பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 16, 2007

ஸ்மார்ட் ராமசாமி!!!!

இங்கே அமீரகத்திலே ஒரு மிக பெரிய க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு . அதற்கு மேல் ஓவர் டைம். எல்லாம் சேர்த்து 4500 ரூபாய் வரும். ஆனால் தங்குமிடமும் உணவும் கம்பெனி வழங்கிவிடும். சொர்கம்ன்னா அந்த கம்பெனி தான். கவலை இல்லாத மனிதர்களை அங்கே தான் பார்க்க முடியும். ராஜ வாழ்கை வாழ்வார்கள். 3000 ரூபாய் போதும் என ஓவர் டைம் பார்க்காமல் சந்தோஷமாக இருப்பார்கள். சிலர் எட்டு மணி நேரம் மட்டும் பார்த்து விட்டு சில வீடுகளில் அல்லது கடைகளில் பார்ட்டைம் பார்த்து 10 000 வரை சம்பாதிக்கும் திறமைசாலிகளும் உண்டு. அப்படி ரிஸ்க் எடுக்க விரும்பாத சிலர் அதே கம்பெனியில் ஓவர் டைம் பார்த்து 7000 வரை சம்பாதித்து சலிப்படைபவர்களும் உண்டு.

ஒரு கேம்ப்பில் கிட்டத்தட்ட 3000 பேர் வரை இருப்பார்கள். ஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இருப்பார்கள். பெட்டுக்கு பெட் தனி தனி டிவி, முதற் கொண்டு எல்லா வகை எலட்ரானிக் சாதனுங்களும் கூடவே சன் டிவி முதல் இப்போ வந்த கலைஞர் டிவி வரை வைத்து கொண்டு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள். அந்த கம்பெனி விசாவில் இருப்பவர்களுக்கு தான் நான் மேலே சொன்ன சம்பளம். ஆனால் வெளி கம்பனியில் இருந்து தப்பி வந்து இந்த கம்பெனியில் சேர்ந்தாலோ அல்லது விசா முடிந்து இந்த கம்பனியில் அடைக்கலம் ஆனவர்களுக்கோ 5000 ரூபாய் பேசிக், ஓவர் டைம் சேர்த்து 12000 வரை வரும்(அவர்களை கல்லிவெல்லி ஆட்கள் என சொல்லுவார்கள்) காரணம் இவர்களுக்கான விசா செலவுகளோ அல்லது எந்த வித ரெஸ்பான்ஸிபிலிட்டியும் இந்த கம்பனிக்கு கிடையாதல்லவா அதனால் இவர்களுக்கு சம்பளம் அதிகம்.

இங்கே நான் சொல்ல போவது ஒரு ஸ்மார்ட் ராமசாமியை பற்றிய கதை. நம்ம ராமசாமி முதலில் வந்து இறங்கிய இடம் அபுதாபியிலே. அந்த கம்பனியின் அபுதாபி பிரிவில் 3000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து முதல் 2 மாதம் ஓட்டினார். பின்பு ஈத் பெருநாள் லீவ் வந்தது மூன்று நாட்கள். அப்போது அபுதாபி பிரிவிலிருந்து ஷார்ஜா பிரிவிற்க்கு கம்பனியில் இருந்து இலவசமாக பஸ் விடவே நம்ம ராமசாமியும் துபாய் சுற்றி பார்க்கும் ஆசையில் ஏறிக்கொண்டார். அவருக்கு ஷார்ஜாவில் யாரும் தெரிந்தவர்கள் கிடையாது. ஆனாலும் ஏறி ஷார்ஜா வந்து சேர்ந்துவிட அங்கேயும் எல்லாருமே தமிழர்கள் தானே அங்கே ஒரு ரூமில் தங்கி கொண்டு புதிய நண்பர்கள் பிடித்து கொண்டு சந்தோஷமாக இரண்டு நாட்கள் கழித்தார். இது போல நேரத்தில் எல்லோர் ரூமிலும் விருந்தாளிகள் அதிகமாக கூடுவர். அப்போது தான் கேம்ப்பாஸ் தங்களுக்கு தேவையான கல்லிவெல்லி ஆட்களை எடுப்பார்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப. அப்படி ஆள் எடுக்கும் போது நம்ம ராமசாமியும் வரிசையில் நிற்க அவருக்கும் யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டு, அவருக்கும் பெட் ஒதுக்கப்பட்டு அடுத்த நாள் முதல் வேலையும் கொடுக்கப்பட்டு அதே கம்பெனியின் அதிகாரபூர்வ ஆனால் கல்லிவெல்லி ஊழியராக ஆக்கப்பட்டு விட்டார். தொடந்து இரண்டரை வருடம் அப்படியே அதே கம்பெனியில் தன் கூட வந்தவர்கள் அபுதாபியில் 4500 வாங்க இவர் மட்டும் 8000 வாங்கி சந்தோஷமாக இருந்தார். அப்படியே சந்தோஷமாக போய் கொண்டு இருந்த அவருக்கு விசா முடிவடையும் நாள் வந்தது. உடனே கிளம்பி அபுதாபி வந்து தன் அலுவலகத்தில் 'மன்னிப்பு' கடிதமும் 5000 ரூபாய் அபராதமும் கட்டி திரும்பவும் விசா அடித்து கொண்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் தன் பழைய நண்பர்களோடு 3000 ரூபாய் பேசிக் சம்பளத்தில் இரண்டு மாதம் வேலை செய்து விட்டு விசா அடித்த பின் பழைய படி ஷார்ஜா வந்து திரும்பவும் கல்லிவெல்லியாக அதிக சம்பளத்தில் சேர்ந்து விட்டார்.

