பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 30, 2009

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் தடாலடி ஆரம்பம்!!!



அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் மத்திய கேபினட் அமைச்சரானவுடன் இன்று தன் முதல் தடாலடியை துவக்கினார்.


சென்னையில் இருந்து 45 கல்லூரி மாணவர்கள் காஷ்மீரத்துக்கு கல்வி சுற்றுலா சென்று விட்டு விமானம் மூலமாக டெல்லி திரும்பினர். பின்னர் டெல்லி முதல் சென்னை செல்லும் விமானம், காஷ்மீர் விமானத்தின் தாமதத்தால் தவற விடப்பட்டது.


அதனால் மாணவர்கள் தங்கள் கையில் இருந்த பணத்தில் ரயில்வே டிக்கெட் பதிவு செய்து ரயில்வே நிலையம் செல்லும் முன் அந்த ரயிலும் தவற விடப்பட்டது. மாணவர்கள் திரும்பவும் விமான நிலையத்துக்கு வந்து தவித்து கொண்டிருந்தனர் கையில் பணமும் இல்லாமல்.


அப்போது முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து டெல்லி வந்து இறங்கிய அஞ்சாநெஞ்சன் அவர்களின் நிலை கண்டு உடனே வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைத்து விட்டு அமைச்சரவை கூட்டத்துக்கு சென்று விட்டார்.


பின்னர் கூட்டம் முடிந்ததும் ரயில்வே அமைச்சர் மம்தா அவர்களை தொடர்பு கொண்டு மாணவர்களின் நிலையை விளக்கி உதவி செய்ய கோரிக்கை வைக்க உடனே அவர்களும் ரயில்வே உயர் அதிகார்களை தொடர்பு கொண்டு மாணவர்களுக்காக தனி பெட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார்.


அதன் படி மாணவர்கள் தனி பெட்டியில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து கொண்டு இருக்கின்றனர்.


அஞ்சாநெஞ்சன் மற்றும் மம்தாபானர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி!


இது போன்ற தடாலடி நன்மைகள் அஞ்சாநெஞ்சனுக்கு புதிதல்ல. இதே வேகம் துறை சார்ந்தும் இருக்க வேண்டும். நிச்சயமாக இருக்கும்.

27 comments:

  1. தடாலடி ஆரம்பிச்சிடுச்சேய்ய்ய்ய் :))))

    ReplyDelete
  2. கலக்கல்.. அண்ணனுக்கு ஜே.. :)

    ஆரம்பமே அசத்தலா இருக்கு..

    ReplyDelete
  3. மதுரக்காரய்ங்களே அப்படித்தான்னே...!

    பாசக்கார பயலுக,கஷ்டம்னா ஓடி வந்து ஒதவுவாய்ங்க.... என்ன அப்பப்ப கொஞ்சம் மொரட்டு கோவம் வரும் அம்புட்ட்டுத்தேன்....

    ReplyDelete
  4. // யட்சன்... said...

    மதுரக்காரய்ங்களே அப்படித்தான்னே...!

    பாசக்கார பயலுக,கஷ்டம்னா ஓடி வந்து ஒதவுவாய்ங்க.... என்ன அப்பப்ப கொஞ்சம் மொரட்டு கோவம் வரும் அம்புட்ட்டுத்தேன்....//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  5. உங்களுடைய இந்த இடுகையை தமிழிஷ், தமிழர்ஸ் இரண்டிலும் இணைத்துள்ளேன்.

    நண்பர்களே உங்களுடைய் பொன்னான வாக்குகளை தமிழர்ஸ், தமிழிஷில் அளிக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  6. can we stop this nonsense of referring people with the names such as Anjanenjan, Kalaignar, Thalabadhy, Puratchi Thalaivi, etc., All these people indeed have a name, dont they?

    It is so sick! we should not fall in to sycophancy!

    ReplyDelete
  7. 1. If the connecting flight is delayed, the airline will put you in the next flight. 2. How come all the sudden they booked train ticket? 3. And then, they also missed that train! 4. They have no money! Good story, but you need to fabricate it properly! Good luck next time!

    ReplyDelete
  8. // யட்சன்... said...

    மதுரக்காரய்ங்களே அப்படித்தான்னே...!

    பாசக்கார பயலுக,கஷ்டம்னா ஓடி வந்து ஒதவுவாய்ங்க.... என்ன அப்பப்ப கொஞ்சம் மொரட்டு கோவம் வரும் அம்புட்ட்டுத்தேன்....//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

    //

    ரிப்பிட்டுக்கு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

    அண்ணன் அசத்தல் ஆரம்பம்...

    ReplyDelete
  9. அம்புட்டு நல்லவரா அழகிரி?
    பாருடா.. இதுவரைக்கு எனக்கு தெரியாமபூட்சி?
    அண்ணே உங்க நூலகம்.. சூப்பர்!

    ReplyDelete
  10. மதுரக்காரய்ங்களே அப்படித்தான்னே...!

    பாசக்கார பயலுக,கஷ்டம்னா ஓடி வந்து ஒதவுவாய்ங்க.... என்ன அப்பப்ப கொஞ்சம் மொரட்டு கோவம் வரும் அம்புட்ட்டுத்தேன்....//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
  11. மலையை நகட்ட வில்லைன்னாலும் மண்ணையாவது தூக்கி போடுகிறார்களே சந்தோசபடுங்கள்.

