பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 25, 2007

எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))

இந்த பதிவு என்னான்னு புரியாதவங்க இதன் முதல் பாகத்துல இங்க பாருங்க. "ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க!!! என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற " பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க!!

அது வேற ஒன்னும் இல்லீங்க, எங்க அம்மா அடிக்கடி விடும் டயலாக் தான் அது. நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம். ங்கொக்கமக்கா தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா! சரி விஷயத்துக்கு வருவோம், சம்பவம் வெளிவிவகார துறை அமைச்சர் மூலமா முதல்வர் காதுக்கு போக அவரும் சைக்கிளை சீட்டுல உக்காராம ஓட்டிகிட்டே வந்துட்டார் விசாரணைக்கு. அக்க்கியூஸ்டு நான் குத்தவாளி கூட்டிலே நிக்கிறது மாதிரி முற்றத்துல நிக்க எல்லாரும் ரவுண்டு கட்டி நிக்க முதல்வர் நேரா விசாரணையே இல்லாமல் தீர்ப்பு சொல்லிட்டாரு. இனி ரோடு கிராஸ் பண்ணி எதிர்த்தாபோல இதுக்கும் ஔவையார் வேண்டாம். கொல்லை வழியா போய் ஆரியபாலா ஸ்கூல்ல போட்டுடலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி அடுத்த நாள் சித்தப்பா என்னை கொல்லை வழியாக பின் தெருவில் இருக்கும் ஆரிய பாலா ஸ்கூலுக்கு கொண்டு போனாரு. போகும் போதே நல்லா வழிய பார்த்துகிட்டேன்.

அங்க போன பின்ன தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா ஒருத்தனை பார்த்தேன். அப்பல்லாம் நான் அழுவதில்லை. சீனியர்ல்ல! முதல் ஸ்கூல் பார்த்து ரெண்டாவது ஸ்கூல் வந்தாச்சுல்ல. "இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்"ன்னு கிரிமினல் சிந்தனை மட்டுமே இருந்தது எனக்கு. மெதுவா கிட்ட போய் "டேய் உம் பேரு என்னாதா"ன்னு கேட்டேன், அப்போ எனக்கு "டா" வராது. அதுக்கு அவன் "நாதா"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு "ரா" வராது. அழுதுகிட்டே ஒரு சாக்லெட் எடுத்து குடுத்தான், அப்ப தெரியாது நாங்க ரெண்டு பேரும் பிற் காலத்துல அடிக்க போகும் கூத்து. அந்த ஸ்கூல் பின்புறம் தான் அவன் வீடு. சரின்னு கொஞ்ச நேரம் ஷேமம் எல்லாம் விசாரிச்சுட்டு அடப்பாவி அப்பா அம்மாக்களே நம்ம வீட்டில தான் இந்த கொடுமைன்னு பார்த்தா உலகம் முழுக்க "குழந்தையீயம்" கொடுமை நடக்குதான்னு அதை உடனே தடுத்தாகனும்ன்னு கிளம்பிட்டோம். "சரிதா ராதா நான் இந்த பக்கமா நேரா போறேன் நீ பின்னாதி நதந்து போ"ன்னு சொல்லிட்டு கிளம்பி வீடு வந்து சேந்தாச்சு.

வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க, இவனை எங்க விட்டாலும் வந்துடுவான். அதனால புது தெரு ஸ்கூல்ல (கொஞ்சம் பின்னால இருக்கு) சேர்த்துடுவோம்ன்னு முடிவு பண்ணி அடுத்த நாள் என் பாட்டி என்னை தூக்கிகிட்டு ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே விசயகாந்து அது போல போனாங்க. அங்க போய் தலை கட்டை பிரிச்சு வுட்டா எந்த வாத்தியாரை பார்த்தாலும் வீரப்பா மாதிரியே இருக்கு. "உக்காருடா"ன்னு கரகரன்னு சொல்றாரு சாரு! சரின்னு கதவு ஓரமா உக்காந்து கொஞ்ச நேரம் பின்ன நைசா வெளியே வந்து கால் போன போக்கிலே எங்கே போகும் இந்த பாதைன்னு இளைய ராஜா மாதிரி பாடிக்கிட்டே நடந்தேன். அப்பவும் அந்த மஞ்ச பையும் ஹிண்டு பேப்பரையும் விடலை. அப்ப புது தெருவின் குறுக்கே போகும் வாய்காலின் தண்ணி சத்தம் நல்லா இருந்துச்சு சலசலன்னு. அதிலே இறங்கி காலை தண்ணில விட்டுகிட்டு பையை தலை மாட்டுக்கு வச்சிகிட்டு படுத்துகிட்டு சின்ன சின்ன கல்லா எடுத்து தண்ணில போட்டுகிட்டு ஒரு கவிஞர் ரேஞ்சுக்கு சுகமா இருந்தேன்.

