காலை 5.30க்கு எழுந்தவுடனே (இந்திய நேரம் காலை ஏழு மணி) முதலில் வழக்கம் போல டிவியை போட்ட உடனே பிளாஷ் செய்தியை பார்த்த உடனே வேர்த்து விட்டது. கலைஞர் செய்திகளுக்கு மாற்றி பார்த்தேன். அதிர்ந்து விட்டேன். ஆபீஸ் உடனே ஓட வேண்டிய அவசரம். ஆன்லைனில் இருந்த உண்மை தமிழனுக்கு விஷயத்தை சொன்ன போது அவரிடம் இருந்து விட்டேத்தியான ஒரு பதில். சரின்னு ஊருக்கு போன் செஞ்சு கேட்டப்ப மயிலாடுதுறை கொஞ்சம் ஆடிப்போய் இருந்தது. எங்கள் பகுதியில் அவசரமா உண்ணாவிரத பந்தல் போட்டு கொண்டிருந்தார்கள். யார் பேச்சிலும் ஒரு சுரத்து இல்லை. காரணம் கலைஞர் இப்போது இருக்கும் உடல் நிலையில் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலே மிகப்பெரிய விபரீதம் நடந்து விடும்.
மனசே நிலைகொள்ளாமல் ஆபீஸ் வந்தேன். ஆபீஸ்ல தான் இப்ப நெட் இல்லியா. உடனே திரும்பவும் போன் செய்த போது அவர் உட்கார முடியாமல் கட்டிலில் படுத்து விட்டதாக சொல்லப்பட்டது. நிச்சயமாக ஒரு விடிவு கிடைத்து விடும் ஈழ தமிழருக்கு என்கிற விஷயம் மட்டும் சர்வ நிச்சயமாக மனதுக்கு பட்டது.
திரும்பவும் மனசு அலையவே குசும்பனுக்கு போன் செய்து விசாரித்தேன். காலை உண்மை தமிழன் சொன்னது போலவே இதல்லாம் ஒரு நாடகம் என குசும்பன் சொன்ன போது மனசு வேதனையாக இருந்தது.
திரும்பவும் ஊருக்கு போன் செய்து செய்து அங்கே இருந்த நிலமையை கேட்டு கொண்டே இருந்தேன். அவரின் 5.40க்கு ஆரம்பித்த உண்ணாவிரதம் அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகையே ஆட்டி விட்டது. உலகம் முழுக்க போன்கள். பிரதமர் பேசுகிறார் கலைஞர் அவர்களிடம். சோனியா பேசுகிறார். உள்துறை அமைச்சர் ப.சி பேசுகிறார். எல்லாரிடமும் ஒரு பதட்டம்.
இவரின் பிடிவாதம் தான் தெரிந்த விஷயமாச்சே. மாத்திரை கூட வேண்டாம் என சொல்லிவிட்டார் எனதெரிந்த போது கிட்ட தட்ட தமிழகம் முழுக்க எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டனர். யாரும் பிரசாரத்துக்கு போகவில்லை.
திரும்பவும் பிரதமர் பேசுகிறார். இலங்கையில் பாதுகாப்பு கவுன்சில் கூடிவிட்டது. இன்னும் கொஞ்ச நேரத்தில் முடிவு தெரியும் என பிரதமர் சொல்கிறார் கலைஞரிடம். பிறகு உள்துறை அமைச்சரிடமிருந்து ஒரு நல்ல சேதி வருகின்றது. தலைவர் பேச ஆரம்பிக்கிறார். எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.
பிறகு தான் எனக்கு பய பந்து வயிற்றில் அதிகமாக புரள ஆரம்பிச்சுது. இலங்கை ராணுவத்தை பற்றிய பயம் இல்லை. நம்ம குபீர் ஈழ ஆதரவு பதிவர்கள் பற்றிய பயம் தான். நம்ம குபீர் பார்ட்டிகள் யார் என அழகா அடையாளம் கண்டு பிடிக்க எளிய வழிகள் சில(டிப்ஸ்)
1. கலைஞரை திட்டுவது எப்போதும் பிரதானமா இருக்கும் அவர்கள் நோக்கம். ஆனா நொடிக்கு நொடி "நானும் எங்க குடும்பமும் 16ம் நூற்றாண்டு தொடக்கம் முதலே திமுக தான். கடந்த1732ம் வருடம் நடந்த பொது தேர்தலில் என் தாத்தாதான் திமுக வேட்பாளர். ஆனா இப்ப நான் என்கையால திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன்"ன்னு சொல்லிகிட்டு இருப்பங்க. நாம அவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்.
2. ஜெயலலிதா எதிரி. கலைஞர் துரோகி. எதிரிக்கு 36 மார்க் போட்டு பாஸ் பண்ண வைக்கலாம். ஆனா துரோகிக்கு மைனஸ் 35 மார்க் போட்டு பெயில் பண்ணனும்னு என்ன என்னவோ பேசுவாங்க. இந்த எதிரி\துரோகி டயலாக்கை கண்டு பிடிச்சவனை தலைகீழா கட்டி தொங்க விட்டு மூக்கிலே மிளகாய் பொடி போடனுங்க.
3. நேரம் கிடைக்கும் போதல்லாம் நைசா ஜெயலலிதாவின் புகழ் பரப்புவாங்க. அப்படி பரப்பும் போதல்லாம் தன் தோளில் கருப்புசிவப்பு துண்டு தான் போட்டுப்பாங்க. நல்லா உத்து நோக்குங்க அப்ப புரியும்.
4. அழகிரி, தயாநிதி, சன் டிவி, கலைஞர் டிவின்னு எல்லார் மேலயும் நெம்ப பாசமா இருப்பாங்க. ஓரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 வரியும் அதிக பட்சம் 3000 வரியும் அவர்களை திட்டியே எதுனா எழுதி தள்ளுவாங்க.
வீட்டுக்கு வந்து பயந்துகிட்டே தமிழ்மணத்தை எட்டி பார்த்தேன். சில நல்ல பதிவுகள் இருந்துச்சு. சில வஞ்ச புகழ்சி பதிவு, சில நடுநிலை பதிவு, ஆனா பல பதிவுகள் நான் எதிர் பார்த்த மாதிரியே குபீர் பார்ட்டிகள் போட்டிருந்தனர். நான் கூட இப்ப இந்த பதிவை போடும் காரணம் அவர்கள் நையாண்டிக்கு பதில் சொல்ல அல்ல.
