பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

August 9, 2010

பதிவுலகில் அபிஅப்பாவாகிய நான்!!!!

தம்பி எல்கே ஆகிய கார்த்தி என்னை இந்த தொடர் பதிவுக்கு எழுத அழைத்தமைக்காக நன்றியோடு இதை பதிகின்றேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அபிஅப்பா

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இது ஒரு செல்லபெயர். என் மனைவி வைத்த பெயர். எனக்கு கல்யாணமான பின்னே ஒரு நாள் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த போது அவனவன் "உன்னை உன் மனைவி எப்படி கூப்பிடுவாங்க?" என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எழுந்த போது (அப்போது என் நண்பனில் ஒருத்தன் தன் அக்கா பெண்ணை கல்யாணம் செஞ்சு இருந்தான். அந்த பெண் இவனை மாமா என கூப்பிடும்) அப்போது தான் எனக்கு சுரணை வந்தது. அய்யோ இத்தனை நாள் இதை தெரிஞ்சுக்காம விட்டுட்டோமேன்னு. வீட்டுக்கு ஓடிப்போய் "நீ என்னை எப்படி கூப்பிடுவாய்?" என வெள்ளேந்தியாக கேட்க எல்லோருக்கும் முன்னே என் மனைவி "நான் உங்களை கூப்பிட்டதே இல்லியே" என சொல்ல எல்லோரும் சிரிக்க எனக்கு வெட்கமாய் போய் விட்டது. பொதுவா எங்க வீட்டிலே மனைவி கணவனை அத்தான் என அழைக்கும் பழக்கம் தான். ஆனா நேரே கூப்பிடும் போது அம்மா அப்பாவை அப்படி கூப்பிட்டதில்லை. மத்தவங்க கிட்ட பேசும் போது "அத்தான் இப்படி சொன்னாங்க அப்படி சொன்னாங்க" என சொல்வது உண்டு. பின்னர் தான் தெரிந்தது அப்படி அத்தான் என கூப்பிடுவது என் மனைவிக்கு கூச்சமாக இருந்திருக்கலாம் என.

எதாவது கூப்பிடும் சந்தர்ப்பம் வந்தால்"என்னங்க, இந்த பாருங்க, ஏங்க..'இப்படியாக போய்கொண்டிருந்தது. பின்னர் ஒரு மே 3ம் தேதி அபி பிறந்த பின்னர் என் மனைவிக்கு அந்த குழப்பம் போயே போச். "அபிஅப்பா" என என்னை முதலில் கூப்பிட்டது என் மனைவி தான். அதன் பிறகு பக்கத்து வீடு எதிர் வீடு எல்லாம் அபிஅப்பா என கூப்பிட்டு கூப்பிட்டு ஒருநாள் பிளாக் ஆரம்பிக்கும் போது ஏதோ புனைப்பெயர் வைத்துக்க ஆசைப்பட்டு எல்லாம் இதை வைக்கலை. தானாகவே அந்த பெயரை அடித்து விட்டேன். அதுவே இப்போது என் சொந்த பெயரை விட அதிகமாக கூப்பிடப்படுது. இன்னும் சொல்ல போனா என் கம்பனில இருக்கும் தமிழ் பசங்க எல்லாம் கூட அபிஅப்பா என்றே கூப்பிடும் அளவு ஆகிவிட்டது. இதில் கொஞ்சம் கர்வமும் கூட எனக்கு.

எனது உண்மை பெயர் தொல்காப்பியன். அந்த பெயர் காரணம் சொன்னா தனி பதிவு தான் போடனும்:-) அதையே பள்ளி காலத்தில் தொல்ஸ் என்று சின்னதா ஆக்கிட்டாங்க. வலையுலகில் என்னை தொல்ஸ் என அழக்கும் சிலர் நாகைசிவா மற்றும் வேலன் அண்ணாச்சி.


3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

2006 வரை நானும் பல டீம்ல வேலை செஞ்சாலும் எனக்கு கீழே சிலரை கொடுத்து நானும் ஒரு டீம் லீடரா வேலை செய்ய ஆரம்பிக்கும் போது முழுநேரமும் வலையில் உலவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது ஆ.வி, நக்கீரம், குமுதம் எதையும் விடாமல் மேயும் போது வெட்டிபயல் பற்றி ஆவியிலோ, குமுதத்திலோ வந்ததை பார்த்து அங்கே போன பின்னே "அட" என ஆச்சர்யமாகி அங்க இருந்து வ.வா.சங்கம் போய், அங்க இருந்து கைப்புள்ள எல்லாம் படித்து, பின்ன லக்கி, மயிலாடுதுறை சிவா எல்லாம் படித்து மத்தவங்க பின்னூட்டத்தை காபி பேஸ்ட் செஞ்சு பின்னே கோபியின் "ரிப்பீட்டேய்" வார்த்தையை காபி பேஸ்ட் செஞ்சு அதுக்கு கீழே போட்டு ஒரு வழியா அபிஅப்பா என்கிற பெயரை அவங்க பப்ளிஷ் செஞ்ச பின்னே பார்த்துகிட்டே (கிட்ட தட்ட ஒருமணிநேரம் கூட பார்த்து கொண்டே இருந்திருக்கேன் என் பெயரை) பின்ன கைப்புள்ள, கீதாம்மா, துளசிடீச்சர் எல்லாம் என் பெயரை குறிப்பிட்டு நன்றி என சொன்னபோது ஆஸ்கார் அவார்டு வாங்கினமாதிரி குதிச்சு... பின்னே நாகை சிவா சூடானில் இருந்து துபாய் வந்த கதை படிச்சு பின்னே துபாய்ல தம்பி, முத்துகுமரன் கிட்ட போன்ல பேசி (அந்த பதிவிலே இருந்தது நம்பர்) பின்னர் தம்பியை கராமா என்னும் இடத்துக்கு போய் நேரில் பார்த்து (அதுக்கு முன்னமே பிளாக் ஆரம்பிச்சு சும்மா வணக்கம் போட்டு வச்சேன். அது தான் முதல் பதிவு) என் பிளாக்கை சரி பண்ண பார்க்கும் போது இம்சை அரசியின் பின்னூட்டம் வந்திருந்தது. உடனே ஆன்லைன்ல பதிவர் கப்பியை பிடித்து தம்பி தமிழ்மணத்தில் இனைக்க வச்சு அனுப்பினார். பின்னர் அங்கயே எதுனா 2 வது பதிவு போடுங்கன்னு சொன்ன போது ஈகலப்பை வழியாக அபிராமி என அடித்தேன். இது தான் நான் முதன் முதலில் தமிழில் அடித்த வார்த்தை. அதுவரை காபி பேஸ்ட் தான். அதையே 3 தடவை எண்டர் தட்டி அடித்தேன்.

