July 25, 2007
அமீரக வலைப்பதிவர் மாநாடு - அறிவிப்பு & அழைப்பு!!!
நான் வீட்டில் தலைகீழா நின்னு பையில் ஒட்டியிருக்கும் 25 பைசாவையும் உதறி விட்டு வாயோடு வந்துவிடுகிறேன். யார் யார் என்னென்ன எடுத்து வர்ரீங்கன்னு பின்னூட்டத்துல வந்து குமுறுங்க மக்கா!
இன்று மாலை 6.00க்கு நான் போனிலும் அழைப்பு விடுகிறேன். என்னை தொடர்பு கொள்ள 050 7495127. உங்கள் வருகையை பின்னூட்டத்தில் சொல்லிடுங்க.
July 24, 2007
தம்பி நட்ராஜ் போட்டோ!!!
.
திஸ்கி: ஆன்மீக பதிவிலே வந்து "செமகாமடி பதிவு"ன்னு பின்னூட்டமிட்ட சிபிக்கு இந்த மொக்கை பரிசு! இதை வவாச போஒட்டிக்குன்னு கூட வச்சுக்கலாம்!
July 22, 2007
ஸ்ரீ அவயாம்பிகை சமேத ஸ்ரீ கௌரி மாயூரநாதர்!! (பாகம் # 2)
இப்போ நாம மாயூரநாதர் சன்னதிக்கு நுழையும் கோபுர வாசலில் இருக்கோமா, இப்ப நிலைப்படி தாண்டி உள்ளே வந்தா பெரிய உண்டியல் இருக்கே இங்க இருந்து இடது பக்கம் பிரகாரம் நோக்கி போனா எதிரே இருப்பது மயிலம்மன். அவயாம்பிகை மயில் உருவம் கொண்டு மாயூரநாதரை பூ வால் அர்ச்சித்த அம்மன் விக்ரஹம்.கும்பிட்டுப்போமா. இப்போ தெற்கு பக்க பிரகாரத்தில் நடந்து வர்ரோம்.
நமக்கு இடது பக்கம் 63 நாயன்மார்கள் சிலை வரிசையா இருக்கா. வலதுபக்கம் மாயூர நாதர் சந்நதிக்கு போகும் படில ஏறி உள்ளே போனா மாயூரநாதரிடம் நாம் வந்தாச்சு. நாம இப்போ துவாரபாலகர் கிட்டே இருக்கோம். நமக்கு கீழே ஹோம குண்டம். 108 போற்றி சட்டம் போட்டு தூண்ல தொங்குது. தமிழில் அர்ச்சனை செய்யப்படும்ங்குற போர்டு தொங்குது. இதோ கர்ப்பகிரகத்தில இருந்து பார்வதி குருக்கள் வர்ரார் நம்ம பேச்சு சத்தம் கேட்டு. எனக்கு தெரிஞ்சதுல இருந்து ஒடிஞ்சு விழற மாதிரி தான் இருக்கார்.
"அம்பி நன்னாயிருக்கியா, இவாள்ளாம் யாரு, வீடு கட்டினியே சொல்லப்படாதோ?"
"அலமலப்புல மறந்து போயிடுத்து, அடுத்த தடவ கட்டும் போது சொல்லிட்டா போச்சு, இவங்கல்லாம் பிளாக்கர்ஸ் ஒரு அர்ச்சனை பண்ணுங்க"
அவர் அர்ச்சனைய அங்கிருந்தே ஆரம்பிச்சுட்டாரா இப்ப அதோ பாருங்க நம்ம மாயுரநாதர் ஜம்முன்னு உக்காந்து இருக்கார்.
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எம் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க
தம்பி ஆயில்யா கும்பிட்டுக்கோ!
இதோ அர்ச்சனை முடிஞ்சு தீபாராதனை பாருங்க! நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
இப்போ பிரசாதம் வாங்கிப்போம்.
"கொழந்த ஷியாமளா கோவில்ல இந்த தபா நவராத்திரிக்கு ஜமாய்சிடனும்ன்னு நான் சொன்னேன்னு அப்பாட்ட சொல்லு"
"ம் ஜாமாய்ச்சுடலாம்"
"சவுந்தரத்துக்கு மொதல மார்க் பச்ச பெல்ட் வேணுமாம், அடுத்த தபா வரச்ச வாங்கியா கொழந்த"
"ம் வாங்கிவந்தா போச்சு"
இப்போ வந்த வழியே வெளியே வருவோம் பிரகாரத்துக்கு இதோ வலது பக்கம் ஸ்ரீ மேதா தெட்ஷிணாமூர்த்தி குரு பிரம்மா சொல்லிப்போமா, அதுக்கு அடுத்து கிழக்கு பார்த்து உட்காந்து இருக்கும் இந்த சந்தன பிள்ளையாருக்கு வினாயகர் சதுர்த்தி அன்னிக்கு மாத்திரம் சந்தன அபிஷேகம் ஆகும் அந்த இடத்தில் தான் சித்தர் கொங்கனவர் சித்தி அடைஞ்சதா சொல்லுவாங்க. அடுத்து முருகன் வள்ளி தெய்வானை சந்நதி. இதோ கும்பிட்ட நிலையில் இருக்கும் இந்த இரண்டு சிலையும் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் சிலை. அது எட்துக்காக அங்க இருக்குன்னா முருகன் சந்நிதானத்தில் கொடுக்கப்பட்ட தீருநீறு மீந்து போச்சுன்னா அந்த சிலையில தான் நான் இதுவரை கொட்டியிருக்கேன். நீங்களும் அப்படியே கொட்டுங்க.
இப்ப பிரகாரம் சுத்தி வந்தா மாஹாலெஷ்மி சிலை, பிரம்ம லிங்கம் எல்லாம் கடந்து வந்தா வடக்கு பிரகாரத்தில் துர்க்கை அங்கே "சிலையை தொடாதீகள்"ன்னு போர்டு போட்டிருக்கா அதனால துர்க்கை காலடியில் இருக்கும் குங்குமத்தை தொடாமல்(?) எடுத்து வச்சிகிட்டு பக்கத்தில இருக்கும் சண்டிகேஸ்வரரை சொடக்கு போட்டு கூப்பிட்டு எதுக்கு கூப்பிட்டோம்ன்னு அவருகிட்ட சொல்லாமலே வந்துடுவோம்.இடது பக்கம் மரமாடிப்படி மேல ஏறி போனா சீர்காழி சட்டநாதர் இருப்பார். அவர் கூட கோவில் வவ்வால் ஒரு 100 இருக்கும். கை தட்டினா அந்த அமைதியான கோவில்ல சடசடன்னு பறக்கும். அதே போல அபிஷேக நீர் போகும் சின்ன கால்வாய் மேல போடப்பட்டிருக்கும் அந்த பலகையில் டமார்ன்னு குதிச்சு சத்தம் உண்டாக்குவேன் நான் சின்னவனா இருந்த போது. இப்போ அபி குதிக்கிறா!
