முதல்ல மணி அய்யரை பத்தி சொல்லியாகனும் . அவர் கல்யாண வீட்டில் சமையல் செய்யும் ஒரு சமையல்காரர் . அவர் தான் சீஃப் குக் . அவர் கிட்ட ஒரு பத்து பசங்க வேலை செஞ்சாங்க . ரொம்ப பெரிய பேமஸ் குக்ன்னு சொல்ல முடியாது . ஆனா எல்லா கல்யாண தேதியிலயும் புக் ஆகிடுவார் . அவருக்கு அவர் வயசுக்கு இணையான நண்பர்கள் அவ்வளவா இல்லை . எல்லா நேரமும் எங்க கூட தான் வெட்டி அரட்டைல இருப்பார் . ARC ஜூவல்லரியின் ரிக்ஸின் பேக்ல தேர்ந்தெடுத்த கும்பகோணம் கொழுந்து வெத்தலை வச்சிருப்பார் . பிலிம் ரோல் டப்பாவிலே மஞ்சள் கலந்த சும்மா வெண்ணெய் போல சுண்ணாம்பு இருக்கும் . ராஜேந்திரன் கடையில் 2 ரூபாய்க்கு பன்னீர் புகையிலையும் ,2 ரூபாய் மைதீன் புகையிலையும் வாங்கி கசடு எடுத்து கலந்து ஜிமிக்கி டப்பாவில் வச்சிருப்பார் . அது போல வறுத்த நெய் சீவல் ஒரு பால் கவரில் இருக்கும் . இது தான் அவர் செல்லப் பெட்டி ஸாரி செல்ல பேக் . இது தவிர அவருக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருப்பது அவரை பத்தின உபரிச் செய்தி.
நாங்க வெட்டியா நடத்தும் அரட்டைக் கச்சேரியில் அவருக்குப் பிரதான இடமுண்டு . சியாமளா கோவில்ல அப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் நான்,குரங்கு ராதா, தாஸ் , கணேசன் எல்லாம் கோமதிக்கு ஆண்டாள் கொண்டை போட்டா எப்படி இருக்கும்ன்னு சிலாகிச்சு பேசிகிட்டு இருந்தப்ப திடீர்ன்னு வந்துட்டார். "என்னடா குழந்தகளா, நானெல்லாம் அந்த காலத்துல படிச்சுண்டே வேலைக்கு போய் சம்பாதிச்சவனாக்கும் , இந்த கால குழந்தைகள் ஏன் தான் இப்படி வீணா போறதுகளோ " ன்னு அலுத்துகிட்டார் . உடனே ராதா " மாமா மகாதான தெருவிலே நேஷனல் இருக்குன்றதால அந்த மகாபாவி மணி சண்டாளன் காவிரிக்கு கூட போகமாட்டான் அதான் இன்னிக்கு ஜாரணி கரண்டி வச்சுண்டு அலையரதுன்னு உங்காத்து மொட்ட பாட்டி சொன்னாளே " ன்னு சொன்னான் . அதுக்கு அவர் " அவ கெடக்காடா ராதா எண்பாதாகறது , காது கேக்கலை ஆனா வாய் மட்டும் மாயுரநாதருக்கும் ரங்கநாதருக்குமா இருக்கு , அத விடுங்கடா நேக்கு உங்களால ஒரு உபகாரம் வேணுமே"ன்னார் .
