பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 3, 2007

என் புதிய தோழன் DXB - 11690

எனக்கு நாளை முதன் இவன் புதிய தோழன். இவன் துபாய்க்கு வந்து 4 வருடம் ஆகிவிட்டன,மூக்கு சப்பைக்காரன், ஆனால் ஜப்பான் காரன் இல்லை. ஷேக் சையது சாலையில் சும்மா 120 கி.மீ வேகம் போறான். சக்குன்னு நிக்கிறான். சர்ருன்னு திரும்புறான். கூட வரும் சக வண்டிகளை அனாயசயகமாக முந்துகிறான். வெள்ளைகாரனாட்டம் கலரு இவன்.

காலையில் நான் அலுவலகம் போக கிளம்பி வெளியே வந்தால் எனக்கு முன்னமே குளிச்சு முடிச்சுட்டு ரெடியா நிற்ப்பதாக சொல்லியிருக்கான். அருமையா ஸ்டீரியோ எபக்டில் பாடுகிறான்.

ஆனா இவனுக்கு ஷேக்சையது சாலையில் டோல்கேட் எங்கே என சரிவர தெரியாது. ஆனாலும் பிரச்சனை இல்லை,அதான் எனக்கு தெரியுமே, நான் சொல்லி கொடுத்துப்பேன். நான் இனி எந்த நேரத்திலும் நடுநிசியிலும் எப்ப நெனச்சாலும் சர்ன்னு போய் சினிமா பார்த்துட்டு வரமுடியும்.

நினைத்த நேரத்தில் சிம்ரன் ஆப்பகடை போகலாம். கோவிலுக்கு போகலாம்.ஆபீஸில் போரடிச்சா எப்போ வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம். வீட்டிலே வெள்ளிகிழமை போரடிச்சால் ஆபீஸ் போகலாம்!

வாடா என் இனிய தோழா DXB 11690

43 comments:

  1. ஹய்யா, அபிஅப்பா கார்வாங்கிட்டாரு இனி ஜாலி தான் அதிலே வச்சு ஒரு ரவுண்டு அடிக்க சொல்லனும்ன்னு நாக்கை தொங்க போட்டுகிட்டு இருக்கும் குசும்பா, உனக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்! துபாய்ல கார் வாங்க்குவது வாழைப்பழம் வாங்குவது போல என்று உனக்கு தெரியும், ஆனால் லைசென்ஸ் வாங்குவது குதிரை கொம்பு என்றும் உனக்கு தெரியும். பின்ன எதுக்கு இந்த பதிவுன்னு கேக்குறியாப்பா, அந்த ஆந்திரா பாடாவதி டிரைவர் போயாச்சு, DXB 11690 ரோல் நம்பர் உள்ள ராமு என்கிற தமிழ் பையன் நாளை முதல் டிரைவர். அவன் தான் என் புதிய தோழன்!

    திஸ்கி: சிறந்த மொக்கை லிஸ்ட்டிலே வருமாங்க இது, சொல்லுங்க மக்கா

    திஸ்கி 2: ம்...ஒண்ணுமில்லை..வந்து குமுறுங்க

    ReplyDelete
  2. வாழ்த்து சொல்லலாம்ன்னு வந்த இப்படி கவுத்துப்புட்டீங்களே. :-(

    ReplyDelete
  3. மாமா காரு வாங்கியாச்சா? அப்ப என்ன ஒரு ரவுண்டு மாமா.

    ReplyDelete
  4. ராமு என்ற அந்த இளைஞனுக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடுங்க..

    புது காரு புது ஓட்டுனர் கலக்குற அபிஅப்பா

    அன்புடன்
    அரவிந்தன்

    ReplyDelete
  5. அண்ணாத்தே!
    நம்மூருக்காரரு வாங்கியிருக்கற கார பார்க்கலாமுனு,
    நானும் நாக்கத்தொங்கப்போட்டுக்கிட்டு அந்த நம்பர் வைச்சு கூகுள் பார்த்த என்னமோ வருது!
    அது சரி கதை இப்படியா?

    ReplyDelete
  6. அபிஅப்பா டிரைவர் மட்டும்தான் மாத்தி இருக்கிங்களா? :)

    ReplyDelete
  7. முயற்சி திருவினையாக்கும்...

