தமிழக அரசின் "வாழ்ந்து காட்டுவோம்"ன்னு ஒரு திட்டம். அதை பற்றிய விரிவான விபரங்கள் எனக்கு தெரியாது. ஆனால் அந்த திட்டம் மயிலாடுதுறை ஊராட்சியில் அமுல் படுத்த இருப்பதால் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சி தலைவரின் தலைமையில் நடை பெற இருந்தது நான் மயிலாடுதுறை சென்றிருந்த சமயத்தில். அதன் பொருட்டு ஒவ்வொறு கட்சியும் தன் தனது கட்சி தலைமை அலுவலகத்தில் தன் தனது கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களையும் கவுன்சிலர்களையும் கூட்டி எப்படி நிதியை பெறுவது எப்படி செலவழிப்பது( நல்ல வழியில்) என கலந்துரையாடி அதன் படி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் எப்படி நடந்து கொள்வது என்பன பற்றி பேசி முடிவெடுக்க கூட்டம் கூட்டிக் கொண்டிருந்தன.
அன்று மயிலாடுதுறையில் ஒரு கட்சி அலுவலகத்திலும் அந்த கூட்டம் நடைபெற்றது. நானும் அதிலே கலந்து கொண்டேன். இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று கேட்பவர்களுக்கு... அது மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டம் இல்லை. ஒரு கட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் மட்டுமே. நான் உள்ளே நுழைந்ததும் ஒரு இருநூறு ஆண்களும் ஒரு பத்து பதினைந்து பெண்களும் இருந்தனர். ஆண்கள் முன் வரிசையிலும் , சொற்பமாக இருந்த பெண்கள் கடைசியில் ஒரு கூட்டமாகவும் அமர்ந்திருக்க முன் வரிசையில் ஒரு ஓரத்தில் தனியாக ஒரு வயதான பெண், அவருக்கு இரண்டு பக்கமும் இருக்கைகள் வெற்றாக இருந்தன. எனக்கு சந்தேகம் முப்பத்து மூன்று சதவிகிதம் அரசு பெண்களுக்கு ஒதுக்கியும் பத்துபேர் தான் வரமுடிந்து இருக்கிறதே என ஆதங்கமாக இருந்தது.
அப்போது தான் என் நண்பன் ஒருவனை பார்த்தேன். தான் கவுன்சிலராகி விட்ட கதையையும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருபத்தி நான்கு ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றமை குறித்தும் சிலாகித்து பேசினான். நான் கடைசியில் அவனுடைய ஊரில் எந்த வார்டு கவுன்சிலர் என கேட்ட போது அதையும் சொல்லி அந்த வார்டு மகளிர் வார்டாகி போனது பற்றியும் பின் இவனுடைய அரசியல் எதிரிகளால் இவன் அவமானப்படுத்தப்பட்டு பின்பு மிகுந்த பாடுபட்டு தான் கவுன்சிலராக ஆகி தன் எதிரியின் முகத்தில் கரி பூசியது பற்றி சொல்லி முடித்தபின்னும் எனக்கு குழப்பமே மிஞ்சியது. பின்பு தான் புரிந்தது, அது மகளிருக்கான வார்டு ஆன பின் இவனோ திருமணமாகாதவன், ஆனால் இவன் அரசியல் எதிரியோ திருமனமானவன் ஆனவன். நம்ம ஆள் அதன் காரணமாகவே அவசர அவசரமாக கிடைத்த பெண்ணை திருமணம் செய்து அந்த பெண்ணை களத்தில் இறக்கி ஜெயித்து இப்போது தான் தான் கவுன்சிலர் என பீற்றி கொண்டிருக்கிறான். நான் அவனிடம் சரி நீ இந்த ஆலோசனை கூட்டத்துக்கு உன் மணைவிக்கு துணக்கு வந்தாயா என கேட்டதற்கு அவன் அதிர்ந்து போய் "என்ன பேச்சு இது, நான் தானே அவள் கணவன் நான் கூட்டத்து வராமல் யார் வருவது, அதுக்கு என்ன தெரியும் எவ்வளவு நிதி பெறுவது என, போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட வேண்டியது தானே" ....வாழ்க ஜனநாயகம் வாழ்க வாழ்க மகளிர் இட ஒதுக்கீடு...
நான் நேராக சென்று அந்த அம்மா பக்கத்திலே உட்கார்ந்தேன். அப்போதே உணந்தேன் அவர்கள் ஒரு திருநங்கை என. இத்தனை நாள் நானும் மற்றவர்கள் போல திருநங்கைகளை ஒதுக்கியே ஒதுங்கியே இருந்த என்னை அந்த அம்மாவிடம் "அவர்களும் நம்மை போலத்தான் மனித உயிர் தான்" என நினைக்க வைத்த சகோதரி வித்யாவுக்கு மனதால் நன்றி சொல்லி " அம்மா உங்க பேர் என்ன?'' என்று கேட்டேன். அவர்களும் "என் பேர் கண்ணகிங்க" என்று கூறினார்கள். திரும்பவும் நான் ஏதோ கேட்க முனைந்த போது "இருங்க கூட்டம் முடியட்டும், இப்ப வந்த வேலையை பார்ப்போம்" என சொல்லவும் எனக்கு ஆச்சர்யம் மற்றும் சிறிது அவமானமாகவும் கூட இருந்தது. சரி திமிர் பிடிச்சவங்க போலயிருக்கு என நினைத்து கொண்டேன்.
