பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 22, 2007

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு!!!!

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் கமல் அவர்களுக்கு!

தங்கள் விருமாண்டி படம் பார்க்க நேர்ந்தது ஒரு விபத்தாக! நான் சாதாரணமாக உங்கள் ஃபெயிலியர் படம் மட்டுமே பார்த்து பரவசப்படும் ஒரு அப்பாவி! உதாரணமாக ராஜபார்வை முதல் அன்பேசிவம்,ஆளவந்தான் வரை!!

ஆனால் நீங்க குரு முதல் எடுத்த கமர்சியல் படம் பத்தி பேச நான் வரவில்லை! ஆனால் கமர்சியல் கம் டெக்னிக்கல் படம்ன்னு நீங்க பில்டப் குடுத்த படம் பத்தி பேச போறேங்க!! அதாங்க அதில ஒன்னு "விருமாண்டி"

சாரே! சிறைத்துறை என்பது பற்றி தெரியுமா உங்களுக்கு? உங்க பேய்க்காமன் கேரக்டர் நீங்க ஊர்ல இருந்த போது ஒரு சப் இண்பெக்ட்ர், பின்ன நீங்க கோர்ட்ல நிக்கும் போது வற்றாறுங்க, பின்ன நீங்க சிறை
யில போகும் போது சிறையிலே வற்றாறு! ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா?

சிறைதுறையும், காவல்துறையும் தனி தனி டிபார்ட்மெண்ட்னு உங்களுக்கு தெரியுமா?

டெபுடேஷன்ல கூட வரமுடியாது இந்த ரெண்டு டிபார்ட்மெண்டிலே அது தெரியுமா????(நான் ஒரு முக்கிய அதிகாரிகிட்ட கேட்டேன்!! அது முடிடியாதாம்!!!)

பேய்காமன் இங்க சிறைல வர்ராராமா, அவர் இங்கிட்டும் வந்து பழி வாங்குராராம்!!\\

நல்ல காமடி படமா இருந்துச்சு எனக்கு:-)))

சிறை என்றாலே ஜெயிலர் எல்லாம் காலர்ல கருப்பு பட்டை போட்டுகிட்டு இருப்பானுங்க! டேய் டேய்ன்னு கூவ தோனுது!! அட பாவிகளா தமிழ் நாட்டிலே 8 பெரிய ஜெயில் இருக்கு ஆனா டி.ஐ.ஜி 2 பேர், ஐ.ஜி 1 பேர் ஆஹ 3 பேர் தவிர, 8 எஸ்.பி 11 பேர் தவிர யாரும் காலர்ல கருப்பு பட்டை கிடையாது! லூசு பசங்களா! தமிழ் சினிமாவிலே விட்டா கண்விக்ட் விக்டர் கூட கருப்பு பட்டை போடுவான் போல இருக்கே!!

கன்விக்ட் வார்டன் என்பவன், போலீஸ் லாகபப்புல வச்சிருக்கும் அவங்க நம்பிக்கையுரிய கைதி அவ்வளவே!!

வார்டன் என்பது போலீஸ்காரன் அதாவது PC

சப் ஜெயிலர் என்பது ஈக்குவல் to சப் இண்பெக்டர்

ஜெயிலர் என்பது இண்ஸ்பெக்டர்

அதுக்கு அடுத்ததே சிறைதுறையில் டி எஸ் பி கேடரில் உள்ள ADSP

அவர் சீக்கிரமா SP ஆகிடுவாரு

காரணம் சிறை துறை என்பது சின்ன துறை!!

ஆனா வருமானம் உள்ள துறை!!!

கமல்! கவனிங்க! இனிமே ஜாக்கிரைதையா இருங்க!!!


இப்படிக்கு


அபிஅப்பா

ஏண்டா தமிழ்நாட்டு மானத்தை வாங்குறீங்க!!!!

