பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 4, 2009

கலைஞரின் ராஜதந்திரம்!! தொகுதி பங்கீடு! தே.வ.ஆ.ஓ. வந்தேன் பாகம் #2


நான் நேத்து எழுதிய பாகம் #1 படிச்சுட்டு எனக்கு பலபேர் தனி மடலிலும், "not to publish" என பின்னூட்டம் போட்டும், தொலை பேசியும், நேரிலும், தனிப்பட்ட தூதுவர்கள் மூலமாகவும்"என்ன அபிஅப்பா திடீர்ன்னு ரிசல்ட் வரை போயிட்டீங்க, அதுக்கு முன்ன தொகுதி பங்கீடு பத்தியெல்லாம் சொல்லலையா? " ........இப்படியெல்லாம் சொல்லாத காரணத்தால் வேற வழியே இல்லாம நானே எழுத வேண்டியதா போச்சு!
****************************
தலைமை கழக அறிவிப்பு நாள்: ஏப்ரல் 8, இடம் அறிவாலயம்:


கலைஞர்: நாம் இப்போ கூடியிருப்பது எனக்கு நம் பொதுக்குழுவும் , செயற்குழுவும் எடுத்த முடிவின் படித்தான். உங்க எல்லோரும்தான் நம்ம கூட்டணியை முடிவு பண்ண போகும் என் உடன்பிறப்புகள்! நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் ஒத்துப்பேன்! ஆனா இருதி முடிவு எல்லா குழுவும் எனக்கு தான் என சொல்லியிருக்காங்க அதை நியாபகம் வச்சுகுங்க!


ஆற்காடு: தலைவரே! நாம தே.மு.தி.க வை கூட்டணியிலே சேர்த்துக்கலாம்

!
கலைஞர்: ஏன் அப்படி சொல்றீங்க! எதாவது சிறப்பு காரணம் இருக்கா?


ஆற்காடு: ஆமாம் தலைவரே! முள்லை முள்லாலத்தான் எடுக்கனும்.


கலைஞர்: எனக்கு புரியலை, தவிர செயற்குழு, பொதுக்குழு முடிவு பண்ண மாதிரி யாருக்கும் புரியலை!


பொன்முடி: ஆமாம் ஆமாம் தலைவர் வாழ்க!
(அப்போது தலைவர் வாய்வு தொல்லையால் அவதி பட்டதை கூட சண்முகநாதன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு குறிப்பெடுக்க விவாதம் தொடர்கின்றது)


ஆற்காடு: தலைவா! நான் தே.மு.தி.கவை சேர்த்துக்க சொன்னது கூட உங்க பாணியிலே சொன்ன மாதிரி முள்லை முள்லால் எடுக்கும் தந்திரம் தான். இப்ப விசயகாந்து என்ன பண்ணுறாரு? தனக்கு பிடிக்காத டைரக்டரை வச்சு படம் எடுப்பாரு, சில சமயம் அந்த டைரக்டர் ஏடுகுண்டலவாடா திருப்பதிசாமிகிட்டயே போய் சேர்ந்துடுவாங்க சில பேர் பேரரசுவா இருந்தாகூட பிச்சை காரனா ஆகிடுவாங்க! அவர் தன் எதிரி எல்லாரையும் அப்படித்தான் பழி வாங்குவார்! அதனால நாமும் இப்ப இருக்கிற இருட்டுல ஸாரி மூடுல அவரை சேர்த்து அவரை பழி வாங்கிடலாம்! என்ன சொல்றீங்க?


கலைஞர்: அதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்


ஆற்காடு: ஆமா தலைவா! நாயுடுன்னா நான் தான்! கோவையிலே கேட்டு பாருங்க! இதுல யாரு இவர் குறுக்க வர?


கலைஞர்: நான் சாதிக்கு அப்பாற்பட்டவன்! அடுத்து சொல்லுங்க!


கனிமொழி: அய்யா! நாம ஏன் சரத்குமாரை சேர்த்துக்க கூடாது?


ஆற்காடு: ரிஜக்டட்!


தலைவர்: இல்லை ஆற்காடு! இதை நீங்க சொல்ல கூடாது! நான் தான் சொல்லுவேன், ய்ம்மாடி அதான் பூங்கோதை என்னும் கோதைக்கு நான் ஆஸ்பத்திரியிலே இருந்தபோதும் கொடுத்து தொலைச்சாச்சே! சும்மா கிட!


பொன்முடி: அய்யா நான் ஒன்னு சொல்லவா?


