அன்புள்ள டாக்டர் அய்யா கலைஞர் அவர்களே!
நான் கடைமட்ட தோழன் தொல்காப்பியன் பேசுகிறேன்! நானும் ராமர் பாலம் கட்டிய போது உதவிய அணில் மாதிரி சின்ன சின்ன உதவி செய்தவன் தான். அதனால் எனக்காக நீங்க என் முதுகிலே 3 கோடு கூட போட வேண்டாம். இரண்டு கோடு போட்டா கூட போதும்.
1. முதலில் "திருமா" என்னும் இளைஞன் நீங்கள் வற்புறுத்தியும் கூட இயக்கம் காரணமாக தன்னை இழந்த திருமணமாகாதவன். ஆனால் இப்போதைக்கு அவருக்கு நீங்க வெளியுறவுதுறை வாங்கி தந்தால் சந்தோஷபடுவேன். நான் மட்டுமல்ல அகில உலக தமிழுலகமும். பிரணாப் முகர்ஜி முட்டுகட்டை போடுவார் என நீங்க சொன்னா கூட அட்லீஸ்ட் அந்த துறை ராஜாங்க அமைச்சரா ஆக்க உங்களால் முடியும்.
அப்படி செய்தால் என்ன நடந்து கிழிந்து விடும் என கேட்பவர்களுக்கு!
1.ஈழத்தில் வாழும் எம் குலத்தினருக்கு குறைந்தபட்சம் 10 தொழிற்சாலையாவது உண்டாக்கி தருவார், அவர்கள் பிழைக்க வழிவகை செய்வார்.
2. அனைவ்வருக்கும் முதலில் மருத்துவ வசதி செய்வார்!
3.முக்கியமாக பார்லிமெண்டில் குரல் கொடுப்பார்
அடுத்தது!
திரு அப்துல் ரஹ்மான்!
இவர் பெரிய பொருளாதாரமேதை என்பதை துபாய் அறியும்!
இவர் துபாய் இஸ்லாமிக் பேங்கின் தலைவர் 2 மாதம் முன்னர் வரை.
எல்லா பேங்கும் ஊத்திகிட்ட பின்னவும் இவர் பேங் நல்லா இருந்துச்சுன்னா இவர் தான் காரணம். இவர் எம் பி எலக்ஷன்ல நிக்க போவது தெரிஞ்சு கவர்மெண்ட்டே அவரை கெஞ்சி கேட்டது. போக கூடாதுன்னு.
அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மந்திரி பதவி வாங்கி கொடுத்தால் இந்த ரிஸசன் பீரிய்யட் இந்தியாவில் இருந்து விரட்டப்படும் என்பது நிச்சயம்.
செய்வீர்களா அய்யா!
அன்புடன்
அபிஅப்பா
:))
ReplyDelete:))))
உங்க வேண்டுகோள் கலைஞர் காதுகளில் விழுவதாக ஆமென்..
ReplyDelete//1.ஈழத்தில் வாழும் எம் குலத்தினருக்கு குறைந்தபட்சம் 10 தொழிற்சாலையாவது உண்டாக்கி தருவார், அவர்கள் பிழைக்க வழிவகை செய்வார்.//
ReplyDeleteதிருமா செய்வதை ஈழத்தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் கருணாநிதி வழியாக அது நடந்தால் இப்போதிருக்கும் சூழலில் ... வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.
கர்ணன் தன் மகன் என்று அவன் இறந்த பிறகு ஒப்பாறி வைத்தாளாம் குந்திதேவி.
அன்புள்ள டாக்டர் அய்யா :)
ReplyDelete:):)
மிச்சம் மிதி இருந்தா குடுப்பாரு
ReplyDeleteஆனா திருமாவுக்கு அல்ல...!!!
//அஸசன் பீரிய்யட் // அதென்ன பீரியட்? மேத்ஸ் பீரியடுக்கு அப்புறம் வந்து PT பீரியடுக்கு முன்னால வருமே அதா?
ReplyDeleteஅப்பால.. உங்க ஆசையெல்லாம் பாத்தா :-))))))))))))))))))))))
வாப்பா மின்னல்! வாங்க கோவியாரே! கலைஞர் காதில் விழ் தான் இந்த பதிவு! எல்லோரும் போட்டா கூட சந்தோஷம் தான்!
ReplyDeleteதிருமாவே என் அடுத்த நம்பிக்கை!
தேவ் கண்டிப்பாக அவர் காதில் வ்ழும் என நம்புவோம்!
ReplyDeleteநல்லது நடக்குதான்னு பாப்போம்
ReplyDeleteசாரி பினாத்தலாரே! எப்போத்ஹும் போல ஸ்பெல்லிங் மிஸ்டேக் சரி பண்ணிட்டேன்! அர்த்தமே மாறி போச்சு இல்ல"-))
ReplyDeleteஅன்பு உடன்பிறப்பே தொல்காப்பியன்,
ReplyDeleteஉன் வேண்டுகோள் கடிதம் கிடைத்தது.
படித்துவிட்டு பதை பதைத்துப் போனோன்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை அறியாத தொண்டணா நீ?
