பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 30, 2007

அய்யனார் இன் அரட்டை அரங்கம் - பாகம் # 1

வர வர ரொம்ப போரடிச்சு போச்சுப்பா, யார் மூச்சிய பார்த்தாலும் தென்கச்சி பூமிநாதன் முகம் மாதிரியே இருக்கு!(பின்ன எத்தன நாளைக்கு தான் வெளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி இருக்குன்னு சொல்றது), சரி நம்ம அரட்டை அரங்கம் விசு அழும் போது செம டமாஷா இருக்கும் அதனால அவரை கூப்பிட்டு அமீரகத்தையே சிரிக்க வச்சுடலாம்ன்னு முடிவு பண்ணி அண்ணாச்சி கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ணியாச்சு. அவரும் ஒத்துகிட்டு மூட்டை முடிச்சு, அவரோட சீனிவாசன், ராம் ன்னு படை பலத்தோட வந்து துபாய்ல இறங்கியாச்சு. வசந்த பவன் ஹோட்டல்ல செலக்ஷன் ஆகுது. தலைப்பே யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதே. சரி நாம அரேஞ் பண்ணிட்டு நாம கலந்துகாட்டி கவுரவ குறைச்சலா போயிடுமேன்னு அய்யனார், குசும்பன், ஜஸீலா, அபிஅப்பா(பருப்பு இல்லாத கல்யாணமா), எல்லாம் போய் செலக்ஷ்ன் கூட்டத்துக்கு போனோம். அய்யனாரை தவிர அத்தினெ பேரும் செலக்ஷன்ல அவுட்டு. அது எப்படி அய்யனார் மாத்திரம் செலக்ட் ஆனார் என்பதே தனி கதை.

கருத்து என்ன என்பது எல்லாம் முக்கியமில்லையாம், வித விதமா அய்ய்ய்ய்ய்ய்யா, அய்யாஆஆஆஆ, ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ இப்படி பிச்சை காரன் கூப்பிடுவது போல கெஞ்சனும் விசுவை பார்த்து. அவரின் சிஷ்ய கோடிகளுக்கு தெரியும் எந்த அய்யா ராகம் விசுவுக்கு பிடிக்கும்ன்னு. அத வச்சி செலக்ட் பண்ணிடுவாங்க. இதுல அய்யனார் எப்படின்னு கேக்குறீங்களா? நம்ம குசும்பன் அவுட் ஆன பின்ன பக்கத்தில் இருந்த அய்யனார் எழுந்தாரு. செலக்ஷன் கமிட்டி "உங்க பேர் என்ன?"ன்னு கேக்க அதுக்கு அய்யனார் "அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய"ன்னு சொல்லும் முன்னமே எல்லா செலக்டர்சும் கோரசாக "யூ ஆர் செலக்டட்"ன்னு கத்த சரின்னு உக்காந்த அய்யனார் குசும்பனை பார்த்து "ஏண்டா நான் பேரை சொல்லிகிட்டு இருக்கும் போது காலை மிதிச்சன்னு கேக்க "நீ செலக்ட் ஆக கூடாதுன்னு தான் மிதிச்சேன் ஆனா அதுவே உனக்கு பாஸிடிவ் ரிசல்ட் குடுக்கும்ன்னு நான் எதிர் பார்க்கலையே, ஆனா பாரு நான் அந்த மேடையிலே வந்து எல்லாரையும் கவர்ந்து டிவில என் போட்டோவுக்கு ரவுண்ட் கட்டி தாய் மண்ணே வணக்கம் பாட வைக்கல என் பேரை மாத்திக்க"ன்னு வீர சபதம் போட்டுட்டு வெளியே வந்துட்டார். இனி நேரா அரங்கத்துக்கு போவோம் வாங்க!

நார்மல் பேண்ட், ஷர்ட், மூஞ்சிய பொத்தி அழ தோதா ஒரு துண்டு தோளில் போட்டு கிட்டு உள்ளே வரும் போதே "த்த்த்தாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் மண்ணேஏஏஏஏ"ன்னு ஒலிப்பதிவாளர் பாட்டை போட்டு விட பாதி வழியிலேயே நின்னு கிட்டு விசு அழுவ ஆரம்பிச்சுட்டார். பின்ன அவர் சிஷ்ய கோடிங்க சமாதான படுத்தி பாட்டை நிறுத்தி ஒரு வழியா மேடக்கு அழைச்சுட்டு வந்தா வேர்த்து வேர்த்து கொட்டுது அவருக்கு. அவரை சுத்தி ரவுண்டு கட்டி எல்லாம் உக்காந்திருக்க ஒரு சேர் மாத்திரம் காலியா இருக்கு. பின்ன "ஏம்ப்பா சீனிவாசா 18 பேர் செலக்ட் ஆகலையா, ஒரு சீட்டு காலியா இருக்கே"ன்னு கேக்க "இல்ல சார் டேபிள் கிட்ட போய் எட்டி பாருங்க சார் ஒரு 2 1/2 வயசு குழந்தை இருக்கும் பாருங்க, என்ன்மா அய்ய்ய்யா சொல்லுது நாங்க கூட அத்தன ராகமா சொல்ல முடியலை"ன்னு சொல்ல அரட்டை அரங்கம் ஆரம்ப மாகியது.