அந்த வீர கிழசிங்கத்துக்கு என் நன்றியை சொல்லத்தான். ஒரு உண்மை போராளிக்கு நன்றி சொல்ல மட்டுமே.
நன்றி !
ReplyDeleteஅன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!!
ReplyDeleteசாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன.
தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை.
ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்திவிட்டு காங்கிரசுக்கும் மத்திய அரசுக்கும் வால் பிடிக்கும் இந்த அரசியல் பரதேசிகளின் மனதில் என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.இருந்தாலும் அவ்வப்போது அவர்கள் விடுகின்ற உணர்வு பூர்வமான கயிறு திரிப்புகளுக்கும் அற்புத வாக்குறுதிகளையும் நம்பி நம்மில் சில பழமைவாதிகள் அவர்களை புகழ்ந்து பாடுவது படு கேவலமாக இருக்கிறது.
உண்மையில் தமிழத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.ஈழத்தமிழனின் வலிகளினை உளப்பூர்வமாக உணர்திருக்கும் அவர்களின் ஆத்மார்த்தமான துடிப்புகளின் முன் இந்த அரசியல் சனியன்களின் கபட நாடகங்கள் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.
'உண்ணாவிரதம்' என்ற சத்திய வேள்வித்தீ உருவான தேசத்தில் அந்த போராட்டத்தின் தார்ப்பரியத்தினையே கொச்சைப்படுத்தும் இந்த அரசியல் அசிங்கங்களினை இனியும் நம்பி எமக்கு நாமே மொட்டையடிக்கும் கேவலத்தினை செய்ய நாம் தயாரில்லை.
தேர்தல் வெற்றி,பதவி,பணம் என்ற அற்பத்தனங்களுக்கு ஆசைப்பட்டு ஈழத்தமிழனின் வாழ்வாதார பிரச்சினையை தங்களது சுய லாபங்களுக்காக விலைபேசி விற்கின்ற இவர்களுக்கு தமிழக உறவுகள் சரியான தீர்ப்பினை வெகுவிரைவில் வழங்குவார்கள்.
அன்புடன்
தமிழ்ப்பொடியன்
//நான் கூட இப்ப இந்த பதிவை போடும் காரணம் அவர்கள் நையாண்டிக்கு பதில் சொல்ல அல்ல
ReplyDelete//
அது
எனக்கு, அரசியல் அவ்வளவாக தெரியாவிட்டாலும், இந்த வயதிலும் கலைஞர் உண்ணாவிரதம் என்று உட்கார்ந்தது கொஞ்சம் கவலையை ஏற்படுத்தியது. :(
ReplyDeleteமனதுக்கு மகிழ்வாய் முதல் பதிவைக்காண்கிறேன்.. நன்றி அபி அப்பா.!
ReplyDeleteம்ம் அப்புறம்.....?
ReplyDeleteஎங்கப்பா போனீங்க, இவ்வளவு லேட்டா பதிவு போட்ட நாங்கெல்லாம் எங்க போவுறது. லக்கியின் சுண்ணாம்பு இடுகையை பார்த்தீர்களா, அதில் பல திடீர் தமிழார்வலர்களுக்கு சுண்ணாம்பு தடவி இருக்கிறார்
ReplyDeleteகலைஞர் டிவி, சன் டிவி, சன் நீயூஸ் மட்டும் தான் அங்க வருமா!
ReplyDeleteCNBC, CNN, Times now எல்லாம் வராதா?
CNBC ல கரன் போட்டு கிழுச்சிக்கிட்டு இருக்காரு, இலங்கை ஹை கமிசனர், ராஜபாக்சே வுடன் நேரடி பேட்டினு...
என்ன சாமி!
இன்னும் என்னவெல்லாம் பாக்கனுமோ?
ஆயில்யன் மிக்க நன்றி!
ReplyDeleteசெல்வன்! ரொம்ப சலிச்சுக்காதீங்க. நான் நன்றி சொல்லியிருப்பது என் தலைவனுக்கு. இங்க வந்து உங்க பிரச்சாரத்தை வச்சுகாதீங்க. தனியா ஒரு பிளாக் ஆரம்பிச்சு எழுதுங்க. உங்க கருத்து பிடிச்சா படிக்கிறோம். ஏத்துக்கறோம்.
==========
நன்றி அப்து!!
-------------
நன்றி வீரசுந்தர்!
=================
மிக்க நன்றி தாமிரா!!
----------------
பச்ச கொழந்த இங்க என்ன கதையா சொல்லிகிட்டு இருக்கேன்:-))
---------------
ஈழவன் என்ன்னும் நண்பர் வந்து விகடன்ல இருந்து கட் பேஸ் பண்ணி ஒரு விஷயத்தை சொல்லிட்டு கடைசியா அவரு கெட்ட வார்த்தையும் சொன்னதால அதை ரிஜ்ஜக்ட் செஞ்சுட்டேன். மன்னிக்கவும்
உங்களுக்கு கிழ சிங்கத்துல இருக்கிற அன்பைப்பார்த்து புல்லரிக்கிறது...
ReplyDelete:)
பதிவுக்கு நீங்க வச்ச தலைப்பு இதுவரையும் நீங்க எழுதின பதிவுகளை விட காமெடி தலைவா...
ReplyDelete\\ உடன்பிறப்பு said...
ReplyDeleteஎங்கப்பா போனீங்க, இவ்வளவு லேட்டா பதிவு போட்ட நாங்கெல்லாம் எங்க போவுறது. லக்கியின் சுண்ணாம்பு இடுகையை பார்த்தீர்களா, அதில் பல திடீர் தமிழார்வலர்களுக்கு சுண்ணாம்பு தடவி இருக்கிறார்
\\
வாங்க உடன்பிறப்பு! நான் தான் சொன்னனே ஆபீஸ்ல இப்ப நெட் இல்லை. நான் மாலை வந்து பார்த்து விட்டு தான் பதிவு போட்டேன்.
லக்கி வச்ச சுண்ணாம்பை இப்ப தான் பார்த்தேன். செம காரம். கிட்ட தட்ட நான் சொல்ல நினைச்சதை அழகா சொல்லியிருக்கார். சூப்பரோ சூப்பர். ஓசை செல்லா கூட போட்டிருக்கார் பாருங்க அதையும்.
http://thatstamil.oneindia.in/news/2009/04/27/lanka-sl-army-says-no-ceasefire-offered.html
ReplyDeleteinnaaba ithu ?