நான் " பீடிகை பலமா இருக்கச்சயே நெனச்சென் என்னா வேணும் அந்த வெத்தல பேக்கை தாங்க " ன்னு சொன்னேன் . அதுக்கு அவர் " கொழந்தே ரெண்டு மாசம் முன்ன ஆனைதாண்டவபுரத்துல அப்பசி இருவத்து நாலு இருவத்து அஞ்சுல ஒரு கல்யாணம் ஒத்துண்டேன். 450 ரூவாய்க்கு பிசிறி பிசிறி ஒத்துண்டான். சுமாரான கல்யாணம் தான். இப்ப நேக்கு பரசலூர்ல இருந்து ஒரு அம்சமான பார்ட்டி மாட்டினான். 650 ரூவா . ஆனா சமையல் டேஸ்ட் தெரிஞ்சவன் . அதையும் ஒத்துண்டேன் நோட் த பாயிண்ட் உங்கள நம்பி ஒத்துண்டேன் . ஹெல்ப் பண்ணு வேளா" ன்னு சொன்னார். " நாங்க என்ன செய்யனும் மாமா இதுல " இது ராதா . அதுக்கு மணிஅய்யர் "கொழந்தே மொதோ பார்ட்டி பொண் ஆத்துல சண்டை எல்லாம் முடிஞ்சு பரிசம் போட வர்ரதுக்கு ராத்திரி 10 ஆகும். அவா வந்த பின்ன தான் சாப்பாடு எல்லாத்துக்கும். அது வரைக்கும் ஒரு குஞ்சு குளுவானுக்கும் பச்சத் தண்ணி கூட கிடையாது. ரெண்டாவது பார்ட்டி வீட்ல டாண்ணு வெள்ளகாரனாட்டம் ராத்திரி 7.00க்கு சாப்பாடு முடிஞ்சுடும். வண்டி சத்தம் தரேன்னு சொல்லிருக்கான். நான் ஏழரைக்கு ஆனைதண்டாவரம் வந்துடறேன். நீங்க அது வரை சித்த சமாளிச்சுண்டு இருந்தா போதும் மொதோ பார்ட்டி வீட்டுல, நா உங்களுக்கு தலைக்கு 10 ரூவா தந்துடறேன்"
அதுக்கு தாஸ் " தலைக்கு எதுக்கு பணம் கைக்கு இருவத்தியஞ்சா குடுத்தா நான் ரெடி இவனுங்களைப் பத்தி தெரியாது "ன்னு பட்டுன்னு ஒத்துகிட்டான் . உடனே ராதா டக்குன்னு சட்டையை கழட்டி பூணூலால சர் புர்ன்னு முதுகை சொறிஞ்சுகிட்டு பரக் பரக்குன்னு கஷ்கத்தை சொறிஞ்சகிட்டு "மாமா உம்ம மேனரிசம் அப்படியே இருக்கா "ன்னு கேட்டான் . அதுக்கு அவர் "கண்ணே பட்டுடும் போலருக்குடா குழந்த தாசில்தார் ஆத்து குழந்த போல இல்லடா எங்காத்து பையனாட்டம் இருக்கே "ன்னு பூரிச்சு போனார் . அதுக்கு ராதா "நேக்கு அப்பன்னா நாப்பதா வெட்டுங்கோ "ன்னு சொன்னான் . எனக்கு தான் யோசனையா இருந்துச்சு நம்ம கிளாஸ்ல படிக்கிறவன் எவனாவது அந்த கல்யாணத்துக்கு வந்துட்டா ஸ்கூல் முழுக்க தண்டோரா போட்டுடுவானுங்களேன்னு ஒரு யோசனை . ஆனா ஆட்டோமேட்டிக்கா வாய்ல இருந்து வார்த்தை வருது "அறுவது குடுத்தா ஐயா ஆட்டைக்கு ரெடி "ன்னு .
