பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 16, 2007

நைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்!!!

அன்புள்ள நைனா சபை தலைவர் கோபிஅன்னான் அவர்களுக்கு அபிஅப்பா மிகுந்த கோபத்துடன் எழுதும் தங்கள் பார்வைக்கு மட்டுமேயான தனி மடல். தங்களிடம் தொலைபேசி வழியாகவும், ஃபேக்ஸ், தந்தி, ஈ மெயில்,சேட் மற்றும் இன்ன பிற தொடர்பு ஊடகங்கள் வழியாகவும் அவ்வளவு ஏன் ஒரு முறை புறா வழியாகவும் செய்தி அனுப்பியும் உங்களிடமிருந்து சரியான பதில் இல்லை. புறா அனுப்பிய போது மட்டும் போன் செய்து ஏப்பம் விட்டீர்கள் புலிகேசி பாணியில். அதன் காரணமாகவே இப்பதிவு.

உங்களிடம் நாங்கள் அப்படி என்ன ஷார்ஜாவையா எழுதி கேட்டோம். ஒரு பதிவு போடுங்கள் கோபி என்றுதானே கேட்டோம். அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு? தாங்கள் களத்தில் இல்லாமையால் நாங்கள் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தங்கள் "நல்ல படம்" என்று விமர்சனம் போட்ட பொறி,தகப்பன்சாமி போன்ற படங்களை பார்க்காமல் தவிர்த்து ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது????

வேறு வழி இல்லாமல் காயத்ரியை தமிழ்பட தரநிர்ணய ஆய்வாளராக பதவி பிரமாணம் செய்து வைத்தோம். ஆனால் அவர்களும் கவிதை அழுதும் மன்னிக்கவும் எழுதும் சொந்த பணி நிமிர்த்தமாக தமிழ் சினிமா விமர்சனம் செய்வதில்லை இப்போது. சரி நானே விமர்சன்ம் எழுதி தமிழ்மண ரசிகர்களை காப்பாற்றலாம் என் நினைத்த போது நாமக்கல் சிபி "அபிஅப்பா படம் பார்க்காமல் விமர்சனம் செய்து விடுவார்" என அவதூறு பரப்பி அம் முயற்சியை தடுத்து விட்டார். கேட்டமைக்கு தானே பாதிக்கப்பட்டதாக கண் துடைக்கிறார்.

பதிவு போட உங்களுக்கு நேரம் இல்லை என தம்பி கதிர் அவர்களிடம் வருத்தப்பட்டதாக அவர் என்னிடம் கூறிய போது நான் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டேன். தாங்கள் கடைசியா ஆக்கிய கூட்டாஞ்சோறு வெளியிட்டு 50 நாட்கள் ஆகின்றது. ஆனால் அதற்கு பிறகு தாங்கள் மற்ற பதிவர்கள் பதிவில் கொலை வெறியோடு ருத்ர தாண்டவமாடி தனியாகவும், சும்மாஅதிருது, மைபிரண்ட் போன்ற பதிவர்களோடு கூட்டு சேர்ந்தும் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை.(அது என்ன அரை என்று கேட்கிறீகளா, இரு பின்னூட்டத்தில் //ரிப்// என்று மட்டும் போட்டிருந்தீர்கள்.

நீங்கள் சப்பைகட்டு கட்டலாம் நான் சும்மா //ரிப்பீட்டேய்// தானே போட்டேன் அது வெறும் ஒரு வார்த்தை தானே அதற்கு எனக்கு நேரம் இல்லாமலா போகும் பதிவு போடுவது என்றால் பல வார்த்தை குறைந்தது 120 வார்த்தைகளாவது வேண்டாமா என்று சாக்கு போக்கு சொல்லலாம். இல்லை கோபி அவர்களே நீங்கள் போட்ட மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை பின்னூடங்களில் ஒரு லெட்சத்து இருநூற்று இருபது பின்னூட்டங்கள் //டபுள் ரிப்பீட்டேய்// ஆக தாங்கள் நான்கு லெட்சத்து எழுநூற்று முப்பதரை வார்த்தைகள் டைப் செய்து சாகசம் செய்துள்ளீர்கள். இந்த நான்கு லெட்சத்து எழுநூற்று முப்பதரை வார்த்தைகள் மட்டும் உண்மைதமிழன் டைப் செய்திருந்தால் முழுதாக மூன்று பதிவுகள் கிடைத்திருக்கும் தமிழ்மணத்துக்கு. இதே சராசரி மற்ற பதிவர்கள் பதிவிட்டிருந்தால் மூவாயிரம் பதிவுகள் கிடைத்திருக்கும். ஆகவே தங்களுக்கு நேரம் இல்லை என கூறி இனி தப்பிக்க முயல வேண்டாம். சமீபத்தில் 1 நாளைக்கு முன்பு கூட ஒரு அப்பா பதிவர் 2 வரியில் பதிவு போட்டதா ஒரு செவி வழி செய்தி கூட உண்டு!!

