பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

April 30, 2007

ஒரு சீரியஸ் பதிவு!!

நான் சாதாரணமா சீரியஸ் பதிவெல்லாம் எழுதுவது இல்லை. ஆனா இன்று வெட்டி தம்பி காதல் படத்துல வர்ர மாதிரி "உங்ககிட்ட இருந்து நான் இன்னும் எதிர் பார்க்கிறேன். சீரியஸ் பதிவு ஒன்னு போடுங்க"ன்னு உசுப்பேத்தி விட்டுட்டார். சரி எழுதிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். ஆக இந்த பதிவு வெட்டி தம்பிக்கு பரிசு.

ஒரு நாள் குரங்கு ராதா போன் பண்ணினான். "மாப்பி எங்கியும் போயிடாத நான் அங்கே வர்ரேன்"ன்னு சொன்னான். "சரி வாடா"ன்னு சொல்லிட்டு ரொம்ப நேரம் காத்திருந்தேன். ஆள் வர்ர மாதிரி தெரியலை. அவன் வர்ரதா சொன்ன நேரம் மாலை 3.00 ஆனா வந்ததோ 6.00.

எந்தா லேட்டுன்னு கேட்டப்போ "ஒரு ஆக்ஸ்டெண்ட் அதான் லேட்டு"ன்னு சொன்னான். "நீ எதுக்கு ஆக்ஸிடெண்ட் வேடிக்கை பாத்துகிட்டு நின்ன"ன்னு கேட்டதுக்கு "ஆக்ஸிடெண்ட் ஆனதே நான் வந்த வண்டிதான்"ன்னு சொன்னான்.

நான் பதறி போய் "எப்டிடா ஆச்சு"ன்னு கேட்டதுக்கு அவன் "என் கம்பெனி ஆம்புலன்ஸ்ல டாக்டர் உன் ஏரியா வழியா போறதா சொன்னார். நான் அவர் கிட்ட லிப்ட் கேட்டு அதிலே தான் வந்தேன். வர்ர வழியில இந்த ரெக்கவரி வண்டி தெரியும்ல அதான் ஆக்ஸிடெண்ட்ல மூஞ்சி கிழிஞ்ச காரை தூக்கிட்டு போகுமே அந்த ரெக்கவரி வண்டில பின்னால வந்த ஒரு போலீஸ் வண்டி பயங்கரமா மோதிட்டுது. மோதின வேகத்துல அந்த வண்டி முன்னால போய்கிட்டு இருந்த எங்க ஆம்புலன்ஸ்ல மோதி ஆப்புலன்ஸ் ஒரு சுவத்துல மோதிஒரே கலேபரம் ஆகிடுச்சு.இதிலே என் வண்டில இருந்த டாக்டர் மண்டை டமால் ஆகிடுச்சு"ன்னு சொன்னான்.

அப்புரம் என்னடா ஆச்சுன்னு கேட்டப்ப அவன் "பின்ன என்ன அந்த போலீஸ் வண்டில இருந்த போலீஸ் வேற போலீஸ்க்க்கு போன் பண்ணார், ஆக்ஸிடெண்ட் ரிப்போர்ட் எழுத. ரெக்கவரி வண்டி டிரைவர் அவர் கம்பெனிக்கு போன் பண்ணார் இந்த பேக் கிழிஞ்ச வண்டிய தூக்கிகிட்டு போக வேற ரெக்கவரி வண்டி கேட்டு. என் கூட வந்த டாக்டர் ஆஸ்பிடல்க்கு போன் பண்ணார் அடுத்த ஆம்புலன்ஸ் வித் டாக்டருக்கு.

அடுத்த 10 நிமிஷத்துல போலீஸ் வண்டி வந்துச்சு இந்த போலீஸ் வண்டி மேல தப்புன்னு ரிப்போர்ட் எழுதுச்சு. வந்த ரெக்கவரி வண்டி மேல இந்த ரெக்கவரி வண்டி ஏறிகிட்டு போச்சு. புதுசா வந்த ஆம்புலன்ஸ்ல இருந்த டாக்டர் என் கூட வந்த டாக்டருக்கு ஃபஸ்ட் அய்டு பண்ணி தூக்கி அந்த ஆம்புலன்ஸ்ல தூக்கிட்டு போனாங்க"ன்னு சொன்னான்.

இதை அவன் எனக்கு சொன்னப்ப ஒன்னும் தோனலை. பின்ன ஒருநாள் யோசிப்புல என்னென்னவோ தோனிச்சு!!! சரின்னு சிரிச்சு வச்சேன். எனக்கு தெரியல் இது காமடி பதிவா? மொக்கை பதிவா? ஆக்ஸிடெண்ட் பத்தினதால சீரியஸ் பதிவா? கொஞ்சம் பிரிச்சு மேஞ்சா நல்லாயிருக்கும் மக்கா!

April 26, 2007

தல கைப்ஸுக்கு பிச்சு, கிச்சு &அபிபாப்பா வச்ச ஆப்பு!!!

திஸ்கி: முதல்ல வ.வா.ச முதலாம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்! நமக்கு பரிசெல்லாம் குடுத்த சிங்கங்கள் எல்லாருக்கும் நான் ஏதாவது குடுத்தே ஆவனும்ன்னு நாகைபுலி சிங்கத்தை கேட்டேன். எது குடுத்தாலும் எனக்குதான் பஸ்ட்டு, என்ன கொடுக்க போறீங்கன்னு கேட்டார். நான் "வேற என்ன ஆப்புதான்"ன்னு சொன்னேன். அதுக்கு புலி"எனக்கு 105 பதிவ படிச்சதுல கண்ண கட்டுது, எங்க தல ஃப்ரீ தான். நீங்க அவர் கிட்ட குடுத்துடுங்க"ன்னார். என்ன உஷார் பாத்தீங்களா மக்களே. பின்ன வெட்டிதம்பிகிட்ட கேட்டேன். உங்க தலக்கு ஒரு ஆப்பு வைக்கவான்னு. அதுக்கு அவர் "தாராளமா"ன்னு அவர் தாராள குணத்தை காமிச்சார். அதனால தான் ஹி ஹி :-)

*******************************


அபிபாப்பாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். இன்னிக்கு ஆட்டோகார் ஏதோ கல்யாணத்துக்கு போகனும்ன்னு லீவ் போட்டுட்டார். அதனால ஸ்கூல் போகாம லீவ் போட்டுட்டு ஜாலியா டைகரோட விளையாடலாம்ன்னு இருந்த போது தங்கமணி பாப்பாவை பாத்து "அபி, கண்மணி ஆன்டி போன் பண்ணாங்க. உங்க ஆட்டோ தான பிச்சுவும் கிச்சுவும் அதனால கண்மணி ஆன்டி வேற ஆட்டோ அரேஞ் பண்ணிட்டாங்களாம். நீயும் அந்த ஆட்டோல ஸ்கூலுக்கு போ"ன்னு சொல்ல "பெரிய இம்சைம்மா இந்த கண்மணி ஆன்டியோட"ன்னு சலிச்சுகிட்டே கிளம்பினா.

*****************************
தல கைப்புள்ள ஆட்டோ டிரைவர். காலைல எழுந்து நல்ல புள்ளயா குளிச்சு பட்டையெல்லாம் போட்டுகிட்டு அம்மா அப்பா கால்ல்ல் விழுந்துட்டு சூடம் கொளுத்தி காமிச்சுட்டு அம்மாவை எதிர்க்க நிக்க வச்சுட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணி பேரட்ண்ஸை பாத்து "சாயந்திரம் 6.00 மணிக்கு வருவேன்"ன்னு அன்பா சொல்லிட்டு கெளம்பி அபிபாப்பா வீட்டுக்கு வந்தார்.

அபிபாப்பா ரெடியா இருந்தா. தல கைப்புள்ள வந்ததும் ஆட்டோல ஏறிகிட்டா.

வாம்மா அபிபாப்பா எங்க போகனும்?

