பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

May 30, 2009

அஞ்சாநெஞ்சன் அழகிரியின் தடாலடி ஆரம்பம்!!!



அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் மத்திய கேபினட் அமைச்சரானவுடன் இன்று தன் முதல் தடாலடியை துவக்கினார்.


சென்னையில் இருந்து 45 கல்லூரி மாணவர்கள் காஷ்மீரத்துக்கு கல்வி சுற்றுலா சென்று விட்டு விமானம் மூலமாக டெல்லி திரும்பினர். பின்னர் டெல்லி முதல் சென்னை செல்லும் விமானம், காஷ்மீர் விமானத்தின் தாமதத்தால் தவற விடப்பட்டது.


அதனால் மாணவர்கள் தங்கள் கையில் இருந்த பணத்தில் ரயில்வே டிக்கெட் பதிவு செய்து ரயில்வே நிலையம் செல்லும் முன் அந்த ரயிலும் தவற விடப்பட்டது. மாணவர்கள் திரும்பவும் விமான நிலையத்துக்கு வந்து தவித்து கொண்டிருந்தனர் கையில் பணமும் இல்லாமல்.


அப்போது முதல் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து டெல்லி வந்து இறங்கிய அஞ்சாநெஞ்சன் அவர்களின் நிலை கண்டு உடனே வாகனம் ஏற்பாடு செய்து அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைத்து விட்டு அமைச்சரவை கூட்டத்துக்கு சென்று விட்டார்.


பின்னர் கூட்டம் முடிந்ததும் ரயில்வே அமைச்சர் மம்தா அவர்களை தொடர்பு கொண்டு மாணவர்களின் நிலையை விளக்கி உதவி செய்ய கோரிக்கை வைக்க உடனே அவர்களும் ரயில்வே உயர் அதிகார்களை தொடர்பு கொண்டு மாணவர்களுக்காக தனி பெட்டி ஒன்றை ஏற்பாடு செய்தார்.


அதன் படி மாணவர்கள் தனி பெட்டியில் மாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து கொண்டு இருக்கின்றனர்.


அஞ்சாநெஞ்சன் மற்றும் மம்தாபானர்ஜி அவர்களுக்கு மிக்க நன்றி!


இது போன்ற தடாலடி நன்மைகள் அஞ்சாநெஞ்சனுக்கு புதிதல்ல. இதே வேகம் துறை சார்ந்தும் இருக்க வேண்டும். நிச்சயமாக இருக்கும்.

May 29, 2009

பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும்! (உரையாடல் சிறுகதை போட்டிக்கு)


நான் எப்போதுமே விடுமுறைக்கு இந்தியா போனா ஒரு சுற்று சொந்தபந்தங்களை பார்க்க அடுத்த நாளே கிளம்பி விடுவேன். அன்றைக்கும் அந்த முறையும் அப்படித்தான் எங்க ஊரில் இருந்து அருகாமை கிராமம் என் மாமா வீட்டுக்கு போய் கிட்டு இருக்கேன். அந்த ஊருக்கு எப்பவாவது ஒரு தடவை போகும் எட்டாம் நம்பரை நம்பாமல் சுந்தரபஞ்சாவடியிலே இறங்கி ஒரு கி.மீ நடந்துடலாம் என நினைத்து பஸ் ஏறிவிட்டேன். கொஞ்சம் அயற்சியாகவும் இருந்தது நடக்க வேண்டுமே என்று. எதாவது பேச்சு துணை கிடத்தால் நல்லா இருக்கும் என நினைத்து கொண்டேன்.


பஸ்ஸில் இருந்து இறங்கியதுமே குள்ள(ம்) மாமா கண்ணில் பட்டார். ஒரு துரு பிடித்த சைக்கிளை வாய்க்கால் பாலத்தில் சாத்திவிட்டு உட்காந்து சுருட்டு பிடிச்சு கிட்டு இருந்தார். மாமாவா அது, சின்ன வயசு மாமா அப்பவே சிக்ஸ் பேக் அதிபதி. அவர் சட்டை போட்டு நான் பார்த்தது கிடையாது. அது போல வேஷ்டியோ, இந்தோனேஷியா கைலியோ கட்டியிருந்தா கூட அதை மடித்து தான் கட்டியிருப்பார். இடுப்பில் பச்சை கலர் பாம்பே டையிங் மொத்த துணியால் மாரிமுத்து கிட்டே கொடுத்து பை எல்லாம் வைத்து ஜிப் எல்லாம் வைத்து ஒரு பெல்ட் கட்டியிருப்பார். எப்பவாவது டயர் செருப்பு போடுவார். தலையில் காசிதுண்டால் ஒரு முண்டாசு கண்டிப்பா இருக்கும். மபொசி மீசை தான் அவருக்கு தனி அழகு. முரட்டு தனமான குரல்.


ஆனால் இதோ நான் பார்க்கும் மாமா சிக்ஸ் பேக் எல்லாம் தொங்கி சுருங்கி போய், தலை வழுக்கை எல்லாம் விழுந்து பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு. அது கட்டை வண்டி ஓட்டும் அழகும், கோவணம், முண்டாசு என டூபீஸில் ஏர் பிடித்து உழுவதும், "எலேய் தட்டுவாணி மொவனே ஆட்டை அந்தண்ட ஓட்டிகிட்டு போடா" என்று தன் மகனையே திட்டுவதும் எனக்கு நியாபகம் வந்தது.


கிட்ட போய் "மாமா என்னை தெரியலையா"ன்னு கேட்டேன்.
கையை கண்ணுக்கு மேல வைத்து உற்று பார்த்து "அடடே மாப்ள எப்படா வந்த"ன்னு கேட்டு என்னை கட்டி பிடிச்சுகிட்டது. பைய கொண்டா சைக்கிள்ல மாட்டுவோம். ஜம்முன்னு பின்னால குந்து வூட்டுக்கு போவும்" என்றது.


"மாமா இது என்ன சைக்கிளா ரெண்டு பேரையும் தாங்குமா? ஏதோ மீன்காரன் சைக்கிள மாதிரி துருபுடிச்சு கிடக்கே"


"ஆமாடா மாப்ள, சின்னங்குடி பட்டணத்துகாரன் சம்முகம் பழரச கடேல அடவு வச்சிட்டு மூக்கு முட்ட குடிச்சிட்டு போனான். திரும்பி வரவேல்ல. நான் தான் எடுத்துகிட்டு சுத்துறண்டா சரி வா தள்ளி கிட்டே போவும், ஆமா பையிலே என்ன எனக்கு பாரின் சரக்கு கொண்டாந்தியா, எங்க நான் ஆசை ஆசையா கேட்டதே நீ இதுவர வாங்கியார்ல,சரக்கா கொண்டார போற, உன் மாமா மாமிக்கு எதுனா வாங்கியாந்திருப்ப, நான் பண்ண காரன் தான"


"நீ என்ன கேட்ட மாமா மறந்து போச்சுது"


" நீயும் சின்னசாமி அண்ணன் வூட்டு ஆடு புழுக்க போடுறது மாதிரி போயிட்டு போயிட்டு வர! நானும் சாவரத்துக்குள்ள சிங்கபூரு மொதல மார்க்கு பச்சை பெல்டு தானே கேக்குறேன் ஒவ்வோறு தாட்டியும், ஆமா நீ சிங்கபூர்ல தான இருக்க"


"இல்ல மாமா துபாய்"


"எல்லாம் பக்கம் பக்கமா"


சிரித்து கொண்டேன். "அடுத்தவாட்டி வாங்கியாறேன் மாமா ஆமா என்னாது மஞ்சு கொட்டா மூடியாச்சா"


"ஆமா செட்டிக்கு நஷ்டமா போச்சு, வூட்டா வூடுக்கு டிவி வந்துடுச்சு. எவன் வருவான், அதுக்குள்ள தான் சம்முகம் பழரசம் ஓட்டுறான். ஒரையும் கெடக்கும். ஒரைக்கி எல்லாம் எனக்கு ஏது காசு, ரசம் தான் நாலு ரூவாய்க்கு தருவான், ஒரு நாலு ரூவா தாயேன்"


"குடிக்க போறியா மாமா இந்த காலைலயே, இந்தா பத்து ரூவா"


"சரி சைக்கிள புடிச்சுக்க பத்து எண்ணங்காட்டிலும் வரேன்"


மாமா சந்தோஷமா ஓடிச்சு மஞ்சு கொட்டாய்க்குள். சொன்ன மாதிரியே சுருக்கா வந்துடுச்சு.


"எலே மாப்ளா இன்னும் ஒரு பத்து ரூவா தாயேன்"


"ஏன் மாமா இன்னும் குடிக்க போறியா வேண்டாம் விடு"


"இப்படா தோ பட்டணத்தி வந்துட்டா ஒனக்கு தான் மீனு கொழம்பு புடிக்குமே அவ கிட்ட ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா பொடி வாங்கிட்டு வாரேன். போம்போதே வாங்கிட்டு போயிட்டா உன் மாமி சீக்கிரமா சமச்சுடும்"
சரி என்று கொடுத்தேன்.


