பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 25, 2007

நீயெல்லாம் ஒரு பொம்பளையா?????

பள்ளிகூடம் போகலாமான்னு நம்ம டீச்சர் கொசுவத்தி சுத்தி வச்சு அது நமக்கும் பத்திகிச்சு. சரி நம்ம பங்குக்கும் நாமளும் சுத்திவிடுவோமேன்னு கிளம்பிட்டேன்.

நான் படிக்க வந்ததே ஒரு விபத்துங்க. பள்ளிகூடத்தில் சேர்க்கப்பட்டேன்ன்னு சொல்றது தப்பு. துரத்தி விடப்பட்டேன்:-) அப்படி என்ன தப்பு செஞ்சேன் அந்த நாலு வயசிலே, என்ன எல்லா பிள்ளைகளும் செய்யும் வால் தனம் மாதிரி ரெண்டு மடங்கு அதிகமா செஞ்சுட்டேன். அதுக்கு போய் அத்தன பெரிய தண்டனை. அதல்லாம் ரொம்ப ஓவர். அம்மா தேங்காய் துருவினால் அந்த பூ எடுத்து தின்பதில்லை. முழு மூடியா வேணும். அதில் என் எலிபல்லுக்கு எட்டிய தூரம் வரை ரவுண்டா கடிச்சுடுவேன். தொழில் சுத்தமா இருக்கும்.கடிச்ச தேங்காவை வாயிலே வச்சிகிட்டு கொஞ்சம் ஜீனியையும் வாயிலே கொட்டிகிட்டு என் அம்மாவை விட ஸ்பீடா ஓடுவேன். அய்யாவை பி(அ)டிக்க முடியாதுல்ல!! ரேழியில் கிடக்கும் செருப்பை எல்லாம் எடுத்து வாசலில் இருக்கும் சாக்கடையில் டபக் டபக்ன்னு போட்டுட்டு அதிலிருந்து வரும் பொலக் பொலக் சத்தத்தை ரசிப்பேன். வீட்டுக்கு விருந்தாளி வந்தா ஒரு மஞ்ச பையோடத்தான் வரணும், செருப்பை அதிலே போட்டு எரவானத்திலே மாட்டிடனும், அது அப்போ எங்க வீட்டிலே எழுதப்பட்ட சட்டமாக இருந்தது.

அக்காவின் பென்சில் எடுத்து என் கைக்கு எட்டிய தூரம் வரை வீடு முழுக்க சுவத்திலே மாடர்ன் ஆர்ட் வரைந்து விடுவேன். பார்க்க அப்படி ஒரு அம்சமா இருக்கும்.அதை ரசிக்க தெரியாத அப்பாவுக்கு சுண்ணாம்பு அடிக்கும் செலவு மட்டுமே மனதில் நிற்க்கும். (இப்போ கூட தங்கமணிகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் அபிபாப்பா சுவத்திலே கிறுக்காம பார்த்துக்கோன்னு) அப்பாவின் சைக்கிள் காத்தை மெதுவா பிடுங்கிவிட்டு அதன் மேல் உள்ளங்கை வைத்து எனக்கு நானே கூசிக்கிட்டு புளகாங்கிதமடைவேன். அப்பா என்னவோ அவங்க காத்தை பிடுங்கி விட்டமாதிரி ஆபீஸ் போகும் சமயத்தில் குய்யோ முறியோன்னு கத்துவாங்க.

