பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 19, 2008

கூடப்படிச்ச குறத்திகள்!!! பாகம் # 2




இதை படிக்கும் முன்னே முதல் பாகத்திலே போய் படிச்சுட்டு இங்க வாங்க. ஆக்சுவலி இந்த பதிவுகள் நம்ம இளவஞ்சிக்காக. காரணம் அவரே வந்து சொல்லுவார்.படம் உதவி மரக்கானம் பாலா


எனக்கு என்னவோ ரிகர்சல்ல கூட உறுத்திகிட்டே இருந்துச்சு. ராத்திரி முழுக்க எங்களுக்கு ரிகர்சல் , மேக்கப் இத்யாதி இத்யாதின்னு போய்கிட்டே இருக்க அந்த டவுசர் பாண்டிகள் மட்டும் பீடி குடிச்சபடியே (பின்ன எப்படித்தான் அவனுங்களை தரம் தாழ்த்துவது) I want somebody to share - the rest of my life - share my inner most thoughts - know my intimate details- ன்னு dépêche mode band பாடிக்கிட்டு கிதாரை மென்மையா சுரண்டிகிட்டே இருந்தானுங்க. என்னவோ அது "வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது" பாட்டை விட ஒசத்தி மாதிரி அந்த சுடிதார்களும் சுத்தி உக்காந்து ரசிச்சுகிட்டு இருக்க ராதா மாத்திரம் குறத்தி மகன் ரெக்கார்டு பிளேட்டையும் , கூம்பு பிளேயரையும் கஷ்டப்பட்டு "முருகன் சவுண்ட் சர்வீஸ்" வீட்டு பையன் கையிலே கால்லே விழுந்து வாரிகிட்டு மாலா வீட்டு பக்கம் ஓடினான். அப்படியே ராத்திரி ரெண்டு மணி வரை ஓடிச்சு.

அப்படியே காலை 8 மணிக்கு எல்லாம் எழுந்து வந்தோம். நான் மாத்திரம் கொஞ்சம் பயத்துடனே இருந்தேன். நாம் ஏதோ விளையாட்டுக்கு சொல்ல போக அவங்க எல்லாம் நம்பி வந்துட்டா கடிச்சு தின்னுடுவாங்களேன்னு ஒரு வித பயம். இந்த லெட்சனத்திலே அந்த கேர்ல்ஸ் ஸ்கூல் கன்வீனர் வீட்டுக்கும் என் சித்தப்பா வீட்டுக்கும் எல்லை பிரச்சனை வேற இருந்துச்சு. சித்தப்பா வீட்டு காய்ந்த மாவிலைகளை அவங்க வீட்டு காம்பவுண்ட் உள்ளே கொட்டும் பெரும் பொறுப்பு வேற என்னோடது அப்போ. என்னை பார்த்தே பேச மாட்டாங்க, என் கழுத்து குரல் வலையை பார்த்து தான் நேத்து முழுக்க பேசிகிட்டு இருந்தாங்க. இன்னிக்கு என்ன பண்ண போறாங்களோன்னு நெனச்சுகிட்டு இருந்தப்ப தான் முதல் ஆட்டோ வந்துச்சு. உள்ளே பத்மா அவங்க அம்மா கூட குறத்தி வேஷத்திலே வந்து இறங்கி அவங்க அம்மாகிட்டே என்னை பார்த்து கையை நீட்ட எனக்கு பயம் அப்பவே ஏறி பாக்கெட் உள்ளே உக்காந்துகிச்சு. அவங்க அம்மா என்னை கூப்பிட்டு "அம்பி, இவா புரொக்ராம சித்த முன்னாடியே நடத்தினா என்ன? நா வேணா அவா கிட்ட பேசட்டுமா, பாவம் குழந்தைகள் சின்னாளப்பட்டி அரை பாவாடைல ஜரிகை குத்தி செரமப்படுறா"ன்னு கேக்க அதுக்கு நான் "வேண்டாம் மாமீ கார்த்தால ராதா இதுக்குன்னா சண்ட போட்டு அவா கிட்டே மண்டை வீக்கினதுன்னா மிச்சம். அவா ஸ்கூல்ல குங்ஃபூ ஃப்ரீயா சொல்லி தரா போலரிக்கு"ன்னு சமாளிச்சு உள்ளே அனுப்ப பார்த்தேன்.

