அன்புள்ள தருமி அய்யா!
"உமாசங்கருக்காக ஒரு விண்ணப்பம்" பதிவு பார்த்தேன். அதை போல எல்லா வலைப்பதிவரும் உமாசங்கருக்காக ஆதரவு தெரிவித்து தங்கள் தங்கள் பதிவில் அந்த டிராஃப்டை போட்டு அவருக்கு மனரீதியாக பலம் உண்டாக்கும் பொருட்டு ஆதரவு தர சொல்லி சொல்லியிருக்கின்றீர்கள்.
முதலில் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். உமாசங்கர் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய தொலைநோக்கு பார்வையும் செயல் திட்டங்களும் பிடிக்கும். முதன் முதலாக அனைத்து துறையும் கணினி மயமாக்க வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அவர் உழைத்ததும், (முதல் போஸ்டிங் 1990ல் மயிலாடுதுறை சப் கலக்டர் தான்), எல்லா தரப்பு மக்களையும் அவர் அனுசரித்து போனதும், மழை வெள்ள காலத்தில் சாலையில் கிடந்த மரங்களை தானே முன்னின்று வெட்டி அப்புறப்படுத்தியதும் நேரில் கண்டவன்.
அதனால் மக்களிடம் அவர் தனி பெரும் செல்வாக்கோடு இருந்தார் என்பதும் அப்போதே ஆளும் கட்சியான அதிமுக (1991- 96) 1995ம் ஆண்டு அவரது காரில் குளிர்சாதன வசதி செய்து கொடுத்த நிறுவனத்துக்கு சலுகை செய்தார் எனவும், அரசின் அனுமதி இன்றி வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக இல்லாமல், தனி ஒருவரை பணியமர்தினார் என்றும், 20 கோடி அரசு நிதியை தன் சகோதரர் பணிபுரிந்த வங்கி கிளையிலே டெபாசிட் செய்தார் எனவும் குற்றம் சாட்டப்பட்டு மெமோ கொடுக்கப்பட்டது. இது தான் உமாசங்கர் அரசின் மூலமாக சுமந்த முதல் சிலுவை. இது ஜெயலலிதா ஆட்சியில் அவரது தலைமையில் அமைந்த ஆட்சியில்.
பின்னர் 2001- 2006 திரும்பவும் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சியில் அதாவது 2005ல் கர்நாடக அரசின் கொள்கை முடிவுகளை உமாசங்கர் விமர்சித்து அது பற்றி கர்நாடக அரசு தமிழக அரசில் புகார் செய்து இவர் மீது மீண்டும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இது இவர் சுமந்த இரண்டாவது சிலுவை.
1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு விசாரித்து ஒழுங்கு நடவடிக்கையை களைந்தது. பின்னர் இரண்டாவது முறை 2006ல் திமுக ஆட்சி அமைந்த போது இரண்டாவது குற்றச்சாட்டை விசாரித்து அந்த குற்றச்சாட்டையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
1996, 2006 ஆகிய வருடங்களில் அப்படி விசாரிப்புக்கு பின்னர் ஒழுங்கு நடவடிக்கையை டிஸ்மிஸ் செய்த திமுக அரசு இப்போது ஒரு புகாரின் பெயரில் கொடுத்த மெமோவை விசாரிப்புக்கு பின்னர் அவர் பக்கம் நியாயம் இருப்பின் தள்ளுபடி செய்யாதா?
இது ஒரு அரசின் சாதாரண நடவடிக்கை. ஒரு நாளைக்கு எத்தனை போக்குவரத்து பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அதிகாரிகள் போன்ற பலர் மெமோ கொடுக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் குற்றம் இல்லையெனில் விடுவிக்கப்படுகின்றனர் என்பது உங்களுக்கு தெரியாதா?
ஏன் இதற்கு முன்னர் ஐ ஏ எஸ் அதிகாரிகள் மெமோ கொடுக்கப்பட்டது இல்லையா? ஆனால் நீங்கள் எழுதியிருக்கும் இந்த பதிவின் காரணமாக உமாசங்கர் மீது பாசம் மற்றும் அன்பு காட்டுபவர்களை விட அரசியல் ரீதியாக திமுக அரசு மீது அவதூறு நோக்கில் மட்டுமே உமாசங்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது தான் மேலோங்கி இருப்பதாகவே எனக்கு படுகின்றது. ஏனனில் அந்த பதிவில் நீங்கள் கொடுத்திருக்கும் கையெழுத்து போடும் சுட்டியில் இருக்கும் கருத்து பகுதியில் "கருணாநிதி அரசை டிஸ்மிஸ் செய்" மற்றும் வழக்கமான குடும்ப வசவு வாசகங்களே பிரதானப்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும் அந்த பதிவில் இருக்கும் பின்னூடங்களும் அதே வாசகங்கள் கொண்டவையாகவே இருக்கின்றது..
இதே உமாசங்கர் அதே குற்றச்சாட்டை முன்பு எதிர்கொண்டது போல எதிர் கொண்டு நிரூபித்து வெளியே வருவதில் என்ன சிக்கல் இருகின்றது என்பதே என் கேள்வி. நீங்கள் சொல்வதை பார்த்தால் என்னவோ திமுக அரசு இந்திய குடியரசில் முதன் முதலாக ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியை அதுவும் தலித் என்பதால் பழிவாங்கி விட்டது போல ஒரு தோற்றத்தை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், திமுக அரசுக்கு எதிரலையை உண்டு செய்யும் அரசியல் பிரச்சாரம் போல மட்டுமே தோற்றம் அளிக்கின்றது. உணர்சி வசப்படும் பல பதிவர்கள் உமாசங்கருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி தனக்கு அறியாமலே கூட தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பலியாக நேரிடுகின்றது என்றே நான் நினைகின்றேன்.
அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் ஐ பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் ஐ பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? அதை எல்லாம் சரி என சொல்ல போகின்றனரா இப்போது இந்த உங்கள் பதிவை போடும் வலைப்பதிவர்கள்? இந்த மெமோ கொடுத்த விஷயம் விசாரணை முடிந்து முன்பு எப்படி தான்னை நிரூபித்து வெளியே வந்தாரோ அப்படியே வரப்போகின்றார்.
இப்போதும் சொல்கிறேன் எனக்கு உமாசங்கர் என்கிற ஆட்சியரின் ஆளுமை பிடிக்கும், அவரது ஆட்சி திறன் பிடிக்கும். அவரது திறமை பிடிக்கும். ஆனால் அவருக்கு ஆதரவு என்கிற போர்வைக்குள் புகுந்து கொண்டு திமுக எதிர்பு பிரச்சாரம் தான் பிடிக்கவில்லை என்கிறேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்
அபிஅப்பா
arumai
ReplyDeleteநல்ல பதிவு... அதனால் -ve ஓட்டு போட்டேன்.. நன்றி.
ReplyDeleteஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நான் ப்லாக்கிற்கு வரல, வந்திருந்தால் இதே கண்டனத்தை தெரிவித்திருப்பேன்!
ReplyDeleteசரி மேட்டருக்கு வாங்க!
உமாசங்கரை பிடிக்கும், ஆனால் எங்கேயும் அதிகாரமையத்தின் மேல் குறை சொல்ல மாட்டீர்கள் காரணம் அது உங்கள் அபிமான கட்சி! நாங்கள் எதிர்கட்சி அபிமானத்திற்கா இந்த கண்டனத்தை பதிவு செய்கிறோம்!, சமகால மக்களின் விழிப்புணர்ச்சியை பறை சாற்றவே செய்கிறோம்!
தி.மு.க வின் பரம்பரை கொள்கையான அவன் அப்போ செய்யலையா, அவனை அடிக்கலையா, டிஸ்மிஸ் பண்ணலையான்னு கதை பேசுறதை விட்டுட்டு, அதிகாரமையத்திற்கு எதிராக உங்க கண்டனத்தை பதிவு செய்யுங்க!
correct explanation regarding Umashankar issue
ReplyDelete//அவருக்கு ஆதரவு என்கிற போர்வைக்குள் புகுந்து கொண்டு திமுக எதிர்பு பிரச்சாரம் தான் பிடிக்கவில்லை என்கிறேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.//
ReplyDeleteஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதென்றால் இலங்கை அரசை எதிர்த்து தான் பேசனும்! நாம் என்ன அரசியல்வாதியா, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ட!
ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் நான் ப்லாக்கிற்கு வரல, வந்திருந்தால் இதே கண்டனத்தை தெரிவித்திருப்பேன்!
ReplyDeleteசரி மேட்டருக்கு வாங்க!
உமாசங்கரை பிடிக்கும், ஆனால் எங்கேயும் அதிகாரமையத்தின் மேல் குறை சொல்ல மாட்டீர்கள் காரணம் அது உங்கள் அபிமான கட்சி! நாங்கள் எதிர்கட்சி அபிமானத்திற்கா இந்த கண்டனத்தை பதிவு செய்கிறோம்!, சமகால மக்களின் விழிப்புணர்ச்சியை பறை சாற்றவே செய்கிறோம்!
தி.மு.க வின் பரம்பரை கொள்கையான அவன் அப்போ செய்யலையா, அவனை அடிக்கலையா, டிஸ்மிஸ் பண்ணலையான்னு கதை பேசுறதை விட்டுட்டு, அதிகாரமையத்திற்கு எதிராக உங்க கண்டனத்தை பதிவு செய்யுங்க!
---
என்னை பொறுத்த மட்டில் ஆட்சி பொறுப்பில் இருக்கறது எந்த கட்சியா இருந்தாலும் அவர்களின் செயல்களுக்கு உடன்படாமல் நியாயமாக அதை எதிர்த்தாலோ, நடக்க நினச்ச்சாலோ இதுதான் நடக்கும்.. இப்ப இருக்கற ஆளுங்கல்ல எவனும் யோக்கியம் இல்ல...
எதெற்கெடுத்தாலும் ஜெ.வுடன் ஒப்பிட்டு கருணாநிதியை நல்லவராகச் சித்தரிப்பதை எப்போதுதான் நிறுத்துவீர்களோ...
ReplyDeleteஜெ. கருணாநிதியைவிட மோசமானவர் என்றால் அதற்காக கருணாநிதியை விமர்சிக்கக் கூடாதா?
ஜெ. மாதிரி ஒருத்தர் கிடைக்காவிட்டால் கருணாநிதி பாவம்.
வால் பையன் கருத்துடன் ஒத்துப் போகிறேன்.
இங்க பதிவுலகத்தில் உமாசங்கர் ஆதரவு பதிவு போடுபவர்களுடைய முக்கிய நோக்கமே திமுக எதிர்ப்பு தானோ என எண்ணத் தோன்றுகிறது.
ReplyDeleteஎன்னைய பொருத்த மட்டில்.. கலைஞ்ர் ஹிட்லர்ன்னா.. ஜெ இடி அமின் மாதிரி.. இந்த ஒப்பிடுக்காக ஹிட்லரும் இடி அமினும் வருத்தப்படலாம் உசிரோட இருந்தாங்கன்னா...
ReplyDeleteதுறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை என்பது சாதாரணமான ஒன்றுதான். ஆனால் அரசு அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் குடும்ப வணிக நோக்கைக் காக்கும் நோக்கிலேயே உமாசங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதைக்கண்டிக்கும் ஜனநாயகக் கடமை நமக்கு உள்ளது, அதைத்தான் செய்கிறோம், 90களில் பதிவுகள் இருந்திருந்தால் அப்போதும் செய்திருப்போம்/செய்திருப்பார்கள்!
ReplyDeleteசித்தன்555 said...
ReplyDeleteஇங்க பதிவுலகத்தில் உமாசங்கர் ஆதரவு பதிவு போடுபவர்களுடைய முக்கிய நோக்கமே திமுக எதிர்ப்பு தானோ என எண்ணத் தோன்றுகிறது.
/\*/\
இதான் இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது
திமுக அரசின் செல்லப்பிள்ளையாக இருந்த உமாசங்கர் மீது இப்பொழுது மெமோ கொடுக்கும் அளவுக்கு போன காரணம் என்ன? அரசு கேபிள் காரணமாகவும் / முக குடும்பத்தினரை அனுசரித்து போகவில்லை என்ற ஒற்ற காரணத்துக்காக தானே?
ReplyDeleteகட்சியின் அபிமானி அதனால் அக்கட்சி எந்த தவறு செய்து இருந்தாலும் அவர்களே பக்கமே பேசுவேன் என்ற விதாண்டவாதமாக தான் உங்கள் பதிவு தோணுகிறது.
//
ReplyDeleteஇங்க பதிவுலகத்தில் உமாசங்கர் ஆதரவு பதிவு போடுபவர்களுடைய முக்கிய நோக்கமே திமுக எதிர்ப்பு தானோ என எண்ணத் தோன்றுகிறது.
/\*/\
இதான் இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது//
உமாசங்கரின் செயல்பாடுகள் பிடிக்கும் இருந்தும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாமல் இருப்பதன் முக்கிய காரணமே திமுக மீது இருக்கும் கண்மூடித்தனமான ஆதரவு தானோ என எண்ண தோன்றுகிறது.
இதானே இங்கே காலம் காலமாக நடந்து வருகிறது
பதிவை படிச்சிட்டேன்...பின்னூட்டங்களை படிக்க ;)
ReplyDeleteஅதிமுக ஒழிக, அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் மகிழ்ச்சியா.
ReplyDeleteமகனுக்காக தேர் இழுத்த மன்னிக்க உமாசங்கர் மீது எடுத்த நடவடிக்கை நியாமானதே, அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் மகிழ்ச்சியா.
அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் திமுக காசு கொடுக்கும் எனக்கு (எல்லாத்துக்கும்) என்ன கொடுக்கும்? டிவி கொடுக்கும். அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் டிவி கொடுக்கற ஒப்பந்தத்தை கொடுக்கும்.
என்னன்னு சொல்றது...
ReplyDeleteஉங்களைப் போன்றவர்களின் கண்மூடித்தனமான விசுவாசமே கட்சிகளின் தைரியத்துக்குக் காரணம்.
ReplyDeleteஅபி அப்பா நன்றாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். எனது பாராட்டுக்கள்....
ReplyDeleteதிரு உமா சங்கர் ஒரு நேர்மையான IAS அதிகாரி எனபதை நான் ஒத்துக் கொள்கிறேன். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர் ஜாதியைப் பற்றி எழுந்த சர்ச்சை முழுவதும் எனக்கு தெரியாது. அதை அவரும் கூற வில்லை என்று நினைக்கிறன். நான் இங்கு எழுதப் போவதற்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. மேலும இந்தியாவில் கோர்ட்டுகள் ஒரு பெரிய ஜோக்! அப்படின்னு நான் சொல்லவில்லை. இங்கு நிறைய பதிவுகள் ஆதாரங்கள் உள்ளது. உதாரணம் நமது போபால் கேஸ். இப்படி பல பல.
நான் கேட்பது எல்லாம் சில கேள்விகள். நேர்மையான பதிலை எதிர்பாக்கிறேன்.
உமா சங்கர் பார்ப்பன அதிகாரிகள் மீது கொடுத்த compaint மீது action எடுக்கவில்லை என்று குறைப்பட்டு இருக்கிறார். அப்படியென்றால் இந்த இரண்டில் ஒரு முடிவிற்க்கு தான் நான் வர வேண்டும். ஒன்று உமா சங்கர் ஒரு பொய்யர். பார்ப்பனர்களைப் பிடிக்காமல் compaint கொடுத்து இருக்கிறார். இல்லை அந்த அதிகாரிகளை வேண்டுமென்றே அரசு விடுவித்து இருக்கிறது---தவறே செய்தாலும். இவர்களை, இந்த பார்ப்பன IAS அதிகாரிகளை, விடுவித்த முதல் அமைச்சர் யார்? இப்பத் தான் ப்ளாக் இருக்கிறதே! ஏன் எழுதவில்லை? இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா??
///1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு விசாரித்து ஒழுங்கு நடவடிக்கையை களைந்தது. பின்னர் இரண்டாவது முறை 2006ல் திமுக ஆட்சி அமைந்த போது இரண்டாவது குற்றச்சாட்டை விசாரித்து அந்த குற்றச்சாட்டையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.///
அப்ப பொய்யாக குற்றம் சாட்டிய அம்மையாரைப் பற்றியும் இப்போ எழுதலாமே? இல்லை உமா சங்கர் ஒரு பொய்யர். ஆனால் கருணாதி அவரை தவறு செய்து இருந்தாலும் விட்டு விட்டார் என்று சொல்வீர்களா? எது உண்மையாக இருந்தாலும் அம்மையார் அல்லது உமா சங்கர், இருவரில் ஒருவர் பொய்யர். இப்பத் தான் ப்ளாக் இருக்கிறதே! ஏன் எழுதவில்லை? இருவரில் ஒருவர் குற்றம் செய்து இருக்கிறார். இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா??
