பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 21, 2010

இன்று பார்த்த அபியும் நானும் திரைப்படம்!!!

நல்ல மழை! சுற்றியும் நல்ல குளிர் காத்து. ஊரே அமைதியா இருக்கு. எல்லோரும் காலி பன்ணிட்டு எங்கயோ போயிட்டாங்க மாதிரி அப்படி ஒரு அமைதி. ஒரு சோபா இழுத்து டிவி கிட்டே போட்டு கிட்டு காலை டிவி இருக்கும் மேசையில் உதைந்து கொண்டு அபி.

"என்னம்மா படிக்கலையா?"

"இல்லை"

"நான் படிக்கும் காலத்திலே எங்க அப்பா இப்படி கேட்டா நாங்க பயந்து போய் படிக்க ஆரம்பிப்போம். ஈவன் கணிதம் போட்டு பார்க்கனும்னா கூட பார்முலாவை சத்தம் போட்டு படிப்போம்"

"ரொம்ப போலியா இருந்திருக்கீங்க. அஃப்கோர்ஸ் தாத்தாவும் அதை எதிர்பார்த்திருக்காங்க"

"ம் இருக்கலாம். ஆனா உனக்கு படிக்கலையான்னு கேட்டப்ப பயமா இல்லியா?"

"ஒய் எதுக்கு பயம். நான் தான் படிச்சுட்டனே படிக்க வேண்டியதை. தவிர ஹோம் ஒர்க் கூட முடிச்சுட்டேனே"

"ஒரு வேளை படிச்சிருக்காம இருந்தா அப்ப இப்படி டிவி பார்க்க உட்காரும் போது நான் அப்படி கேட்டிருந்தா நீ பயப்பட்டு இருப்பியா?"

"நோ நோ மாட்டேன். எனக்கு இன்னிக்கு இந்த படம் இப்படி பார்க்க ஆசையா இருந்துச்சு. மழை, குளிர், சோபா, கிட்டக்க டிவி, பக்கத்திலே அப்பா, போத்திக்க போர்வை, திங்க சீடை எல்லாத்துக்கும் மேல கலைஞர் டிவில "அபியும் நானும்'படம்"

"ஓ காட். இன்னிக்கு அபியும் நானும் படமா? நான் கூட அந்த படம் உன்னோட பார்க்க ஆசைப்பட்டேன். தேங் காட்"

இப்படியாக நாங்க பார்க்க ஆரம்பிச்ச படம்....இதோ மழை கொட்டி தீர்க்குது. ஒரே போர்வையில் நாங்க குடும்பத்தோட (அதிலே மடியிலே நட்டுவின் தூக்கம்)....ரொம்ப நல்லா இருக்கு படம்....

இதோ அபி தேயிலை தோட்டத்திலே விழுந்துட்டா. ஜோகிகிட்ட(யோகி இல்லை ஜோகி ஜோகி) பிரகாஷ்ராஜ் கோவிச்சுக்கறார்......

இதோ விளம்பரம் ஓடுது. எங்க கிட்ட ஒருவித அமைதி.....

படம் நல்லா இருக்குதேன்னு நினைச்சுகிட்டே விளம்பரம் பார்க்க அதில் மனது ஒட்டவேயில்லை. படத்தின் ஆரம்பம் முதலே நினைத்து பார்த்து கொண்டேன்.

அதில் வருவது போல நான் அபி பள்ளி செல்ல அத்தனை பிரயத்தனப்பட்டேனா என்றால் இல்லை தான். ஆனா அபிஅம்மா பட்டது ரொம்ப கஷ்டம். சிதம்பரம் அண்ணாமலை நகரில் பஸ் பிடிச்சு அபியை தூக்கிகிட்டே பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து நிர்மலா பள்ளிக்கு விட்டு விட்டு அங்கிருந்து நடந்து நடராஜர் கோவில், பின்ன அங்க இருந்து நடந்து நிர்மலா பள்ளி சர்ச் வாசலில் பின்னர் அபியை தூக்கிகிட்டு பேருந்துநிலையம் பின்னர் அண்ணாமலைநகர்...இப்படியாக ஒரு நாள் என்னை செய்ய சொல்லியிருந்தா அதல்லாம் முடியாது அபியை பத்தி பத்து பதிவு எழுத சொன்னால் ஜஸ்ட் லைக் தட் பாசம் சொட்ட சொட்ட எழுதி "சபாஷ்" வேண்டுமானா வாங்குவேன் ஆனா இப்படி கஷ்ட்டபட மாட்டேன் என சொல்லியிருப்பேனோ என்னவோ.

