பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 13, 2009

என் ஜனநாயக கடமையை நல்லா ஆத்திட்டாங்க!!!

நான் அபிஅம்மா கிட்ட சொன்னேன். நான் முடிந்த வரை வர்ரேன். அப்படி வராட்டி நீ நேரா போய் முதல் ஆளா ஓட்டு போடு அப்படீன்னு!

"சரி போடுறேன் ஆனா ஓ.எஸ். மணியனுக்கு தான் போடுவேன்"

"அய்யோ என்ன கொடுமை இது"

"பின்ன ஊரிலே இருக்கும் எல்லாருக்கும் போன், லெட்டர்னு உங்க பிரச்சாரம் சூடா இருக்கு, கட்டின பொண்டாட்டிக்கு லெட்டர் போட நினைப்பு இல்லை"

"அய்யோ அய்யோ அதை எல்லாம் விடு இன்னிக்கு 137 பக்க லெட்டர் எழுது அனுப்பறேன். ஆனா கை சின்னத்துக்கு ஓட்டு போடு"

"அப்ப சரி"

எங்க பூத் அவ்வையார் பள்ளி தான். இப்ப தான் அந்த பள்ளியேஇல்லியே அதனால ஆரியபாலா பள்ளிக்கு மாறிடுச்சு! எனக்கு வினவு தெரிஞ்ச நாள் முதலே என் அப்பா தான் எங்க பூத்திலே முதல் ஓட்டு போடுவாங்க. அன்றைக்கு மட்டும் சித்தப்பாவின் கருப்பு சிவப்பு வேஷ்டி கட்டிகிட்டு போவாங்க. சித்தப்பா தான் பூத் பந்தலில் இருக்கும். அப்பா சைக்கிளை கொண்டு வந்து நிப்பாட்டியதும் பந்தலில் இருக்கும் சித்தப்பா நைசா நழுவ பார்க்கும்.

"டேய் எங்க போற புள்ள கடையிலெ பசங்களுக்கு மல்லி காப்பி சொல்லு" அப்பாடா எப்பவும் திட்டும் அண்ணன் இன்னிக்காவது திட்டாம விட்டுச்சே அப்படின்னு சித்தப்பா ஓடி போய் மல்லி காப்பிசொல்லும்.

அப்பா என்னை சித்தப்பாவிடம் விட்டு விட்டு முதல் ஓட்டு போடும் கம்பீரத்துடன் போகும் காட்சி இப்பவும் என் கண் முன்னே இருக்கு.

நான் சித்தப்பாவிடம் கேட்ப்பேன். "நான் எப்ப ஓட்டு போடுவது"

"நீயும் என்னை மாதிரி வேஷ்டி எல்லாம் கட்டிகிட்ட பின்ன போடலாம் சரியா"

"சரி சித்தப்பா உன் வேஷ்டி எடுத்து வந்து புருஷோத்தமன் அண்ணன் கிட்ட கொடுத்து கிழிச்சு சின்னதா ஆக்கி அதிலே கருப்புசிவப்பு பார்டர் வைச்சு இன்னிக்கே ஓட்டு போடவா"

"இல்லடா தம்பி, இதே உணர்வோட நீ 100 வயசு வாழும் வரை நம்ம பரம்பரை பரம்பரைக்கும் நம்ம கட்சிக்கு ஓட்டு போட தான் போற"

இதோ நான் இல்லாத முதல் தேர்தல். நான் நல்லாஅ சொல்லியிருந்தேன் அபிஅம்மா கிட்ட, நான் வராட்டி 13483 ஓட்டு நம்பர் யாரும் போட கூடாதுன்னு ஆண்கள் பூத்திலே போய்சொல்லிடுன்னு.

காலை ஏழு மணிக்கே கிளம்பி நான் பெத்த மகராசனை தூக்கிகிட்டு அபியையும் அழைச்சுகிட்டு அபிஅம்மா போயாச்சு பூத்துக்கு. போகும் முன்னே அபி ஓடி போய் தன் உண்டியலை உடைத்து காசு எடுத்துகிட்டாளாம்.

அபிஅம்மா பூத் பந்தலை அடைந்தவுடன் எல்லோரும் "நீ தம்பியை கொடுத்துட்டு போம்மா, அபி வா இந்த நோட்டிஸ் எல்லாருக்கும் கொடு, லேடீஸ்க்கு இந்த பூவை கொடு" அப்படின்னு சொல்ல தம்பி யார்கிட்டயும் போகலையாம்.

வேற வழி இல்லாம தம்பியும் பூத்துக்கு போயிட்டான். அந்த பொத்தான் அமுக்கும் போது வந்த சத்தம் இவனுக்கு பிடிச்சு போச்சு போல இருக்கு. இவன் தான் அமுக்க வேண்டுமென ஒரே கத்தலாம். சரின்னுஅவன் விரலை பிடிச்சு கை ல ஒரு குத்து. அத்தோட விட்டானா? அந்த விளையாட்டு பொம்மை பிடிச்சுது போல இருக்கு. வீட்டுக்குகொண்டு வந்துட்டா பீக் பீக் சத்தம் கேட்கலாம்ன்னு நினைச்சு ஒரே அடமாம். (ஆஹா தம்பி வாக்கு பெட்டி கவர்வதில் 2 வயசிலேடிரெய்னிங்கா)

பின்னே ஆண் பூத்துக்கு போய் என் நம்பர் சொல்லி "என் வீட்டுகாரர் தான். ஆனா துபாய்ல இருக்கார். அவர் ஓட்டு யாரையும் போட்டுட சொல்லிடாதீங்க "ன்னு சொன்னதுக்கு அவர் சுஜாதா மாதிரி மையமா சிரிச்சுகிட்டாராம். அடப்பாவிகளா எங்க ஆளுங்க எவனோபோட்டுட்டானுங்க போல இருக்கு.