விசு: இந்த துபாய்க்கு வந்து அரட்டை அரங்கம் நடத்தும் நான் ஒரு விஷயத்தில் மிகவும் கடமை பட்டுள்ளேன். இதோ என் கண் எதிரே இருக்கும் குறுக்கு சந்தில் தன் ரத்தம் சிந்தி தமிழர்களின் வாழ்வை சிறக்க வைத்த விவேகானந்தர் அவர்களை மனதால் நினைத்து கொண்டே இந்த அரட்டை அரங்கத்தை நடத்த ஆரம்பிக்கிறேன். நான் பேசும் வார்த்தகள் இனி விவேகானந்தர் என் உள்ளே இருந்து பேசும் வார்த்தைகள்.(அது நெப்போலியன் இல்லியா???) "

டக்குன்னு கீழே விழுந்து மேடையை நக்கி பின் எழுந்து "நான் செய்வது உங்களுக்கு பைத்தியகாரதனமாக இருக்கலாம் அது பற்றி நான் கவலை படவில்லை ஏன்னா இந்த இடத்தில் கூட விவேகானந்தை பாதம் பட்டிருக்கலாம், இங்கே தலைப்பே குடுக்க வில்லை ஏன்னா எந்த தலைப்பு கொடுப்பது என தோற்றவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள், அதனால் இந்த குழந்தையை அழைக்கிறேன். வாம்மா அந்த டேபிள்ள மேல ஏறி உன் கருத்துக்களை சொல்லும்மா உன் பேர் என்ன?"

குழந்தை: அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா

விசு: சந்தோஷம்மா பேர் என்ன?

குழந்தை:அய்யய்யாஆஆஆஆஆஆஆஆ


விசு: சூப்பர் சபாஷ்டா கண்ணா சரி பேர் சொல்லு

குழந்தை: அய் அய் அய் அய்த்தலக்கா அய்ய்ய்ய்ய்ய்ய்யாஆஆஆஆஆஆஆஅ

விசு: அருமைடா கண்ணா உன்னை பெத்தவங்க புண்ணியம் செஞ்சவங்க, மீதி கருத்த அடுத்த சுத்துல சொல்லனும் ஓக்கேவா

அடுத்து மெதுவா அய்யனார் பக்கத்துல வந்து

விசு: தம்பி, உங்க பேர் என்ன?

அய்யனார்: அய்யனாருங்க

விசு: சபாஷ், நீங்க சொல்லவந்த் கருத்து என்ன?

அய்யனார்: அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா நான் முழு நேர பொறியாளர் இல்லை, பகுதி நேரம் தள்ளு வண்டி தள்ளுவேன் அய்ய்ய்ய்ய்ய்யாஆஆ

விசு: அப்படியாப்பா சபாஷ், அப்படி என்னா வச்சி தள்ளுவ அந்த வண்டில

அய்யனார்: தமிழை வச்சு தள்ளுவேன் அய்ய்ய்ய்யா இப்படியே ஒரு நாளைக்கு ஒரு ஒரு கட்டமா தள்ளிகிட்டே போவேன் அய்ய்ய்யா