நீங்க கொமெடி பதிவர்தானே? இதுவும் கொமெடிதானே?
ReplyDeleteகொஞ்சம் சீரியசா சொன்னா, மாத்தி மாத்தி செயலலிதாவும், கொலைஞரும் நொந்து போயிருக்கிற ஈழ மக்களை ஏறி மிதிக்கிறாங்க.
மரத்தால விழுந்திருந்தவனை மாடேறி மிதிக்குதாம். என்னத்தை சொல்ல.
இவர்களின் நாடகங்களை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கா நீங்க எல்லாம் இருக்கீங்க?
இலங்கை ஆடிப்போய் இருக்குன்னீங்க. இப்ப தெரிஞ்சுதில்ல எத்தனை ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்குன்னு.
ReplyDeleteசும்மாவா சொன்னான் சிங்களவன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள்னு. முழுக்க முழுக்க அந்த கூற்றை உண்மையாக்கிக்கிட்டு இருக்காங்க எல்லாரும்.
நல்ல பதிவு நண்பரே…பொய்களை பார்த்தே பழகி விட்ட நமக்கு உண்மை எதுவென்று சில நேரம் இனம் காண இயல்வதில்லை…எது எப்படியோ சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நாம்…
ReplyDeleteஇது நகைச்சுவைப் பதிவா?
ReplyDeleteஎன்ன... அவரு உண்ணாவிரதம் இருந்தத ஒரு மாசத்துக்கு முன்னாடியே இருந்திருந்தா இப்ப இருக்குறதாகச் சொல்லப்படுற போர் நிறுத்தம் அப்பவே வந்திருக்குமே. ரெண்டாயிரம் பேராச்சும் பொழைச்சிருப்பாங்க.
என்னவோ போங்க. எனக்குத்தான் ஒன்னும் புரியலை. ஒங்களுக்கெல்லாம் புரியிறத நெனைச்சி சந்தோசம்.
கருணாநிதி செய்றது தப்புன்னு சொன்னா... ஜெயலலிதா ஆதரவாளர்னு எங்களையும் ஏன் அசிங்கப்படுத்துறீங்க.
Super Comedy post.. Your blog is the best comedy blog...
ReplyDelete///பதிவுக்கு நீங்க வச்ச தலைப்பு இதுவரையும் நீங்க எழுதின பதிவுகளை விட காமெடி தலைவா..//
ReplyDeleteahahhahaha
ReplyDeletehahahahahha
hahahhahaha
நேத்தைக்கு அந்த ஆள் நடத்திய காமெடி டிராமாவை விட உங்க பதிவு இன்னும் காமெடி. சூப்பரு.
உலகம் முழுக்க போனா? ஒபாமா, பில் கிளிண்டனெல்லாம் பேசியிருப்பாங்களே?!
இப்போதைய கைப்புள்ள தி.மு.க. தொண்டர்கள் தான். ஐயோ பாவம்.
ReplyDeleteஜெய் ஹோ..!
ReplyDelete// ஒரு உண்மை போராளிக்கு நன்றி சொல்ல மட்டுமே. //
ReplyDeleteஉங்களுடைய நான்ஸ்டாப் காமெடி பதிவுக்கு நன்றி.
பெரியாரே இன்னும் ஒரு ஜென்மம் எடுத்து வாருமய்யா...
யாரை நினைச்சு கவலை படுறது!
ReplyDeleteஉங்களையா இல்லை தமிழ்நாட்டையா?
கிழச்சிங்கம்
ReplyDelete- ஏற்புடைய பெயர் கலைஞருக்கு......
//வழக்கம் போல டிவியை போட்ட உடனே பிளாஷ் செய்தியை பார்த்த உடனே வேர்த்து விட்டது.//
ReplyDeleteஆமாம் அபி அப்பா ரெண்டு நாளா செம சூடு, ரூம் ஏசி ஏதும் பிரச்சினையா?
//ஊருக்கு போன் செஞ்சு கேட்டப்ப மயிலாடுதுறை கொஞ்சம் ஆடிப்போய் இருந்தது//
ReplyDeleteஅங்க ஏதும் பூகம்பமா?:)))
//குசும்பனுக்கு போன் செய்து விசாரித்தேன். காலை உண்மை தமிழன் சொன்னது போலவே இதல்லாம் ஒரு நாடகம் என குசும்பன் சொன்ன போது மனசு வேதனையாக இருந்தது.//
ReplyDeleteஅபி அப்பா தாங்கள் என்னிடம் கேட்டது ஏதும் நியுஸ் உண்ணாவிரத்தை பத்தி இருக்கா என்று மட்டுமே, நானும் இல்லை என்றேன் உங்களுடன் கடைசியா நடந்த போன் உரையாடலுக்கு பிறகு நான் உங்களிடம் அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டேன்! நான் அப்படி நாடகம் என்று சொல்லவில்லை, அதுபற்றியும் பேசவில்லை. என்னிடம் ஏதும் செய்தி இருக்கா செய்தி வந்ததா? என்று பிரசவத்துக்கு மனைவியை சேர்த்துவிட்ட கணவன் போல் தவிப்பாக பரபரப்பாக கேட்டீங்க நான் ரொம்ப சாதாரணமாக இல்லை என்றேன்.
நான் அவரின் உண்ணாவிரத்தை பற்றி என்ன நினைத்து இருப்பேன் என்று நீங்களாகவே நினைத்து இருப்பீங்க போல:)
//காலை 5.30க்கு எழுந்தவுடனே (இந்திய நேரம் காலை ஏழு மணி) முதலில் வழக்கம் போல டிவியை போட்ட உடனே பிளாஷ் செய்தியை பார்த்த உடனே வேர்த்து விட்டது. கலைஞர் செய்திகளுக்கு மாற்றி பார்த்தேன். அதிர்ந்து விட்டேன். ஆபீஸ் உடனே ஓட வேண்டிய அவசரம். ஆன்லைனில் இருந்த உண்மை தமிழனுக்கு விஷயத்தை சொன்ன போது அவரிடம் இருந்து விட்டேத்தியான ஒரு பதில்.//
ReplyDeleteஆக மணிக்கொரு முறை மங்குனிபாண்டியர் என்பதை நிருப்ப்த்துக்கொண்டே இருந்திருக்கிறீர்:)))
//உலகம் முழுக்க போன்கள்.//
ReplyDeleteஅட அடா ஆமாம் அபி அப்பா இந்தியாவில் கூட MTN என்று ஏதோ புது நெட் ஒர்க் வந்து இருக்காம், எங்கும் எல்லாரிடமும் போன் தான். 100000 நிமிடங்கள் பிரி வெறும் 499 ரூபாய்க்கு என்று விளம்பரம் பிரிக்குது:)
//எனதெரிந்த போது கிட்ட தட்ட தமிழகம் முழுக்க எல்லோரும் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து விட்டனர்.//
ReplyDeleteஆமாம் அபி அப்பா எங்க வீட்டிலும் காலை 9 மணியில் இருந்து மதியம் 1.25 வரை உண்ணாவிரதம் இருந்தாங்களாம்!