தாங்கள் முதல் தேதி சம்பளம் வாங்கினால்தான் பதிவு போடுவது என்ற தங்களின் கொள்கை எங்களுக்கும் தெரியும் ஆனால் தாங்கள் இது வரை இந்த மாதத்துக்கான பதிவு போடவில்லை என்பதால் உங்கள் கம்பெனி மீதூ சந்தேகப்படுவதா உங்கள் மீது சந்தேகப்படுவதா?

சரி!உங்களுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையோ என நான் சென்ஷி அவர்கலை விட்டு பரிசோதித்தபோது அவர் சொன்ன செய்தி என்னை வியப்புக்கு உள்ளாழ்த்தியது! ஆமாம் அவர் சொன்னது என்ன தெரியுமா? "என்னை யாராவது ஹாய் கோபின்னு ஆபீஸ்ல கூப்பிட்டல் கூட எனக்கு அண்ணாச்சி சொன்னது போல் குருதி அழுத்தம் அதிகமாகிறது" என்றுசொன்னீர்களாம். என்ன கோபியன்னேன் இந்த காரணத்துக்காகவே தான் தம்பி கதிர் அவர்கள் தங்கள் பெயரை "பொறி கோபி" என்றும் அந்த "கப்பியூட்டர் கத்துக்கடா கத்துக்கடா"ன்னு கதறும் அந்த கோபியை "தகடூர் கோபி" எனவும் பெயரை மாற்றி விட்டதாக சொன்னார். அதனால அந்த காரணமும் வீணாகி விட்டது?

இப்போது புதிதாக என்ன காரணம் சொல்ல உத்தேசம்!!

என்னை பூங்காவிலே கூப்பிடவில்லை எனவும் சொல்லமுடியாது, ஏனனில் பூங்கா என்பதே என்னால் அழிக்கப்பட்டுவிட்டது என ஒரு கிசு கிசுவும் இப்போது உலவுகிறது!!

இனிமேல் புதிதாக காரணம் கண்டுபிடிக்காமல் உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வார்க்கவும்!!!

16 comments:

 1. சே , மறுபடியுமா மொக்கை அழைப்பு. அவரே வருவாருன்னு ரெண்டு டின் பீர் அடிச்சுட்டு சொன்னதா, கோபிசெட்டிபாளையம் சொன்னாரு

  ReplyDelete
 2. முடியலைப்பா. தாங்க முடியலைப்பா. விட்டுடு.விட்டுடு.விட்டுடு.

  ReplyDelete
 3. கோபி ஒரு பதிவு போடுங்கள். உங்களுக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டு விட்டன்.

  ReplyDelete
 4. தலைப்பு பாத்துட்டு ஆர்வமா வந்தேன்... :(

  வரட்டுமே.. இப்ப என்ன அவசரம்...

  ஆங் உங்க சூது புரிஞ்சு போச்சு, அவன் வந்த வேகத்துக்கு தம்பிய பன்னி கடிச்சுடுச்சு என்று பதிவு போடுவான் அதில் நீங்க போய் தாண்டவம் ஆடலாம் என்ற எண்ணத்தில் தானே இப்படி வலுக்கட்டாயமாக கூப்பிடுறீங்க...

  ReplyDelete
 5. Label:- நகைச்சுவை மாதிரி'ன்னு போட்டுருக்கீங்க..... So :))

  ReplyDelete
 6. பதிவுலகை விட்டு போக இருப்பவரை ஏன் சந்தோசமா விட வேண்டியது உங்கள் கடமை இல்லையா..?