கூட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. பின் கருத்து கேட்கப்பட்டது சிலரிடம். அப்போது இந்த அம்மா எழுந்து ஏதோ சொல்ல முற்பட "ந்தா நீ வேற உக்காரு, எல்லாத்துலயும் முந்திரி கொட்ட மாதிரி"ன்னு பின்பக்கமிருந்து குரல் வரவும் கிட்டதட்ட இருநூத்து பத்து கேலி சிரிப்புகள் என் ஈரகுலையே நடுங்குச்சு. என்ன உலகமடா இது என நினைக்க தோன்றியது. அந்த அம்மாவும் அமைதியா உக்கார்ந்து விட கூட்டம் ஏதேதோ முடிவெடுத்தது. ஆனால் என் மனம் அங்கே இல்லை.அந்த அம்மா மாத்திரம் கூர்ந்து கவனித்து வந்தார்கள். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் காக்கை கூட்டம் போல் கலைந்து விட எதிர் பக்க டாஸ்மாக்கும், பக்கத்து டாஸ்மாக்கும் களை கட்டியது.
நான் மட்டும் ஒரு வித மனசு கஷ்டத்துடன் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தேன். அந்த அம்மாவும் அங்கே இங்கே போய் யார் கிட்டயோ பேசிவிட்டு எதேர்ச்சையா என்னை பார்த்துவிட்டு என்னருகே வந்து "என்னங்க இன்னும் இங்க உக்காந்து இருக்கீங்க, நீங்க எந்த ஊராட்சி, ஏதோ கேட்டீங்களே கூட்டம் நடக்கும் போது, அப்போ நாம பேசிகிட்டு இருந்தா மத்தவங்களுக்கு கூட்டத்தை கேக்க கஷ்டமா இருக்கும்ல, பாவம் தொலவுல இருந்து வந்திருப்பாங்க,தவுர எனக்கும் கொஞ்சம் கூட்டம் கேக்க ஆவலா இருந்துச்சு அதனாலதான் அப்புடி சொன்னேன் கோவிச்சுகாதீங்க" என்னு சொல்லவும் எனக்கு அவர்களிடம் மேலும் பேச ஆர்வம் அதிகமாகியது.
"உங்க பேர் என்னங்க?"
"என் பேர் பி.கண்ணகிங்க.நான் ஒரு அரவாணி கவுன்சிலர்ங்க" - கரகரப்பான குரல்.
"வாங்க போங்க வேணாம். நான் உங்களை விட சின்ன வயசுதான். தம்பின்னு கூப்பிடுங்க, சரி எந்த ஊராட்சி?"
"திருகுவளை தெரியுமா தம்பி?அந்த ஊர்லதான் கவுன்சிலர் நானு"
"என்ன இப்புடி கேட்டுட்டீங்க, எப்டி தெரியாம போகும், சொல்லுங்க ஏதாவது டீ சொல்லவா?"
"இல்ல வேணாம் தம்பி, பக்கத்து சந்துல எளநி சொல்லிருக்கேன் வரும், தோ வந்துடுச்சே ஆஹா ஒன்னு தான் வருது தம்பி இன்னும்மொன்னு கொண்டுவாய்யா சாருக்கும்"
"சொல்லுங்க எல்லாரும் பக்கத்துல கூட உக்காராம கேவலபடுத்திய பின்னும் ஏங்க எழுந்து போகாம பின்ன நீங்க பேச எழுந்ததும் எல்லாரும் சிரிச்ச பின்னும் கூட இவ்வளவு பொருமையா எப்டிங்க இப்படி?"
"அதுவா தம்பி, நீங்க அந்த இடத்துல இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?"
"போங்கடா நாய்ங்களான்னு எழுந்து போயிருப்பேன்."
"சரி இந்த கூட்டமே உங்க குடும்ப நண்மைக்குன்னு வச்சுகுங்க அப்ப அவமானம் வருது அப்ப என்ன செய்வீங்க?"
நான் - "எதுவா இருந்தா என்ன போங்கடான்னு போயிருப்பேன்!"
"ஆனா நான் அப்படி உணர்ச்சிபூர்வமா முடிவெடுத்தா என்னை நம்பி இருக்கும் திருகுவளை கிராமத்துக்கு யார் நிதி உதவி செய்வாங்க, இவ திமிர் புடிச்சவன்னு ஒதுக்கி வச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க, நான் அவமானப்பட்டாலும் கிராமத்துக்கு நல்லது நடந்தா சரிதானே என்ன சொல்றீங்க தம்பி!"
"என்னத்த சொல்றது, சரி இந்த"வாழ்ந்து காட்டுவோம் திட்டம்னா என்னங்க"
"தம்பி முதல்ல எளநி சாப்பிடுங்க, நீங்க யாரு எந்த ஊராட்சி, கவுன்சிலரா, தலைவரா, பேர் என்ன?"
"நான் மாயவரம் நகராட்சிங்க, வெளிநாட்டுல இருக்கேன், பேர் தொல்காப்பியன்ங்க சும்மா கூட்டத்துக்கு வந்தேன் இந்த திட்டம் பத்தி தெரிஞ்சுக்க"
"ஆக உள்ளூர்ல வெல போகாத மாடுன்னு சொல்லுங்க தம்பி"
(தஞ்சை குசும்பு இது தான்)
"என்னங்க இது என்னய வார்ரீங்க, அந்த திட்டம் பத்தி ஏதாவது தெரிஞ்சுகலாம்ன்னா இப்புடி வார்ரீங்களே!"