உடனே அய்யரு " நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் அங்க போயி சும்மா பாவலா காமிச்சா போதும் , நாலு மொழம் வேஷ்டி காசி துண்டுன்னு போகணும் யார் கேட்டாலும் மாமா இப்ப வந்துடுவார், அவா ஆத்து மொட்டபாட்டிக்கு பேதியாயிண்டு இருந்துச்சி அதனால பாலாஜி டாக்டராண்ட அழச்சிண்டு போயிருக்கார் இப்ப வந்துடுவார்ன்னு சொல்லிகிட்டு இருந்தா போதும் "ன்னு சொல்லிகிட்டே இருக்கும் போது அந்த வழியா போன அவர் அம்மா " கட்டேல போறவனே நேக்கேண்டா போகணும் உன் ஆத்துகாரிக்குன்னு சொல்ல வேண்டியது தானே "ன்னு வெடிச்சுட்டு போனாங்க. அப்ப அய்யரு " அவேம்பா இவளுக்கு சீக்கிரம் மோட்சம் கொடுத்து கூட்டிக்க கூடாதா , சரி கொழந்தங்களா நாளைக்கு சாயரச்சை நாலு மணிக்கெல்லாம் அங்க ஆஜராகிடனும் , அவா ஆத்துல சொல்லிருக்கேன் என்னன்ன பாத்திரம் வாடகைக்கு எடுத்து வைக்கனும் எது எதை ஊற வைக்கணும்னு , போகும்போது ஆத்துல மாமிட்ட சொல்லி பெரிய ஜல்லி கரண்டியும் செப்பு தேக்சாவையும் தூக்கிண்டு போங்கோ பஸ்ல போயி இறங்கின பின்ன அவா ஆத்துல வண்டி சத்தம் வாங்கிடுங்கோ நா சுருக்க வந்திடறேன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார்.
இந்த நாலு பேர்ல ராதாகிட்ட மட்டும் தான் பூணூல் இருக்கு மத்தவங்க என்னா பண்றதுன்னு யோசிக்கும் போதே ராதா கவலைய விடுங்கடா எங்காத்து சோப்பு டப்பாவிலே ரெண்டு மூணு இருக்கு எடுத்துண்டு வார்ரேன்ன்னு சொல்லிட்டு கிளம்பினான் . அடுத்த நாள் நாலுமுழம் வேஷ்டி , கைவச்ச பனியன் , கதர் சட்டை , காசித்துண்டு கையிலே மஞ்ச பையோட கோமதி வீட்டுல மூணு மணிக்கு ஆஜர் ஆகியாச்சு ! கோமதி எங்களை பார்த்து களுக்குன்னு சிரிச்சுகிட்டே உள்ளே ஓடி " அம்மா இங்க பாரேன் அப்பா ஆபீஸ்ல சேந்திருக்கும் நாலு அப்ரண்டீஸ் வந்திருக்கா "ன்னு சொல்லிக்கிட்டு காது ஜிமிக்கி ஆட பாவாடை தூக்கி பிடிச்சு கிட்டே துளசி மாடம் தாண்டி முற்றத்துல ஓடினா எங்க மனசையும் சேர்த்து எடுத்துக்கிட்டு . பின்ன மாமி பெரிய தேக்சாவையும் ஜல்லி கரண்டியையும் எங்க முன்னாடி கொண்டு வந்து வச்சாங்க. சரின்னு அதை தூக்கிட்டு வெளிய வந்தாச்சு . தேக்சாவை தூக்க 3 பேர் வேணும் அவ்வளவு பெருசு . என்னையே உள்ள வச்சு தூக்கிட்டு போகலாம் . என்னைய தூக்க விட்டுட்டா என்ன பண்றதுன்னு நான் டக்குன்னு மாமா வேட்டிய உருவி ஜல்லி கரண்டில சுத்தி சும்மா போருக்கு ஏக்கே 47 தூக்கிட்டு போற மாதிரி கிளம்பிட்டேன் . மாமா வேஷ்டி திண்ணை கொடியிலே காய்ஞ்சுதுன்னு இந்த இடத்துல சொல்லிக்கிறேன் .
இனி நாங்க எப்படி சமையல்ல தூள் கிளப்பினோம்ன்னு 2ம் பாகத்திலே சொல்றேன் ( பதிவு பெருசா ஆகிடுச்சு அதனால)
me the firstuu??
ReplyDelete//
ReplyDeleteஇது தவிர அவருக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருப்பது அவரை பத்தின உபரிச் செய்தி.
//
இது என்ன உபரி செய்தியா ? இதுதாங்க முக்கிய செய்தி
:))
ReplyDeletenext part ku waiting
//
ReplyDeleteஅந்த வழியா போன அவர் அம்மா " கட்டேல போறவனே நேக்கேண்டா போகணும் உன் ஆத்துகாரிக்குன்னு சொல்ல வேண்டியது தானே "ன்னு வெடிச்சுட்டு போனாங்க
//
:-)))))))))
//
ReplyDeleteதுர்கா|thurgah said...
