பரிட்சைன்னைவந்துட்டா பொதுவா எல்லாருக்கும் ஜுரம் தான் வரும் பயம் தான் வரும். ஆனா எங்க பசங்க ஒரு ஏழு பேர் ஒரு மார்க்கமா தான் திரிவோம் மாயவரத்துல, எங்களுக்கு மாத்திரம் ரொம்ப குஷி வந்துடும். பரிட்சை டைம்டேபிள் கொடுத்த உடனே என்னவோ யுத்தத்துக்கு திட்டம் போடுற மாதிரி போடுவோம். டைம் டேபிள் குடுத்த நாள் முதல் முதல் பரிட்சை நாள் வரை இடை பட்ட நாளை கணக்கில் வச்சு நாங்க ஒரு திட்டம் போடுவோம் . ஒரு நாளுக்கு எத்தனை பாடம் படிப்பது முதல் அந்த டைம் டேபிளை பார்த்தாலே கண்ணுல ஒத்திக்கும் மாதிரி இருக்கும். அதன் படி படிச்சா நிச்சயமா ஸ்டேட் பஸ்ட் தான் . அந்த டைம் டேபிளை வச்சு நாங்க பாடம் படிச்ச லெட்சனம் தான் இந்த பதிவே!
சங்கர்
தான் முதல்ல ஆரம்பிப்பான் " டேய் மாப்ள இந்த பரிட்சைல செமத்தியா மார்க் வாங்கனும்டா அதுக்கு ரெண்டு விஷயம் முக்கியம் ஒன்னு பிளானிங் அடுத்து இம்பிளிமெண்டேஷன் இப்ப நாம எப்படி படிக்கறதுன்னு பிளான் பண்ணியாச்சு அடுத்து இம்பிளிமெண்டேஷன் தான்"ன்னு சொல்லுவான். உடனே குரங்கு ராதா " டேய் எந்த விஷயமா இருந்தாலும் முதல்ல நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கனும் இன்னிக்கு பாட்டி முகம் அதனால நாளை முதல் வச்சுக்கலாம்"ன்னு முதல் குண்டை போடுவான். நானே நல்ல அறிவு பசில இருக்கும் போது ராதா இப்படி சொன்ன உடனே மனசுகுள்ள வந்த சந்தோஷத்தை முகத்துல காட்டிக்காம "என்னடா இப்ப வந்து சொல்லுற பாட்டி முகம் தாத்தா முதுகுன்னு இப்ப பாரு நம்ம டைம் டேபிள் படி இப்ப முதல் நாள் பாடம் அவுட் ஆகிடுச்சு"ன்னு கோவிச்சுப்பேன்.
அதுக்கு
ராதா "சரி வுடுடா அநேகமா அந்த பாடத்தில இருந்தெல்லாம் கேக்க மாட்டானுங்கன்னு நெனைக்குறேன்"ன்னு சொல்லுவான். பின்ன எங்க உக்காந்து படிக்கனும்ன்னு முடிவாகும் . அப்ப கார்த்தி "டேய் நாம எல்லாம் தனி தனியா உக்காந்து படிச்சு ஏதாவது ஒரு டவுட் வந்தா அந்த ஒரு நாள் வேஸ்ட் ஆகிடும் அதனால கம்பைன் ஸ்டடி தான் பெஸ்ட் அதுக்கு ஏத்த இடம் எங்க வீடு தான், அப்பா அம்மா ரெண்டு பேரும் ஆபீஸ் போன பின்ன நாம காலைல 9.00க்கு ஆரம்பிச்சுடுவோம், கரெக்டா வந்துடனும் சரியா"ன்னு பிளான் தயாராகிடும். பின்ன எல்லாரும் சேர்ந்து இத பத்தியெல்லாம் டீப்பா டிஸ்கஸ் பண்ண வைத்தா டீ ஸ்டால் போய் நெய்வறுக்கியும் டீயும் குடிசுட்டு அங்கயே ஒரு ஒரு மணி நேரம் பேசிகிட்டு இருந்துட்டு இருக்கும் போது சிவா சூப்பர் ஐடியா சொல்லுவான்."டேய் இனி பரிட்சைன்னு வந்துட்டா சினிமா போரது எல்லாம் கஷ்டம் அதனால இன்னிக்கு ராத்திரி செகண்ட் ஷோ போயிட்டு நாளை முதல் பிரஷ்ஷா படிப்போம்"ன்னு சொன்னது தான் தாமதம் அவனவனுக்கு குஷி ஆகிடும் . அது போலவே ராத்திரி படம் பார்த்துட்டு முனிசிபாலிட்டி வாசல்லயோ எங்கயோ கூட்டமா சைக்கிளை நிறுத்திகிட்டு எப்படியெல்லாம் படிக்க போறோம்ன்னு பேச்சை ஆரம்பிச்சு கடேசியா மாலா,தனம் அப்டீன்னு பேசி அந்த சிட்டிங் முடிய ராத்திரி 3.30 ஆகிடும். பின்ன அவனவன் போய் கவுந்தடிச்சு தூங்கி காலைல எழுந்திருக்க 11.00 ஆகிடும். பின்ன மெதுவா எழுந்து அவனவன் கார்த்தி வீட்டுல