பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 17, 2007

வீடு கட்டலையோ வீடு!!!!

முடிவெடுத்துவிடேன். மாத்திக்க முடியாது. கவிதை எழுதிதான் தீருவேன். இளகிய மனசு உள்ளவர்கள்....மனதை மாற்றிக்காம தயவு செஞ்சு படிச்சுடுங்க. அப்பதான் இந்த ஜென்மம் சாபல்யம் அடையும்.

வீடு கட்டலையோ வீடு!!!

அழகான பொண்ணு பொறந்து
நாட்கள் ரொம்ப ஆயாச்சு
நெத்தி பக்கம் நரை வந்து
எட்டி பார்க்கலாயாச்சு

பாஸ்ட் ஃபார்வேர்டு ஓடவிட்டா
பொண்ணும் புகுந்த வூடு போயாச்சு
தனியே எங்களுக்கு ரொம்ப போரடிச்சு
திரும்பவும் ரீவைண்டு போட்டு
பழைய நிலைக்கு வந்தாச்சு

அடுத்தகட்ட ஆலோசனை
அருமையாய் முடிஞ்சாச்சு
தல சாஞ்சு நாங்க படுக்க
படி ஒன்னு வேணுமடி
பார்ப்பதற்கு லச்சணமாய்
வீடு என்னும் ஆண் மகவு
ரெண்டு பேரும் பெத்துப்போம்

நீயோ இலவச கொத்தனாரு
நானோ இலவச பைனான்சியரு
என்னவென்னு கேட்டபோது
மெல்ல மெல்ல தலையசச்சி
பெத்துகிட ஒத்துகிட்டா

இடம் பார்த்து முடிச்சாச்சு
நாற் புறமும் கோயில்கள்
பசுமை அழகுகள்,பள்ளிக்கூடங்கள்
அப்புறமென்ன...

நல்ல நாள் பாத்தாச்சு
"பூமிபூசை போட்டாச்சு"
அதாவது
"புள்ளதாச்சிக்கு நாட்டுமருந்து கொடுத்தாச்சு"

பொசு பொசுன்னு வளருது அது..
அடிக்கடி வலி வருது மண் இல்லை,கல் இல்லை
இது அந்த பக்க தொல்லை

குறத்தி பிள்ளை பெக்க
குறவன் மருந்து தின்னது போல
எனக்கும் வலி வருது
பைனான்ஸ் ரூபத்துல
இது இந்தபக்க தொல்லை

ஆனாலும் குழப்பமில்ல
அடிக்கடி நல்ல சேதி..
ஆச்சு! வந்தாச்சு சீமந்தம்
கூப்புடுங்க சொந்த பந்தம்
இதுதாங்க "நிலை முகூர்த்தம்"

அதுக்கடுத்த மூணு மாசம்
பெத்தெடுத்தா எந்தங்கம்
பொறந்ததோ சொக்கதங்கம்

பெத்த மகன காண
பறந்துவர முடிவு செஞ்சேன்
பாஞ்சு வந்து பாத்தபோது
பரவசத்தால் பூரிச்சேன்

பேரு வைக்க விழாவுக்கு
அப்போதே நாள் வச்சேன்
அக்காக்கள் வந்தாக
மருமகனை பாக்க
எங்கள பெத்தவுங்க வந்தாக
பேர புள்ளய பாக்க

ஷவர் அடியில் நின்ன அப்பா
திரு திருன்னு ஓடி வந்தார்

முகத்த நனச்சிட்டான்
முத்தான என் பேரன்
அது சிறுவானி தண்ணியுன்னு
செருக்காக சொல்லிகிட்டார்

மருமவனுக்கு பகுடர் போட
அத்தைகள் சண்டை போட
அதுவே கோலமா ஆனது..

அவனுக்கு கொலுசு போட
அங்கங்கே சண்டைங்க.
அது அழைப்பு மணீயானது.

கூப்பிட்ட சொந்தங்கள்
கும்மாலமா இருக்க
பசு மாட்டோட கன்னுகுட்டி
அதன் கூட என் குடும்பம்
அத்தனையும் உள்ளே வர

நூறு ஆண்டு வாழ்கவென
ஆயிரம்பேர் வாழ்த்த
அமக்களமா நடந்துச்சு
அய்யா வூட்டு
கிரஹ பிரவேசம்

32 comments:

  1. மாயரத்தில எந்த தெருவில் கட்டியிருக்கிராப்புல
    கிரகப்பிரவேசப் பத்திரிக்கை வரவே இல்லையே?