Part 1. Contd. below...
Part 2. Contd. from above...
ReplyDelete///அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் ஐ பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் ஐ பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? ///
மறுபடியும் அதே கேள்வி தான். ஒன்று இந்த அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்கள் அல்லது அம்மையார் பொய்யாக குற்றம் சாத்தி இருக்கிறார். எது உண்மை? எது உண்மையாக இருந்தாலும் இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா?? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மேற்கூறிய அதிகார்கள் மீது கருணாநிதி மட்டும் "action" எடுத்திருந்தால் நீங்கள் எல்லாம பொங்கிக்கொண்டு தெருவுக்கு வந்திருப்பீர்கள்.
சில பேர் கூறுகிறார்கள். அப்ப ப்ளாக் இல்லை என்று. உண்மை தான்; ஆனால் இப்பவும் ப்ளாக்கில் காந்தியைக் கொன்ன கோட்சே ஒரு பார்ப்பன RSS என்று கை தேய எழுதுகிறீர்களே அப்ப இதையும் எழுதலாமே? ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தை பற்றி எழுதுகிறீர்களே? ( இங்கு இருப்பவர்கள் சிலர் அப்பொழுது பிறந்து கோட இருக்க மாட்டார்கள்). ஏன் நம்ம ராச ராசனைக் கிழிக்கிறீர்கள். நந்தனுக்கு ஏற்ப்படட கொடுமையை எழுதிகிரீர்கள். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போ ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். நல்லது!
மேற்கூரியவைகளை எழுதும் போது, நான் சொன்னவைகளைப் பற்றியும், இப்போ இப்போ நடந்தவை பற்றி, எழுதுங்களேன், அதாவது உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளைப் பற்றி. யார் வந்து உங்கள் கையைப் பிடித்தது.? மனது இல்லை. அவ்வளவு தான்.
Contd. below...
Part 3. Contd. from above..
ReplyDeleteஇதற்க்கு எல்லாம் கரணம்: வால் பையன் சொன்ன பார்ப்பனிய படிக்கட்டு தான்.
அது எப்படி நம்மளை விட கீழ் ஜாதியில் பிறந்த கருணாநிதி நம்மளை ஆட்சி செய்யலாம். அதான் காரணம். இல்லைண்றீகளா? அப்ப அம்மையாறிப் பற்றியும், உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளை, எழுதுங்கள. எது உங்களை தடுக்கிறது?
இதே கருணாநிதி ஒரு பார்ப்பனராக இருந்தால்! அத்தைக்கு மீசை முளைத்தால்?
Past record shows that no one writes about Amma's dicatatorship. இப்போ இப்போ அம்மா இது மாதிரி உமா சங்கருக்கு ஒரு மெமோ கொடுத்து இருந்தால் (கருணாநிதி பார்ப்பனராக இருந்தால் உமா சங்கர் இந்நேரம் டிஸ்மிஸ் தான்; அவர் ஒரு சூத்திரன் அதான் மெமோ), அப்போ ஒரு பெரிய அனானி கூட்டம் கூடவே கோண்டு, போனடு, போங்கு, அப்புறம் சிண்டு, சீமா, சீமாச்சு, சாமா சாஸ்த்ரிகள், அம்பி (ஆட்டையாம்பட்டி அம்பி இல்லப்பா! மயிலாப்பூர் அம்பி) உங்களை எல்லாம் ஒரு ரௌண்டு கட்டி இருப்பார்கள்.
நமது ஒரே கொள்கை நம்மளை விட உயர்ந்த ஜாதி நம்மளை ஆளலாம். அனால் நம்மளை விட கீழ் ஜாதிக்காரன் நம்மளை ஆள விடக் கூடாது. அப்ப பார்ப்பனர்கள் அப்ப பார்ப்பனர்கள் நம்மை ஆண்டா? . அய்யோ! அய்யோ! இவ்வளவு சொல்லியும் சீதைக்கு ராமன் சித்தப்பா என்று சொன்னால்??? நம்ம சூத்திரக் கண்மணிகளும் வழக்கம போல் பார்ப்பனர்களுக்கு சொம்பு தூக்கி இருப்போம. நமது குலத் தொழிலே அதானே?
நேர்மையாக நான் கெட்ட கேள்விகளுக்கு முடிந்தால் பதில் கூறுங்கள்....
அபி அப்பா நன்றாக அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். எனது பாராட்டுக்கள்...தொடருட்டும் உமது பணி...
Sincere Apologies. I missed this; Part 2...Contd from Part 1
ReplyDelete///அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் ஐ பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் ஐ பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? ///
மறுபடியும் அதே கேள்வி தான். ஒன்று இந்த அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்கள் அல்லது அம்மையார் பொய்யாக குற்றம் சாத்தி இருக்கிறார். எது உண்மை? எது உண்மையாக இருந்தாலும் இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா?? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மேற்கூறிய அதிகார்கள் மீது கருணாநிதி மட்டும் "action" எடுத்திருந்தால் நீங்கள் எல்லாம பொங்கிக்கொண்டு தெருவுக்கு வந்திருப்பீர்கள்.
சில பேர் கூறுகிறார்கள். அப்ப ப்ளாக் இல்லை என்று. உண்மை தான்; ஆனால் இப்பவும் ப்ளாக்கில் காந்தியைக் கொன்ன கோட்சே ஒரு பார்ப்பன RSS என்று கை தேய எழுதுகிறீர்களே அப்ப இதையும் எழுதலாமே? ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தை பற்றி எழுதுகிறீர்களே? ( இங்கு இருப்பவர்கள் சிலர் அப்பொழுது பிறந்து கோட இருக்க மாட்டார்கள்). ஏன் நம்ம ராச ராசனைக் கிழிக்கிறீர்கள். நந்தனுக்கு ஏற்ப்படட கொடுமையை எழுதிகிரீர்கள். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போ ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். நல்லது!
