பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

November 1, 2007

வெட்டி தம்பிகிட்ட ஜாலியா ஒரு கலாட்டா!!!

வெட்டி தம்பி ஒரு பதிவு போட்டிருந்தாரு, அதிலே எனக்கு ஒத்து வராத சில கருத்துகள் மட்டும் இங்க விமர்சிக்கறேன். கோவிக்காதீங்க வெட்டி தம்பி, இது சும்மா ஜாலிக்கு தான்!

//மெட்ராஸ்ல இருந்து திருச்சி போகறதுக்கு ஏர் பஸ்ல போகலாம்னு போய் விசாரிச்சிருக்கான். ஒரு சீட் தான் இருக்குனு சொல்லியிருக்காங்க. அதே சமயம் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் அங்க வந்திருக்கான். உடனே பஸ் கண்டக்டர் (ஏர் பஸ்ல இருக்கறவர் பேரு கண்சக்டரா இல்லை க்ளீனரா?) 100 ரூபாய் அதிகமா சொல்லியிருக்கான். உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான். நம்ம ஆளு (சாப்ட்வேர் தான்) நூறு ரூபா அதிகமா செலவு பண்ணி ஏர் பஸ்ல போயிருக்கான்.

இந்த இடத்துல தப்பு யார் மேலனு எனக்கு தெரியல. ஏமாந்தவன் ஒருத்தன் வரான், நூறு ரூபாய் ஏத்தி சொன்னாலும் சேர்த்து வாங்குவானு சொன்ன அந்த பஸ்காரன் மேல ஏங்க யாருமே தப்பு சொல்ல மாட்றீங்க? ஏமாத்தறவனைவிட ஏமாறவன் மேல ஏன் உங்களுக்கு எல்லாம் இந்த கோபம்? யாரும் விருப்பட்டு ஏமாறதில்லைங்க.//

அதாவது அந்த 100 ரூபா இருந்தா சாதா பஸ்ஸிலே போயிடலாம்! அப்படின்னா கிட்ட தட்ட 75% உங்க சாப்ட் வேர் கம்பனி அதிகமா விலை கொடுக்க தயாரா இருக்குது, பஸ்ஸிலே மட்டுமல்ல தனக்கு தேவைப்பட்ட எதையுமே, அப்படித்தானே! ஒரு 10% அதிகமா கொடுத்து பிலாக்கிலே போனா கூட ஒத்துக்கலாம். இல்ல ஒரு அவசர ஆத்திரம்ன்னா 25% அதிகமா கொடுக்கலாம். ஆனா 75% அதிகமா பஸ்காரன் கேட்டான்னா என்னா காரணம் ஏற்கனவே "கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா" சாப்ட்வேர் கிட்ட அவன் இது போல பல தடவை சுகம் அனுபவிச்சு இருக்கணும். நீங்க பழக்க படுத்தீட்டிங்க அப்படி! எங்க ஒரு கிராமத்து விவசாயிகிட்ட கேட்டு பார்க்க சொல்லுங்க, நீங்க சொன்னாலும் பஸ்காரன் கேக்க மாட்டான். என்னவோ 100 ரூபாய் அதிகம் குடுத்துட்டு அந்த சாப்ட்வேர் ஊர் போய் சேரும் வரை குலுங்கி குலுங்கி அழுத மாதிரில்ல "ஏமாந்தவன்"ன்னு சொல்லியிருக்கிய தம்பி! ஜஸ்ட் லைக் தட் 100ஐ "வெட்டி" விட்டுட்டு லேப்பிய மடில வச்சுகிட்டு ASL அடிச்சு கிட்டு போன பார்ட்டிய "ஏமாந்தவன்"ன்னு அடைமொழி சொல்வதை விட "பேட் மேன்"ன்னு சொல்லலாம். அய்யய்யோ அடிக்க வராதீங்க பாலாஜி, "ஃபேட் மேன்" அதாவது "கொழுப்பு மனிதன்"ன்னு சொல்லலாம்.

