பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 8, 2007

"தீபா"வளி!! from அபிஅப்பா!!!!

இந்த "தீபா"வளிங்குற பேரே எனக்கு இப்பல்லாம் அல்வா சாப்பிடும் அளவு இனிக்குதே அது ஏன்? அது சம்மந்தமா பின்ன பேசி ஒரு முடிவுக்கு வருவோம். அப்ப சின்ன பையனா வால் பையனா இருந்த போது எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அசை போட்டால் ஒரு 4 பதிவு போடலாம். அத்தனை சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அத்தனையும்.

ஜனவரி 1 ம் தேதி தேதி காலண்டர் வாங்கி வந்த உடனே அவசர அவசரமாக திருப்பி பார்த்து பின் பக்கம் "இந்து பண்டிகைகளில் தீபாவளி என்ன்னிக்குன்னு பார்த்து அன்று முதல் தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என கணக்கு போட்டு "ஆண்டவா இன்னும் இத்தனை நாள் இருக்கான்னு ஏங்கி சோர்ந்து போவதும் பின்ன தீபாவளிக்கு 1 மாதம் முன்னமேயே அந்த தீவாளி ஜுரம் பத்திப்பதும் ஆஹா அந்த 1 மாதம் தினமும் கொண்டாடம் தான்.

உனக்கு சட்டை எடுத்தாச்சான்னு ராதா பேச்சை ஆரம்பிச்சு வச்சு தீபாவளி வெடியை பத்த வைப்பான். "இல்லைடா, அப்பா மெட்ராஸ்ல போய் எடுத்து வரேன்ன்னு சொல்லியிருக்காங்க"ன்னு மெதுவா பிட்டை போடுவேன். அதுக்கு அவன்"எனக்கு எடுத்தாச்சுடா, அப்படியே தங்கம் ஜரிகைல தக தகன்னு இருக்கு" - இது ராதா! டேய் ராதா அதையும் நம்பி வச்சேனேடா பாவி, அது கூட பரவாயில்லை, 7 வது படிக்கும் போது "திரிசூலம்" 200 வது நாள் வெற்றி விழாவுக்கு K.R.விசயா அந்த படத்துல நடிச்ச எல்லாரையும் சிவாஜி உள்பட தன்னோட சொந்த பிளைட்டுல ஏத்திகிட்டு மெட்ராஸ்ல இருந்து மதுரைக்கு தானே தானே ஓட்டிகிட்டு போனாங்கன்னும் அதுல வளைச்சு வளைச்சு டைவ் எல்லாம் அடிச்சு கூட்டிகிட்டு போனாங்கன்னும் சொன்னியே ராஸ்கோல், நானும் அதை என் கல்யாணத்து வரை நம்பி அதை பெருமையா தங்கமணி கிட்ட சொல்லி அவங்களும் "பே"ன்னு அழுது "போயும் போயும் ஒரு மகா அப்பாவியை என் தலையில கட்டி வச்சுட்டாங்களே"ன்னு என் மானத்தை வாங்கினாங்களே...ரைட்டு விடுடா ராதா..தீபாவளி கதைக்கு வருவோம்.

முதல் விஷயம் புது சட்டை தான். பின்ன தான் கங்காதரன் சைக்கிள் கம்பனியின் வெடி சமாச்சாரம் எல்லாம். அப்பல்லாம் வார் வைக்காத டிராயரும், ஸ்டிப் காலர் சட்டையும், தொள தொள சட்டையாக இல்லாமல் டைட் பிட்டிங்குமே எனக்கும் என் தம்பிக்கும் பிராதானமாக இருந்தது. "ஜென்ஸ் டைலர்" கடையில் தான் தைக்க வேண்டும் என்பது கிட்டத்தட்ட லட்சியமாக இருந்தது. "ஜென்ஸ் டைலர்" என்பது ஆண்களுக்கான தையலகம் என்பது எங்களுக்கு தெரியாது. உசத்தியான டைலர் அது மட்டுமே தெரியும். ஆனால் அதிலே எல்லாம் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் மட்டுமேயான ஒன்றாக இருந்தது. எங்களுக்கு வீட்டு திண்ணை டைலரோ அல்லது கார்ஷெட் டைலரோ தான் கதி.

இந்த கதையெல்லாம் அடுத்த தீபாவளிக்கு சொல்லிக்கலாம்! இன்னிக்கு நடந்த கதை கேளுங்க! காலை நானே ஊருக்கு போக முடியாத கோவத்தில் தூக்கம் இல்லாம தூங்கிட்டு இருந்தேன்! நம்ம கோபிக்கு நைட் டூட்டியா, அவன் அழும்பு தாங்காது! எப்போதும் போல எழுப்பினான்! ஆனா காலை 6க்கு இல்லை 4.30க்கு. “ஹலோ! வணக்கம், வெடி வெடிச்சீங்கலா?- இது கோபி! அதற்க்கு நான் “இல்ல இன்னும் கொஞ்ச நேரத்துலப்பா”ன்னு சொல்லி வச்சுட்டேன்.

உடனே அடுத்த போன்! என் ரூம் மெட்க்கு! ஒரே அழுகை சத்தம்! அதிலேயே வாழ்த்தும் கூட, “அண்ணே உனக்கு தலை தீவாளி வாழ்த்து, இருந்தாலும் நான் அழுவறத்துக்கு காரணம் நீ கேக்கவே இல்லியே?””