இப்படியாக கிருஷ்ணலீலைகள் அதிகமாக அதிகமாக வீட்டில் பொதுக்குழு கூடி "அதை" நிறைவேற்றும் பொருப்பு வீட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சராகிய என் சித்தப்பாவுக்கு தரடப்பட, அடுத்த நாள் ஆரவாரமாக எனக்கு குளியல் எல்லாம் போட்டு சாம்பிராணி எல்லாம் போட்டு விஷயத்தை என்னிடம் சொல்ல வச்சேன் பாருங்க கச்சேரி, வீட்டையே தூள் கிளப்பிட்டேன். ஒரு வழியா சமாதான பேச்சு வார்த்தை நடந்தது என்னிடம். புஸ்தக மூட்டை இருந்தால் தான் போவேன்ன்னு ஒரு கோரிக்கை வைக்க அம்மா டபடப்ன்னு ஓடிப்போய் பீரோவில் மடித்து "ஜாக்கிரதையா" சேமித்து வைத்த "நியூ கொழும்பு ஸ்டோர்" மஞ்ச பைய தூக்கிட்டு வர நான் புஸ்தகம் எங்கேன்னு கேக்க அம்மா மாவு சலிக்க தந்திஆபீசர் வீட்டிலே இருந்து வாங்கி வத்த ஹிண்டு பேப்பரை எடுத்து நாலா மடிச்சு கண்ணீரோடு மஞ்ச பையிலே திணிக்க(பாவம்ன்னு விட்டாதான் என்னா) புஸ்தக மூட்டை ரெடி, சரின்னு சித்தப்பா என்னை தூக்கிக(ரொம்ப வெயிட் எல்லாம் கிடையாது. சில்லரை காசை சட்டை பையில் போட்டது மாதிரி தான் இருக்கும் வெயிட், ஆனா தம்பிய தூக்க மட்டும் முழு பலபிரயோகம் செய்யனும்) அப்ப தான் அடுத்த கோரிக்கை வைத்தேன். பாட்டியும் கூட வந்தாதான் ஸ்கூல் போவேன்னு.

அதுக்கு அம்மா "மாமி சும்மாதான இங்க உக்காந்து என்கிட்ட நச நசன்னு கிட்டு இருக்கீங்க, கூட போங்க ஓன்னாவது படிச்ச மாதிரியாவது இருக்கும்."...ம் நக்கல்... சரி சித்தப்பாகூட நேர் எதிரே மெயின் ரோட்டை கிராஸ் பண்ணினா இருக்கும் ஔவையார் ஸ்கூலுக்கு ஔவையார் சகிதமா போனேன். அந்த ஸ்கூல்ல மொத்தமே ஒரு சார், ஒரு டீச்சர் தான். ரெண்டு பேருமே தண்ணி வாங்க்கி குடிக்க ஆசுவாசப்படுத்திக்க என் வீட்டுக்கு தினமும் வர்ரவங்கதான். அதனால எனக்கு பெருசா பீலிங் எல்லாம் இல்லை. உக்காந்தாச்சு. எல்லோரும் ஓரோன் ஒன்னு சொல்லும் போது நான் மட்டும் வாயை இருக்கி மூடிக்கிட்டேன். டீச்சர் கெஞ்சி பார்த்த பின் அடுத்த கோரிக்கை வச்சேன். "பாட்டியும் ஓரோன் ஒன்னு சொல்லனும்"ன்னு. வேற வழி! சொன்னாங்க. கும்பலா எங்க கூட என் பாட்டியும் சொன்னாங்க. டீச்சர் எல்லாருக்கும் தனி தனியே வெரிகுட் சொல்லும் போது( அது என்னவோ ஆஸ்கார் மாதிரி பசங்களுக்கு) பாட்டிக்கும் வெரிகுட் சொல்ல அது அவங்களை அவமானப்படுத்தியதா நெனச்சுகிட்டு பாட்டி ஒன்னாவது படிப்பை அன்னிக்கோட டிசி வாங்கிகிட்டு டிஸ்கண்டியூ பண்றதா சொல்லிட்டாங்க, பின்ன அம்மா கெஞ்சி கூத்தாடி அவங்களையும் என்னையும் ஸ்கூல் அனுப்பினாங்க அடுத்த நாள்.

என் கூட சேர்ந்து பாட்டியும் நல்லாதான் படிச்சாங்க, ஆனா கணக்கு சொல்லிகுடுக்கும் போது மட்டும் முந்தானைய தரையில விரிச்சு லைட்டா கண் அசந்துடுவாங்க. பக்கத்திலேயே நானும் படுத்து கண கச்சிதமா வாயில விரல் வச்சுகிட்டு தூங்கிடுவேன். இப்படியா பத்து நாள் போன பின்ன ஒருநாள் திடு திப்புன்னு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வந்துட்டார். நாங்க சுகமா தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பப்பட்டோம். சாருக்கும், டீச்சருக்கும் செம திட்டு கொடுத்துட்டு போயிட்டார் இன்ஸ்பெக்டர். சாரும் டீச்சரும் மெதுவா பாட்டிகிட்ட வந்து "நீங்க இனிமே ஸ்கூல்க்கு வரவேண்டாம்"ன்னு சொல்ல அது பெரிய அவமானமா போயிடுச்சு பாட்டிக்கு.