//இது மட்டுமில்லை. இந்த ஹோட்டல் எல்லாம் அதுக்கு மேல. ஒரு சிக்கன் பிரியாணி அறுபது ரூபாய். சைட் டிஷ் எல்லாம் நூறு நூத்தியிருபது. இப்படி தான். ஒரு ட்ரீட்னு 5 பேரோட போனா ஆயிரத்துல இருந்து இரெண்டாயிரம் வரைக்கும் தாராளமா செலவு ஆகும்.நம்ம ஆளுங்களுக்கு வாரத்துக்கு ஒரு தடவை இப்படி போயாகனும். ஆனா இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு கொடுத்த ஐட்டத்தையே அறுபது ரூபாய்க்கு ஏத்தனவங்க மேல ஏன் யாருக்குமே கோபம் வரல?//

அங்க என்ன தெரியுமா ஆகியிருக்கும், முதல்ல பொதுமக்களுக்கு கொடுக்கும் அதே விலைக்கு தாங்க கொடுத்திருப்பாங்க ஹோட்டல் காரங்க, அங்க போன சாப்ட்வேர் சர்வருக்கு 200 ரூவா டிப்ஸ் கொடுத்திருக்கும்.(எனக்கு தெரிஞ்ச நண்பன் கொடுத்தான், நான் பார்த்தேன்) இப்படி 4 பார்ட்டி வந்துட்டு 200 200ன்னு டிப்ஸ் கொடுத்துட்டு போன பின்ன அந்த சர்வர் 800 ரூபாயை ஆட்டிகிட்டே போயிருப்பான் முதலாளி முன்னாடி! ஆஹா நாம முதல் போட்டு ஹோட்டல் வச்சா நம்ம விட அதிகமா சர்வர் லாபம் பார்க்கிறானே, சர்வருக்கே 200 டிப்ஸ்ன்னா நாம இந்த பார்ட்டிகளுக்கு விலை ஏத்தினா தப்பே இல்லை, அதுங்களுக்கும் பெருமையா இருக்கும் ச்சார் ஆத்மி சாப்பிட்டோம் ஏக்கசார் ஆச்சுன்னு அதுங்களும் சந்தோஷமா பீத்திகிட்டுமேன்னு நெனச்ச முதலாளி ஏத்திட்டான். இதுல அவன் தப்பு என்னா இருக்கு. 1000 ரூவாய் செலவு பண்ணிய சாப்ட்வேர் அடுத்த தடவை அந்த ஹோட்டலுக்கு போகலைன்னு சொல்லுங்க முதலாளி சர்ன்னு பேக் வாங்கிடுவார்! இப்ப என்னாச்சு, உங்களால எல்லாருக்கும் கஷ்டம்.

//சாப்ட்வேர் இஞ்சினியர் இவ்வளவு சம்பாதிக்கிறானு சொல்றீங்களே. அவன் எவ்வளவு சேமிக்கிறானு யாருக்காவது தெரியுமா?//

எப்படி சேமிக்க முடியும், இல்ல எப்படி சேமிக்க முடியும்! இப்படி தெண்ட செலவு செஞ்சா??


//ஒரு கிராமத்துல இருக்குற கவர்மெண்ட் பள்ளிக்கூட ஆசிரியர் சேமிக்கிறதைவிட கொஞ்சம் அதிகமா அவன் சேர்த்து வைக்கலாம். அவ்வளவு தான். //

ஊக்கூம், ஒருகாலும் முடியாது, 1வது வாத்தியாரின் சம்பளம் தெரியாம பேசாதீங்க, அது தவிர எங்க அவருக்கு நிலம் இருக்குதோ அங்க மாத்தல் வாங்கிட்டு போய் சுகமா இருக்கும் வாத்தியாரையும் தெரியும். 4 , 5 வாத்தியார் சேர்ந்துகிட்டு லோன் போட்டு வட்டிக்கு விடும் ஆயிரக்கணக்காண வாத்தியாரையும் எனக்கு தெரியும். அவங்க சாமர்த்தியம் உங்களுக்கு வராது!