    துபாய்ல லைசன்ஸ் வாங்க நம் சொத்தில் பாதி எழுதி கொடுக்கனும் என்று என் மச்சான் கூறியதுக்கான அர்த்தம் இப்ப தான் புரியுது....

    நடக்கட்டும் நடக்கட்டும்.. இந்த நூற்றாண்டுக்குள் வாங்கிடலாம் கவலைய விடுங்க...

    ReplyDelete
  8. 15 வருசமா முடியலைய்யாம்... இந்த வருசம் மட்டும் முடிச்சுடுமா என்ன அப்படினு தம்பி என்கிட்ட சொன்னதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கு பதிகிறேன்....

    ReplyDelete
  9. அபிஅப்பா டிரைவர் மட்டும்தான் மாத்தி இருக்கிங்களா? :)////

    என்ன நிலா அப்புடி கேட்டுபிட்ட.. கெக்கெ பிக்கென்னு.. மாமாவுக்கு நாந்தேன் இப்ப எல்லாம். ..உக்கும்..

    ReplyDelete
  10. 3 ம் பைலில் இருந்து 30 ம் பைல் வரை போயி துபாய் சரித்திரத்தில் உங்கள் பெயரை ஒட்ட வைத்து விட்டு வாங்க தொல்ஸ்....

    ReplyDelete
  11. /திஸ்கி 2: ம்...ஒண்ணுமில்லை..வந்து குமுறுங்க/

    இப்படீன்னு சொல்லவேண்டியது, அப்புறம் வந்து பாத்தா இங்க எங்க ஊட்டு ஓனரு ஓகே சொல்லனும் பாப்பா அப்பாலிக்காதான் உடுவேன் ன்னு சொல்லுது.

    நாங்க என்னதான் பன்றது?

    இப்புடியே உசுப்பெத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் பன்னி உடரிங்களே அபிஅப்பா

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    டிஸ்கி: இம்சை மாமாவ காணோம் சோ அவரு சார்பா நானே பின்னூட்டம் போட்டுடேன்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அபி அப்பா.

    நல்ல படியா துபாய் வீதிகளில் இனி தேர்வலம் தான்:))))

    ReplyDelete
  13. நேரா வண்டிய கெளப்பிகிட்டு இங்க வந்து சொல்லுங்க. நம்பறோம் உங்க ப்லாக்ல இருக்கறதெல்லாம் நம்பறதுக்கு நாங்க ஆ.வி,கல்கி, குமுதம், அ.வி பார்ட்டிகளா....

    ReplyDelete
  14. உங்களுக்கு சைக்கிளே ஓட்டத்தெரியாதுன்னு இங்க பல பேருக்கு தெரியாது...

    ஆனா பைக் ஓட்ட தெரியும்னு கோபிய பின்னாடி உக்கார வச்சு உதார் விட்டது அவன் நிஜார் அந்து போயி எங்கிட்ட பொலம்பினது உங்களுக்கு தெரியாது...

    மாயவரத்துல நீங்க சில்லறை வாங்காத தெருவே இல்லைன்னு எல்லாரும் பேசிக்கறாங்களே...

    இதெல்லாம் தெரிஞ்சிருந்து நாங்க எப்படி நம்ப முடியும்.

    ஓஹோ இந்த உண்மையெல்லாம் தெரியாதவங்களுக்குதான் இந்த பதிவா... சாரி
    :)

    ReplyDelete
  15. துபாய் டிராபிக்கில் Shiek Zayed ரோட்டில் 120 KM வேகமா? நம்ப முடியலையே சார்? சfபா பூங்கா தாண்டி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனாலும் நீங்களே கார் ஓட்டி கஷ்டப்பட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. புது கார், புது ஓட்டுனர், புது டெம்பிளேட் எல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா Mozilla Firefox ல தெரியலையே!

    ReplyDelete
  17. அபி அப்பா நானும் டிரைவிங் டெஸ்டீல் பெயில் ஆயிகிட்டு தான் இருக்கேன் , நீங்களும் அப்படியா? ஆனா நீ பிளைட்ட கூட சூப்பரா ஓட்டுவீங்கன்னு எல்லோரும் சென்னாங்க!!!

    ReplyDelete
  18. "அந்த ஆந்திரா பாடாவதி டிரைவர் போயாச்சு, DXB 11690 ரோல் நம்பர் உள்ள ராமு "

    அப்பா போயாச்சா அன்னைக்கு அவரு என்கிட்ட பேசின ஹிந்தி இன்னுமும் என் காதுக்குள்ள நிக்குது!!!!