நம்ம தமிழ் நாடு இன்ஃப்ரா ஸ்ட்டெக்சர் நல்லா இருக்கு! ஆனா இது போல படம் பார்த்தா எல்லாம் காக்கி சட்டை போட்டவன் எல்லாம் கூர்க்கான்னு சொல்லும் காலம் வரும், இது போல படம் வந்தா!!!!!

உங்களுக்கு தெரியுமா? தான் பிறந்த ஊரில் ஒருத்தன் தாசில்தாரா, ஆர்டிவோவா,கலெக்ட்டரோ இருக்க முடியாது இந்த தமிழ் நாட்டில்!!!! ஆனா தமிழ் சினிமாவில் முடியும் !!!! எத்தனை அபத்தம்!!!!

42 comments:

  1. என்னாச்சு இப்போ...

    ஏதுக்கு இந்த போஸ்ட்...

    "ஆப்" மைண்ட்ல இருக்கீங்களா...

    ReplyDelete
  2. கூல் டவுன் தல :)))

    அபத்தமில்லாம தமிழ் சினிமா இருக்குமா?? இப்படி உக்காந்து யோசிச்சோம்னா நமக்கு தான் தலைவலி வரும்..அத்தனை இருக்கும்.. இதையெல்லாம் மறந்துட்டு படத்தை பார்த்துட்டு போயிட்டே இருக்கனும் :)))

    ReplyDelete
  3. //ஆனா தமிழ் சினிமாவில் முடியும் !!!! எத்தனை அபத்தம்!!!!//

    இரண்டையும் பிரிக்க முடியாதே.. அதான் சேர்ந்தே இருக்கு :)

    ReplyDelete
  4. சரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.

    ReplyDelete
  5. ஆமா சிவா! நான் ஆஃப் மைண்டிலே இருக்கேன்! வாஸ்த்தவம் தான்!!!

    ReplyDelete
  6. அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றத்தின் சார்பாக விருமாண்டி படபாடல்களை கேட்டு ரசித்தமைக்கு நன்றிகளுடன்...


    அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம்
    கத்தார் கிளை - மெயின் ஆபிஸ் @ அமீரகம்

    ReplyDelete
  7. உயிரை உருக்கி பாடும் பாடல் "உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை" பாட்ட பத்தி ஒண்ணும் சொல்லாத அபி அப்பாவுக்கு

    கண்டனங்களை தெரி"விற்று"கொள்கிறேம்

    அ.உ.ஸ்.கோ.நற்பனி(ணி) மன்றம்
    கத்தார் கிளை - அமீரகம்

    ReplyDelete
  8. அபி அப்பா! இந்த படத்துலதான் என்னைய நினைச்சு உருகி உருகி ஸ்ரேயா பாடுன சண்டியர் சண்டியரு பாட்டும் இருக்கு தெரியுமாஆஆஆஆஆ!

    ReplyDelete
  9. போன பஸ்ஸுக்கு எதுக்கு கை காட்றீங்க!!? எதுவும் மிஸ் ஆகலியே?

    ReplyDelete
  10. தலைவா, இந்த துக்கத்த மறக்கிறதுக்கு ரெண்டு விஜய் படம், ரெண்டு விசயகாந்த் படமும் பாருங்க, அட போயா

    ReplyDelete
  11. If he takes 5 commercial films he takes one expermental film. If you do not like it do not go and see. If at all there is a loss due to the experimental film loss is to Kamalhasan or the producer and not to you.
    Kamal hasan is not god, but a normal human being.

    ReplyDelete
  12. வாங்க ஜிரா! முதன் முறை வருகை! நன்று!!! ஆனா உங்க பதில் எப்போதும் போல் இல்லியே சமத்தாக!!!! கொஞ்சம் அசமந்தமாக இருகின்ற்ற மாதிரி தெரியுதே!!!

    ReplyDelete
  13. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...அப்படி போடுங்க தல...உலக நாயகனுக்கே ஆப்பு வச்சிட்டீங்களேய்யா

    ReplyDelete
  14. விருமாண்டி படத்தின் க்ளைமெக்ஸ் 60-ல வந்த ஸ்பார்டகஸ் படத்தின் சண்டைக்காட்சியைத் தழுவியது. ்

    ReplyDelete
  15. didn't you see Sivaji?