பின்ன நமக்கு இடப்பக்கம் நடராஜர். சிதம்பர நடராஜரை விட கொஞ்சம் பெரிய உருவம் இவர். அதே அழகு பக்கத்திலே சிவகாமிஅம்மா. என்ன சிதம்பரம் நடராஜர் நகைல ஜொலிப்பார். இவரு மயில்கண் வேஷ்டில உத்திராட்சம் போட்டிருக்கார். அம்மா ஜோரா கொசுவம் வச்சி மடிசார் கட்டியிருக்காங்க.
இப்போ நவகிரகம் கிட்ட வந்தாச்சு! இதோ கோவில் பெட்டகம். எம்மாம் பெரிய பூட்டு. அது தான் சுரங்கம் அது நேரா தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு போவும்ன்னு நான் சின்ன பையனா இருந்த போது எனக்கு விடப்பட்ட கதையையே நானும் உங்களுக்கு விடுகிறேன். இப்போ நவகிரகத்தை சுத்தி வருவோம். இது தான் அருணாசலேஸ்வரர், இது கால பைரவர் இப்போ திரும்பவும் உண்டியல் இருக்கும் இடம் வந்தாச்சு! இப்போ சாஷ்டாங்கமா விழுந்துட்டு வெளியே வருவோம்.
வெளியே வந்து இடப்பக்கம் வருவோம். அதோ எதிக்க தெரியுதே அதான் கோயில் ஆபீஸ். இவரு தான் முத்துகுமரசாமி எழுத்தர்.
"மாமா மேனேஜர் இல்லியா"
"மடத்துக்கு போயிருக்கார்டா தம்பி, இவங்களுக்கு சாப்பாடு டோக்கன் எடுத்து வச்சிடவா"
"ம் வச்சிடுங்க அவயாம்பா பார்த்துட்டு வந்து சாப்பிட்ட்கறோம்"
"சீக்கிரம் போங்க உச்சிகாலம் ஆக போகுது"
"அண்ணாதொர அண்ணன் எங்க?"
"அவன் அவேம்பா சந்நதில இருக்கான்"
அண்ணாதொரயும் கோவில் எழுத்தர் தான்.
அடுத்து கணக்கடி வினாயகர். இது தான் நான் சின்ன பையனா இருந்தப்ப ஆபீஸ். இப்போ குத்தகைகாரங்க அளக்கும் நெல் கொட்டி வைக்க இந்த இடம். யானை சைஸ்க்கு எத்தனை கொட்டி வச்சிருக்காங்க. அதன் மேல சாணிப்பாலால கோடு கோடா போட்டிருக்காங்க ஏன் தெரியுமா? கொஞ்சம் நெல் எடுத்தாலும் அந்த சாணிப்பால் கோடு சரிஞ்சுடும். ஆஹா திருடு போயிடுச்சுன்னு மேனேஜர் எல்லாரையும் கூப்பிட்டு ரிவீட் அடிப்பாரு. ஆனா சின்ன வயசுல இந்த கோட்டை நான் அழிக்காம போனதே இல்ல. பல தடவ மாட்டி ஒதை வாங்கினதெல்லாம் இப்ப எதுக்கு.
இதோ கணக்கடி வினாயகர் முன்னால ஒரு கருப்பு மார்பிள் போட்டிருக்கே அதிலே ஆள்காட்டி விரலால நாம ஏதாவது கணக்கு போட்டு டேலி பண்னனும். (இது ஒண்ணும் சட்டம் இல்ல ஆனா எல்லாரும் செய்வதால் நானும் செய்வேன்) அப்படித்தான் 37+ 41= ன்னு போட்டுட்டு எல்லா விரலையும் விட்டு வெரல் பத்தாம திண்டாடிக்கிட்டு இருந்தா போது என் சின்ன அக்கா தலைல நொட்டுன்னு தட்டி "டேய் 50+50=100ன்னு ஈஸியா போட்டு டேலி பண்ணு. இதுல தப்பா போட்டா பரிச்சைல முட்ட தான் வரும்"ன்னு உபதேசிக்கப்பட்டு 50+50=100 ன்னு ஆரம்பிச்சு பின்ன எதுக்கு ரிஸ்க் அதை விட ஈஸியா 2+2=4 ஊகூம் இதவிட சின்ன கணக்கா போடுவோம்ன்னு 0+0=0 ன்னு போட்டு ஓக்கேன்னு பிள்ளையாரும் அதே ஆன்சரை பரிட்சையிலும் வரவழைச்சார்.
அதனால இப்போ நீங்களும் ஈஸியா ஒரு கணக்கு போட்டுவிட்டு வாங்க அடுத்தது அவயாம்பா சந்நதிக்கு போகணும்!
மீதி அடுத்த பாகத்தில்:
July 17, 2007
சும்மா ஜாலியா ஒரு மொக்கை!
1. பனி சறுக்கிய வீடியோ - மின்னுது மின்னல்
2. வலைப்பதிவர் சந்திப்பு எனது பார்வையில் - மின்னுது மின்னல்
3.வலைப்பதிவர் சந்திப்பு & இன்ப சுற்றுலா - மின்னுது மின்னல்
4.ஐஸ்கட்டியில் நடந்த அமீரக பதிவர் சந்திப்பு - குசும்பன்
5. மின்னியது மின்னல் - அபிஅப்பா
6.வலைப்பதிவர் சந்திப்பு - பகிர்ந்து கொள்ளப்பட்ட ரசசியங்கள் - அய்யனார்
7. போலியிலாத துபாய் வலைப்பதிவர் கும்மி - மகேந்திரன்.பெ
8. அவியல்கள் + வலைப்பதிவர் சந்திப்பு - தம்பி
எங்க ஊர் பெரிய கோவில் போகலாம் வாங்க!! (பாகம் # 1)
மாயவரம் பஸ்டாண்டில் இறங்கி 4ம் நம்பர் டவுன் பஸ்ல ஏறி பிரசவ ஆஸ்பத்திரின்னு டிகெட் எடுத்து(பஸ்டாண்டில் இருந்து 3வது ஸ்டாப்) அங்கே இறங்கி, அதுதான் பெரிய கோவிலின் வடக்கு வீதி, அங்க வடக்கு வீதியும் கீழவீதியும் இணையும் இடத்தில் இருக்கு சியாமளாதேவிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு கீழவீதிக்குள்ள நடைய கட்டிட வேண்டீயதுதான். 2நிமிஷம் தான் என்னய மாதிரி நடந்தா! சந்நதி தெரு வந்துடும். அங்கே ஆஞ்சநேயர் மாயூரநாதர் நோக்கி கும்பிட்டுகிட்டே இருப்பார். அவருக்கு ஒரு கூம்பிடு. அதுக்கு பின்ன சந்நதி தெருவில இருந்து பெரிய கோபுரம் பிரம்மாண்டமாய் தெரியும். அதை நோக்கி போவோமா?