உடனே தம்பி இதுக்கு என்ன லேபிள் பெயர் வைக்க போறீங்க?ன்னு கேட்க அப்பதான் அது பத்தி தெரிஞ்சுகிட்டு உடனே கவிதைன்னு பெயர் வைத்தேன். அஃப்கோர்ஸ் நான் எழுதிய கவிதை தானே அபிராமி.

பின்னர் வீடு வந்து சேர்ந்து (அதுக்கும் முன்னமே "போஸ்டர் ஒட்டுவது எப்படி"ன்னு ஏற்கனவே அடிச்சு வச்சிருந்ததை போட்டேன். அந்த பதிவுக்கு எனக்கு ஒரு முழுவெள்ளிகிழமை தேவைப்பட்டது. அதிலே என்ன ஒரு விஷேஷம்னா அது நான் டைப் அடிக்கவேயில்லை. நான் எழுத நினைத்ததை ஒரு பேப்பரில் எழுதி வைத்து பல பதிவை ஓப்பன் செய்து நான் எழுதிய வார்த்தையை காபி பேஸ்ட்(சில எழுத்துகளை கூட காபி பேஸ்ட் செய்து) தயாரிக்கப்பட்ட பதிவு அது:-)) அதனால் கிட்ட தட்ட ஒருநாள் ஆனது எனக்கு. அதிலே கூட எழுத்துபிழை என சிலர் சொன்ன போது "அவங்க ஒழுங்கா எழுதினா எனக்கு ஏன் எழுத்து பிழை வருது"ன்னு கூட நினைச்சுகிட்டேன்.

அப்படியாக ஆரம்பித்து இப்போது இந்த அபிஅப்பா பிளாக்ல இப்ப 300 வது பதிவை தொட போகின்றேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

"அபிஅப்பா" என்னும் பெயர் மந்திரம் தான். அப்போ, (அப்போ மட்டுமல்ல இப்பவும் தான்.,. ) தான் ஒரு பெண்ணீய காவலர் முற்போக்குவாதி என காமிச்சுக்க எல்லா ஆண்\பெண் பதிவரும் நினைத்த காலம். உண்மை நிலவரம் என்னன்னு அவனவனை சுரண்டி பார்த்தா தான் தெரியும் என்பது வேற விஷயம்.(நான் என்ன சொல்லிகிட்டேன்) கிட்ட தட்ட தன் குழந்தையை முன்னிலைப்படுத்தி பெயர் வைத்து கொண்ட முதல் பதிவர் நான் என நினைக்கிறேன். அதுகூட அந்த வலைப்பூ பிரபலம் ஆனதற்கு காரணம் என நினைக்கிறேன். (பிரபலம் தானே?)


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஒன் அண்ட் ஒன்லி சொந்தவிஷயம் தான். நான் எனக்கு என்ன தெரியுமோ, எதை பார்த்தனோ, எதை கேட்டனோ அதை தான் எழுதுவேன். புனைவாக எழுத வரவில்லை. அது பற்றி கவலைப்பட்டதும் இல்லை. ஏனனில் நான் எனக்காக எழுதுகிறேன். கமிட்மெண்ட் இருந்தா தானே கம்ப்ரமைஸ் பண்ணிக்கனும்.ஒரு பத்திரிக்கைல எழுத கூப்பிட்டு அவங்க அதை வெட்டி இதை வெட்டி...ஊகூம் அதல்லாம் இல்லாமல் சுதந்திரமாக எழுதுகிறேன். (பத்திரிக்கைல கூப்பிட்டு நான் மறுத்து விட்ட மாதிரி இந்த சொல்லாடல் இருந்தா ஸாரி அப்படி யாரும் கூப்பிடவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்). நான் இதை தான் எழுதுவேன். முடிஞ்சா படி. பிடிச்சா பின்னூட்டம் போடு.முடிஞ்சா ஓட்டு போடு என்கிற மாதிரியான மனோபாவம் வந்துவிட்டது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போகாமல் இல்லை. ஆரம்பத்தில் எழுத வந்தது ஒரு அரிப்பு. அச்சில் தன் பெயர் கருமாதி பத்திரிக்கையிலே வந்தா கூட ஒரு போதை அரிப்பு வருமே அது போன்ற அரிப்புக்காக எழுத ஆரம்பித்தது. அத்தனை ஏன் "தொல்காப்பியர்" "தொல்காப்பியம்" என பாட புத்தகத்தில் வந்தா கூட அதை பிளேடால் நறுக்கி பாதுகாத்து வைத்து ரகசியமாய் பார்த்த ஒரு சைக்கோ தனம் போல மானிட்டரில் மத்தவங்க ஆகா ஓகோ சூப்பர் என சொல்லும் போது கிடைக்கும் ஒரு போதை அரிப்பு தான் எழுத வைத்தது. இது தான் உண்மை. இன்னும் சொல்ல போனால் என் பொழுதை இந்த எழுத்து விழுங்கியிருக்கு. என் முன்னேற்றத்தை சாப்பிட்டிருக்கு. என் மற்ற செயல்பாடுகளை கொன்று போட்டது. இதை சொல்ல கூச்சம் இல்லை. கிட்ட தட்ட பலருக்கும் இந்த நிலை இருந்திருக்கலாம் சொல்ல கூச்சப்பட்டிருக்கலாம். இதுவே தொழிலாக இருந்து அதனால் வருமானம் கிடைத்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டேன் என்பதும் உண்மை.

\\பதிவுகளின் மூலம் சம்பாதிக்கவா\\\ நல்லவேளை என் மனைவி இதை பார்க்கவில்லை. பார்த்திருந்தா நான் கல்யாணபரிசு தங்கவேல் மாதிரி தினமும் காசு கொடுத்து மாலை வாங்க வேண்டியிருந்திருக்கும்:-))

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

அபிஅப்பா, அபிஅப்பாவின் நூலகம், ஆகியவை என் சொந்த பிளாக், கும்மி(வேடந்தாங்கல்), தாயின் புன்னகை(இது எங்கள் பள்ளிக்காக) சமீபத்தில் சுவரொட்டி(ஒரே பதிவு தான்) பேரண்ட்ஸ் கிளப்( 3 பதிவு) இவைகளில் எழுதுகின்றேன். தவிர எங்கள் பள்ளிக்காக ஒரு தனி சொந்த வலைப்பூ வைத்திருக்கேன். தவிர இரண்டு வலைப்பூ சொந்தமாக இருக்கு.(நண்பர்களுக்காக) வ.வா.சங்கத்தில் ஒரு மாதம் எழுதினேன் அட்லாஸ் வாலிபராக, வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதினேன்.