அப்போன்னு பார்த்து மாலா அவ அண்ணா கூட லூனாவிலே வந்து இறங்கினா. பாய்ஞ்சு குதிச்சு வந்த ஸ்டைலே பக்கா பல்லவராயன்பேட்டை குறத்தி மாதிரி இருந்துச்சு. தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேக், கழுத்து மணிகள், கால் முட்டிக்கு கொஞ்சம் கீழே இறக்கமாக இருந்த பாவாடை, அரை தாவணி, டெம்ப்ரவரி மூக்குத்தி(ஜிமிக்கி பேப்பரை முருங்கை கோந்தில் ஒட்டி அந்த மூக்குத்தியை செட்டப் பண்ணினதா சமீபத்திலே சொன்னா – என்னா பெருமை பாருங்க) இப்படியாக மாலா ஒரிஜினல் குறத்தி மாதிரி அப்படி என் கண்ணே பட்டுடும் போல இருந்துச்சு.



வரிசையாக எல்லா குறத்திகளும் (5 பேர்) வந்து சேர ராதா போய் அவங்க கிட்டே "முழுசும் நனஞ்சாச்சு இதிலே முக்காடு என்ன, அந்த போத்தியிருக்கும் காசி துண்டை எடுத்துடுங்க"ன்னு ரொம்ப ஆர்வமா சொல்லிகிட்டு இருக்க அப்ப எங்க கன்வீனர் KR சார் வந்து சேர அதே நேரம் என் வில்லி கன்வீனரும் வர சார் என் கிட்டே ஆச்சர்யமாக "இவங்க ரோல் எப்போ?"ன்னு கேக்க நான் "இலை எடுத்தோன்ன சார்"ன்னு பவ்யமாக சொன்னேன். அதுக்கு சார் என்னை ஒரு மாதிரி பார்க்க(புரிஞ்சு போச்சு) அந்த டீச்சர் "சார், என்ன புரியலையா காலை டிபன் முடிஞ்ச பின்ன எங்க புரொக்ராம் பஃர்ஸ்ட், ஆல்வேஸ் லேடீஸ் பஃர்ஸ்ட்"ன்னு சொல்லிட்டு வெடுக்குன்னு போனாங்க.