அப்ப பார்த்து நம்ம வெளி"விவகார"ம் ஸ்கூல்ல உளவு பார்க்க போய் அங்க நான் இல்லாமையால் வீட்டுக்கு போய் சொல்லி பாட்டி, அம்மா, முதல்வருக்கு சேதி போய் தலைவரும், பின்ன சித்தப்பாவின் சேக்காளிங்க ன்னு ஆளுக்க்கு ஒரு பக்கமா கிளம்பிட்டாய்ங்க. கடேசில என்னை பிடிச்சு சைக்கிள்ல முன்னால உக்காரவச்சி சித்தப்பா சாத்திகிட்டே வந்தாரு.

அதுக்குள்ள என் பாட்டி "பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்"ன்னு அழுத்தம் திருத்தமா தீர்ப்பு சொல்ல (என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி) அப்படியே எல்லாரும் ஒத்து கிட்டு ஒரு வருஷம் போகட்டும். அஞ்சு வயசிலே சேர்த்துக்கலாம்ன்னு விட்டுட்டாங்க.

அடுத்த ஆயுத பூஜை வந்துச்சு. சரி பையன் தெருவிலே இருந்த மூணு ஸ்கூல்லயும் படிச்சுட்டான், இனி மேல் படிப்புக்காக முறைப்படி நேஷனல்ல சேர்த்துடலாம்ன்னு முடிவு பண்ணி மாலை, மிட்டாய் எல்லாம் வாங்கி அப்பா, சித்தப்பா சகிதமா ஸ்கூல் போய் அப்பா சேர்த்து விட்டாங்க. அவங்க ஒன்னாப்பு படிக்கும் போது அன்னபாக்கியம் டீச்சராம். அவங்க கிட்ட தான் நானும் படிக்கனும்ன்னு பிடிவாதமா 1 A விலே சேர்த்தாங்க. அப்பாவுக்கே டீச்சர்ன்னா அப்ப எப்படி இருப்பாங்க, கிட்டதட்ட ரிட்டையர்டு ஆகிற மாதிரி. ஆனா பக்கத்து கிலாஸ் 1 C யிலே நம்ம ராதா. ஒன்னுக்கு போக வெளியே வரும் போது ராதா ரொம்ப பீத்திகிட்டான். "எங்க டீச்சர் தாண்டா அழகு, உங்க டீச்சர் உங்க பாட்டி மாதிரி இருக்காங்கன்னு" என் ஈகோவை தட்டி விட்டான்.

ரெண்டு கிளாசுக்கும் நடுவே ஒரு தட்டி தான். கீழே ஒரு ஆள் புகுந்து போகும் அளவு இடைவெளி இருக்கும். நான் அன்ன பாக்கியம் டீச்சர் கிளாசில் கடைசி வரிசையில் இருந்தனா. அப்படியே கீழ கடல் கன்னி மாதிரி படுத்துகிட்டு பாதி உடம்பு தலை முதல் வயிறு வரை லெஷ்மி டீச்சர் கிலாசில் வைத்து கொண்டு மீதி பாகம் 1 A விலே வச்சிகிட்டு ராதாவோட பேசிகிட்டே பொழுதை போக்கி கொண்டிருந்தேன். அப்போ கால்ல சுள்ன்னு அடி, டக்குன்னு உடம்பை 1 Aக்கு பாம்பு மாதிரி திருப்பி கொண்டு வந்தா பெரம்போட அன்னபாக்கியம் டீச்சர். "உனக்கு லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு தான் போகனும்ன்னா அங்கயே ஓடு"ன்னு சொல்ல அதான் சாக்குன்னு சர்ன்னு அதே தட்டி வழியா பூந்து லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு வந்துட்டேன்.

அப்படித்தான் மக்கா நான் படிக்க??? ஆரம்பிச்சது.