    ReplyDelete
  16. அண்ணெ ஏன்...எதொ செலக்டிவ் அம்னிசியா...சார்ட் டெர்ம் மெமொரி லாஸ்ம்பாய்ங்களெ அந்த நோய் உங்கள தாக்கிருச்சா.

    ரொம்ப பழைய பதிவொ ?

    நீங்க சொல்ற மாதிரி எல்லாம் ஆல்மோஸ்ட் 99% சினிமால இருக்கறது தானெ.

    ReplyDelete
  17. திடீர்னு ஏன் இந்தக் கொல வெறி?

    ReplyDelete
  18. //சரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.//

    ரிப்பீட்டே!

    இந்த மயிலாடுதுறை கும்பலுக்கே கமல் ஹாசனை பிடிக்காது போலிருக்கு.

    கமல் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இல்லாதிருக்கலாம் .ஆனா தமிழ் சினிமா நடிகர்களில் அவருக்குள்ள விஷய ஞானமும் ,தெளிவும் வேறு எந்த நடிகனுக்கும் பத்துல ஒரு பங்கு கூட கிடையாது .

    ReplyDelete
  19. படம் பார்த்து ரொம்ப நாளாச்சு...ஆனா, பேய்க்காமன் சிறைத்துறைக்கு மாற்றியது பற்றி..படம்..ஆரம்பத்திலே கொஞ்ச வசனம் வருமின்னு நினைக்கிறேன்...

    திரைப்படங்களிலே, மேட்ரிக்ஸ் வகை சண்டைகளை நீங்கள் கேள்வி கேட்பீங்களா..அது போல..இது எல்லாம்...பதிவு எழத மட்டுமே உதவும் விசயங்கள்...

    திரைப்படங்களே...இப்படி நடந்தா என்ன ஆகுமின்னு பேசுற விசயம் தான்...நிறைய இடத்துலெ...நடமுறைகளை மீறி படம் வருது...கமல் பண்ணினா..பெருசா தெரியுது..

    என்னால் மறக்க முடியாது பாடல்கள் நிறைந்தப் படம்...குறிப்பாக..."மாட விளக்கே....", " உன்னை விட...."

    ReplyDelete
  20. //இந்த மயிலாடுதுறை கும்பலுக்கே கமல் ஹாசனை பிடிக்காது போலிருக்கு.//

    யார் சொன்னது?

    பிடிக்கும்...!
    பிடிக்கும்...!
    பிடிக்கும்....!

    நல்ல படம்ன்னா!!!!

    ReplyDelete
  21. //ஜோ / Joe said...

    //சரி... இதொரு தப்புதான. அவனவன் தப்புகளை மட்டுமே வெச்சுப் படமெடுக்கிறான். இந்த மாதிரி ஒன்னு ரெண்டு விடுறது அதுகள விட மேலு.//

    ரிப்பீட்டே!

    இந்த மயிலாடுதுறை கும்பலுக்கே கமல் ஹாசனை பிடிக்காது போலிருக்கு.

    கமல் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரமா இல்லாதிருக்கலாம் .ஆனா தமிழ் சினிமா நடிகர்களில் அவருக்குள்ள விஷய ஞானமும் ,தெளிவும் வேறு எந்த நடிகனுக்கும் பத்துல ஒரு பங்கு கூட கிடையாது .//

    கமல் பத்தின பதிவிலே ஜோ இல்லாத பின்னூட்டங்களா'ன்னு பார்த்துட்டே வந்தேன்..... சரியா ஆஜர் ஆகிட்டாரு.. :)

    ReplyDelete
  22. ஏங்க அபி அப்பா சார்.

    இது விருமாண்டி பற்றி பதிவு மாதிரி தெரியலயே.. கமல் பிடிக்காத கோவத்துல திட்டி தீர்த்த மாதிரி இருக்கு..