"எலே முண்டச்சி ஒரு பத்து ரூவாய்க்கு பொருவா போடு"


"ந்தா முண்டச்சின்னா மூஞ்சில குத்துவேன். இந்தா இந்த பேப்பரை புடி"
மாமா தினந்தந்தியின் கிழிந்த பேப்பர் துண்டை பிரிச்சு புடிச்சு அவ கிட்ட மீனை வாங்கி பிசிறு எல்லாம் வாங்கி சண்டை போட்டு அவ கிட்ட திட்டு வாங்கிகிட்டே வந்தது.


கர்ணம் பிள்ளை வீடு தாண்டும் போது "மாப்ள புள்ள போய் சேந்தாச்சு தெரியுமா" என சொல்லிவிட்டு ஊர்ல யார் யார் பாலிடாயர் காதிலே ஊத்திகிட்டு செத்தாங்க, தூக்கு லிஸ்ட் ஆளுங்க எல்லாம் யார், ஊரை விட்டு ஓடி போன பொண்ணுங்க எல்லாம் சொல்லிகிட்டே வந்துச்சு. கடைசியா "மாப்ள என் மொவ கூட ஓடிட்டா. ராமூர்த்தி மொவனை இழுத்துகிட்டு. இப்ப கோமல்ல குடியிருக்கா"


"என்ன மாமா இப்படி சொல்ற" கொஞ்சம் அதிர்ச்சியா கேட்டேன்.
"ஆமா என்னாத்த செய்ய, அதுக்காக நான் நாண்டுகிட்டா சாவ முடியும், விடு மாப்ள, தோ வூடு வந்துடுச்சு, போனா பண்ணிட்டு வந்த உன் மாமி வாசல்லயே நிக்குது பாரு"


மாமியை பார்த்து குசலம் எல்லாம் விசாரிச்சு முடிச்சு உள்ளே போனோம்.
மாமாவும் உள்ளே வர "ந்தா பாரு உள்ள வந்தா காலை வெட்டிபுடுவேன். குடிச்சா இந்த பக்கம் வர கூடாதுன்னு உன் தம்பி (என் தாய்மாமா) கராரா சொல்லிபுட்டாங்க ஓடிடு"


"இரு தங்கச்சி மாப்ள பேக்குல என்னவாது வச்சிருப்பான் திங்க வாங்கி தின்னுட்டு ஓடுறேன்"


நான் மாமிகிட்ட "இருங்க மாமி ஒரு விஷயம் இருக்கு மாமா நீ உள்ள வா"
மாமா முற்றத்து கட்டையிலே உட்காந்துகிச்சு. பேக்கை மெதுவா திறந்து மாமா, மாமி, பசங்க எல்லோருக்கும் அவங்க அவங்களுக்கு வாங்கி வந்ததை கொடுத்துட்டு இருக்கும் போதே மாமா " மாப்ள அடுத்த வாட்டி கண்டிப்பா பச்ச பெல்ட்டு வாங்கி வாடா" என சொன்னது.


உடனே என் மாமி கையிலே ஒரு பொட்டலத்தை கொடுத்து "மாமி இதை சாமி வீட்டுல வச்சி எடுத்து வாங்க" என்றேன். மாமிக்கு அது என்னான்னு புரிஞ்சுடுச்சு.


மாமி சாமிரூம் பிள்ளையார் கிட்ட வத்து அதிலே ஒரு ரூபாய் காசு வைத்து எடுத்து கொண்டு வந்து கொடுத்தாங்க குள்ள(ம்)மாமா கையிலே.
அப்போது அவர் முகம் பார்க்கனுமே. இப்பவும் என் மனசிலே இருக்கு. வாங்கி கிட்டு தேம்பி தேம்பி அழ ஆரம்பிச்சுட்டார்.


"இதை கட்டாமலே செத்துடுவனோன்னு நெனைச்சேன் மாப்ள" அப்ப்டீன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்.
"தங்கச்சி தம்பியோட வேஷ்டி எதுனா இருந்தா குடு. புது பெல்டுக்கு கொஞ்சம் தொவச்ச வேட்டியா கட்டிகிட்டா நல்லா இருக்கும் தங்கச்சி"
மாமி உள்ளே போய் மாமாவின் சலவை வேஷ்டி ஒன்றை எடுத்து வந்து கொடுத்தாங்க.


"வேஷ்டியயும், பெல்ட்டையும் எடுத்து கிட்டு கொல்லை புறம் போய் தட தடன்னு கிணற்றில் இருந்து தண்ணிய எடுத்து தலையிலே ஊத்தி கிட்டு தன் பழைய வேஷ்டியால் துடைத்து கொண்டு அதே ஈர கோவணத்தோட அதன் மேலேயே இந்த புது பெல்ட்டை கட்டிகிட்டு வேஷ்டிய மடிச்சு கட்டிகிட்டு பசுமாட்டு நெற்றியிலே இருந்த குங்குமத்தை எடுத்து வச்சிகிட்டு தன் தலை முண்டாசு கட்டிகிட்டு உள்ளே வந்து "தங்கச்சி கொஞ்சம் துண்ணூறு குடு"ன்னு கேட்டு வாங்கிகிட்டு பக்தி பழமா ஆகிட்டாரு.


அதுக்குள்ள மாமி மீன் குழம்பு வைத்து சூடா சாதம் எடுத்து வந்துட்டாங்க. "அண்ணே போய் உனக்கு மாத்திரம் ஒரு இலை அறுத்துகிட்டு வா, தம்பி என் கூட சாப்பிடும்" அப்படின்னு சொல்ல ஓடி போய் அறுத்து வந்தார். அழகா சாப்பிட்டார்.


"மாப்ள உன் கிட்ட தனியா ஒரு சேதி பேசனும்டா"ன்னு சொல்ல நானும் அவர் கூட கொல்லைக்கு போனேன்.
"ஒரு அம்பது ரூவா கொடேன்"
சிரித்து கொண்டே கொடுத்தேன். "தங்கச்சிகிட்ட இதை சொல்லாதடா" என்றது.
தெருவின் உள்ளே சவுண்டு விட்டுகிட்டே போச்சு.


பின்ன மாமா ஆபீஸ்ல இருந்து வரும் வரை இருந்து பேசிகிட்டே இருந்த போது கடைசி பஸ் போயிடுச்சு. சரி காலை போகலாம் என படுத்து விட்டேன்.


மாமி காலை என்னை அவசர அவசரமா எழுப்பினாங்க. "தம்பி இங்க வந்து இந்த கூத்தை பாரு"


"என்ன மாமி?"


"குள்ளண்ணன் பழரச கடையிலே நேத்து மதியம் வரை குடிச்சுட்டு ராத்திரி அங்கயே விழுந்து கிடந்திருக்கு. எவனோ புது வேட்டிய உருவிகிட்டு போயிட்டான். பெல்ட்டை மாத்திரம் கெட்டியா புடிச்சு கிட்டு தூங்கி இருக்கு. ராத்திரி வரலையேன்னு சாந்தி தேடிகிட்டு போயிருக்கா. இப்ப இழுத்து கிட்டு வரா வெளியே வந்து பாரேன்"


வெளியே வந்து பார்த்தேன். சிரிப்பும் வேதனையுமா போச்சு.


தலையில் முண்டாசு. கீழே கோவணம். ஆனா பெல்ட்டு.
"ஏன் சாந்திக்கா அது தான் குடிச்சு இருக்கு. ஒனக்கு அறிவு எங்க போச்சு புத்தி. அந்த துண்டை எடுத்து இடுப்பிலே கட்டி கூட்டி வந்திருக்க கூடாதா அதுக்கு தான் அறிவு இல்லை மானத்தை விட பெல்ட்டு முக்கியமா போச்சு, உனக்குமா?"ன்னு கேட்டுட்டு உள்ளே வந்துட்டேன்.
பின்னே ஊருக்கு வந்துட்டேன்.


ஒரு நாலு மாசம் கழிச்சு ஒரு தடவை என் மாமிக்கு போன் செஞ்சு சாதாரணமா பேசினாங்க மாமி!
எல்லா விஷயத்தையும் பேசிட்டு "குள்ள(ம்)மாமா எப்படி இருக்கார்?
"நீ வாங்கி கொடுத்த பெல்ட்டோட இருக்கார்"
அத்தோட அதை விட்டுட்டேன்.


அதன் பின்னே நாலு மாசம் கழிச்சு போனப்ப மாமிகிட்ட கேட்டேன்.


"மாமி எங்க குள்ள(ம்)மாமாவை காணுமே"


"அதுவா தம்பி" மாமி சொல்ல ஆரம்பிச்சாங்க!


நான் போன தடவை போன பின்ன கிரமத்திலே ஜாதி கலவரம் வந்துச்சாம்!
அய்யப்பன் தான் பேசினாராம்!
"இனி ஜாதி இந்துக்கள் பொணத்தை எங்க ஜாதி காரங்க எரிக்கவோ புதைக்கவோ மாட்டாங்க"


பஞ்சாயத்தே பயந்து போச்சாம்!