சொல்ல போனால் நானே பதிவு போட்டு நானே வாசகர் பரிந்துரையில் வரும் அளவு ஓட்டு போட்டு வரும் அளவு வலைப்பூக்கள் இருந்தாலும் சமீபமாக மட்டுமே ஓட்டு போடுகின்றேன் எனக்கே.(இரண்டு மாதமாக) அதும் ஒரே ஒரு அபிஅப்பா ஓட்டு மட்டுமே. அதனால் ஒரே ஒரு தடவை வாசகர் பரிந்துரையில் 5 மணி நேரம் மட்டும் இருந்தது. ஆனால் முன்பு சூடான இடுகையில் நிரந்தரமாக இருந்தேன் என்பது பழையகதை.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொதுவாகவே பதிவை படிக்காமல் பின்னூடம் போடுகிறேன் என்கிற குற்றச்சாட்டு என் மீது உண்டு. அது உண்மையும் கூட. ஆனால் பதிவை முழுமையாக படித்தால் அது பற்றி தனி மடலில் விவரமாக கூட விவாதித்தது உண்டு. விமர்சனம் செய்தமை உண்டு.
ஆனால் சிலரது பதிவுகளை முழுமையாக படித்து விடுவேன்.பொறாமை??? உம் வந்ததுண்டு.

ராமலெஷ்மி கவிதை படிக்கும் போது எப்படி நாம் 3 பக்கம் மாங்கு மாங்குன்னு அடிப்பதை சின்னதா எதுகை மோனையோட பத்து வரியில் புரியும் படி சொல்ல தெரியுது கவிதையிலே என நினைத்து பொறாமை வரும்.

வெண்பூவின் டைமிங் காமடி ரொம்ப ரசிப்பேன். சில சமயம் நான் நினைத்து அடிக்கும் முன்பே அதை நான் நினைத்ததை விட அழகா சொல்லி சிரிக்க வைக்கும் அவரது எழுத்தின் மீது பொறாமை வரும். அதனால் வெண்பூவையே கூட எரிச்சலாக பார்க்கும் ஒரு மனோபாவம் கூட வந்ததுண்டு.(மன்னிக்கவும் வெண்பூ)

டுபுக்கு எழுதும் காமடி பதிவு(எல்லாமே காமடி பதிவு தான் 'பிரசவம்" தவிர்த்து) படிக்கும் போது ஒரு வித பொறாமையோடு தான் படிப்பேன்.

பிரியாகதிரவன் என்கிற பதிவர் எழுத்து நடை. அவங்க கிட்ட தட்ட இன்னும் ஒரு துளசிடீச்சர் ஆகும் பதிவர் என நினைத்து பொறாமை படுவேன்.(அவங்க தமிழ்மணத்தில் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதல்)(இது கூட பொறாமை தான்)

அரசியல் கட்டுரையில் மா.சிவக்குமார் பொறாமைப்பட வைக்கும் ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர். (அஃப்கோர்ஸ் எனக்கு பிடிக்காத கருத்தாக தான் இருக்கும் ஆனாலும் அது பொறாமைப்பட வைக்கும்)

கல்வெட்டு என்கிற பலூன்மாமாவின் பின்னூட்டம் பிரம்மிக்க வைக்கும். ஆனால் பொறாமை இருந்ததில்லை. மனுஷன் எத்தனை விஷயம் படித்திருக்கார் என நினைத்து கொள்வேன்.

லக்கியின் (என்)ஆரம்பகாலத்தில் இருந்தே வாசகன் என்கிற வகையில் எனக்கு ஆர்வம் இருக்கும் பொறாமை இருக்காது.

எல்லேராம் பதிவுகள் பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்.

சமீபமாக நேசமித்ரன் கவிதை பிடிச்சிருக்கு. இன்னும் பொறாமை வரவில்லை. கூடிய சீக்கிரம் வரும்.

உண்மை தமிழன் பதிவு ரொம்ப பிடிக்கும். 'உள்ளது உள்ளபடி" விலாவாரியா அவர் எழுதுவதை பார்க்கும் போதும் பின்னூட்டத்துக்கு சளைக்காமல் பதில் சொல்வதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கீதாம்மாவின் சிதம்பர ரகசியத்துக்கு நான் அடிமை.

கண்மனி டீச்சரின் காமடி பதிவு இப்போது இல்லை என்பது வருத்தம் தான், ஆனா அவங்க போடும் பிளாக்கர் டிப்ஸ் அருமை.



9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

இம்சை அரசி ஜெயந்தி. எனக்கு பிடித்த தங்கை. கிட்ட தட்ட அந்த முதல் பின்னூட்டம் நான் பலதடவை திரும்ப திரும்ப பார்த்து கொண்டே இருந்திருக்கேன். முதன் முதலாக என் வீட்டில் ஜெயந்தியை பார்த்த போது நானும் பேசவில்லை. ஜெயந்தியும் பேசவில்லை. கிட்ட தட்ட எப்படி இருந்தது தெரியுமா அந்த நிகழ்வு.

நான் எப்போதும் துபாயில் இருந்து ஊருக்கு வரும் போது ஏர்போர்டில் அபி அவங்க அம்மா பின்னாடி ஒழிச்சுப்பா. எனக்கும் பார்க்க ஆவலாக இருக்கும். அந்த கூட்டத்தில் கஸ்டம்ஸ் முடியும் முன்னமே பக்கேஜ் கலக்ஷன் பெல்ட்டில் போய் நிற்காமல் கூட்டம் பக்கம் வந்து பார்ப்பேன்.

பின்பு வெளியே வந்தவுடன் பார்க்க ஆர்வமாக இருந்தாலும் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாது. அப்படி ஒரு மனோநிலை இருக்கும். உணர்சிகளின் மொத்த குவியலாக இருக்கும் அந்த பொழுதுகள். காரில் ஏறி உட்காந்த பின்னே கூட அவங்க அம்மா கிட்டயே இருப்பா. வீடு வந்ததும் கொஞ்சம் கிட்ட வருவா.
"சரி சரி அவளுக்கு இதல்லாம் வாங்கி வந்தேன். அவளுக்கு வேண்டாமாம். பக்கத்து வீட்டிலே கொடுத்திடு" என சொல்லும் போது லைட்டா கண்ணை கசக்கிகிட்டே வருவா.

கிட்ட தட்ட அப்படித்தான் ஜெயந்தியும் நானும் அன்றைக்கு இருந்தோம். அன்றைக்கு பெங்களூர் பஸ் ஏறும் போது தான் அய்யோ நம்ம ஜெயந்தி ஊருக்கு போறா அப்படீன்னு ஒரு கலக்கம் அடிவயிற்றில் வந்தது. இதான் ஜெயந்தி. போன பின்னே ஒரு மெயில் வந்தது ஜெயந்தியிடம் இருந்து. "அண்ணா ஏன் என் கிட்ட சரியா பேசலை. நான் தான் சரியா பேசலை. நீங்கலாவது பேசியிருக்கலாமே". கிட்ட தட்ட அப்போது தான் நான் ஒரு மெயில் அனுப்பினேன். அதே வாசங்கங்களோடு.