இதோ வலது பக்கம் ஒரு வீட்டிலே பிளாக் போர்டு தொங்குதே அதான் என் காலேஜ்ல தமிழ் பேராசிரியர் டாக்டர்.சொ.சி வீடு. அதிலே தினமும் ஒரு திருக்குறள் எழுதி விளக்கம் போட்டிருப்பார். அவர் போன பின்ன ஆளே இல்லாத டீக்கடைல டீ ஆத்துவது போல வெறும் போர்டு தான் தொங்குது. சரி இந்த பக்கம் பாருங்க இது போஸ்ட் ஆபீஸ். வந்தாச்சு பெரிய கோபுரம் வாசலுக்கு. பூ பழம் வாங்கிகிட்டு இதோ யானை கொட்டாய் பார்க்கலாம் வாங்க. ஆஹா அது எப்பவும் போல பின்பக்கத்தை காட்டிகிட்டு வாலை ஆட்டிகிட்டு பீக்ன்னு கத்துது பாருங்க. சரி உள்ளே நுழைவோமா! ஆஹா என்ன இரு காத்து என்ன ஒரு காத்து. வலது பக்கம் பாருங்க இவரு தன் இந்த கோபுரத்தை காக்கும் தங்கமுனீஸ்வரன். "நாராயணா கொஞ்சம் துன்னூரு குடு, இவங்கல்லாம் பிளாக்கர்ஸ்". "எதுவா வேணா இருக்கட்டும், துட்டு தேறுமா,எதினா கோடாலி தைலம் எடுத்தாந்தியா" காதில் முனுமுனுக்கும் நாராயனனை விட்டு விடுவோம்.
ஆஹா இந்த இடது பக்கம் பாருங்க. திருகுளம். வலது பக்கம் தென்னந்தோப்பு இருக்கே அந்த இடம் முன்ன கிரவுண்ட் மாதிரி இருந்துச்சு. அதில தான் அய்யா கிரிக்கெட் விளையாடுவேன். (எத்தனை தூரம் பந்து ஓடினாலும் சளைக்காம வந்து எடுத்துபோடுவேன்). சரி திருகுளத்துல காலை நனைச்சுப்போமா. மெதுவா வாங்க பாசி அதிகம் இருக்கும், பாத்து கழுவிக்குங்க. இங்க பாருங்க சாமியார் குளிச்சு முடிச்சு பட்டை அடிச்சு திருவோடு கழுவி கிளம்பிட்டாரு. இந்த குளத்திலே தண்ணி வத்தி நான் பார்த்ததே இல்லை. எங்க அப்பாவும் பார்த்ததில்லையாம். சரி மேலே வாங்க!
இதோ அடுத்த சின்ன கோபுரம் வந்துட்டோம். வலப்பக்கம் இடப்பக்கம் பிள்ளையார் இருக்கார் பாருங்க இவரை யாரும் கண்டுக்க மாட்டாங்க. உள்ள வாங்க நிலை படி தாண்டி! இதோ கொடிமரம். அதுக்கு கீழே ஒரு சின்ன "கொடிமரத்து பிள்ளையார்" சூடமும் எண்ணெய் பிசுக்குமா இருக்கு பாருங்க இந்த இடம். கும்பிட்டுகோங்க. இங்கிருந்து பார்த்தாலே மாயூரநாதர் இருக்கும் இடம் இருட்டா தெரியுதா. பின்ன இடது பக்கம் ரெண்டு தப்புடி நடப்போமா. இதோ இவரு தான் முக்குறுனி பிள்ளையார். போர்டுல "பாலும் தெளி தேனும் எழுதியிருக்கா அதை படிங்க. தலைல கொட்டிக்கனும் இப்போ. "டேய் மணியாட்டி பல்லு வேலு அயிரு இல்லியா?" "இருக்காருன்னே உள்ள" "இப்ப யாரு மொறை பாக்குறா?" "சுந்தரம் குருக்களு ஆனா பார்வதி குருக்களும் வந்துருக்காரு"
இவன் இந்த கோவிலின் மணி அடிப்பவன் cum பூ பறிக்கும் பையன். பல்லு எடுப்பா இருக்கும் அத்னால வேலுன்னா யாருக்கும் தெரியாது பல்லுவேலுன்னா பிரசித்தம்.
இதோ நமக்கு நேரா இருக்கே உயரமா படிவச்சு அதான் மடப்பள்ளி. பெரிய நசுங்கிய மோகந்தாஸ் பூசின பித்தளை தட்டு துணிய வச்சு கட்டி எடுத்துட்டு வர்ரானே அவன் ராமூர்த்தி. அவன் அப்பா கிட்டய்யர் மெயின் குக். மடப்பள்ளி ராஜராஜ சோழர் காலத்துல சுத்தம் பண்ணினது. அதுக்கு பின்ன இன்னும் செய்யலை. "ராமூர்த்தி, சாம்பய்யர் பொண்ணுக்கு நூல்வுட்டியே என்னாச்சு" "ஹய்யா அப்பா பின்னால வர்ரார்"
இப்போ வலதுபக்கமா போவோம். வந்தாச்சு. இப்போ நமக்கு இடப்பக்கமா இருக்கும் இந்த ஹால்க்கு பேர்"குமரகட்டளை" இந்த கோவிலே திருவாவடுதுறைக்கு சொந்தம். ஆனா இந்த இடம் மட்டும் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தம். இதிலே தான் கார்த்திகை அன்னிக்கு செல்வமுத்துகுமரனுக்கு அபிஷேகம் ஆகும். எல்லா கோவில் முருகனுக்கும் கார்த்திகை நட்டச்த்திரம் அன்னிக்கு அபிஷேகம். ஆனா வைத்தீஸ்வரன் கோயிலுக்கும் இங்கேயும் சொச்சத்தில் அதாவது அதுக்கு அடுத்த நாள் தான் அபிஷேகம், விரதம் எல்லாம்.(நாங்க எப்பவும் வித்யாசமானவங்க)
ஹய் ஜல் ஜல்ன்னு வர்ராளுங்க பாருங்க மயிலாடுதுறை ஸிஸ்டர்ஸ். இவளுங்க அழும்பு மாயவரம் பிரசித்தி. என்னா அழகு பாருங்க. கொலுசு போட்டுகிட்டு கேட் வாக் வரும் அழகு அநியாய அழகு. "டேய் குமாரு எங்கடா பெரியவ கொலுசுல ஒரு முத்து தான் இருக்கு" "அவுளுக்கு அதுவே அதிகம்னே, கொத்தி கொத்தி பிச்சிற்றா" "அவரு எங்க பெரியவரு" "அதுக்கு கொழுப்பு அதிகமாயிடுச்சு, மழை பேஞ்சா வந்து ரெண்டு குத்தாட்டம் போடுவாரு, வெயிலுன்னா வெள்ள வரமாட்டாரு வெள்ரு"
"அய்யோ மீனுக்கு போட்ட பொறி மீதிகீதி இருந்தா இவளுக்கு போட்டுடாதீங்க, இது கட்டாந்தரையா கொத்தி கொத்தி மூக்கு வீங்கிடுச்சு ஒரு தடவ, அதுக்கு வாழபழம் வேணா குடுங்க"
"டேய் நட்டு முட்டு யாருடா வாசிக்கிற மொற இப்போ"
"தொரையும் சவுந்தரமும்"
"போய் வெத்தலை பேக்கு வாங்கியா"
"இப்பதான் பாருவதி குருக்களு கேட்டாருன்னு அங்க குடுத்துட்டு வாரேன், உள்ள தான போறீங்க அவருகிட்ட வாங்கிக்குங்க"
இப்போ வலது பக்கமா திரும்பி மாயூரநாதர் இருக்கும் இடம் அருகே வந்தாச்சு. அந்த நிலைப்படி அருகே நிற்கிறோம்.