ம்...சினிமாவுக்கு போவனும் - இது அபிபாப்பா

ஆஹா எடக்கு மடக்கா பேசுதே வந்து மாட்டிகிட்டோமோ சரி சின்ன புள்ளதான சமாளிச்சிடலாம்ன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே அபிபாப்பா "ஸ்கூல் ஊனிஃபார்ம் போட்டிருக்கேனே எங்க போவனும்ன்னு கேட்டா இப்டிதான் பதில் வரும் வெள்ரு"ன்னு சொல்ல கைப்ஸ் "அதுக்கில்ல பாப்பா எந்த ஸ்கூலுக்கு போகனும்ன்னு கேட்டேன்"ன்னார். அதுக்கு பாப்பா "நீங்க நம்ம ஊருதானே இந்த யூனிஃபார்ம் எந்த ஸ்கூல்ன்னு தெரியாதா?"ன்னு கேக்க கைப்ஸ் கொஞ்சம் கலங்கிதான் போயிட்டார்.சரின்னு பாப்பாவை ஏத்திகிட்டு கண்மணி வீட்டுக்கு வந்தார். அங்க பிச்சுவும் கிச்சுவும் ஏறிக்க வண்டிய கெளப்பிட்டார்.

எதுக்கு வம்பு சமாதானமாயிடுவோம்ன்னு "பாப்பா உனக்கு என்ன பிடிக்கும்"ன்னு கைப்ஸ் கேக்க அதுக்கு கிச்சு "அங்குள் அவளுக்கு காத கடிச்சு துப்ப ரொம்ப பிடிக்கும்"ன்னு சொன்னான். ஆஹா இன்னிக்கு ஆப்பு வக்காம வுடமாட்டாய்ங்க போலயிருக்கேன்னு மனசுகுள்ள திங் பண்ணிகிட்டு "மாப்பீஸ் நீங்களாவது சொல்லுங்கப்பா எங்கிட்டு போவனும்ன்னு"ன்னு கேக்க பிச்சு ஸ்கூல் பேர சொல்லி"அங்குள் கொண்டு போய் விட்டுட்டு அழைச்சிகிட்டு வந்து வீட்ல விட்டுடனும்"ன்னு சொன்னான்.

உடனே கைப்புள்ள மனசுகுள்ள ஆஹா இன்னிக்கு நாள் சவாரி கிடச்சிடுச்சே, சரி இன்னிக்கு பசங்கள கொண்டு போய் விட்டுட்டு ஒரு ஒரமா ஸ்கூல்ல படுத்து தூங்கிட்டு சாயந்திரம் கொண்டு விட்டுட்டு 6 மணிக்கு நம்ம டாஸ்மாக் போயிட்டு வீட்டுக்கு போயிடலாம், பசங்க கிட்ட 300ரூபா தீட்டிட வேண்டியதுதான் இந்த கைப்புள்ளயும் ஸ்கூலுக்கு போனான்ன்னு சரித்திரத்துல வரட்டும்ன்னு நெனச்சுகிட்டு "பசங்களா குச்சி டப்பால எவ்ளோவ் பணம் இருக்கு"ன்னு கேக்க அதுக்கு பிச்சு"எல்லார் கிட்டயும் 300 ரூபா இருக்கு அங்குள்"ன்னு சொன்னான். அது ஸ்கூல் பீஸ் பணம்ன்னு பாவம் கைப்ஸ்க்கு தெரியாது!

ஸ்கூல்ல போன பின்ன மொதோ 1 மணி நேரத்துல தலக்கு போர் அடிச்சதால அங்க தோட்டகாரர்க்கு, மணி அடிக்கிறவர்க்கெல்லாம் உதவி செய்ய ஆரம்பிச்சுட்டார். அதை பாத்துட்டு PT சார் "யோவ் இங்க வாய்யா நீ புதுசா"ன்னு கேக்க "இல்லீங்க அரத பழசு"ன்னு கைப்ஸ் சொன்னார். அதுக்கு PT சார் "அட அதில்லய்யா நீ அப்ரண்டிசா"ன்னு கேட்டார்.

நம்ம கைப்ஸ் அதுக்கு "ஹைய்யோ ஹைய்யோ..நானு அப்புரண்டீஸ் இல்ல சார் எங்கிட்டதான் அப்புரண்டீசுங்க இருக்கானுவ"ன்னு பீத்திகிட்டாரு. "சரி நீ எத்வா வேணா இருந்துட்டு போ..இந்த பென்சு நாற்காலியெல்லாம் மேல் மாடிக்கு கொண்டு போய் வச்சிடு"ன்னு சொல்லிட்டு போயிட்டார்.

அதுக்கு கைப்ஸ்"பார்ரா பார்ரா..ஏதோ எல்ப் பண்ணலாம்ன்னா என்னய போய் வேல வாங்குனா என்னா அர்த்தம்"ன்னு சொல்லிகிட்டே ஒத்த ஆளா எல்லாத்தையும் மதியம் வரை மேல ஏத்தினார்.தல காக்கி பேண்ட் காக்கி சட்டை வேற போட்டிருந்தாரா அவர் ஸ்கூல் ஆளுன்னு நெனச்சிகிட்டு அவனவன் போட்டு தொவச்சு எடுத்துட்டான்.

4.30 க்கு ஸ்கூல விட்டதும் பசங்க வந்துச்சு.ஏத்திகிட்டு கைப்ஸ்"பசங்களா நல்லா படிச்சீங்களா"ன்னு ஃபார்மாலிட்டீஸ் பேசிகிட்டு பின்னால் வரப்போகும் ஆப்பு பத்தி தெரியாமலே வண்டி ஓட்டி வந்து பிச்சு வீட்டிலே நிறுத்தினார்.

கண்மணி டீச்சர் இன்னும் ஸ்கூல் முடிஞ்சு வரலை. பிச்சுதான் 40 ரூபா எடுத்து குடுத்தான் நம்ம தலகிட்ட. ஒரு நிமிஷம் ஆடிட்டார் நம்ம கைப்ஸ். அப்ப கிச்சு"இங்க பாருடி அபி, அங்குள்க்கு பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட் வீக்குடி"ன்னு டைமிங் ஜோக்கடிச்சு கைப்ஸை வெறுப்பேத்தறான்.

கைப்ஸ் பணத்தை பிச்சு கிட்ட நீட்டி "இதென்ன"ன்னு கேக்க அபி பாப்பா"பணம்"ங்குது.கைபுள்ள கடுப்பாகி"சின்னபுள்ள தனமா இருக்கு, ராஸ்கோல்ஸ் நாள் சவாரிக்கு 40 ரூவாயா. ஒலுங்கு மரியாதையா 300 ரூவா குடுங்க இல்லாட்டி நான் போமாட்டேன்"ன்னு அடம் பிடிக்க பசங்க 3ம் தனியா மீட்டிங் போட்டுச்சு.

அபி: டேய் கிச்சு என்னடா செய்யலாம்?

கிச்சு: பேசாம காதை கடிச்சுடுடீ

பிச்சு: டேய் அதல்லாம் வேணாம், அவந்திகா அக்கா கராத்தே கிளாஸ்க்கு போயிட்டு வர்ர நேரம்தான் போய் கூட்டிகிட்டு வாடா

பசங்க திரும்பி வந்ததும் கைப்ஸ்"என்ன பசங்களா நல்ல முடிவா எடுத்தீங்களா, இல்ல நாறி போயிடும்"ன்னு சொல்ல கிச்சு அவந்திகாவை கூப்பிட ஓடிட்டான்.

பிச்சு"பேசி பிரயோஜனம் இல்ல பஞ்சாயத்து தான்"ன்னு சொல்ல கைப்புள்ல கடுப்பாயிடாரு. "எலேய் என்னாங்கடா நான் பாக்காத பஞ்சாயத்தா நடத்துங்கடா நல்லா நடத்துங்கடா, ஆமா கிச்சு எங்கிட்டுடா ஓடுறான்"ன்னு கேக்க அபிபாப்பா"பஞ்சாயத்து தலய கூப்பிட போயிருக்கான்"ன்னு சொன்னா.

கராத்தே டிரஸ்ல வந்த அவந்திகா சைக்கிள்லயே கிச்சுவும் தொத்திகிட்டு வந்து சேந்துட்டான். வந்ததும் கைப்ஸ்"மாப்பி என்னடா இது என்னய பஞ்சாயத்துல விசாரிக்குறத பாக்க கூட்டம் சேக்குறியா, ஏம் புள்ள இந்த பசங்க தான் காசு குடுக்காம கலாய்குதுன்னா நீயும் இவிங்க கூட சேந்துகிட்டியா"ன்னு கேட்டார். அப்போ பிச்சு"அங்குள் அவங்கதான் பஞ்சாயத்து தலயே, எங்களுக்கு எப்போ பிரச்சனைன்னாலும் அவங்கதான் பஞ்சாயத்து பண்ணி தீத்து வப்பாங்க. அபி பஞ்சாயத்தே 1 மாசத்துக்கு 10 நடக்கும்"ன்னு சொன்னான்.