நிகழ்ச்சி எல்லாம் ஆரம்பிக்க ஆரம்பிக்க இந்த அஞ்சும் முன் வரிசையிலே குந்திகிட்டு டால்டா டப்பா(ஹேண்ட் பேக்)வை தட்டி ஆர்பரிச்சுகிட்டே இருக்க எனக்கு கொஞ்சம் கொஞ்சமா பயம் போயிடுச்சு. நானும் ரிகர்சல் போயிட்டேன். எங்க நாடகத்திலே நான் ஒரு அப்பாவுக்கு பையன். அப்பா சரஸ்வதி பூஜைக்கு குறுத்து ஓலை வேணும்ன்னு கேக்க நான் கத்தியை எடுத்துகிட்டு (ராதா தான் குரு- வாத்தியார்) வாத்தியார் தோலை வெட்ட போவேன். வாத்தியார் என்னை பிடிச்சுகிட்டே வந்து அப்பாகிட்டே நியாயம் கேட்பார். அதுக்கு அப்பா "அய்யோ என் பையனை பூஜைக்கு குறுத்தோலை தானே கொண்டு வர சொன்னேன்"ன்னு சொல்ல அதுக்கு வாத்தியார் "உம்ம பையனுக்கு தமிழ் எழுதும் போது தான் எழுத்துப்பிழைன்னு நெனச்சேன் அய்யா, பேசும் போதும் கூட அவனுக்கு எழுத்து பிழையா ஈஸ்வரோ ரட்சத்"ன்னு சொல்லிட்டு போவார். இந்த காட்சிக்கு எல்லாம் அந்த அஞ்சும் டால்டா டப்பா கிழிய கிழிய அடிக்க எனக்கு வேற மாதிரியான பயம் வந்துடுச்சு. ஆஹா அடுத்த நிகழ்ச்சி அவங்க மேடை ஏறிட்டா என்ன ஆகும் என் கதின்னு. அந்த சீன் முடிஞ்சதும் நான் "சார் எனக்கு அவசரமா வயித்தை கலக்குவதால் என்னால் கிளைமாக்ஸ் நடிக்க இயலாது"ன்னு ஒரு துண்டு பேப்பரில் எழுதிட்டு ஓடி ஒழிஞ்சுட்டேன். தேவர்மகன்ல கமல்க்கு ஆன கதி ஆகிடுச்சு எங்க சாருக்கு. "இந்த காட்சியில் இவருக்கு பதிலாக இவர் நடிப்பார்"ன்னு ஒரு அட்டையிலே எழுதி முகத்தை மறைச்சுகிட்டு மேடை முன்னே வந்து நின்னுட்டு பின்னே அட்டையை தூக்கி போட்டுட்டு சாரே நடிச்சார். ஆக இப்போது சின்னத்திரையில் செய்யும் தகிடுதித்தத்தை பெத்ததே எங்க சார் தான்:-))



இருங்க கொஞ்சம் டீயும், வாழைக்காய் பஜ்ஜியும் சாப்பிட்டுக்கறேன். பதிவின் கிளைமாக்ஸ் வந்தாச்சு.



நான் அந்த மேடையின் பக்கவாட்டில் இருக்கும் மேக்கப் ரூமில் ஒழிந்து இருக்க ,அந்த ஐந்து குறத்திகளும் அவங்க தாய்குலங்களும், வில்லி கன்வீனரும், எல்லோரையும் சமாளிச்சுகிட்டு இருக்கும் எங்க சாரும், முக்கியமா ராதாவும் தான் இப்போ பாத்திரங்கள்.



கன்வீனர் டீச்சர்: சார், உங்க பசங்க மேல எனக்கு நம்பிக்கையே கிடையாது சார். இவனுங்க இங்கிலீஷ்ல பேசி ஸ்லாட் வாங்கின போதே நான் சந்தேகப்பட்டேன். இப்போ நடந்துடுச்சு சார். எங்க மானமே போச்சு. பாவம் பசங்க என்னமா ஏமாந்துடுச்சு பாருங்க.



சார்: நடந்தது நடந்து போச்சு விடுங்க டீச்சர். அவன் எனக்கே டிமிக்கி கொடுத்துட்டு ஓடிட்டான்.



மாலா: (கொஞ்சம் கோவத்தோட) சார் அவன் உங்களுக்கு மாத்திரம் டிமிக்கி கொடுக்கலை. "மாலா, குறத்தி எங்கயாவது அஞ்சுகல் வச்ச தோடு போட்டிருப்பாளா. கொஞ்சம் இரு. லாகடத்திலே போய் எட்டனா ஜிமிக்கி வாங்கியாறேன்"ன்னு போய் இந்த ஜிமிக்கிய வாங்கி கொடுத்துட்டான் சார்.அப்பவாவது சொல்லியிருந்தா நான் போய் டிரஸ்ஸ மாத்திட்டு பாம்பே மாமா பொண்ணோட சுடிதார் போன தடவை வந்தபோது வாங்கி வச்சிருந்தேன். அதை போட்டுட்டு வந்து இந்த மெட்ராஸ் ராட்சசிங்க முன்னால அழகா வந்திருப்பேன் சார்.