//இருபத்தியொரு வயசுல எப்படியோ படிச்சி முடிச்சிட்டு வரான். கேம்பஸ்ல வேலை கிடைச்சா பரவாயில்லை. ஆனா அப்படி கிடைக்கலைனா அந்த வேலை கிடைக்க அவன் படற கஷ்டம் வேற எந்த துறைக்கும் குறைவானதில்லை. அப்படியே கஷ்டப்பட்டு வேலைக்கு போனவுடனே அவன் வாங்கற சம்பளம் அவனுக்கு ஒரு பெருமையையும், தலை கனத்தையும் தருது. //

இது சாப்ட்வேர் மாத்திரம் அல்ல பொது தான் எல்லா துறைக்கும். அதான் நீங்களே ஒத்துகிட்டீங்களே!

//சாப்ட்வேர் இஞ்சினியருங்க வாங்கற சம்பளமெல்லாம் மொத்தமா ரியல் எஸ்டேட்காரவங்ககிட்டயும், செல் போன் கம்பெனிகளிடமும், ஹோட்டல் ஓனருங்ககிட்ட தான் போய் சேருது. கொஞ்சம் கொஞ்சம் தியேட்டர் ஓனருங்ககிட்டயும், ஏர் பஸ்காரங்கட்டயும் போய் சேருது.//

ஆஹ நீங்க சொல்ல வர்ரது என்னான்னா, ரியல் எஸ்டேட்காரனும், ஹோட்டல் ஓனரும் , செல்கம்பனி காரனும் தான் உங்க காசை கொள்ளை அடிச்சுட்டான். அப்படித்தானே. அதனால அவன் தான் உங்க சாப்ட்வேர் கம்பெனி ஆளுங்களை விட பணக்காரன். ஆனா பணத்தை தண்ணியா செலவழிக்கும், தெண்டமா செலவழிக்கும், பொருளாதாரத்தை சீர்குலைக்கும் குற்றச்சாட்டு அவனுங்க மேல வராம உங்க மேல ஸாரி சாப்ட்வேர் மேல மட்டும் வர காரணம் என்ன வெட்டி தம்பி, காரணம் என்னான்னா இவனுங்க எந்த காரணம் கொண்டும் 75% அதிகம் கொடுத்து ஆம்னில போக மாட்டான். எதிர்ப்பான், இல்லாட்டி அட்லீஸ்ட் "ஹிண்டு"க்கு லெட்டர் எழுதுவான்.

//பிரியாணி இதையெல்லாம் விட ஒரு டூ-வீலர், அப்பா, அம்மாவோட இருக்குற வீடு, அம்மா கைல சமைச்ச ரசம், துவையல் இதெல்லாம் தாங்க சொர்க்கம். பெரு நகரங்களிலிருக்கும் சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் கொஞ்சம் சிறு நகரங்களுக்கு கொண்டு வந்து பாதி சம்பளம் கொடுத்தாக்கூட போதும். நம்ம ஆளுங்க எல்லாம் ஓடி வந்துடுவாங்க. //

லேபிளை மாத்துங்க, நாப்பத்தி ஐந்தா ஆகட்டும்:-))

//அதை விட்டுட்டு நீ எப்படி நாற்பதாயிரம் சம்பாதிக்கலாம்னு சண்டை போடறதோ, புலம்பறதோ சரியில்லைங்க//
அப்படி யாரும் புலம்பவில்லை பாலாஜி, தெண்டமா செலவு பண்ணி மத்தவங்களுக்கு தொல்லை குடுக்காதீங்க, இதால பாதிக்கப்டுவது ஏழைகள் இல்லை. நடுத்தர வர்க்கம் தான். கொஞ்சம் யோசிங்கப்பா!!!
.

14 comments:

  1. ரொம்ப காலம்(?) கழித்து பதிவிடும் அபி அப்பாவிற்கு வருகை நல்வரவாகட்டும்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கும் போலயே ஜாலிகலாட்டா... ஜாலியா நடக்கட்டும் நிறைய பாயிண்ட் கிடைக்கும்...

