பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 27, 2008

"விட்"நாம் வீடு! பாகம் # 03

இதுக்கு முன்ன உள்ள பகுதிகளை இங்க போய் படிங்க இந்த பதிவு படிக்கும் முன்னே!!

********************

காபிபொடி வாங்க கடைக்கு போகும் போதே அந்த எட்டாம் வகுப்பு கலாட்டா ஞாபகத்துக்கு வந்து போனது. ஒரு அரைகிலோ வாங்கி வச்சிகிட்டு ஒரு வாரம் ஓட்டுவோம் என்கிற நினைப்பே எங்க வீட்டிலே எப்போதும் கிடையாது. அன்னாடம் காச்சியா தினம் 50 கிராம் வாங்கி வாங்கி தான் அன்றைய காபி. காரணம் கேட்டா அம்மா "மொத்தமா வாங்கி வச்சா வாசம் போயிடும்"ன்னு அழகா காரணம் சொல்லுவாங்க. அப்போ அதை கொட்டி வைக்க இந்த காலம் மாதிரி பெட் டப்பா எதுவும் அத்தனை கிடையாது. ஹார்லிக்ஸ் பாட்டில் தான். அதன் மூடிகூட வெள்ளை தகர மூடி, அதிலே நீல கலரிலே Horlicks ன்னு எழுதியிருக்கும். அப்பப்ப பக்கத்து வீட்டுக்கு அந்த மூடியால ஒரு மூடி கடன் கொடுப்பதும் அதை வாங்கிப்பதும் நடுத்தர குடும்பங்களில் சர்வ சாதாரணம் அப்போ.

அப்படித்தான் ராஜீவ்காந்தி இறந்த போது அவங்க வீட்டை டிவியில் பார்த்த அம்மா "அய்யோ பாவம் காபிபொடி ஒரு மூடி கடன் வாங்கனும்ன்னா கூட பாவம் அந்த அம்மா ரொம்ப தூரம் நடந்து போகனும். ஆம்பள இல்லாத அந்த அம்மாவுக்கு எத்தினி கஷ்டம்"ன்னு எதேர்ச்சையா சொன்ன போது எனக்கு அப்போது இருந்த சூழ்நிலையில் எப்படித்தான் சிரிப்பு வந்தது என்றே தெரியலை. அப்படி ஒரு சிரிப்பு. அதுக்கு என் தம்பி "ஆமாம்மா, ராஜீவ்காந்தியா போய் காபிபொடி கடன் வாங்க போறாரு. அதான் துறு துறுன்னு ராகுல் இருக்கானே. ஒரு நாள் இப்படித்தான் சைக்கிள்ல ஒரு மிதி மிதிச்சுகிட்டு போய் பக்கத்து ஷீலாதீட்ஷித் ஆண்டி வீட்டிலே மீந்து போன கத்திரிக்காய் புளிகுழம்பை குடுத்துட்டு கடன் கொடுத்த ஒரு மூடி காபிபொடி வாங்கிட்டு சர்ன்னு வந்து சோனியாகிட்டே கொடுத்துட்டு திரும்ப போய் புளிகுழம்பு செம்படத்தை வாங்கிட்டு வந்து சோனியாகிட்டே கொடுத்தா செம்படத்தை திறந்து பார்த்த சோனியாவுக்கு ஆச்சர்யம். அதுக்குள்ளே பிரியங்கா அடுத்த நாள் கேர்ஸ்ஹைஸ்கூலுக்கு போகும் போது வச்சிகிட்டு போக டிசம்பர் பூ. சோனியா அழுத்தி அழுத்தி மூடியிலே குடுத்த காபிபொடிய ஷீலா ஆண்ட்டி பொல பொலன்னு குடுத்த விஷயம் இவங்களுக்கு தெரியாமலே இவங்க ஹார்லிக்ஸ் பாட்டில்ல கொட்டிகிட்டாங்களாம். எல்லாம் ஜூவி கழுகிலே போட்டிருந்துச்சும்மா"ன்னு சொல்ல எங்கம்மாவுக்கு வெக்கமா போயிடுச்சு என்னடா இந்த பசங்க கிட்டே இப்படி மாட்டிகிட்டோமேன்னு.