ஸ்ரீ கௌரி மாயூரநாதரை சந்திங்கும் முன்ன ஒரு சின்ன பிரேக்!
திஸ்கி: எங்க ஊர்காரங்க தவிர மத்தவங்களுக்கு கொஞ்சம் போர் அடிக்கலாம், ஆனா கண்டிப்பா மயிலாடுதுறை மக்கள் இந்த பதிவினை விரும்புவார்கள் என்றே நினைக்கிறேன், மீதி அடுத்த பாகத்தில்!
July 14, 2007
மின்னியது மின்னல்!!!
சந்தீப்பில் கலந்துகொண்டவர்கள்:
கோபி(ஷார்ஜா)
மின்னுது மின்னல்(அலய்ன்)
லியோசுரேஷ்(அஜ்மான்)
தம்பி (அபுதாபி)
குசும்பன்(துபாய்)
மகேந்திரன்.பெ(துபாய்)
சென்ஷி(சார்ஜா) புதிதாய் டெல்லி வலைப்பதிவர்களிடம் இருந்து கடத்திவரப்பட்டவர்- கிடேசன் பார்க்க்கு
அய்யனார்(துபாய்)
அபிஅப்பா(துபாய்)
அதுதவிர துபாய் அ.மு.கவினர் சேகர்/சிவா/கார்த்தி/பிரபு/ராஜ்குமார் ஆகியோர்.
எல்லோரும் எப்டியெல்லாம் மிக சந்தோஷமாக இருந்தோம் என்பது பற்றியெல்லாம் மீதம் உள்ள வலைப்பதிவர்கள் எழுதுவதாக சொன்ன காரணத்தால் நான் அங்கு ஐஸ்கேட்டிங் நிகழ்வு மாத்திரம் சொல்வதாக உத்தேசம்.
மிகப்பெரிய மைதானம். நிறைய பேர் அங்கு மிக வேகமாக சுத்தி சுத்தி வந்தாலும் எங்கள் டீம் உள்ளே நுழையும் போதே நாங்கள் ஸ்கேட்டிங் ஷூ போடும் அழகை பார்த்ததும் அவர்களுக்கு கொஞ்சம் கிலி ஏற்ப்பட்டது என்னவோ உண்மைதான்.
முதலில் தைரியமாக அ.மு.க வினர் உள்ளே நுழைய நம் வலைப்பதிவர்கள் அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என உணர்த்தும் பொருட்டு அபிஅப்பா தயாராகும் போது குசும்பனுக்கும் அபிஅப்பாவின் வீரம் தொத்திக்கொண்டது.
மகியை கூப்பிடும் போது தன் அன்பான தங்கமணியும் குழந்தைகளையும் ஒரு நிமிடம் நினத்துபார்த்து(பர்ஸில் இருந்த அவர்களது புகைப்படங்களை பார்த்து) பின் நான் உங்களை எல்லாம் போட்டோ எடுக்கிறேன் என கூறி ஒதுங்கிக்கொண்டார். லியோ சுரேஸ் அவர்களும் மகிக்கு பாதுகாப்பாக நான் இருக்கிறேன் என இருந்துவிட அபிஅப்பா புறப்பட எத்தனிக்கும் போது "ஹய்யோஓஓஓஓஓ"என்ற நம் அனானி நண்பர் கார்த்தியின் வீரிடல் அந்த அரங்கம் முழுக்க வீரிட்டது. ஆனால் தன் முயற்ச்சியில் சற்றும் தளராத அபிஅப்பா உள்ளே இறங்க குப்பனின் முயற்ச்சியும் கைப்பிடி பற்றி ஆரம்பமானது. இனி!
1. அனானி நண்பர் சிவா பல முறச்சிக்கு பின் ஒரு பெண் கையை பிடித்துக்கொண்டே மைதானத்தின் நடுவே சென்று விட்டார்.
2. அய்யனார் அருமையாக அடிப்பிரதஷ்னம் செய்தார். கேட்டதற்க்கு "இன்னு வெள்ளிகிழமை" என்றார்.
3. அபிஅப்பா அந்த மைதானம் முழுக்க அருமையாக வித்யாசமான முறையில் சுத்தி சுத்தி வந்தார். அப்போது ஏதோ தமிழ் பொண்ணுங்க போல இருக்கு 2 பேர் அபிஅப்பாவுக்கு சமாமா வந்தார்கள். அதில ஒரு பொண்ணு"இங்க பார்டீ அதிராம்பட்டிணம் சொக்கு"ன்னு சொன்னது அபிஅப்பா காதில் விழுந்தது. பாலசந்தர் படம் பார்க்கும் பொண்ணுங்க போல இருக்கு!பின் ரோஷம் வந்த அபிஅப்பா கிட்டத்தட்ட 1 மணி நேரம்................எழுந்திருக்க முயற்ச்சி செய்தார்.
4. அனானி நண்பர் சேகர் இன்னும் ஒருவரோடு கைகோர்த்த படி நிற்க தேனிர் இடைவேளையின் போது "இவர் தான் என் பயிற்ச்சியாளராக்கும்" என பீற்றிக்கொண்டார்.
5. அனானி நண்பர் கார்த்தி 324 முறை எழுந்தார். நாங்கள் திரும்பி வரும் போது அவருக்கு 5 கிலோ அரிசியும் ஆர்லிக்ஸும் ஃபன் சிட்டி நிர்வாகம் தரவில்லை என்கிற கோபம் அவருக்கு வீடு வந்து சேறும் வரை தீரவில்லை.
6.குசும்பன் பாராட்டப்ப்ட வேண்டிய வலைப்பதிவர். ஒரே ஒரு முறை மட்டுமே விழுந்தார். 2 மணி நேரம் கழித்து திரும்பும் போது தூக்கி வந்தாகிவிட்டது.
7. அடிப்பிரதஷ்னம் செய்த அய்யனார் மைதானத்தின் அடுத்த எல்லைக்கு சென்று எங்களுக்கு"தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று செட்டில் ஆகிவிட்டார்.
8. மைதானத்தின் நடு பகுதிக்கு ஒரு பெண்ணின் கரம் பிடித்து சென்ற நண்பர் சிவா அங்கேயே கைவிடப்பட்டு(அப்படி என்ன சொன்னார் அந்த பெண்ணிடம் என்று கடைசிவரை யாரிடமும் சொல்லவில்லை) கடல் பறவை மாதிரி திரும்ப முடியாமல் உறைந்து போனார்.
8. சென்ஷி தட்டு தடுமாறி நின்றவர் ஒரு 2 1/2 அடி உயரம் உள்ள அரேபிய சிறுவனால் நிலைகுலந்த்து போனார். அப்போது கீழே விழாமல் பேலன்ஸ் செய்த விதம் பார்வையாளர் அத்த்னை பேரையும் வயிறு குலுங்க வைய்த்தது. அப்போது ஒரு கட்டத்தில் ஒரு பாலஸ்தீன பையன் அனாயசமாக சென்ஷியை பச்சகுதிர தாண்டின விஷயம் சென்ஷிக்கு தெரியாமலே போனது.