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என் எல்லா பதிவிலயும் என் சுயபுராணம் தான் அதிகமா இருக்கும் என்பதால் அத்தனை சுட்டியையும் கொடுக்க வேண்டும். அதல்லாம் சாத்தியம் இல்லை. நான் ரொம்ப சாதாரணமானவன். சராசரி மனிதன். பெரியலாடுலபக்கு தாஸ் எல்லாம் இல்லை.

தெருவில் நடந்து போகும் போது உங்க கண்ணுக்கு தெரியும் பத்து பேரில் நானும் ஒருத்தன்.

நான் இந்த தொடருக்கு அழைக்கும் பதிவர்கள்...........என் புத்திக்கி எட்டியவரை எல்லோரும் எழுதியாச்சு, அதனால யார் வேண்டுமானாலும் எழுதுங்க. அதுக்காக எதுனா சன்மானம் தர ஆசைப்பட்டா டபில்யூ டபில்யூ டபில்யூ டாட் அபிஅப்பா டாட் காம்ல தொடர்பு கொள்ளவும்.

74 comments:

  1. ஏண்ணே.,
    சமீபமா அண்ணன் உ.தா பதிவு ஏதாச்சும் படிச்சீங்களா..?

    இப்படி பாரா பாராவா டைப்புனா ஒரு 2நாள் லீவு போட்டுதாண்ணே படிக்கனும்.

    :)))

    ReplyDelete
  2. கும்க்கி! ஒரு ஃப்ளோவிலே அடிச்சுட்டேன். இம்மாம் பெரிசா வந்துடுச்சு. ஆனா 1 அடுத்த ஜென்மம் எடுத்தா உனா தானாவின் கீ போர்டா மட்டும் பிறக்க மாட்டேன் என சொல்லிகிறேன்:-)))

    இனி யாரையாவது திட்டனும்னா இப்படி திட்டலாம். "நீ அடுத்த ஜென்மத்துல உனாதானா கீ போர்டா பிறப்ப"ன்னு:-))

    ReplyDelete
  3. அப்பாடா சாமி..!

    நீங்க பதிவு ஆரம்பிச்சப்போ கூட இருந்தவங்களே இப்போ அதையெல்லாம் மறந்து போயிருப்பாங்க.. அத்தனையும் பிட்டு, பிட்டு வைச்சிட்டியேண்ணே..!

    ReplyDelete
  4. கும்க்கி தம்பி..

    ஏன்..? ஏன்.. இவ்ளோ பொறாமை..

    எல்லாரும் புரியற மாதிரி படிக்கணுமேன்னுதான் பாரா, பாராவா பிரிச்சுப் போடுறேன்..! இது தப்பா..!?

    அடப் போங்கப்பா..!

    ReplyDelete
  5. என் அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி. காலை விரிவான பின்னூட்டம் இடுகிறேன்

    ReplyDelete
  6. அபிப்பா.. கீபோர்டா பொறக்க வேணாம்.. கூட ஒரு அண்ணனா பொறந்திருங்க.. ஏறி மிதிச்சிர்றேன்..!

    ReplyDelete
  7. உங்கள் பதில்கள் அனைத்தும் எதார்த்தமாக இருக்கு...ரசித்தேன்...கலக்குங்க

    ReplyDelete
  8. அபி அப்பா உண்மை சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
  9. உள்ளேன் ஐயா! (ஐயோ இல்லை, ஐயா)

    ReplyDelete
  10. அண்ணே.,

    மனசுலருந்து அப்படியே கொட்டியிருக்கீங்க.

    இந்த இணையவெளி சுலபமான., புரிதலுடன் கூடிய., பால்ய கால நட்புக்களை போன்ற., தேவைன்னா நம்பி நெருங்கவும் தேவையில்லைன்னா சுலபமா உதறிவிடவும் ஏதுவான., முகமறியா நட்புக்கள் ஏராளமானதை கொடுத்திருக்கு.

    எனக்கு ரொம்ப ஆச்சரியம். ஒரு கணிணி மட்டும் இருந்தா போதும்னு தோணுச்சு.அப்புறம் இண்டர்நெட்னு ஏதோ இருக்காமேன்னு ஆரம்பிச்சு., இப்போலாம் வெளில நண்பர்களை தேடிபோறதுகூட குறைஞ்சுபோச்சு.டி.வியும் அலுப்பு.

    எவ்வளவோ இறைஞ்சு கிடக்கு..தேடி தேடி நாமதான் பத்திரப்படுத்திக்கிடனும்ணே.

    பாசாங்கில்லாத வார்த்தைகளால பக்கத்துல ஒக்காந்து கேட்ட மாதிரி இருக்குங்கண்ணே.

    ஆனா ஒன்னுன்னே இன்னொரு உனாதானா ஆகுற ஆசைய மட்டும் விட்டுடுங்கண்ணே...கூகுளுக்கு அவர் ஒருத்தர் மட்டும் போதும்ணே.

    ReplyDelete
  11. பெயர் விளக்கம் சூப்பர்ங்க... அபி அம்மா கலக்கல் பெயர் வெச்சுட்டாங்க...

    //நான் கல்யாணபரிசு தங்கவேல் மாதிரி தினமும் காசு கொடுத்து மாலை வாங்க
    வேண்டியிருந்திருக்கும்//
    ஹா ஹா ஹா

    சூப்பர் கேள்விகள்...சூப்பர் பதில்கள்

    ReplyDelete
  12. ஆவியில் வித்தியாசமான பிளாக்கர்கள் பட்டியலில் உங்க பெயரும் வந்துச்சு

    ReplyDelete
  13. ஃப்ளோ பயங்கரமா வந்துருக்கு போல:-))))))

    நல்லா இருக்கு அபி அப்பா.

    ReplyDelete
  14. நான் பதிவு எழுதவில்லைன்னாலும் நான் போட்ட ரீப்பிட்டே இன்னும் என்னை விட்டு போக மாட்டேங்கிதுப்பா...;)))

    ReplyDelete
  15. ஒவ்வொரு பதிலும் ஒரு பதிவின் அளவுக்கு இருந்தாலும் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  16. //இது ஒரு செல்லபெயர். என் மனைவி வைத்த பெயர்//

    ம்ஹுக்கும் இது கூப்பிடு பெயரு! குமாருன்னு கூப்பிட்டா கொஞ்சம் டெரா இருக்கும்ன்னு அபி அப்பா அபி அப்பான்னு [ஸ்பேஸ்] விட்டுத்தான் ஊருல எல்லாரும் கூப்பிடுவாங்களாம்! என்னமோ தெரியல அண்ணிக்கிட்ட அடி வாங்கப்பிடாதுன்னு இங்க சம்பந்தமே இல்லாம ஒரு வரி //என் மனைவி வைத்த பெயர்// பின்னாடி சேர்த்திட்டாரு #ரகசியம் ரிலீசுடு!