அதல்லாம் போகட்டும், விஷயத்துக்கு வருவோம். எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் அம்மா ஒரு ரூபாய் ஐம்பது காசு கொடுத்து ஐம்பது கிராம் பீபரி வாங்க சொன்னாங்க. நானும் ஓட்டை பை டவுசரிலே கையை விட்டுகிட்டு கூட்டுறவு வங்கி எதிரிலே "இளமை ஊஞ்சலாடுகிறது" "இமயம்" "ஜஸ்டிஸ் கோபிநாத்" பாதிகிழிக்கப்பட்ட "அஞ்சரகுள்ள வண்டி"ன்னு பட போஸ்ட்டரை எல்லாம் பார்த்துகிட்டே நின்னுகிட்டு இருந்துட்டு அருகே இருக்கும் நூர்காலனி எதிர் கொல்லையில் இருக்கும் நெல்லிகாய் மரத்திலே நாலு கல் எரிஞ்சு ஒரு காய் பொருக்கிகிட்டு ஒய்யாரமா போய் அம்பானியின் நிறுவனத்தின் பெயர் கொண்ட அந்த காபிபொடி கடை(ஹப்பா மாயவரத்து ஆளுங்களே கண்டுபிடிக்க முடியாத அளவு கிசுகிசு சொல்லியாச்சு)யிலே போய் டவுசர் உள்ளே கைய விட்டா கை தொடை வழியே எட்டி பார்க்குது. காசை காணும். வீட்டுக்கு போனா உதை நிச்சயம். சரி இதுவும் கடந்து போகும்ன்னு வீட்டுக்கு திரும்ப போயிட்டேன்.

அம்மா "எங்கடா காபிபொடி"ன்னு கேட்டா என்ன பதில் சொல்றதுன்னு ஹோம் ஒர்க் ஏதும் பண்ணிக்கலை. காரணம் நான் ஹோம் ஒர்க் பண்ணினா சொதப்பிடுவேன். பொய் அந்த நேரத்திலே தானா பொங்கும். வீட்டுக்கு போயாச்சு. அம்மா கேட்ட போது கொஞ்சமும் யோசிக்காம "அம்மா உனக்கு தெரியாதா சேதி, ஓனர் போயிட்டாரு. அதனால கடை லீவு. நானே கேவி கேவி அழுத்துட்டேன் தெரியுமா"ன்னு சொல்ல அம்மா "சரி கமலா காபியிலேயாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே அப்பா வந்தா இப்ப காபிக்கு என்ன பண்ணுவேன்"ன்னு சொல்ல "என்னம்மா நீ, கமலாவும் தான் லீவு. அவரு துக்கத்துக்கு போக வேண்டாமா"ன்னு சொல்லி சமாளிச்சேன்.

அப்பா வந்தாச்சு. அம்மா அப்பா காபி கேக்கும் முன்னமே "தெரியுமா சேதி"ன்னு ஆரம்பிச்சு விஷயத்த சொல்லி அதனால இன்னிக்கு காபி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அப்பாவும் "நாளைக்கு ஞாயித்து கிழமை தானே. குளிக்கும் முன்ன நான் போய் விசாரிச்சுட்டு வந்திடறேன்"ன்னு சொன்ன போது தான் நான் சொன்ன பொய்யின் உக்கிரம் எனக்கு புளி கரைக்க ஆரம்பிச்சுது. அடுத்த நாள் என்ன ஆகுமோன்னு. ஆண்டவா எனக்கு ஜூரம் அது இதுன்னு எதுனா கொடுத்துடு ராத்திரிக்குள்ளே இல்லாட்டி என் வாக்கு பலிக்கும்படியாவது அவருக்கு மோட்டசத்தை கொடுத்திடு"ன்னு பைத்தியகாரத்தனமாக எல்லாம் வேண்டிகிட்டேன். (இப்போ நினைச்சாலும் அந்த பைத்தியகாரத்தனம் எனக்கு ஒரு மாதிரியான சிரிப்பை கொடுக்குது).