விசு: சரி உங்க கருத்தை சொல்லுங்க

அய்யனார்: எனக்கான ப்ரத்யேகமான புன்னகைகளை கொண்ட
அல்லது அப்படி நினைத்துக்கொண்ட பெண் மட்டும்
வெகு சிரத்தையாய் நடனமாடுவாள்.
பாடல்வரிகளை பாவனைகள் மூலமும்
இசையதிர்வை உடலின் மூலமுமாய்
வெகு நேர்த்தியாய வெளிப்படுத்துவாள்.
குறிப்பிட்ட பாடலுக்கு மட்டும் என்றில்லாமல்
அவளுக்கு பிடித்தமான ஒன்றின் துவக்கம் கேட்டவுடன்
எழுந்து ஆட ஆரம்பிப்பாள்.
சுழன்றும் லயித்தும் துள்ளியும் தன்னை மறந்து ஆட ஆரம்பிக்கும்போது போதை கொஞ்சம் வெளிறிப்போகும்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
பொங்குகிறது அவள் முகம்
வரவை மறந்து செலவு செய்து
விரல்கள் விழிகளை சுட்டுகிறது
உயரப் பறந்து கொண்டாட்டுவோம்
விரல்கள் பறக்க ஆரம்பிக்கின்றன.
மாலை நியூயார்க்கில் கேபரே
இரு கைகளும் எல்லா விரல்களும் தன்னையே மீட்டியபடி
இரவில் தாய்லாந்தில் ஜாலி
வெட்கத்தால் ஒரு கையால் முகம் மறைக்கிறாள்
தம்மர தம்மர மஸ்த் மஸ்த்
தன தம்தன தம்தன மஸ்த மஸ்த்
தனதம்தன தம் தம்
என்னாசை தாவுது உன்மேலே
சுழலும் ஒரு ஓவியத்தின் சாயல்களை முன்நிறுத்தியபடி
வெள்ளைப்புறா ஒன்று போனது கையில் வராமலே
துயரத்தில் தாழ்கிறது விழிகள்
பாத சுவடு தேடி தேடி
அடியெடுத்து நடந்தபடி துயரத்தில் மருகுகிறாள்
ஆசைய காத்துல தூதுவிட்டு
முகம் உடல் எல்லாம் சட்டென மாறுகிறது
உற்சாகமும் துள்ளலும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
மாசம் தை மாசம் வாலிபக் காலத்து நேசம்
கிறக்கமும் தவிப்புமாய் தொடர்கிறது நடனம்

காலியான மதுக்கோப்பைகளை நிறைக்கும் துப்பட்டா அணிந்திராத செழித்த சேச்சிகள் மதுவோடு கிறக்கத்தையும் சேர்த்துக் கலப்பர்
பெண், ஈயம், பித்தளை, கட்டுக்களுடைத்து வெளிவரல், விளிம்பின் மொழி, சம உரிமை, இட ஒதுக்கு எல்லாவற்றின் மீதும்
மது நுரைபொங்க படர்கிறது
உடல் மட்டும் தனக்கான கட்டுக்களுடைத்து
நடனமிடத் துவங்குகிறது.

விசு: சபாஷ் சபாஷ்( துண்டால் கண்ணை தொடச்சிக்கறார்) உங்களை போல 100 இளைஞர்கள் விவேகானந்தருக்கு கிடைச்சிருந்தா அவர் துபாய் வந்து பார்த்திபன் வடிவேலு வாய்ல சிக்கி சின்னா பின்னமா ஆகியிருக்க மாட்டார். என்ன ஒரு ஆன்மீகம், நீங்க உங்க கருத்தை சொல்ல வரும் முன்ன இப்ப சொன்னீங்களே ஒரு ஸ்லோஹம் வாவ் நான் பிரம்மிச்சு போய்ட்டம்பா கந்த சஷ்டி கவசம் மாதிரி இது எந்த சஷ்டி கவசம்ப்பா

அய்யனார்: இன்னது ஸ்லேகமா இதுதான் என் கருத்து ன்ன்ன்ன்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா

டக் என்று திரை விழுந்து பின்ன அய்யனாரின் இரண்டு கையையும் பிடிச்சு ரெண்டு பேர் தூக்கிட்டு வந்து எங்க கிட்ட விட்டுட்டாங்க......

மீதி அடுத்த பாகம்......

31 comments:

  1. மீ த ஃப்ஸ்ட்டூ......

    ReplyDelete
  2. இருங்க போஸ்ட படிச்சிட்டு வர்ரேன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு படிச்சுட்டுவந்து சொல்றேன்

    (இப்டித்தான் சொல்லனுமாமே)

    ReplyDelete
  4. இந்த வாரம் புல்லா கலாய்ப்பு வாரமா?

    //
    அய்யனார் "அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய"ன்னு சொல்லும் முன்னமே எல்லா செலக்டர்சும் கோரசாக "யூ ஆர் செலக்டட்
    //
    ஏன் இந்த கொலை வெறி

    ReplyDelete
  5. //
    அய்யனார்: அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா நான் முழு நேர பொறியாளர் இல்லை, பகுதி நேரம் தள்ளு வண்டி தள்ளுவேன் அய்ய்ய்ய்ய்ய்யாஆஆ

    விசு: அப்படியாப்பா சபாஷ், அப்படி என்னா வச்சி தள்ளுவ அந்த வண்டில

    அய்யனார்: தமிழை வச்சு தள்ளுவேன் அய்ய்ய்ய்யா இப்படியே ஒரு நாளைக்கு ஒரு ஒரு கட்டமா தள்ளிகிட்டே போவேன் அய்ய்ய்யா
    //
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. //
    அய்யனார்: இன்னது ஸ்லேகமா இதுதான் என் கருத்து ன்ன்ன்ன்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா
    //

    முடிக்கறதுக்குள்ள புடிச்சி தூக்கீட்டாங்களோ??