    எவ்ளோ படத்துல காவல் துறை சிறைத்துறை அபத்தங்கள் இருக்கு.. திடிர்னு இப்படி விருமான்டி மட்டும்னா என்ன உள்ளர்த்தம் தெரியல

    அதுவும் உங்க ஆரம்ப வரிகளே ஒரு மாதிரி இருக்கு. PRE DEFINED ஆ எழுதி இருக்கீங்க..

    அப்படியே ஒரு Software engineer 20 வருஷத்துல 200 கோடி சம்பாதிக்கும், 20 வருசம் வேலை செய்தும் ஒரு 30 வயசு காரணா இருக்கும் அபத்தம் பற்றியும் எழுதுங்க...

    ReplyDelete
  23. இவ்ளோ விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...நீங்க இதுக்கு முன்னாடி இருந்தது சென்னையா? வேலூரா? இல்ல திஹாரா?
    :)

    ReplyDelete
  24. ஏனுங்க, ஒரு இன்ஸ்பெக்டர் சிறைதுறைக்கு டிரான்ஸ்பர் ஆக கூடாதா?

    கிரண் பேடி டெல்லி கமிஷனராவும் இருந்து இருக்காரு, திஹார் சிறை பொறுப்புலயும் இருந்து இருக்காரு.(அப்ப தான் சிறை கைதிகளை நல்வழிபடுத்த தியானம் செய்ய எல்லாம் ஏற்பாடு பண்ணினதா கேள்வி)
    பேய்காமன் அத மாதிரி மாற்றல் ஆகி இருப்பாருனு நீங்க யூகிச்சுக்கனும். பேய்காமனின் தினப்படி நடவடிக்கைகளை எல்லாம் படத்துல காமிச்சா அதுக்கு பேரு மெகா சீரியல். :p

    ReplyDelete
  25. "ஒரு சப் இண்பெக்ட்ர், பின்ன நீங்க கோர்ட்ல நிக்கும் போது வற்றாறுங்க, பின்ன நீங்க சிறை
    யில போகும் போது சிறையிலே வற்றாறு! ஒரு போலீஸ் அதிகாரி சிறைக்குள் போக கூட முடியாது அது தெரியுமா?"

    இது முதல்லே தமிழ் மொழியா????????? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்போவே!!!!!!!!!!!!!!! :P :P

    ReplyDelete
  26. அபி அப்பா,

    1. பேய்க்காமனின் சொந்த ஊராக சின்னக்கோளாறுபட்டியோ, நல்லம்மநாயக்கனூரோ காட்டப்படவில்லை - அந்த மாவட்டத்தை, ஜாதியைச் சார்ந்தவனாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

    2. 2000 பேட்சிலே ஜாயின் பண்ணேன், முதல்ல லா அண்ட் ஆர்டர்லே சி கே பட்டிலே இருந்தேன், அப்புறம் இப்ப ஜெயில்லே டெபுட்டேஷன் என்று ஆரம்பத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான்.

    லாஜிக் குறைபாடுகள் இருக்கலாம்,இது நடக்க முடியாமல் இருக்கலாம்(எனக்குத் தெரியாது) கதையின் சுவாரஸ்யத்துக்காக ரெண்டு இடத்திலும் ஒரே ஆள் இருப்பது நல்லதென்று கருதியதால்தானோ என்னவோ சப்பைக்கட்டு வசனமேனும் ஒன்று இருக்கிறது.

    ஒப்பிட்டுப் பார்த்தால் மற்ற லாஜிக் ஓட்டைகளுடன் இது ஒரு சின்னஞ்சிறுசு..

    காவல்துறை லேப்டாப் பாஸ்வார்டை மிமிக்ரிக் கலைஞர்களை வைத்துத் திறக்க முயற்சி செய்யும்போது டெபுட்டேஷன் தானா முடியாது??

    ReplyDelete
  27. //கைப்புள்ள said...