    ReplyDelete
  17. எல்லாரை பத்தியும் சொல்லிட்டு அண்ணன் ராதாவினை பற்றி சொல்லலயே!

    அண்ணன் ராதா பேரவை
    மயிலாடுதுறை

    ReplyDelete
  18. ராதா அண்ணன் கமெண்ட் வாபஸ் [ என்ன அரசியல்வாதி மாதிரி பேசுறேன்னு நினைக்காதீங்க அண்ணே - கொஸ்டீனே இல்லாம நீங்க எப்படி பதில் சொல்லுவீங்க - சாய்ஸ்ல சொல்லுங்க முடிஞ்சா] :))

    ReplyDelete
  19. கமிட்மெண்ட் இருந்தாத்தானே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிடணும்ன்னு சொல்லியிருக்கிறது ரொம்ப பிடிச்சது

    உள்ளத்தில இருந்து எழுதுன மாதிரியே இருக்கு ரசித்து படித்தேன்....!

    உங்களுக்கு பொடிடப்பா என்ற பெயரும் இருக்குதான?

    ReplyDelete
  20. \\உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

    அப்பாடா சாமி..!

    நீங்க பதிவு ஆரம்பிச்சப்போ கூட இருந்தவங்களே இப்போ அதையெல்லாம் மறந்து போயிருப்பாங்க.. அத்தனையும் பிட்டு, பிட்டு வைச்சிட்டியேண்ணே..!
    \\ ஆமாம் சரவணா! இதில் பலபேர் முன்ன மாதிரி அத்தனை எழுதுவதில்லை என்பது வருத்தம் தான்.

    \\\

    கூட பிறக்காட்டி என்ன இப்ப கூட தப்பு செஞ்சா உதைக்க உரிமை இருக்கு தானே:-))

    ReplyDelete
  21. \\LK said...

    என் அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி. காலை விரிவான பின்னூட்டம் இடுகிறேன்
    \\

    வாங்க கார்த்தி! மிக்க நன்றி. பரவாயில்லை, இந்த அழைப்புக்கு எழுத முடியுமான்னு கொஞ்சம் யோசித்தேன். ஆனா கேள்விகள் ரொம்ப நல்லாவும் இருந்ததால் பதிலும் கொஞ்சம் சைஸ்ல பெரியதானாலும் சுவாரஸ்யமா இருந்துச்சு எழுத! நன்றி!

    ReplyDelete
  22. \\Gayathri said...

    உங்கள் பதில்கள் அனைத்தும் எதார்த்தமாக இருக்கு...ரசித்தேன்...கலக்குங்க
    \\

    மிக்க நன்றி காயத்ரி! நம்ம அமீரக காயத்ரி தானே. வாங்க வாங்க!

    ReplyDelete
  23. \\V.Radhakrishnan said...

    அபி அப்பா உண்மை சொன்ன விதம் அருமை.
    \\

    வாங்க ராதாகிருஷ்ணன். மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  24. \\NIZAMUDEEN said...

    உள்ளேன் ஐயா! (ஐயோ இல்லை, ஐயா)
    \\

    வாப்பா நிஜாம்! மிக்க நன்றி! அந்த பின்னூட்டமும் பார்த்தேன். இப்ப நெட் ஸ்லோ. அதனால காலையிலே அதை சரி பண்றேன்.

    எனக்கு ஒரு மெயில் தட்டுங்க. ஊர் சேதி இருக்கு. மத்தபடி நம்ம ஊர் மக்கள் அங்க நலமா?

    ReplyDelete
  25. \\கும்க்கி said...

    அண்ணே.,

    மனசுலருந்து அப்படியே கொட்டியிருக்கீங்க.

    இந்த இணையவெளி சுலபமான., புரிதலுடன் கூடிய., பால்ய கால நட்புக்களை போன்ற., தேவைன்னா நம்பி நெருங்கவும் தேவையில்லைன்னா சுலபமா உதறிவிடவும் ஏதுவான., முகமறியா நட்புக்கள் ஏராளமானதை கொடுத்திருக்கு.

    எனக்கு ரொம்ப ஆச்சரியம். ஒரு கணிணி மட்டும் இருந்தா போதும்னு தோணுச்சு.அப்புறம் இண்டர்நெட்னு ஏதோ இருக்காமேன்னு ஆரம்பிச்சு., இப்போலாம் வெளில நண்பர்களை தேடிபோறதுகூட குறைஞ்சுபோச்சு.டி.வியும் அலுப்பு.

    எவ்வளவோ இறைஞ்சு கிடக்கு..தேடி தேடி நாமதான் பத்திரப்படுத்திக்கிடனும்ணே.

    பாசாங்கில்லாத வார்த்தைகளால பக்கத்துல ஒக்காந்து கேட்ட மாதிரி இருக்குங்கண்ணே.

    ஆனா ஒன்னுன்னே இன்னொரு உனாதானா ஆகுற ஆசைய மட்டும் விட்டுடுங்கண்ணே...கூகுளுக்கு அவர் ஒருத்தர் மட்டும் போதும்ணே.
    \\

    வாப்பா கும்க்கி! விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி! ஆனா உனாதானா இதுக்காகவே கோவத்துல சுருக்கமா ஒரு 50 பக்கத்துல ஒரு பதிவு போட போறாரு பாருங்க:-)))

    ReplyDelete
  26. \\அப்பாவி தங்கமணி said...

    பெயர் விளக்கம் சூப்பர்ங்க... அபி அம்மா கலக்கல் பெயர் வெச்சுட்டாங்க...

    //நான் கல்யாணபரிசு தங்கவேல் மாதிரி தினமும் காசு கொடுத்து மாலை வாங்க
    வேண்டியிருந்திருக்கும்//
    ஹா ஹா ஹா

    சூப்பர் கேள்விகள்...சூப்பர் பதில்கள்
    \\

    வாங்க அப்பாவிதங்கைமணி! நன்றி நன்றி!நன்றி!

    ReplyDelete
  27. \\உடன்பிறப்பு said...

    ஆவியில் வித்தியாசமான பிளாக்கர்கள் பட்டியலில் உங்க பெயரும் வந்துச்சு
    \\ வாங்க உடன்பிறப்பு! மிக்க நன்றி! என்னது ஆவில வந்துச்சா நான் பார்கலையே. இந்த வாரமா? நாளை பார்க்கிறேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  28. \\துளசி கோபால் said...

    ஃப்ளோ பயங்கரமா வந்துருக்கு போல:-))))))

    நல்லா இருக்கு அபி அப்பா.
    \\
    வாங்க டீச்சர்! ஆமா பொங்கிட்டன்ல:--)) வருகைக்கு நன்றி டீச்சர்!

    ReplyDelete
  29. \\கோபிநாத் said...