    ReplyDelete
  2. //நூறு ஆண்டு வாழ்கவென
    ஆயிரம்பேர் வாழ்த்த
    அமக்களமா நடந்துச்சு
    அய்யா வூட்டு
    கிரஹ பிரவேசம்//

    நாங்களும் வாழ்த்துறோம்!

    :))

    ReplyDelete
  3. //மாயரத்தில எந்த தெருவில் கட்டியிருக்கிராப்புல
    கிரகப்பிரவேசப் பத்திரிக்கை வரவே இல்லையே?//

    உடனடி வருகைக்கு நன்றி சகோதரி,

    பெரிய கோயில் கோபுரம் தெரியும் தூரம்தான். ஒவ்வொரு மணியோசையும் காதில் விழும் தூரம் தான்.

    ReplyDelete
  4. //நாங்களும் வாழ்த்துறோம்!

    :))//

    ரொம்ப நன்றி சிபியாரே!!!

    ReplyDelete
  5. பாருங்க சிபி சொன்னதுக்கப்புறம் வாழ்த்து சொல்லலன்னு நினைவு வருது.சகோதரின்னு சொல்லீட்டீங்களா?
    சொந்த பந்தம் வந்தா
    \\
    அங்கங்கே சண்டைங்க.
    அது அழைப்பு மணீயானது.//
    சொன்ன மாதிரி வந்ததும் முறையா அழைக்கலியேன்னு ஆரம்பிச்சுட்டேன்.
    மயூரநாதரும் அபயாம்பிகையும் பக்கத்துல இருக்கறப்ப என்ன உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. கிரகப்பிரவேசம் செய்தீங்களே! எங்களுக்கெல்லாம் அழைப்பே இல்லையா?

    ReplyDelete
  7. முதல் பத்தியில்.. நிரை இல்ல, நரை.

    ஹூம். இந்தக் கவிதையைப் படிச்ச என்னை "சாமி தான் காப்பாத்தணும்" ;-)

    ஆனா ஒண்ணு சொல்லிடறேன். நல்ல கற்பனை அபி அப்பா.

    ReplyDelete
  8. //அங்கங்கே சண்டைங்க.
    அது அழைப்பு மணீயானது.//
    சொன்ன மாதிரி வந்ததும் முறையா அழைக்கலியேன்னு ஆரம்பிச்சுட்டேன்.
    மயூரநாதரும் அபயாம்பிகையும் பக்கத்துல இருக்கறப்ப என்ன உங்களுக்கு. வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி!!! மிக்க நன்றி!!!

    ReplyDelete
  9. //கிரகப்பிரவேசம் செய்தீங்களே! எங்களுக்கெல்லாம் அழைப்பே இல்லையா? //

    அது ஆச்சு 6 மாசம். அப்போ இந்த சொந்தப்ந்தங்கள் எனக்கு இல்லியே!!

    ReplyDelete
  10. //முதல் பத்தியில்.. நிரை இல்ல, நரை.

    ஹூம். இந்தக் கவிதையைப் படிச்ச என்னை "சாமி தான் காப்பாத்தணும்" ;-)

    ஆனா ஒண்ணு சொல்லிடறேன். நல்ல கற்பனை அபி அப்பா. //

    வாங்க சேதுக்கரசி!!
    தப்பை சரி செஞ்சுட்டேன். மாயூரநாதர்-அவயாம்பிகை கண்டிப்பா காப்பாத்துவாங்க!!!

    ReplyDelete
  11. அபி அப்பா...

    போட்டுத் தாக்கிட்டு இருக்கீங்க... கற்பனைலதான் கெட்டிக்காரர்னு பாத்தா... கவுஜைல கட்டடம் கட்டுறீங்க...

    அப்புறம்... வாழ்த்துக்கள்... கவிஞன் பதவிக்கும்... வீட்டுக்கும்...

    ReplyDelete
  12. //போட்டுத் தாக்கிட்டு இருக்கீங்க... கற்பனைலதான் கெட்டிக்காரர்னு பாத்தா... கவுஜைல கட்டடம் கட்டுறீங்க...