9. இதில் தம்பி தான் அடிக்கடி ஏன் இந்த இடம் இத்தன இருட்டா இருக்குன்னு கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் கோபி"கூலிங் கண்ணாடியை கழட்டுடா வெள்ரு"ன்னு தான் தம்பியிடம் கடைசி வரை சொல்லவில்லை என காரில் திரும்பும் போது வரை சொன்னார்.
10. தம்பியும் கோபியும் அவவப்போது கீழே கிடந்த குசும்பனை நலம் விசாரித்து திரும்பினர்.
11. சென்ஷிக்கு சதையில் அடபடவேயில்லை!
12. எழுந்து நிற்க்கும் போது "தம்பி"யை காலை அகலமா வச்சி பேலன்ஸ் செய்யாதே என பலர் எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. அய்யனார் ஒரு முறை குறுக்கே புகுந்து போயிட்டார்.
13. எல்லாம் முடிந்து ட்திரும்பும் போது சேகரின் பயிர்ச்சியாளர் சேகரின் கையை பிடித்து கொண்டு" ரொம்ப நன்றிங்க! இந்த 2 மணி நேரமாக உங்களை நான் ஆதாரமா பிடிச்சுகிட்டு ரொம்ப எஞ்ஜாய் பண்ணினேன்ன்னு சொன்னப்போ பாவமாக இருந்தது சேகரை பார்க்க!
ஆக மொத்தத்தில் மின்னல் மின்னியது!
July 12, 2007
சுத்த பைத்தியகாரத்தனமா இருக்கே!!!
"சார் வரும் போது உங்க கிரடிட் கார்டும் கொண்டு வாங்க"ன்னு சொன்னா அந்த பொண்ணு! அதுக்கு நான் "இல்ல நான் கேஷா தாரேன்"ன்னு சொன்னேன். அதுக்கு அந்த பொண்ணு "இல்ல சார், உங்க கிரடிட் கார்டூ சும்மா ஒரு கேரண்டிக்கு தான்ன்னு சொன்னவுடனே எனக்கு பக்குன்னு ஆச்சு! சரின்னு வேற வழியில்லாம ஒத்துகிட்டேன்.
ஆனா எனக்கு என்ன டவுட்ன்னா அந்த கம்பெனி நல்ல கம்பெனியாவே இருக்கட்டும். ஆனா அந்த ஆபீஸர் அநியாய ஆபீஸரா இருந்து இப்படியே என்னய போல எல்லா சிரிச்ச மூஞ்சு அதாங்க இளிச்சவாயன்கிட்ட வாங்கின நம்பர் குறிச்சுகிட்டு கம்பெனிய விட்டு ரிசைன் பண்ணிட்டு போகும் போது ஆன் லைன்ல கிழிச்சுட்டு அவன் காசர்கோடு கிளம்பிட்டான்னா?
இப்படி கிரடிட் கார்டு அடமானம் வைப்பதை பேங்குகள் ஒத்துக்குதா? எனக்கு ஒன்னியும் பிரியலை! இந்த விஷயமா தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!
Sridhar Venkat said...
இந்த மாதிரி கார்டு வைத்து பிஸினஸ் செய்யும் சில வலைத்தளங்களை உருவாக்கியதில் என் பங்கு இருக்கிறது. அதுனால உங்க கேள்விக்கு எனக்கு தெரிஞ்ச பதில்- கார்ட் நம்பர மட்டும் குறிச்சிக்கிட்டு பணம் எடுக்க முடியாது. பண்டங்களோ, சேவைகளோ வாங்கலாம். - உங்களுக்கு வரும் பில்லை நீங்கள் சரி பார்த்த பின் தான் கட்ட வேண்டும். நீங்கள் வாங்காத ஏதாவது பொருளுக்கு பில் பண்ணியிருந்தால் நீங்கள் பணம் கட்ட தேவையில்லை. நீங்கள் புகார் கொடுக்கலாம். உங்களை பணம் கட்ட சொல்லி அவர்கள் கட்டாய படுத்த முடியாது.- உங்கள் கார்ட் தொலைந்திராத பட்சத்தில் உங்களுக்கு தெரியாமல் யாராவது அதை ஆன்லைன் வியாபாரத்திற்க்கு பயன்படுத்தியிருந்தால் கார்ட் சேவை வழங்குபவர்கள் அந்த ஆன்லைன் நிறுவனத்திடம் நடவடிக்கை எடுப்பார்கள். - பொதுவாக ஆன்லைன் வியாபாரத்தில் நீங்கள் பங்கேற்க வேண்டும் என்றால் ஏதாவது கணக்கு துவங்க வேண்டும். அதற்கு ஏதாவது இமெயில் கணக்கு மற்றும் சில தகவல்கள் கொடுக்க வேண்டும். இதன் மூலம் யார் 'தவறாக' கிரடிட் கார்ட் உபயோகிக்கிறார்கள் (mal practices) என்பதை ஓரளவுக்கு கண்டு பிடிக்கலாம். இது fool proof நடவடிக்கைகள் இல்லை என்றாலும் ஓரளவுக்கு கட்டு படுத்தலாம். இதனால் கிரடிட் கார்ட் வாடிக்க்கையாளர்கள் பாதிக்கப் படுவதில்லை. அதனை வழங்கும் வங்கிகள்தான் பாதிக்கப் படுகின்றன.- தற்போது சிடி பாங்க் போன்ற வங்கிகள் வெறும் கார்ட் நம்பரை மட்டும் வைத்து இணையத்தில் எதுவும் வாங்க முடியாது என்ற நிலைப்பாடை எடுத்திருக்கிறது. இதற்கு ஒரு I-Pin தேவை. I-Pin என்பது ஒரு கடவுச் சொல் போல. virtual keypad மூலம் மட்டுமே இதை நாம் அளிக்க முடியும். இது ஒரு சிறந்த பாதுகாப்பு கவசம் வாடிக்கையாளார்களுக்கு.- சரி. இப்படி கார்டை கொடுப்பதனால் வேறு என்ன அபாயம்? கார்ட் ரீடர் என்றொரு சமாச்சாரம் இருக்கிறது. உங்கள் கார்டிலிருக்கும் மேக்நெடிக் ஸ்ட்ரிப்பை அப்படியே காபி எடுத்து போலி கார்ட் தயாரிக்கலாம். இதிலும் பணத்தை நேரடியாக திருட முடியாது. பண்டங்கள்/ சேவைகள் வாங்கலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பில்களை சரி பார்த்து பணம் கட்டினால், இந்த மாதிரி பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.- ஒரு முறை இப்படி தவறு நிகழ்ந்தது உங்களுக்கு தெரிய வந்தால், உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொண்டு கார்டை மாற்றி விடவும்.- இந்த மாதிரியான் ஆன்லைன் தில்லுமுல்லுகளினால் பெரிதும் பாதிக்கப் படுவது வங்கிகள்தான். இதை குறைக்க இன்றளவிலும் பற்ப்பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.- வாடிக்கையாளர்களான நாம் செய்ய வேண்டியவை. மூன்றாம் நபரிடம் கார்டை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ATM PIN, I-PIN போன்றவைகளை எல்லாரும் எளிதில் பார்க்கக் கூடிய இடத்தில் குறித்து வைக்கக் கூடாது. கார்டுடன் இந்த pin-களும் தொலைந்தால் ஓன்றுமே செய்ய முடியாது. ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே சம்பந்தப்பட்டு வங்கிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனாலும் நீங்க பாவம்ப்பா... நீங்க கேட்ட கேள்விய கண்டுக்காம சிக்கனோட காலப் பத்தி கவலப் பட்டுகிட்டு இருக்காங்களே.... என்னத்த சொல்ல போங்க...