    இவ்ளோ விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...நீங்க இதுக்கு முன்னாடி இருந்தது சென்னையா? வேலூரா? இல்ல திஹாரா?

    ///

    அட ஆமால்ல!
    அபி அப்பா எங்க இருந்தீங்க இப்பவே ஜொள்ளுங்க!

    ReplyDelete
  28. //கீதா சாம்பசிவம் said...
    இது முதல்லே தமிழ் மொழியா????????? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் இப்போவே!!!!!!!!!!!!!!! :P :P
    //
    கீதா மேடம்
    கொஞ்சம் அபி மொழி பின்ன
    கொஞ்சம் மல்லு மொழி எல்லாம் அப்படியே போட்டு மிக்ஸ் பண்ணிவிட்டிருக்காரு அபி அப்பா!
    இதெல்லாம் ஆராயப்படாது! கமல் மேல உள்ள கொல வெறி ஃபீலிங்க்ஸ மட்டும் அனுபவிக்கணும்!

    ReplyDelete
  29. உங்க காமெடிக்கு ஓரு அளவே இல்லையா! !

    ஆண்டவா ;)

    ReplyDelete
  30. //அபத்தமில்லாம தமிழ் சினிமா இருக்குமா?? இப்படி உக்காந்து யோசிச்சோம்னா நமக்கு தான் தலைவலி வரும்..//

    அபத்தம் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை. சில பல ஆங்கில / ஆஸ்கர் வாங்கிய படங்களிலும் உண்டு. நம்ம ஊருல அதிகம்.

    //அப்படியே ஒரு Software engineer 20 வருஷத்துல 200 கோடி சம்பாதிக்கும், 20 வருசம் வேலை செய்தும் ஒரு 30 வயசு காரணா இருக்கும் அபத்தம் பற்றியும் எழுதுங்க...//

    ரஜினி படங்களில் இப்படியான அபத்தங்கள் இல்லாமல் இருக்காது. அது பழகிய ஒன்று. அதை பற்றி சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை. கமல் முடிந்த வரை நல்ல படங்கள் கொடுக்கனும்னு நினைக்கிறவர். அதனால் அவர் பன்னுகிற தப்ப சொல்லலாம்னு நினைத்து தான் சொல்லியிருக்கார்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  31. தேர்வு எழுதி இந்த துறைக்கு மாறி வந்தேன் என பேய்க்காமன் சொல்வதாக ஒரு வசனம் இருக்கும். அந்த வசனத்தில் ஜெயில் சூப்பிரண்டண்ஜ (நாசர்) குறை சொல்லி அடிமட்டத்தில் இருந்து வந்தால்தான் இதையெல்லாம் சமாளிக்கமுடியுமென வரும்

    ReplyDelete
  32. இவ்ளோ விஷயத்தையும் புட்டு புட்டு வைக்கிறீங்களே...நீங்க இதுக்கு முன்னாடி இருந்தது சென்னையா? வேலூரா? இல்ல திஹாரா?
    :)

    கைப்புள்ள சொல்றது ரிப்பீஈஈஈஈஈஈஇட்ட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏ!!!!

    ReplyDelete
  33. எனக்கெல்லாம் கமல் படம் பார்த்தா தலைக்குள்ள மத்தாப்பு மாதிரி கலர் கலரா ஆயிடுங்க!படம் முடியும் வரைக்கும் வேறு வேலை பார்க்கிறது கிடையாதுங்க!இதோ இப்ப பின்னூட்டம் போடற போது கூட தங்கமணி துன்னுறதுக்கு கூப்பிடுதுங்க..நானா போறவன்?அதனால் போலிஸ் சட்டை கலரு,ஜெயில் கம்பி எத்தனைன்னு எல்லாம் பார்க்கிறது கிடையாதுங்க.

    ("இந்த கம்ப்யூட்டருல என்னதான் இருக்குமோ"ன்னு தங்கமணி மூஞ்சிய இழுத்துகிட்டு போகுது வர்றேனுங்க!)