மேற்கூரியவைகளை எழுதும் போது, நான் சொன்னவைகளைப் பற்றியும், இப்போ இப்போ நடந்தவை பற்றி, எழுதுங்களேன், அதாவது உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளைப் பற்றி. யார் வந்து உங்கள் கையைப் பிடித்தது.? மனது இல்லை. அவ்வளவு தான்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆட்டையாம்பட்டி அம்பி, வெளுத்துக் கட்டி இருக்கீங்க. கையக் குடுங்க. இன்னிக்கு அதிமுக இவ்வளவு போராட்டம் நடத்தும் போது திமுக முன்பு நடந்த செயலலிதா ஆட்சியைக் கண்டிச்சு எம்புட்டுப் போராட்டம் நடத்தலாம். சே, திமுகல அளப்பு சொல்ல ஆள் இல்லை :-(
ReplyDeleteஹாஹா ஹாஹா!
ReplyDeleteஅபி அப்பா,
எப்படி உமா சங்கர் விசயத்த இப்படி சுருக்கமா முடிக்க முடிஞ்சது!?
அரசு ஜெ அரசு கேபிள் டிவி்>>கருணா நிதி>>கவர்னர் பர்னாலா>>கருணா நிதி அரசு பதவி ஏற்பு>>குடும்பத்தில் குழப்பம்>>கருணாநிதி அரசு கேபிள் டிவி>> கருணாநிதி அரசு கேபிள் டிவிXசுமங்கலி கேபிள் டிபி>>குடும்ப ஒற்றுமை>> சுமங்கலி கேபிள் டிபி^>>அரசு கேபிள் டிவி அம்பேல்>>உமா சங்கர் பலி கடா.... இத்தியாதி... இத்தியாதி...
இந்த விசயத்த எல்லாம் தொட்டு எழுதுங்க பாசு...! தொடாம போனா நிறைவடையாதே!
ஆட்டையாம் பட்டி அம்பியின் 2 வது பின்னூட்டம் என்னால் பப்ளிஷ் செய்ய முடியவிலை. அதனால் நானே காபி பேஸ்ட் செய்கிறேன். சிரமத்துக்கு மன்னிக்கவும்.
ReplyDelete\\ஆட்டையாம்பட்டி அம்பி has left a new comment on your post "அன்பு தருமி அய்யாவுக்கு,திரு. உமாசங்கர் I.A.S., வி...":
Part 2. Contd. from above...
///அப்படி பார்த்தால் அதிமுக அரசு முத்துகருப்பன் என்கிற தலித் ஐ பி எஸ் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? ரவீந்திரநாத் ஐ பி எஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததே? உஜாகர் சிங், கே.என்.சுப்ரமணியம் போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகினரே? அத்தனை ஏன்? சந்திரலேகா என்னும் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி முகத்தில் ஆசிட் வீசப்பட்டதே . இதல்லாம் செய்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசை விட மெமோ கொடுத்த திமுக அரசு அராஜகத்தின் உச்சமா? ///
மறுபடியும் அதே கேள்வி தான். ஒன்று இந்த அதிகாரிகள் தவறு செய்து இருக்கிறார்கள் அல்லது அம்மையார் பொய்யாக குற்றம் சாத்தி இருக்கிறார். எது உண்மை? எது உண்மையாக இருந்தாலும் இதைப் ப்ற்றி இப்ப தாராளமா எழுதலாமே? எழுதிவீர்களா?? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மேற்கூறிய அதிகார்கள் மீது கருணாநிதி மட்டும் "action" எடுத்திருந்தால் நீங்கள் எல்லாம பொங்கிக்கொண்டு தெருவுக்கு வந்திருப்பீர்கள்.
சில பேர் கூறுகிறார்கள். அப்ப ப்ளாக் இல்லை என்று. உண்மை தான்; ஆனால் இப்பவும் ப்ளாக்கில் காந்தியைக் கொன்ன கோட்சே ஒரு பார்ப்பன RSS என்று கை தேய எழுதுகிறீர்களே அப்ப இதையும் எழுதலாமே? ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்தை பற்றி எழுதுகிறீர்களே? ( இங்கு இருப்பவர்கள் சிலர் அப்பொழுது பிறந்து கோட இருக்க மாட்டார்கள்). ஏன் நம்ம ராச ராசனைக் கிழிக்கிறீர்கள். நந்தனுக்கு ஏற்ப்படட கொடுமையை எழுதிகிரீர்கள். ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன் நடந்ததை இப்போ ப்ளாக்கில் எழுதுகிறீர்கள். நல்லது!
மேற்கூரியவைகளை எழுதும் போது, நான் சொன்னவைகளைப் பற்றியும், இப்போ இப்போ நடந்தவை பற்றி, எழுதுங்களேன், அதாவது உமா சங்கருக்கும், அந்த அதிகாரிகளுக்கும் (அம்மையார் ஆட்சியில்) நடந்த கொடுமைகைளைப் பற்றி. யார் வந்து உங்கள் கையைப் பிடித்தது.? மனது இல்லை. அவ்வளவு தான்.\\
//1995ல் சுமத்திய குற்றச்சாட்டை 1996ல் அமைந்த கலைஞர் தலைமையிலான அரசு விசாரித்து ஒழுங்கு நடவடிக்கையை களைந்தது. பின்னர் இரண்டாவது முறை 2006ல் திமுக ஆட்சி அமைந்த போது இரண்டாவது குற்றச்சாட்டை விசாரித்து அந்த குற்றச்சாட்டையும் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.