"பராவாயில்லையே தம்பி, வந்திருந்த கவுன்சிலர் எத்தனை பேருக்கு தெரியும்ன்னு எனக்கு தெரியல, ஆனா பலபேரு படிச்ச பசங்க, எனக்கு அம்பத்துஏழு வயசாச்சு, எழுத படிக்க தெரியாது பண்ணண்டு வயசுல பம்பாய்க்கு போனேன் எல்லா மொழியும்பேசுவேன், இது தான் வாழ்க்கைன்னு ஆகிபோச்சு, பின்ன எதுக்கு பம்பாய்ன்னு இருவத்து ஏழு வயசுல சொந்த ஊருக்கு ஓடியாந்துட்டேன். எனக்கு அவமானங்கறது பழகி போச்சு, இன்னிக்கு நடந்தது எல்லாம் எனக்கு பழகினது உங்களுக்கு புதுசா இருக்கலாம். ஒரு ஆம்பள பையனா ஓடி போன நான் அரவாணியா ஆன பின்னும் ஒரு கட்டத்துல என்னா அவமானபட்டாலும் பொறந்த மண்ணுக்கு ஏதாவது செய்யனும்ன்னு ஓடி வந்துட்டேன். ஆனா காசு காசு மேல மேல காசுன்னு எத்தன நாள் பொறந்த மண்ண வுட்டுட்டு இருக்க போறீங்க? எளநி குடிங்க என்னா வெய்யிலு கொளுத்துது!"
அவங்க சொன்னது சரிதான் என எனக்கும் பட்டது ஆனாலும் அதுக்கு தன்னிலை விளக்கம் இந்த பதிவெலே வேண்டாம் என்பதால் விட்டு விடுகிறேன்.
"தம்பி! ஊரக வளர்ச்சி துறை மூலமாதான் இந்த திட்டம் ஒலக பேங்கு மூலமா உதவிவாங்கி நடக்குது. தமிழ்நாடு முழுக்க பதினஞ்சு மாவட்டத்துல எழுவது பேக்குவேடு வட்டாரத்துல இருக்குற ரெண்டாயிரத்து நானூத்து சொச்ச ஊராட்சில இருக்குற பண்னந்தாயிரத்துஅறனூத்து சொச்ச குக்கிராமத்துல இருக்குற மூணுலெச்சத்து அம்பதாயிரம் குடும்பத்துக்கு நல்லது செய்ய இந்த திட்டம்"வாழ்ந்து காட்டுவோம்" திட்டம் புரியுதா தல சுத்துதா, எளநி இன்னுமொன்னு சொல்லவா?"
இருங்க இருங்க குறிச்சுகறேன் என்று சொன்னதும் இடி இடியென சிரித்தார்.
"தம்பி! நாகை மாவட்டத்துல மாத்திரம் கீழ்வேளூர்,மயிலாடுதுறை,திருமருகல் ன்னு மூணு ஒன்றியத்துல நடக்க இருக்கு. முதல் கட்டமா எங்க கீழ்வேளூர் ஒன்றியத்துல முப்பத்தெட்டு ஊராட்சி அதுல என் ஊராட்சியும் ஒன்னு. நாங்க நல்ல விதமா செயல் படுறேன்ன்னு கலெக்டரு அடுத்து மயிலாடுதுறைல அம்பத்து நாலு ஊராட்சில ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கோம், கண்ணகி நீயும் வா அந்த கூட்டத்துக்கு ன்னு சொன்னரு. அந்த கூட்டம் நாளக்கி நடக்குது தோ எதித்தாபோல இருக்குற ஊராட்சி மன்ற கட்டடத்துல, சரி ஒரு நாள் முன்ன வருவோம் நம்ம கட்சி புள்ளைங்களுக்கு நம்மாள ஏதாவது சொல்லி தருவோம்ன்னு நெனச்சு வந்தேன், பசங்க காது கொடுத்து கேக்க மாட்டங்குது ஹும்..."
அடப்பாவிங்களா உங்களுக்கு உதவி செய்ய வந்தவங்களுக்கு நீங்க செஞ்ச நக்கல் நையாண்டி பேஷ் பேஷ்ன்னு நெனச்சுகிட்டேன்.
"சரிம்மா யாருக்காக இந்த திட்டம் அதோட எய்ம் தான் என்ன, இது பத்தி ஏதாவது சொல்லுங்களேன், சரி அய்யப்பன்ல ரவா தோசை சொல்லவா இல்ல அங்க போவுமா?"
"தம்பி! இங்கயே சாப்புடலாம், அங்க போவேணாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க யாராவது தப்பா நெனச்சுப்பாங்க உங்களை!"
எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. "இல்லம்மா நான் யாரை பத்தியும் கவலை பட்டதில்லை, எனக்கு சரின்னு பட்டதை செய்வேன் வாங்க போகலாம்"
"இல்லப்பா வெய்யில் சாஸ்தியா இருக்கு நான் இங்கயே சாப்பிட்டு கொஞ்சம் தல சாஞ்சுட்டு வெயிலு சாஞ்ச பின்ன கிளம்பனும், நாளைக்கு ஒரு கல்யாண சாவு விழுமோன்னு மனசு கடந்து அடிச்சுகிது தொண்ணூறு வயசு வாழ்ந்த கட்டை ஊருக்குள்ள அது பாக்காத நல்லது கெட்டது இல்ல, இப்ப அதுக்கு ஒன்னுன்னா நாமதான செய்யினும்!"
நான் மன்றத்து பையனை கூப்பிட்டு இரண்டு ரவாதோசை வாங்கிவர சொல்லிவிட்டு அவர்களை பார்த்தேன்.