அதுக்கு கைப்ஸ்"அடப்பாவிகளா இந்த பச்சமண்ண பஞ்சாயத்து தலயாக்கி பல பேர பதம் பாத்துட்டீங்களாடா..இதே தொழிலா வச்சிருக்கீங்களாடா"ன்னார். அப்ப அவந்திகா கைப்புள்ள கிட்ட "அங்குள் உங்களுக்கு சென்(zen) தெரியுமா"ன்னு கேக்க "சாயந்திரம் 6 மணிக்கு மேல எனக்கு கண்ணே தெரியாது என்னய பாத்து சென்னு தெரியுமான்னு கேக்குறீங்களே.சட்டு புட்டுன்னு பஞ்சாயத்த முடிச்சுட்டு காசு குடுத்து அனுப்புங்கப்பா எனக்கு 6 மணிக்கு ஒரு முக்கியமான சோலியிருக்குப்பா"ன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்.

பின்ன அவந்திகாவின் பலமான விசாரனைக்கு பின்ன பசங்க ஸ்கூலுக்கு போக 1 ட்ரிப், வர 1 ட்ரிப்னு சொன்னத கைபுள்ள நாள் சவாரின்னு தப்பா புரிஞ்சுகிட்டதால 40 ரூவாதான்ன்னு முடிவாச்சு. கைப்புள்ள இதுக்கு ஒத்துகலன்னா அபி 1 காது பிச்சு 1 காது பிச்சுகலாம்ன்னு தீர்ப்பாச்சு.அதுக்கு கைப்புள்ள "ஒத்த மனுசன் எத்தன தாங்குவான்னு தெரிய வேணாம்"ன்னு சொல்லி எஸ்கேப் ஆக போகும் போது ஸ்கூல்ல இருந்து கண்மணி வந்தாச்சு.

"வாக்கா நல்ல நேரத்துல வந்தக்கா, நீயும் தான் பெத்து வச்சிருக்கியே மணி மணியா புள்ளங்கல, இந்த அகராதி புடிச்ச அபிஅப்பாவும் தான் ஒன்னு பெத்து வச்சிருகாரு பாருக்கா கொல வெறியோடயே திரியுது, நீயாவது வந்து ஒரு நல்ல தீர்ப்ப சொல்லு கண்மணியக்காவ்'ன்னு ஐஸ் வச்சாரு நம்ம தல கைபுள்ள.

எல்லாத்தையும் கேட்ட கண்மணி "கொஞ்சம் இருப்பா"ன்னு உள்ள போயிட்டாங்க. பின்ன திரும்பி வந்து "இந்தாப்பா"ன்னு ஒரு லட்டு குடுத்தாங்க. காசு குடுப்பாங்கன்னு பாத்தா லட்ட குடுக்குறாங்களே..சரி வந்த வரை லாபம்ன்னு கைப்புள்ள வாங்கிகிட்டு போயிட்டார்.

"மாப்பு வச்சுட்டாங்களே ஆப்பு"ன்னு கைபுள்ள இன்னிக்கு புலம்ப காரணமே லட்டு தான்.அந்த லட்டுல என்ன விஷேஷம்ன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தா இங்க போய் பாருங்க. தலயோட சங்க ஆண்டு விழா அன்னிக்கு இம்மாம் பெரிய ஆப்பு வச்சுட்டீங்களே கண்மணி தங்கச்சி!

April 22, 2007

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு சூடான செய்திகள்!!!

அனேகமாக இதுதான் முதல் பதிவாக இருக்கும் சென்னை வலைப்பதிவர் சந்திப்பு பற்றி! மிகச்சரியாக இந்திய நேரம் 3.30(மாலை) ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கிறது. நான் முதலில் மாநாடு கொண்டான் பாலபாரதிக்கு பொன் செய்தேன்.

வணக்கம் நான் அபிஅப்பா(என் பேரே எனக்கு மறந்து போச்சு, சில சமயம் ஆஃபிஸ் போன் வந்தாகூட அபிஅப்பா ஸ்பீக்கிங்ன்னு சொல்லிடறேன்)

"வனக்கம் அபிஅப்பா, கலை கட்டுது இங்கே, யார் கிடே பேசனும் இங்க தருமி அய்யா,சிறில் அலெக்ஸ், லியோ சுரேஷ்(கிடேசன் பார்க் உறுப்பினர்) லக்கிலுக், செந்தழல் ரவி ஓகை நடராஜன், இரமகி ஐயா, முத்து தமிழினி எல்லாரும் இருக்காங்க. யார் கிட்ட கொடுக்கனும்'ன்னு கேட்டார்.

அதுக்கு நான் எல்லார்கிட்டயும் பேசனும் யார்கிட்ட வேனா குடுங்கன்னு சொன்னேன்.முதல்ல லியோ சுராஷ் கிட்ட பேசினேன். பின்ன தருமி சார் கிட்ட பேசினேன். அவர் உங்க எல்லா பதிவும் நான் மனைவி குழந்தைகள் கிட்ட படிக்க சொல்லுவேன்"ன்னு சொன்னார்.

அடுத்து லக்கிலுக் கிட்டே பேசினேன். "நான் உங்க எல்லா பதிவும் படிப்பேன்"ன்னு சொன்னேன். "நான் அப்படி என்ன எழுதிட்டேன்"ன்னு கிணத்துகுள்ள உக்காந்துகிட்டு(அவ்வளவு தன்னடக்கமா)சொன்னார்.சுஜாதா சொன்ன மாதிரி மையமா சிரிச்சு வச்சேன்.

முத்து தமிழினிகிடே பேசினேன்.ரொம்ப நல்லவரா இருக்கார். சும்மா ஃபார்மாலிட்டியெல்லாம் இல்லாம"நான் உங்க பதிவை படிச்சதில்லங்க"ன்னார்.

அடுத்து பொன்ஸக்கா - முதல்ல இந்த பிரச்சனைய தீத்துப்போம். கோபிதம்பி ஒருநாள் என்கிட்ட"யோவ் என்னய்யா நாங்க தான் பொன்ஸக்கான்னு கூப்பிறோம் அதுக்காக உம்ம பேத்திய போய் நீரும் பொன்ஸக்கான்னா என்னா அர்த்தம்"ன்னு கேட்டார். நம்ம வலைல தான் புது புது உறவெல்லாம் இருக்கே "தம்பியண்னன்" "தங்கச்சியக்கா" அதனால இன்னு முதல் அவங்க பொன்ஸக்காதங்கச்சி - ஓக்கேவா.

அவங்க அபி முதல் அபிசித்தப்பா வரை வெசாரிச்சாங்க. சரி செந்தழல் கிட்ட பேசலாம்ன்னு கேட்டா ஆள் எஸ்கேப். அப்புறமா நாமக்கல் சிபி கிட்ட "ஓய் வெடுக்குனு போயிடாத ரவி மாதிரி"ன்னு சொல்லிட்டு நான் சந்திப்பிலேர்ந்து எஸ்கேப்.

இப்போ மைபிரண்ட் என்கிட்ட "நிலவரம் எப்படி அங்க"ன்னு ஆர்வமா கேட்டாங்க. "கலவரம்"ன்னு அடிச்சு விட்டேன். ரொம்ப சந்தோஷமாயிட்டாங்க...நிறையா பதிவு படிக்கலாமே!!!

April 16, 2007

ராதா "குரங்கு ராதா"வாகிய கதை!! (வ.வா.ச போட்டிக்கு)

இதுவும் ஒரு கொசுவத்தி பதிவுதான். நான் அப்போ 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். வருஷ முடிவிலே முழு பரிச்சைக்கு படிப்பதை விட ஆண்டு விழா கொண்டாட்டம் தான் அதிகமா இருக்கும். போர்டுல அறிவிப்பு போட்டுட்டாங்க, இராமாயணத்துல வர்ர ஒரு காட்சி தான் நாடகம். நாடகத்தின் பேர் "சீதையின் அ"சோக" வனம்". மறுநாள் பெயர் கொடுக்கணும்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு ஜீப்ல ஏறிக்கும் கேஸ் ஆச்சா, அது தவிர அப்போ ஐயாவுக்கு கலைதாகம் வேற அதிகமா இருந்துச்சா, அதனால பேர் குடுக்க முடிவு செஞ்சுட்டேன். அந்த நிமிஷத்துல இருந்து ஒரே கனவுதான். ராமர் வேஷத்துல மனசுகுள்ளேயே கலக்கிகிட்டு இருந்தேன். எத்தன அப்ளாஸ் எத்தன அப்ளாஸ், அந்த அப்ளாஸ் சமயத்துல எப்டி அதை ஏத்துகனும், அப்போ டயலாக் டெலிவரி கூடாது, கைதட்டல் சவுண்டில டயலாக் மங்கி போயிடும் அப்டீன்னெல்லாம் நெனச்சுகிட்டேன்.