கூட மதியம் 12.00 ஆகிடும். புஸ்தகத்தை எல்லாம் தூக்கிட்டு வந்து படிக்க ஆரம்பிக்காம வேற எது எதுவோ பேசிகிட்டு யார் யார் எந்த எந்த இடத்துல உக்காந்து படிகிறதுன்னு இடம் பிடிப்போம் . இடம் பிடிக்கும் போது அந்த இடத்திலே 2 நிமிஷம் உட்கார்வது தான் அதுக்கு பின்ன அந்த இடத்துக்கே போறதில்லை. அப்பன்னு பார்த்து குரங்கு ராதா ஓடி வந்து "டேய் என்ன அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வந்து ஆரம்பிக்கலாமேன்னு பார்த்தேன்"ன்னு சொல்ல இதுக்காகவே காத்து கிட்டு இருந்த மாதிரி பாய்ங்சு போய் சைக்கிள்ல தொத்திப்போம். அப்ப தான் நான் சொல்லுவேன்" டேய் உள்ளூர் சாமி எல்லாம் நமக்கு எப்பவுமே துணை இருக்கும்டா அதனால கொஞ்சம் சைக்கிளை மிதிச்சுகிட்டு பக்கத்துல எங்கயாவது போய் சாமி கிட்ட வரம் வாங்கியாறலாம் டா"ன்னு சொன்ன உடனே சிவா" டேய் ஒத்தை கல்லுல ரெட்டை மாங்கா அடிக்கனும்டா அதனால பேசாம பூம்புகார் போய் அங்க கண்ணகியை கும்பிட்டு வரலாம்டா, கண்ணகியும் கும்பிட்ட மாதிரி ஆச்சு கடல்ல குளிச்ச மாதிரியும் ஆச்சு உடம்பும் மனசும் சுத்தமா இருந்தாதான் பாடம் மண்டையில ஏறும்"ன்னு தத்துவமா பொழிவான். அதுலயும் ஒரு ஞாயம் இருப்பதாக படுவதால் ஏழு சைக்கிளும் (27 கி.மீ தூரம்) பூம்புகார் பறக்கும்.பாட புத்தகம் எல்லாம் எங்களை ஏக்கத்தோட பார்க்கும். போய் சேரவே 4.00 ஆகிடுமா பின்ன கடல்ல குதியாட்டம் போட்டுட்டு நிலவு வெளிச்சத்துல அலைல படுத்துகிட்டு எப்படி படிக்கலாம் போட்ட டைம் டேபிளை எப்படி இம்ப்ளிமெட்டேஷன் பண்ணலாம்ன்னு டீப்பா டிஸ்கஷன் பண்ணுவோம் . எல்லாம் முடிச்சுட்டு ஞாபகமா கண்ணகியை கும்பிட மறந்துட்டு டயர்டா திரும்ப சைக்கிளை மிதிச்சு கிட்டு வீடு வந்து சேர ராத்திரி 3.30 ஆகிடுமா. ஆக 2ம் நாள் பாடமும் அவுட் .
அடுத்த
நாள் வழக்கம் போல காலை 11.30க்கு கூடி முக்கிய முடிவு எடுத்துடுவோம். இனி நைட் ஸ்டடி தான் சரின்னு. சரின்னு ராத்திரி 9.00 க்கு கார்த்தி வீடு இருக்கும் தெருவிலே ஆளுக்கு ஒரு தந்தி மரம் என்னவோ அதை பெரிய போதி மரம் மாதிரி நெனச்சுகிட்டு அதுக்கு கீழே ஒரு ஒரு ஸ்டூல் போட்டு விட்டு திரும்பவும் கார்த்தி வீட்டு வாசல்லயே பேசிகிட்டு நிப்போம். அப்ப எவனாவது ஒருத்தன் "டேய் வைத்தா கடைக்கு போயிட்டு வந்து பிரஷ்ஷா படிப்போம்"ன்னு சொல்ல ஜூட். பின்ன அங்க எங்க மாதிரி குருப் குரூப்பா நிறைய பசங்க வந்திருப்பானுங்க நாங்க இதுவரை என்னன்ன படிச்சு முடிச்சிருக்கோம்(????)ன்னு டிஸ்கஷன் ஓடும் செகண்ட் ஷோ விட்டு எல்லாரும் போயிடுவாங்க ஆனா எங்க டிஸ்கஷன் மாத்திரம் முடியாது. பின்ன 2.30 க்கு பதனீர் இறக்கி வரும் உடம்பு ஹீட் ஆச்சுன்னா படிக்க முடியாதுன்னு அதை வாங்கி குடிச்சுட்டு ஒரு 3.00 மணி வாக்கில போனா தந்தி கம்பத்துக்கு கீழே ஸ்டூலில் எங்க புத்தகம் அனாதையா இருக்கும். எடுத்து படிக்கலாம்ன்னு பார்த்தா அப்ப தான் அந்த தெருவிலே விடிகாலைல வந்து கூட்டில் அடையும் அராத்து எல்லாம் வரும். அதுங்க கிட்ட மொக்கைய போட்டுட்டு அம்மா கோலம் போடும் நேரத்துல வீட்டுக்கு வந்து கவுந்தடிச்சு தூங்கிடுவோம்.