ReplyDelete1996, 2006 ஆகிய வருடங்களில் அப்படி விசாரிப்புக்கு பின்னர் ஒழுங்கு நடவடிக்கையை டிஸ்மிஸ் செய்த திமுக அரசு இப்போது ஒரு புகாரின் பெயரில் கொடுத்த மெமோவை விசாரிப்புக்கு பின்னர் அவர் பக்கம் நியாயம் இருப்பின் தள்ளுபடி செய்யாதா? //
இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு. ஜெ வந்தால் அவர் தள்ளுபடி செய்யலாம். எப்படித்தான் தூங்கற மாதிரியே நடிக்கிறீங்களோ!!
ஈரோடு கோடீஸ் //இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு. ஜெ வந்தால் அவர் தள்ளுபடி செய்யலாம். எப்படித்தான் தூங்கற மாதிரியே நடிக்கிறீங்களோ!!//
ReplyDeleteGood Shot Thols you got to answer this truely
(sorry no tamil Fonts)
பிரச்சனையின் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
ReplyDeleteஎன்னத சொல்லுறது.... ரெண்டு பேறும் ஒரே குட்டைல ஊருண மட்டை தான்.... இவங்களால ஒழுங்க செயல் பட நினைக்குற அதிகாரிகளும் செயல் பட முடியறது இல்லை...
ReplyDeleteHi abiappa-DMK Party man
ReplyDeleteதமிழ்மணத்தின் எதேச்சதிகாரம்!!!!
ReplyDeleteஏழு + ஓட்டு வாங்கினாலே தமிழ்மணமுகப்பில் இடது பக்கத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடுகை என்கிற பெயரிலே உட்கார வைத்து அழகு பார்க்கும் தமிழ்மணமே! நேற்று நான் இட்ட இடுகைக்கு பத்துக்கும் மேற்பட்ட மைனஸ் ஓட்டு வாங்கியிருக்கின்றேன். அதனால் இடது பக்கம் பரிந்துரைக்கப்படாத இடுகைகள் என்கிற பெயரில் உட்காரவைத்து கூட வேண்டாம் அட்லீஸ்ட் நிற்கவைத்தாவது இருக்க வேண்டாமா? என்னே உன் எதேச்சதிகாரம். பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது:-)))))
This is Unfortunate and childish attitude as you Deviating all the bloggers from the main cause.[Fight Against Corruption]
ReplyDeletePart 1: உமா சங்கர் நேர்மையானவர் என்பதை நான் நூற்றுக்கு நூறு ஒத்துக் கொள்கிறேன்...இது உண்மை. முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள் நான் மூன்று Part -இல (இரண்டு நாள் முன்பு) கேட்ட கேள்விகளுக்கு. கருணாநிதியைக் கேள்வி கேட்கும் உங்களுக்கு ஏன் அம்மையாரை கேள்வி கேட்கப் பிடிக்கவில்லை. அம்மையார் ஆட்சி செய்த போதும் இதே கதை தான். கருணாநிதி பன்னாததையா அம்மையார் பண்ணினார் என்று உங்களது..... உங்களுது நோக்கம் எப்பவும் அம்மையாரை கேள்வி கேட்கக் கூடாது. அப்படித்தானே?
ReplyDeleteநான் எந்த கட்சியும் கிடையாது. எனக்கு இந்தியாவில் ஓட்டும் கிடையாது.
///நாகை சிவா said... உமாசங்கரின் செயல்பாடுகள் பிடிக்கும் இருந்தும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியாமல் இருப்பதன் முக்கிய காரணமே திமுக மீது இருக்கும் கண்மூடித்தனமான ஆதரவு தானோ என எண்ண தோன்றுகிறது.//
தவறு. நீங்கள் சொல்வது உண்மை இல்லை. கருணாநிதி பண்ணியது தப்பு என்று நான் ஒத்துக் கொள்கிறேன். அதை மறுக்க வில்லை. அனால் நீங்கள் எப்பொழுது அம்மையாரை கேள்வி கேட்கப் போகிறீர்கள்? நான் கருணாநிதி ஜால்ரா என்று சொல்லி ஓடி தப்பித்து கொள்ளவேண்டாம். முழு மொட்டை பத்திரிக்கையும் ஜலமலம் பத்திரிக்கையும் அதைத்தான் காலம் காலமாக் செய்து கொண்டு உங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது. நான் மூன்று பாகமாக கேட்ட கேள்விகளுக்கு (இரண்டு நாள் முன்பு) எப்ப பதில். முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள்.
Contd...below...as part 2
Part 2...//Anonymous said... அதிமுக ஒழிக, அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் மகிழ்ச்சியா.அபிஅப்பாவுக்கும் உடன்பிறப்புக்கும் திமுக காசு கொடுக்கும் எனக்கு (எல்லாத்துக்கும்) என்ன கொடுக்கும்?//
ReplyDeleteஅபி அப்பா காசு வாங்கினதை நீங்கள் பார்த்தீர்களா? ஒருத்தர் ஒரு கேள்வி கேட்டால் அதற்க்கு பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு....அப்பொழுது உங்களுக்கு அம்மையார் உங்களுக்கு காசு கொடுத்தார என்று கேட்கலாமா? ஆனால் கேட்க மாட்டேன். ஏன்? இதைத்தானே முழு மொட்டை பத்திரிக்கையும் ஜலமலம் பத்திரிக்கையும் விவாதத்தை திசை திருப்ப காலம் காலமாக் செய்து கொண்டு உங்களை ஏமாற்றிக்க் கொண்டு இருக்கிறது. நான் மூன்று பாகமாக கேட்ட கேள்விகளுக்கு (இரண்டு நாள் முன்பு) எப்ப பதில். முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள்.