மறுநாள் பேர் குடுக்க போனா ஒரு 100 பேர் அந்த கிளாஸ்ல நிக்கிறானுங்க, பாவிமக்கா என் கலை தாகத்தை தீத்துக்க விட மாட்டானுங்க போலன்னு நெனச்சுகிட்டு உக்காந்து இருந்தேன். பக்கத்துல ராதா வேற என்கிட்ட "டேய் செலக்ஷன் பண்ண போறது யாரு தெரியும்ல, அந்த சார் எங்க அப்பாவுக்கு பிரண்ட், அப்பா நேத்திக்கே அவர் கிட்ட பேசிட்டாங்க நீ வேற எதுக்கு வேஸ்டா உக்காந்து கிட்டு இருக்க, போய் பரிச்சைக்கு படி போ"ன்னு வெறுப்பேத்தரான்.

ஒவ்வொருத்தரா போய் சார் கிட்ட செலக்ஷன்க்கு போனோம்.சார் என்கிட்ட உனக்கு என்ன வேஷம்டா வேணும்ன்னு கேக்க அதுக்கு நான்"ராமன் வேஷம் தாங்க சார்"ன்னு பவ்வியமா கேக்க அதுக்கு அவரு"நல்ல வேளை நான் தப்பிச்சேன், நீ பாட்டுக்கு ஹனுமன், சீதைன்னு, அரக்கின்னு கேட்டு தொலைச்சிடுவியோன்னு பயந்துட்டேன்"ன்னு சொன்னார். எனக்கு ஒரே குழப்பம், ராமர் தான ஹீரோ சர்வசாதாரணமா எனக்கு அந்த ரோல் குடுத்துட்டு இப்டி சொல்ராரேன்னு! வெளியே வந்து ராதாகிட்ட உனக்கு என்னடா ரோல்ன்னு கேட்டேன். அதுக்கு அவன் அழுதுகிட்டே அனுமன்னு சொன்னான்."டேய் என்னவோ அப்பா ஆட்டுகுட்டின்னு கதை விட்டியே இப்ப பாத்தியா நான் தான் ராமர், என் முகத்தில ராமர் கலை தாண்டவமாடுதே அத பாத்துட்டு படார்ன்னு நீ தான் ராமர்ன்னு சொல்லிட்டார்டா"ன்னு அவனை வெறுப்பேத்திவிட்டேன்.

மறுநாள் அவங்கவங்க டயலாக் வாங்கிக்க சார் கிட்ட போனோம். எல்லாருக்கும் குடுத்தார் எனக்கு மட்டும் தரலை. "எங்க சார் என் டயலாக்"ன்னு கேட்டேன். அதுக்கு அவர் நீ தான் ராமர், ஆனா வேஷ்ம் கிடையாது, மேடைக்கு வரவேண்டாம் இன்னும் சொல்லப்போனா நீ வீட்டிலேயே இருக்கலாம், ஆனா நீதான் ராமர்"ன்னு சொன்னார். தலைல இடிய போட்டுட்டார். " டேய் லூசு பையா, இது அசோக வனத்து சீதை, இதுல மெயின் ஹீரோவே அனுமன் தாண்டா, ராமர் அப்போ ராமேஸ்வரத்துல குந்திகிட்டு இருக்கார், போ போய் வேலைய பாருடா"ன்னார். இதை கேட்டுகிட்டு இருந்த ராதாவுக்கு வந்த சந்தோஷத்தை பார்க்கனுமே!

சார் சார்ன்னு அவர் பின்னாலேயே போய் "எனக்கு அட்லீஸ்ட் அரக்கி வேஷமாவது தாங்க சார்"ன்னு அரிச்சேன். "எங்க சட்டைய கழட்டு"ன்னார். படார்ன்னு சட்டைய கழட்டிட்டு டிராயரையும் கழட்டவா சார்ன்னு கேட்டேன். அதுக்கு அவர்"டேய் இங்க என்ன மிலிட்டரிக்கா ஆள் எடுக்குது, உன் உடம்ப நீயே பார்டா, எலும்புகூடுக்கு சட்டை மாட்டிவிட்டமாதிரி இருந்துகிட்டு அரக்கி வேஷம் வேணுமா"ன்னு கடுப்படிச்சார். நான் அப்படியும் விடாம அவரை அரிச்சேன். அதுக்கு அவர் "சரி உனக்கு ஒரு சூப்பர் வேலை தர்ரேன், கிட்டத்தட்ட அஸிஸ்டண்ட் டைரக்டர் மாதிரி"ன்னார். நானும் மனச தேத்திகிட்டு சரி கமல் மாதிரி ஆக முடியாட்டியும் பாலசந்தர் மாதிரி ஆயிடலாம்ன்னு விட்டுட்டேன்.

K.R சார், கிராஃட் சார், டிராயிங் சார், N.V சார் இவங்கல்லாம் நாடகத்துக்கான வேலை எல்லாம் செய்ய நான் அசிஸ்டண்ட் டைரக்டரா சும்மா சுத்தி சுத்தி வேலை பார்த்தேன். டீ, வெத்தலை வாங்கி வருவது, கம் போட்டு அனுமன் வால் செய்வது மாதிரியான அசிஸ்டண்ட் டைரக்டர் வேலையை அமர்களமாக செய்தேன்.இதுல KR சாருக்கு புதுசு புதுசா ஐடியாவெல்லாம் பொங்குது. அனுமன் அந்தரத்துல பறந்து வந்து சீதை அருகே குந்தனும். அதுக்கு சூப்பர் ஐடியா பண்ணிட்டார். கிணத்துல தண்ணி எடுக்கும் சகடையை வச்சு.

மேடைக்கு பின்னால உயரத்துல அந்த சகடை கட்டி அனுமார் முதுகிலே சேஃப்டி பெல்ட் போட்டு கயிர் கட்டி அந்த கயிர் மேடைக்கு பின்னால் என் கையில். இப்படி ஒரு செட்டப்.

அதுக்கிடையே டிராயிங் கணேசன்சார் ரொம்ப சிரத்தையா அனுமார் வால் அவங்க ஆத்து மாமியின் குஞ்சம் எல்லாம் வச்சு கட்டி அட்டகாசமா உருவாக்கிட்டு அந்த வால்தான் ஹீரோ மாதிரி பீத்திகிட்டு இருந்தார்.

ஆண்டு விழா நாள் வந்தது. அனுமன் ஜெக ஜோதியா இருந்தார். சும்மா ஜல் ஜல்ன்னு சலங்கையோட சுத்தி சுத்தி வர்ரார். நான் தான் அசிஸ்டண்ட் டைரடக்கருன்னு நானும் எல்லார் கிட்டயும் போய் மார்தட்டிகிறேன், ஒரு பயலும் சீந்த மாட்டங்குரான். நாடகம் ஆரம்பமாச்சு. சீதை பொண்ணு தலைய விரிச்சு போட்டுகிட்டு நடுவே உக்காந்து இருக்க ஸ்பீக்கர்ஸ் டெஸ்க் மேல நம் ராதா பாய தயாரா உக்காந்து இருக்க நான் கயித்த புடுச்சிகிட்டு மேடைக்கு பின்னால நிக்கிறேன்.

இதுல யாருமே கவனிக்காத ஒரு விஷயம் என்னோட வெயிட்டும், ராதாவோட வெயிட்டும் தான். அவன் நல்லா புசு புசுன்னு அனுமார் மாதிரி இருப்பான், நானோ நோஞ்சான் குஞ்சு.

சார் எனக்கு சிக்னல் குடுத்தவுடனே நான் கயிர் இழுக்கனும், அப்போ ராதா அந்த ஸ்பீக்கர் டெஸ்கிலேர்ந்து மேலே பறப்பது போல் போவான். பின்ன சார் சிக்னல் குடுத்த உடனே நான் கொஞ்ச கொஞ்சமா கயிரை விடனும். அவன் அப்போ சீதைக்கு அருகே வந்து குந்துவான். இதுதான் பிளான்.