குள்ள(ம்) மாமா தான் "சரிடா நீங்க சொல்றதிலயும் நாயம் இருக்கு, நானும் உங்களோட ஒன்னடி மண்னடியா இருந்துட்டேன். அதுக்காக பொணத்தை அழுக விட முடியுமா? நானே வெட்டியான் வேலையும் பார்க்கிறேன். பின்ன சண்டை எல்லாம் முடிஞ்ச பின்ன பார்த்துக்கலாம்" அப்படின்னு திடீர் அறிவிப்பு கொடுத்துட்டார்.


அதிலிருந்து நாலு மாசமா அவருதான் பிணம் எரிப்பது புதைப்பதுன்னு பார்த்து கிட்டு இருந்திருக்கார்.


திடீர்ன்னு ஒரு மழை நாளில் பழனியப்பன் ஆத்தா கண்ணாம்பா அக்கா (அதுக்கு ஆச்சு 80) செத்து போச்சு. உடனே ஊரை கூட்டி குள்ள மாமாவை கூட்டியார மாமா தன் பொண்டாட்டி வச்சிருந்த காஞ்ச ராட்டி எல்லாம் எடுத்துகிட்டு வீர சோழன் ஆத்து கரைக்கு போயிடுச்சு!


இத்தனை மழையிலே பொணம் வேகுமோ வேகாம காக்காய் கழுகு கொத்தி திங்குமோன்னு கவலையிலே இருந்த பழனியப்பனுக்கு நிம்மதியா போச்சு. ஆத்தாவை கொண்டு வச்சுட்டு ரெண்டு கிலோ ஜீனியும் (பிணம் நல்லா வேகணும் என்பதால் செவ்வா புள்ளயாருக்கு வச்சிருந்த ரெண்டு ரெண்டு விறகையும் எல்லா தெரு பொம்பளையும் கொடுக்க குள்ள மாமா நல்ல பழரசம் குடிச்சிட்டு ஒரே அழுகை!


"டேய் பார்த்து குளிங்கடா வீரசோழன் ஆத்துல நான் காணாத வெள்ளம் இன்னிக்கு" இது மாமா!


"மாமா இது வெள்ளம் இல்ல கடக்கம் சட்ரஸ் போட்டிருக்காங்க, அதனால தேக்க தண்ணி" இது பழனியப்பன் மொவன்!


மாமா ஜீனியெல்லாம் போட்டு ஆத்தாவை நல்லா வேக வச்சுட்டு பழனியப்பன் கிட்ட காசும் வாங்கிட்டு அந்த ஆத்து ஓர 'ஒரை" சரக்குக்கு போயிட்ட பின்ன ஊர் பெரிய மனுசன் எல்லாம் "குள்ளம் பய நமக்கு ஒரு கையிதான்" அப்படீன்னு பீத்திகிட்டு போயிட்டாங்க.


அடுத்த நாள் மாமி வீட்டுக்கு ராட்டி தட்ட வந்த சாந்தியக்கா" யக்கா மாமா நேத்து முதலே காணும்க்கா பசி தாங்காது, நீ எதுனா சோறு போட்டியா, வந்துச்சா என்ன இங்க?"


"இல்லடி சாந்தி நம்ம பனியடியிலே அண்டை வெட்டனும் குள்ளண்ண வந்தா மூணு மம்புட்டியும் அது கூட சுந்தரேசன்ன, கோவிந்து கூட்டி கிட்டு போவ சொன்னாங்க, கூடவே இது கையிலே காசு கொடுக்காத சாந்தி கையில டீக்கு இனிப்பு போண்டாக்கு குடுன்னு அத்தான் சொன்னங்க! குள்ளண்ணனை அன்னினிக்கே எல்லாரும் விட்டுட்டு வந்தாச்சு நல்ல மழை அப்படீன்னு"


"போக்கா பழனி அண்ணே நல்ல காசு கொடுத்து இருக்கும் போல இருக்கு அதான் பழரசம் குடிச்சுகிட்டே இருக்கோ என்னவோ"


"நீ போய் பார்த்து மொத்தி இழுத்துட்டுவா, நான் சமைச்சு வைக்கிறேன், அது சூடா இருந்தா பிரியமா கொட்டிக்கும்"


"சரிக்கா"


போச்சு சாந்தி வரவேயில்லை. ரெண்டு நாள் ஆச்சு!


"யக்கா யக்கா யக்கா ஊரெல்லாம் என்னவோ பேசிகிறாங்கக்கா"


"என்னடி சாந்தி என்ன சொல்றே"


"கடக்கம் சட்ரஸ்ல ஒரு பொணம் கெடக்காம் அது என் மாமாவாம்"


"இருடீ, ஒரு போன் பண்ணிக்குறேன்"


"என்னங்க ஒரு பொணம் கிடக்காம் கடக்கம் சட்ரஸ்ல! இன்னிக்கு சட்ரஸ் திறந்து விடும் நேரம் இது! நீங்க உடனே தாசில்தார் சம்முகசுந்தரம் கிட்ட சொல்லி அதை திறக்க வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு பெரம்பூர் போலீஸ் கிட்ட ஒரு வார்த்தையும் சொல்லிட்டு ஓடியாங்க அனேகமா குள்ளண்ணனா இருக்கும், நான் அங்க போறேன் நீங்க நம்ம ஊர் வர வேண்டாம் கடக்கத்துக்கு வந்துடுங்க"


எல்லாம் முடிஞ்சுது!


ஊரே திரண்டு அங்க போயாச்சு!
குள்ளம்மாமாவின் உடல் போல இல்லை அது! ரெண்டு நாள் உப்பின உருவம். கண் எல்லாம் மீன் தின்னுடுச்சு. ஒரு பச்சை பெல்டுக்கு அந்த புறமும் இந்த புறமும் வீங்கி போயிருக்க அந்த இறுக்கி கட்டிய பெல்ட் தான் எல்லாருக்கும் அடையாளமா போகிடுச்சு!


ஒரு அலக்கை கொண்டு வந்து பிணத்தை இழுக்க ஒரே நாத்தம். கரையிலேயே கிடக்கு பிணம். மாமாதான் அதுன்னு ஊர் மக்கள் சொல்லியாச்சு!கரையிலே கூட இல்லை கரை தண்ணியில் கிடக்கு.
ஊர் நாட்டாமை எல்லாம் பிணத்தின் நாத்தம் தாங்காம "சரி சரி தாசில்தார் வருவாரு சட்ரஸ் திறக்க போறாங்க, நம்ம கூட ஒன்னடி மண்ணடியா வாழ்ந்த குள்ளன் இப்ப கங்கையிலே போன மாதிரி புண்ணியமா போகட்டும்"
இதை கேட்டு கிட்டு இருந்த எல்லா தலித் மக்களும் ஓடிவந்து "போய்யா போய்யா நீயும் உன் சாதியும்! நாங்க அடக்கம் பண்றோம் குள்ளன் அண்ணனை! என் கூட உழவு செஞ்சான், என் கூட அறுப்பு அறுத்தான், என் கூட ரசம் சாப்பிட்டான். எங்க பிரச்சனைக்காக உங்க கூட சேர்ந்து வெட்டியான் வேலை பார்த்தான். நாங்க தூக்கி வந்து புதைச்சிகிறோம்" அப்படின்னு ஓடி வந்தாங்க!


தூக்கி வந்து குழி தோண்டி புதைக்கும் போது "எலேய் எது எது எப்படி எப்படி இருக்குதோ அப்படியே புதைங்க, முக்கியமா அந்த பச்சை பெல்ட்டு! இது ஏதோ ஒரு சாதீய பெருசு! காறி துப்பிட்டு அவங்க புதைசாங்க குள்ள(ம்)மாமாவை!


மாமி எல்லாம் சொல்லி முடித்த போது நான் அழுது முடித்திருந்தேன்!

May 23, 2009

பத்துமா மாமா vs அபிஅப்பா!

கோடை விடுமுறை வந்துட்டாலே நாங்க பரம்பரை பரம்பரையா போகும் இடம் மாயவரத்தில் இருந்து 9 கிமீ தூரத்தில் இருக்கும் எங்க அம்மாவின் கிராமம் தான். அது என்ன பரம்பரை பில்டப்பா? நான் போய்கிட்டு இருந்தேன். இப்ப நட்டுவும் போக ஆரம்பிச்சாச்சு அதனாலத்தான்.