"என்னைய அவமானப்படுத்திய இந்த ஸ்கூலுக்கு இனி நானும் வரமாட்டேன், என் பேரனும் வரமாட்டான், அவனை மாடு மேய்க்க வச்சாலும் வைப்பேனே தவிர இந்த ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்"ன்னு வீர சபதம் போட்டுட்டு (அடங்கொக்கமக்கா) என் கையை பிடிச்சு தர தரன்னு இழுத்து கிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. அம்மாவுக்கு தான் ரொம்ப கவலையா போச்சு. ஸ்கூல் எதிர்த்தாபோல தானே, அதனால அடுத்த நாள் அம்மாவே என்னை தர தரன்னு இழுத்துகிட்டு வந்து ஸ்கூல்ல விட்டுட்டு போயிட்டாங்க. கொஞ்ச நேரம் உக்காந்து இருந்தேன். வாசலையே பார்த்துகிட்டு இருந்தேன். அம்மா வீட்டின் உள்ளே போனதுதான் தெரியும் நானும் கிளம்பிட்டேன். வாரு வச்ச தொள தொளா டிராயரும், அரைக்கை தொள தொளா சட்டையும் போட்டு கிட்டு களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருந்த அபிஅப்பா கிளம்பிடுச்சு வாயிலே விரல் வச்சுகிட்டு புஸ்தக மூட்டையை தோளில் மாட்டிகிட்டு (ஹிண்டு பேப்பரையும், மஞ்ச பையையும் தூக்கி எறிஞ்சுட்டு போனாதான் என்ன...லூசு லூசு). தெனாலில கமல் ரோடு கிராஸ் பண்ணுவது போல ரெண்டு காதையும் பொத்திகிட்டு கண்ணை மூடிகிட்டு ரோட்டை கிராஸ் பண்றேன். அப்படியே கிருஷ்ணருக்கு ஆறு வழி விட்ட மாதிரி ரோட்டின் நடுவே நான் மட்டும் தனி வழில அசால்ட்டா நடந்து வர ஒரே கிரீச் கிரீச்ன்னு சத்தம், வடகரையிலே இருந்து வந்த நாலாம் நம்பரும் வேற ரெண்டு மூணு பஸ்ஸும் சரக் புரக்குன்னு நிக்க ரோட்டோரமா போய்கிட்டு இருந்த ஒரு அம்மா ஓடி வந்து என்னை கையை பிடித்து இழுக்க அந்த டிரைவரெல்லாம் கீழே குதித்து "நீயெல்லாம் ஒரு பொம்பளையா புள்ளைய தனியா விட்டுட்டு முன்னாடி போயிட்டியே"ன்னு திட்ட பின்ன என்ன அந்த அம்மா அவங்களை வண்டை வணடையா வாரிடுச்சு.

"ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க!!! என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற " பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க!!


டிஸ்கி:: அப்பாடா, நீயெல்லாம் ஒரு பொம்பளையா ன்னு ஒரு பதிவு போடனும்ன்னு நெனச்சு இத போடலீங்க, சத்தியமா கண்மணி டீச்சர் போட்ட ஆட்டோகிராபின் பாதிப்பால் சுத்துன கொசுவத்தி தான். அந்த வார்த்தை வந்த பின்ன அதையே தலைப்பா வச்சுட்டேன். நீங்க ஆதரவு குடுத்தாலும் குடுக்காட்டியும் நான் ஒன்னாப்பு படிச்சதை அடுத்த பாகத்திலே சொல்லியே தீர்ப்பேன் என்பதை அவையடக்கத்துடன் சொல்லிக்கறேன்:-))

17 comments:

  1. ம்ம்..... ரைட்டு.....