சார் சிக்கல் குடுத்தார். நானும் என் பலம் முழுதும் கொண்டு இழுக்க ராதா மேலே பறக்க விசில் சத்தம் காது கிழிஞ்சுது. எனக்கு கை கிழிஞ்சுது. ஓரளவுக்கு மேல என்னால ராதா வெயிட் தாங்க முடியலை. அந்தரத்தில பறந்த ராதா என் கைங்கரியத்தால் சீதாதேவிக்கு பக்கத்திலே பொத்துன்னு விழ படார்ன்னு ஒரு சத்தம். அவன் வாயில் கவ்வியிருந்த சின்ன ஆப்பிள் பலூன் படார்ன்னு வெடிக்க, சீதை அரக்கிகள் சகிதமாக கூட்டத்துக்குள்ள புகுந்து ஓட, இந்த களேபரத்துல கணேசன் சார் செஞ்ச வாலின் முனையிலுள்ள குஞ்சம் ஸ்பீக்கர் டெஸ்கில் எங்கியோ சமத்தியா மாட்டிக்க அது சாஞ்சு ராதாவின் பக்கத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது.

ராதாவுக்கு உள்ளி மூக்கு உடைஞ்சு ரத்தம் கொட்ட, பல் உதட்டில் குத்தி அங்கியும் ரத்தம். எல்லாரும் கிட்ட போய் பாத்தா ராதா ஞ்சா..ஞ்சா, ஞ்சான்னு ஏதோ சொல்றான். அதுக்கு சார் "இன்னும் அந்த பலூன் கருமத்த ஏன் வாயில கவ்விகிட்டு இருக்க துப்பிட்டு சொல்லுடா"ன்னு சொல்ல அவனும் துப்பிட்டு இப்போ அவன் வாயிலேர்ந்து ஞ்சா ஞ்சா ஞ்சா போய் ங்கா ங்கா ங்கா ன்னு வந்துச்சு.

சரின்னு ஃபஸ்ட் அய்டு ரூம்க்கு தூக்கிட்டு போகலாம்ன்னு பார்த்தா அந்த வால் ஸ்பீக்கர் டெஸ்கிலே நல்லா கழட்ட வராம மாட்டிகிச்சு.இந்த கணேசன் சார் ராதாவபத்தி கவலைபடாம வாலை பாத்து அழுதுகிட்டு இருக்கார். அந்த வாலை அறுத்தாதான் ராதாவை தூக்கிட்டு போக முடியும். "சார் எப்டியாவது வாலுக்கு சேதாரம் வராம பாத்துகுங்க"ன்னு கணேசன் சார் K.R சார்கிட்ட சொல்ல, ராதா ங்கா ங்கா ங்கான்னு கத்துறான்.

அதுக்கு சார் என்கிட்ட அவன் என்னடா சொல்றான்ன்னு கேக்க "என் மூஞ்சியே சேதாரமாயிட்டுது அவருக்கு வால் சேதாரம்தான் முக்கியமா"ன்னு கேக்குறான் சார்ன்னு சொன்னேன். பின்ன கணேசன் சார் சொன்ன மாதிரியே டெஸ்க்கை 2 பேர், ராதாவை 2 பேர்ன்னு ஃபஸ்ட் அய்டு ரூம்க்கு தூக்கிகிட்டு போக நடுவே ராமர் பாலம் மாதிரி ராதவுக்கும் டெஸ்க்குக்கும் வால். அதை ஜாக்கிரதையா தாங்கி பிடிச்சுகிட்டு கணேசன் சார். பின்ன பாலுசார் தலையிட்டு அந்த வாலை அறுத்துவிட்டு ஃபர்ஸ்ட் அய்டு ஆரம்பிச்சுது.

அதுக்கு பின்ன அந்த காயங்களினால் ராதா வாயை குரங்கு மாதிரி வச்சிகிட்டு திரிஞ்சான் கொஞ்சநாள். குரங்குராதா குரங்கு ராதான்னு யாராவது கூப்பிட்டா விரட்டி விரட்டி அடிப்பான். அடிச்சுட்டு என்கிட்ட வந்து "அந்த கயிர விட்டவன் யாருன்னு தெரிஞ்சா அன்னிக்கு இருக்கு அவனுக்கு"ன்னு புலம்புவான். நானும் ரொம்ப நாள் கயிர விட்டவனை அவன் கூட சேர்ந்து தேடிகிட்டே இருந்தேன்.

இப்போ சமீபத்துல தங்கமணி கிட்ட இருந்து போன். விஷயம் இதுதான். அவன் என் அட்ரஸ் வாங்க வீட்டுக்கு போயிருக்கான். அப்போ வாசலில் விளையாடிகிட்டு இருந்த அபிபாப்பாகிட்ட "போய் பாட்டிய கூப்பிடும்மா"ன்னு சொல்ல, பாப்பா "நீங்க யாரு"ன்னு கேக்க அவன் "ராதா"ன்னு சொல்ல, பாப்பா எந்த ராதான்னு கேக்க இவன் "குரங்கு ராதா"ன்னு சொல்ல அதுக்கு அபிபாப்பா "பாட்டி, அப்பா கயித்தவிட்டு மூஞ்சிய உடைச்ச குரங்கு ராதா அங்குள் உங்களை பாக்கனுமாம்"ன்னு சொன்னாலாம்.

இனிமே இதே போல சம்பவங்களை குழந்தைங்ககிட்ட சொல்லகூடாதுடா சாமீ!!

April 11, 2007

சிறு கதை - இதுதான் அழகு!!

பணி நிமிர்த்தமாக வெளி நாட்டில் இருக்கிறான் அவன். இன்று காலை முதலே மனது சஞ்சலமாக உணர்ந்தான். காதலித்து கல்யாணம் செய்து கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு இது 8 வது மாதம். கொஞ்ச நாளாகவே இவனுக்கு பரபரப்பு அதிகமாகவே இருக்கிறது. தினமும் போன் செய்ய தவறுவதில்லை. முதல் குழந்தைக்கு கூடவே இருந்து ஆறுதலாக இருந்து விட்டு இப்போ இரண்டாவதுக்கு தூரத்தில் இருப்பது உறுத்தலாகவே இருக்கிறது அவனுக்கு.

சரி போன் செய்திடலாம் என போன் செய்தான்.

ஹலோ.....செல்லம் எப்டி இருக்க?

ம், நீங்க எப்டி இருக்கீங்க?

நான் கிடக்கட்டும், நீ?

நல்லா, நேத்து ராத்திரி செம உதை

வலிக்குதாடா ரொம்ப, நான் உன்ன ரொம்ப மிஸ் பண்றேன்

நானும் தான், அவ வயித்துல இருக்கும் போது நீங்க கிட்டயே இருந்தீங்க, தலை சீவி பொட்டு வச்சு கோயிலுக்கெல்லாம் அழச்சுட்டு போவீங்க, இப்போ நான் எப்டி இருக்கேன் தெரியுமா, என்னை பார்க்க எனக்கே பிடிக்கலை அசிங்கமா ஃபீல் பண்றேன்.

அப்டி சொல்லாதடா, நானே எவ்ளோவ் மனசு கஷ்டத்துல இருக்கேன் தெரியுமா..நீ தைரியமா இருடா...

8 கிலோ வெயிட் கூடியிருக்கு, வாட்டர் லெவல் நல்லாயிருக்குங்க..

ம் சரி, மூவிங் எப்டி இருக்குடா..

மூத்தது மாதிரியே சுட்டியா இருக்கும் போலயிருக்கு. காலை உதைச்சு நீந்துவது மாதிரி ஒரு ஃபீலிங்...கால் வீங்கி போய் இருக்கு, கொஞ்சம் சோகையா இருக்கு, முகம் வெளுத்து இருக்குங்க

சரி போனை வயத்துல வச்சுக்கடா செல்லம்..

க்கூம்..விஜய் படம் ரொம்ப பாக்காதீங்க, எதுவாயிருந்தாலும் எனக்கே குடுங்க..நான் குடுத்துகிறேன் அதுக்கு..

அழுத்தமாக பரிமாரிக்கப்பட்டது........ கண்ணீருடன் போன் துண்டிக்கப்பட்டது.

பரந்து போன சுருள் முடி முகத்தில் விழ சரிந்த வயிறு, வெளுத்த முகம், அதில் தெரியும் பிரகாசம், வீங்கிய கால்கள், கையை தரையில் ஊன்றி எழுந்து ஆடி ஆடி நடக்கும் தன் மனைவியின் அந்த அழகை நினைத்து கொண்டே அவன் அன்றைய பொழுதை ஆரம்பித்தான். உலகத்திலேயே கர்பிணி பெண்களே அழகு என நினைத்துக்கொண்டான்.