    ReplyDelete
  12. TEMPLATE ERROR: Invalid data reference post.timestamp: com.google.layouts.framework.widgetview.GoogleMarkupException: No dictionary named: 'post' in: ['blog']

    ReplyDelete
  13. கஷ்டப்படுற தமிழ் மாணவர்கள பார்த்ததும் உடனே உதவிட்டாரு. நல்ல விசயம் தான். இதே வேகம் அவரோட துறையிலயும் இருக்கனும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

    அவரது செயல்திறன் குறித்து எவ்வித சந்தேகமும் இல்லை. தென் மண்டல பொறுப்பாளராக தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை கைப்பற்றி சாதித்தவர். அதுவும் மதுரை தொகுதி வேட்பாளராக இருந்ததால் மதுரை தொகுதிக்கு வெளியில் சென்று தேர்தல் பணியாற்ற இயலாத நிலையிலும் அவர் பெற்றுத் தந்த வெற்றி அவரது செயல்திறனை காட்டுகிறது. பணம் குடுத்தாங்க பணம் குடுத்தாங்கன்னு சொல்லலாம். ஆனா வெறும் பணம் மட்டும் இப்படி ஒரு வெற்றியை பெற்றுத் தர இயலாது.

    ReplyDelete
  14. இந்த வேகமும்..செயல் திறனும் எல்லா விஷயத்துலயும் இருந்தா வேறென்ன.. அதை நம்பி தான் கலைஞருக்கு ஓட்டு போட்டு இருக்காங்க... மறுபடியும் மக்களை முட்டாள் ஆக்காம இருந்தா..
    அதை விட சந்தோஷம் ஒன்னுமில்லை.. இதை கலைஞர் மறக்க கூடாது.. அப்பதான் மந்திரி பதிவிக்கு நடத்துன கூத்தை மக்கள் மறப்பாங்க...

    ReplyDelete
  15. இந்த வேகம் அலுவலகத்தில இருக்கும் வரைக்கு குறையாம இருக்கணும். வர வர மாமியா கழுதை போல ஆனாளாம் கதையா ஆகாம.

    ReplyDelete
  16. வாழ்க அஞ்சா நெஞ்சன். அவரது புகழ்

    ReplyDelete
  17. நல்ல வேளை. இவர் வான் வழித்துறை அமைச்சராக வில்லை. ஒரு வேளை ஆகியிருந்தால், மாணவர்களுக்குத் தனி விமானமே மதுரை வரைக்கும் விட்டிருப்பார்.

    ReplyDelete
  18. You Slave people always Jinjanakka to these kind of Tamil's enimies!

    Good Luck!

    Anyway it is not a logical story which cannot be a good drama. Anjanenjam must learn more from his great father Kalaignar who can create best srory, screenplay, Dialogue and Drama.

    ReplyDelete
  19. மதுரையில தினகரன் ஆபீஸ் ல மூணு டிக்கெட் எடுத்து கொடுத்தாரு.
    டெல்லி ல நாப்பத்தைந்து டிக்கெட் எடுத்து கொடுத்திருக்காரு.
    டிக்கெட் என்பதின் அர்த்தம் அங்கங்க வேறுபடும்.

    டிஸ்கி : மறதி தமிழனின் வியாதி. ( பின்னூட்டத்திற்கே டிஸ்கியா!)


    - ஜு .க்

    ReplyDelete
  20. நேரத்தில் அவர் செய்த உதவி அந்த மாணவர்களுக்கு மிகவும் ஆறுதல் மட்டும் அல்ல அவர்கள் பெற்றோருக்கு வயிற்றில் பாலை வார்த்திருக்கும்.

    ReplyDelete
  21. http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11284&cls=row3&ncat=IN

    அய்யோ அண்ணன், சரியா படிச்சுட்டு, பதிவு போடுங்க.

    மறுபடியும் மேலே இருக்குற லிங்க் படிங்க.

    ஈரம் இருக்குற இடத்தில் கோபமும் இருக்குமுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்.

    அழகிரிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. பாசத்துல பச்ச மண்ணா இருக்காறே...இம்புட்டு நல்லவரா இவரு..

    ஊருக்குள்ள வேற மாரி சொன்னாய்ங்க......

    ReplyDelete
  23. ஏங்க, விமானத்துல காஷ்மீர் சுற்றுலா போக முடியற மாணவர்களுக்கு, திரும்பி வரதுக்கும் விமானத்துலயே டிக்கெட் புக் செஞ்சு வச்சிருந்தவங்களுக்கு, ட்ரெயின் டிக்கெட்க்கு காசு இல்லயாமா? இந்த காமெடியையெல்லாம் கேக்க ஆளில்லைங்களா?

    ReplyDelete
  24. நான் சொல்லி தந்த மாதிரியே செய்துருக்கர்.......
    இதெல்லாம் ட்ரைளர் தான் மெயின் பிச்சர் இனிமேல் தானுங்க

    ReplyDelete
  25. een ancha nanchan 4 enginners i erichchatha oru pathiva podalame

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))