அங்க கோழிபெட்டி ரிப்பேர், மாட்டை காளை போட மங்கைநல்லூர் அழைத்து போதல், புளியம் பழம் உலுக்குதல், நெல் அவித்தல், கொண்டு போய் முதலியார் மில்லில் கியூவில் நின்னு அரைத்து வருதல், மரத்தில் இருக்கும் மாங்காய்க்கு பிலாஸ்டிக் பை கட்டுதல், கீழே விழுந்த வாழை மரத்தின் இலைகளை நறுக்கி காயவைத்து சருகாக்கி ஐம்பது ஐம்பதா கட்டி வைத்தல், குடாப்பு போட்டு ஊதி ஊதி வாழைத்தார் பழுக்க வைத்தல், அணிலுக்கு மிச்சம் வைக்காமல் கொய்யா பிஞ்சு முதல் துவம்சம் செய்தல் இப்படி

எல்லாவகை மிலிட்டரி ட்ரெய்னிங்கும் கொடுக்கப்படும் எங்க மாமாவால்.
அதிலும் வயல் வேலைன்னா ரொம்ப கொண்டாட்டம் தான். காரணம் அங்க கிடைக்கும் இனிப்பு போண்டாவும் டீயும் தான். தவிர அம்மா களத்துக்கு வந்தா நடவு நட்டுகிட்டு இருக்கும் அத்தனை பொம்பளை ஆளுங்களும் "தங்கச்சி தங்க்சச்சி"ன்னு ஓடி வருவது பார்க்க பெருமையா இருக்கும். என்னவோ தெரியலை அந்த கிராமத்துக்கே அம்மா "தங்கச்சி" தான். அப்பா "மாப்பிள்ளை" தான்.

இப்ப பொறந்த வாண்டு எல்லாம் கூட அங்க அம்மா அப்பாவை "தங்கச்சி ஆத்தா, மாப்ள தாத்தா"ன்னு தான் கூப்பிடுதுங்க. அது போல நான் பெரிய தம்பி, என தம்பி சின்ன தம்பி. வாங்க பெரியதம்பி அண்ணன் அப்படின்னு கோவிந்த ராசு மொவன் கூப்பிடும் போது "என்னடா முறை இது பேசாம அண்ணன் அப்படிக்கு சொல்லுவேன். அப்படி ஒரு பாசமான கிராமம்.

எனக்கு அங்க எல்லாமே பிடிக்கும் . ஆனா என்னை கண்டாலே பிடிக்காத ஒரு ஆத்துமான்னா அது பத்துமா மாமா தான். அவர் பேர் பத்மநாதன். எல்லோரும் பத்துமா அண்ணன் என்றே சொல்லுவாங்க. நானோ ரெட்டை வால் ரங்குடு. அதனாலேயே அவருக்கு என்னை கண்டால் பிடிக்காது. அவர் மகன் நடராஜன் என் தோஸ்த். ராஜாமனி வாத்தியார் மொவன் பிரகாஷ் நான் நடராஜன், மடப்பள்ளி அய்யரு மொவன் கணேசன் எல்லாம் சேர்த்தா அந்த தெருவே அதகளம் தான்.
\
எல்லாரையும் விட்டுடுவாரு பத்துமா மாமா , என்னை மட்டும் புடிச்சு தொங்கி கிட்டு இருப்பாரு. அவர். அவர் பக்கத்து வீடு. நான் நின்னா குத்தம் உட்காந்தா குத்தம். அதிலயும் நான் தெருவிலே கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சா ஈசி சேர் போட்டு அவர் வீட்டு வாசலில் உட்காந்துப்பார். எனக்கு சோதனையா சிக்சர் அவர் கிட்ட தான் போகும். எங்க கிரிக்கெட் ரூல் படி பந்து விக்கெட்க்கு வரும் வரை ஓடலாம். அதாவது அவர் கிட்ட போனா பந்தை பிடிச்சுப்பார் தர மாட்டார். நான் அதுக்குள்ள 34 ரன் ஓடி ஓடி எடுத்துடுவேன். மத்த பசங்க எல்லாம் பந்தை கெஞ்சி கெஞ்சி வாங்கிட்டு வரும் முன்னே நான் தேவையான ரன் எடுத்துடுவேன்.

நானும் அவரை என் எதிரியாகவே பார்க்க ஆரம்பிச்சாச்சு. அவர் மனைவி ஒரு நாள் கிளியனூர் ராவுத்தர் கிட்ட நாட்டு கோழி முட்டை கொடுத்து விட்டு ச்சவ் சவ் காய் வாங்கி கிட்டு இருந்தாங்க. இவரோ ஈசி சேர்ல ஹாயா படுத்து கிட்டு இருந்தார். நான் அவர் மேலத்தான் செம கடுப்பா இருந்தனா, உடனே "பத்துமா"ன்னு ஒரு கத்து கத்தினேன். அவருக்கு சரியான கோவம். தன்னை இந்த அகராதி புடிச்சது பேர் சொல்லி கூப்பிடுதேன்னு. நேரா என் அம்மா கிட்ட வந்துடுச்சு.
\
"சுலோச்சனா தங்கச்சி சுலோச்சனா தங்கச்சி"

"வாண்ணே என்ன இத்தனை கோவமா வரே, கருப்புட்டி காப்பி குடிக்கிறியா"

"அதல்லாம் வேண்டாம் நீ என்ன புள்ளையா பெத்துருக்க அகராதியா இருக்கு அது"


'அய்யோ என்னண்ணே செஞ்சான்?"

"என்னை பார்த்து 'பத்துமா'ன்னு கத்துது"

அம்மாவுக்கு நக்கல் ஜாஸ்தி! என்னை கூப்பிட்டு "ராஸ்கோல் கெட்ட வார்த்தை பேசகூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது"ன்னு திட்டி என் வாயிலேயே போட்டாங்க!

அத்தோட அவர் வெளிறி போய் போயிட்டார்.
பின்ன அம்மா கேட்டுச்சு "ஏண்டா பத்துமான்னு சொன்ன" ன்னு ! நான் சொன்னேன் இல்லை ச்சவ் சவ் வாங்கிச்சு கமலா அத்தை. ராவுத்தர் 3 தான் கொடுத்தார். அதான் பத்துமான்னு கேட்டேன் இவருக்கு கோவம் வந்துடுச்சு அப்படின்னு சொல்ல அம்மாவுக்கு சிரிப்பு வந்துடுச்சு. நீ பொழைச்சுப்படா அப்படின்னு சொல்லுச்சு!

எங்க வீட்டில் இருந்து நாலு வீடு தள்ளி ரோட்டில் இருக்கு சொசைட்டி!அதாவது கூட்டுறவு வங்கி. உரம் ரேஷன் பொருள் எல்லாம் கிடைக்கும் இடம். அதன் வாசலில் ஒரு கொட்டகை போட்டு தலையாரி (security) ராத்திரியில் படுத்துப்பார்.

ஆனா அந்த கொட்டகை பகலில் எங்க பாசறை. "கட்ட மொதலி பொண்ணுக்கு எப்படிடா தொடை வரை முடி இருக்கு"ன்னு நடராஜன் கேட்கும் போது நான் அதிர்ந்து போவேன். இப்படி பட்ட காலிப்பயலா இருக்கானேன்னு. இப்படி பல விஷயம் பேசுவோம்.

அப்படியாக ஒரு நாள் வேற யாரும் இல்லாததால் நானும் நடராசனும் பேசிகிட்டு இருந்த போது அந்த தலையாரி கீத்தில் சொறுகி இருந்த சுருட்டு நடராசன் கண்ணில் பட்டது தான் தப்பு. அங்கயே தீப்பெட்டியும் இருந்ததால் எடுத்து பத்த வச்சான்,. ஒரு இழுப்பு இழுக்கும் போதே ஒரே இருமல். பின்ன நான் இழுத்து இருமிகிட்டே ஓடி வந்துட்டேன். எனக்கு தான் ரகசியம் வாயில் தங்காதே!

அடுத்த அரை மணியில் செக்ரட்டரி வந்தாச்சு, முதலில் கூப்பிட பட்டது நான், பிரகாசு, நடராசன்........உள்ளே போய் இருக்கோம். ஏதோ ஒரு ஊர் பெரிய மனுசன் " அட பத்துமா வந்தா என்ன ஆகும் தெரியுமா??ன்னு கேட்க எனக்கு குலை நடுங்கிடுச்சு! பத்துமா மாமா தலையில் முண்டாசு கூட அரிவாள் வச்சிருப்பார். சரி ஒரு கொலை பார்க்க ஆண்டவன் விதிச்சுட்டன் அப்படீன்னு நினைச்சு கிட்டு இருந்தப்ப அதே போஸ்ல வந்தார். ஊர் செனமே கூடி இருக்கு. மாமா ஸ்டாண்டு எல்லாம் போடலை. தலையில் இருந்த அருவா கைக்கு வந்தாச்சு. நாங்க 3 பேரும் உச்சா போயாச்சு.

வெளியே மாமா வந்தாச்சு! நாங்க 3 பேரும் கம்பீரமா வந்தோம். செக்ரட்டரி தலையை தொங்க போட்டுகிட்டு வெளியே வந்தார். ஊர் சனங்களை பார்த்து "போங்க போங்க எல்லாம் நல்ல படியா முடிஞ்சுது" அப்படின்னு சொல்றார்.
நான் வெளியே வந்து "டேய் பத்துமா" ன்னு சொன்னேன்,
அதுக்கு அவரு "தம்பி நீ எப்படி வேணா சொல்லு ஏன்னா நீ என் தங்கச்சி மொவண்டா"


அங்க என்னா நடந்துச்சுன்னா அவர் உள்ளே அரிவாள் சகிதமா வந்தாலும் கதவை ஓங்கி அடிச்சு மூடியும் தலையில் கட்டிய துண்டை எடுத்து இடுப்பில் கட்டி '" அய்யா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்னு சொல்லி படார்ன்னு கால்ல விழுந்தாரு".