April 7, 2007

( உ ஊ )என்ன அழகு எத்தனை அழகு!!

அழகுன்னா இன்னா, கொஞ்சம் வந்து செப்புன்னு கொத்ஸ், "தம்பி"ய கேக்க தம்பி என்னய கேக்க நான் இப்போ உங்க முன்னால நிக்கிறேன். 6 அழகுதான் சொல்லனுமான்னு கேக்க "எத்தனை வேணுமின்னாலும் சொல்லுங்க"ன்னு தம்பி சொல்லிட்டார். சரி தோனியது அத்தனையும் பகிர்ந்துகலாம்ன்னு ஐடியா.

இடம்:

எனக்கும் தங்கமணிக்கும் நீண்ட நாள் ஆசை, நம் இஷ்டத்துக்கு ஒரு வீடு கட்டனும்ன்னு, எங்களுக்கே எங்களுக்காய் அழகாய் கட்ட ஆசை. 6 மாதம் முன்பு அது நிறைவேறியது. கட்டி முடித்த பிறகு தான் நான் போனேன். அதுவரை போட்டோ கூட அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்.

வீட்டுக்கு முன் ஒரு சின்ன கிரவுண்ட், அந்த வழியே போனா நேருக்கு நேர் வீட்டை பார்க்கலாம். அந்த வ்ழியா போனேன். 100 மீட்டர் முன்பே வண்டியில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன். முதன் முதலாக அப்போ தான் பார்க்கிறேன். நான் இத்தனை வருஷம் கனவில் கண்ட மாதிரி அச்சு அசலாக அப்படியே இருந்தது. கிட்ட நெருங்க நெருங்க பட படப்பு. பெயிண்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது.

கிட்ட போய் மெதுவா தொட்டேன். உடம்பு முழுக்க மின்சாரம் பாய்ந்தது மாதிரி உணர்வு. "அப்பா"ன்னு அது என்னை கூப்பிடுவது மாதிரி ஒரு பிரம்மை. மறு நாள் கிரகபிரவேசம்.

வீட்டில் எல்லா இடமும் எனக்கு பிடிக்கும்.மாடிப்படியில் உக்காந்துப்பேன், வாசலில், மொட்டை மாடியில், பால்கனி இப்படி எல்லா இடத்திலும் உக்காந்துப்பேன். வெறும் தரையில் படுத்துப்பேன்.

இப்போது நான் ரொம்ப மிஸ் பண்ணுவது என் இந்த அழகைதான்.

மாதம்:

மாதங்களில் எனக்கு பிடித்த அழகான மாதம் ஐப்பசி தான். எனக்கு மட்டுமல்ல கிட்டத்தட்ட 75%மயிலாடுதுறைவாசிகளுக்கு பிடித்த அழகான மாதமே அதுதான். முதல் தேதியில் இருந்து 30 தேதி வரை அமர்களம் தான். பெரிய கோவில்ல இருந்து சண்டிகேஸ்வரர், வினாயகர், முருகர், அவயாம்பிகை, மாயூரநாதர் எல்லாரும் தனி தனி வெகிக்கில்ல ஜாலியா காவிரிக்கு குளிக்க கிளம்பிடுவாங்க. சன்னதி தெருவிலே 20 நாதஸ்வரம், 20 தவில் மல்லாரி இசைக்க கிளம்பி பட்டமங்கல தெரு வழியா காவிரிக்கு போய் தீர்த்தம் குடுத்துட்டு மகாதான தெரு வழியா திரும்பி வருவாங்க. அந்த தெருவில தான் எங்க ஸ்கூல் இருக்கு.

மேள சத்தம் கேட்டதும் (நான் ஆரம்ப பள்ளி படித்து கொண்டிருந்த போது) ஒட்டு மொத்த பசங்களும் ஓடிப்போய் பார்ப்போம். சாமியை பார்ப்பது விட பூதம், பூதச்சி வாகனங்கள் மேல் ஒரு காதல். இது நான் 11வது, 12வது படிக்கும் வரை நீடித்தது.

அந்த மாத கடைசியில் கட முழுக்கு, முட முழக்கு வரும். காவிரியில் ஆரம்பிச்சு, சின்ன கடைதெரு வரை கடைகள், பலூன் சுடும் கடை, பெண் தலை பாம்பு, ராட்டினம், பஞ்சு மிட்டாய், சல சலன்னு மழை... ஹூர்ரே!!! எல்லாமே அழகுதான்.

அதுவும் காவிரிக்கு தெற்கே எங்க பக்கத்து மாயூரநாதர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் போன்ற ஜாம்பவானக்ள் (இந்த பக்க வலைப்பூ ஆளுங்கன்னு பாத்தா எல்லே ராம், மூக்கு சுந்தர், மயிலாடுதுறை சிவா, அபிஅப்பா) காவிரியில் நிற்க, வடக்கு கரையில் தெஷ்ணாமூர்த்தி கோயில் தலைமையில் அந்த பக்க ஜாம்பவான்கள்( அந்த பக்க வலைப்பூ சீமாச்சு அண்ணா, மற்றும் பலர்) நிற்க தெற்கு பக்கத்துக்கும் வடக்கு பக்கத்துக்கும் சிக்னல் கொடியசைப்புதான்.(இப்போ செல் போனாயிருக்கலாம் யார் கண்டது) முதலில் மாயூரநாதர் தீர்த்தவாரி பின்ன அத்தனை சாமிகளும், அதுவரை தலையில் தண்ணீர் படாமல் இருந்தவர்கள், காவிரியில் மூழ்க ஏகப்பட்ட பிக்பாக்கெட் அந்த 1 நிமிஷத்தில் நடக்கும்.

பல சமயம் தீபாவளியும் அந்த மாதத்தில் வந்து விடும். கேக்கவே வேண்டாம் சந்தோஷத்தை. ஆக அபிஅப்பா வுக்கு பிடிச்ச அழகு ஐப்பசி மாதம் தான்.

ஆறு/காடு

ஆறுன்னாவே அழகுதான். அதிலும் பிரச்சனைக்குரிய காவிரின்னா எனக்கு பிடிக்கும். அதிலும் மயிலாடுதுறையில் சுடுகாடு பக்கத்தில் காவிரி சட்ரஸ் இடம் அந்த சுடுகாடு ரொம்ப பிடிக்கும்.

எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்து அதே இடம் தான் எரியூட்டும் இடம். அந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு வரும். எனக்கு ஏகப்பட்ட தாத்தா, பாட்டி. எல்லாரும் கிட்டதட்ட ஒரே தெரு தான். எல்லாருக்குமே அதே சுடுகாடுதான். சின்ன வயசுல நாங்க சகோதரர்களே வச வசன்னு 25,30 பேர் இருப்போம்.

ஏதாவது தாத்தா போயிட்டா எங்களுக்கு தீபாவளிதான். கடைசியா சுடுகாட்டுக்கு எடுத்து போகும் போது மட்டும் ரொம்ப அக்கறையா ஏதாவது சித்தப்பா எங்களை ஒன்னு திரட்டி அங்க போக விடாம தடுத்துடுவாங்க. பயந்துடுவோம்ன்னு..அதுக்காக. சரி விடுங்கடா சின்ன தாத்தாவுக்கு பாத்துப்போம்ன்னு மனச தேத்திப்போம்.

இப்போல்லாம் நாமதான பெரிய மனுசன். தாரளமா போகலாம். 6 மாதம் முன்ன ஊருக்கு போன போது கடைசி தாத்தா போயிட்டார். சுடுகாட்டில் எரியூட்டுபவருக்கு பணம் கொடுக்கும் போது ரொம்ப பிசிரி பிசிரி தான் பணம் கொடுப்பாங்க. எனக்கு அது பிடிக்காது. ஏன் அப்படின்னு கடைசி தாத்தாவை ஒரு முறை கேட்டபோது"நிறைய குடுத்தா, இவங்க ரொம்ப நல்லவங்க, அடிக்கடி அவங்க வீட்டுல சாவு விழனும்"ன்னு வேண்டிகிட்டா ன்னு தான் இப்டி பிசிரி பிசிரி தர்ரோம்ன்னு சொன்னார். இப்போ அவரே போயிட்டாரா, வேற ஒரு பெரியப்பா பிசிரிகிட்டு இருந்தார்.