July 12, 2007 3:55 AM
இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி இதுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்?
சாயந்திரம் பொழுது சாஞ்சா போதும் மார்ட்டின் முழுக்கை சட்டைய போட்டுகிட்டு, வெள்ளை கைலிய அயர்ன் பண்ணி போட்டுகிட்டு தஞ்சை சலூன்ல போய் ஒரு கூட்டம் கோலங்கள் பார்க்கும், அப்பா கடைல ஏதாவது கடல் பாசி தின்னுட்டு அது வாசல்லயே 15 பேர் ரவண்டு கட்டி "இருந்தாலும் மன்மோஹன் சிங் இப்டி செஞ்சிருக்க கூடாது"ன்னு ஜரூரா பேசிப்போம். எங்க குறைஞ்ச பட்ச பேச்சுதான் நடுவன் அரசு பத்தி,அதிக பட்சம் விண்வெளி மாசு படுவது பத்தில்லாம் போகும். நார்வே தூதுகுழு மாதிரி எங்கள ஊஸ் பண்ணலாம் அத்தன ஒரு நாலெட்ஜ்!
வேற குரூப் அந்த டிராண்ஸ்பார்மர் கீழ சுத்தியும் குந்திகிட்டு புளிச்சு புளிச்சுன்னு துப்பிகிட்டு பைன் சிகரட் வலிச்சுகிட்டு ஊர்ல யாரு யாரை இழுத்துகிட்டு ஓடினாங்க என்பத போல முக்கிய விஷயத்த அலசி தொவச்சி காயப்போடும்.
அடுத்த கும்பல் தஞ்சை சலூன் வாசல்ல "தொல்காப்பியன தொவச்சி எடுக்கனும்டா"ன்னு நான் குறுக்க வரும் போது சாட பேசும். கோலங்கலை பத்தி பேசுதுங்கலாம்! அட...
கைலிய தூக்கி கட்டி கிட்டு "டேய்ய்ய் வெள்ரு நில்லுடா அல்வாவூட்டு மஜீத்துக்கு புள்ள பொறந்துருக்கு பய மாட்ட மாட்டங்குறான், தாளிக்கலாம்ன்னு பாத்தா சிக்க மாட்டங்குறான்"ன்னு சவுண்ட் வுட்டுகிட்டு போகும் ஒரு தனிப்படை!
மானுகடைல நிமிசத்துக்கு ஒரு தடவ "இன்றைய பெசல்" மாத்திகிட்டே இருப்பாங்க. டிராண்ஸ்பார்மர்ல "Bed space available" ஒட்டிட்டு போவான் எவனோ, அதுல இருக்கும் காண்டெக் நம்பர எடுத்து " எலேய் மாப்ள கல்யாணம் பண்ணிட்டு வந்தியே ஏதும் விசேசமா"ன்னு கலாய்க்கும்.
புதுசா பால் புட்டியோட வந்ததுங்க தனி குரூப்பா திரியும். தனக்கு புது சொக்கா போட்டுக்குதோ இல்லியோ செல் போனுக்கு நெத்தம் ஒரு சொக்கா போடும்.
இதல்லாம் விட ரூமுக்குள்ள அடச்சி கிடக்கும் குரூப் இருக்கே அதுங்கதான் ரொம்ப ரவுசு பார்ட்டிங்க. காமடி டைம்னா அல்வா சாப்புடுவது போல அதுங்களுக்கு! எவனாவது அமீரகத்துல இருந்து லெட்டர் போட்டு சிட்டி பாபு பெனாத்துவாரான்னு பாத்துட்டே இருப்பானுங்க.
சிட்டிபாபு "துபாயில இருந்து ஒரு லெட்டர்"ன்னு சொன்னதும் இதுங்க எல்லாம் ஆளுக்கு ஒரு பேனா எடுத்துகிட்டு அந்த நம்பர குறிச்சுப்பானுங்க. பின்ன என்ன கொலவெறி தான். அவனுக்கு போன போட்டு "ஹல்லோ சேகர் தான, இப்பதான் உங்க லெட்டர் படிச்சாங்க"ன்னு சொன்னதும் சேகருக்கு சன் டிவில ஷேர் வாங்கின சந்தோஷம் வந்துடும். பின்ன வேற வேற நம்பர்ல இருந்து அவனவனும் "நான் உங்க ஃபேன்"ன்னு சொல்ல ஆரம்பிச்சு சேகரு அத்தோட சன் டிவிக்கு மட்டுமில்ல பொண்டாட்டிக்கு லெட்டர் போடுவதையே விட்டுடுவான்.
ஆக இதல்லாம் முடிச்சுட்டு தூங்க ஆயிடும் 12/1.
இப்படியாக நாங்க துபாயை மயிலாடுதுறையா மாத்தியாச்சு! இன்னும் மணிசங்கரால மாத்த முடியலை பாருங்க மக்கா!
சரி இதுக்கும் நாராயண மூர்த்திக்கும் என்ன சம்மந்தம்ன்னு கேக்க பிடாது! நெம்ப நாளுக்கு பின்ன இப்பத்தான் தலைப்பு போட முடியுது, அதான் இந்த கொலவெறி தலைப்பு! எஸ்கேப்!!!
July 11, 2007
July 3, 2007
தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி! எட்டு போட்டேன் என் தங்கச்சி!!
1. நானோ தம்பி பொறந்த சந்தோஷத்தில இருக்கேன். அந்த நேரத்துல போன். அமரிக்காவில இருந்து, நம்ம வெட்டிபாலாஜி இல்ல. புஸ்ஸுங்கொ புஸ். ஒடனே கெளம்பி வா, உங்க ஊரு பொண்ணு மாட்டிகிச்சு மானத்துல. நீ வந்து இஸ்துகினு வான்னு. தங்கமணியோ "ஊர் வேலைய செய்யறதே ஒங்களுக்கு பொழப்பா போச்சு சும்மா இருங்க"ன்னு சொல்ல சரி பிளாஸ்க்க கொண்டா எதித்தாப்புல இருக்குற காளியாகுடிக்கு போய் காப்பி வாங்கியாறேன்ன்னு சொல்லிட்டு பிளாஸ்குல காப்பிய நெறப்பிகிட்டு ஜூட்டு வுட்டுட்டேன். அங்கிட்டு போயி நெலமையை நல்லா மனசுல வாங்கிகிட்டு சர்ருன்னு மானத்துக்கு பறந்து அந்த பொம்பளய பார்த்தா பேயடிச்ச மாதிரி இருக்கு. சரின்னு காப்பிய குடுத்து தேத்தி கூட்டிகிட்டு வந்து சேந்தா இறங்கின பின்ன என் கைய புடுச்சிகிட்டு அழுவாச்சி. சரின்னு மீதி காப்பிய எடுத்து கிட்டு தங்கமணி கிட்ட வந்தா செம டோஸு! எதித்த கடைக்கு போக வர இத்தினி நேரமான்னு. டிராபிக் ஜாமுன்னு சொல்லி சமாளிச்சு பெரிய ரோதனையா போச்சு!