    ReplyDelete
  7. அபிஅப்பாஆஆஆஆ அந்த குழந்தை நான் இல்லைதானே? :O

    ReplyDelete
  8. அந்த கவிதய படிச்சு முடிக்கரதுக்குள்ள அய்யனார் மாமாக்கே கண்ண கட்டிரும்

    ReplyDelete
  9. அந்த கவிஜ எப்படிணே?

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  10. //
    அய்யனார்: அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா நான் முழு நேர பொறியாளர் இல்லை, பகுதி நேரம் தள்ளு வண்டி தள்ளுவேன் அய்ய்ய்ய்ய்ய்யாஆஆ

    விசு: அப்படியாப்பா சபாஷ், அப்படி என்னா வச்சி தள்ளுவ அந்த வண்டில

    அய்யனார்: தமிழை வச்சு தள்ளுவேன் அய்ய்ய்ய்யா இப்படியே ஒரு நாளைக்கு ஒரு ஒரு கட்டமா தள்ளிகிட்டே போவேன் அய்ய்ய்யா
    //
    பாத்து அப்புடியே தள்ளிகினு துபாய்லருந்து ஷார்ஜா இல்ல வேற எங்கினா போயிடபோறாரு

    ReplyDelete
  11. //
    அபிஅப்பா(பருப்பு இல்லாத கல்யாணமா)
    //

    என்ன ஏன்பா வம்புக்கு இழுக்கறீங்க

    ReplyDelete
  12. //
    வித விதமா அய்ய்ய்ய்ய்ய்யா, அய்யாஆஆஆஆ, ஆய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ இப்படி பிச்சை காரன் கூப்பிடுவது போல கெஞ்சனும்
    //
    என்கிட்ட வேணா வந்து டிரய்னிங் எடுத்துகங்க சாமியோவ்

    ReplyDelete
  13. //
    அய்யனார்: தமிழை வச்சு தள்ளுவேன் அய்ய்ய்ய்யா இப்படியே ஒரு நாளைக்கு ஒரு ஒரு கட்டமா தள்ளிகிட்டே போவேன் அய்ய்ய்யா
    //

    நீ தள்ளிகிட்டு போறதெல்லாம் இவ்ளோ வெலாவாரியா சொல்லனுமாய்யா

    ReplyDelete
  14. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. குசும்பனுக்கு தான் அய்யனாரை வச்சு பிழைப்பு ஒடுதுனா நீங்களுமா...

    பாவம்ய்யா அந்த ஆளு....

    ReplyDelete
  16. புதிய கந்த சஷ்டி கவஷம்......
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  17. சி.சூஊஊஊஊஉ

    என்ன சிம்ப்ளி சூப்பர்.அதிலும் அந்த பின் நவீனத்துவக் கவிதை.சொந்தமா மண்டபமா?
    இதுதான் அபி அப்பா
    நேத்தையது சரி செய்யப் பட்டது

    ReplyDelete
  18. J K said...
    மீ த ஃப்ஸ்ட்டூ......
    ///

    ரொம்ப முக்கியம்

    இன்னைக்கி கூட கும்மியா..?

    ReplyDelete
  19. J K said...
    இருங்க போஸ்ட படிச்சிட்டு வர்ரேன்.
    //

    இத இத தான் எதிர் பார்த்தேன்

    ReplyDelete
  20. நிலா said...
    நல்ல பதிவு படிச்சுட்டுவந்து சொல்றேன்

    (இப்டித்தான் சொல்லனுமாமே)
    //

    "வெறி" குட்

    ReplyDelete
  21. மங்களூர் சிவா said...
    இந்த வாரம் புல்லா கலாய்ப்பு வாரமா?
    //

    புள்ள எம்புட்டு கவலைபடுது கலாய்ங்க இவரையும் :)

    ReplyDelete
  22. அய்யனார் ஊரில் இல்லைனதும் ஆளாளுக்கு கலாய்க்கிறாங்க

    ம் நடத்துங்க

    ReplyDelete
  23. //
    பாவனா said...
    மங்களூர் சிவா said...
    இந்த வாரம் புல்லா கலாய்ப்பு வாரமா?
    //

    புள்ள எம்புட்டு கவலைபடுது கலாய்ங்க இவரையும் :)

    September 30, 2007 7:05 PM
    //
    ஏன் இந்த "மர்டர்" வெறி

    ReplyDelete
  24. முடியலைப்பா முடியலை.

    ReplyDelete
  25. மீதி அடுத்த பாகம்......
    yeppa?

    ReplyDelete
  26. ஹி ஹி.... :)

    சீக்கிரமா துணி விழுந்துட்டு!!!

    ReplyDelete
  27. ஹஹாஹா. கவிதை தவிர மத்தது எல்லாமே சூப்பர். அபி அப்பாவும் கவிதையெல்லாஅம் எழுதுவார்ன்னு யாரும் சொல்லலையே???

    ReplyDelete
  28. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா இது சூப்பர் அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா

    :):) :)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))