"தம்பி! இந்த திட்டம் ஏழ பாழங்க,ஊணமுத்தவங்க,அறுவத்தஞ்சி வயசுக்கு மேல போன ரொம்ப கஷ்டசீவனம், ஆண்டவன் புள்ளய்ங்க,(அனாதை) ஓடுகாலி புருஷனுக்கு முந்தானி விரிச்சவ(கணவனால் கைவிடபட்டவர்கள்),நாடோடி,பழங்குடி,கழகூத்தாடி,நரிகொற மக்க, எய்ட்ஸ் தாக்குனவுங்க அதுக்கும் மேல ஒன்னு சொல்லவா அரவாணிங்க இவங்க தான் பயனாளிங்க. இதுல பாருங்க தம்பி, அரவாணிங்க சேர்த்திருக்காங்க அப்படின்னா படிப்படியா எங்க செனங்களுக்கு ரேசன் கார்டுல இருந்து எல்லாம் கெடக்க போதுதுன்னு அர்த்தம்!
அதென்ன கேட்டீங்க எம்ன்னு?"
"எம் இல்லம்மா எய்ம் அதான் நோக்கம்?"
"மேல சொன்ன அத்தன பேரையும் நல்லா பழக்கி நம்ம இந்தியா கிரிகெட்டுல சேத்து மெடலு வாங்க போறோம் போவியா தம்பி... இவங்களுக்கு என்ன தேவையோ அதை செய்யனும் அதுக்கு சுயமா நாங்களே உதவி குழு அமைச்சு முக்கியமா கைசுத்தத்தோட காச செலவழிக்கனும், கலக்டரு கவனிச்சுகிட்டே இருப்பாரு, அவருக்கு ஏகப்பட்ட ஆள் அம்பு சேன எல்லாம் இருக்கு யார் தப்பு செஞ்சாலும் அடுத்த தபா உதவி கெடக்காது. அட பையன் சுருக்கா வந்துடுச்சே தம்பி நீ கொஞ்சம் தோச சாப்புடுய்யா!"
அவன் வேண்டாம் காசு குடுன்னு வாங்கிட்டு பிளாஸ்டிக் குவளையில் தண்ணீர் வச்சுட்டு போனபின் சாப்பிட்டு கிட்டே பேசினோம்.
"இது எல்லாம் கண்ட்ரோல் நேரா கலக்டர் தானா?"
"ஆமா, ஆனா அவர்ருக்கு கீழ ஒருத்தர் இருக்காரு, இருங்க அட்டஸ் தாரேன்.."
இடது கையால பையில் இருந்த நோட் புக்கில் ஒரு பக்கத்தில் இருந்த விலாசத்தை காட்டினாங்க அதிலே " மாவட்ட திட்ட மேளாளர், வாழந்து காட்டுவோம் திட்டம், பூமாலை வணிக வளாகம், முதல் தளம், அண்னா சிலை அருகில், நாகப்பட்டிணம் - 611 001 போன்: 04365-242241" என இருந்தது.
"உங்க ஊர்ல எல்லாரும் உங்களை எப்படி நடத்துறாங்க?"
"அத ஏன் கேக்குறீங்க தம்பி, தோ இப்பவோ நாளைக்கோன்னு இருக்கே பெருசு அதுல இருந்து பொறந்து பேச்சு வந்த குழந்தங்க வரை எல்லாம் கண்ணகி கண்ணகின்னு உசுரா இருக்குங்க, நா தூக்கி வளக்காத புள்ளங்க அந்த ஊர்ல இல்ல, எனக்கு ஒன்னுன்னா அந்த ஊரே நிக்கும் அந்த ஊருக்கு ஒன்னுன்னா நான் ஒத்த மனுஷியா நின்னு உயிர கொடுப்பேன்!!!"
எனக்கு சிலிர்த்தது. இந்த கூட்டம் எதுக்குன்னே தெரியாம ஏதோ நிதி தர்ர கூட்டம்ன்னு வந்த கவுன்சிலர்(புருஷன்) ஆணீய வெங்காயங்களுக்கும், முப்பத்து மூணு சதவீதம் வேண்டும் வேண்டும் என அழுது புரளும் ,உள்ளாட்சியில் கிடைத்த முப்பத்துமூணு சதவீதத்தை கணவன் காலில் வைத்து வணங்கிய ஜான்சிராணிகளை அடையாளம் கண்டு ஒரு குழு அமைத்து அவர்களை நீக்கி கிடைத்த சதவீதத்தை தக்க வைத்து கொள்ள தெரியாத பெண்ணீய பச்சை மிளகாய்களுக்கும் மத்தியில் திருநங்கை கண்ணகி போன்றவர்களின் குடத்தினுள் இருக்கும் விளக்கு போன்ற தியாகத்துக்கும் உழைப்புக்கும் ஒரு ராயல் சல்யூட்!!!
திருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்
ReplyDeleteஆமாம் ஆயில்யா! நிச்சயம் பாராட்டப்பட வேண்டவர்கள் திருக்குவளை மக்கள்!
ReplyDeleteஐய்யயோ நான் தான் பர்ஸ்ட்டா!
ReplyDeleteஹய்யா!
நாந்தான் ப்ர்ஸ்ட்!
நாந்தான் ப்ர்ஸ்ட்!
நாந்தான் ப்ர்ஸ்ட்!
//எதிர் பக்க டாஸ்மாக்கும், பக்கத்து டாஸ்மாக்கும் களை கட்டியது.//
ReplyDeleteஅப்பன்னா நீங்க டி.எம்.கேவா?
\\எனக்கு சிலிர்த்தது\\
ReplyDeleteஎங்களுக்கும் தான் அபி அப்பா...
//தோ எதித்தாபோல இருக்குற ஊராட்சி மன்ற கட்டடத்துல,//
ReplyDeleteஇல்லையே! அப்பன்னா நீங்க ஏ.டி.எம்.கே தான்!
\\ஆயில்யன் said...
ReplyDeleteதிருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்\\
சரியாக சொன்னிங்க ஆயில்யன்....