    நான் பதிவு எழுதவில்லைன்னாலும் நான் போட்ட ரீப்பிட்டே இன்னும் என்னை விட்டு போக மாட்டேங்கிதுப்பா...;)))
    \\

    வாய்யா கோபி! நீ மாச சம்பளம் வாங்கும் போது சம்பள பதிவு போடுவ. இப்ப இந்தியாவிலே இருக்கும் போது அதை எதிர்பார்க்க முடியுமா? இல்லாட்டி உனக்காக மாசம் ஒரு தடவை இளையராஜாவை பிறக்க சொல்ல தான் முடியுமா? :-)

    மறக்க கூடிய ரிப்பீட்டாய்யா போட்டிருக்கே நீனு?

    ReplyDelete
  30. \\ராமலக்ஷ்மி said...

    ஒவ்வொரு பதிலும் ஒரு பதிவின் அளவுக்கு இருந்தாலும் சுவாரஸ்யம்.
    \\

    வாங்க வாங்க பிரண்ட்!
    வருகைக்கு நன்றி! உங்களை பத்தி எழுதின கை காயும் முன்னமே ஒரு அழகான கவிதை போட்டீங்க. நல்லா இருந்துச்சு! மிக்க நன்றி!

    ReplyDelete
  31. \\ஆயில்யன் said...

    //இது ஒரு செல்லபெயர். என் மனைவி வைத்த பெயர்//

    ம்ஹுக்கும் இது கூப்பிடு பெயரு! குமாருன்னு கூப்பிட்டா கொஞ்சம் டெரா இருக்கும்ன்னு அபி அப்பா அபி அப்பான்னு [ஸ்பேஸ்] விட்டுத்தான் ஊருல எல்லாரும் கூப்பிடுவாங்களாம்! என்னமோ தெரியல அண்ணிக்கிட்ட அடி வாங்கப்பிடாதுன்னு இங்க சம்பந்தமே இல்லாம ஒரு வரி //என் மனைவி வைத்த பெயர்// பின்னாடி சேர்த்திட்டாரு #ரகசியம் ரிலீசுடு!
    August 9, 2010 11:27 PM
    ஆயில்யன் said...

    எல்லாரை பத்தியும் சொல்லிட்டு அண்ணன் ராதாவினை பற்றி சொல்லலயே!

    அண்ணன் ராதா பேரவை
    மயிலாடுதுறை
    \\

    வாப்பா ஆயில்யா! மிக்க நன்றி! ஆமாம் எழுதின பின்ன தான் ராதா பத்தி எழுத விட்டு போனது நியாபகத்துக்கு வந்தது. அடுத்து ராதாவோட அடிச்ச சமீபத்திய கூத்து எழுதிடுவோம்:-)) மிக்க நன்றி!!

    ReplyDelete
  32. கூடவே இருந்து கேட்பது போல, படிக்கும்போதும, இயல்பாக இதமாக இருக்கிறது அபி அப்பா.

    ReplyDelete
  33. எவ்ளோ டீடயீலு.............. ரொம்ப அழகா, அருமயா, விவரமா, தெளிவா, விளக்கமா எழுதி இருக்கீங்க..

    (மேல சொன்ன எல்லாத்தயும் சேர்த்து ஒரே வார்த்தயில சொல்லணும்னா உங்க ஸ்டைலுல... )

    ReplyDelete
  34. ஒன் அண்ட் ஒன்லி சொந்த விஷயம்- சூப்பர்.

    பதிவுகளால் சம்பாதிப்பது இல்லை என்கிறீர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே பார்க்கிறீர்கள். என்னை போன்ற பல பதிவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் அலுப்பு, சலிப்பிற்கு ஒரு செலவு குறைந்த வடிகால் சாதனமாக பதிவு விளங்குகிறது. மனதிற்கு/ சிந்தனைக்கு இனிமையான ஆதரவு, ஓய்வு நாம் வலைபதிவுகள் மூலம் சம்பாதித்து கொண்டுதானே இருக்கிறோம்.

    ReplyDelete
  35. ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  36. அடடே!

    சார் நீங்களும் என்னை வாசிக்குறீங்களா ?

    ரொம்ப சந்தோஷம் !

    உங்கள் வலைப்பயணத்தின் தொகுப்பா இருந்தது இந்தப் பதிவு . சுவாரஸ்யமாவும் :)

    ReplyDelete
  37. Scroll பண்றதுக்கே tired ஆகிட்டேன்
    :)

    ReplyDelete
  38. //அபிஅப்பா, அபிஅப்பாவின் நூலகம், ஆகியவை என் சொந்த பிளாக், கும்மி(வேடந்தாங்கல்), தாயின் புன்னகை(இது எங்கள் பள்ளிக்காக) சமீபத்தில் சுவரொட்டி(ஒரே பதிவு தான்) பேரண்ட்ஸ் கிளப்( 3 பதிவு) இவைகளில் எழுதுகின்றேன். தவிர எங்கள் பள்ளிக்காக ஒரு தனி சொந்த வலைப்பூ வைத்திருக்கேன். தவிர இரண்டு வலைப்பூ சொந்தமாக இருக்கு.(நண்பர்களுக்காக) வ.வா.சங்கத்தில் ஒரு மாதம் எழுதினேன் அட்லாஸ் வாலிபராக, வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதினேன்.///

    pothumaaaa

    ReplyDelete
  39. பதிவுகளால் சம்பாதித்த உறவுகளை விட்டுட்டீங்களே அபி அப்பா??? வழக்கம்போல் இந்தப் பின்னூட்டத்துக்குப் பதிலும் போட மாட்டீங்க! :P

    ReplyDelete
  40. //எனது உண்மை பெயர் தொல்காப்பியன். வலையுலகில் என்னை தொல்ஸ் என அழக்கும் சிலர் நாகைசிவா மற்றும் வேலன் அண்ணாச்சி.//

    தொல்காப்பியன் பெயரை சுருக்கியா தொல்ஸ் கூப்பிடுறோம்.... தொல்லை ய கொஞ்சம் ஸ்டைலா அப்படி கூப்பிடுவதாகல நினைச்சோம் ;)))

    ReplyDelete
  41. எங்க.. பெயர் காரணம் கேட்டது ஒரு தப்பாங்க ... காதுலேர்ந்து ரத்தம் வழியிது..

    ReplyDelete
  42. அட??? கமெண்ட் போகலைனு நினைச்சேன். போயிருக்கே?? ஆச்சரியம் தான்! :D

    ReplyDelete
  43. \\ப்ரியமுடன் வசந்த் said...

    கமிட்மெண்ட் இருந்தாத்தானே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிடணும்ன்னு சொல்லியிருக்கிறது ரொம்ப பிடிச்சது

    உள்ளத்தில இருந்து எழுதுன மாதிரியே இருக்கு ரசித்து படித்தேன்....!