//ramalingam said... ..உங்களைப் போன்றவர்களின் கண்மூடித்தனமான விசுவாசமே கட்சிகளின் தைரியத்துக்குக் காரணம்.//
இதைத்தானே முழு மொட்டை பத்திரிக்கையும் ஜலமலம் பத்திரிக்கையும் விவாதத்தை திசை திருப்ப காலம் காலமாக செய்து கொண்டு உங்களை ஏமாற்றிக்க் கொண்டு இருக்கிறது. நான் மூன்று பாகமாக கேட்ட கேள்விகளுக்கு எப்ப பதில். முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுகள்.
Contd...below...as part 3
part 3....///ஈரோடு கோடீஸ் said...இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு.///
ReplyDeleteஎன்ன சொல்லுகிறீர்கள்? உங்கள் கூற்றுப்படி அம்மையார் அவரை சரியாக குற்றம் சாத்தி உள்ளார்கள். அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள். அது உலகத்திற்கே தெரியும்! நிசமாலும் குற்றம் செய்த உமா சங்கரை கருணாநிதி அரசு, அவரது கேசுகளை தள்ளுபடி செய்து, அவரை விடுவித்தது. கருணாநிதி செய்து மாபெரும் தவறு. இது மன்னிக்க முடியாத தவறு தான் அதுவும் ஒரு ஊழல குற்றவாளியை (அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள்) கருணாநிதி விடுவித்து தவறு என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆகவே கருணாநிதி ஒழிக! . ஒழிக!! அப்படியே ஊழல குற்றம் செய்த உமா சங்கரும் ஒழிக. நான் அம்மாவை நம்புகிறேன். அவர்கள் உமா சங்கர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மை. உண்மை. ...
ஆகவே உங்கள் கூற்றுப்படி ஒரு ஊழலவாதி உமா சங்கருக்கு (அம்மா கூற்றுப்படி) உங்களது அதரவு தேவையா??????? இது உங்களுக்கு வேன்டாத வேலை. அம்மா குற்றம் சாட்டிய ஊழலவாதி உமா சங்கருக்கு கொடுக்கும் உங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள். செய்வீர்களா?
அம்மா எப்பவும் எதுவும் சரியாகத்தான் செய்வார்கள்.....
///rouse said...Hi abiappa-DMK Party man///
///நாகை சிவா said...கட்சியின் அபிமானி அதனால் அக்கட்சி எந்த தவறு செய்து இருந்தாலும் அவர்களே பக்கமே பேசுவேன் என்ற விதாண்டவாதமாக தான் உங்கள் பதிவு தோணுகிறது.///
மேற்சொன்ன பதில்கள் தான் உங்களுக்கும்.
பன்னீர்செல்வங்களிடம் இருந்து நேர்மையான பதிலை எதிர் பார்க்கலாமா?
part 3....///ஈரோடு கோடீஸ் said...இரு முறையும் எதிர்கட்சிகள் குற்றச்சாட்டைத்தான் திமுக அரசு தள்ளுபடி செய்தது. இம்முறை கதை வேறு.///
ReplyDeleteஎன்ன சொல்லுகிறீர்கள்? உங்கள் கூற்றுப்படி அம்மையார் அவரை சரியாக குற்றம் சாத்தி உள்ளார்கள். அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள். அது உலகத்திற்கே தெரியும்! நிசமாலும் குற்றம் செய்த உமா சங்கரை கருணாநிதி அரசு, அவரது கேசுகளை தள்ளுபடி செய்து, அவரை விடுவித்தது. கருணாநிதி செய்து மாபெரும் தவறு. இது மன்னிக்க முடியாத தவறு தான் அதுவும் ஒரு ஊழல குற்றவாளியை (அம்மா எப்பொழுதும் உண்மையாகத்தான் செயல் படுவார்கள்) கருணாநிதி விடுவித்து தவறு என்று நான் ஒத்துக் கொள்கிறேன். ஆகவே கருணாநிதி ஒழிக! . ஒழிக!! அப்படியே ஊழல குற்றம் செய்த உமா சங்கரும் ஒழிக. நான் அம்மாவை நம்புகிறேன். அவர்கள் உமா சங்கர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மை. உண்மை. ...
ஆகவே உங்கள் கூற்றுப்படி ஒரு ஊழலவாதி உமா சங்கருக்கு (அம்மா கூற்றுப்படி) உங்களது அதரவு தேவையா??????? இது உங்களுக்கு வேன்டாத வேலை. அம்மா குற்றம் சாட்டிய ஊழலவாதி உமா சங்கருக்கு கொடுக்கும் உங்களது ஆதரவை விலக்கிக் கொள்ளுங்கள். செய்வீர்களா?
அம்மா எப்பவும் எதுவும் சரியாகத்தான் செய்வார்கள்.....
///rouse said...Hi abiappa-DMK Party man///
///நாகை சிவா said...கட்சியின் அபிமானி அதனால் அக்கட்சி எந்த தவறு செய்து இருந்தாலும் அவர்களே பக்கமே பேசுவேன் என்ற விதாண்டவாதமாக தான் உங்கள் பதிவு தோணுகிறது.///
மேற்சொன்ன பதில்கள் தான் உங்களுக்கும்.
பன்னீர்செல்வங்களிடம் இருந்து நேர்மையான பதிலை எதிர் பார்க்கலாமா?