அந்த அம்மாவுக்கும் அந்த மக்களுக்கும் என் வாழ்த்துக்கள் ;)
//நான் மன்றத்து பையனை கூப்பிட்டு //
ReplyDeleteஎக்ஸ்டீரிமிலி வெரி சாரி நீங்க டி.எம்.கே தான்!
டி.எம்.கே தான்!!
அண்ணா பகுத்தறிவு மன்றத்து பையனை கூப்பிட்டிருங்கீகளே...!
மொக்கைக்கு நடுவால ஒரு உருப்படியான பதிவு
ReplyDeleteநல்ல பதிவு...நல்லா வந்திருக்கு
ReplyDelete//ஆனா நான் அப்படி உணர்ச்சிபூர்வமா முடிவெடுத்தா என்னை நம்பி இருக்கும் திருகுவளை கிராமத்துக்கு யார் நிதி உதவி செய்வாங்க, இவ திமிர் புடிச்சவன்னு ஒதுக்கி வச்சு ஒரு வழி பண்ணிடுவாங்க, நான் அவமானப்பட்டாலும் கிராமத்துக்கு நல்லது நடந்தா சரிதானே // இவ்வளவு பக்குவப்பட்ட மனதோடு ஒரு அரசியல்வாதியா? ஆச்சரியமூட்டுகிறார் அந்த அம்மா. அதே போல உங்க ஸ்டைல் பதிவுகளுக்கு நடுநடுவுல இப்படி கலக்கல் பதிவுகளை போட்டு நீங்களும் இன்ப அதிர்ச்சிகளை கொடுக்கிறீர்கள்.
ReplyDeleteஅப்புறம் பிலேட்டட் நட்சத்திர வாழ்த்துகள் அபி & நட்ராஜ் அப்பா....
கலக்கல் போஸ்ட்
ReplyDeleteகண்ணகிக்கும் அவரைக் கண்டு எழுதிய உங்களுக்கும் வாழ்த்துக்கள் அபி அப்பா.
ReplyDeleteசீர்திருத்தத்தையும், மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களையும் உதாசீனப்படுத்துவது நமது மக்களின் பழக்கம். அதுவும் அரவாணிகள் என்றால் அதிகம். திருந்த வேண்டும்.
ReplyDeleteஆயில்யா! நான் சொன்னது வச்சு இத்தன ஆராய்ச்சியா! ஒரு சேதி சொல்லவா! அண்ணா பகுத்தறிவு மன்றம் எதிரில் உள்ளது கலைஞர் பிரஸ்,(சொந்த பட்டா சொந்த சொத்து) பின்ன அதே தெருவிலே இருபது ப ஜா க ஆலுவலகம்(தண்டபானி கோவில் சொத்தை ஆக்கிரமிச்சு) ஆனாஅல் ஊராட்சிக்கு நேர் எதிரில் இருப்பது அதிமுக அலுவளகம் செல்வா லாட்ஜில்(வாடகை கொடுக்காமல்) எல்லாமே மன்றம்ன்னுதான் சொல்லுவாங்க! ஹி ஹி ஹி;-)))
ReplyDeleteகோபி தம்பி! நன்றிப்பா! உன் வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா!
ReplyDeleteவாங்க மங்கை! நன்றி!
ReplyDeleteஇது ஒண்ணுதான் உருப்படியான பதிவு! நல்ல அனுபவம் தான், ஆனால் இவரைப் போல் எல்லாக் கவுன்சிலர்களும் செயல்படறாங்களான்னு கேட்டால் இல்லை, உங்க நண்பர் மாதிரித் தான் மத்தவங்க, மனைவியை நிறுத்தி விட்டுப் பின்னர் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்க ஊர் நகராட்சிக் கவுன்சிலர்(6-வது வார்டு) ஒரு உதாரணமே போதும்! :((((((((
ReplyDeleteவாங்க லெஷ்மி! ரொம்ப முன்னமே எதிர்பார்த்தேன் உங்களையும் ஊங்க அக்கா முத்துலெஷ்மியையும்! தப்பா நெனசுக்காதீங்கப்பா, நல்ல பதிவுன்னா சீக்கிரமா வரும் சகோதரிகளாச்சே நீங்க:-))
ReplyDeleteலெஷ்மி என் எழுத்து ஸ்டைல் என்பது நீங்கள் பார்த்தவரை இந்த ஒரு வருஷமா, ஆனால் என் கல்லூரி,பல்கலைகழக தோழர்கள் என்னை வித்யாசமாக பார்ப்பதும் எனக்கு தெரியும், நீங்க எல்லாரும் என்னை இப்போது வித்யாசமாக பார்ப்பதும் எனக்கு தெரியும்!
சரி உங்க பதிவு வழியா ஒரு தடவை உணர்ச்சி வசப்பட்டு கனிமொழி பற்ரி கருத்து சொல்லி "நானும் ரவுடி நானும் ரவுடின்னு ஏறிடலாம்ன்னு நெனச்சு பின்ன கட்டுபடுத்திக்கொண்டேன்! வருகைக்கு நன்றிப்பா!
//திருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்//
ReplyDeleteரிப்பீட்டு!
அந்த அம்மாவுக்கு நம்ம வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்க!
வாய்யா மின்னல்! எப்படி பதிவு! அபிஅப்பா பதிவு போல இல்லியா!நன்றிப்பா உங்க வாழ்த்துக்கு!!!
ReplyDeleteநல்ல பதிவுங்க அண்ணா!
ReplyDelete(நீங்க நட்சத்திரம் ஆனதை ஏன் முகூட்டியே தெரியபடுத்தலை?)
நச்சுன்னு ஒரு போஸ்டு!
ReplyDeleteவாங்க வல்லிம்மா! மிக்க நன்றி! வருகைக்கும் வாழ்த்துக்கும்!!