இது ஊர் சனங்களுக்கு தெரியாது. நான் தான் ரகசியம் காப்போனாச்சே அம்மா கிட்ட வந்து சொன்னேன்! அம்மா சொன்னுச்சு"டேய் அவர் உன்னை திட்டும் போது எல்லாம் செக்ரட்டரி - கால் " அப்படின்னு சொல்லு " அம்மான்னா அம்மா தான்!
பின்ன என்ன என் சிக்சர் தான் அவர் வீட்டு வாசல்ல!
இதல்லாம் எதுக்கு சொல்றேன்!
\
"என்னங்க நான் நேத்து கேடை விடுமுறைக்காக உங்க அம்மா வீட்டுக்கு போனேன்"
"அதுக்கு அதுக்கு என்ன?"
"''அங்க பத்துமா மாமா நம்ப நட்டுவை திட்டிகிட்டே இருக்கார்"
"நோ பிராப்ளம்! நீ மாமிகிட்ட கேளு அவக்க கிட்ட கேளு என் பார்முலா சொல்லுவாங்க தம்பிகிட்ட சொல்லி கொடு"

பத்துமா மாமா திருந்த மாட்டாரா?

May 19, 2009

அன்புள்ள டாக்டர் அய்யா கலைஞர் அவர்களே!!!

அன்புள்ள டாக்டர் அய்யா கலைஞர் அவர்களே!

நான் கடைமட்ட தோழன் தொல்காப்பியன் பேசுகிறேன்! நானும் ராமர் பாலம் கட்டிய போது உதவிய அணில் மாதிரி சின்ன சின்ன உதவி செய்தவன் தான். அதனால் எனக்காக நீங்க என் முதுகிலே 3 கோடு கூட போட வேண்டாம். இரண்டு கோடு போட்டா கூட போதும்.

1. முதலில் "திருமா" என்னும் இளைஞன் நீங்கள் வற்புறுத்தியும் கூட இயக்கம் காரணமாக தன்னை இழந்த திருமணமாகாதவன். ஆனால் இப்போதைக்கு அவருக்கு நீங்க வெளியுறவுதுறை வாங்கி தந்தால் சந்தோஷபடுவேன். நான் மட்டுமல்ல அகில உலக தமிழுலகமும். பிரணாப் முகர்ஜி முட்டுகட்டை போடுவார் என நீங்க சொன்னா கூட அட்லீஸ்ட் அந்த துறை ராஜாங்க அமைச்சரா ஆக்க உங்களால் முடியும்.

அப்படி செய்தால் என்ன நடந்து கிழிந்து விடும் என கேட்பவர்களுக்கு!

1.ஈழத்தில் வாழும் எம் குலத்தினருக்கு குறைந்தபட்சம் 10 தொழிற்சாலையாவது உண்டாக்கி தருவார், அவர்கள் பிழைக்க வழிவகை செய்வார்.
2. அனைவ்வருக்கும் முதலில் மருத்துவ வசதி செய்வார்!
3.முக்கியமாக பார்லிமெண்டில் குரல் கொடுப்பார்

அடுத்தது!

திரு அப்துல் ரஹ்மான்!

இவர் பெரிய பொருளாதாரமேதை என்பதை துபாய் அறியும்!
இவர் துபாய் இஸ்லாமிக் பேங்கின் தலைவர் 2 மாதம் முன்னர் வரை.
எல்லா பேங்கும் ஊத்திகிட்ட பின்னவும் இவர் பேங் நல்லா இருந்துச்சுன்னா இவர் தான் காரணம். இவர் எம் பி எலக்ஷன்ல நிக்க போவது தெரிஞ்சு கவர்மெண்ட்டே அவரை கெஞ்சி கேட்டது. போக கூடாதுன்னு.

அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மந்திரி பதவி வாங்கி கொடுத்தால் இந்த ரிஸசன் பீரிய்யட் இந்தியாவில் இருந்து விரட்டப்படும் என்பது நிச்சயம்.

செய்வீர்களா அய்யா!

அன்புடன்
அபிஅப்பா

May 16, 2009

மருத்துவர் அய்யாவுக்கு ஒரு வழி சொல்லுங்க!

தேர்தல் தொகுதி பங்கீட்டின் போதே மருத்துவர் அய்யா ஏழு தொகுதியும் தன் அன்பு மொவன் அன்புமணிக்கு வரும் ராஜ்யசபா சீட்டும் வாங்கிகிட்டு வந்தாரு நியாபகம் இருக்கா?

இப்ப எப்படி போய் தோட்டத்துல அந்த ராஜ்யசபா சீட்டை கேட்பாருன்னு அய்யாவுக்கு ஐடியா சொல்லி பின்னூட்டம் போடுங்கப்பா. சிறந்த பின்னூட்டத்துக்கு மருத்துவர் அய்யாவே பரிசு கொடுப்பார். அப்படி போய் சீட்டு கேட்கும் போது அம்மாவின் ரியாக்ஷன் என்ன என்பதையும் அப்படியே சொல்லுங்கப்பூ!

May 13, 2009

என் ஜனநாயக கடமையை நல்லா ஆத்திட்டாங்க!!!

நான் அபிஅம்மா கிட்ட சொன்னேன். நான் முடிந்த வரை வர்ரேன். அப்படி வராட்டி நீ நேரா போய் முதல் ஆளா ஓட்டு போடு அப்படீன்னு!

"சரி போடுறேன் ஆனா ஓ.எஸ். மணியனுக்கு தான் போடுவேன்"

"அய்யோ என்ன கொடுமை இது"

"பின்ன ஊரிலே இருக்கும் எல்லாருக்கும் போன், லெட்டர்னு உங்க பிரச்சாரம் சூடா இருக்கு, கட்டின பொண்டாட்டிக்கு லெட்டர் போட நினைப்பு இல்லை"

"அய்யோ அய்யோ அதை எல்லாம் விடு இன்னிக்கு 137 பக்க லெட்டர் எழுது அனுப்பறேன். ஆனா கை சின்னத்துக்கு ஓட்டு போடு"

"அப்ப சரி"

எங்க பூத் அவ்வையார் பள்ளி தான். இப்ப தான் அந்த பள்ளியேஇல்லியே அதனால ஆரியபாலா பள்ளிக்கு மாறிடுச்சு! எனக்கு வினவு தெரிஞ்ச நாள் முதலே என் அப்பா தான் எங்க பூத்திலே முதல் ஓட்டு போடுவாங்க. அன்றைக்கு மட்டும் சித்தப்பாவின் கருப்பு சிவப்பு வேஷ்டி கட்டிகிட்டு போவாங்க. சித்தப்பா தான் பூத் பந்தலில் இருக்கும். அப்பா சைக்கிளை கொண்டு வந்து நிப்பாட்டியதும் பந்தலில் இருக்கும் சித்தப்பா நைசா நழுவ பார்க்கும்.

"டேய் எங்க போற புள்ள கடையிலெ பசங்களுக்கு மல்லி காப்பி சொல்லு" அப்பாடா எப்பவும் திட்டும் அண்ணன் இன்னிக்காவது திட்டாம விட்டுச்சே அப்படின்னு சித்தப்பா ஓடி போய் மல்லி காப்பிசொல்லும்.

அப்பா என்னை சித்தப்பாவிடம் விட்டு விட்டு முதல் ஓட்டு போடும் கம்பீரத்துடன் போகும் காட்சி இப்பவும் என் கண் முன்னே இருக்கு.

நான் சித்தப்பாவிடம் கேட்ப்பேன். "நான் எப்ப ஓட்டு போடுவது"

"நீயும் என்னை மாதிரி வேஷ்டி எல்லாம் கட்டிகிட்ட பின்ன போடலாம் சரியா"

"சரி சித்தப்பா உன் வேஷ்டி எடுத்து வந்து புருஷோத்தமன் அண்ணன் கிட்ட கொடுத்து கிழிச்சு சின்னதா ஆக்கி அதிலே கருப்புசிவப்பு பார்டர் வைச்சு இன்னிக்கே ஓட்டு போடவா"

"இல்லடா தம்பி, இதே உணர்வோட நீ 100 வயசு வாழும் வரை நம்ம பரம்பரை பரம்பரைக்கும் நம்ம கட்சிக்கு ஓட்டு போட தான் போற"

இதோ நான் இல்லாத முதல் தேர்தல். நான் நல்லாஅ சொல்லியிருந்தேன் அபிஅம்மா கிட்ட, நான் வராட்டி 13483 ஓட்டு நம்பர் யாரும் போட கூடாதுன்னு ஆண்கள் பூத்திலே போய்சொல்லிடுன்னு.

காலை ஏழு மணிக்கே கிளம்பி நான் பெத்த மகராசனை தூக்கிகிட்டு அபியையும் அழைச்சுகிட்டு அபிஅம்மா போயாச்சு பூத்துக்கு. போகும் முன்னே அபி ஓடி போய் தன் உண்டியலை உடைத்து காசு எடுத்துகிட்டாளாம்.