37 comments:

  1. ///எங்க அம்மா அடிக்கடி விடும் டயலாக் தான் அது. நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம். ங்கொக்கமக்கா தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா!///
    ரியலி சூப்பர்

    ReplyDelete
  2. HiAA,

    eagerly waiting for next part...

    ReplyDelete
  3. //அதுக்கு அவன் "நாதா"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு "ரா" வராது//
    அப்ப ஆரம்பிச்ச 'உறவா' அது.

    ReplyDelete
  4. அண்ணத்தே ஏது ஃபுல் பார்ம்ல இருக்கீங்க போல!

    கலக்கல்ஸ் தான் போங்க!!!!!!

    ReplyDelete
  5. லக்ஷ்மி டீச்சர் போட்டோ எல்லாம் போடலீங்களா? :))

    ReplyDelete
  6. அப்ப அவனுக்கு "ரா" வராது. எனக்கும் தான்.

    அப்பாவோட டீச்சர் கிட்டெயெ படிச்சா நல்லா வந்திருக்கலாம். கொடுத்து வைக்கலே

    பாட்டி சொல்லைத் தட்டாம கேட்டிருக்கலாம். துபாய் தப்பிச்சிருக்கும்.

    ம்ம்ம் என்ன பண்றது

    ReplyDelete
  7. நேற்று என்னா நடந்தது தல !!!

    உங்க பேருல யாரோ சாட்டுன மாதிரி தெரிஞ்சது :(

    ReplyDelete
  8. :-))))

    அந்த ரெண்டு வெள்ளி ரகசியம்?????

    ReplyDelete
  9. நம்ம ஊரு குசும்பு அப்படியே இருக்குங்க உங்க எழுத்துல,(நானும் DBTR National தான்)
    -ஆனந்த்,துபாய்.

    ReplyDelete
  10. முடியலை.. முடியலை
    பாதிக்கு மேல் படிக்கமுடியவில்லை.
    அலுவலகமய்யா!! காலங்கார்த்தாலவே இப்பதிவு கண்ணில் படனுமா??
    :-))
    அபி அப்பா.. கொல்லாதே.

    ReplyDelete
  11. பத்து ரூபாய்க்கு படு பந்தாவான இப்படி ஒரு காரணமிருக்கா ..ஹஹஹா..அட்டகாசம்..

    ReplyDelete
  12. //
    நம்ம வீட்டில தான் இந்த கொடுமைன்னு பார்த்தா உலகம் முழுக்க "குழந்தையீயம்" கொடுமை நடக்குதான்னு அதை உடனே தடுத்தாகனும்ன்னு கிளம்பிட்டோம்
    //
    "குழந்தையீயம்"
    wow
    no one touched this subject.
    Abi appa Kalakkunga

    ReplyDelete
  13. //
    ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே
    //
    //
    பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்

    என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி
    //
    paavam avangalukku ottagam ellam therinjirukkadhu
    :-))
    //
    மேல் படிப்புக்காக முறைப்படி நேஷனல்ல சேர்த்துடலாம்ன்னு
    //
    higher studies!!
    good

    //
    அப்படித்தான் மக்கா நான் படிக்க??? ஆரம்பிச்சது.
    //
    jusr 3 question marks
    ???????????????????????????????????????????????????????

    ReplyDelete
  14. அபிஅப்பா பட்டய கிளப்பரீங்க

    ReplyDelete
  15. நட்சத்திரப் பதிவுக்குப் பின்னாடி இப்போத் தான் மறுபடியு ப்ளோவுக்கு வந்துருக்கீங்க :))

    ReplyDelete
  16. \\நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம்\\

    \\"குழந்தையீயம்"\\


    கலக்குறிங்க...;))

    ReplyDelete
  17. Abbi appa,

    //அதுக்கு அவன் "நாதா"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு "ரா" வராது//

    Andha kurangu radha thaan indha nadha vaah?

    kalakaringa ponga,
    by the way "எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))" idhuku enna explanationu sollavillaiyeh,

    tamilcinema paarpingaleh, title engaiyavadhu varanumeh.....enga idha pathi onum sollalai...!

    ReplyDelete
  18. இனி ரோடு கிராஸ் பண்ணி எதிர்த்தாபோல இதுக்கும் ஔவையார் வேண்டாம்.

    இதுக்கும்?