//யாரும் பிரசாரத்துக்கு போகவில்லை.//
ReplyDeleteஇதுக்கு வேற போகனுமா?:))) அப்ப இதுவேறயா?
கிழசிங்கத்தின் போராட்ட கர்ஜனையும் ஆடிப்போன இலங்கையும்!!! //
ReplyDeleteஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
அபி அப்பா தினம் தினம் இலங்கை ஆடிக்கிட்டுதான் இருக்கு:)
//மாயவரத்தான்.... said...
ReplyDeleteahahhahaha
hahahahahha
hahahhahaha
நேத்தைக்கு அந்த ஆள் நடத்திய காமெடி டிராமாவை விட உங்க பதிவு இன்னும் காமெடி. சூப்பரு.
உலகம் முழுக்க போனா? ஒபாமா, பில்கிளிண்டனெல்லாம் பேசியிருப்பாங்களே?///
"குடுமி" களைத்தவிர எல்லோரும் போன் செய்து கவலைப்பட்டார்கள்
//அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகையே ஆட்டி விட்டது. உலகம் முழுக்க போன்கள். பிரதமர் பேசுகிறார் கலைஞர் அவர்களிடம். சோனியா பேசுகிறார். உள்துறை அமைச்சர் ப.சி பேசுகிறார். எல்லாரிடமும் ஒரு பதட்டம்.//
ReplyDeleteஓ! உங்களுக்கு இந்தியா தான் உலகமா?
//மாயவரத்தான்.... said...
ReplyDeleteஇப்போதைய கைப்புள்ள தி.மு.க. தொண்டர்கள் தான். ஐயோ பாவம்//
ஆனா எப்பவுமே அதிமுக அடிவருடிகள் தான் நிரந்தர கைப்புள்ள்
முக்கிய அறிவிப்பு:
ReplyDeleteதக்க தருணம்:
மலயாளிகல்(நாராயனன்,சிவசன்கர மேனன்,அந்தொனி,விஜய் நம்பியார்-இவர்கள்தான்,தமிழர்களுக்கு எதிரான சதியை அற்ங்கேற்றியவர்கள்:
இனிமேல்,போதுகூட்டத்தில் பேசும்போது,இவர்களை கைதுசெய்து விசாரனை நடத்துவோம்
என்ரு அரிவிக்க வேண்டும்...
இந்த அறிவிப்பு,டெல்லி மலயாலி எறுமைகளை பயப்படும்படி இருக்கும்:
பிற்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிரான சதிவலை பின்னமாட்டான்!
அடி பின்னுறீங்களே அண்ணாச்சி! :-)
ReplyDeleteஜெ.வை அடிவருடும் மானங்கெட்ட பொழைப்பு பொழைக்கச் சொல்றாங்களே நிறைய பேர்? இதுக்குப் பதிலா அவங்க நாலு முழம் கயிறு கொடுத்துடலாம் நமக்கு!
நீங்க சென்னைல இருக்க வேண்டிய ஆள் அண்ணே எதுக்கு இங்கன வந்து நொந்துகிட்டு... :)
ReplyDeleteஆதிமூலகிருஷ்ணன் said...
ReplyDelete\\
மனதுக்கு மகிழ்வாய் முதல் பதிவைக்காண்கிறேன்.. நன்றி அபி அப்பா.!
\\
அண்ணே ரொம்ப சிரிச்சிங்கல்ல உண்மைய சொல்லுங்க... :)
வால்பையன் said...
ReplyDelete\\
யாரை நினைச்சு கவலை படுறது!
உங்களையா இல்லை தமிழ்நாட்டையா?
\\
ரிப்பீட்டு..!
## நாகை சிவா said...
ReplyDeleteகலைஞர் டிவி, சன் டிவி, சன் நீயூஸ் மட்டும் தான் அங்க வருமா!
CNBC, CNN, Times now எல்லாம் வராதா?
CNBC ல கரன் போட்டு கிழுச்சிக்கிட்டு இருக்காரு, இலங்கை ஹை கமிசனர், ராஜபாக்சே வுடன் நேரடி பேட்டினு...
//
வாங்க நாகை சிவா!இந்த பதிவே அமரிக்கா போன்ற நாடுகள் சொல்லியுமே கேட்காத இலங்கை இனி கொத்து குண்டு, பீரங்கி இதை எல்லாம் தவிர்த்து பல ஆயிரம் பேர் உயிரை காப்பாற்றிய கலைஞருக்கு நன்றி தெரிவிக்க மட்டும் தான் என்ப்பதை தெளிவாக சொல்லியிருக்கேன். இலங்கையிடமிருந்து போர் நிறுத்தம் முழுமையாக வந்தது என சொல்லியிருக்கேனா பதிவில்? ப.சி யிடம் தலைவருக்கு நல்ல சேதி வந்தது எனத்தான் சொல்லியிருக்கேன்.
\\ King... said...
ReplyDeleteஉங்களுக்கு கிழ சிங்கத்துல இருக்கிற அன்பைப்பார்த்து புல்லரிக்கிறது...
:)
April 28, 2009 12:28 AM
King... said...
பதிவுக்கு நீங்க வச்ச தலைப்பு இதுவரையும் நீங்க எழுதின பதிவுகளை விட காமெடி தலைவா...
\\
வாங்க கிங் உங்களுக்கு அரிப்பு எடுத்து இதூ சம்மந்தமா நீங்க போட்ட பதிவை பார்த்து நானும் புல்லரிச்சு போனேன்!நல்லா இருங்க!
\\ செந்தழல் ரவி said...
ReplyDeletehttp://thatstamil.oneindia.in/news/2009/04/27/lanka-sl-army-says-no-ceasefire-offered.html
innaaba ithu ?
\\
வாங்க செந்தழலாரே! நாகை சிவாவுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்.
\\ Anonymous said...
ReplyDeleteநீங்க கொமெடி பதிவர்தானே? இதுவும் கொமெடிதானே?