    அப்புறம்... வாழ்த்துக்கள்... கவிஞன் பதவிக்கும்... வீட்டுக்கும்... //

    வாங்க ஜி!! வாழ்த்துக்கு நன்றி. நாதான் முடிவுபண்ணிட்டேன்னு சொன்னனே. அதுதான் எழுதிட்டேன்...இனிமெ அந்த தப்ப செய்ய மாட்டேன்.. போதுமா?

    ReplyDelete
  13. அட, வூடு கட்றதுன்னா இதானா, எங்க பேட்டைல வேறமாரி வூடுகட்டி வெள்ளாடுவோம்.

    ReplyDelete
  14. //அட, வூடு கட்றதுன்னா இதானா, எங்க பேட்டைல வேறமாரி வூடுகட்டி வெள்ளாடுவோம்.///

    டேய்ய்ய்ய்ய்ய்ய்......அப்டீன்னா அனானி. அதுதான் ரொம்ப சுலபம் ஆச்சே!!

    ReplyDelete
  15. // பார்ப்பதற்கு லெச்சனமாய்
    //

    லட்சணமாய்...

    //மருமவனுக்கு பகுடர் போட
    //

    பவுடர்

    சொல்லவே இல்ல. எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து சொல்றீங்க. ஹ்ம்ம்ம்.
    பரவால்ல. பேசிக்கறோம்.....

    வாழ்த்துக்கள்(அபிக்குட்டிக்கு மட்டும்தான். உங்களுக்கு இல்ல).......

    ReplyDelete
  16. இந்த கொடுமையையும் நீங்க செய்யனுமா ? நான் என்ன பாவம் செய்தேன் ?

    ReplyDelete
  17. நகைச்சுவைன்னு சொல்லி ஏதோ குப்பை கொட்டி அள்ளிக்கிட்டிருக்கேன்.
    நல்ல கற்பனை வளத்தோட நகைச்சுவையா'அபி அப்பா'ன்னு ஒருத்த எழுத யாருஅதுன்னு எட்டிப் பாக்க வச்சீங்க என்னை.[போட்டியோன்னு பொறாமை தான்].ஆனா இப்படி கவிதை எழுதி கவுத்துப் புடாதீங்க சாமி.வீட்ல அங்கங்க பில்லரு வச்சா மாதிரி வார்த்தைங்க முட்டிக்கிது [நெருடல் அதிகம்]இன்டீரியர் டெக்கரேஷன் சரியில்லை[நம்மளும் இதே போலத்தேன்].இதே கண்டி உரைநடையில் குடுத்திருந்தீங்கன்னா பிச்சிக்கிட்டுப் போயிருக்கும்.தப்பா எடுக்க மாட்டீங்கன்னு நெனைக்கேன்.ஆமா மாரவரத்துல எங்கன இருக்கிய?நாமளும் பக்கந்தேன்.

    ReplyDelete
  18. //இந்த கொடுமையையும் நீங்க செய்யனுமா ? நான் என்ன பாவம் செய்தேன் ? //

    வாங்க ஐயா, முழு பிளாக்கர் ஆவனும்னா கவுஜ எழுதனும்னு பேசிகிட்டாய்ங்கய்யா...அதனாலத்தான்..ஹி..ஹி..

    ReplyDelete
  19. //நல்ல கற்பனை வளத்தோட நகைச்சுவையா'அபி அப்பா'ன்னு ஒருத்த எழுத யாருஅதுன்னு எட்டிப் பாக்க வச்சீங்க என்னை.[போட்டியோன்னு பொறாமை தான்].//

    வாங்க அம்முனி,சாரி கண்மணி, முதல் முதலா வந்துருக்கீங்க. நன்றி. இதல்லாம் சும்மா டமாஸுக்கு.. இனிமே பயம் காட்டமாட்டேன்.

    நைசா அட்ரஸ் கேக்குறீங்களே!! ரவி கேக்க சொன்னாரா!!!ஆட்டோ அனுப்பவா. ஐ புசுக்கு..

    சரி நீங்க எங்க? பக்கத்துலன்னா?

    ReplyDelete
  20. கவிதைன்னு போட்டப்புறம் சென்ஷியோட கவி வாழ்த்து இல்லாமலா?

    இதோ ஜோதியில் நானும் ஐக்கியமாகிக்கறேன்,

    வாழ்த்துக்கள்..