இப்படியெல்லாம் இவருக்கு பதவி வேண்டும், அவருக்கு அந்த இலாக கொடுக்க வேண்டும் என்று அம்மையார் பாணியில் மிரட்டிப் பதவி பெறும் இயக்கமா நம் இயக்கம்?
திமுகவில் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதை செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடித்தானே முடிவு செய்யும்? இது நீ அறிவாய் அல்லவா?
இப்போதும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும் நாம் செயற்குழுவைத் தானே கூட்டினோம், செயற்குழு மந்திரிசபை குறித்தும், யார் யாருக்கு பதவி என்பது குறித்தும் முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு வழங்கி மட்டும் தானே தீர்மானமியற்றியுள்ளது? நீ கேட்பது போல திருமாவுக்கோ, அல்லது அப்துல் ரஹ்மானுக்கோ பதவி வழங்க கோரி தீர்மானம் இயற்றவில்லையே கண்மணி , நான் எப்படி கழகத்தின் சக்திவாய்ந்த செயற்குழுவின் முடிவை மீறி ஜனநாயகமற்ற வழியில் செயல்பட முடியும்?
கட்சியின் வரலாறு எழுதிய உனக்கு தெரியாத இது ?
நானே மகன் அழகிரிக்கும், மகள் கனிமொழிக்கும், பேரன் தயாநிதிக்கும் சமமான வருமானமுள்ள துறைகளை கேட்டு பெற வேண்டுமே என்ற பதை பதைப்பில் உள்ளேன் என்பதை நீ உணரவில்லையா? அப்படி கிடைக்காத பட்சத்தில் எத்தனை பேரை நான் சமாதானப்படுத்தவேண்டியிருக்கும் என்பது உனக்கு தெரியாதா கண்மணி .
திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கையின் படி உனது கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்க அண்ணா நாமம்,
வளர்க கலைஞர் குடும்பம்.
இப்படிக்கு,
மு.கருணாநிதி
தலைவர்,
திராவிட முன்னேற்றக் கழகம்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி முரளிகண்ணன் கூட பேசும் போது அவர் கேட்டார். திருமாவளவனுக்கு மந்திரிப் பதவி கிடைக்குமா என்று. கிடைத்தால் சந்தோஷம் தான். ஆனால் அதில் சில பிரச்சனைகள் இருக்கு. அவர் திமுகவுடன் தான் கூட்டு. காங்கிரசுடன் இல்லை என்றவர். இப்போது காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் எப்படி இணைவார் என்றேன். அதை விடுவோம்.
ReplyDeleteகாங்கிரஸ் என்றால் தமிழகம் மட்டும் தான் என தவறாக நினைத்து இந்திய அளவில் காங்கிரஸ் பலம் என்ன தெரியாமல் காங்கிரசை அழிப்பதே லட்ச்சியம் என்று சிறுபிள்ளைத் தனமாக உளறி இருந்தாலும், பின்னர் அவர் பேச்சில் மாற்றம் இருந்தது.
அதைத் தவிர்த்து பார்த்தால் திருமாவளவனின் நேர்மையில் எந்த சந்தேகமும் இல்லை. எந்தக் குடும்பத்திற்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத மனிதர். உண்மையில் அவரை மதிக்கிறேன். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கினால் முதலில் வாழ்த்து சொல்வேன்.
ஆனால் அதற்காக வெளியுறவு என்பது டூ மச். வெளியுறவு என்பது இலங்கையை மட்டும் வைத்து செயல்படும் அமைச்சகம் இல்லை. அதன் துணை அமைச்சர் பதிவுக்குக் கூட அவருக்கு சரி வராது.
மேலும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்ய அவர் வெளியுறவு அமைச்சராக இருக்க வேண்டியதில்லை. ஒரு அமைச்சராக இருந்தாலே போதும். அதை வைத்தே அமைச்சரவைக் கூட்டங்களில் ஈழ விவகாரத்தை தொடர்ந்து பேச முடியும். பாராளுமன்றத்தில் வெறும் எம்பியாக பேசுவதை விட வலிமையானது அமைச்சரவைக் கூட்டங்களில் பேசுவது. எனவே வேறு அமைச்சரவையில் அவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்குவது சரியாக இருக்கும். அவர் செயல்பாட்டை பார்த்து பின் பதவி உயர்த்தலாம்.
எதுவாயினும் திருமாவள்வனுக்கு அமைச்சரவையில் இடம் என்பது வரவேற்கத் தகுந்ததே. ஆனால் கலைஞர் மூலம் இது சாத்தியமே இல்லை. அவருக்கு ஏற்கனவே கமிட்மண்ட் அதிகம்.
அன்பு அண்ணம் மொவனே ஜோசப்பு!
ReplyDeleteஉன் கோவத்தை என் கிட்டதானே நீ காமிக்க முடியும்! ஓக்கே! அமேதி அமேதி சே அமைதி அமைதி!!தமிழ்ல சொன்னா கூல் கூல்!
ஜோசப், தயாநிதிக்கு மந்திரிசபையில் இடம் இல்லை.