குழந்தை கையிலே வென்னீர் ஊத்திப்பது....அதல்லாம் நடந்தது. அது போல பலவிஷயங்கள் நடந்தது. ஆனால் என்னை அந்த படத்தின் அபிஅப்பாவை ஒப்பிட்டு பார்த்த போது தான் கிட்ட தட்ட அந்த அபிஅப்பாவும் ஒருவிதமான அதாவது தான் பாசமாக இருப்பதை விட "இவன் எத்தனை பாசம் வைத்திருக்கான் பாருன்னு இந்த உலகம் தன்னை பார்த்து சொல்ல வேண்டும் அல்லது அபி தன்னை தவிர யாரிடமும் பாசம் காட்டிவிட கூடாது என்கிற ஒரு மாதிரியான பொசசிவ்நெஸ்தனம் தான் புரிந்தது.இது ஒரு வித மனோவியாதியோ எனக்கூட நினைத்து கொண்டேன்.

மழை இன்னும் பெய்கிறது. மெல்ல அபி என்னிடம் திரும்பி "அப்பா இந்த விளம்பர நேரத்தில் சாப்பிட்டுறீங்களா? என கேட்டாள்.

"ஆக்சுவலி அபி இந்த படம் பார்க்கும் போதாவது நான் உன்னை பார்த்து சாப்பிடுறியாப்பான்னு கேட்டிருக்கனும் இல்லம்மா. உனக்கு தான் என் மேல இத்தனை பாசம் எனக்கு அத்தனை இல்லியோ"

"அதான் சொன்னனப்பா நீங்க ஆரம்பத்திலே இருந்தே ஒரு வித போலியாவே வாழ பழகிட்டீங்க இல்லாட்டி தாத்தா, பாட்டிகிட்ட பயந்த மாதிரி நடிச்சு நடிச்சே இருந்துட்டீங்க.அதுவே உங்க குணமாகிடுச்சு. இப்ப கூட உங்களை சாப்பிட சொன்னது பின்னே படம் போட்டவுடன் நீங்க சாப்பாடு கொடுன்னு டிஸ்டர்ப் செய்ய கூடாதுன்னு தான்"


எனது மனைவியிடம் இருந்து மெல்லிய புன்னகை வந்தது. அத்தனை குளிரிலும் எனக்கு நெற்றி வியர்த்தது. என் மனைவி பக்கம் திரும்பி "இவ என் சின்ன அக்கா மாதிரி. மனசிலே வச்சுக்க தெரியாது. பட்டு பட்டுன்னு உடைச்சிடுவா" என ஏதோ உளறி வைத்தேன்.

கொஞ்ச நேரம் படம் ஓடிய போது அபியை திரும்பி பார்த்தேன்.பிரதமரிடம் போனில் பேசும் காட்சி. அபி ஏதோ சிந்தனை. 'என்னப்பா சிந்தனை?"ன்னு கேட்டப்ப "அப்பா சிவில் சர்வீஸஸ் பிரில்லிமினரி ரிசல்ட் வந்தாச்சு. அக்டோபர் மெயின் எக்ஸாம்.ஆண்டி இப்ப பிரில்லிமினரி மாதிரி அதிலயும் பாஸ் பண்ணனும். அதுக்கு ரொம்ப ஹார்ட் வர்க் பண்ணனும்"....

"ஓ அபி, படம் பிடிக்கலையா?"

"நோ நோ படம் பிடிச்சு இருக்கு.ஐ ஏ எஸ் ஆகிட்டா இது மாதிரி ப்ரைமினிஸ்டர் கிட்ட எல்லாம் பேசலாம்"

அவள் மனசு படத்தில் அத்தனை ஒட்டலை என புரிந்தது. ஏதோ ஒரு போலித்தனம் படத்தில் இருப்பதை நானும் உணர்ந்தேன். ஆனா எடுக்கப்பட்ட விதம் நல்லா இருந்துச்சு.

படம் கிட்டதட்ட முடியும் தருவாய். ஏர்போர்டில் தன் மகளை பிரியும் அந்த காட்சியில் ஒரு மாதிரி எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது. என் மனைவி எழுந்து ரூம் பக்கம் போய்விட அந்த காட்சி நன்றாக இருந்தது. பக்கத்தில் பார்த்தேன். அபி என் மடியில் தூங்கிவிட்டிருந்தாள். தலையை நகர்த்தி விட்டு ரூம் பக்கம் போனேன். என் மனைவி கண்ணில் ஈரம். எனக்கு தான் எந்த வித உணர்வும் இல்லை. கொஞ்சம் புரிந்தது. உண்மையான பாசம் என்றால் அந்த படத்தில் வரும் அபிஅம்மா மாதிரி பெண்ணின் மனசு புரிஞ்சுக்கனும், பிரியும் போது அப்போது தான் கண்ணில் தண்ணீர் வரும். இன்னும் என்னென்னவோ புரிந்து தொலைத்தது.

மழை விட்டிருந்தது. படத்தின் பெயரை "அபியும் அபிஅம்மாவும்"ன்னு வச்சிருக்கலாமோன்னு நினைச்சுகிட்டேன்.