கொஞ்சம் சீரியசா சொன்னா, மாத்தி மாத்தி செயலலிதாவும், கொலைஞரும் நொந்து போயிருக்கிற ஈழ மக்களை ஏறி மிதிக்கிறாங்க.
மரத்தால விழுந்திருந்தவனை மாடேறி மிதிக்குதாம். என்னத்தை சொல்ல.
இவர்களின் நாடகங்களை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கா நீங்க எல்லாம் இருக்கீங்க?
April 28, 2009 2:41 AM
Anonymous said...
இலங்கை ஆடிப்போய் இருக்குன்னீங்க. இப்ப தெரிஞ்சுதில்ல எத்தனை ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்குன்னு.
சும்மாவா சொன்னான் சிங்களவன் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள்னு. முழுக்க முழுக்க அந்த கூற்றை உண்மையாக்கிக்கிட்டு இருக்காங்க எல்லாரும்.
\\
இந்த அனானிங்க தொல்லை தாங்க முடியலைப்பா! இதல்லாம் டீசண்ட் அனானி! அதனால இந்த அளவு மதிக்கிறேன்!
\\ கீழை ராஸா said...
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே…பொய்களை பார்த்தே பழகி விட்ட நமக்கு உண்மை எதுவென்று சில நேரம் இனம் காண இயல்வதில்லை…எது எப்படியோ சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கையில் நாம்…
\\
வாங்க கீழைராசா! மிக்க நன்னி!
\\ G.Ragavan said...
ReplyDeleteஇது நகைச்சுவைப் பதிவா?
என்ன... அவரு உண்ணாவிரதம் இருந்தத ஒரு மாசத்துக்கு முன்னாடியே இருந்திருந்தா இப்ப இருக்குறதாகச் சொல்லப்படுற போர் நிறுத்தம் அப்பவே வந்திருக்குமே. ரெண்டாயிரம் பேராச்சும் பொழைச்சிருப்பாங்க.
என்னவோ போங்க. எனக்குத்தான் ஒன்னும் புரியலை. ஒங்களுக்கெல்லாம் புரியிறத நெனைச்சி சந்தோசம்.
கருணாநிதி செய்றது தப்புன்னு சொன்னா... ஜெயலலிதா ஆதரவாளர்னு எங்களையும் ஏன் அசிங்கப்படுத்துறீங்க
\\
வாங்க ஜிரா! என்ன இது இரண்டு மாதத்துக்கு முன்பே செஞ்சிருந்தா என்ன? 1983ல் இந்தியாவே முன்ன நின்னு பிரிச்சு குடுத்தா என்ன? அப்படி எல்லாம் கேட்டுகிட்டு? அப்படியே 2 மாதம் முன்ன அப்படி உண்ணாவிரதம் இருந்திருந்தா கூட அட இதை இன்னும் 3மாதம் முன்ன செஞ்சிருந்தா என்ன? அப்படீன்னு கேட்டிருப்பீங்க.
எது செஞ்சாலும் கலைஞர் தான் துரோகின்னு சொல்ல போறீங்க.
அது என்ன "அந்த' உடன்பிறப்பு பதிவிலே நடந்த கூத்தை இங்க வந்து சொல்றீங்க. அப்ப நான் கடைசியா போட்ட ஒரு பின்னூடத்தை உடன்பிறப்பு வெளியிடவில்லை. காரணம் விஷயம் திசை மாறி போனதால்.
நீங்க கலைஞரை எதிர்ப்பதால் ஜெ ஆதரவாளர் என்று கண்ணை மூடிகிட்டு எல்லாம் சொல்லிட மாட்டோம்!
\\
ReplyDeleteமாயவரத்தான்.... said...
ahahhahaha
hahahahahha
hahahhahaha
நேத்தைக்கு அந்த ஆள் நடத்திய காமெடி டிராமாவை விட உங்க பதிவு இன்னும் காமெடி. சூப்பரு.
உலகம் முழுக்க போனா? ஒபாமா, பில் கிளிண்டனெல்லாம் பேசியிருப்பாங்களே?!
April 28, 2009 7:35 AM
மாயவரத்தான்.... said...
இப்போதைய கைப்புள்ள தி.மு.க. தொண்டர்கள் தான். ஐயோ பாவம்.
\\
வாங்க மாயூஸ்! உங்களுக்கு இருக்கும் அதே நக்கல் ஆனா உங்களை விட 10 வருஷ அதிக அனுபவத்தோட என் கிட்டயும் இருக்கு. இந்த விஷயம் அமரிக்க உளவு துறை வழியா அமரிக்க அதிபர் காதுக்கு எட்டியிருக்காதுன்னு நீங்க நினைச்சா நான் என்ன செய்ய முடியும்?
உலகம் முழுக்க தமிழர்கள் இது சம்மந்தமா பேசிக்கவில்லை என நீங்க சொல்வது நினைத்து எனக்கு சிரிப்பா இருக்கு. கண்ணை திறந்து பாருங்க உலகம் வெளிச்சமா தெரியும்.
நாங்க கைப்புள்ளயாவே இருந்துட்டு போறோம். உங்க மாதிரி ஜெயலலிதாவின் கால்புள்ளயா இல்லாம இருக்கோமே. அதுவரை சந்தோஷம்.
கலைஞர் உண்ணாவிரதம் என்றவுடன் ஓடி வந்து சிரிப்ப்பாய் சிரிக்கின்றீகளே, ஜெயலலிதா ஈழதமிழருக்காக உண்ணாவிரதம் இருந்த போதும், வைக்கோ பல்லை இளிச்சுகிட்டு ஜூஸ் கொடுத்ததும் சிலர் பதிவா போட்ட போது உங்களை அங்க காணுமே? ஆப்பீஸ்ல பிசியா?
குறிப்பு: பதிவு போட்டா ஒரு மெயில் தட்டுங்க. ரொம்ப பதிவு படிக்காம விட்டு போச்சு.
\\ Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
ReplyDeleteஜெய் ஹோ..!
\\
ஜெய் ஹோ சஞ்சய்!!நன்றி!
\\ நந்தா said...
ReplyDelete// ஒரு உண்மை போராளிக்கு நன்றி சொல்ல மட்டுமே. //
உங்களுடைய நான்ஸ்டாப் காமெடி பதிவுக்கு நன்றி.
பெரியாரே இன்னும் ஒரு ஜென்மம் எடுத்து வாருமய்யா...