பத்மாவின் அம்மா: சார். சின்ன பொண்ணு அழுக்காக்கிடுவான்னு நான் பட்டு புடவை கொடுக்கலைன்னு பட்டாச்சரியார் ஆத்து மாமிகிட்டே கேட்டு தாயார் கட்டின எண்ணெய் பிசுக்கு பட்டு புடவைய வாங்கி புது லக்ஸ் போட்டு பிசுக்கு எடுத்து பித்தளை காபிசட்டிலே கரிகங்கு போட்டு தேச்சு வச்சிருந்தா குழந்த. நேக்கு இப்போ குழந்தய பாக்கவே பெத்த வயிறு பிச்சுண்டு போறது சார். லோகத்திலே இப்படீல்லாமா செய்வா பெருமாளே! (அப்போ பத்மா அழுது கொண்டிருந்ததாக ராதா சொன்னான்.)

(அப்போது அழுது கொண்டிருந்த பூவிழியை பார்த்து டீச்சர்)


டீச்சர்: நீ எதுக்குடி அழற? அதான் இல்லைன்னு ஆகிடுச்சே.

பூவிழி: இல்ல டீச்சர் எனக்கு வீட்டுக்கு போக பயமா இருக்கு டீச்சர். ராதா டால்டா டப்பா தான் வேணும்ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான். ஆனா எங்க வீட்டிலே அது இல்லியா அதனால அண்ணனும் அண்ணியும் தூக்கின பின்னே குழந்தைக்கு வச்சிருந்த பேரக்ஸ் டப்பாவிலே கால் டப்பா இருந்துச்சு. அதை சாக்கடையிலே கொட்டிட்டு பேரக்ஸ் டப்பா மேலே மஞ்சள் பேப்பர் ஒட்டி அதிலே பச்சை ஸ்கெட்சாலே மரம் படம் போட்டு DALDA ன்னு நீல கலரிலே எழுதி முடிச்சு ஒட்டி அந்த டப்பாவை எடுத்துட்டு வந்தேன் டீச்சர். அதான் பயமா இருக்கு.

சார்: டேய் ராதா நீயும் தான் இதுக்கு உடந்தையா?


ராதா: சார், இது அத்தனையும் பொய்ன்னு தெரிஞ்சா நான் இத்தன சிரமபட்டு முருகன் எலக்ட்ரிகல்ஸ்ல பிளேயர் எல்லாம் வாங்கி தருவேனா சார். அவனை தான் நீங்க நம்புவீங்க சார். 3 வருஷம் முன்னமே அவன் என்னை ஸ்கூல் டிராமாவிலே, பின்னே இலக்கிய மன்றத்திலே எல்லாம் பாடாபடுத்தியது தெரியாதா சார் உங்களுக்கு. சார் இந்த தடவை அவனுக்கு சரியான பனிஷ்மெண்ட் கொடுக்கனும் சார். எனக்கே நம்ம பசங்களை பார்த்தா பாவமா இருக்கு சார். குறத்தி டிரஸ்ல ஒரு பஃங்ஷனுக்கு வந்த வியாசமானவங்க உலகத்திலேயே இவங்க தான்ன்னு கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்டானே சார்!!


ராதா பேச பேச எனக்கு செம கடுப்பாகிடுச்சு. முதல் தடவையா கவுத்திட்டியேடா நாதாறின்னு மனசிலே நெனச்சுகிட்டேன்!!!


இதல்லாம் முடிச்சு பல வருஷம் ஆன பின்னே கடந்த ஏப்ரல் 26 அன்னிக்கு அபிகூட கடைத்தெருவுக்கு போனேன். அப்போ மணிக்கூண்டுக்கு பின்னே கோவில் வாசல்ல பத்மாவை நான் அன்னிக்கு பார்த்த மாதிரியே ஆனா சுடிதார்ல பார்த்து பிரம்மித்து போனேன். ஆமா அது பத்மா பொண்ணு போல இருக்கு. பக்கத்திலே பத்மா. என்னை பார்த்ததும் நெசமாவே வெக்கப்பட்டு போயிட்டாங்க. போய் பாப்பாவை அறிமுகம் செஞ்சு வச்சேன். அவங்க பொண்ணு +2 வாம். சென்னையிலே. "இந்த ஆண்ட்டி குறத்தி வேஷம் போட்டு ஆடினாங்க"ன்னு சொன்னேன். அதுக்கு பாப்பா "வேஷம் போட்டா?"ன்னு கேட்டா.