அபிஅம்மா பூத் பந்தலை அடைந்தவுடன் எல்லோரும் "நீ தம்பியை கொடுத்துட்டு போம்மா, அபி வா இந்த நோட்டிஸ் எல்லாருக்கும் கொடு, லேடீஸ்க்கு இந்த பூவை கொடு" அப்படின்னு சொல்ல தம்பி யார்கிட்டயும் போகலையாம்.

வேற வழி இல்லாம தம்பியும் பூத்துக்கு போயிட்டான். அந்த பொத்தான் அமுக்கும் போது வந்த சத்தம் இவனுக்கு பிடிச்சு போச்சு போல இருக்கு. இவன் தான் அமுக்க வேண்டுமென ஒரே கத்தலாம். சரின்னுஅவன் விரலை பிடிச்சு கை ல ஒரு குத்து. அத்தோட விட்டானா? அந்த விளையாட்டு பொம்மை பிடிச்சுது போல இருக்கு. வீட்டுக்குகொண்டு வந்துட்டா பீக் பீக் சத்தம் கேட்கலாம்ன்னு நினைச்சு ஒரே அடமாம். (ஆஹா தம்பி வாக்கு பெட்டி கவர்வதில் 2 வயசிலேடிரெய்னிங்கா)

பின்னே ஆண் பூத்துக்கு போய் என் நம்பர் சொல்லி "என் வீட்டுகாரர் தான். ஆனா துபாய்ல இருக்கார். அவர் ஓட்டு யாரையும் போட்டுட சொல்லிடாதீங்க "ன்னு சொன்னதுக்கு அவர் சுஜாதா மாதிரி மையமா சிரிச்சுகிட்டாராம். அடப்பாவிகளா எங்க ஆளுங்க எவனோபோட்டுட்டானுங்க போல இருக்கு.

திரும்பி வரும் போது அபி பந்தலில் இருந்து "அம்மா தயவு செஞ்சு கைக்கு ஓட்டு போடுங்க"அப்படி கெஞ்சி கெஞ்சி மல்லிகை பூ கொடுத்து கொண்டு இருந்தாளாம்.

சரி வா போகலாம் வீட்டுக்கு அப்படின்னு அபிஅம்மா சொன்ன பின்னே புள்ள கடையை பார்த்து "சங்கர் அண்ணே இந்தாங்க இந்த காசுக்கு எத்தனை மல்லி காப்பியோ அத்தனை காப்பி பந்ந்தல்ல இருப்பவங்களுக்குகொடுங்க" அப்படின்னு சொன்னாலாம்.

நான் இல்லாட்டி என்ன?

May 11, 2009

சரோஜா டீச்சர் இப்படி செஞ்சிருக்க படாது!!!!!

எப்படித்தான் சரோஜா டீச்சருக்கு அப்படி ஒரு விபரீத புத்தி வந்துச்சோ தெரியலை. ஏன் டீச்சர் ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தீங்க? உங்க கிட்ட எத்தனை பாசமா இருந்தோம். நீங்களே தன்னிச்சையா இப்படி ஒரு முடிவுக்கு வரலாமா? உங்களுக்காக உயிரையும் கொடுப்போமே டீச்சர். இப்படி எங்களை தவிக்க விட்டு வாய் மூடி அழ வைத்து விட்டீர்களே.

"டேய் ராதா, நீயாவது சொல்ல கூடாதா? உனக்கு தூரத்து சொந்தம் தானே?"

"நான் என்னடா செய்ய முடியும். மேல ஒருத்தன் இருக்கான் பார்த்துப்பான்"

"போடா எனக்கு கடவுள் மேல நம்பிக்கை போயிடுச்சு சம்பவத்தை நினைச்சா"

"என்னடா சம்பவம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற! தோ பார் கச்சேரி பிள்ளையாருக்கு காசு முடிஞ்சு வைப்போம் நல்லதே நடக்கும்"

"நம்மளை விடுடா! அங்க பாரு விஜயலெட்சுமி அழுவுதுடா"

"ஆமாடா பொம்பளை புள்ளைங்க அழுதுடும். ஆனா நாம தான் தைரியமா இருப்போம்"

"டேய் நேத்து சாயரட்சை கூட 'ராதா நல்லா படிச்சு பெரிய புரபசரா வரனும் அப்படின்னு முத்து முத்தா பேசினாங்கடா என் கிட்ட"

"போடா ராதா கார்த்தால நான் ஸ்கூல்கிட்ட வரும் போதே "ஓடாம மெதுவா போடா"ன்னு சொன்னாங்க"

"டேய் அங்க பாருடா! இத்தனை களேபரம் நடந்துகிட்டு இருக்கு முதல் பெஞ்ச் விஸ்வநாதன் கெக்கேபிக்கேன்னு சிரிச்சு கிட்டு இருக்கான்"

"விடுடா அவன் அப்பா மாஜிஸ்ட்ரேட்டு, அவன் ஊட்டில இங்கிலீஸ் கான்வெண்ட்ல படிச்சவன். த்தக்கா பித்தக்கான்னு இங்கிலீஷில் பேசும் திமிறு. நிலைமை தெரியாம சிரிச்சு கிட்டு இருக்கான்"

"ஏண்டா அவங்க பிரண்டு தானே புஷ்பவல்லி டீச்சர் அவங்க கிட்ட ஒரு யோசனை கேட்டிருக்கலாமே சரோஜா டீச்சர்"

வாய் மூடி மௌனியாக நானும் ராதாவும் மேலே சொன்னது அத்தனையும் கண்ணால் பேசி கொண்டிருந்தோம்.

"டேய் டேய் பிஆர் சார் வர்ரார்டா. என்ன நடக்க போவுதுன்னு தெரியலையே"இது ராதா.

"குட்மார்னிங் ஹெட்மாஸ்டர்" - இது சரோஜா டீச்சர்!

"குட்மார்னிங் டீச்சர். வெரிகுட். நான் நேத்து மீட்டிங்ல எல்லாருக்கும் முன்ன அப்படி சொல்லியிருக்க கூடாது. ஆனா பாருங்க ரிசல்ட் பக்காவா வந்திருக்கு" - இது ஹெட்மாஸ்டர்.

"அதனால என்ன சார்! நான் உங்க பொண்ணு மாதிரி தானே. பரவாயில்லை. என் வகுப்பிலே தான் அதிக சத்தம் வருது. எல்லாரும் தொன தொனன்னு பேசிகிட்டு இருக்காங்க என்னால கட்டு படுத்த முடியலைன்னு சொன்னீங்க. நானும் அதை ஒரு சேலஞ்சா எடுத்து கிட்டு காலை முதல் சைலண்ட்டா வச்சிருக்கேன் பசங்களை"

'குட் அப்படி என்ன செஞ்சீங்க"

"ஒன்னும் இல்லை சார். இனிமே நீங்க என் வகுப்பிலே எத்தனை சத்தமா வேண்டுமானா பேசிக்கலாம். ஆனா ஒரு கண்டிஷன் எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக்கனும் அப்படின்னு சொன்னேன். நல்லா ஒர்க்கவுட் ஆச்சு சார்"

*************************************************************************************************************

திரும்பவும் மேலே இருந்து ஒரு தடவை படிங்க சிரிப்பு வருதா பார்க்கலாம்!

May 10, 2009

அம்மான்னா சும்மாவா???

படம் ஒன்றே போதுமே... பல்லாயிரம் சொல் வேண்டுமா...?
***************************************************************************

நான் எப்பவும் ஆணாதிக்கவாதின்னு வெளியா நல்லா நடிச்சு நல்ல பெயர் எடுத்தாலும் வீட்டிலே இருக்கும் போது அந்த ஆணாதீக்கம் அப்ப அப்ப நைசா எட்டி பார்ப்பதும் அடுத்த சில மணி நேரத்திலே நான் திடீர் திடீர் என திருந்துவதும் நடந்து கொண்டிருக்கின்றது ஒரு 13 வருஷமா.
அப்படித்தான் சென்ற டிசம்பர் மாதம் ஊரில் இருந்த போது நம்பி நட்ராஜின் லீலைகளை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். அப்போது "என்ன ரசிப்பு வேண்டி கிடக்கு, இவனை ஒரு மணிநேரம் பார்த்துகிட்டா நான் சமைச்சு முடிச்சுடுவேன். ரொம்ப ஹாயா உட்காந்து ரசிச்சுகீட்டு இருக்கீங்களே" அப்படின்னு அபிஅம்மா கேட்டதும் நான் உடனடியாக சொன்ன பதில் "அய்யே நாங்க காஷ்டப்பட்டு சம்பாதிச்சு போடுவோம். நீங்க நகை "நட்டு"ன்னு வாங்கி போட்டுப்பீங்க. ஆனா நட்டுவை மாத்திரம் பார்த்துக்க முடியாதா, அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு பொண்டாட்டியாவும் நீ எனக்கு புருஷனாகவுமிருந்துப்போம் டீல் ஓக்கேவா ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நாம தான் ஜோடி நம்பர் ஒன்" அப்படீன்னு கேட்க "அடடா ஆண்டவா! இதூவே ஏழாவது ஜென்மமா இருக்கனும்"ன்னு முனகி கிட்டே போயிட்டாங்க!
விடுவனா நான் உடனே போய் "அட நம்ம நட்டுவை நான் இன்னிக்கு முழுக்க பார்த்துகிட்டு அபியையும் பார்த்து கிட்டு சமையலையும் பார்த்து கிட்டா உன் தோல்விய ஒத்துகிறியா" ன்னு கேட்ட அடுத்த நிமிஷம் நட்டு என் கைக்கு வந்துட்டான். வந்து உட்காந்து என்னை திரும்பி பார்த்த போதே ஒரு நக்கலாக பார்த்தது வயிற்றில் புளி கரைத்தது. அபி கூட வெள்ளை கைக்குட்டை காட்டிடலாம்பா என சொன்னாள். விடுவனா நான் சவால்னு வந்துட்டா குதிச்சிடுவேன்ல.