காலையிலே அப்பாவுக்கு வேற ஏதோ முக்கியமான வேலை இருந்ததால் அங்க போயிட்டாங்க. எனக்கு பரம திருப்தி. மதியம் மூணு மணிக்கு அப்பா வீட்டுக்கு கோவமா வரும் போது தான் விஷயம் புரிஞ்சுது. அப்பா பஸ்ட்டாண்டிலே இருந்து வரும் போது காபிபொடி கடை திறந்திருக்கவே அங்க போயிருக்காங்க. அவர் பெரிய பையன் தான் இருந்திருக்கார். என்னடா நேத்து தான் போய் சேர்ந்திருக்கார். இன்னிக்கே கடை விரிச்சாங்களேன்னு ஒரு வித சந்தேகத்தோட மெதுவா அவர் பையன் கிட்டே "அப்பாவுக்கு என்ன தான் இருந்தாலும் இப்படி ஆகியிருக்க கூடாது"ன்னு சொல்ல அவர் பையனும் "எல்லாம் விதி சார். விதி யாரை விட்டுச்சு"ன்னு சொல்ல அப்பதான் அப்பாவுக்கு கொஞ்சம் சந்தேகம் போயிருக்கு. பின்ன தைரியமா துக்கம் விசாரிக்க ஆரம்பிச்சு இருக்காங்க. "ஆமா கொழந்த அப்பா எப்படி தவறினாங்க?"ன்னு கேட்டதுக்கு "அம்மாவ ஏணிய புடிச்சுக்க சொல்லிட்டு பரண் மேல ஏற பாத்திருக்கா, அம்மா பால் பொங்குதுன்னு விட்டுட்டு போயிட்டா. அப்பா தவறிட்டா, கால் பிராக்சர் ஆகிடுச்சு"ன்னு சொல்ல அப்பா அங்க மிதிச்சது தான் சைக்கிளை. அடுத்த ஸ்டாப்பிங் என்கிட்டதான்.

இந்த உமி நார்த்தங்காய் ஊருகாய் எப்படி போடுவது தெரியுமா. நல்லா வேக வச்சுட்டு. அப்படியே ஸ்பிரிங் மாதிரி நருக்கி உள்ளே சதை தெரியும் இடத்திலே எல்லாம் கல் உப்பை தடவி, நல்ல வெள்ளை ஊசி மிளகாய் இருக்கே அதை அம்மியிலே நைய அரச்சி அதையும் அதன் மேலே பூசி குளிப்பாட்டி ஒரு பானையிலே போட்டு அதன் தலையிலே இன்னும் கொஞ்சம் கல் உப்பை கொட்டி பானையின் வாயை ரெண்டு கையாலும் பிடித்து நல்ல நாலா பக்கமும் உப்பும் உரைப்பும் சேரும் படி குலுக்கு குலுக்குன்னு குலுக்கி ........அதான் நடந்துச்சு அன்னைக்கு அபிஅப்பாவுக்கு:-((

அதனால் தான் நேத்து காபிபொடி ஓனர்ன்னு நான் ஆரம்பிச்சதும் தங்கமணி அப்படி சொன்னாங்க. பாத்தீங்களா, குசும்பன் கல்யாணத்துக்கு போன கதை வேற எங்கயோ போயிடுச்சு. அதனால என்ன நாளை மீதிய சொன்னா போச்சு!! நாளை சந்திப்போமா!!

16 comments:

  1. மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் என்ன....

    ReplyDelete
  2. //குசும்பன் கல்யாணத்துக்கு போன கதை வேற எங்கயோ போயிடுச்சு.//

    பரவாயில்ல போய்ட்டு மெதுவா வாங்க :))

    ReplyDelete
  3. //கேர்ஸ்ஹைஸ்கூலுக்கு போகும் போது வச்சிகிட்டு போக டிசம்பர் பூ. //

    நல்லா ஞாபகப்படுத்தினீங்க போங்க!