நான் தான் இப்போ பெரிய மனுசன் லிஸ்ட்ல வந்துட்டனா ஏதாவது பேசியாகனுமேன்னு எரியூட்டுபவரை பாத்து "விடுப்பா அடுத்தடுத்து விசேஷம் இருக்கு பாத்துக்கலாம்"ன்னு சொல்லிட்டு இருமல் பெரியப்பாவை பார்த்தேன். போச்சு, அதோட அவர போட்டு காய்ச்சி எடுத்துட்டாங்க என் அண்ணன் தம்பிங்க. சரி போகட்டும்ன்னு வீட்டுக்கு வந்தா எங்க அம்மா சின்ன அக்காகிட்ட பேசிகிட்டு இருந்தாங்க. அப்போ அம்மா "அடுத்து எப்பம்மா வருவ"ன்னு கேக்க அதுக்கு சின்ன அக்கா"பெரியப்பா கையிலதான் இருக்கு"ன்னு சொல்லிட்டு அவரை பார்க்க...சே என்ன ஃபேமிலிடா..

சுடுகாடு அழகுன்னு சொன்ன அபிஅப்பா வியர்டுன்னு சொன்னாலும் மனுசன் ஆடி கடைசியா அடங்கும் அந்த இடம், அமைதி, அமானுஷ்யம், பல தத்துவார்தங்களை உள்ளடக்கிய அந்த இடம் அழகுதான்.

6 அழகிலே 3 சொல்லியாச்சு. பதிவு பெருசா இருப்பதால இத்தோட போதும்.

நான் கூப்பிட போகும் அந்த 3 பேர் யாரு?

1. பாசமலர் இம்சை அரசி

2. மூக்கு சுந்தர்

3.அபிஅப்பாவின் மனசாட்சி

போய் வாருங்கள், ஆனால் எங்களை மறந்துவிடாதீர்கள்!!

நேத்து எனக்கு லீவ். மதியம் 1.15க்கு ஒரு போன் வந்தது. பெண் குரல். என்னை தெரியுதான்னு கேட்டாங்க.

"ஊகூம் தெரியலை" நீங்க சன் டி.வி அர்ச்சனாதானன்னு கேட்ட்க நினைத்து அந்த குரலில் உணரப்பட்ட கண்ணியத்தால் நாக்கை அடக்கி கொண்டேன்.

"நான் வலைப்பதியும் உங்கள் நண்பி தான்"

என் மர மண்டைக்கு அப்போதும் புரியவில்லை.

"நான் தான் ராமச்சந்திரன் உஷா"

"ஆஆஆ, கொஞ்சம் இருங்க மேடம் இங்கே ரேஞ்ச் கிடக்கலை"ன்னு சொல்லிகிட்டே மொட்டை மாடிக்கு ஓடினேன். அவங்க கிட்டே பேசனும் என்பதை விட என் ஜீனியஸ் தனத்தை காட்டி அசத்தனும் என்கிற கேவலமான மனப்பான்மை தான் அப்போது இருந்தது எனக்கு.

ஒரு வழியாக மொட்டை மாடிக்கு வந்து பேச ஆரம்பித்ததும், அவங்க "நான் இந்தியா திரும்ப போகிறேன், அதனால் தான் உங்க எல்லார் கிட்டயும் போய் வருகிறேன் என்று சொல்லிக்கதான் போன் செய்தேன்"ன்னு சொன்னாங்க.

அவங்க 1 மாதம் முன்னயே இந்தியா திரும்பி விட்டதாக யாரோ சொன்ன ஞாபகம் எனக்கு. அதனால் "நீங்க இன்னும் போகலையா?"ன்னு கேட்டேன்.

"ஏன், நா போறதுல அவ்வளவு ஆர்வமா?"

முதல் பாலிலேயே நான் அவுட். ஜீனியஸ் அபிஅப்பா ஓடியே போய்ட்டார். அந்த இடத்தில் ஒரிஜினல் அபிஅப்பா வந்து குந்திகிட்டார்.

"அய்யோ அப்படியில்லை, நா அந்த அர்த்தத்துல சொல்லலை, ஸாரி"ன்னு வழிஞ்சுட்டு சாதாரணமா பேச ஆரம்பிச்சாச்சு.

"என்னை மாயவரத்து மருமகள் ன்னு சொல்லுவாங்க"

இந்த வார்த்தை போதாதா எனக்கு. அவங்க எழுத்தின் காரணமாக எனக்கு இருந்த பயம் போய் ஒரு அன்னியோன்யம் வந்து விட்டது.

மாயவரத்துல எங்கன்னு ஆரம்பிச்சு அபிபாப்பா, ஆணாதீக்கம், தமிழ்மனம் எல்லாத்த பத்தியும் நல்ல தெளிவா கருத்து சொன்னாங்க.

ஆணாதீக்கம் பத்தி பேசும் போது நான் அவசரகுடுக்கையாக"நான் என் தங்கமணிக்கு முழு சதந்திரம் கொடுத்துள்ளேன்"ன்னு சொன்னேன்.

"பத்தீங்களா கொடுக்கும் இடத்தில் நீங்க இருக்கீங்கன்னு சொல்றீங்க, அப்படீன்னா எப்போ வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக்கலாம் அப்படிதானெ அர்த்தம்"

எனக்கு வியர்த்து விட்டது.(நான் தான் சொன்னேனே மொட்டை மாடியில் இருக்கேன்ன்னு)

"நாய் சேகரிய நான் ரொம்ப கேட்டதா சொல்லுங்க, இப்போ புடிங்க இந்த அருள் வாக்கை"ன்னு சொல்லிட்டு ஒரு அருள் வாக்கு தந்தாங்க. சிரிச்சு கிட்டே வாங்கிகிட்டேன்.

"சரி 12 வருஷ்ம் துபாய்ல குப்பை கொட்டியாச்சு, போய் வருகிறேன்" ன்னு சொல்லிட்டு போனை வச்சுட்டாங்க.

மனசு பாரமா இருந்துச்சு. ஏதோ என் நெருங்கிய சொந்தம் விருந்தாளியா வந்துட்டு ஊருக்கு போகும் போது ஏற்படும் உணர்வில் இருக்கேன்.

போய் வாருங்கள் அண்ணியாரே, ஆனால் எங்களை மறந்து விடாதீர்கள்.


திஸ்கி: இதென்ன அண்ணியாரேன்னா, அவங்க கணவரின் தம்பியும் நானும் நண்பர்கள், இது அவங்க பேசிகிட்டு இருக்கும் போதுதான் தெரிந்தது.

April 1, 2007

நான் தான் பத்த வச்சேன்...ஒத்துகிறேன்!!!

அப்போ நான் 9 வது படித்து கொண்டிருந்தேன். நாங்கள் ஒரு 6 பேர் ஒரு குரூப்பாதான் திரியுவோம். அதிலும் நானும் குரங்கு ராதாவும் அப்டி என்னதான் பேசிப்போம்னே தெரியாது அவ்ளோவ் பேசுவோம்.

ஞாயித்து கிழமையானா கூட அப்டி பேசுவோம். என் வீட்டுக்கும் அவன் வீட்டுக்கும் நடுவேதான் எங்க ஸ்கூல் கிரவுண்ட். கிரவுண்டு சுத்தியும் புளிய மரங்கள் இருக்கும். நட்ட நடுவே ஒரு மாமரம். அது ஒரு பட்ட மரம். ஏற வசதியா இருக்கும். ஏறினா கிளைக்கு இடையே நாங்க உக்காந்துக்க வசதியா இரண்டு பள்ளம் மாதிரி இடம் இருக்கும்.

அதுல ஏறி உக்காந்தா அந்த கிரவுண்ட் முழுவதும் பாக்கலாம். அவனவன் ஏதோ விளையாட நாங்க மட்டும் சினிமாவில் ஆரம்பித்து மாலா, பாமா வரை பேசுவோம். எங்களை ஒரு பயலும் சீண்ட மாட்டானுங்க.

ஒரு சில கஞ்சா பார்டிங்க மட்டும் எப்பவாவது வந்து "டேய் கீழ வாங்கடா"ன்னு குரல் விட்டுட்டு அவனுங்க மேல ஏறி கஞ்சா அடிக்க ஆரம்பிச்சுடுவானுங்க.