    இதையே கவுஜையா எப்படி சொல்றதுன்னா...

    வா
    ழ்
    த்
    து
    க்

    ள்

    எப்ப்ப்ப்ப்படி.... :)))

    சென்ஷி

    ReplyDelete
  21. ///வாங்க ஐயா, முழு பிளாக்கர் ஆவனும்னா கவுஜ எழுதனும்னு பேசிகிட்டாய்ங்கய்யா///

    ஆஆஆ, அதிர்ச்சி...

    இந்த கொடுமையான ஐடியாவை கொடுத்தது உங்க நன்பரா இருக்க முடியாது...கபட நாடக வேடதாரி...ப்லாக் உலகில் உங்கள் அபார வளர்ச்சியை பொறுக்க முடியாமல் யாரோ செய்த உள்/வெளி நாட்டு சதி..

    ச்ச்ச்சும்ம்மா...

    ReplyDelete
  22. //கவிதைன்னு போட்டப்புறம் சென்ஷியோட கவி வாழ்த்து இல்லாமலா?//

    வாங்க சென்ஷி, இனிமே உங்க கூத்து அடிக்கடி அரங்கேறும்னு நெனக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. //ஆஆஆ, அதிர்ச்சி...//

    கவலப்படாதீங்க, அதிர்ச்சிக்கு வைத்தியம் பாத்துடலாம் இன்னிக்கு.

    ReplyDelete
  24. எனக்கு மட்டும் பதில் போடவே இல்லைல்ல. பேசிக்கறேன்.......

    ReplyDelete
  25. அய்யோ அப்டியில்லை, முதல்ல தப்பை சரி செய்யனும். பிறகு போடலாம் என்று இருந்தேன். சரி உங்களுக்கு நேத்து நா போட்ட 2 முக்கியமான பின்னூட்டம் எங்கே? சரி dutyக்கு வந்தாச்சா. வெயிட் ப்ளீஸ் ஒரு பதிவு போடுறேன்.

    ReplyDelete
  26. sry அண்ணா. நேத்து கொஞ்சம் வேலை ஜாஸ்தி. அதனால பண்ண முடியலை. இப்ப பண்ணிட்டேன் போய் பாருங்க :)

    ReplyDelete
  27. ஏன்யா அபிஅப்பா, என்னமோ நம்ம தொழில் மேட்டர் மாதிரி இருக்கேன்னு வந்தா இப்படி கவுஜ எல்லாமா போட்டு கலவரப்படுத்தறது. தலைப்புல கவுஜ ஜாக்கிரதைன்னு போர்டு போட வேண்டாம். என்னமோ போங்கப்பா!

    ReplyDelete
  28. //ஏன்யா அபிஅப்பா, என்னமோ நம்ம தொழில் மேட்டர் மாதிரி இருக்கேன்னு வந்தா இப்படி கவுஜ எல்லாமா போட்டு கலவரப்படுத்தறது. தலைப்புல கவுஜ ஜாக்கிரதைன்னு போர்டு போட வேண்டாம். என்னமோ போங்கப்பா! //


    வாங்க கொத்ஸ்,
    தெறிஞ்ச தொழில விட்டவனும் கெட்டான். தெறியாத தொழில விட்டவனும் கெட்டான்.

    ReplyDelete
  29. கலக்குறீங்க...

    ஒரு குரூப்பாதான் இருக்கீங்க போல....

    சரி வூடு காட்டியதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  30. //சரி வூடு காட்டியதற்கு வாழ்த்துக்கள்...//

    வாப்பா செயலாலரே, காலைலேர்ந்து கானுமேன்னு நெனச்சிகிட்டு இருந்தேன்.
    வாழ்த்துக்கு நன்றி. நன்றி. நன்றி

    ReplyDelete
  31. ஆறுமாசம்தானே ஆச்சு. இப்பத்தான் சொந்தபந்தங்கள் கூடிட்டமே.

    கும்மியடிக்க வாரோம். மீள் கிரகப்பிரவேசம் வச்சுருங்க:-)))))

    ReplyDelete
  32. //கும்மியடிக்க வாரோம். மீள் கிரகப்பிரவேசம் வச்சுருங்க:-)))))//

    கண்டிப்பா டீச்சர், முதல் வருகை. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))