  ReplyDelete
 7. //இனிமேல் புதிதாக காரணம் கண்டுபிடிக்காமல் உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வார்க்கவும்!!!//
  ரிப்பீட்டேய்
  பின் குறிப்பு ‍ நான் ஆல்கஹால் குடிப்பது இல்லை. இது அபி அப்பாவுக்காக மட்டும்

  ReplyDelete
 8. தெய்வமே இன்னும் உங்க கொலைவெறி அடங்கவில்லையா ? ;(

  ReplyDelete
 9. இத்தோட இந்த மாதம் 3வது கொலைவெறி பதிவு...முடியல விட்டுங்க...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;(

  ReplyDelete
 10. எல்லாரும் பதிவை போடுறதுலேயே குறியா இருந்தா யார்தான் பின்னூட்டம் போட்டு ஆதரவு கொடுக்கிறது? எங்க அண்ணன் அந்த உண்ணதமான ஆதரவு கொடுக்கும் பணியை நாமெல்லாருக்கும் சேர்ந்து செய்யுறார். :-))))

  அதான் அவருக்கு பதிவு போட நேரமில்லை. ;-)

  ReplyDelete
 11. சைக்கிள் ஓட்டுறதை பத்தி பதிவு போட்டார்ல. அடுத்த கார் ஓட்டுவது எப்படி கத்துக்கிட்டு வந்து பதிவு போட போறேன்னு சொன்னார். அதுக்கு நாமெல்லாம் காத்திருக்கணும்ல. :-)))

  ReplyDelete
 12. //
  வேறு வழி இல்லாமல் காயத்ரியை தமிழ்பட தரநிர்ணய ஆய்வாளராக பதவி பிரமாணம் செய்து வைத்தோம். ஆனால் அவர்களும் கவிதை அழுதும் மன்னிக்கவும் எழுதும் சொந்த பணி நிமிர்த்தமாக தமிழ் சினிமா விமர்சனம் செய்வதில்லை
  //
  //
  பதிவர்களோடு கூட்டு சேர்ந்தும் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை.(அது என்ன அரை என்று கேட்கிறீகளா, இரு பின்னூட்டத்தில் //ரிப்// என்று மட்டும் போட்டிருந்தீர்கள்.
  //
  //
  தாங்கள் இது வரை இந்த மாதத்துக்கான பதிவு போடவில்லை என்பதால் உங்கள் கம்பெனி மீதூ சந்தேகப்படுவதா உங்கள் மீது சந்தேகப்படுவதா?
  //
  EXCELLENT WRITING AGAIN BY ABIAPPA

  ReplyDelete
 13. அபிஅப்பா பீர்லாம் குடிப்பிங்களா? தப்பில்லயா?

  ReplyDelete
 14. திருட்டு சிடி போடரவங்கள எதிர்த்து போராட்டம் நடத்தும் திரைபடத்துறையினர்,இனி திரைப்படம் முழு விமர்சனம் பதிவு எழுதி வியாபாரத்தை கெடுகுறவங்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தனும் போல..

  பின் குறிப்பு : தவறு செய்ய ஆட்களை தூண்டுவதோடு , "திரைப்படம் முழு விமர்சனம் பதிவுக் குழு"க்கு அபி அப்பா தலைவராக இருப்பதற்கு அவருடைய இந்த பதிவே ஒரு சாட்சி " என்று நான் சொல்லவில்லை என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்.

  [ அபி அப்பா,வருவதற்க்கு முன்னால "தலை மறை"வு ஆக வேண்டியிருப்பதால...இப்ப பை..பை..]

  ReplyDelete
 15. // உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வார்க்கவும்!!!//
  ஹா..ஹா..... நல்லாயிருக்கு..

  ReplyDelete
 16. அபி அப்பா,இந்த ரசிகன் ரொம்ப கில்லாடிதான்.அவரோட இடுகையில உங்களை கண்ணாபின்னா நு குறை சொல்லிட்டு,பாக்கப் போன எங்க கிட்ட
  //யாரும் அபி அப்பாவிடம் " போட்டுக்' கொடுக்க வேண்டாமுன்னு கேட்டுக் கொள்கின்றேன்.//
  சொல்லிட்டு ,
  இப்ப கூட
  //தவறு செய்ய ஆட்களை தூண்டுவதோடு , "திரைப்படம் முழு விமர்சனம் பதிவுக் குழு"க்கு அபி அப்பா தலைவராக இருப்பதற்கு அவருடைய இந்த பதிவே ஒரு சாட்சி " என்று நான் சொல்லவில்லை//
  சொல்லரார்.

  உங்க மேல் 'கொலை வெறி'யா திரியும் ரசிகன; எதாச்சும் பண்ணி கூல் பண்ணப் பாருங்க.ஹாஹா..

  // அபி அப்பா மறை முகமா லஞ்சம் கேக்கராருன்னு// -ரசிகன் சொன்னதை நான் சொல்லவில்லை.

  http://rasigan111.blogspot.com/2007/10/blog-post_17.html

  மன்னிச்சிடு ரஸிகா உண்மை சொல்லலனா எந்தலையே வெடிச்சிடும்.

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))