    ReplyDelete
  3. அபிஅப்பாவுடன் உடன்படுகிறேன். கணிணித்துறையில் இருக்கும் நண்பர்களின் தேவையற்ற செலவுகளின்
    காரணமாக பல பொருள்கள் விலை ஏறி இருக்கின்றன. சென்னை மதுரை போன்ற இடங்களில் வீட்டு வாடகையோ அல்லது வீட்டு விலையோ கண்மூடித்தனமாக ஏறுவதற்கு யார் காரணம் ?

    ReplyDelete
  4. சென்னையில் 1998 ல் இருந்த வாடகைக்கும் 2007 ல் இருக்கும் வாடகைக்கும் என்ன வித்தியாசம் இருக்குமோ அதை விட துபாயில் 1998 ல் இருந்த வாடகைக்கும் 2007 ல் இருக்கும் வாடகைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. துபாய்க்கு ஏதாவது ஒரு காரணம் நாம் சொல்லலாம். எங்கே இருந்தாலும் விலைவாசியும், தேவைகளும் ஏறிக் கொண்டே தான் இருக்கிறது. எனவே ஒரு சாராரை குறை சொல்ல ஏதும் நியாயமான காரணம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

    ReplyDelete
  5. வெட்டிப்பயல் பதிவை நான் படிக்கலை.. ஆனா இதுவரை படிக்கலைன்னா, அசுரன் நட்சத்திர வாரத்தில் எழுதிய 'ஐந்து இலக்கச் சம்பளத்தின் எச்சிற் பருக்கைகள்' இடுகையைப் படிக்குமாறு சிபாரிசு செய்கிறேன் - வெட்டிப்பயல், அபி அப்பா, ரெண்டு பேருக்கும்

    ReplyDelete
  6. அபி அப்பா!

    அருமையா எடுத்துச் சொல்லி இருக்கீங்க!

    சேமிக்க முடியலைங்குற ஆதங்கம் நியாயமானது அல்ல!

    அளவுக்கதிகமா கேக்குறப்போ கொடுக்காம சிக்கனமா நியாமன விலை கொடுத்து செலவுகள் செஞ்சா நிச்சயமா எவ்வளவோ சேமிக்கலாம்!

    //உடனே என் அண்ணன் சாதாரண பஸ்ல போனா அந்த 100 ரூபாய்க்கு திருச்சிக்கே போயிடலாம்னு ஏர் பஸ்ல போகாம சாதாரண பஸ்லயே போயிருக்கான்//

    அப்போ சாதாரணக் கட்டணத்துலயே பஸ் இருக்கும்போது ஏர் பஸ்ஸைத் தேடிப் போனா அதிகமாத்தான் சொல்வான்! காரணம் அவன் வைக்குறது டிமாண்ட் பேஸிஸ் ரேட்!

    அதிக விலைன்னாலும் வாங்க ஆள் இருக்கும்போதுதான் மேன்மேலும் விலை ஏறுது!

    ReplyDelete
  7. I dont have time to argue :-((. Also I don't accept whatever you have said. Particularly regarding the Govt School teachers.

    Sorry for that...

    This is the last comment from my blog...

    மன்னிக்க வேண்டும் நண்பர்களே... வேலை பளுவினால் எதற்கும் பதிலளிக்க இயலவி்ல்லை...

    //எல்லத்தையும் அரசாங்கமே செய்யனுமின்னு சொல்லவில்லை..ஆனா செய்ய வேண்டிய சிலவற்றையாவது அது செய்ய வேண்டும்..இன்னும் சில நாடுகளிலே. சீ.ஈ.ஓ..சம்பளமும், கீழ் நிலைத் தொழிலாளியின் சம்பளத்தின் வித்தியாசம் , இத்தனைக்குள்ளே இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களாம்...இதெல்லாம் எதுக்கு...வலுத்துவன்..நல்லா இருக்கட்டும்..இல்லாதவன் வேடிக்கை பார்க்கட்டும் என்று இல்லீங்கோ....சமுதாயம் மொத்தமும் நல்ல இருக்கட்டும்..அடிப்படைத் தேவைகளுக்கு மக்கள் சிரமப்படக்கூடாது என்பத்றகாக தான்....//

    TBCDயின் கருத்தை ஒத்துப்போகிறேன்.