    உங்களுக்கு பொடிடப்பா என்ற பெயரும் இருக்குதான?
    \\

    வாங்க வசந்த்! ஆமாம் அபிஅப்பாவை தான் ஜம்பிங் பண்ணி செந்தழல்ரவி பொடிடப்பான்னு சொல்லுவாரு:-))) வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  44. உ.த அண்ணன் கிட்டதானே டைப் பண்னி வாங்கினீங்க

    ReplyDelete
  45. \\சுல்தான் said...

    கூடவே இருந்து கேட்பது போல, படிக்கும்போதும, இயல்பாக இதமாக இருக்கிறது அபி அப்பா.
    \\

    வாங்க சுல்தான்பாய்! வருகைக்கு மிக்க நன்றி மிக்க நன்றி!!

    ReplyDelete
  46. \\வழிப்போக்கன் - யோகேஷ் said...

    எவ்ளோ டீடயீலு.............. ரொம்ப அழகா, அருமயா, விவரமா, தெளிவா, விளக்கமா எழுதி இருக்கீங்க..

    (மேல சொன்ன எல்லாத்தயும் சேர்த்து ஒரே வார்த்தயில சொல்லணும்னா உங்க ஸ்டைலுல... )
    \\

    வாப்பா யோகேஷ்! மிக்க நன்றி! மிக்க நன்றி!

    ReplyDelete
  47. \\ராம்ஜி_யாஹூ said...

    ஒன் அண்ட் ஒன்லி சொந்த விஷயம்- சூப்பர்.

    பதிவுகளால் சம்பாதிப்பது இல்லை என்கிறீர்களே, நீங்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே பார்க்கிறீர்கள். என்னை போன்ற பல பதிவர்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் அலுப்பு, சலிப்பிற்கு ஒரு செலவு குறைந்த வடிகால் சாதனமாக பதிவு விளங்குகிறது. மனதிற்கு/ சிந்தனைக்கு இனிமையான ஆதரவு, ஓய்வு நாம் வலைபதிவுகள் மூலம் சம்பாதித்து கொண்டுதானே இருக்கிறோம்.
    \\

    வாங்க ராம்ஜி! உண்மைதான். சம்பாதித்தது உண்மையான பல நட்புகளையும், அதே சமயம் சில கசப்புகளையும் தான். ஆனால் தற்போதைய என் மனநிலை கசப்பு அதிகமானதால் அந்த நேரத்தில் அப்படி அடித்து விட்டேனோ என இப்போது வருந்துகிறேன்.

    நீங்க சொன்னது உண்மை தான். நல்ல நட்புகளும் சம்பாதித்தேன். ஒத்து கொள்கின்றேன்!

    ReplyDelete
  48. \\Karthick Chidambaram said...

    ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.
    \\

    நன்றி கார்த்தி, மிக்க நன்றி!

    ReplyDelete
  49. \\நேசமித்ரன் said...

    அடடே!

    சார் நீங்களும் என்னை வாசிக்குறீங்களா ?

    ரொம்ப சந்தோஷம் !

    உங்கள் வலைப்பயணத்தின் தொகுப்பா இருந்தது இந்தப் பதிவு . சுவாரஸ்யமாவும் :)
    \\

    வாங்க நேசமித்ரன்! நெஜமாவே நல்லா இருக்கு உங்க கவிதை. எனக்கு பிடித்தது என்பதை விட நல்லா புரிஞ்சும் இருந்தது. அதனாலேயே பிடித்தது என்றும் கூட சொல்லலாம். வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  50. \\மங்களூர் சிவா said...

    Scroll பண்றதுக்கே tired ஆகிட்டேன்
    :)
    \\

    ஹி ஹி! அப்ப இன்னும் படிக்கலையா மங்சிங்:-)

    ReplyDelete
  51. அபி அப்பா யாரோ தெரியாம கேள்வி கேட்டுவச்சிட்டாங்கிங்கிங்கரதுக்காக இப்படியா!!

    ஹையோ! ஹப்பா சாமீ முடியலை

    ReplyDelete
  52. \\LK said...

    //அபிஅப்பா, அபிஅப்பாவின் நூலகம், ஆகியவை என் சொந்த பிளாக், கும்மி(வேடந்தாங்கல்), தாயின் புன்னகை(இது எங்கள் பள்ளிக்காக) சமீபத்தில் சுவரொட்டி(ஒரே பதிவு தான்) பேரண்ட்ஸ் கிளப்( 3 பதிவு) இவைகளில் எழுதுகின்றேன். தவிர எங்கள் பள்ளிக்காக ஒரு தனி சொந்த வலைப்பூ வைத்திருக்கேன். தவிர இரண்டு வலைப்பூ சொந்தமாக இருக்கு.(நண்பர்களுக்காக) வ.வா.சங்கத்தில் ஒரு மாதம் எழுதினேன் அட்லாஸ் வாலிபராக, வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதினேன்.///

    pothumaaaa
    \\

    பத்தாதா கார்த்தி:-)))

    ReplyDelete
  53. \\கீதா சாம்பசிவம் said...

    பதிவுகளால் சம்பாதித்த உறவுகளை விட்டுட்டீங்களே அபி அப்பா??? வழக்கம்போல் இந்தப் பின்னூட்டத்துக்குப் பதிலும் போட மாட்டீங்க! :P
    \\

    வாங்க கீதாம்மா! ஆமாம் சொல்ல விட்டுட்டேன். தப்பு தான். அதை உங்க மெயில்ல கூட சொல்லியிருக்கேன். மேலே ராம்ஜிக்கும் அதே பதில் தான் சொன்னேன்.

    ஒத்துக்கறேன். சொல்ல விட்டுட்டேன். மாப்பு மாப்பு!

    ReplyDelete
  54. \\நாகை சிவா said...

    //எனது உண்மை பெயர் தொல்காப்பியன். வலையுலகில் என்னை தொல்ஸ் என அழக்கும் சிலர் நாகைசிவா மற்றும் வேலன் அண்ணாச்சி.//

    தொல்காப்பியன் பெயரை சுருக்கியா தொல்ஸ் கூப்பிடுறோம்.... தொல்லை ய கொஞ்சம் ஸ்டைலா அப்படி கூப்பிடுவதாகல நினைச்சோம் ;)))
    \\

    அடடே புலிசார்! இப்படி வேற இருக்கா அர்த்தம்:-))
    வருகைக்கு நன்றி நன்றி சிவா!

    ReplyDelete
  55. \\Vidhoosh(விதூஷ்) said...

    எங்க.. பெயர் காரணம் கேட்டது ஒரு தப்பாங்க ... காதுலேர்ந்து ரத்தம் வழியிது..
    \\

    வாங்கம்மா வாங்க! எனக்கே எப்பவாவது தான் பொங்கும். பொங்க விடமாட்டேங்குறீங்களே:-)))

    ReplyDelete
  56. \\சின்ன அம்மிணி said...