    நச், நச் நச் நச், அபி அப்பா, அப்போ மட்டும் இல்லை, இப்போவும் உங்களுக்கு "டா" மட்டும் இல்லை தமிழே வரலை! :P

    ReplyDelete
  19. வலை உலகிலே நாங்களும் இருக்கோமில்ல! :P

    ReplyDelete
  20. // ஆனா பக்கத்து கிலாஸ் 1 C யிலே நம்ம ராதா. //
    அபி அப்பா நல்ல வேளை 2வது வரில
    //ராதா ரொம்ப பீத்திகிட்டான்//(ன்)
    னு சொல்லி பீர வார்த்திங்க..நாங்கூட வேரவீட்டுக்குள்ள போயிடோமோன்னு பயந்துபுட்டேன்..ஹாஹா...

    ReplyDelete
  21. கடைசி இரண்டு இடுகைகளில் எங்கள் ட்ரேட் அபிஅப்பா தெரிகிறார். இதுபோல தொடரவும்.


    ஆமா, பிரகாஷ் ராஜ் 'அபியும் நானும்' என்று படம் எடுக்கிறாரே? நீங்கதான் இன்ஸ்பிரேஷனாமே அவருக்கு? காப்பி ரைட்ஸ் வாங்கியாச்சா?

    ReplyDelete
  22. //ட்ரேட் அபிஅப்பா//

    மன்னிக்கவும். ட்ரேட் மார்க் அபிஅப்பா என வாசிக்கவும்.

    ReplyDelete
  23. //தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா//

    ஊரு பெருமைய நிலை நிறுத்திட்டாங்க :::))))))))

    ReplyDelete
  24. //"எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))"//

    இரண்டா ::)) அவ்வளவு பெரிய தில்லாங்கடியா நீங்க..?

    ReplyDelete
  25. தஞ்சை குசும்புக்கு எல்லை ஏது வித்யா கலைவாணி:-))

    ReplyDelete
  26. அனானி சாரே, இது தான் இரண்டாம் பாகம், இதோட இந்த படிவு முடுஞ்சுதுப்பா:-)))

    ReplyDelete
  27. ஆமாம், வித்யா, அப்ப ஆரம்பிச்ச உறவுதான் எனக்கும் ராதாவுக்கும் இப்பவும் தொடர்வது என்பது தான் கொடுமையே:-))

    ReplyDelete
  28. யப்பா, ஆயில்யா, நல்லா ஃப்பார்ம் தான் எப்பவுமே, சரி உங்க மெயில் ஐடி வேணுமேப்பா???

    ReplyDelete
  29. கொதஸ்! இதன்ன கூத்து, இப்ப போன போது பார்த்தேன் டீச்சரை, என்னை பார்த்து கேட்டாங்க "வாடா மார்க்கண்டேயா!"ன்னு! ஆனா டீச்சர் அடுத்த வருஷம் ரிட்டையர்டு ஆக போறாங்க , போட்டோ வேணுமா???

    ReplyDelete
  30. வாங்க சீனா சார், துபாயை காப்பாத்த என்ன ஒரு ஆசை உங்களுக்கு, என்னை மாடு மேய்க்க சொல்லி!!!

    ReplyDelete
  31. துளசி டீச்சர், வெள்ளிகிழமை லீவாச்சா, ப்ஃரீயா இருப்போம் அதனால 2 பதிவு போட நேரம் இருக்கும் அதனால 2 பதிவு போட்டேன், அதான் அந்த தலைப்பு:-))

    ReplyDelete
  32. I always loved to read your post. I am eagerly waiting for next part

    Rumya

    ReplyDelete
  33. //அடுத்த நாள் என் பாட்டி என்னை தூக்கிகிட்டு ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே விசயகாந்து அது போல போனாங்க. //

    :))) அவ்வளவு சேட்டை போல சூப்பரா எழுதியிருக்கீங்க :)

    ReplyDelete
  34. //பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்//
    நல்லது சொன்னா யார் கேக்கறாய்ங்க..

    //பாட்டி சொல்லைத் தட்டாம கேட்டிருக்கலாம். துபாய் தப்பிச்சிருக்கும்.//

    துபாய் மட்டுமா? :(

    //என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி// ம்ம்ம்..அதுங்க நல்ல நேரம் தப்பிச்சிடிச்சிங்க.. அவ்வ்வ்வ்வ்வ் :(

    ReplyDelete
  35. ரொம்ப நல்ல பதிவு... வாய் விட்டு சிரிச்சேன்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))