“சொல்லும்மா கேக்கறேன்””—இது நண்பர்

“கலையிலே இருந்து என் போன் காணும்ண்ணே, நீ ஆசை ஆசையா வாங்கி குடுத்தது எனக்கு”

“சரி சரி ஓக்கே, நான் ஜனவரி வரும் போது வாங்கியாறேன்”

“சரிங்கண்ணே”

கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் போன் வந்தது!

“என்னங்க தீவாளி வாழ்த்து!”

“சரி செல்லம், என்ன இன்னிக்கு இத்தன சந்தோஷம்”

“நான் திருந்திட்டேங்க, உங்க தங்கச்சி கூட இனிமே சண்டை எல்லாம் போடமாட்டேன், காலையில கூட இங்க வந்தாங்க, என்னமா பேசி அனுப்பினேன் தெரியுமா?””

“ரொம்ப சந்தோஷம், சரி நான் விடிஞ்ச பின்ன பேசறேன்””

கொஞ்ச நேரம் பின்ன அடுத்த போன்!

“அண்ணே அவரு மிலிட்டரில இருந்து இப்ப போன் பண்ணுவாரு, என் கிட்ட போன் இல்லன்னா ரொம்ப கோவமாயிடுவாரு, அதனால அவருக்கு போன் பண்ணி சொல்லுன்னே”

அப்போ எனக்கு சுத்தமா தூக்கம் தெளிஞ்சு போச்சா, நான் தலையை தூக்கி “ஹல்லோ நான் அப்பவே சொல்லனும்ன்னு நெனச்சேன்ப்பா, ஒரு வேளை உன் பொண்டாட்டி காலைல போனை தூக்கி சாக்கடையிலே போட்டிருக்குமோ?””

அவ்வளவுதான் சத்தமா கேட்டேன்!

திரும்பவும் போன் சென்ஷிடமிருந்து எனக்கு! “அண்ணே வெடி வெடிச்சாச்சா?”

அதற்கு நான் “வெடிச்சாச்சு! மீதியை காலையில் விலாவாரியா பேசிக்கலாம்”ன்னு சொல்லி வச்சேன்!

அப்பாடா வெடி வெடிச்சாச்சு தீபாவளிக்கு!!!

15 comments:

  1. "சின்ன சின்ன கலாய்தல்கள்"ன்னு நான் போட்ட பதிவுக்கு என்ன கோவம் உங்களிடமிருந்து வெளிப்பட்டதுன்னு தெரியும்! இருந்தும் வெளியிடுகிறேன் எனில் காரணம் இல்லாமல் இல்லை! நான் ரெடி நீங்க ரெடியா???

    ReplyDelete
  2. பத்த வெச்சுட்டீங்க. ஆனா வெடிச்சுதான்னு சொல்லவே இல்லையே.

    தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்ல விதமா தான் தீபாவளி காலை விடிஞ்சிருக்கு.
    தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இப்ப எங்க வெடிக்கப்போகுது...!!!
    தை மாசம்தான் தாண்டவமாடப்போகுது>?!! (அப்ப அபி அப்பாவுக்கு தை பொங்கலுக்கு இதோட பதில் பதிவிருக்கும்ல!?)

    ReplyDelete
  5. இப்படிக் கூட வெடிக்கலாமா? கடவுளே, அதானா முதுகு வலி? :P :P :P

    தீபாவளி வாழ்த்துக்கள். :)))))))))

    ReplyDelete
  6. அபி அப்பா நல்லாதான் கொளுத்தி விட்டு இருக்கீங்க:))
    நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. எங்கள் அனைவரின் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள்....சீக்கிரம் அபி,நட்டுவை எங்க ஏரியா பக்கம் அனுப்பி வைங்க....

    ReplyDelete
  8. \\"போயும் போயும் ஒரு மகா அப்பாவியை என் தலையில கட்டி வச்சுட்டாங்களே\\

    அண்ணி இப்படியா சொன்னாங்க சான்சே இல்ல..வேற மாதிரி இல்ல சொல்லியிருக்கனும் :) (இது என்னோட வெடி)

    ReplyDelete
  9. எங்க நான் பொட்ட கமெண்ட்....

    ReplyDelete
  10. என்னாது

    'தீபா'வுக்கு 'வலி'யா??

    from அபி அப்பாவா???
    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  11. //இந்த "தீபா"வளிங்குற பேரே எனக்கு இப்பல்லாம் அல்வா சாப்பிடும் அளவு இனிக்குதே அது ஏன்?//

    ஓ புரிஞ்சுடுச்சு புரிஞ்சிடுச்சு, யார் பேருன்னு புரிஞ்சிடுச்சு! வீட்டுக்காரம்மாவுக்குத் தெரியுமா விசயம்? ;-)

    ReplyDelete
  12. தீபாவளி நமக்கு எல்லாம் தீபா இல்லாம வெறும் வலி யா தான் இருக்கு...

    ReplyDelete
  13. தீபாவளி வாழ்த்துக்கள் அபி அப்பா, கொஞ்சம் லேட்டாயிடுச்சு சொல்ல

    ReplyDelete
  14. இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.
    (Belated ??)

    ReplyDelete
  15. அபி அப்பா.அபிக்குட்டி,தங்கமணி!
    தாமதமான தீபா..?வலி..ளி வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))