ReplyDeleteவாங்க வித்யா கலைவாணி! உங்க கருத்துக்கு மிக்க நன்றி!!
ReplyDeleteவாங்க வாங்க இந்த என்னது திட்டு காணும்! கீதாம்மாவுக்கும் போலியா! ஆண்டவா!நன்றிம்மா!
ReplyDeleteசிபி சாரே! வாங்கப்பா! கூடவே எனக்கு ஆப்பு எல்லாம் கூட்டி வந்திருக்கீங்க போல இருக்கே! (தீபாவெங்கட்,இடின்னு)
ReplyDeleteஅண்ணா இப்பதான் உருப்படியா ஒரு போஸ்ட் போட்டு யிருக்கிங்க...
ReplyDeleteஅது நான் இல்லை மின்னல்
ReplyDeleteஅப்பாடா நன்றி தீபா..:)
ReplyDeleteஆமாம் ஆயில்யா! நிச்சயம் பாராட்டப்பட வேண்டவர்கள் திருக்குவளை மக்கள்!
ReplyDelete//
ஆமாம் எங்க அத்தானும் தான்..:)
//திருநங்கை கண்ணகியை தேர்ந்தெடுத்து ஊருக்கு சேவை செய்ய வாழ்த்தி அனுப்பிய திருக்குவளை மக்களுக்கும் வாழுத்துக்கள் சொல்லணும்//
ReplyDeleteரிப்பீட்டு!
அந்த அம்மாவுக்கு நம்ம வாழ்த்துக்களையும் தெரியப்படுத்துங்க!
ச்சீ எனக்கு வெக்கமா இருக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கனும் கேட்டவா..:)
ReplyDeleteஐயோ! அது நான் இல்லை!
ReplyDeleteசிபி பொய் சொல்றாரு!
அது அபி அப்பாவே போட்டுகிட்டது!
கேட்ட்கவாஆஆஆஆஅ
ReplyDeleteமின்னல் said...
ReplyDeleteஐயோ! அது நான் இல்லை!
சிபி பொய் சொல்றாரு!
அது அபி அப்பாவே போட்டுகிட்டது!
//
அது நானும் போடலை..:(
நல்ல பதிவு, பேட்டி அபி அப்பா!
ReplyDeleteஉங்க வழக்கமான ப்ளாக்கர் மிஸ்டேக் கூட கம்மியா இருக்கு ;)
கும்மி அடிக்க ஒரு வாய்ப்பை இங்கே ஏற்படுத்திக்கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்:
காலையில் அபி அப்பாவிடம் பேசும்போது இந்த கருத்தைச் சொன்னார், அவருக்கு "திருக்குவளை திருநங்கை" என்ற தலைப்பைப் பரிந்துரைத்தேன்.
அவர் பயந்துபோய் "அய்யோ எதாச்சும் பிரச்சினை வந்துறப்போவுது" என்றார்.
அவருக்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன்?
சரியான பதிலுக்கு 1000 பொற்காசுகளை குசும்பன் வழங்குவார்.
வாங்க மங்களூரு சிவா! நன்றி!!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteகண்ணகிக்கும், திருக்குவளை மக்களுக்கும் சபாஷ்
உங்களுக்கு வாழ்த்துக்கள்..
திருகுவளையியிருந்து ஒரு........
ReplyDeleteஅப்படி வைச்சாதான் பீதியாவும்னு சொல்லிருப்பீங்க
:)
நல்ல பதிவு தொல்ஸ்!
ReplyDelete(ஐயய்யோ! நீங்க வேற சீரியல் ஆச்சே)
எலேய் தொல்ஸ்!
ReplyDeleteகும்மிக்கு மத்தில அசத்தலான பதிவு போட்டு அசர வெச்சிட்டியலே!
இவர்கள் அங்கீகரிக்கப் பட வேண்டியவர்கள்!
ReplyDeleteவெளிச்சம் போட்டு உலகுக்குத் தெரிவிக்கப் பட வேண்டியவர்கள்!
நல்ல மனசால் வணங்கப் பட வேண்டியவர்கள்!
அபிஅப்பா இனிமேல் ஒரே நேரத்துல ரெண்டு பதிவு போடுங்க. ஒன்னு இந்த கண்ணகி பதிவு மாதிரி நல்ல உறுப்படியான பதிவு. இன்னொன்னு மொக்கை.
ReplyDeleteஇப்ப பாருங்க இந்த நல்ல பதிவுலலாம் கும்மி அடிக்க மனசாட்சி இடம் கொடுக்க மாட்டேங்குது.
சரி கருத்தாழத்தோடு(???????) பின்னூட்டம் போடலாம்னா அவ்வளவு வயசும் ஆவல.
இப்ப எங்க போய் நான் கும்மி அடிக்கரது????
குட் போஸ்ட்!
ReplyDeleteநல்ல ஒரு தகவலை கொடுத்துதற்கு ரொம்ப நன்றி தொல்ஸ்...
ReplyDeleteநம்ம மாவட்டத்தில் இருந்து ஒருவர் என்பதை கேட்கும் போது இன்னும் சந்தோஷமா இருக்கு...
அவர்கள் எண்ணம் போல் அந்த ஊராட்சியும் நல்ல வளர்ச்சி காணட்டும்...
அண்ணே,
ReplyDeleteநல்லபதிவு......