12 comments:

  1. //மழை விட்டிருந்தது. படத்தின் பெயரை "அபியும் அபிஅம்மாவும்"ன்னு வச்சிருக்கலாமோன்னு நினைச்சுகிட்டேன். /

    :(( ஆமாம் அதான் சரி உங்களை மாதிரி வெளிநாட்ல வேலையை/காலத்தை கழிச்சவங்களுக்கு குற்றவுணர்வு நிறையா இருக்கு!


    டோண்ட் ஒர்ரி கவலைப்படாதீங்க இப்பத்தான் ஊருக்கு வந்தாச்சுல்ல! அப்புறம் என்ன ! :)

    ஹாப்பியா இருங்க அண்ணே!

    ReplyDelete
  2. யப்பா...எங்க படத்தை பத்தி ஒரே புகழ்ந்து அழுகாச்சியாக எழுதியிருப்பிங்களோன்னு நினைச்சிக்கிட்டே வந்தேன்..;)))

    அப்பா+மகள் உறவை சொல்லும் மிக சிறந்த மொக்கை படம் இந்த படம் தான் ;))

    ReplyDelete
  3. படத்தின் கதையை உங்கள் குடும்பதோடு ஒப்பிட்டு ... ம்ம் .........

    சரி, அபி கடைசியில கிளைமாக்ஸ் பாத்துச்சா இல்லயா??

    ReplyDelete
  4. வாப்பா ஆயில்ஸ்! ஆமாம், வெளிநாட்டு வாழ்க்கையில் இழந்தது இதுவும் முக்கியமான ஒன்று தான்!!

    @ கோபி! என்னாச்சு அந்த படத்தின் மீது அத்தனை ஒரு கோவம். எனக்கு அந்த படத்தின் மீது அத்தனை ஒரு ஈடுபாடு இல்லியே தவிர படம் மொக்கைன்னு சொல்லும் அளவு இல்லைதானே!

    @யோகேஸ்வரா! அபி மட்டுமல்ல நானும் ஏற்கனவே படத்தை பார்த்தாச்சு. ஆனா அபிஅம்மா தான் இப்ப பார்க்கிறாங்க.

    ReplyDelete
  5. அட, எனக்காகவே ஒரு குறிப்பு போட்டிருக்கப்ப கருத்து சொல்லாம போனா நல்லா இருக்காது. இந்தப்படத்தை மூணு தடவை பார்த்ததற்கு அப்புறம்தான் உணர்ச்சி வசப்படாமல் பார்க்க முடிந்தது. நீங்க கடைசியாக சொன்ன தலைப்பும் பொருத்தம்தான்.
    கந்தசாமி

    ReplyDelete
  6. இந்தப் படம், ஒரு அப்பாவின் பாசத்தை காட்டும். அதே சமயம் இந்தக் காலத்து பெண்கள் எவ்வாறு பெற்றவர்களை உதாசீனப் படுத்துகின்றனர் என்பதையும் காட்டும்

    ReplyDelete
  7. அபியும் நானும்- பார்ட் டூ. அருமை:)!

    ReplyDelete
  8. LK சொல்றது சரியா?

    அபி மாதிரி பிள்ளைகள். மக்குகளாக இன்னும் அப்பாக்கள் ...

    ReplyDelete
  9. அபி அப்பா!
    திரைப்படத்தோடு உங்கள்
    வாழ்க்கையை ஒப்பிட்டு
    எழுதியுள்ளீர்கள்.
    உண்மையைச் சொன்னதற்குப்
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. //"அபியும் அபிஅம்மாவும்"//

    இதான் சரி!! அம்மாக்கள்தான் அதிகளவில் சிரமப்படுகிறார்கள் குழந்தை வளர்ப்பில்.

    இந்தப் படம் என்னைப் பொறுத்தவரை இளையவர்கள் தமக்கான முடிவை பெரியவர்களை அலட்சியப்படுத்திவிட்டு தாமே எடுப்பதை (கல்யாண தேதி வரை!!) நன்றாக விளக்கியிருந்தது. அதில் வேறொன்றும் விசேஷமில்லை!!

    ReplyDelete
  11. //இந்தப் படம் என்னைப் பொறுத்தவரை இளையவர்கள் தமக்கான முடிவை பெரியவர்களை அலட்சியப்படுத்திவிட்டு தாமே எடுப்பதை (கல்யாண தேதி வரை!!) நன்றாக விளக்கியிருந்தது. அதில் வேறொன்றும் விசேஷமில்லை//

    repeatttttuuuu

    ReplyDelete
  12. ரெம்ப அழகான பதிவு... மனதை மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதி இருக்கீங்க... நல்லா இருக்கு... கடைசியா சொன்னது தான் சூப்பர் ... //படத்தின் பெயரை "அபியும் அபிஅம்மாவும்"ன்னு வச்சிருக்கலாமோன்னு நினைச்சுகிட்டேன்//

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))