    மேலும் என் கருத்து இது தான். சம்பளத்தை குறைத்து சிறுநகரங்களில் தொழில்சாலைகள் துவங்க வேண்டும். எல்லாரும் சென்னைல இருக்கறதுக்கு பதிலா அதை பிரிச்சி சேலம், கோவை, திருச்சி, மதுரை இப்படி நிறைய ஊர்ல கம்பெனிகள் வர வேண்டும். வெளிநாட்ல இருந்து வர காசு Infra Structureக்கு பயன்பட வேண்டும் .

    அதைவிட்டு சாப்ட்வேர் இஞ்சினியருங்க செலவை குறைத்து அவர்கள் பேங் பேலன்ஸ் ஏறுவதில் எனக்கு எள்ளளவும் சம்மதமில்லை.

    சம்பளத்தை குறைத்தால் ஆடம்பர செலவை தானாக அவர்கள் குறைத்து தான் ஆகவேண்டும்... இது தான் என் பதிவின் சாரமும். புரிதலில் தவறிருந்தால் மன்னிக்கவும்.

    இதற்கு மேல் இங்கு நீங்கள் விவாதத்தை தொடரலாம். ஆனால் என்னால் பங்கு பெற முடியுமா என்று தெரியவில்லை. மன்னிக்கவும்...

    ReplyDelete
  8. விவாதம் பண்றீங்களா? வெட்டிகிட்டே இருந்து பதில் வராது.

    ReplyDelete
  9. இதுலே ஒரு சசராரை மட்டுமே குற்றம் சொல்வது சரிப்படாதுதான்!

    ஆனா விலைவாசியின் தாறுமாற ஏற்றத்திற்கு நாமும் ஒரு வகையில் பங்கு பெறுகிறோம் என்பதை மறுக்க முடியாது என்பதை ஒவ்வொரு துறையினரும் உணர வேண்டும்!

    ஆனா இன்னொன்னும் இருக்கு!

    ReplyDelete
  10. // "ஃபேட் மேன்" அதாவது "கொழுப்பு மனிதன்"ன்னு சொல்லலாம்.//
    ஹாஅஹாஅஹாஅ.. நல்லாயிருக்கு அபி அப்பா.. இனிமே நாங்கூட யாரையாவது திட்டனுமின்னா (ஃ)பேட் மேன் ன்னு பாராட்டற மாதிரி திட்டலாமில்ல...ஹிஹி...(ஆமா நீங்க சிலிம்மா இருக்குற தைரியமா?..ஹிஹி..)

    ReplyDelete
  11. இந்தியாவின் விலைவாசியை நிர்ணயிக்கும் சக்தியில் நானும் ஒரு பங்கு என நினைக்கும் பொழுது பெருமையாய் இருக்கிறது. (ஆமாம் இவரு பெரிய அம்பானின்னு பக்கத்தில் ஒரு குரல் கேட்குது)

    யோவ் எல்லாம் மேலெழுந்தவாரியா எழுதுங்க. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வரப் போறது இல்லை.

    ReplyDelete
  12. அண்ணே,

    பேசுவதற்கு நிறைய இருக்கு.... திரும்ப வாறேன்.... :)

    ReplyDelete
  13. தமிழ் சினிமா கெட்டது...கிளிஷே ஆகிப் போச்சு..இதைப் பத்தி எழுதுறது....

    சின்னக்கவுண்டரைத் தொடர்ந்து..
    கவுண்டர் வீட்டு பொண்ணு
    கவுண்டர் வீட்டு ஆடு
    கவுண்டர் வீட்டு மாடு
    கவுண்டர் கவுண்டர் தான்
    கவுண்டரம்மா
    நான் தான்டா கவுண்டர்ன்னு சினிமா எடுப்பாங்கலே..அதை கொஞ்ச காலம் பாக்க முடியாமலிருந்தது...

    இப்போ பதிவுலகிலே பாக்க முடியுது....


    வளர்க சிந்தனை வளம்...

    ReplyDelete
  14. இதை பற்றி நாம சாட்லாம்... இல்ல நேரில் பாக்கும் போது பேசலாம் :)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))