ஹிம் அதுக்குள்ளே 2nd Tab'க்கு போனதுதான் கொஞ்சம் இடிக்குது....... கும்மியை கொஞ்சமா கொட்ட சொல்லுங்க..... :)
\\நான் என சொல்லுவேன் எப்படி சொல்லுவேன் என் நன்றியை, இப்போது ஆணி அதிகமாகிவிட்ட நிலையில், காலையில் பதிவை இட்டுவிட்டு ஆபீஸ் போன பின்பு அவ்வப்போது கோபி,தம்பி,லியோ சுரேஷ்,பினாத்தலார் என எல்லோரிடமும் நிலவரம் தெரிஞ்சுக்க ஆசைப்பட்டு கேட்டா நிலவரம் கலவரமா போயிட்டு இருக்கு. நம்ம மேல உள்ள பாசத்துல பசங்க சாமியாடி தீர்த்துட்டீங்க. சந்தோஷம்ப்பா, முதல் பின்னூட்டம் ஒரு அனானி பின்னூட்டம்(அது யாருன்னு என்னால கெஸ் பண்ண முடியுது- மிக்க நன்றி) அடுத்தது டாகடரம்மா, வரிசையா நம் பாசகார குடும்பம், அதிலே புலியார் தனியா ஒரு பதிவு போட்டு வாழ்த்து, 4 நாள் முன்ன்னமே கீதாம்மா ஒரு பதிவு போட்டு திரட்டியை காப்பாத்த சொல்லி வினாயருக்கு வேண்டுகோள், காயத்ரியும் , கோபியும் ரகளை பன்ணிகிட்டு இருக்கும் போது புலி சிவாவும் வந்து சேர்ந்துக்க அதோடு இம்சையும் இணைய களை கட்ட ஆரம்பிச்சிட்டதா பினாத்தலார் முதல் போன். இதுவரை பின்னூட்டம் வழியா வராத ஆசிரியர் சுப்பையா சாரின் வாழ்த்து கவிதையை போனில் லியோ படித்து காட்ட எனக்கு மிக்க மகிழ்வாக இருந்துச்சு. பின்ன வேதா,உண்மை தமிழன் என வரிசையா வர சர சரன்னு ஏறிகிட்டே போச்சு எண்ணிக்கை. அந்த நேரம் எனக்கும் ஆணி அதிகமா ஏறிகிட்டே போச்சு. வல்லிம்மா சென்னையில் இருந்து போன் பண்ணிய போது கூட என்னால் அட்டண்ட் பண்ண முடியலை.
ReplyDeleteஇப்படியே போய்கிட்டு இருந்தப்போ, திடீர்ன்னு ஆபீஸ்ல எல்லாம் போய் மேட்ச் பார்க்க பர்மிஷன் கேக்க பிராஜட்ல ஈ, காக்கா இல்லாம வெறிச்சோடி கிடக்க அவசர அவசரமா வீட்டுக்கு வந்து பார்த்தா அது போச்சு 700 க்கு, என்னால பிளாக் உள்ள போகவே முடியலை. அங்க போய் ஒரு நன்றி சொல்லலாம்ன்னா முடியவே இல்லை. அடுத்த பதிவுல உங்கள் நண்பன் வந்து செல்லமா கோவிச்சு கிட்டு போறாரு. இங்க என்னடான்னா வார ராசிபலன், டிராபிக் அப்டேட், கிரிக்கேட் லைவ் கமெண்டரி ன்னு அடிச்சு தூள் கிளப்பிகிட்டு இருக்காங்க, இதுல எனக்கு மிரட்டல் வேற "வந்து தனி தனியா நன்றி சொல்லு"ன்னு.
சரி, மேட்ச் ஆரம்பிச்சா எல்லாம் சரியாகிடுன்னு பார்த்தா கிரிக்கேட் பிடிக்காத மக்கள் இங்க இங்கிட்டு விளையாட்டை தொடருது. அப்படியே 1000 ஆன பின்ன ஒரு வழியா ஆட்டம் முடிஞ்சு உள்ள போனா நான் அதுக்கு பதில் சொல்லனும்னா இந்த நட்சத்திர வாரம் இதுக்கே போயிடும் போல இருக்கு. அதனால என் பாசகார குடும்ப மக்களே புரிஞ்சுகோங்கப்பா, நான் பதிவெல்லாம் டைப்பனும் பப்ளிஷ் பண்னனும் கண்டிப்பா பதில் சொல்லிடறேன். ஆனா கொஞ்சம் டைம் குடுங்க ப்ளீஸ்..........நன்றி நன்றி நன்றி!!!! 1000 பின்னூட்டம் போட்ட மக்கா, மீண்டும் நன்றி நன்றி நன்றி!!!
இந்த அறிமுக பதிவிலே பெரியவங்க ரெண்டு பேர் பேசிக்கும் அந்த காமடி நம் பினாத்தலாருடையது என்பதையும் இங்கே சொல்லிக்கனும், நன்றி பினாத்தலார் அவர்களுக்கு!!
மக்கா! என்னால மட்டுமில்ல யாராளும் போகாத அள்வு திருப்தியா கும்மியடிச்சாசு! நம்ம டிச்சர் வந்து கையில பெரம்பு எடுத்துகிட்டு வந்தாச்சு ஸோ நாம எஸ்கேப்பூஊஊஊஊஊ! ஓக்கே வா! ந்ன்றி பதிவிலே கும்மிடுவோம்....அப்ப டீச்சர் எதும் சொல்ல மாட்டாங்கப்பா!
ReplyDeleteமத்த 3 பதிவு உள்ள கூட என்னால போக முடியலைப்பா!!!!
நல்ல பதிவு, வாழித்துக்கள் அபி அப்பா.
ReplyDeleteதிருநங்கை கண்ணகிக்கு ஒரு ராயல் சல்யூட்!!!
இனிமேல் ஒரே நேரத்துல ரெண்டு பதிவு போடுங்க. ஒன்னு இந்த மாதிரி நல்ல உறுப்படியான பதிவு, இன்னொன்னு மொக்கை.