    ReplyDelete
  19. "நாகை சிவா said...
    முயற்சி திருவினையாக்கும்...

    துபாய்ல லைசன்ஸ் வாங்க நம் சொத்தில் பாதி எழுதி கொடுக்கனும் என்று என் மச்சான் கூறியதுக்கான அர்த்தம் இப்ப தான் புரியுது...."

    இது வரை 56,000ரூபாய் செலவு செஞ்சாச்சு புலி :((((((((((((((

    இன்னும் இரண்டு நாட்களில் 6,000 ரூபாய் 7 கிளாஸுக்கு கட்டனும்:(((

    ReplyDelete
  20. டிஸ்கி: இம்சை மாமாவ காணோம் சோ அவரு சார்பா நானே பின்னூட்டம் போட்டுடேன்

    Proxy comment potta Nila pappaku Thanks ....

    ReplyDelete
  21. நிலா said...
    /திஸ்கி 2: ம்...ஒண்ணுமில்லை..வந்து குமுறுங்க/

    இப்படீன்னு சொல்லவேண்டியது, அப்புறம் வந்து பாத்தா இங்க எங்க ஊட்டு ஓனரு ஓகே சொல்லனும் பாப்பா அப்பாலிக்காதான் உடுவேன் ன்னு சொல்லுது.

    நாங்க என்னதான் பன்றது?

    இப்புடியே உசுப்பெத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் பன்னி உடரிங்களே அபிஅப்பா

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    Repeatei.....

    ReplyDelete
  22. துபாய்ல கார் வாங்க்குவது வாழைப்பழம் வாங்குவது போல என்று உனக்கு தெரியும், ஆனால் லைசென்ஸ் வாங்குவது குதிரை கொம்பு ?

    Puriyala vilakavum ...

    ReplyDelete
  23. \\தம்பி said...
    ஓஹோ இந்த உண்மையெல்லாம் தெரியாதவங்களுக்குதான் இந்த பதிவா... சாரி
    :)\\

    அட நீ வேற கதிரு...எல்லாத்துக்கும் தெரியும்....இருந்தாலும் பாவம் அபி அப்பான்னு விட்டுடாங்க.... ;))

    \\திஸ்கி 2: ம்...ஒண்ணுமில்லை..வந்து குமுறுங்க\\

    அபி அப்பா உண்மையிலேயே ஒரு நாளைக்கு குமுற போறாங்க... ;)

    ReplyDelete
  24. //இன்னும் இரண்டு நாட்களில் 6,000 ரூபாய் 7 கிளாஸுக்கு கட்டனும்//

    இந்த முறையும் அப்பீட்டா?

    ReplyDelete
  25. y dont u try to get it in oman? its easy. but u have to be in muscat atleast for 6 months. it costs not more than 30000rs.
    u can change it there in UAE with some fee.

    ReplyDelete
  26. wers my comment?
    ok let me type once again....

    ReplyDelete
  27. Hi aa,

    ydont u try in oman. its easy to get license. but u have to be in oman for 6 months atleast. it costs not more than rs 30000.(there is other option, u can bargain in hour basis).
    that GCC license can be changed to anyother GCC with some fee.

    ReplyDelete
  28. Hi aa,

    y dont u try in oman. its easy to get license. but u have to be in oman for 6 months atleast. it costs not more than rs 30000.(there is other option, u can bargain in hourly basis).
    that GCC license can be changed to anyother GCC with some fee.

    ReplyDelete
  29. Hi aa,

  30. Hi aa,

  31. Hi aa,

  32. Hi aa,

  33. //
    துபாய்ல கார் வாங்க்குவது வாழைப்பழம் வாங்குவது போல என்று உனக்கு தெரியும், ஆனால் லைசென்ஸ் வாங்குவது குதிரை கொம்பு என்றும் உனக்கு தெரியும்
    //
    கேள்வி பட்டிரூக்கிறேன்

    //
    தம்பி said...
    நேரா வண்டிய கெளப்பிகிட்டு இங்க வந்து சொல்லுங்க. நம்பறோம் உங்க ப்லாக்ல இருக்கறதெல்லாம் நம்பறதுக்கு நாங்க ஆ.வி,கல்கி, குமுதம், அ.வி பார்ட்டிகளா....
    //
    //
    தம்பி said...
    உங்களுக்கு சைக்கிளே ஓட்டத்தெரியாதுன்னு இங்க பல பேருக்கு தெரியாது...