திரும்பி வரும் போது அபி பந்தலில் இருந்து "அம்மா தயவு செஞ்சு கைக்கு ஓட்டு போடுங்க"அப்படி கெஞ்சி கெஞ்சி மல்லிகை பூ கொடுத்து கொண்டு இருந்தாளாம்.

சரி வா போகலாம் வீட்டுக்கு அப்படின்னு அபிஅம்மா சொன்ன பின்னே புள்ள கடையை பார்த்து "சங்கர் அண்ணே இந்தாங்க இந்த காசுக்கு எத்தனை மல்லி காப்பியோ அத்தனை காப்பி பந்ந்தல்ல இருப்பவங்களுக்குகொடுங்க" அப்படின்னு சொன்னாலாம்.

நான் இல்லாட்டி என்ன?

15 comments:

  1. செம ஆத்தா இருக்கே!!

    ReplyDelete
  2. அடங் கொன்னியா

    ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காத மணிக்கு இது ரொம்பவே ஒவரு......

    ReplyDelete
  3. மயிலாடுதுறையை சிங்கபூரா மாத்தினதற்கு இன்னும் ஆத்துங்க :)

    ReplyDelete
  4. //ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காத மணிக்கு இது ரொம்பவே ஒவரு....//

    ரிப்பீட்டே

    ReplyDelete
  5. //
    அந்த விளையாட்டு பொம்மை பிடிச்சுது போல இருக்கு. வீட்டுக்குகொண்டு வந்துட்டா பீக் பீக் சத்தம் கேட்கலாம்ன்னு நினைச்சு ஒரே அடமாம். (ஆஹா தம்பி வாக்கு பெட்டி கவர்வதில் 2 வயசிலேடிரெய்னிங்கா)
    //

    நல்லா குடுக்குறாங்கய்யா டிரெய்னிங்கு... :)))

    வாழ்த்துகள் அபி அப்பா... உங்க கட்சி ஜெயிக்க..

    ReplyDelete
  6. என் தொகுதியில் ‘கை’ நின்றிருந்தால் ஒடித்திருப்பேன் :-)

    என்னதான் நம்ம கூட்டணியில் இருந்தாலும் மனசு ஆறலைன்னே! :-(

    ReplyDelete
  7. //டேய் எங்க போற புள்ள கடையிலெ பசங்களுக்கு மல்லி காப்பி சொல்லு" //

    ஐ ஃபீல் தட் மல்லி காபி குடிச்சிங்க் நிகழ்ச்சி ! :)


    ஒன்ஸ் அப்பான் ஏ டைம் நான் அந்த கடை முன்னாடி நின்னுக்கிட்டு ரோட்டை பார்த்துக்கிட்டே ஸ்டைலா காபி குடிச்சது வந்திருச்சுண்ணே ஞாபகத்துக்கு !

    ReplyDelete
  8. // நாகை சிவா said...

    அடங் கொன்னியா

    ஒவரா ஆத்தின மாதிரி இருக்கு! அதிலும் தொகுதி பக்கமே தலைவைத்து படுக்காத மணிக்கு இது ரொம்பவே ஒவரு.....///


    வேற வழியே இல்லை அப்படிங்கற நிலைமாதான் அவுருக்கும் சரி எங்களுக்கும் சரி

    அப்படித்தானே அபி அப்பா....?!

    :)))

    ReplyDelete
  9. //எங்க பூத் அவ்வையார் பள்ளி தான். இப்ப தான் அந்த பள்ளியேஇல்லியே//

    பெரும் சோகம் :((

    ஒரு பள்ளி மெல்ல மெல்ல நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது!

    ReplyDelete
  10. இதென்ன நாயர் கடைல பாதாம்பாலை சூடா ஆத்துன மாதிரியிருக்கு..

    ம்.. நான் நம்ப மாட்டேன்..

    ஓ.எஸ்.மணியன்தான் ஜெயிக்கப் போறாரு..

    அபிஅம்மா கைன்னு சொல்லிட்டு மாத்திப் போட்டிருப்பாங்க..

    ரொம்ப நன்றின்னு நான் சொன்னேன்னு சொல்லிருங்க..

    ReplyDelete
  11. தம்பியும் தங்கச்சியும் இப்பவே நல்லா ட்ரெயின் ஆயிட்டாங்க சித்தப்பா.

    இருந்தாலும் கட்சிப் பாசத்துக்காக ராஜபக்‌ஷேவோட நண்பணுக்கு ஓட்டு போட்டத ஏத்துக்க முடியல.

    ReplyDelete
  12. பசங்களுக்கு இப்பவே ட்ரெய்னிங்கா?

    ReplyDelete
  13. ////லக்கிலுக் said...
    என் தொகுதியில் ‘கை’ நின்றிருந்தால் ஒடித்திருப்பேன் :-)

    என்னதான் நம்ம கூட்டணியில் இருந்தாலும் மனசு ஆறலைன்னே!///

    repeateyyyy

    ReplyDelete
  14. ஆத்தா ஆத்தோரமா ஆத்தினியா..
    ஓட்டுச் சாவடி கூட ஓவியமாக்கி விட்டீர்

    ReplyDelete
  15. ayyarku appu iruku pola iruku result pathha

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))