    பெரிய பெரிய சண்டையெல்லாம் கூட நான் பாத்திருக்கேனாக்கும்!
    ( எனக்கு ஒரு நாள் பூ கொடுத்தாளா பக்கத்து வீட்டுக்காரின்னுல்லாம்))

    ReplyDelete
  4. ///இலவசக்கொத்தனார் said...

    மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் என்ன....///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  5. //கூட்டுறவு வங்கி எதிரிலே "இளமை ஊஞ்சலாடுகிறது" "இமயம்" "ஜஸ்டிஸ் கோபிநாத்" பாதிகிழிக்கப்பட்ட "அஞ்சரகுள்ள வண்டி"ன்னு பட போஸ்ட்டரை எல்லாம் பார்த்துகிட்டே நின்னுகிட்டு இருந்துட்டு///

    இப்ப என்ன லேட்டஸ்ட்டூஊ ??

    ReplyDelete
  6. நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப காரமோ..........

    ReplyDelete
  7. //குசும்பன் கல்யாணத்துக்கு போன கதை வேற எங்கயோ போயிடுச்சு.//

    எங்கிட்டு ..இன்னும் கிளம்பவேயில்லையே :))

    ReplyDelete
  8. //இந்த உமி நார்த்தங்காய் ஊருகாய் எப்படி போடுவது தெரியுமா. நல்லா வேக வச்சுட்டு. அப்படியே ஸ்பிரிங் மாதிரி நருக்கி உள்ளே சதை தெரியும் இடத்திலே எல்லாம் கல் உப்பை தடவி, நல்ல வெள்ளை ஊசி மிளகாய் இருக்கே அதை அம்மியிலே நைய அரச்சி அதையும் அதன் மேலே பூசி குளிப்பாட்டி ஒரு பானையிலே போட்டு அதன் தலையிலே இன்னும் கொஞ்சம் கல் உப்பை கொட்டி பானையின் வாயை ரெண்டு கையாலும் பிடித்து நல்ல நாலா பக்கமும் உப்பும் உரைப்பும் சேரும் படி குலுக்கு குலுக்குன்னு குலுக்கி ........அதான் நடந்துச்சு அன்னைக்கு அபிஅப்பாவுக்கு:-((
    //

    ராஜா.. அசத்திட்டே.. நாரத்தங்காய் கதை தனி ரெசிப்பி மாதிரியே இருக்கு..

    அதையும் வீட்டில் நடந்ததையும் கனெக்ட் பண்ணிய விதமும் அருமை..

    அனுபவிச்சுப் படிச்சேன்..

    அன்புடன்
    சீமாச்சு..

    ReplyDelete
  9. அப்ப இது தினம் ஒரு பாகமா வருமா..:
    :)

    பிரியங்கா தலையில் டிசம்பர் பூ கட்டிவச்சா எப்படி இருக்கும் கற்பனை ரொம்ப நல்லாருக்கே..

    ReplyDelete
  10. ச்சூ..ச்சூ...என்ன எங்க பார்த்தாலும் ஒரே கொசுவர்த்தி புகை
    இந்த பாசக்கார குடும்பத்துக்கு பதிவு போட மேட்டர் சிக்கலைனா உடனே அடாசு தட்டி சுத்தக் கெளம்பிடுதுகள்...அங்ஙன டீச்சர்...இங்க ஸ்டூடண்ட்

    ReplyDelete
  11. :)))

    ( வரவர நானும், சாமான்யன் மாதிரி பின்னூட்டம் குடுக்க ஆரம்பிச்சுட்டேனோ?) :p

    ReplyDelete
  12. ///இலவசக்கொத்தனார் said...
    மொக்கை போடறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் என்ன....///



    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  13. இன்னிக்குத் தான் விட்டுப் போனதை எல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கேன், படிச்சுட்டு வரேன்.

    ReplyDelete
  14. நீங்கள் எல்லாம் எங்கே படித்தீர்கள்????????? பட்டமங்கலத்தெரு கேட்டால் அழும்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))