    ReplyDelete
  34. Abiappa,

    I feel nothing wrong in this post. Some of the things I can't understand. If someone is very good in acting comparing to rest of them, then we should not comment about any of his mistakes. Everyone is human, and everyone makes mistakes. There is always something for anyone to improve.

    In other words, suppose you are far better than rest of the members in your team. At a review, if your manager doesn't say about the things to improve which are very well known by him & you (say because he badly need you in the team). Then how can you GROW. Suppose if he speaks
    about that, if you don't have good mindset, you will defend those issues by comparing with rest of them.

    Otherside also there. If someone is not so good in acting but easily tasting success, many of us not able to digest that. Commenting every single
    step, and making as big issues.

    Ok, enough generic, I am fan of vijay, and I know ajith is far better than vijay in anything. For EVERY VIJAY MOVIE, your bloggers write a comedy post and telling, in every scene, vijay doing nonsenses . But for ajith movies, if the movie is good, your bloggers will praise, and for bad
    movie(say aalwar), your bloggers write a sad post, like 'why only happening to Ajith'. Even at good movies of ajith also has some illogical
    scenes(say varalaru). But somehow you guys forgetting those.

    ALL I FEEL IS 'VIJAY DOESN'T DESERVE THIS MUCH CRITICISM JUST BECAUSE OF HIS EASILY ACHIEVED SUCCESS'. If you praise someone in your post, nobody going to be hurted, But If you tease someone (just because you want post a comedy), someone may be hurted. Even viktan also has comedy pages which teases vijay, but not only him, others also, it teases a group of people, so no one get hurted. And I feel bloggers (who has more creativity, who usually like quality) are somewhat ahead than readers. May be bloggers like quality/class/ajith more than vijay who may be liked by some readers. JUST BECAUSE MOST OF THE COMMENTS GIVEN BY BLOGGERS DOESN'T MEAN 'THE POST IS LIKED BY EVERYONE'

    Just I feel, "Too good(relatively) doesn't mean there is nothing to improve", and "Not so good doesn't mean everything needs to improve"

    I thought to tell my opinions for RAM's post (http://raamcm.blogspot.com/2007/11/blog-post.html), but I hesitated. I am telling here.

    ReplyDelete
  35. ஹாஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  36. பதிவுல ஹீரோயின் பேசற டைலாக் சூப்பர். முடிவு எதிர்பார்க்காத வகையில இருந்தாலும் இது தான் அபி அப்பா ஸ்டைல் போல..

    ஆன் மைன்டட் ‍- சென்ஷி

    ReplyDelete
  37. அ) உண்மையில் மிகச்சிறப்பான பதிவு..

    ஆ) கலக்கியெடுத்துட்டீங்க அபி அப்பா..

    இ) வெல்டன் அபி டாடி..

    ஈ) எப்படிங்க இப்படில்லாம்..
    நம்பவே முடியல.. இது நம்ம அபி அப்பாதானான்னு..

    உ) படிச்சப்புறம் மனசே வரல. ச்சே என்னாமா யோசிச்சிருக்கீங்க‌

    ஊ) என்னதான் சொல்லுங்க உங்களை மாதிரி காமெடியா எழுத யாராலயும் முடியுமான்னு தெரியல. உங்களை பாத்து இப்படி யாராச்சும் ஆரம்பிச்சா உண்டு.

    எ) உங்களிடம் இவ்வளவு திறமை இருப்பது எங்களைப் போன்றவர்களுக்கு பெரிய *அதிர்ச்சி

    ஏ) உங்களின் **வாதத் திறமைகள் கச்சிதமாக பொருந்தியுள்ளன

    ஐ) ஒரு பின்னூட்டத்துக்கு 100 திர்ஹாம் வீதம் பேசியிருந்தீர்கள். மேலே கண்ட அத்தனை பின்னூட்டத்துக்கும் சேர்த்து எவ்வளவு பணம் என்பதை கணக்கு பார்த்து அண்ணன் ஆயில்யன் பொறுப்பு வகிக்கும் அகில உலக ஷ்ரேயா கோஷல் நற்"பனி"மன்றத்துக்கு என் நன்"கோடை"யாக அளித்து விடவும்.