நம் ராமசாமிக்கு வாயும் கொஞ்சம் அதிகம். ஹிந்தியும், அரபியும் கூட பேச கற்று கொண்டார். அணைவரையும் சுலபத்தில் கவந்து விடுவார்.இப்படி சந்தோஷமாக போய் கொண்டிருந்த ராமசாமி வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் அதிரடியாக போலீஸ் சோதனை நடந்தது. யாரெல்லாம் கல்லிவெல்லி ஆட்களோ அவர்களை பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றவே அந்த சோதனை. மற்ற எல்லோரிடமும் "பத்தக்கா" எனப்படும் வேலை செய்வதற்கான அடையாள அட்டை இருக்கவே இவர் மட்டும் தன்னிடம் இல்லை என சொல்லி போலீஸ் வாகனத்தில் ஏறி கொண்டார். இப்படி கல்லிவெல்லி ஆட்களை வேலைக்கு வைத்தால் அந்த கம்பெனிக்கும் அரசாங்கத்தால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அதே கம்பெனி அடையாள அட்டைதான் நம்ம ராமசாமி சட்டை பையில் இருக்கிறதே. ஆனால் எல்லோருக்கும் முன்பாக எடுத்தால் அவரும் அந்த கம்பெனி ஊழியர் தான் என தெரிந்து விடுமே என்று தான் போலீஸ் வண்டியில் ஏறி கொண்டார். பின்பு போகும் வழியில் போலீசாரிடம் காட்டி அவர்கள் இறக்கி விடவே வந்து சேர்ந்து விட்டார். கம்பனிக்கும் அபராதத்தில் இருந்து தப்பித்தோமே என சந்தோஷம். ராமசாயிடம் எப்படி போலீஸ் விட்டது உங்களை என கேட்ட போது தான் தன் அரபி புலமையை வைத்து சாமர்த்தியமாக தப்பி வந்த தாக கூறவும் இவரின் திறமையை மெச்சி அவருக்கு சூப்பர்வைசர் வேலை தரப்பட்டது. அவருடைய சம்பளமோ கிட்டதட்ட 18000 ஆகிவிட்டது. ஆனால் அவர் கூட வந்தவர்களின் சம்பளமோ 4500 தான்.

பிறகு சிறிது நாட்கள் கழித்து ராமசாமி தனியான பிராஜக்ட்க்கு சூப்பர்வைசராக ஆகி தன் திறமையை கம்பெனிக்கு காட்டி பின் உண்மையை சொல்லி கம்பெனியும் இவரை மன்னித்து இப்போது அவர் அந்த கம்பெனியின் அதிகாரபூர்வ ஊழியர். மேலும் ஊதிய உயர்வும் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் அவர் கூட வந்தவர்கள் இன்னமும் அதே 4500 மட்டும் வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

இவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அந்த திறமை எனக்கு பிடிக்கிறது. இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் அவரின் திறமை எனக்கு பிடிக்கும். என்றைகாவது பதிவு போட ஒன்னும் தோன்றாத போது அவரின் மற்ற விஷயங்களை சொல்கிறேன்.