    ஆனா பைக் ஓட்ட தெரியும்னு கோபிய பின்னாடி உக்கார வச்சு உதார் விட்டது அவன் நிஜார் அந்து போயி எங்கிட்ட பொலம்பினது உங்களுக்கு தெரியாது...

    மாயவரத்துல நீங்க சில்லறை வாங்காத தெருவே இல்லைன்னு எல்லாரும் பேசிக்கறாங்களே...

    இதெல்லாம் தெரிஞ்சிருந்து நாங்க எப்படி நம்ப முடியும்.

    ஓஹோ இந்த உண்மையெல்லாம் தெரியாதவங்களுக்குதான் இந்த பதிவா... சாரி
    :)
    //

    எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. சே, அந்த கார் படம் போட்டா என்ன உசுரா போயிரும்? நாங்களும் துபாய் பார்த்துக்குவோம்ல

    ReplyDelete
  35. தம்பி , மேட்டர் அப்படியா. தெரியாத்தனமா நானும் அபிஅப்பாவை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ............ நினைச்சுட்டேனே

    ReplyDelete
  36. அடப்பாவி.. நான் கார்தான் வாங்கிட்டீரோன்னு நெனச்சேன்!

    மொக்கையிலும் மொக்கை மகா மொக்கை..

    நாளைக்கு பதிவு என்ன? வீட்டுக்கு எதிர்லே 100 கார் பார்க் பண்ணியிருக்கேன்னுதானே?

    யோவ்!

    ReplyDelete
  37. அப்ப ராமுவும், காரும்,பின்னே நீங்களுமா?

    வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  38. பாவம் ராமு!! வேறென்னத்த சொல்ல??

    ReplyDelete
  39. "madhan said...
    Hi aa,

    y dont u try in oman. its easy to get license. but u have to be in oman for 6 months atleast. it costs not more than rs 30000.(there is other option, u can bargain in hourly basis).
    that GCC license can be changed to anyother GCC with some fee."

    அது அந்த காலம் (ஒரு வருடம் முன்பு) இப்பொழுது எந்த GCC யாக இருந்தாலும் இங்கு வந்து திரும்ப டெஸ்ட் பாஸ் செஞ்சாகனும்!!!

    நண்பன் கத்தார் லைசன்ஸ் 6 வருடம் வைத்து இருந்தவன், இப்பொழுது 2 வது டெஸ்டிலும் பிகில்!!!

    ReplyDelete
  40. இப்படியே வடிவேலு மாதிரி பேருவாங்கி
    கிட்டே இருக்கப்போறதா
    உத்தேசம் போல இருக்கு
    ரொம்ப
    நல்லவருங்க நீங்க...

    ReplyDelete
  41. //அது அந்த காலம் (ஒரு வருடம் முன்பு) இப்பொழுது எந்த GCC யாக இருந்தாலும் இங்கு வந்து திரும்ப டெஸ்ட் பாஸ் செஞ்சாகனும்!!!

    நண்பன் கத்தார் லைசன்ஸ் 6 வருடம் வைத்து இருந்தவன், இப்பொழுது 2 வது டெஸ்டிலும் பிகில்!!!//

    I may be wrong. bcos i donno abt UAE. but one of my coleague uses his qatar license in oman. FYI, he joined few months back.

    ReplyDelete
  42. ##.:: மை ஃபிரண்ட் ::. said...
    வாழ்த்து சொல்லலாம்ன்னு வந்த இப்படி கவுத்துப்புட்டீங்களே.
    #

    வாங்க நீங்க தான் முதல்!!:-))

    ReplyDelete
  43. காரானாலும் சரி டிரைவர்ன்னாலும் சரி - வாழ்த்து சொல்லிடரேன் முதல்லே !

    பாவம் ராமு - தமிழ்ப் பையன் - பாத்துக்கங்க பத்ரமா

    ராமு உனக்கு வேற நல்ல வேலை கிடைக்கலியா ?? ம்ம்ம் - வாழ்த்துகள் சீக்கிரமே நல்ல வேலை கெடைக்க

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))