இப்பிடித்தான் ஏதாவது ஏடாகூடமா தோனுது 8 போடலாம்ன்னு பார்த்தா. கொத்தனார் என்னடான்னா போவாத கண்டம் இல்ல பறக்காத் ஹெலிகாப்டர் இல்லன்னு சொல்றார். மங்கை என்னான்னா 250 பேருக்கு பயிர்ச்சி மேலும் 250 பேருக்கு அப்டீன்னு சர்ருன்னு பறக்கறாங்க. முத்துலெஷ்மியோ வயலின்ல பின்னி பெடலெடுத்து ஹய்யோ நான் என்னத்த சாதிச்சு கிழிச்சேன்ன்னு நெனச்சி பார்த்தா ஜீரோ தான். சரி முயர்ச்சி பண்றேன்!
நெசமான 1. 1966 நவம்பர் 13 ஞாயித்து கிழமை விசாக நட்சத்திரம், விருச்சிகராசி, துலா லக்னம், லக்கனத்துல சூரியன் புதன் சுக்ரன் கேது எல்லாம் கூட்டனி போட அதுல சுக்ரன் வேற உச்சம், அடுத்து 2ல சந்திரன், 5ல சனி, வேஷ ராகு, கடகத்துல 10ல குரு உச்சம், லாபத்துல செவ்வாய்ன்னு ஜெக ஜோரா நான் பிறந்ததே ஒரு பெருமையான விஷயம் தானே!
2. படிக்கும் காலம் முதலே சரியான வால் பையன். விஷமம் எங்க அம்மாவால தாங்க முடியாத அளவு வால் பையன். அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும். இப்பவும் எங்க அம்மா அதை சொல்லி சொல்லி மாஞ்சு போவாங்க. "இவன் தூங்கறான்ன்னு ஏதும் பேசிடாதீங்கப்பா"ன்னு சொல்லுவாங்க. இது கூட எனக்கு ஒரு பெருமையான விஷயம்.
3. ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதெல்லாம் கலாய்க்கும் போது என் பாணியே தனியா இருக்கும். அதனால என்னை சுத்தி எப்போதும் கூட்டம் ஜாஸ்த்தியா இருக்கும். பெண் நண்பிகளும் அதிகம். காரணம் என் கண்ணியம் அத்தனை பேருக்கும் ஏற்படுத்திய நம்பிக்கை. 1 மாதம் முன்பு கூட பெங்களூரில் இருந்து மாலா(சந்தானம்) என்ற பெண் நண்பி போனில் என்னை அப்படியே கல்லூரிகாலத்துக்கு அழைச்சுட்டு போனா. தேங்ஸ் மாலா!இப்படியாக எனக்கு நட்பு வட்டாரம்...பெருமைக்கு சொல்லலை நிஜாமாகவெ சொல்கிறேன், உங்களை எல்லாம் கம்பேர் செய்தால் ரொம்பவே அதிகம். இது கூட எனக்கு பெருமை தான்.
4. பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம்/பேச்சு/ டான்ஸ் என எல்லாம் கலக்கியது உண்டு. அதே போல் பின்னாலில் அபுதாபிதமிழ்சங்கத்தில் நல்லாவே கலக்கியிருக்கேன். இப்போ நாங்கள் ஒதுங்கி கொண்டு நெறைய புது பசங்க கலக்குறாங்க! விசு/வலம்புரிஜான்/காளிமுத்து/மேத்தா/நித்யாஸ்ரீ/சஞ்சய் சுப்ரமணியம் இன்னும் கணக்கு நீண்டு போகும், எல்லாரையும் கொண்டு வந்து மாரடிச்சாச்சு.( நான் துபாயில் இருந்தாலும் அபுதாபிதான் என் தாய்வீடு மாதிரி)
5. உதவின்னு கேட்டா ஓடிப்போய் நிக்கும் முதல் ஆள்தான் நான். முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். அதுக்காக நான் பெருமை பட்டுக்கறேன். என் தற்பெருமையிலே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.
6. என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். எனக்கு பிளாட்ஃபாரத்தில் படுத்து தூங்கவும் தெரியும். ஹில்ட்டனில் ரூம் போட்டு தூங்கவும் தெரியும். எல்லாத்துக்கும் எப்பவும் தயாராகவே இருப்பேன்.
7. என் கல்யாணம்! வாவ்! இப்போது மட்டுமல்ல எப்போதும் பெருமைப்பட்டுக்கும் விஷயம். 1995 ஜூன் 2ம் தேதியை மறக்க முடியுமா என்னால். கச்சேரி, சாப்பாடு, வந்த வி.ஐ.பிக்கள் என ஒரு கலக்கலான கல்யாணம். வலையப்பட்டிதவில், திருவிழா ஜெய்சங்கர், முதல் நாள், கல்யாணத்துக்கு திருவாலப்புத்தூர் TAK & குரூப், மாலை ரிஷப்ஷனுக்கு கத்ரி கோபால்நாத் ஸாக்ஸ்,கன்யாகுமரி வயலின்,T.H.வினாயக்ராம் கடம், பெங்களூர் ராஜசேகர் மோர்சிங், என தூள் கிளப்பப்பட்ட கல்யாணம்.
8. அதுபோல் நான் பெருமைபட்டுக்கும் விஷயம் இது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என் ஞாபக சக்தி! இது என் நட்பு வட்டாரம் மட்டுமல்ல என் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யமாக தோன்றும்.
9. என் நகைச்சுவை. இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு விட்டேன். முன்னாடி காலேஜ் சமயத்தில் கண்ணாபின்னான்னு கலாய்ப்பேன். அது அபத்தமாக கூட இருக்கும் அப்படித்தான் ஒரு பால் வண்டி காரர் பஸ்ஸில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் வண்டி பால் முழுக்கு அவர் மேல் ஊத்திகிடக்கு. அப்போ நான் "எல்லாருக்கும் இன்னிக்கு செத்தா நாளைக்கு பால், இவரு பால்காராச்சா அதனால இன்னிக்கே பால்"ன்னு கமெண்ட் அடிச்சேன். என் நண்பன் டக்குன்னு என்னை அடிச்சுட்டான். அத்தோட அடுத்தவங்களை புண்படுத்தும் நகைச்சுவைகளை விட்டு விட்டேன்!
10. அபிபாப்பா,தம்பிபாப்பா, அபிஅம்மா இவங்க என் முக்கியமான பெருமைகள்.
ஆஹா! 10 ஆயிடுச்சா, பரவாயில்லை மங்கை/முத்துலெஷமி ஆளுக்கு ஒன்னு குறைச்சு போட்டிருக்காங்க அதனால மீதி 2 அவங்களுக்காகன்னு வச்சுக்கோங்க!