இந்த நல்ல பதிவுல கும்மி அடிக்க மனசாட்சி இடம் கொடுக்க மாட்டேங்குது.
இப்ப எங்க போய் நான் கும்மி அடிக்கரது????
உங்கள் இம்சை......
ஒரு தேர்ந்த பத்திரிக்கையாளரின் பேட்டி மாதிரி இருக்கே... அப்படியே.நோட் செய்து வைத்திருந்தீர்களா ?
ReplyDeleteக்ரேட் போஸ்ட்..
அப்போ போஸ்ட படிச்சு தான் ஆகனுமா?
ReplyDeleteஎன்ன கொடுமை இது?
இத தட்டி கேட்க ஆளே இல்லையா?
சூப்பர் போஸ்ட் அண்ணே.
ReplyDelete//அந்த ஊருக்கு ஒன்னுன்னா நான் ஒத்த மனுஷியா நின்னு உயிர கொடுப்பேன்!!!"//
இத படிச்சதும் எனக்கும் சிலிர்த்திருச்சு.
இப்பவும் அவங்க தான் கவுன்சிலரா?
ReplyDeleteInformative post Thols.. U simply rock as a star this week.. :)
ReplyDeleteகண்ணகி அம்மா "திருக்குவளை"யின் கவுன்சிலர் என்றதுமே என்னை அறியாமல் என் உடல் சிலிர்த்தது. தலைவர் கலைஞர் பிறந்த மண்ணுக்கு எப்போதுமே சிறப்புதான்.
ReplyDeleteநல்ல கொடுமைங்க...பெண்கள் தங்களோட உரிமைகளை சர்வ சாதரணமா விட்டு தருகிறார்கள்..முதல்வர் பதிவியில் இருந்த ராப்ரி...(பேரப் பார்.அவங்க தொழில் மாதிரியே..) இவர்களுக்கு மத்தியில் இப்படி அத்திப் பூத்தாற் போல சில சமயம் நல்ல அரசியல்வாதிகள் தோன்றிவிடுகிறார்கள்....பல மொக்கைகளுக்கு நடுவிலே ஒரு நல்ல பதிவு போல.... :))))))))
ReplyDeleteநல்லதொரு பதிவு. நல்லவர்களை தரிசித்தால் வரும் திருப்தியே அலாதி. தாங்கள் அனுபவித்ததை அப்படியே எங்களுக்குள்ளும் இறக்கியுள்ளது தங்கள் எழுத்தின் வலிமை. அவர் திறமையான, பொறுப்பு மிகுந்த, நல்ல கவுன்சிலர் என்பதை முன்னிறுத்தி திருநங்கை என்பதை இறுதியில் சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அவரை முன்னிறுத்தும் நோக்கத்தில் பொறுப்பற்ற கவுன்சிலர்களைக் கண்டித்த வரிகளிலும் பாலினைத் தவிர்த்திருக்கலாம்.
ReplyDeleteRATHNESH
நல்ல பதிவு அபி அப்பா..
ReplyDeleteதம்பி! இங்கயே சாப்புடலாம், அங்க போவேணாம் உங்களுக்கு தெரிஞ்சவங்க இருப்பாங்க யாராவது தப்பா நெனச்சுப்பாங்க உங்களை!"
ReplyDeleteஎனக்கு தூக்கி வாரி போட்டுச்சு. "இல்லம்மா நான் யாரை பத்தியும் கவலை பட்டதில்லை, எனக்கு சரின்னு பட்டதை செய்வேன் வாங்க போகலாம்"
கிடைத்த சதவீதத்தை தக்க வைத்து கொள்ள தெரியாத பெண்ணீய பச்சை மிளகாய்களுக்கும் மத்தியில் திருநங்கை கண்ணகி போன்றவர்களின் குடத்தினுள் இருக்கும் விளக்கு போன்ற தியாகத்துக்கும் உழைப்புக்கும் ஒரு ராயல் சல்யூட்!!!
"ந்தா நீ வேற உக்காரு, எல்லாத்துலயும் முந்திரி கொட்ட மாதிரி"ன்னு பின்பக்கமிருந்து குரல் வரவும் கிட்டதட்ட இருநூத்து பத்து கேலி சிரிப்புகள் என் ஈரகுலையே நடுங்குச்சு
romba thottuviteenga abi appa.... ithuvarai saathaaranamagathan ungkal pathivaiyum padippen..ipa ungkal mael oru mathippu vanthirukku..
ellorukkumae aravanikalidam paesa thayakkam thaan varum. . ms. kannagi sonnathupola..`ungkalai thappaga ninaiparkal" unmai.. athaiyum meeri neegkal thunichalaga interview pannee irukireerkal.. good
அற்புதமான பதிவை இத்தனை நாளாக தவறிவிட்டேனே.
ReplyDeleteமிக்க நன்றி!
திருநங்கை. கண்ணகி தொலை பேசி எண் இருந்தால் குடுத்து உதவ முடியுமா? நன்றி
வாம்மா வித்யா! முதல் வருகை! நான் தஒலைத்து விட்டேன் அவங்க நம்பரை! ஆனா நான் கடைசியா கொடுத்திருக்கும் நாகை நம்பரை காண்டேட் செய்தால் ஈஸியா நம்பர் வாங்கிடலாம். அவங்க அத்தனை பிரபலம்! கலெக்டர் ஆஃபீஸிலே! ஏன்னா அத்தனை உழைப்பு! ஆனா நான் இன்னும் காண்டேக்ட் பண்ணலை ஊருக்கு போய் குடும்பத்தோட 2 நாள் அவங்க குடிசையில் தங்க உத்தேசம்!!!அவங்களுக்கு செலவு வைக்க உத்தேசம்::-))
ReplyDelete