திஸ்கி: தலைவர் பேர் ராமசாமி இல்லீங்க ,நான் சும்மா மாத்தி போட்டிருக்கேன்!!

27 comments:

  1. ராமசாமி செய்த சரியா தவறா என்பதற்கு எனக்கு விடை தெரியவில்லை. ஆனால் அந்த பணியாளர்களின் கஷ்டம்தான் எனக்குத் தெரிகிறது.

    ReplyDelete
  2. நாயகன் ரேஞ்சுக்குக் கேள்வி கேட்டா நான் என்னத்த சொல்ல?

    ReplyDelete
  3. என்னங்க!20 பேர் ஒரு அறையில் ஆட்டு மந்தை மாதிரி.மேலும் விசா இல்லாத பயந்து வாழும் தன்மையில் ராமசாமி அவர்களை கேட்டுப் பாருங்கள் அவர் அனுபவித்த வலிகளின் ரணங்களை.வங்காள தேச சுத்திகரிப்பு வேலை நண்பர்களுக்கு அடுத்து தமிழனின் தலை வரிசையா?சேரனின் அணுகு முறை தவறா அல்லது தமிழனின் நிதர்சனம்தான் சரியா விவாதத்திற்குரியது.

    ReplyDelete
  4. ஏனுங்க! என் கதையப் போட்டிங்களே எனக்கு எங்க கமிஷன்.

    ReplyDelete
  5. //
    அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு
    //
    இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.

    ReplyDelete
  6. //
    ஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இருப்பார்கள். பெட்டுக்கு பெட் தனி தனி டிவி, முதற் கொண்டு எல்லா வகை எலட்ரானிக் சாதனுங்களும் கூடவே சன் டிவி முதல் இப்போ வந்த கலைஞர் டிவி வரை வைத்து கொண்டு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள்.
    //
    ஒரு ரூம்ல 20 பேர் எப்படி சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள்!!!!!!!!

    ReplyDelete
  7. //
    இவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அந்த திறமை எனக்கு பிடிக்கிறது.
    //
    good

    இது எப்ப நடந்தது 15 வருசத்துக்கு முன்னாலயா????

    ReplyDelete
  8. //க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான்// என்ன வேலை செஞ்சா என்ன சட்ட விரோதமில்லாம உழைத்து சாப்பிட்டா சரிதான். உங்களுடைய இந்த வரிகளில் தொனிப்பது ஏதோ 30000 பேரும் க்ளீனிங் வேலை செய்வதைப்போல் இருக்கிறது. எந்த க்ளீனிங் கம்பெனி என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  9. ////
    அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு
    //
    இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.//

    இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல. ஆனா இது நம்பறமாதிரியும் இல்ல

    ReplyDelete
  10. வித்யா! நீங்க கவலை படும் அளவு ஒன்னியும் இல்ல! ஏசி கட்டடத்துக்குள்ளே அருமையா மோப் ஸ்டிக், பாலிஷ் மிஷின் ன்னு ஜாலியா இருப்பாங்க! நேரில் பார்க்காத மத்தவங்க வேனா தேவையில்லாம கவலைப்படுவாங்க! ஆனா ஊரிலே அவன் பங்ளாவை பார்த்து நானே பிரம்மித்து இருக்கேன்!!

    ReplyDelete
  11. அபி அப்பா

    அபி அப்பா

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..!

    கல்லிவல்லின்னா என்னா?

    ReplyDelete
  12. கொத்ஸ்! நாயகன் ரேஞ்சுக்கெல்லாம் இல்லைங்க சும்மா கேட்டேன் அவ்வளவுதான்!:-))

    ReplyDelete
  13. வாங்க நட்டு! என்னவோ ஒரு ரூமில் 20 பேர் என்பது நம்ம வீட்டு ரூம் மாதிரி ஒரு பெட் ரூம் மாதிரியா இருக்கும்! அதுக்கு தகுந்த வசதியோட இருக்கும். ஆனா பொதுவா ஒரே டிவி வச்சிக்கும் மனப்பான்மை நம்ம மக்களுக்கு எங்க இருக்கு, ஒருத்தன் சன் டிவி கேட்டா இருத்தன் கிரிக்கெட் கேட்பான் அதனால தனிதனியா வச்சிக்கும் அளவு சந்தோஷமா இருப்பாங்க! நீங்க நினைக்கும் அளவு மந்தையாக இருக்க மாட்டாங்க, அதை நேரில் பார்த்தால் புரியும்!!