ReplyDeleteசஞ்சய்! அப்படி ஒன்னும் தகுதிஇல்லாத ஆள் இல்லை திருமா! வக்கீலுக்கு படித்தவர். நல்லா ஆங்கிலமும் தமிழும் "தெளிவா" பேச தெரிஞ்சவர். தான் துறை பற்றி 2 நாளில் தெளிவா தெரிஞ்சுப்பார்.
ReplyDeleteஅவருக்கு நல்லா தெரியும் இலங்கை மட்டும் அல்ல நாம் அயல்நாடுன்னு, பாலஸ்தீனமும் தெரியும்! ஏன்னா அவர் எல்லாம் சேகுவாரா சந்ததிங்கோவ்!
சரியாகச் சொன்னீர்கள் தம்பி. நடந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அப்துல் ரஹ்மான் அவர்கள் நிதித் துறை இணை அமைச்சராக ஆனால் கூட மிகச் சந்தோஷமாக இருக்கும்.
ReplyDelete//நானும் ராமர் பாலம் கட்டிய போது உதவிய அணில் மாதிரி சின்ன சின்ன உதவி செய்தவன் தான். //
ReplyDeleteராமர் பாலம் இருப்பதை கடைமட்ட தோழனே ஒத்துகிறிங்களே!
சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திடலாமா?
அய்யாவோட சேர்ந்து நீங்களும் அடிக்கடி உளர ஆரம்பிச்சிடிங்களா?
//செய்வீர்களா அய்யா!//
ReplyDeleteஅழகிரி
கனிமொழி
தயாநிதி
(சரியா வரிசை படுத்திருக்கேனா)
அப்புறம் பார்க்கலாம்!
பெட்டி தேறுச்சுனா!
//1.ஈழத்தில் வாழும் எம் குலத்தினருக்கு குறைந்தபட்சம் 10 தொழிற்சாலையாவது உண்டாக்கி தருவார், அவர்கள் பிழைக்க வழிவகை செய்வார்.//
ReplyDeleteநன்றி நல்லது!
அகம் மகிழ்ந்தோம் உங்கள் பதிவை கண்டு இன்னும் ஒரு இரண்டு மூன்று பாயிண்ட் ஈழம் பற்றி சேர்த்து இருந்திருந்தால் ஈழதமிழர் ஆதரவு பதிவு என்று சொல்லி இருக்கலாம்!
//அவருக்கு அந்த இலாக கொடுக்க வேண்டும் என்று அம்மையார் பாணியில் மிரட்டிப் பதவி பெறும் இயக்கமா நம் இயக்கம்?
ReplyDeleteதிமுகவில் எந்த தீர்மானமாக இருந்தாலும் அதை செயற்குழுவும், பொதுக்குழுவும் கூடித்தானே முடிவு செய்யும்? இது நீ அறிவாய் அல்லவா?//
ஆஹா ஆஹா
திருமாவுக்கு வாய்ப்பு அளிக்கலாம்.
ReplyDelete:))
ReplyDeleteசாமியே எலில போறாராம். பூசாரிக்கு புல்ல கேக்குதோ. சும்மா காமெடி பண்ணாதீங்கன்னே.
ReplyDeleteஉங்களைப் போலவே திருமாவும் அப்துல் ரஹ்மானும் மந்திரிசபையில் இடம்பெற வேண்டும் என்பது தான் எனது ஆசையும். ஆனால் நடக்குமா???
ReplyDeleteமக்கள்நலம் மக்கள்நலம் என்றே "தம் மக்கள்" நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார் :-)
//பாராளுமன்றத்தில் வெறும் எம்பியாக பேசுவதை விட வலிமையானது அமைச்சரவைக் கூட்டங்களில் பேசுவது. எனவே வேறு அமைச்சரவையில் அவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்குவது சரியாக இருக்கும். அவர் செயல்பாட்டை பார்த்து பின் பதவி உயர்த்தலாம்.//
ReplyDeleteமன்னிக்கனும். தவறான தகவலை அளித்துவிட்டேன். இணை அமைச்சர் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக் கொள்ள முடியாது. பின்னூட்ட அவசரத்தில் நடந்த பிழை. கேபினெட் அமைச்சர் மட்டுமே கேபினெட் கூட்டங்களில் கலந்துக் கொள்ள முடியும்.
எம்பியாக பேசுவதை விட இணை அமைச்சராக பேசுவது வலுவானதே. ஒருவேளை திருமாவளவனுக்கு கேபினெட் மந்திரி பதவி கிடைத்தாலும் வரவேற்கிறேன்.
பிழையயை சுட்டிக் காட்டிய ஜ்யோவரம் சுந்தர் அவர்களுக்கு நன்றி.
//ஜோசப், தயாநிதிக்கு மந்திரிசபையில் இடம் இல்லை//
ReplyDelete"தயாநிதிக்கே மந்திரிசபையில் இடம் இல்லையாம்" என்றல்லவா இருக்கவேண்டும்!
//பிழையயை//
ReplyDeleteஇதுல கூட பிழையா?
:)))
ReplyDelete::))))
சும்மா தமாசு.. :)