\\
நன்றி நந்தா! ஏன் போன பதிவுக்கு அங்க பின்னூட்டம் போடாம இங்க வந்து போடுறீங்க!! என்னவோ போங்க!
\\ வால்பையன் said...
ReplyDeleteயாரை நினைச்சு கவலை படுறது!
உங்களையா இல்லை தமிழ்நாட்டையா?
April 28, 2009 9:32 AM
\\
முதல்ல உங்களை பத்தி கவலைப்படுங்க வாலு தம்பி!பின்ன மத்தவங்களை பத்தி கவலைப்படலாம்!
\\ தமிழ்ப்பிரியா said...
ReplyDeleteகிழச்சிங்கம்
- ஏற்புடைய பெயர் கலைஞருக்கு......
\\
நன்றி! சிங்கம் சிங்கம் தான் வயதானாலும்!
\\ குசும்பன் said...
ReplyDelete//குசும்பனுக்கு போன் செய்து விசாரித்தேன். காலை உண்மை தமிழன் சொன்னது போலவே இதல்லாம் ஒரு நாடகம் என குசும்பன் சொன்ன போது மனசு வேதனையாக இருந்தது.//
அபி அப்பா தாங்கள் என்னிடம் கேட்டது ஏதும் நியுஸ் உண்ணாவிரத்தை பத்தி இருக்கா என்று மட்டுமே, நானும் இல்லை என்றேன் உங்களுடன் கடைசியா நடந்த போன் உரையாடலுக்கு பிறகு நான் உங்களிடம் அரசியல் பேசுவதை நிறுத்திவிட்டேன்! நான் அப்படி நாடகம் என்று சொல்லவில்லை, அதுபற்றியும் பேசவில்லை. என்னிடம் ஏதும் செய்தி இருக்கா செய்தி வந்ததா? என்று பிரசவத்துக்கு மனைவியை சேர்த்துவிட்ட கணவன் போல் தவிப்பாக பரபரப்பாக கேட்டீங்க நான் ரொம்ப சாதாரணமாக இல்லை என்றேன்.
நான் அவரின் உண்ணாவிரத்தை பற்றி என்ன நினைத்து இருப்பேன் என்று நீங்களாகவே நினைத்து இருப்பீங்க போல:)
\\
குசும்பன் தவறு நடந்து விட்டது. தம்பி உண்மை தமிழன் தான் காலையிலே அப்படி சொன்னார்.நீங்க விட்டேத்தியா பேசினீங்க. நான் தான் பதிவிலே மாத்தி போட்டு விட்டேன். இன்று போனிலும்விளக்கம் கொடுத்து விட்டேன். இந்த பின்னூட்டம் மற்றவர்களுக்கு தெரிய வேண்டியே!
மத்த படி உங்க பின்னூட்டம் எல்லாம் என் நேற்றைய பகல் என் மனநிலையை பாதித்ததை மாற்றி சிரிக்க வைக்கின்றது!
\\ Dharan said...
ReplyDelete//மாயவரத்தான்.... said...
ahahhahaha
hahahahahha
\\
வருகைக்கு நன்றி தரன்!
ஈழத்தவர்களின் அவல நிலைக்கு வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி என்று யாருமே காரணமில்லை.
ReplyDeleteபுலிகள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம்.
வைகோவையும் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நம்பியா புலிகள் போர் நடத்திக்கொண்டிருந்தார்கள்? இன்று கைவிட்டுவிட்டார்கள் என்று அழுவதற்கு?
வெற்றிபெற்றிருந்தால், காரணம் வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா என்று சொல்வார்களா? அப்போது தோல்வியுறும்போது ஏன் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் வைகோவையும் காரணம் காட்டவேண்டும்?
அல்ஜஜீரா தொலைக்காட்சியில் புலிகளிடமிருந்து தப்பிவந்த ஈழ மக்களை பேட்டிகண்டார்கள். ஐநாவும் இலங்கை அரசாங்கமும் இலவசமாக அளித்த உணவுப்பொருட்களை கூட அதிக விலைக்கு அந்த மக்களிடமே விற்று காசு பண்ணினார்கள் புலிகள். அந்த விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் பட்டினி கிடந்தார்கள்.
வெளியேறியவர்களை சுட்டார்கள். வெளியேற விரும்பியவர்கள் மிரட்டப்பட்டார்கள். சிறு குழந்தைகளை கூட விடாமல் பிடித்துச்சென்று ராணுவத்துடன் மோத தூக்கமுடியாத துவக்குகளை கொடுத்து போர்முனைக்கு அனுப்பினார்கள். வெளியே வந்தவர்கள் யாரோ முன்பின் தெரியாத பத்திரிக்கையாளர்களிடம் கதறுகிறார்கள்.
இவர்களை காப்பாற்ற என்ன அவசியம் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சோனியாவுக்கும்?
அங்குள்ள மக்களை காப்பாற்றவேண்டும். புலிகளை அல்ல. ஆகவே அந்த மக்களை வெளியே விடும்படி புலிகளை தமிழர்கள் நிர்பந்திக்கவேண்டும். அதுவே இன்று தமிழர்களின் நலம் விரும்பிகள் செய்யவேண்டியது? புலிகளையோ புலித்தலைமையையோ காப்பாற்ற அல்ல.
புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
\\ நான் ஆதவன் said...
ReplyDelete//அடுத்த ஒரு மணி நேரத்தில் உலகையே ஆட்டி விட்டது. உலகம் முழுக்க போன்கள். பிரதமர் பேசுகிறார் கலைஞர் அவர்களிடம். சோனியா பேசுகிறார். உள்துறை அமைச்சர் ப.சி பேசுகிறார். எல்லாரிடமும் ஒரு பதட்டம்.//
ஓ! உங்களுக்கு இந்தியா தான் உலகமா
\\
வாப்பா ஆதவா! ஆமாம் அப்படித்தான் வச்சுக்கோ! அதனால இந்தியா முன்னேற ஐக்கிய முற்போக்கு கூட்டனிக்கு ஓட்டு போட சொல்லுப்பா வீட்டுக்கு போன் செஞ்சு!
\\ Anonymous said...
ReplyDelete//மாயவரத்தான்.... said...
இப்போதைய கைப்புள்ள தி.மு.க. தொண்டர்கள் தான். ஐயோ பாவம்//
ஆனா எப்பவுமே அதிமுக அடிவருடிகள் தான் நிரந்தர கைப்புள்ள்
April 28, 2009 1:09 PM
ttpian said...