:))
next part ku waiting
//
ரிப்பிட்டேய்
:))))
ReplyDeleteMichael madana kama rajanaaaaa:))))
waiting wiating waiting sikkiram update pls
///காது ஜிமிக்கி ஆட பாவாடை தூக்கி பிடிச்சு கிட்டே துளசி மாடம் தாண்டி முற்றத்துல ஓடினா எங்க மனசையும் சேர்த்து எடுத்துக்கிட்டு .///
ReplyDeleteஅடடா, அசத்திட்டேள் போங்கோ!
மக்கா! எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை! ஃபுட் பாய்சன், நான் மட்டுமில்லை என் நண்பர்கள் நால்வரும் அதனால இன்னிக்கு லீவ் போட்டாச்சு!உங்க மமெண்ட்க்கு பதில் சொல்ல முடியுமான்னு தெரியலை, ஆனா மாடை கட்டி போட்டாச்சு:-)) கண்டிப்பா பாகம் 2 போடும் போது பதில் சொல்றேன்!!!
ReplyDelete//உடனே ராதா டக்குன்னு சட்டையை கழட்டி பூணூலால சர் புர்ன்னு முதுகை சொறிஞ்சுகிட்டு பரக் பரக்குன்னு கஷ்கத்தை சொறிஞ்சகிட்டு "மாமா உம்ம மேனரிசம் அப்படியே இருக்கா "ன்னு கேட்டான்//
ReplyDeleteநல்ல காமெடி
\\ஓடினா எங்க மனசையும் சேர்த்து எடுத்துக்கிட்டு\\
ReplyDeleteம் அப்போவே நூல் விட்டிரோ...பலே..பலே
பாதியிலேயே முடிச்சிட்டீங்களே அண்ணே..
ReplyDeleteநெக்ஸ்ட் பார்ட் நாளைக்குதானே?
Food Poison? Get well soon
ReplyDeletewaiting for next episode.
" நான் டக்குன்னு மாமா வேட்டிய உருவி ஜல்லி கரண்டில சுத்தி சும்மா போருக்கு ஏக்கே 47 தூக்கிட்டு போற மாதிரி கிளம்பிட்டேன் . மாமா வேஷ்டி திண்ணை கொடியிலே காய்ஞ்சுதுன்னு இந்த இடத்துல சொல்லிக்கிறேன் . "
ReplyDeleteசெம நக்கலுப்பா
//காது ஜிமிக்கி ஆட பாவாடை தூக்கி பிடிச்சு கிட்டே துளசி மாடம் தாண்டி முற்றத்துல ஓடினா எங்க மனசையும் சேர்த்து எடுத்துக்கிட்டு///
ReplyDeleteசூப்பர்..அருமையா இருக்கு
//இது தவிர அவருக்கு கோமதின்னு ஒரு பொண்ணு இருப்பது அவரை பத்தின உபரிச் செய்தி//
ReplyDeleteஅடியாள் கணக்கா ஒரு பையன் இருக்காங்கறதும் இன்னொரு உபரிச்செய்தி!
:))))
ReplyDeleteசமைக்க போனதை எழுதும்போதே அண்ணனுக்கு ஃபுட் பாய்ஸன்ன்னா..அப்ப அன்னிக்கு சாப்பிட்டவங்கல்லாம் இன்னும் உயிரோடவா இருப்பாங்க :))
// தாசில்தார் ஆத்து குழந்த போல இல்லடா எங்காத்து பையனாட்டம் இருக்கே "ன்னு பூரிச்சு போனார் . அதுக்கு ராதா "நேக்கு அப்பன்னா நாப்பதா வெட்டுங்கோ "ன்னு சொன்னான்//
ReplyDeleteஅட அந்த் ராதா தானா?!?!?!?
ஆமாம் இப்ப அவரு எங்க இருக்காரு?
இல்லை தனியா அவர பத்தி பதிவு உண்டா?
