பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 1, 2010

பதிவர்களின் ஒற்றுமைக்காக தமிழ்மணம் பகீரத முயற்சி!!!

இரண்டு மூன்று வருடம் முன்பாக பதிவர் ஷார்ஜா சிங்கம் பெனாத்தலார் ஒரு பதிவு போட்டிருந்தார். "கனவில் வந்த தமிழ்மணம்" என்கிற பதிவு. பின்பு ஒரு வருடம் பின்னர் "கனவில் வரக்கூடாத தமிழ்மணம்" அப்படீன்னு பதிவு போட்டாரு. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். இனி அதுக்கு எல்லாம் தேவையே இல்லை பெனாத்தலாரே. உங்க வேலையை தமிழ்மணமே செஞ்சாச்சு.


அக்னி நட்சத்திரம் படத்திலே அப்பா விஜயகுமார் தன் இரண்டு மகன்கள் பெயரை கௌதம், அஷோக் இருவரையும் பெயரை மாற்றி மாற்றி கூப்பிடுவார். பின்ன கிளைமாக்ஸ்ல அதுக்கு விளக்கம் வேற சொல்லுவார். அப்படியாவது அவங்க ஒத்துமையா இருக்கட்டுமேன்னு தான் அப்படி சொன்னாராம். (இப்படியெல்லாம் சிந்திக்க மணிரத்னம் மட்டுமே இந்தியாவிலே இருக்கார்

கிட்ட தட்ட நம்ம தமிழ்மணம் அதே பாணியிலே நேத்து முதல் அதிரடியாக செயல்பட்டு பதிவர்களை ஒத்துமையாக்க பகீரத முயற்சி எடுத்து வருகின்றது.


ஒரு பதிவு தலைப்பு படுக்கை அறை, வீடியோ என பார்த்ததும் உடனே எதுனா சாமியார் படம் போடனும் என நினைத்து அவசரத்துல நம்ம ஆன்மீக பதிவர் ஸ்வாமி ஓம்கார் படத்தை போட்டுட்டாங்க:-))) நேத்து அப்படித்தான் ஒரு ஆன்மீக பதிவுக்கு டாக்டர்.ருத்ரன் படத்தை போட்டு இருந்தாங்க. தாடி மீசையோட அவரை ஆன்மீக சாமியார்ன்னு நினைச்சுட்டங்க போலிருக்கு.

இனி தமிழ்மண ஜூன் கலவர பதிவர்கள் படத்தை மாத்தி மாத்தி போட வேண்டியது தான் பாக்கி. தவிர 'எனக்கு ஓட்டு விழவில்லை" என்கிற குறையும் இனி இல்லை போலிருக்கு. என் போன பதிவிலே நானே எனக்கு இரண்டு ஓட்டு போட்டிருக்கேன். பாருங்க. இனி மகுடம், வாசகர் பரிந்துரை எல்லாம் நம்ம கையிலேயே தான் இருக்கு போலிருக்கு. ஹும் பதிவு போட பத்து நிமிஷம். ஒரு அரை மணி செலவழிச்சா நாமளே நம்மை மகுடத்துல ஏத்தி உட்கார வச்சுட்டு அடுத்த வேளையை பார்கலாம்.

@@@@@@@@

ஜோக்ஸ் அபார்ட்! தமிழ்மணம் ஏதோ டிங்கரிங் பட்டிபார்த்து கிட்டு இருக்காங்க. அது முடியும் வரை இப்படித்தான் இருக்கும் போலிருக்கு. அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க.

@ தமிழ்மணம்: சும்மா இதை விளையாட்டா எடுத்துகிட்டு சரி பண்ணுங்க. இதுக்காக எனக்கு தூக்கு தண்டனை கொடுத்தா நான் மேல்முறையீட்டுக்கு போவேன் ஆமா!

14 comments:

 1. நான் சொன்ன பதிவு போடாம இப்படில்லாம் போடக் கூடாது

  ReplyDelete
 2. அவ்வ்வ்வ்வ்வ் டிங்கரிங்க வேலை நடக்குதே எதோ டீடெயில்லா தமிழ்மணத்தை பத்தி கருத்து சொல்லப்போறாங்க போலன்னு ஒரு ஹெல்பு பண்ணினா அதுக்கு இப்புடியா??? !!! :)

  ரெண்டு ஓட்டா? ஏன் அத்தோட நிப்பாட்டிடீங்கோ ?

  ReplyDelete
 3. தலைப்பு மகாசீரியஸ்-ஆ இருக்கு;
  ஆனா, மேட்டர் சிரிப்புத்தனமால்ல
  இருக்கு?

  ReplyDelete
 4. தமிழ்மணத்துல ஓட்டை விழுந்துடுச்சா

  ReplyDelete
 5. இந்த இடத்துல சுவாமி ஓம்காரின் படத்தோட வெளி வந்த அந்த படத்த தவிர்த்து இருக்கலாம்.

  ஒரு தொழில்நுட்ப தவறு தற்செயலாக நிகழ்ந்ததை நீங்க எல்லாருக்கும் கொண்டு போய் சேர்கிறீங்க.

  ReplyDelete
 6. ஒண்ணும் புரியலை, தமிழ்மணம் பக்கம் போயே எவ்வளவோ மாசமாச்சு! திறக்கிறதே இல்லை. ஓகே, சிரிப்புனு நினைச்சுட்டுச் சிரிச்சு வைக்கிறேன். :))))))))))

  ReplyDelete
 7. :)))
  (இன்னிக்கி smiley டே போல இருக்கு... எல்லாரும் smiley போடறாங்க...நாமளும் அதே போட்டருவோம்...)

  ReplyDelete
 8. குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com/

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))