    ஸ்டாருக்கான பின்குறிப்பு:
    * இன்ப‌
    ** பிடி


    எப்பவுமே வம்புக்குன்னே அலையுற

    சென்ஷி

    ReplyDelete
  38. குசும்பு நண்பா எங்கிருந்தாலும் உடன் ஆஜராகவும்........!


    சென்ஷி நம்ம நற்பனி(ணி) மன்றத்துக்க்கு கொடை வழங்கறத இங்க ஜொள்ளியிருக்காரு....! உடனே நேர்ல போய் வாங்கி வைக்கவும்!

    இப்பவும் எப்பவும் ஸ்ரேயா அன்பில் அடங்கும்,

    நற்பனி(ணி) மன்ற நிர்வாகம்
    அமீரகம்

    ReplyDelete
  39. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்ககரை - மத்தவங்களோட ஒப்பிடுறப்போ கமல் எவ்வ்வ்வளவோ பரவாயில்ல!

    ReplyDelete
  40. I dont know whether the content said by you is correct or not and havnt verified that.

    But I believe that this is some sort of demotivating a good artist like Kamal who has been trying to raise the heights of Indian Cinema.

    I really luv to read ur blog. Exceptional postings are regrettable.

    Guess me if you can.

    ReplyDelete
  41. Thanks for your post.

    After reading your blog...i have posted your content to kamal's community in orkut..

    here is the reply i got

    "if u watch the movie again, particularly the first reel in which that paei kaaman character introduce himself in front of the camera.....

    he says, My name is peikaaman.....year 2000 la paritchai eluthi promotion la subjailor ah inga join panni irukkaen.....

    tat answers how he came to the jail......

    then, when he take rohini to meet pasupathi, he says this dialogue....."virumaandi case kelvi pattu iruppingalae.....naanthaan athai investigae panninathu....."

    so this answers why he is in court.....


    so, there is no flaw in that.....ask that blog writer to go n watch the movie again...."

    Do you need any more proof Thols?

    ReplyDelete
  42. \\Anonymous said...

    I dont know whether the content said by you is correct or not and havnt verified that.

    But I believe that this is some sort of demotivating a good artist like Kamal who has been trying to raise the heights of Indian Cinema.

    I really luv to read ur blog. Exceptional postings are regrettable.

    Guess me if you can.

    January 31, 2009 1:30 AM
    Deep said...

    Thanks for your post.

    After reading your blog...i have posted your content to kamal's community in orkut..

    here is the reply i got

    "if u watch the movie again, particularly the first reel in which that paei kaaman character introduce himself in front of the camera.....

    he says, My name is peikaaman.....year 2000 la paritchai eluthi promotion la subjailor ah inga join panni irukkaen.....

    tat answers how he came to the jail......

    then, when he take rohini to meet pasupathi, he says this dialogue....."virumaandi case kelvi pattu iruppingalae.....naanthaan athai investigae panninathu....."

    so this answers why he is in court.....


    so, there is no flaw in that.....ask that blog writer to go n watch the movie again...."

    Do you need any more proof Thols?

    February 1, 2009 12:56 AM \\

    தம்பி! மேற்கண்ட இரண்டு பின்னூட்டமும் நீங்கள் போட்டது என தெரிகின்றது! ஆனால் அதில் மாயவரம் வாசனை அடித்ததால் அதுவும் நம்ம ஸ்கூல் வாசனை ரொம்பவேஅடீத்ததால் ஓடி போய் பார்த்தேன்!அட ஆமாம்! ட்தங்கள் மெயில் ஐடி தரவும் மேர்கொண்டு பேசலாம்! உங்கள் மெயில் ஐடிக்காக நம் பள்ளி நம் சீனியர் சீமாச்சு அண்ணனும் ஆர்வமுடன் இருக்கின்றார்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))