ஆஹா சூப்பருண்ணே... :)
ReplyDelete@ஆயில்யன்
ReplyDelete//
அடியாள் கணக்கா ஒரு பையன் இருக்காங்கறதும் இன்னொரு உபரிச்செய்தி!
//
இது உபரி சய்தி இல்லிங்கோ வார்னிங்
அபி அப்பா நீங்க எங்கியோ போயிட்டேள். மணி சங்கர் அய்யரைப்
ReplyDeleteபத்தியும் எழுதறேள், மணி அய்யரைப்
பத்தியும் எழுதறேள். கலக்கிட்டீர் போங்கோ.
சமையல் உதவி செய்யப் போனா வயிறு சரியில்லையா.
ReplyDeleteநல்ல வேளை வேற உதவிக்கு வேஷம் போடாமப் போனீங்களேஏ:))
பூணலாவது கிடைச்சுதா???
படிச்சாலே தெரியுதே, சுகாதாரம் இல்லாத சமையல்காரங்கனு! அதான் ஃபுட் பாய்ஸன்:))
ReplyDeleteசீக்கிரம் நலம் பெற்று இன்னும் பதிவுகள் போட்டு சிரிக்க வைக்க வாழ்த்துக்கள் (கொஞ்சம் சுயநலம் தான்:-)
//எல்லாம் கோமதிக்கு ஆண்டாள் கொண்டை போட்டா எப்படி இருக்கும்ன்னு//
ReplyDeleteமலரும் நினைவுகளில் தொல்ஸ் அண்ணா...!
ரொம்ப யோசிச்சி யோசிச்சி ரசிச்சிருப்பீங்க போல!
சமைக்குற மாதிரி பவ்லா பண்ண போன கதைனு ல இருக்கனும்... அடுத்த பகுதி படிக்காமலே உங்க மேல உள்ள நம்பிக்கையில் இத சொல்லுறேன்....
ReplyDeleteகோமதி.... மதி போல் இருப்பா போல இருக்கே... இன்னும் கோமதி தானா இல்ல Goneமதியா?
ஹிஹிஹி, கெக்கேபிக்குணி, சொல்றதை வழிமொழியறேன். மத்தபடி முடிவு தெரியும் அதனாலே அடுத்த பதிவைப் படிக்காமலேயே போறேன். :P
ReplyDeleteIppothaiku Attendence pottukaren, present sir...adutha pathivayum padichitu karuthu sollaren...
ReplyDeleteஅபி அப்பா said...
ReplyDeleteமக்கா! எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை! ஃபுட் பாய்சன், நான் மட்டுமில்லை என் நண்பர்கள் நால்வரும் அதனால இன்னிக்கு லீவ் போட்டாச்சு!உங்க மமெண்ட்க்கு பதில் சொல்ல முடியுமான்னு தெரியலை, ஆனா மாடை கட்டி போட்டாச்சு:-)) கண்டிப்பா பாகம் 2 போடும் போது பதில் சொல்றேன்!!!
September 26, 2007 6:29 PM
adada get well soon...
ஹ்ம்ம்ம். அடுத்த பாகம் படிக்கப் போறேன்.
ReplyDeleteஅட்டகாசம் பண்ணி இருக்கீங்க போல மாயவரத்துல அதான் ஓடி ஒளிஞ்சிருக்கீங்க போல துபாயில்...
ReplyDelete:)
:-)
ReplyDeleteசூப்பர்:))
ReplyDelete//காது ஜிமிக்கி ஆட பாவாடை தூக்கி பிடிச்சு கிட்டே துளசி மாடம் தாண்டி முற்றத்துல ஓடினா எங்க மனசையும் சேர்த்து எடுத்துக்கிட்டு//
ReplyDeleteஅப்படிங்களா?
கலக்கிப்புட்டேள்ணா.. பேஷ்.. பேஷ்.. ரொம்ப நன்னா எழுதியிருக்கேள் இந்த பதிவை.. இப்படியே கண்டினியூ பண்ணுங்கோ..
ReplyDelete