முக்கிய அறிவிப்பு:
தக்க தருணம்:
மலயாளிகல்
\\
நன்றி அனானி அய்யா!
நன்றி டிடிபிய்யான்!
\\ லக்கிலுக் said...
ReplyDeleteஅடி பின்னுறீங்களே அண்ணாச்சி! :-)
ஜெ.வை அடிவருடும் மானங்கெட்ட பொழைப்பு பொழைக்கச் சொல்றாங்களே நிறைய பேர்? இதுக்குப் பதிலா அவங்க நாலு முழம் கயிறு கொடுத்துடலாம் நமக்கு!
\\
வாங்க லக்கிதம்பி! ஜெவை அடிவருடும் குபீர் கும்பல் திடீர்ன்னு தோன்றியது அல்லவே.. நம்ம கூட இருந்து கழுத்திலே கருப்பு சிவப்பு துண்டு அணிந்து கொண்டு அப்ப அப்ப கலைஞரை திட்டி கொண்டே நம்மை கரைக்க பார்த்தவர்கள் தான்!
உங்க சுண்ணாம்பு பதிவும், இன்றைய கேள்விபதில் பதிவும் அருமையோ அருமை! இதுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டு அங்க வரேன்!
\\ தமிழன்-கறுப்பி... said...
ReplyDeleteநீங்க சென்னைல இருக்க வேண்டிய ஆள் அண்ணே எதுக்கு இங்கன வந்து நொந்துகிட்டு... :)
\\
வாங்க தம்பி! நான் இங்க இருந்தாலும் சரி சென்னையிலே இருந்தாலும் சரி ஒரே மாதிரி தான்! உங்க மத்த பலான கருத்துக்கு சாரி மேலான கருத்துக்கு நன்றி!!!
\\ அகிலன் துரைராஜா said...
ReplyDeleteஈழத்தவர்களின் அவல நிலைக்கு வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியா காந்தி என்று யாருமே காரணமில்லை.
புலிகள் மட்டுமே முழுக்க முழுக்க காரணம்.
\\
வாங்க சார்! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
http://www.tamilntt.com/newsvideoview.php?nid=347
ReplyDeleteஅபி அப்பா சார்..உங்களுடைய தலைவனுக்கு இது போட்டு காட்ட முடியுமா?? தயவுசெய்து?? உங்க தலைவர் அறிக்கை படித்துக்கொண்டு இருந்த அந்த கணப்பொழுதில் கூட அங்கே ஒரு விமானத்தாக்குதல் நடைபெற்றது தலைவருக்கு தேயாமல் இருக்கலாம் ...உங்களுக்கு தெரியாதா? ..உங்கள் பதிவை பற்றி குறை கூறவில்லை...அனால்.. தாய் தமிழ் உறவுகள் என்று உங்களையே நம்மி இருந்த இன்னும் இருக்கின்ற மக்களுக்கு எதாவது செய்தால் கூடி புண்ணியம்...'ஈழம்' கிடைக்க ஒன்றும் செய்ய வேண்டாம்...மக்கள் நாயை விட கேவலமாக கொல்லப்படுவதை உங்கள் தலைவரிடம் சொல்லி நிறுத்துங்கள் ஐயா...
படித்தேன்
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு , தேவையான பதிவு , மிகவும் நன்றி .
ReplyDeleteஉமையை உலகம் நம்பாது.
//மிகவும் அருமையான பதிவு , தேவையான பதிவு , மிகவும் நன்றி .
ReplyDeleteஉண்மை உலகம் நம்பாது.//
ஆமாம்,தேவையான பதிவு, உண்மை உலகம் நம்பாது!!!
நல்ல வேலை முழுமையான போர் நிறுத்தம்னு சொல்லலெ.. அதுக்குல்ல பேசி வச்சுடாங்கன்னு பதிவு போட ஆரம்பிசுட்டாங்க.. இப்ப 3 மாசம் முன்னாடியெ பண்ண வேண்டியது தானென்னு கேக்கறாங்க.. மூணு மாசம் முன்னாடியெ அவர் சொன்னதுக்கு தான் வேண்டாம்னு ராமதாஸ், வீரமணி, திருமா எல்லொரும் சொல்லிடாங்க..
அப்புறம் திருமா கலைஞர் சொல்லாமலே உண்ணாவிரதம் இருந்தாரு..
ஆனா இதெல்லாம் வெளிய சொன்னதெ ராமதாஸ் தான்..
இப்ப அவரே இடத்துக்கு தகுந்த மாதிரி மாத்திப் பேசறாரு..
தமிழன் தன்ன நம்பமாட்டான், ஆனா மத்தவனுக்கெல்லாம் சொம்பு தூக்குவான்,, அதான் உலகம் எல்லாம் நம்ம பேச்ச எவனும் பொருட்டாகவெ மதிக்கறதில்லெ..
//அந்த வீர கிழசிங்கத்துக்கு என் நன்றியை சொல்லத்தான். ஒரு உண்மை போராளிக்கு நன்றி சொல்ல மட்டுமே. //
ReplyDeleteநன்றி !!
//CNBC, CNN, Times now எல்லாம் வராதா?//
ReplyDeleteTimes now = JAYA TV..
THESE FELLOWS WERE REASON, TO SENT KANJI SANKARAACHAARIYAR INTO prison..
THEIR WORK (TIMES OF INDIA) IS SPREADING NONSENCE AND FALSE THINGS AMONG NORTH INDIANS( EVEN IN A.P.) ABOUT THAMILIANS & TAMILNADU ESPECIALLY IN POLITICS.. BUT SUPPORTS JAYA plainly..
THESE MEDIAS ARE THE FIRST ENIMIES TO THAMILIANS..
இது நீங்க சொல்ற குபீர் பதிவர்கள் செய்யிறது. நீங்க சோணம் கட்டுன குதிரையாட்டம் கலைஞர் காங்கிரஸ ஆதரிச்சா பிஜேபி மதவாத கட்சின்னு சொல்லிக்கிட்டும், பிஜேபிய ஆதரிச்சா காங்கிரஸ் இத்தாலிகாரங்க தலைமையில இயங்கும் இயக்கும் அப்டின்னு ஏதாச்சும் சொல்லிக்கிட்டு கலைஞர் போற வழியில போறவங்க. உங்கள மாதிரி ஆளுங்க இருக்கவரைக்கும் கலைஞரையும், அவரு குடும்பத்தையும் ஒன்னியும் செய்ய முடியாது சித்தப்பா.