July 1, 2007
டாக்டர்.ராமமூர்த்தி M.B.,B.S., F.R.C.H(Lon) Of மயிலாடுதுறை
நான் மட்டுமல்ல மயிலாடுதுறைவாசிகள் அத்தனை பேருக்கும் இவரை தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. சுத்து வட்டார அத்தினி கிராம மக்களுக்கும் இவர் கிட்டத்தட்ட தெய்வம் மாதிரிதான்.
எனக்கு தெரிஞ்சு அவருக்கு 70 வயதுக்கு மேல இருக்கும். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் முடிகொண்டான் என்னும் கிராமத்தில் பிறந்து வள்ர்ந்து படித்து டாக்டராகி மயிலடுதுறையில் செட்டிலாகி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கௌரவ டாக்டராக (அதாவது சம்பளம் வாங்கமல் உழைப்பது-அப்போது அது நடைமுறையில் இருந்தது, இப்போது இல்லை) இருந்து கொண்டே ஒரு கிளினிக் ஆரம்பித்து ஏழைகளுக்கு முடிந்த வரை இலவசமாக பணி செய்து தனக்கு வரும் சாம்பிள் மாத்திரைகளை அவர்களுக்கு கொடுத்து அப்பப்பா அவரின் குணம் யாருக்கும் வராது.
நான் சின்ன வயசா இருக்கும் போது அவரின் ஃபீஸ் நம்பினால் நம்புங்க 1 ரூபாய் தான். மாத்திரை கூட 10 பைசா ரேஞ்சுக்குதான் எழுதி தருவார். விலைவாசி ஏற ஏற அவர் பீஸ் ஏத்திக்காமலே இருந்ததால் 1 ரூபா ஃபீஸா தர மக்கள் வெக்கப்பட்டு 2 ரூபாயா கொடுக்க ஆரம்பிச்சு இப்போ நான் போன போது 10 ரூபாய்க்கு வந்து விட்டார்.
அவருடைய கிளினிக் அத்தனை ஒரு சுத்தமாக இருக்கும். அழகான ரோஸ்வுட் டேபில்/சேர் இருக்கும். ஆனால் அதில் அவர் ஒரு முறை கூட உக்காந்து பார்த்ததில்லை. அது போல் சட்டை போட்டும் பார்த்ததில்லை. கை வைத்த பனியன், தோளில் ஸ்டெத்தை துண்டு மாதிரி போட்டிருப்பார். அது போல் அவர் பேண்ட் போட்டு மயிலாடுதுறையில் யாரும் பார்த்ததில்லை. அதுபோல் பேஷண்ட் உட்கார ஒரு ஸ்டூல் இருக்கும் அதில் உட்கார வச்சி அவர் வைத்தியம் பார்த்ததே இல்லை. அப்படியே நின்னுகிட்டே பார்த்து பேசி பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்து அனுப்பி விடுவார். ஆனால் கண்டிப்பாக மாத்திரை வாங்கியவுடன் அவரிடல் வந்து காட்டிவிட்டு போக சொல்லுவார். காரணம் அவர் எழுத்து மயூரா பார்மஸிக்கும் ஆண்டவனுக்கும் மட்டுமே புரியும். சில சமயம் மயூரா பார்மஸி தப்பு செஞ்சுட்டா என்ன பண்ணுவது என்பதால் அவரிடம் காட்டி செல்ல வேண்டும்.
எங்க ஊர்ல இருக்கும் டாக்டரிலேயே அதிகம் கூட்டம் வரும் டாக்டர் இவர்தான். ஆனால் கிளினிக் எப்பவும் காலியாவே இருக்கும். ஏனனில் ஒரு பேஷண்ட்க்கு இவர் எடுத்து கொள்ளும் நேரம் 5 நிமிடம் மட்டுமே. அது போல் இவர் நோயை டயகனைஸ் செய்வது போல் சுத்து வட்டாரத்தில் வேறு யாரும் இவருக்கு நிகரில்லை எனலாம்.
மத்த பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் கூட செகண்ட் ஒப்பீனியனுக்கு இவரிடம் தான் அனுப்புவார்கள் சில கிரிட்டிகள் கேஸ்களுக்கு. இவருக்கு ஒரு மகன் பெயர் சீனிவாசன் எனக்கு ஒரு வருஷ ஜூனியர் 1 முதல் 12 படிக்கும் வரை. இப்போது தமிழ்நாட்டிலேயே புகழ் வாய்ந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுனர். அவர் மனைவியும் அதேபோல் புகழ் பெற்ற டாக்டர். (அனேகமாக டாக்டர் டெல்பின் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு-சென்னையில்தான் இருக்கிறார்) அப்பாவுக்கு தப்பாத பிள்ளை. அப்பா லெட்டர் கொடுத்து விடுவார். பையன் காசு வாங்காமல் அறுவை சிகிச்சை செய்வார். அப்படி ஒரு குணம்.
எங்க ஊர்ல உள்ள அத்தனை குடும்பமும் அவருக்கு அத்துப்படி. நான் போனால் என்னய விட்டுட்டு பெரியப்பா/சித்தப்பா/அப்பா/மாமா/ அப்படீன்னு ஆரம்பிச்சு கிளப்பிளே இந்த வருஷம் யார ப்ரசிடெண்ட்டா ஆக்க போறேள்ன்னு ஆரம்பிச்சு எல்லாத்தையும் பேசிடுவார்.
சென்னையில் கிரிக்கெட் மேட்சுன்னா கண்டிப்பா ஆஜராகிவிடுவார். அதுபோல கார்த்திகை அன்னிக்கு வைத்தீஸ்வரன் கோவிலுக்கு செல்வமுத்துகுமரன் அபிஷெகத்துக்கு எதுத்தப்புல உள்ள டாக்ஸி ஸ்டாண்டில் கார் பிடித்து கொண்டு போயிடுவார். அன்னிக்கு அந்த கை பனியனும் கிடையாது மேல் துண்டுதான். அவருக்கு தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், ஏழை,பணக்காரன், ஜாதி,மதம் எதுவுமே கிடையாது.
காலை 7.00 மணிக்கு திறந்துடுவார். மதியம் 1.00 சாத்திட்டு வீட்டுக்கு உள்ள போயிடுவார். மாலை 3.30க்கு ஆரம்பிச்சு டான்னு 7.00க்கு உள்ளே போயிடுவார். தெய்வ கடாச்சமா இருப்பார்.
அவருக்கு நண்பர்ன்னு பார்த்தா டாக்டர் நாராயனன் L.I.M அவர்கள் தான். அவர் எதித்த வீடு. ரெண்டு பேரும் காம்பவுண்ட் சுவத்துல கை வச்சுகிட்டு (நடுவே பிசியான ரோடு) பேசிக்கிட்டே இருப்பாங்க. ஒரு தனி கேரக்டர் அவர்.
எனக்கு ஒரு ஆசை. அவர் வாழும் காலத்திலேயே அந்த பட்டமங்கல தெருவுக்கு "டாக்டர் ராமமூர்த்தி சாலை"ன்னு பேர் வச்சு மயிலாடுதுறை நகராட்சி நல்ல பேர் எடுத்துக்கனும். விதை போட்டுவிட்டுதான் வந்திருக்கேன். பார்ப்போம்!!