இப்படியாக
மிகுந்த கஷ்டப்பட்டு படிச்சு பரிட்சைக்கு போனா நான் அருமையா எழுதுவேன். சங்கர் சூப்பரா படம் போடுவான் ஆன்சர் பேப்பர்ல. நின்று கொண்டிருக்கும் ஒரு வாத்தியாரின் காலை இரண்டு கைகள் பிடித்து கொண்டிருப்பது போலவும், பின்ன இரண்டு கண்கள் மாத்திரம் வரைந்து அதிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வருவது போலவும் டிசைன் டிசைனா போடுவான். அதிலே வேற குரங்கு ராதா சூப்பரா தமிழ்ல " ஆசிரியருக்கு ஒரு கடிதம்" ன்னு தலைப்பு வச்சு நாம பதிவு போடுவது போல பதிவு போடுவான். தனக்கு 6 சகோதரிகள் எனவும் அதில் 3 பேர் குருடு 3 பேர் டிபி பேஷண்ட் என்றும் இவன் தான் போஸ்டர் ஒட்டி குடும்பத்தை காப்பாத்துவது போலவும். அது அவன் ஸ்டைல். நான் தான் என் ஸ்டைல் சொன்னேனே அப்படியே அட்சரம் பிசகாமல் கொஸ்டின் பேப்பரை எழுதிடுவேன். ஒரு தடவை எக்கு தப்பா எங்க காலேஜ் லெக்சரரே திருத்த போய் அதிலே நான் மாட்டி கிட்டேன். கிளாஸ்ல வந்து கேட்டார்" ஏன்யா எங்க கிட்ட தான் மீந்து போன நிறைய கொஸ்டின் பேப்பர் இருக்கே நீ வேற எதுக்கு கஷ்டப்பட்டு காப்பி எடுத்து தாரன்னு மானத்தை வாங்கிபுட்டார். எக்கு தப்பா ஒரு தடவை அதிஷ்டமும் அடிச்சுது. அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.

மீ த ஃப்ர்ஸ்ட்.....
ReplyDelete//இராம்/Raam said...
ReplyDeleteமீ த ஃப்ர்ஸ்ட்.....//
ரைட்டு விடுங்க....
//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//
ReplyDelete:))))) அழகான கையெழுத்துக்கு மார்க்கோ?
மொத்தத்தில கலக்கல் பதிவு..
இந்த கணக்குனாலே இப்பிடிதாண்ணே..... :((
ReplyDeleteநாங்கெல்லும் இதேமாதிரி படிச்சிருக்கோம்'லே??? :)
//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//
ReplyDeleteஅவருக்கு இந்த பதிவ டெடிகேசன் பண்ணிடுங்க...
பரவாயில்லையே நல்லா படிச்சிருக்கீங்க ...நானும் ஒரு தடவை இப்படி என் ப்ரண்டு ஒருத்தியை வீட்டுக்கு கூப்பிட்டு படிக்கறோம் பேர்வழின்னு எதைஎதையோ பேசி பொழுதை கழித்தது நியாபகம் வருது...கம்பைன் ஸ்டடின்னாலே கேலியா தான் பாப்பாங்க எல்லாரும்.. அரட்டை அடிக்க ஒரு சாக்கு..
ReplyDeleteஅன்னைக்கு நானும் என் ப்ரண்டு சுமதியும் விழுந்து விழுந்து அடக்கமுடியாம எதுக்கோ சிரித்தோம் எதுக்கும்ன்னு மறந்துபோச்சு...ஆனா சிரிச்சது மட்டும் தான் நியாபகம் இருக்கு...
பதிவு நல்லாருக்கு!! என்னோட, 12 ம் வகுப்பு பரீச்சைக்கு, க்ரூப் ஸ்டடி பண்ணது எல்லாம், நினைவுக்கு வருது!!!
ReplyDelete//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//
ReplyDeleteரொம்ப கஷ்டமான பேப்பர் அது எப்படி அத்தனை மார்க் எடுத்தீங்க..? ஒருவேளை ஆசிரியர் கண்ணாடி அணியாமல் திருத்திட்டாரோ..?