    ReplyDelete
  14. நட்டு! வங்க தேச ஆட்கள் மாத்திரமா சுத்திகரிப்பு வேலை செய்யுராங்க, கண்டிப்பா நம்ம ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க, ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே என் ஆதங்கம்! வாங்கய்யா வாங்கய்யா படிச்சுட்டு வாங்க இல்லாட்டி படிச்ச மாதிரி நடிங்க, இல்லாட்டி ராமசாமி மாதிரி ஸ்மார்ட்டா இருங்க இதுவே என் ஆசை!!!

    ReplyDelete
  15. மங்களூர் சிவா! நீங்க சொல்வது உண்மை! ஆனா திருப்பூர்ல வேலை பார்த்தாகூட மாதம் 5000 கிடைக்கும் ஆனா வெறும் மஞ்ச பையை எடுத்துகிட்டு போனா போதும் ஆனா ஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன்னு சொல்லும் நாதாறிங்க இருக்கும் வரை நம்ம பசங்க இப்படித்தான் 300 திர்காமுக்கு வேலை செய்வாங்க, நீங்க முதல்ல நம்ம ஊர் ஆளுங்களை திருத்த பாருங்க பின்ன ஃபாரின் மாப்பிள்ளையை திருத்தலாம் ஓக்கே!!

    ReplyDelete
  16. //ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க// எதற்காக இப்படி தமிழனை கேவலப்படுத்துகிறீர்கள்?. நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரம் தவறானதாகவே தெரிகிறது.

    ReplyDelete
  17. \\Anonymous said...
    //க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான்// என்ன வேலை செஞ்சா என்ன சட்ட விரோதமில்லாம உழைத்து சாப்பிட்டா சரிதான். உங்களுடைய இந்த வரிகளில் தொனிப்பது ஏதோ 30000 பேரும் க்ளீனிங் வேலை செய்வதைப்போல் இருக்கிறது. எந்த க்ளீனிங் கம்பெனி என்று சொல்ல முடியுமா?\\

    முடியாது அனானி சொல்ல முடியாது, நீங்கள் உண்மயான பெயரில் வந்து எனக்கு மெயில் அனுப்பினா சொல்ல ச்சான்ஸ் இருக்கு, காரணம் இங்கு இருக்கும் க்ளீனிங் கம்பனி எல்லாம் தமிழனை நம்பியே இருக்கு. நான் தான் நேரிடையே சொன்னேனே க்ளீனிங் கம்பனி என, பின்ன என்ன தொனி இருக்கு தோனி இருக்குன்னு!!!எல்லாரும் அக்ரிமெண்ட்டில் ஒத்துகிட்டு வந்தவங்கதான் அந்த சம்பளத்துக்கு, இது அந்த கம்பனியின் தப்பு இல்லை! தமிழன் வரலைன்னா பங்காளி வரப்போறான் அத்தனையே ஆனாலும் 80000 குடுத்து இப்பவும் 3000 க்கு வர்ராங்கன்னா அது "ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளை" என ஆசைப்படும் நாசமா போன மாமனார்களின் கொல வெறி தான் காரணம்!!!!

    ReplyDelete
  18. மங்களூர் சிவா! இதல்லாம் 15 வருஷத்துக்கு முன்ன மட்டுமல்ல இப்பவும் அப்படித்தான்!!

    ReplyDelete
  19. ஆயில்யா! உமக்கு தெரியாத கல்லிவெல்லியா! நான் தான் சரியா சொல்லியிருக்கேனே! பின்ன என்ன!!!