தலைவர்: வேண்டாம்! ஆதிசங்கர் ..கூ..பிடுங்கய்யா டாக்டரை முதுகுவலிக்குது!


கோசி.மணி: தலைவா! நான் ஒன்னு சொல்லவா?


தலைவர்: இல்ல! தஞ்சையை உன் தொல்லைக்காகவே காங்கிரஸ் இல்ல வேற எதுனா பிச்சை காரன் வந்தா கூட போட்டுடலாம்ன்னு இருக்கேன்.


தயாநிதி: தாத்தா! வாசல்ல வேட்டிய கிழிச்சுகிட்டு மணிசங்கர் அய்யர் நிக்கிறார்!


தலைவர்: அப்படியா!இப்பல்லாம் கிழிஞ்ச வேட்டிய விட ஆம்லெட் வேட்டிதானே பேமஸ்! சரி கூப்பிடு


மணி சங்கர் அய்யர்: வணக்கம் அய்யா!
தலைவர்: அய்யோ விபச்சாரம் ஸாரி அபச்சாரம்! நீங்க என்ன வெள்ளை வேட்டில வந்துட்டீங்க முட்டை அடிச்ச மஞ்ச வேட்டி தான் உத்தமம் நேக்கு!ஆனா உங்க தைரியம் நேக்கு பிடிச்சுடுத்து நோக்குதான் மாயவரம்!


வெளியே வந்த அய்யர் : நேக்கு பங்கீட்டிலே பரம திருப்தி! எல்லாம் ஷேமமா நடக்கும் பாருங்கோ"இது நிருபர்களிடம்!


தயாநிதி: தாத்தா! நான் என்ன பண்ணட்டும், மத்திய சென்னையை?


தலைவர்: பிளாஷ் நியூஸ் போடு உன் டிவில!


சன் பிளாஷ் நியூஸ்:::: நடை பெற போகும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தேர்தலில் தயாநிதி மாறன் அவர்கள் 29 லட்சத்து 69 ஆயிரத்து நூத்து 21 வாக்குகள் வித்யாசத்தில் ஜெயித்தார்...........

.
தலைவர்: தம்பி! உன் ஆர்வம் புரியுது! ஆனா அந்த தொகுதியில் எத்தனை பேர்ன்னு தெரியுமா உனக்கு! உன் சன் டிவில இருக்கும் ஆள் எல்லாமே அப்படித்தானா? வராத படத்துக்கு அதாவது படிக்காதவன், தீ எல்லாத்துக்கும் கூட "வெற்றி நடை போடும்"அப்படின்னு சொன்ன மாதிரி சொல்லுறியே? இது அடுக்குமா? அங்க பாரு "கலைஞர் டிவில நீ வெறும் 9 லட்சத்து 999 ஆயிரம் ஓட்டுல தான் ஜெயிச்சு இருக்கே'ன்னு பிளாஷ் நியூஸ்ல வருது மனசுல வச்சுக்க"


தயாநிதி: தாத்தான்னா தாத்தாதான் பாட்டின்னா பாட்டிதான்


அழகிரி: அப்பா எப்பவும் சென்னை தானா என் பக்கம் திரும்புங்க! வாசல்ல திருமா வேற நிக்கிறார்!


தலைவர்: அப்படியா உடனே கூப்பிடு!


திருமா: அய்யா வணக்கம்!


தலைவர்: வாப்பா வா! என்னது நடந்து நடந்து கால் வலிக்குதா? என் மடி மீது உன் காலை வச்சிக்கோ!


திருமா தேம்பி தேம்பி அழுகிறார்!


தலைவர்: அழுவாதே தம்பி! நானும் திருசெந்தூர் வரை நடந்தேன் ஆனா வைர வேல் கிடைக்கலை, ஆனா அதைவிட ஒரு பிளாட்டின வேல் கிடைச்சுது. எப்பவும் உன் பக்கத்திலே உட்காந்து இருக்குமே அனைத்து கட்சி கூட்டத்தில் அந்த பிளாட்டினம் தான். சரி அதை விடு! அவருக்கு சொன்னது தான் உனக்கும்!உனக்கு என் இதயத்திலே எப்பவும் இடம் உண்டு!


திருமா: அய்யோ அய்யா! அப்படி எனக்கு உங்க இடத்திலே எல்லாம் இடம் வேண்டாம்! எனக்கு என் தலித் மக்களுக்கு பாராளுமன்றத்துல இடம் வேண்டும்!


தலைவர்: ஆமாம் நானும் அது பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்! உன் கட்சிக்கு விடுதலை சிறுத்தைக்கு ஒரு சீட் கண்டிப்பா உண்டு!