ReplyDeleteமனசாட்சியோட ஒரு நிமிசம் கட்சிக்காரனா இல்லாம ஒழுங்கா யோசிச்சு சொல்லுங்க, இவரு செஞ்சது தேர்தலுக்காகவா இல்லையான்னு. இந்த பிரச்சனை என்ன முந்தா நாளுதான் ஆரம்பிச்சுதா? இப்பத்தான் உண்ணாவிரதம் இருக்கனும்னு தோணுச்சா அவருக்கு? இத்தன நாளு மனித சங்கிலி, மறியல், தந்தின்னு தானே படம் போட்டாரு? அந்த படம் எல்லாம் ஒழுங்க ஓடலன்னு தானே இப்ப இந்த உண்ணாவிரத நாடகம்? ஏன் இத்தன நாளு இதச் செய்யல? இப்பவும் மே மாசம் தேர்தல் இல்லாம 2011ல தான் தேர்தல்னா 2011ல தான் இவரு உண்ணாவிரதம் இருந்துருப்பாரு. இது தான் உண்மை. இது உங்களுக்கும் தெரியும். ஆனா நீங்க தலைவான்னு சொல்லிக்கிட்டு போவீங்களே ஒழிய அப்பவும் உண்மைய ஒத்துக்க மாட்டீங்க.
அவரோட தள்ளாத வயசுக்கு உண்ணாவிரதம் ஒவ்வாத ஒன்று தான் இல்லைன்னு நான் சொல்லல, உண்ணாவிரதம் இருக்கப்ப மட்டும் அவரோட தள்ளாத வயசு உங்க கண்ணுக்கு தெரியுது, ஆனா ஒரு மாநிலத்தோட முதல்வரா அவருக்கு எவ்வளவு வேலைப் பளு இருக்கும், அத மட்டும் அவரு இந்த தள்ளாத வயசுல செய்யிறாரே அப்ப எங்க போறீங்க எல்லாரும்? அட நாங்க என்ன முதல்வர் பதவிய ஜெயலலிதாவுக்கோ இல்ல ராமதாஸ்க்கோவா குடுக்க சொல்றோம் ? ஸ்டாலின முதல்வராக்கிட்டு ஆலோசகரா இருந்து வழிநடத்தலாம்ல ஏன் அதக் கூட செய்யக் கூடாது ? அப்போ வயசப் பத்தி பேசாதீங்க, உண்ணாவிரதத்துக்கு மட்டும் வயசப் பத்தி பேசுங்க. தமிழ இனத் தலைவர்னு சொல்லிக்கனும், தமிழ்நாட்டுக்கு முதல்வரா இருக்கனும் ஆனா சாவுறத் தமிழனுக்காக எதுவும் செஞ்சா உங்களுக்கு பதை பதைக்கும், கிடுகிடுக்கும். என்னக் கொடுமை இது?
தலைவன் என்பவன் எப்டியிருக்கனும்னு பைபிள்ல சொல்லப்பட்டது உங்களில் தலைவனாக விரும்புவன் எல்லோருக்கும் ஊழியனாய் இருக்கட்டும்.
புரியாதவங்களுக்கு சொல்லிப் புரியவைக்கலாம்.
ஆனா இப்படி எல்லாம் புரிஞ்சுகிட்டும் வேற வழியில்ல்லாம கட்சிக்காக சப்பைக் கட்டு கட்டுறவங்கள ஒன்னும் செய்ய முடியாது.
நண்பரே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
ReplyDelete* இலங்கையில் நடக்கும் போரில் இந்தியாவிற்கு பங்கு இல்லையா ?
* இது பற்றி உங்கள் தலைவருக்கு எதுவும் தெரியாதா?
* கடையடைப்பு , வேலை நிறுத்தம் ,மனித சங்கிலி போராட்டம் எல்லாம் யாரை எதிர்த்து ?
* உங்கள் தலைவர் தமது குடும்ப நலனை விட இலங்கை தமிழர்கள் பற்றி அக்கறை உள்ளவரா?
* உங்கள் தலைவரின் கூற்று படி தற்ச்சமயம் இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை நீங்கள் ஒத்து கொள்கீறீர்களா ?
நண்பரே நீங்கள் திருமணம் ஆனவராக இருப்பீர் என்று நம்புகிறேன் ,
உங்கள் பதிலை உங்கள் குடும்பத்தின் மீது சத்தியம் செய்து கூறுங்கள் .
நான் கடவுளை விட மனிதர்களையும் அவரின் வார்த்தைகளும் நம்புகிறேன்
நண்பரே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்
ReplyDelete* இலங்கையில் நடக்கும் போரில் இந்தியாவிற்கு பங்கு இல்லையா ?
* இது பற்றி உங்கள் தலைவருக்கு எதுவும் தெரியாதா?
* கடையடைப்பு , வேலை நிறுத்தம் ,மனித சங்கிலி போராட்டம் எல்லாம் யாரை எதிர்த்து ?
* உங்கள் தலைவர் தமது குடும்ப நலனை விட இலங்கை தமிழர்கள் பற்றி அக்கறை உள்ளவரா?
* உங்கள் தலைவரின் கூற்று படி தற்ச்சமயம் இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை நீங்கள் ஒத்து கொள்கீறீர்களா ?
நண்பரே நீங்கள் திருமணம் ஆனவராக இருப்பீர் என்று நம்புகிறேன் ,
உங்கள் பதிலை உங்கள் குடும்பத்தின் மீது சத்தியம் செய்து கூறுங்கள் .
நான் கடவுளை விட மனிதர்களையும் அவரின் வார்த்தைகளும் நம்புகிறேன்
அபி அப்பாவின் வழக்கமான கலகல காமடி பதிவென்று வந்தேன். ஏமாற்றவில்லை அவர் :)
ReplyDeleteஅபி அப்பாவின் வழக்கமான கலகல காமடி பதிவென்று வந்தேன். ஏமாற்றவில்லை அவர் :)
ReplyDeleteRepeatu..
abi appa
ReplyDeleteneengal oru nalla DMK thondanaga ungalai, intha pathivu moolam vezhikattikolla murpatirikeergal. Aanal oru nadunilay vathiyaga yosithal neengal sonna karuthkkazh mel ungazhukke udanpadillathirupathai uranveergal.
I am a regular reader of ur pathivugal.....
But u really diappointed me in this........
My intension is not to hurt you ...but to make u to think from the shoes of a comman man..
keep going..