பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 11, 2009

சரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது!!!!!

எப்படித்தான் சரோஜா டீச்சருக்கு அப்படி ஒரு விபரீத புத்தி வந்துச்சோ தெரியலை. ஏன் டீச்சர் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? உங்க கிட்ட எத்தனை பாசமா இருந்தோம். நீங்களே தன்னிச்சையா இப்படி ஒரு முடிவுக்கு வரலாமா? உங்களுக்காக உயிரையும் கொடுப்போமே டீச்சர். இப்படி எங்களை தவிக்க விட்டு வாய் மூடி அழ வைத்து விட்டீர்களே.

"டேய் ராதா, நீயாவது சொல்ல கூடாதா? உனக்கு தூரத்து சொந்தம் தானே?"

"நான் என்னடா செய்ய முடியும். மேல ஒருத்தன் இருக்கான் பார்த்துப்பான்"

"போடா எனக்கு கடவுள் மேல நம்பிக்கை போயிடுச்சு சம்பவத்தை நினைச்சா"

"என்னடா சம்பவம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற! தோ பார் கச்சேரி பிள்ளையாருக்கு காசு முடிஞ்சு வைப்போம் நல்லதே நடக்கும்"

"நம்மளை விடுடா! அங்க பாரு விஜயலெட்சுமி அழுவுதுடா"

"ஆமாடா பொம்பளை புள்ளைங்க அழுதுடும். ஆனா நாம தான் தைரியமா இருப்போம்"

"டேய் நேத்து சாயரட்சை கூட 'ராதா நல்லா படிச்சு பெரிய புரபசரா வரனும் அப்படின்னு முத்து முத்தா பேசினாங்கடா என் கிட்ட"

"போடா ராதா கார்த்தால நான் ஸ்கூல்கிட்ட வரும் போதே "ஓடாம மெதுவா போடா"ன்னு சொன்னாங்க"

"டேய் அங்க பாருடா! இத்தனை களேபரம் நடந்துகிட்டு இருக்கு முதல் பெஞ்ச் விஸ்வநாதன் கெக்கேபிக்கேன்னு சிரிச்சு கிட்டு இருக்கான்"

"விடுடா அவன் அப்பா மாஜிஸ்ட்ரேட்டு, அவன் ஊட்டில இங்கிலீஸ் கான்வெண்ட்ல படிச்சவன். த்தக்கா பித்தக்கான்னு இங்கிலீஷில் பேசும் திமிறு. நிலைமை தெரியாம சிரிச்சு கிட்டு இருக்கான்"

"ஏண்டா அவங்க பிரண்டு தானே புஷ்பவல்லி டீச்சர் அவங்க கிட்ட ஒரு யோசனை கேட்டிருக்கலாமே சரோஜா டீச்சர்"

வாய் மூடி மௌனியாக நானும் ராதாவும் மேலே சொன்னது அத்தனையும் கண்ணால் பேசி கொண்டிருந்தோம்.

"டேய் டேய் பிஆர் சார் வர்ரார்டா. என்ன நடக்க போவுதுன்னு தெரியலையே"இது ராதா.

"குட்மார்னிங் ஹெட்மாஸ்டர்" - இது சரோஜா டீச்சர்!

"குட்மார்னிங் டீச்சர். வெரிகுட். நான் நேத்து மீட்டிங்ல எல்லாருக்கும் முன்ன அப்படி சொல்லியிருக்க கூடாது. ஆனா பாருங்க ரிசல்ட் பக்காவா வந்திருக்கு" - இது ஹெட்மாஸ்டர்.

"அதனால என்ன சார்! நான் உங்க பொண்ணு மாதிரி தானே. பரவாயில்லை. என் வகுப்பிலே தான் அதிக சத்தம் வருது. எல்லாரும் தொன தொனன்னு பேசிகிட்டு இருக்காங்க என்னால கட்டு படுத்த முடியலைன்னு சொன்னீங்க. நானும் அதை ஒரு சேலஞ்சா எடுத்து கிட்டு காலை முதல் சைலண்ட்டா வச்சிருக்கேன் பசங்களை"

'குட் அப்படி என்ன செஞ்சீங்க"

"ஒன்னும் இல்லை சார். இனிமே நீங்க என் வகுப்பிலே எத்தனை சத்தமா வேண்டுமானா பேசிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன் எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கனும் அப்படின்னு சொன்னேன். நல்லா ஒர்க்கவுட் ஆச்சு சார்"

*************************************************************************************************************

திரும்பவும் மேலே இருந்து ஒரு தடவை படிங்க சிரிப்பு வருதா பார்க்கலாம்!

13 comments:

 1. சரோஜா டீச்சர் பண்ணது ரொம்ப தப்புங்க. அதுவும் நம்மள மாதிரி இருப்பவங்களைப் பார்த்து இங்கிலிபீசுல பேசுன்னு சொன்னா என்ன அர்த்தம்.

  ம்.. என்னா பண்ணுவது, விதி வலியது, கொடியது...