நட்டுவை கையில இருந்து இறக்கி விட்டு விட்டு கிச்சன் பக்கம் போனேன். சரி வெங்காயம் கத்தி எல்லாம் எடுத்து கிட்டு இருக்கும் போதே நட்டு ஓடி போய் மாடி படியில் தாவி தாவி ஏறி கொண்டிருந்தான். நான் ஓடி போய் பிடித்து கொண்டு அந்த மாடி படியின் தற்காலிக மர கேட்டை மூடி பூட்டி விட்டு அவனை கொண்டு வந்து என் பக்கத்தில் வைத்து கொண்டு பாத்திரம் எல்லாம் எடுத்து கொண்டிருக்கும் போதே எனக்கு பின் பக்கம் ஏதோ சுடுவது போல இருந்து என்னன்னு திடீர்ன்னு திரும்பி பார்த்தா துப்பாக்கி மாதிரி இருந்த கேஸ்லைட்டர் வச்சி என்னை சுட்டு கிட்டு இருந்தான். பின் தொடை பழுத்து போச்சு. அந்த லைட்டர் ஸ்பார்க் வராது 1 இன்ச் அளவு நெருப்பு வரும். அய்யய்யோ ன்னுஅலறி அதை பிடுங்கி வைத்து விட்டு பாத்திரம் கழுகி கொண்டிருந்தேன். என்னவோ சர சரன்னு சத்தம் கேட்கவே நம்ம நட்டு சரசரன்னு கிச்சன் கதவை அறுத்து கொண்டிருந்தான். அய்யோ தேக்கு கதவுடா ன்னு கத்திகிட்டே "அய்யோ இந்த கத்தியை அவன் கைக்கு எட்டுவது போல யார் வைத்தது"ன்னு கத்தினேன். "நீங்க தான இப்ப வச்சீங்க"ன்னு ரூம் உள்ளே இருந்துசத்தம் வந்தது.
சரின்னு புளி கரைசலை கீழே வைத்து விட்டு அடுத்த வேளை பார்க்க ஆரம்பிச்ச போது பொலக்ன்னு ஒரு வித்யாசமான சத்தம். அத்தனை கரைசலையும் எடுத்து தலையில் கொட்டி கொண்டு நக்கிகிட்டு என்னை பார்த்து ஒரு சிரிப்பு வேற. எனக்கோ செம கடுப்ப்பு. ஓடி போய் ரூம் கதவை லைட்டா ஒரு உதை விட்டுட்டு (நம்ம வீட்டு கதவுல்ல அதான்) சரி சமையலுக்கு முன்ன நட்டுவை குளிப்பாட்டிடலாம்ன்னு பாத்ரூம் எடுத்து போனேன். அபி தான் நம்ம அஸிஸ்டண்ட்.

ஒரு வழியா புளிகரைசலை எல்லாம் கழுவி அவனுக்கு டிரஸ் எல்லாம் போட்டு முடித்து வந்தா கிச்சன் முழுக்க ஒரே புகை. ஏன்னா வெங்காயம் தக்காளி, கடுகு உ.பருப்பு எல்லாம் ஒரு இன்ச் அடிபிடித்து போய் எல்லாம் போச்சு. அந்த நாற்றம் கேட்டு வெளியே வந்தாங்க அபிஅம்மா.

திரும்ப டீலிங்ல கொஞ்சம் மாற்றம்! அதாவது சமையல் மாத்திரம் அவங்க. நட்டுவை பார்த்துப்பது நான். (ஏன்னா அவங்களுக்கு சாப்பாடு இல்லாம போயிடுமே அதனால் தான் போல இருக்கு) பின்ன ரொம்ப சந்தோஷமா நான் நட்டுவை மாடி கேட் திறந்து விட்டு ஏற சொன்னா அவன் என்னை விட 10 மடங்கு அதீக வேகத்தில் ஓட்டம். என்னால முடியலை. மூச்சு வாங்குது. சரி மாடி விளையாட்டு போதும்னு நினைச்சுகிட்டு அபிகிட்ட மெதுவா கேட்டேன்"அவன் எப்ப தூங்குவான்" அப்படின்னு. அப்பா அவனை வண்டில வச்சுகிட்டு வேகமா போனா அந்த எதிர் காத்துல நல்லா தூங்குவான் அப்படின்னு சொன்னா.
அட அபின்னா அபிதான்! என்னமா ஒரு பெரிய குடும்ப ரகசியத்தை சொல்லிட்டான்னு நினைச்சு சந்தோஷப்பட்டு வண்டிய எடுத்து அவனை வச்சிகிட்டு அவனுக்கு அப்ப முன்னாடி நிற்க தெரியாது. அதனால எனக்கும் அபிக்கும் எனக்கும் நடுவே உட்கார வச்சு போய் கிட்டே இருக்கேன். 1 நிமிஷம் 1 தடவை தூங்கிட்டானான்னு கேட்டுகிட்டே. இல்லப்பா சில சமயம் 1 மணி நேரம் ஆனா கூட தூங்க அடம் பிடிப்பான்"ன்னு சொன்ன போது பக்குன்னு ஆகிடுச்சு.
ஆனா அடுத்த 5 வது நிமிஷம் தூங்கிட்டான். அங்க தான் விதி விளையாடுச்சு. பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்னு போச்சு. அது வீட்டிலே இருந்து அரை கிலோ மீட்டர். அங்க எந்த பெட்ரோலுக்கும் வழி இல்லை. சரீன்னு ஒருத்தர் வீட்டிலே வண்டிய நிப்பாட்டி விட்டு அவனை தூக்கிகிட்டு நாக்கு தள்ள நடந்து வந்து சேரும் போது வீட்டை அடையும் போது நாக்கு தள்ளி போயிடுச்சு.

அப்பாடா வந்து சேர்ந்தாச்சு எப்படியும் 2 மணி நேரம் தூங்க மாட்டானா என நான் நினைத்து கொண்டிருக்கும் போதே "ஹவ் ஈஸ் தட்"ன்னு ஒரே கோரசா எங்க ஐபிஎல் திருவள்ளுவர் ராயல்ஸ் கத்தினதுல முழிச்சுகிட்டான். வேற வழி! கீழே இறக்கி விட்டேன். ஒரே ஓட்டம். மெதுவா அபி கிட்ட கேட்டேன். "வண்டில போனா தூங்குவான்ன்னு சொன்னியே"
அதுக்கு அவ "ஆமாம் சொன்னேன் நடந்துச்சா இல்லியா
"இப்ப முழிச்சுகிட்டானே"
"கிரிக்கெட் சத்தம் கேட்ட முழிச்சுப்பானா அப்படின்னு நீங்க கேட்கவே இல்லையே"இது அபி!

நம்பினா நம்புங்க மதியம் 12 வரை நான் ரொம்ப சோர்ந்து போயிட்டேன். அவன் கூட. காலை சாப்பாடும் சாப்பிடலை. அதுக்குள்ள வீட்டுக்காரம்மா வாசல்க்கு வந்து வாங்க சாப்பிடலாம்ன்னு சொன்ன வார்த்தை அமிர்தமா இருந்துச்சு. இவனை அந்த டீம்ல இருந்து பிச்சு எடுத்துகிட்டு வந்து வீட்டிலே விட்டா ஒரே கத்தல். பின்ன வெளியே போய் திருவள்ளுவர் ரைடர்ஸ் கிட்ட "டேய் போங்கடா நான் பேட் வாங்கி தரேன்"ன்னு கெஞ்சி அவனுங்க போன பின்ன அழகா சாப்பாடு பறிமாறும் வேலை வந்துச்சு. அபிஅம்மா சாப்பாடு மட்டும் தான் செய்வேன்னு சொன்னாங்களா? அப்ப நான் தான் பறிமாறும் வேளை!