    உ.த அண்ணன் கிட்டதானே டைப் பண்னி வாங்கினீங்க
    \\

    ஊக்கூம். அவரு அவரோட கம்பியூட்டர் கிட்ட போனாலே அது கையை காலை உதைச்சுகிட்டு அழுதாம். இதுல என் பதிவை வேற அவரு அடிக்கனுமாக்கும். அவரை நினைச்சு உரலை இடிச்சேன்:-)))
    நன்றி சின்னம்மணி!

    ReplyDelete
  57. \\சிட்டுக்குருவி said...

    அபி அப்பா யாரோ தெரியாம கேள்வி கேட்டுவச்சிட்டாங்கிங்கிங்கரதுக்காக இப்படியா!!

    ஹையோ! ஹப்பா சாமீ முடியலை
    \\

    வாம்மா சிட்டுகுருவி! சின்ன கேள்வியா கேட்டா சின்ன பதில். நீங்க ஏன் பெரிய கேள்வியா கேட்குறீங்க அதான் பெரிய பதில்:-))

    ReplyDelete
  58. எல்லாமே ரெண்டுவரி கேள்வி தானே

    நீங்க ஏன் பத்தி பத்தியா பதில் சொல்லியிருக்கீங்க?

    ReplyDelete
  59. \\சிட்டுக்குருவி said...

    எல்லாமே ரெண்டுவரி கேள்வி தானே

    நீங்க ஏன் பத்தி பத்தியா பதில் சொல்லியிருக்கீங்க?
    \\

    ஹி ஹி சிட்டுகுருவியக்கா! கேள்வியென்னமோ சின்னது தான். ஆனா அதன் உள்ளடக்கம் இம்மாம் பெரிய பதிலை கொண்டு வந்துடுச்சே:-))

    ReplyDelete
  60. அப்பாடா! ரொம்ப நாள் பின்னே எல்லாருக்கும் பதில் சொல்லியாச்சு. ரொம்ப நாள் பின்னே வாசகர் பரிந்துரையிலயும் வந்தாச்சு. 15 பேர் ஆதரவாகவும் 2 பேர் எதிராகவும் ஓட்டு போட்டாச்சு. எல்லாருக்கும் நன்னி நன்னி நன்னி!

    ReplyDelete
  61. /
    அபி அப்பா said...

    \\மங்களூர் சிவா said...

    Scroll பண்றதுக்கே tired ஆகிட்டேன்
    :)
    \\

    ஹி ஹி! அப்ப இன்னும் படிக்கலையா மங்சிங்:-)

    /

    என்னது படிக்கலையாவா??

    ஹீரோ டயலாக் சூப்பர்!

    ReplyDelete
  62. இம்சை அக்காட்ட பேசாத மாதிரியே எங்ககிட்டயும் சரியா பேசலை அதனாலதான் மயிலாடுதுறைல இருந்து உடனே கெளம்பீட்டோம்னு கொளுத்தி போட்டுருவமா
    :))

    ReplyDelete
  63. /
    நீங்க சொன்னது உண்மை தான். நல்ல நட்புகளும் சம்பாதித்தேன். ஒத்து கொள்கின்றேன்!
    /

    ம் அது!

    ReplyDelete
  64. \\என்னது படிக்கலையாவா??

    ஹீரோ டயலாக் சூப்பர்!\\

    அய்யோ எனக்கேவா சைவா:-))

    \\இம்சை அக்காட்ட பேசாத மாதிரியே எங்ககிட்டயும் சரியா பேசலை அதனாலதான் மயிலாடுதுறைல இருந்து உடனே கெளம்பீட்டோம்னு கொளுத்தி போட்டுருவமா
    :))\\

    ஆகா அப்படியா இருந்தோம், என்னா லூட்டி என்னா லூட்டி...மறக்க முடியுமா அதை...நான் இங்க ஊர்ல இருக்கும் போதே இன்னும் ஒரு தடவை வாங்கப்பா எல்லாரும் ஆனா எல்லாரும் குடும்பஸ்தனா வாங்க:-)) ஒரு ஆன்மீக டூர் போடுவோம்!

    \\நீங்க சொன்னது உண்மை தான். நல்ல நட்புகளும் சம்பாதித்தேன். ஒத்து கொள்கின்றேன்!
    /

    ம் அது!\\

    ஒத்துக்கறேன் சிவா!

    ReplyDelete
  65. 'மிக்க நன்றி காயத்ரி! நம்ம அமீரக காயத்ரி தானே. வாங்க வாங்க!'
    நான் இப்போ சென்னை காயத்ரி இன்னும்...இருப்பது நாளுக்கு...நன்றி

    ReplyDelete
  66. அபி அப்பா , கண்டு பிடிங்க பார்க்கலாம்,
    இந்தப் பதிவை நான் படிச்சிட்டு பின்னோட்டம் போடறனா, இல்ல படிக்காம பின்னோட்டம் போடறனானு??

    ReplyDelete
  67. \\Vidhoosh(விதூஷ்) said...

    எங்க.. பெயர் காரணம் கேட்டது ஒரு தப்பாங்க ... காதுலேர்ந்து ரத்தம் வழியிது..
    \\

    இனிமே காதுவழியா படிக்காம கண் வழியா படிச்சு பாருங்களேன் விதூஷ். ரத்தம் வராது:-))

    ReplyDelete
  68. \\'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

    அபி அப்பா , கண்டு பிடிங்க பார்க்கலாம்,
    இந்தப் பதிவை நான் படிச்சிட்டு பின்னோட்டம் போடறனா, இல்ல படிக்காம பின்னோட்டம் போடறனானு??
    \\

    நிச்சயமா படிச்சுட்டீங்க! ஆமாம் தானே!

    ReplyDelete
  69. \\Gayathri said...

    'மிக்க நன்றி காயத்ரி! நம்ம அமீரக காயத்ரி தானே. வாங்க வாங்க!'
    நான் இப்போ சென்னை காயத்ரி இன்னும்...இருப்பது நாளுக்கு...நன்றி
    \\

    குட் குட். நல்லா எஞ்சாய் பண்ணுங்க லீவை!

    ReplyDelete
  70. இந்த தொடருக்கு உண்மைதமிழனை அழைத்தால் எப்படியிருக்கும் என்று நினைத்தேன், நீங்க காட்டிட்டிங்க!

    ReplyDelete
  71. நல்லாயிருக்கு உங்க பகிர்வு.

    ReplyDelete
  72. உங்கள் பதிவை இப்போது தான் படிக்கிறேன்.
    அபி அப்பா - அருமையான பெயர். எனக்கு அபி என்ற பெயர் மிகவும் பிடிக்கும்.
    நல்ல நகைச்சுவையாக அருமையாக எழுதுகிறீர்கள்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  73. அனைத்தும் அருமை

    ReplyDelete
  74. அனைத்தும் அருமை

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))