  ReplyDelete
 2. //ஆனா ஒரு கண்டிஷன் எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கனும் அப்படின்னு சொன்னேன். நல்லா ஒர்க்கவுட் ஆச்சு சார்//

  நம்ம ஸ்கூல் டீச்சருங்க எல்லாம் இங்கிலீஷ் பேசி நமக்குப் புரியறதுக்கு ரொம்ப நாளாச்சி.. இந்த ரேஞ்சுல பசங்க பேசினாங்கன்ன என்ன பண்றது..

  ஹையர் செகண்டரி முதல் வருடம் இங்கிலீஷ் மீடியம்.. புஷ்பவல்லி டீச்சர் தான் கிளாஸ் எடுத்தாங்க... அவங்களுக்கும் இங்கிலீஷ் புதுசு.. இதுதான் ஹையர் செகண்டரி வந்து இரண்டாம் வருஷம். நம்ம ஸ்கூல்ல முதன் முதலில் ஆங்கிலத்துலேயே பேசற வகுப்பு..

  எனக்கெல்லாம் கண்ணைக்கட்டி கோயில்ல விட்டாப்புல இருக்கும்..

  ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்துலேருந்து எல்லாம் ஜோக்கு படிச்சிட்டு வந்து ஒப்பிப்பாங்க.. நாங்க மூஞ்சியில எண்ணை வடிய அழுதுண்டு உக்காந்திருப்போம்.. ஜோக்கு புரியாது..

  ரொம்ப கஷ்டப்பட்டு.."இது ஜோக்கு இதுக்கு நீங்கல்லாம் சிரிக்கணும்" அப்படீம்பாங்க.. எங்களுக்கு அதுவும் புரியாது.. ஒரே ஒரு சோடாப்புட்டி கண்ணாடிப்பையன் அந்த கடைசிவரி மட்டும் புரிஞ்சிண்டு சிரிப்பான்.. அவன் சிரிக்கிறதைப் பாத்து நாங்களும் சிரிப்போம்..

  டீச்சர் அடிக்கடி "இட் டஸ்ண்ட் மேட்டர்" அப்படீம்பாங்க.. அப்படீன்னா என்னடா அர்த்தம் அப்படீம்பான் நம்ம தோஸ்து..

  அவனுக்கு அப்ப நான் சொன்னது.." இதைத் தவிர பேசறதுக்கு இன்னும் ஒரு டஜன் செய்தி இருக்குன்னு" சொல்றாங்கடா அப்படீம்பேன்..

  என் தோஸ்து அப்படியே.. என்னை ஷேக்ஸ்பியரே நேர வந்து இறங்கினாப்புல ஒரு லுக் விடுவான் பாருங்க.. ஜில்லுனு இருக்கும்....


  இப்ப சொன்னா என்ன சொல்லப்போறானா தெரியலை...

  ReplyDelete
 3. //எனக்கெல்லாம் கண்ணைக்கட்டி கோயில்ல விட்டாப்புல இருக்கும்..//


  ஆஹா....!

  ReplyDelete
 4. //ரீடர்ஸ் டைஜஸ்ட் புத்தகத்துலேருந்து எல்லாம் ஜோக்கு படிச்சிட்டு வந்து ஒப்பிப்பாங்க.. நாங்க மூஞ்சியில எண்ணை வடிய அழுதுண்டு உக்காந்திருப்போம்.. ஜோக்கு புரியாது..///

  இது கூட பரவாயில்ல பக்கத்தில இருக்கிற ஆளை பார்த்து சிரிச்சுக்கலாம் ஆனா வெளியில போர்ட்ல நியூஸ் எழுதி வைப்பாங்க அதை பாக்கும்போது ஆனந்த கண்ணீர்தான் வரும் :))

  ReplyDelete
 5. ஹை நீங்க இங்கிலீஸ் மீடியமா அதான் சரோஜா டீச்சர் இங்கைலீஸுலயே பேச சொல்லிட்டாங்க, நான் தமிழ் மீடியம் புஷ்பவள்ளி டீச்சர் எங்களுக்கு, ரொம்ப அழகா சொல்லி கொடுப்பாங்க... இங்க பாருங்க ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும் போக போக நல்லா வரும் வெட்கப்படாம பேசுங்க... "ஏறிங்க் த மாடி... அடிச்சிங்க் த பம்ப்"-னு பேசுங்க-ன்னு சொல்லிகொடுத்தாங்க. நாங்க பேசுரத பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பாங்க.

  ReplyDelete
 6. அண்ணா என்ன இது????????? நான் என்னவோ ஏதோனு நினைச்சிட்டு பதறிகிட்டே படிச்சேன்:)

  ReplyDelete
 7. பண்ணியிருக்கோம்ல ...

  ReplyDelete
 8. சிரிக்கத்தான் போறோம்னு தெரியும் அதுக்காக இப்படியா .
  சிரிப்பு வந்துச்சு, இன்னும் நிக்கவே இல்லை
  மாத்திரை ஒண்ணு சொல்லுங்க....

  ReplyDelete
 9. அபி அப்பா இப்படிச் செஞ்சிருக்கப்ப்ப்ப்ப்டாது .

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))