என்னை கேட்டாங்க "இப்பவும் அப்படித்தானா இருக்கீங்க?"ன்னு. "இல்லை நான் திருந்திட்டேன்"ன்னு சொன்னதுக்கு அவங்க "இல்ல நீங்க அப்படியே இருந்தாத்தான் நல்லா இருந்திருக்கும். மே பீ வாரிசை வளர்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அவ பதில்லயே தெரியுதே"ன்னு சொல்லிட்டு சிரிச்சாங்க. எனக்கு கூச்சமா போயிடுச்சு.

17 comments:

  1. //மே பீ வாரிசை வளர்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அவ பதில்லயே தெரியுதே"//

    அந்த பத்மாவும் கண்டுபுடிச்சிட்டாங்களா????

    :)))))))))))))))

    ReplyDelete
  2. //வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது//

    ஓ இதுவே நீங்க பாடியிருக்கீங்களா அப்ப அடுத்து இந்த மேட்டரத்தான் சொல்லணும் ஒ.கே :)

    ReplyDelete
  3. ///உம்ம பையனுக்கு தமிழ் எழுதும் போது தான் எழுத்துப்பிழைன்னு நெனச்சேன் அய்யா, பேசும் போதும் கூட அவனுக்கு எழுத்து பிழையா ஈஸ்வரோ ரட்சத்"ன்னு

    ஓ அப்பலேர்ந்தேவாஆஆஆஆ

    ReplyDelete
  4. //ஆக்சுவலி இந்த பதிவுகள் நம்ம இளவஞ்சிக்காக//

    இது என்னது புதுக்கதையா இருக்கே?????

    ReplyDelete
  5. //சித்தப்பா வீட்டு காய்ந்த மாவிலைகளை அவங்க வீட்டு காம்பவுண்ட் உள்ளே கொட்டும் பெரும் பொறுப்பு வேற என்னோடது அப்போ/

    :)))))))

    ReplyDelete
  6. //சென்னையிலே. "இந்த ஆண்ட்டி குறத்தி வேஷம் போட்டு ஆடினாங்க"ன்னு சொன்னேன். அதுக்கு பாப்பா "வேஷம் போட்டா?"ன்னு கேட்டா.//

    சிரிச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கேன் :)))))))))))))

    ReplyDelete
  7. //"உம்ம பையனுக்கு தமிழ் எழுதும் போது தான் எழுத்துப்பிழைன்னு நெனச்சேன் அய்யா, பேசும் போதும் கூட அவனுக்கு எழுத்து பிழையா ஈஸ்வரோ ரட்சத்"//

    தலையெழுத்து!! இதுல இதைப் பெருமையா வேற பேசிக்க வேண்டியது!! என்னாத்த சொல்ல!!

    ReplyDelete
  8. ////ஆயில்யன். said...
    //மே பீ வாரிசை வளர்த்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். அவ பதில்லயே தெரியுதே"//

    அந்த பத்மாவும் கண்டுபுடிச்சிட்டாங்களா????

    :)))))))))))))))///


    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  9. //////இலவசக்கொத்தனார் said...
    //"உம்ம பையனுக்கு தமிழ் எழுதும் போது தான் எழுத்துப்பிழைன்னு நெனச்சேன் அய்யா, பேசும் போதும் கூட அவனுக்கு எழுத்து பிழையா ஈஸ்வரோ ரட்சத்"//

    தலையெழுத்து!! இதுல இதைப் பெருமையா வேற பேசிக்க வேண்டியது!! என்னாத்த சொல்ல!!////


    :))

    ReplyDelete
  10. //"இந்த ஆண்ட்டி குறத்தி வேஷம் போட்டு ஆடினாங்க"ன்னு சொன்னேன். அதுக்கு பாப்பா "வேஷம் போட்டா?"ன்னு கேட்டா//..