பறிமாறி முடிச்சு சாப்பிட ஆரம்பிக்கும் போது தம்பி முகம் ஒரு மாதிரியா விளக்கென்னெய் குடிச்ச மாதிரி ஆச்சு. "ஏண்டி பாப்பா எப்படி போகுது அவன் முகம்!
"அப்பா மணி என்ன"

"இது என்ன கூத்து இதுக்கும் மணிக்கும் என்ன சம்மந்தம்"

"இல்லப்பா அம்மா 12 மணிக்கு சாப்பிட ஆரம்பிப்பாங்க. அப்போ பார்த்து தான் தம்பிக்கு ஆய் வரும். பாவம்ப்பா அம்மா அப்படியே போய் அவனை சுத்தம் பண்ணிட்டு அப்படியே சாப்பாடை கொட்டிடுவாங்க"
"என்னடா அபி! நீ எப்பவாது ஹெல்ப் பண்ணுவியா"

அதுக்கு அபிஅம்மா "அவ சின்ன குழந்தை தானே கொண்டு போய் பைப் கீழே நிக்க வச்சு பிரஷர் பைப்ல காரை கழுவுவது போல கழுவுவா! ஏன்னா அவளும் ஒரு வருங்கால அன்னைதானே"
"என்ன கொடுமை சாரி! குழந்தைன்னா ஆய் எல்லாம் போகுமா"
அப்போ வீட்டில் வேலை செய்யும் ஒரு அம்மா வந்தாங்க!

"தம்பி இந்த குழந்தை மட்டும் இல்லை அது என்னவோ நான் பார்த்த எல்லா குழந்தையுமே அம்மாவை சாப்பிட விட்டதில்லை போங்க"

மெதுவா சமாதானம் ஆகி அபிகிட்ட கேட்டேன்!

"அபி இப்படியெல்லாமா செய்வாங்க குழந்தைகள்னா! சரி அவனை தூங்க வைக்க அம்மா வண்டிய எடுத்துகிட்டு சுத்துமா"

"நோ நோ அப்பா இது அப்பா பார்முலா! அம்மா இங்கா கொடுத்து தூங்க வச்சிடுவாங்க! இல்லாட்டி ரெண்டு அடி போட்டா அழுதுகிட்டு தூங்குவான்"

"அந்த லைட்டர் கத்தி எல்லாம் எடுக்கிறானே"
"நீங்க தானே கத்தி லைட்டர் எல்லாம் அவன் கைக்கு எட்டும் படி வச்சீங்க அதல்லாம் அம்மாவுக்கு நல்லா தெரியும் எங்க வைப்பதுன்னு"

"சரி மாடி படி ஏறிகிட்டே இருக்கானே"

"அதுக்கு அம்மா அழுவது போல நடிப்பாங்க! அவன் பயந்து போய் அம்மா மடியிலே படுத்துப்பான். அந்த கேப்பிலே என்ன சமைக்க முடியுமோ ச்சமைப்பாங்க"

"இன்னும் எத்தனை ரகசியம் இருக்கு குழந்தை வளர்க்க?"

"நோ அப்பா எத்தனை ரகசியம் சொன்னாலும் உங்களால முடியாது. ஏன்னா அவன் தினுசு தினுசா அவன் பார்முலாவை மாத்துவான். அதை அம்மாவால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்"

"அபி அப்ப நீ என்ன சொல்ல வரே"
"அப்பா ரெண்டு வார்த்தையில் சொல்லவா"

"அம்மான்னா சும்மாவா "
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

May 7, 2009

மயிலாடுதுறை தொகுதி நிலவரம்!!

முதல்ல ஒரு விஷயம் தெளிவா சொல்லி விடுகின்றேன்! எங்க தொதியிலே 20 சதவிகிதம் இஸ்லாமிய வாக்காளர்கள் தான். ஆனால் எல்லோரும் நினைப்பது போல் எல்லா இஸ்லாமியர்களும் "இஸ்லாமியரா இருந்தா இஸ்ஸ்லாமியர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்பதோ அல்லது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கோ தான் ஓட்டு போடுவார்கள்"என்பது மிக தவறு. (நம்ம சக பதிவர் மரைக்காயர் சொல்வது போல) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இல்லை. அப்படி ஒரு கட்சியே கிடையாது என்பது உளவுத்துறை கலைஞருக்கு சொல்லவே இல்லை. அது கிடக்கட்டும்.

1989-90ல் பி.ஜெய்னுலாபுதீன் என்பவர் அழகா இஸ்லாம் என்றால் என்ன என அழகா பிரச்சாரம் செய்ய ஆரம்பிச்சு வைத்த இடம் எங்க தொகுதியை சேர்ந்த சங்கரன்பந்தல். அப்போது பத்தி எரிஞ்ச தீ அழகா எரிஞ்ச்சுது. எங்க எல்லாரூக்கும் அப்பதான் இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்தது. ஆண்கள் அப்போது தங்க நகை போடுவதை தவிர்த்தார்கள். பிஜே பிஜே என்று துபாய் கூட பற்றி எரிந்தது. ஆச்சு அப்போ வந்து அவர் கூட ஒட்டிகிட்டு வந்தவர் தான் பேராசிரியர். நான் அவரை தப்பா சொல்ல வில்லை. அழகா பிஜேவின் கருத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்தார். "உணர்வு" என்னும் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு அழகாக எல்லா இஸ்லாமிய மக்களிடம் போய் சேர்ந்தது. விண் டிவியில் அழகாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

வன்னியருக்கு 20 சதம் இட ஒதுக்கீடு என்கிற கோரிக்கை எப்படி தேசதுரோகம் இல்லியோ அப்படி தான் முஸ்லீம்களுக்கு 3 சதம் இட ஒதுக்கீடு கோரிக்கையும் என்பது பி ஜேவின் முக்கிய முழக்கமாக இருந்தது.

சென்ற பாராளுமன்ற தேர்தல் போது தஞ்சையில் மாபெரும் மாநாடு. அப்போது மேடையில் பிஜே இப்போது மயிலாடுதுறை வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எல்லாரும் இருந்தார்கள். அப்போது கலைஞரிடம் இருந்து வந்த ஒரே செய்தியால் அப்போது பி ஜே முழங்கினார். அப்போது அந்த கூட்டத்திலிருந்தது பாதி பேருக்கு மேல் பெண்கள். ஆச்சர்யம் ஆச்சர்யம். இஸ்லாமிய பெண்கள் இத்தனை பேர் எப்படி ஒரு அரசியல் மாநாட்டுக்கு வருவார்கள்?

யாரால் எல்லாம் முடிந்தது யாரால் எல்லாம் முடிந்தது?? எல்லாம் பிஜே என்னும் தனி மனித பிரச்சாரத்தல்!அழகாக திமுக கூட்டணி 40 தொகுதியில் ஜெயிக்க இஸ்லாமிய மக்கள் வாக்குகள் உதவின. பின்னே என்ன நடந்தது. எப்போதும் போல அரசியல் விளையாட்டு! அழகா பேராசிரியர் ஆட்கள் வந்து வஃப்பு வாரியத்துல உட்காந்துகிட்டு என்ன கிழித்தார்கள் என்பதை மரைக்காயர் போன்றவர்கள் சொல்லட்டும்!
அதன் பின்பு பேராசிரியர் பிரிஞ்சு போய் தனி கட்சி கண்டார்.. ஆனால் இஸ்லாமியர்கள் யார் கூட இருக்கின்றார்கள். 3 சதம் கொடுத்த கலைஞர் கூட தான். எங்க பி.ஜே கூடத்தான்.

இருங்க விஷயத்துக்கு வரேன். எங்க மயிலாடுதுறை எப்பவுமே சாதி, மதம், தனிநபர் அப்படீன்னு பார்த்தது இல்லைங்க. நாங்க சுய நினைவு உள்ளவங்க. அப்படி பார்த்தா விஜய டி ராசேந்தர் ஏங்க கள்ளகுறிச்சில நிக்கனும். அவர் எங்க தொகுதியிலே நின்னா 6 ஓட்டு தான் கிடைக்கும் என அவருக்கு தெரியாதா என்ன?

இரண்டு நாள் முன்ன அய்யர் போனில் பேசினார். நேற்று அய்யரின் மனைவி போனில் பேசினார்!மிக அழகாக நாங்க 40 தொகுதியிலயும் ஜெயிக்க போகின்றோம்.

பாவம் மரைக்காயர் விஷயம் தெரியாமல் சொல்லிகொண்டு இருக்கார்! எலந்தங்குடி என்னும் இஸ்லாமிய கிராமத்துக்க்கு பேராசிரியர் போன போது அவருக்காகவே கிராமம் முழுக்க கதவடைப்பாம்!

அதே போல சங்கரன்பந்தல், கிளியனூர், நீடூர்,தேரிழந்தூர், கோமல், எலந்தங்குடி, எங்கும் பேராசிரியருக்கு கதவடைப்பு! பி. ஜே வின் குருந்தகடுகள் அழகாக வேலை செய்கின்றது!

அது போல மயிலாடுதுறை தொகுதியில் 40 சதம் வன்னியர்கள். இருந்தும் மருத்துவர் அய்யா சொல்லி எல்லாம் மாயவரம் மசியாது.

அய்யருக்கு மாயவரம் உருதி. ஆனால் ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பேருந்து நிலையத்துக்கு உங்க ராஜ்குமார் MLA கிட்ட சொல்லி எதுனா செய்ய சொல்லுங்க! அது போதும் எங்களுக்கு!