ஏன் யாருமெ அவர் மீதானா குட்ரசாட்டை குறித்து பேச மாட்டேன் என்கிரீர்கள்
ReplyDeleteஆறுமுகம்
//ஏன் யாருமெ அவர் மீதானா குட்ரசாட்டை குறித்து பேச மாட்டேன் என்கிரீர்கள்
ReplyDeleteஆறுமுகம்///
ஆறுமுகம் ஐயா:
கட்டாயம் பேசுவோம்! நாம அதைப் பேசணும். அப்படியே அம்மா அவர் மீது சுமர்த்தின குற்றச்சாட்டையும் பற்றியும் பேசணும். அது தான் எனது கோரிக்கை. அது தான் தர்மமும் கூட.
அனால் இங்கு உள்ளவர்கள் கொள்கை என்ன வென்றால் எக்காரனத்தைக கொண்டும் அம்மா உமா சங்கர் மீது பதிவு செய்த ஊழல குடசாடுப் பற்றி பேசமாட்டோம் என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறார்கள்.
இரண்டில் ஒன்று தான் உண்மை:
1). ஒன்று உமா சங்கர் ஊழல்வாதி. பொய்யர்...
2). அல்லது அம்மா உமா சங்கர் மீது பொய்யாக குற்றம் சாததியிருகிறார். அப்ப அம்மா பொய்யர்...
இதில் ஒன்று தான் உண்மை. இதில் எது உண்மை என்று என்று முதிலில் விவாதிப்போம். மற்றவை உள்ளங்கை நெல்லிக்கனி போன்று நமக்கு தானேகவே விளங்கி விடும்.
இதை விவாதிப்போமா? பன்னீர்செல்வங்களே??
Come to the present world. we cannot blame the people from before B.C. Now they are doing wrong, so we have to protest against them. I agree valpaiyan point of view.
ReplyDeleteThanks
Sangamithra
Part 1:
ReplyDeleteஎன் நண்பர்களே! என் ரத்தத்தின் ரத்தங்களே!!என் உடன் பிறப்புகளே!!!
I may not be writing in blogs for another, at least, 3 months, as I will be away for an important assignment...out of my country. Please do not try to tag me with my IP number and MAC address; one can easily fool these things. You know that. BTW, I don't care about these stupid IP address and MAC address, router address, etc. Because I live in a country where we have extra ordinary freedom of speech and expression. This is NOT India!
At this juncture, I wish to add that I have great respect for Mr. Uma Sankar, IAS for his work in the past. However, it does not absolve him of his indiscretions (It is not uncommon to have indiscretions in life; all of us have). I strongly believe that Uma Sankar, IAS, is one among the best IAS officers in Tamil Nadu. No two opinions on this. I have to take a stand against him because he has also fallen a prey to வர்னாஸ்ரமம். He joined hands with them. He totally forgot that he is what he was because of his...And he deserves every thing now, and what he would be getting in future...Sorry, Uma...Sincere apologies...You made several mistakes in your life though you are a good IAS Officer.
Uma Sankar IAS, சாதாரண குழியில் இருந்தது புதை குழியில் சிக்கி இருக்கிறார். இவ்வளவு படித்து என்ன பயன். எவனோ மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை "Affidavit" ஐ File செய்து இருக்கிறார். இவர் Affidavit - ஐ படிக்கும் பொழுது நன்றாகத் தெரிந்தது. ஒரு விசிலடிச்சான் குஞ்சு (அதான் நமது சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பெயர்) தான் அவரை represent பண்ணி இருக்கிறார் என்று.
Contd..below..as part 2...
Contd..from Part 1 above...
ReplyDeleteUma Sankar IAS, தனக்கு தானே குழி நோன்டிக்கொண்டர். அதற்க்கு ஒரு ஒரு விசிலடிச்சான் குஞ்சு Affidavit support ஒரு மிகப் பெரிய காரணம். என்ன எழவை வேண்டுமானாலும் Affidavit- வில் எழுத்கக் கூடாது. மறுபடியும், Uma Sankar IAS, தனக்கு தானே குழி நோன்டிக்கொண்டர்.
Uma Sankar IAS, because of his affidavit (as defined under oath) cannot disown what he presented to the Court. More importantly, he is an IAS Officer. He may not be excused for any errors as he is in the top one percentile of the population; education and knowledge wise. Every thing else pales into insignificance because he is a Rule-Maker. Period. Courts would not excuse him.
நீங்கள் யார்? மேல் ஜாதியா? எப்படி பல்டி அடிச்சாலும் கோர்ட் ஒத்துக் கொள்வதிர்க்கு? உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்காது இந்தியாவில்...
Uma Sankar IAS, சாதாரண குழியில் இருந்தது புதை குழியில் சிக்கி இருக்கிறார்....because of his Affidavit.
If it is required, I would provide some inputs to this case...
Bur for now!
என்றும் உங்களுடைய அன்புள்ள
ஆட்டையாம்பட்டி அம்பி!?
அபிஅப்பா...அபிஅப்பா..!உங்களுக்கும் தருமிக்கும் ஒன்னு சொல்லுறேன் உமா சங்கர் தலித்தும் இல்லே நேர்மையான அதிகாரியும் இல்ல...அந்த மனிதன் ஒரு ஃப்ராடு....சின்னவயசுலேயே கிருஸ்துவ மத்தத்துக்கு மாறிட்டான் அதை மறைச்சி உண்மையான ஒரு தலித்துக்கு கிடைக்கவேண்டிய ஏமாற்றி பறிச்சி ஐ ஏ எஸ் ஆயிட்டான்.அப்படி இருக்கும்போது அவன் எப்படி நேர்மையான மனிதனாக இருப்பான்...?????
ReplyDeleteIt's awesome to pay a visit this website and reading the views of all colleagues about this post, while I am also eager of getting know-how.
ReplyDeleteLook at my site - BizMaC.com.vn - Thiet ke website doanh nghiep