    ReplyDelete
  20. ##Anonymous said...
    //ஆளுங்களும் செய்யுறாங்க ஆனா செண்ட் அடிச்சுட்டு ஊருக்கு வந்துவாங்க பாழாப்போன நம்ம ஆளுங்க// எதற்காக இப்படி தமிழனை கேவலப்படுத்துகிறீர்கள்?. நீங்கள் ஊருக்கு போகும்போது வொர்க் யூனிபார்ம்ல தான் போவீர்களா? கொடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரம் தவறானதாகவே தெரிகிறது####

    அனானி சாரே நான் என்ன புள்ளி விபரம் சொல்லி கிழிச்சுட்டேன்ன்னு இப்படி வர்ரீங்க! நீங்க பதிவையும் சரியா படிக்கலை பின்னூட்டத்தயும் சரியா படிக்கலைன்னு தெரியுது! நான் எங்கே தமிழனை கேவலபடுத்தினேன்னு சொல்லுங்க என் முழு பின்னூட்ட பதிலையும் பார்த்து!விவாதம் செய்ய நான் தயார், முதல்ல படிச்சுட்டு வாங்க!! எனக்கு தெரிஞ்ச சப்ஜெட்ல நான் எப்பவும் தோத்ததில்லை!!!

    ReplyDelete
  21. //ஆனா ஒரு மலையாளி கூட இந்த தொழிலில் இல்லை என்பதே என் ஆதங்கம்!//

    சேட்டன்கள் இல்லாமல் ஒரு கம்பெனியா?அதுவும் அமீரகத்தில்!எனக்கு சந்தேகமாக இருக்கு.புலன் விசாரணை தேவை.

    ReplyDelete
  22. உண்மையிலே ஸ்மார்ட் ஆளு தான் அவரு... ஒவர் ஸ்மார்ட் ஆகாத வரைக்கும் சந்தோஷமே... :)

    ReplyDelete
  23. //
    ஃபிளைட்ல இருந்து இறங்கினாதான் பொண்ணு குடுப்பேன்ன்னு சொல்லும் நாதாறிங்க இருக்கும் வரை நம்ம பசங்க இப்படித்தான் 300 திர்காமுக்கு வேலை செய்வாங்க, நீங்க முதல்ல நம்ம ஊர் ஆளுங்களை திருத்த பாருங்க பின்ன ஃபாரின் மாப்பிள்ளையை திருத்தலாம்
    //
    @அபிஅப்பா,

    ஒன்றை நான் மொதல்ல தெளிவு படுத்திடறேன்.

    நான் யாரையும் திருத்த வரலை அது எனக்கு தேவையும் இல்லை.

    6500 திர்ஹாம்ஸ் மாச சம்பளம் ஏறக்குறைய 80000ரூபாய் ஆஃபர் கிடைத்த 'சங்கு'விற்கே 4 தடவை யோசனை செய்ய சொன்னேன்.

    எனக்கு தெரிந்தவரை கணவன் மனைவி இரண்டு பேரும் வேலை பார்க்கவில்லை என்றால் எவ்வளவு சம்பாதித்தாலும் வாடகை அது இது என்று அங்கேயே காலியாகிவிடும்.

    இல்லைனா ஆடிட்டர் போன்ற மிக உயர் பதவிகளில் இருக்கவேண்டும்.

    ஒரு தடவை உடம்பு சரியில்லாம படுத்தா 3 மாச சேமிப்பு போகுமிடம் தெரியாது.

    திறமைசாலிகள் எங்கிருந்தாலும் ஜெயிப்பார்கள்.

    300 திர்ஹாம்க்கு இன்னும் அங்கு வேலை செய்கிறார்கள் என்றால் என்னத்த சொல்ல ??

    ReplyDelete
  24. நான் என்னமோ சோ. ராமசாமி பற்றி எழுதி இருப்பீங்கனு நினச்சேன்.:ப்

    \\இவ்வளவு கேவலமான சம்பளத்துக்கு துபாய் போகும் நம் ஆட்களை எதால் அடிப்பது.\\
    மங்களூர் சிவா அவர்களே அந்த கேவலமான சம்ப்ளம் கூட நாட்டில் கிடைக்காம்ல், குடும்ப கஷ்டம் காரணமாக கூட போயி இருக்கலாம் அல்லவா?
    இல்யாஸ்
    ஜித்தா

    ReplyDelete
  25. வாயுள்ள பிள்ள பொழச்சுக்கும்! ஆனா, சில பேரு இப்படி செஞ்சு, கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆறதும் உண்டு!!!

    ReplyDelete
  26. அவரு பேரு அபி அப்பா தானே..?

    ReplyDelete
  27. இந்த 2007'm வருஷ பதிவுக்கு இப்போ பின்னூட்டறதுக்கு sorry பாஸு..
    இந்த பதிவுலகுக்கு நான் இப்போ தான் காலடி எடுத்து வெச்சிருக்கேன்.. அதான்.. :)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))