திருமா: நன்றி அய்யா!


தலைவர்: உனக்கு பெரம்பலூர் தொகுதியை தரலாம்ன்னு இருக்கேன்!


திருமா: அய்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நன்றி அய்யா நன்றி!


தலைவர்: நன்றி இப்ப சொல்லாதே தம்பி! சில நிபந்தனை இருக்கு!


திருமா: தெரியுமே அய்யா! என் கட்சிதான் அங்கீகாரம் பெறலையே! அதனால உதயசூரியன் சின்னம் தானே! ஒத்துக்கறேன்!


தலைவர்: நீ புத்திசாலி! உன்னை இப்ப அதிபுத்திசாலியா ஆக்கவா தம்பி!


திருமா: அய்யா அப்படியே ஆகட்டும் ("குனிந்து" வணங்குகிறார்)


தலைவர்: தம்பி திருமா! உன் கட்சி வேட்பாளர் பெயர் ஆ.ராசா! அவரை இன்று முதல் ஒரு மண்டலம் உன் கட்சிக்கு தாரை வார்த்து கொடுக்கிரேன் தம்பி!!!!!!!!


ஆற்காடு: தலைவா! இவர் மயக்கம் போட்டது பத்தி கவலை படாதீங்க, அடுத்து முஸ்லீம் முன்னேற்ற கழகமும், தமிழநாடு தவ்கீத் ஜமாத்தும் வந்திருக்காங்க! வர சொல்லவா???

தொடரும்....................

12 comments:

  1. திருமா: அய்யா அப்படியே ஆகட்டும் ("குனிந்து" வணங்குகிறார்)


    தலைவர்: தம்பி திருமா! உன் கட்சி வேட்பாளர் பெயர் ஆ.ராசா! அவரை இன்று முதல் ஒரு மண்டலம் உன் கட்சிக்கு தாரை வார்த்து கொடுக்கிரேன் தம்பி!!!!!!!!//

    இது சூப்பர்.

    ReplyDelete
  2. ///அடுத்து முஸ்லீம் முன்னேற்ற கழகமும், தமிழநாடு தவ்கீத் ஜமாத்தும் வந்திருக்காங்க! வர சொல்லவா???///
    சஸ்பெண்ஸில் நிப்பாட்டிட்டீங்களே? இரண்டும் வேற வேற குரூப்பாச்சே?.. ;-)

    ReplyDelete
  3. வரிக்கு வரி படிச்சு சிரிச்சேன்.

    // வராத படத்துக்கு அதாவது படிக்காதவன், தீ எல்லாத்துக்கும் கூட "வெற்றி நடை போடும்"அப்படின்னு சொன்ன மாதிரி சொல்லுறியே?//

    ஹா...ஹா...

    // உனக்கு என் இதயத்திலே எப்பவும் இடம் உண்டு!//

    கலைஞரின் பேமஸ் வசனம்.

    ReplyDelete
  4. தமிழ்நாடு தவ்கீத் இங்கே எங்கே வந்தது. அது அந்த அம்மாவிடம் போவதாச்சே. இங்க வந்துட்டு அப்புறம்தான் போவாங்களோ. நமக்கு இந்த அரசியலே புரியறதில்ல. நீ தாளி ராசா.

    ReplyDelete
  5. //தமிழநாடு தவ்கீத் ஜமாத்தும் வந்திருக்காங்க!//
    தமிழ்நாடு தவ்கீத் இங்கே எங்கே வந்தது. அது அந்த அம்மாவிடம் போவதாச்சே. இங்க வந்துட்டு அப்புறம்தான் போவாங்களோ. நமக்கு இந்த அரசியலே புரியறதில்ல. நீ தாளி ராசா.

    ReplyDelete
  6. ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். அப்படியே போயஸ் கார்டன் பக்கமும் போய்ட்டு வரலாம்ல.

    ReplyDelete
  7. அபிஅப்பாவ புரிஞ்சிக்கவே முடியலையே.

    இருந்தாலும் அருமையான நகைச்சுவை.

    ReplyDelete
  8. கலக்கறீங்க அபி அப்பா. முக்கியமான ஒண்ண விட்டுங்டீங்களே !!!!!! இன்னும் தேர்தல் நிதி பத்தி பேசவே இல்லியே. எப்போ அபி அப்பா?

    ReplyDelete
  9. வெறுமையில்லா உலகின் ப்ரம்மாக்கள்.

    சிம்பிளி சூப்பர்ப் அபி அப்பா.

    யூத் ஃபுல் விகடனின் சக்தி 2009 ல் உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))