானை விட்டுட்டனே! /
    என்னையுந்தான் விட்டுட்டீங்க. என்னையும், உங்க ஆட்டத்துல சேத்துக்கோங்க.புதுப்பையன்.

    ReplyDelete
  42. //வாங்க வாங்க வாழ்த்து சொன்ன ஜமால், கவிதா,ஸ்ரீமதி, வெயிலான்,தம்பி கானா பிரபா, நிஜமாநல்லவன்,சிபியார், தாமிரா,சந்தமுல்லை,அமித் அம்மா, அம்பி, முத்து,ஜீவா எல்லாருக்கும் நன்றி! //

    அபி அப்பா, இது நல்லா இல்லை போங்க, ஒரு முறைக்கு இரு முறையா நாங்களும் தானே வாழ்த்தி இருக்கோம்! எங்க பேரை எல்லாம் விட்டுட்டீங்க? சிபி, எங்கே? ஆரம்பிங்க பார்க்கலாம்! :P:P:P:P:P

    ReplyDelete
  43. வாழ்த்துக்கள் அபி அப்பா

    ReplyDelete
  44. வாழ்த்துக்கள் அபி-அப்பா!!!.

    ReplyDelete
  45. வாழ்த்துகள் அபி அப்பா, உங்களுக்கும், அனைத்து பதிவர்களுக்கும். அத்துடன், சுட்டிக் காட்டியதற்கும், சுட்டி கொடுத்தமைக்கும், ராமலக்ஷ்மிக்கும், உங்களுக்கும் நன்றி :)

    ReplyDelete
  46. இப்பத்தான் பார்த்தேன் அபிஅப்பா,

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  47. ஆவியில் வந்த இந்த பாவி...

    தலைப்பு நல்லா இருக்கு. :)))))))

    ReplyDelete
  48. // அப்படித்தான் நம்ம ஆனந்த விகடன் - சக்தி 2009 மகளிர் தின சிறப்பு மலரில் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை அதாங்க செண்டர் பாயிண்ட் புள்ளயார் வாய்ப்பை விகடன் கொடுத்தது. //


    உங்கள வெச்சு .......!! காமிடி ..... கீமிடி...... பண்ணலையே.......!!! நெம்ப சந்தோசம்...!!!


    வாழ்த்துக்கள் அபி நைனா .....!!!!!

    ReplyDelete
  49. Ungalala mattum than ippadi aa.ve kuda Ezhtha mudim......... Friend

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))