ஒரு ஞாயித்து கிழமை காலை 10 மணிக்கு அப்படிதான் நானும் கு.ராதாவும் உக்காந்து பேசிகிட்டு இருந்தப்ப கஞ்சா குடிக்கி விட்டுட்டு போன தீப்பெட்டி மர பொந்தில் இருந்துச்சு. சரின்னு நானும் கு.ராவும் சும்மா பேசிகிட்டே அங்க கைக்கு எட்டும் தூரத்தில இருந்த குச்சியெல்லாம் சும்மா ஒடிச்சு ஒடிச்சு அந்த பொந்துக்குள்ள போட்டு பத்தாததுக்கு சருகு வேற போட்டு எரியுதான்னு பாக்க தீக்குச்சியால பத்த வச்சோம். அது லேசுல பத்துவது மாதிரி தெரியல.


சரின்னு நாங்க கிளம்பி போயிட்டோம். கொஞ்ச நேரம் நடந்த பின்ன திரும்பி பாத்தா, அந்த மரதில இருந்து குபு குபுன்னு புகை. நாங்க பயந்து போய் அங்க ஓடினோம். பக்கத்துல தண்ணி ஏதும் கிடைக்காததால் ரெண்டு பேரும் சேந்து அதுல உச்சா அடிச்சுட்டு(பெரிய ஃபயர் சர்வீஸ்ன்னு நெனப்பு!) சரி எல்லாம் சரியாயிடும்ன்னு வீட்டுக்கு போயிட்டோம். போய் நல்லா எண்ணெய் குளியல் போட்டுட்டு நான் தூங்கிட்டேன்.

மதியம் 3 மணிக்கு ராதா சிக்னல் குடுத்தான். வந்து நேரா கூப்பிட்டா எங்க அம்மா அவனை திட்டுவாங்க. அது போல் நான் அவனை எப்போ கூப்பிட்டாலும் எனக்கு அவங்க அம்மாகிட்ட செம திட்டு கிடைக்கும். அதுக்காகவே பல சிக்னல் வச்சிருப்போம்.

சிக்னல் வந்த உடனே நான் வெளியே போய் பாத்தா, ராதா ரொம்ப பயந்து போய் பேயரஞ்ச மாதிரி இருந்தான்.

"டேய் நம்ம போலீஸ் தேடுதுடா, எங்கயாவது ஓடிடுவோம். ஒரு 10 வருஷம் பின்ன வந்தா எல்லாம் சரியாயிடும், ஒரு பையில டிரஸ் எடுத்துகிட்டு வாடா"ன்னு பர பரப்பா சொன்னான்.

அய்யப்பன் ஹோடடலுக்கு போய் புரோட்டா சாப்பிட போவோம் வா ன்னு கூப்புடுறது மாதிரி கூப்புடுறானேன்னு நெனச்சுகிட்டு "என்னடா என்ன ஆச்சு"ன்னு கேட்டேன்.

"டேய் நாம பத்த வச்ச மரம் பத்திகிட்டு எரியுதுடா, நம்ம H.M , P.R சார்ல ஆரம்பிச்சு ஆரோக்கியசாமி வரை அங்க தான் இருக்காங்கலாம். அது தவிர ஃபயர் சர்வீஸ், போலீஸ் எல்லாரும் இருக்காங்கலாம். இப்போ போலீஸ் விசாரணை ஆரம்பிச்சாச்சாம், நம்ம காந்திமதிநாதன் சொன்னாண்டா"ன்னு கார்த்தி சொன்னான்.(மக்களே நல்லா படிக்கவும் காந்திமதிநாதன்...காந்திமதிகாதன் இல்லை)

சரி நிலைமைய நேரில் போய் ஆராய்வோம்ன்னு ரெண்டு பேரும் கிளம்பி அப்டியே பிரசவ ஆஸ்பத்திரி வழியா போனோம். தூரக்க இருந்து பாத்தா ஃபயர் வண்டி, போலீஸ் ஜீப், H.M ல இருந்து பியூன் வரைக்கும் அது தவிர தெரு மக்கள்ஸ் ஒரு பெரிய கும்பலே நிக்குது.

கச்சேரி பிள்ளையாருக்கு 10 பைசா, தர்காவுக்கு 10 பைசா(சம தர்மம்) உண்டியல்ல போடுவதா வேண்டிகிட்டு கிட்டக்க போனோம். கரக்டா P.T சிவனேசன் சார் கிட்ட மாட்டினோம். "டேய் இங்க வாங்கடா, ஒரு வெளயாட்டும் வெளயாடாம இந்த மரத்துலயே குந்திகிட்டு இருப்பீங்களே, உங்கள்ல எவன்டா பத்த வச்சது"ன்னு கேட்டார்.

பதறி போய்ட்டோம். ராதா சொன்ன மாதிரி ஓடி போயிட்டு 10 வருஷம் பின்ன வந்திருக்கலாமோன்னு நெனச்சுகிட்டேன். ராதா ஒன்னுக்கே போயிட்டான்.

ஒரு போலீஸ்கார் எங்க கிட்ட வந்து "யார்டா பத்த வச்சது, நீங்க பாத்தீங்களா, உண்மைய சொல்லுங்க"ன்னு ஒரு அதட்டல் போட்டாரு. அதுக்கு எங்க H.M "சார், இவனுங்க பத்த வச்சிருக்க மாட்டானுங்க, இவனுங்க அதுக்கு கூட லாயக்கு இல்லை சோப்பேறி பசங்க"ன்னார்.

கிராப்ட் சார்"டேய் சொல்லிடுங்கடா, இல்ல போலீஸ் புடிச்சுட்டு போயிடும்"ன்னு பயம் காட்டுரார். ஒரு ஃபயர் ஆபீசர் "H.M சார், மரத்து மேல ஏரி பொந்துகுள்ள நெருப்பு வச்ச மாதிரி தான் தெரியுது"ன்னு சொல்ல ஒட்டு மத்த கும்பல் பார்வையும் எங்க மேல தான்.

அநியாய ஆபீஸர் வச்சுட்டாரே ஆப்புன்னு நெனச்சுகிட்டு இருக்கும் போதே P.T சார் ரெண்டு பேரையும் கழுத்த பிடிச்சு குனியவச்சு முதுக விரிய வச்சுட்டார். நான் டக்குன்னு கச்சேரி பிள்ளையாருக்கும் தர்காவுக்கும் 10 பைசா ரேட் ஏத்திடேன்.

அப்புறம் ராதாவையும் என்னையும் அந்த போலீஸ்கார் தனியா கூப்பிட்டு போய் "தம்பிகளா, கூட்டத்துல சொல்ல வேண்டாம் இப்ப சொல்லுங்க"ன்னார்.
சாமி மேல பாரத்த போட்டுட்டு இன்னும் 10 பைசா ஏத்திட்டு(இன்னும் அந்த நேர்த்தி கடன் பாக்கியிருக்கு) ரெண்டு பேரும் கோரஸா "சார் அந்த கஞ்சாகுடிக்கி கென்னடிதான் சார் காலைல மரத்து மேல உக்காந்து இருந்தான்"ன்னு சொன்னோம்.

ஒரு வழியா பிரச்சனை முடிஞ்சுச்சு. அதுக்கு பிறகு கொஞ்ச நாள் கழிச்சு கென்னடி அடுத்த லொக்கேசன் கண்டிபிடிச்சுட்டான். பிரசவ ஆஸ்பத்திரி மாமரம். நாங்க அந்த பக்கமே போவதில்லை. மரம் ஏறுவதை விட்டாச்சு.

ராதா பேச்சை கேட்டு ஓடிபோயிருந்தா இந்நேரம் உங்களையெல்லாம் "பிளாக்"மெயில் செஞ்சுகிட்டு இல்லாமல் எங்கியாவது பிளாக் டிக்கெட் வித்துகிட்டு இருந்திருப்பேன்.

இந்த விஷயம் ரொம்ப நாள் உறுத்திகிடே இருந்துச்சு. என் கல்யாணத்துக்கு இப்போ உள்ள H.M புஷ்பவள்ளி டீச்சர் வந்தப்போ "டீச்சர் அந்த மரத்தை நான் தான் பத்த வச்சேன்"ன்னு சொன்னப்ப அவங்க தங்கமணிய பாத்து "இங்க பாரும்மா, நீ ரொம்ப குடுத்து வச்சவ, தொல்ஸ் கூட இருந்தா சிரிச்சுகிட்டே இருக்கலாம். என்னமா சிரிக்காம அடிக்கிறான் ஜோக்கு"ன்னாங்க.

நல்லதுக்கே காலமில்லை சாமி!!