    ReplyDelete
  2. தலைப்பும் லேபிளும் சூப்பருங்க!! :))

    ReplyDelete
  3. என்னதான் மாமியார் மருமக சண்டைன்னாலும் வீட்டுப் பெரியவங்களோட சபதத்தைக் கூட தூக்கியெறிஞ்சுட்டு உங்களை மறுபடி அதே ஸ்கூலுக்கு கொண்டு போய் உங்க அம்மா விட்டிருக்காங்கன்னா, அவங்க எவ்வளவு டார்ச்சர் அனுபவிச்சிருப்பாங்கன்னு எனக்குப் புரியுது.

    BTW, தலைப்பு சூப்பரா ஒரு ரவுண்ட் வரும் போலிருக்கே தமிழ்மணத்துல. ;)

    ReplyDelete
  4. ஆகா ஒரு தலைப்புல இத்தனை பதிவா? இருந்தாலும் இது பரவாயில்லை.

    ReplyDelete
  5. ஏன் அண்ணே இம்புட்டு கொலவெறி :)))

    ReplyDelete
  6. \நீங்க ஆதரவு குடுத்தாலும் குடுக்காட்டியும் நான் ஒன்னாப்பு படிச்சதை அடுத்த பாகத்திலே சொல்லியே தீர்ப்பேன் என்பதை அவையடக்கத்துடன் சொல்லிக்கறேன்:-))\\

    கடமை..;))

    ReplyDelete
  7. அபி அப்பா, இந்த பதிவை போட்டு, இதோட லிங்கை குடுத்து நான் போட்ட இந்தப் பதிவில் பின்னூட்டமா போட்டு இருந்தீங்களே.

    அதுக்குப் பதிலா வேற ஒரு பதிவோட லிங்க் ஒண்ணை குடுத்து பதில் போட்டு இருக்கேன். பாருங்க. :))

    ReplyDelete
  8. எலி பல்லை உடைத்தது யாரு?

    ReplyDelete
  9. பழைய ஃபார்முக்கு வந்துட்டீங்க! சூப்பர்!

    ReplyDelete
  10. நல்ல ஞாபக சக்தி. அம்பது வருசத்துக்கு முந்தி நடந்ததெல்லாம் ஞாபகம் இருக்கே

    ReplyDelete
  11. m.. great... நல்லா சஸ்பென்ஸ் வேறயா இதுல.. :)

    ReplyDelete
  12. //

    இராம்/Raam said...
    ம்ம்..... ரைட்டு.....
    //
    //
    இலவசக்கொத்தனார் said...
    தலைப்பும் லேபிளும் சூப்பருங்க!! :))
    //

    ரிப்பீட்டு

    ReplyDelete
  13. அங்கிள் என் கிளாஸ்மேட் அபிக்கு இதெல்லாம் தெரியுமா? நாளைக்கு நாங்க 2 பேரும் இத பத்தி தான் கிளாஸ்ல பேசிப்போம்.

    ReplyDelete
  14. ஆகா ஒண்ணாப்பு படிச்சிருக்காராம் - நம்ப முடியவில்லை நம்ப முடியவில்லை.

    நீ யெல்லாம் ஒரு பொம்பளெயா ?? கரெக்ட்டு.

    பொறக்கும் போதெ குறும்போட சேந்து பொறந்துருக்கு அபிப்பா

    ReplyDelete
  15. தலைவா... தலைப்பு சூப்பர்...

    இப்ப இருக்குற நிலைமையில் இந்த தலைப்புக்கு நான் எதும் சொன்ன பெரிய வம்பு ஆயிடும்...

    ஏதா இருந்தாலும் நாளைக்கு காலையில் வந்து சொல்லுறேன்...

    வரேன் சாமி.

    ReplyDelete
  16. இந்த தொடர் ஓட்ட தலைப்பின் எனது கதை இங்கே

    ReplyDelete
  17. தலைப்புக்கு ஏத்த பதிவு....

    சூப்பர்... அடுத்து பகுதிக்கு போறேன்...

    வரட்டா... :)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))