    இதுதான் டாப்பு..

    ReplyDelete
  11. சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  12. அபி அப்பா, இரண்டு போஸ்ட் போட்டாச்சா???? நல்ல பதிவுனு நினைக்கிறேன். படிச்சுட்டு மெதுவா வந்து பின்னூட்டம் போடறேன், போட்டாலும் நீங்க என்ன பதிலா சொல்லப் போறீங்க?? :P அபி பாப்பாவே சொல்லிடுச்சே எல்லாம்!

    ReplyDelete
  13. மரக்கானம்=மரக்காணம்
    லெட்சனத்தி=லெட்சணத்தில்
    குரல் வலையை=குரல் வளையை
    வீக்கினதுன்னா=வீங்கினதுன்னா
    போலரிக்கு= போல இருக்கு
    குறுத்து ஓலை=குருத்து ஓலை

    வாத்தியார் தோலை வெட்ட போவேன்= இது நிச்சயமா நீங்க செய்யற வேலை தான், சந்தேகமே இல்லை! :P

    உம்ம பையனுக்கு தமிழ் எழுதும் போது தான் எழுத்துப்பிழைன்னு நெனச்சேன் அய்யா, பேசும் போதும் கூட அவனுக்கு எழுத்து பிழையா ஈஸ்வரோ ரட்சத்= அட, அந்த வாத்தியாரை நான் பார்த்துப் பாராட்டு விழா எடுக்கணுமே?? :P

    தூக்கின பின்னே குழந்தைக்கு =தூங்கின பின்னால் குழந்தைக்கு

    யப்பா, முடியலை, சாமி, நான் அம்பேல்!!!!!!!!!!!!

    ReplyDelete
  14. அபியப்பா,

    // இளவஞ்சி said...

    மனுசனாய்யா நீர் எல்லாம்?!

    கடுக்காய் கொடுக்கறதுன்னா என்னன்னு உம்மைத்தான் கேக்கனும்!

    எங்களை ஏமாத்துன பாவத்தை கழுவ உம்ம கல்லூரிகால (குறிப்பா புள்ளைங்களுக்கு கொடுத்த ) கடுக்காய்களை பத்தி ஒரு பதிவு போடும் ஓய்!
    April 4, 2008 4:05 PM //

    இதுக்குத்தான் இந்த பதிவுகளா? நன்றின்னேன்! :)

    / /அதை சாக்கடையிலே கொட்டிட்டு பேரக்ஸ் டப்பா மேலே மஞ்சள் பேப்பர் ஒட்டி அதிலே பச்சை ஸ்கெட்சாலே மரம் படம் போட்டு DALDA ன்னு நீல கலரிலே எழுதி முடிச்சு ஒட்டி அந்த டப்பாவை எடுத்துட்டு வந்தேன் டீச்சர் // எப்படிங்க இப்படியேல்லாம்?

    அல்டிமேட்டு என்னன்னா...

    // குறத்தி டிரஸ்ல ஒரு பஃங்ஷனுக்கு வந்த வியாசமானவங்க உலகத்திலேயே இவங்க தான்ன்னு //

    நல்லா இருமைய்யா! இந்த அலும்புகளை எழுதவாவது நீர் வாழ்வில் திருந்தாவரம் பெறக்கடவது! :)

    ReplyDelete
  15. முடில அபிஅப்பா
    ஆமா அபிஅம்மா கிட்ட வாங்கி கட்டிக்கிட்டதெல்லாம் எழுதீட்டிங்களா?

    ReplyDelete
  16. Pl write about your friends

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))