:)
நமக்கு இந்த் கம்பைன் ஸ்டடி எல்லாம் வேலைக்கு ஆவாது. இருந்தாலும் Study Holidays ல ஊர் ஊரா போய் கம்பைன் ஸ்டடி பண்ணுவோம். அதிலும் நாகூர் ல அடிச்சு கூத்து எல்லாம் மறக்க முடியாது கூத்துக்கள்...
ReplyDeleteப்ரீட்சைக்கு முதல் நாள் மட்டும் தனியா வர்கார்ந்து படிச்சு(???) பாத்து அடுத்து நாள் நம்ம பாத்ததுக்கு ஒரு திரைகதை ரெடி பண்ணி எழுதுவோம். அதுக்கு இது வரைக்கும் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டு இருக்கானுங்க... அவங்க எல்லாம் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்.
ஹாஹாஹாஹா.... சூப்பர் அண்ணா... இப்படியெல்லாம் படிக்கணும்னு எனக்கு சின்ன வயசுலயே சொல்லி கொடுத்திருந்தா ஒழுங்கா படிச்சிருப்பென் இல்ல... இப்ப பாருங்க இப்டி கஷ்டப்படறேன் ;)))
ReplyDelete//ராதா "சரி வுடுடா அநேகமா அந்த பாடத்தில இருந்தெல்லாம் கேக்க மாட்டானுங்கன்னு நெனைக்குறேன்"ன்னு சொல்லுவான்.//
ReplyDeleteஇவ்வளவு யோசிச்சு அருமையா படிச்சதனால் தான் உங்களுக்கு துபாயிளெல்லாம் வேலை கிடைச்சுச்சா சார்!
/"எப்படியெல்லாம் படிக்க போறோம்ன்னு பேச்சை ஆரம்பிச்சு கடேசியா "மாலா,தனம்" அப்டீன்னு பேசி அந்த சிட்டிங் முடிய ராத்திரி 3.30 ஆகிடும்."/
ReplyDeleteஇதப் பாத்துட்டு எங்க அப்பா சொல்ராரு "எல்லா பசங்களும் கம்பைன் ஸ்டடி என்ன மாதிரித்தான் பண்ணி இருக்காங்க போல" ன்னு
//வைத்தா டீ ஸ்டால் போய் நெய்வறுக்கியும் டீயும் குடிசுட்டு அங்கயே ஒரு ஒரு மணி நேரம் பேசிகிட்டு//
ReplyDeleteஸேம் ஃபீலிங்ஸ்!!! - தேங்காய் பன்னு கிடையாதா?
ஆக மொத்தம் வைத்தா கடைதான் எல்லாருக்கும் அறிவு கண்ண தொறந்துவிட்ட இடமுனு நினைக்கிறேன்!
ஆமாம் பூம்புகாரில அந்த நிலா வெளிச்சத்துல உண்மையிலேயே நீங்க படிப்பு சம்பந்தமாத்தான் பேசுனீங்களா...????
ஆமாம் அந்த ராதா இப்ப எங்க இருக்காரு நான் பார்த்து பல வருஷமாயிடுச்சி? (மேல வீதிதானே!)
ReplyDeleteஇந்த ராதா & அப்சரா இவங்களப்பத்தியெல்லாம் சேதி எப்ப வெளியே வரும்?
//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//
ReplyDelete:-))
Naanum vanthuten, why previous post இன்றைக்கு எனக்கு பதிவு போட இதுவரை நேரம் கிடைக்க வில்லை!!! is not opening
ReplyDeleteஆஹா!! நல்லா கொசுவர்த்தி சுத்த வெச்சுட்டீரே.... நானும் கம்பைண்ட் ஸ்டடி பண்ணின ஞாபகம் வருதே ஞாபகம் வருதே.... :))
ReplyDeleteஅவருமிப்ப நொந்து நூலாப் போயி உங்க பதிவ படிச்சிக்கிட்டிருக்காராம்.
ReplyDeleteஅப்பயே பெயில் பண்ணாம உட்டமேன்னு இப்பஃபீல் பண்ரதா கேள்வி
சூப்பர் கொசுவத்தி.. :))
ReplyDeleteகொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க்கா. இதெல்லாம் கொஞ்சம் டூ மச்..
ReplyDelete* வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅட நட்சத்திரமா? வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஒஹோ இதுதான் கம்பைன் ஸ்டடியா.:))))
ReplyDeleteஅடடா.. எங்க காலத்தில இப்படிப் படிச்சிருந்தா எங்கியோ போயிருப்போமே. அபி அப்பா. டூ மச்.
அம்மாவுக்கு எழுதிப் போடறேன் பாருங்க!!!!
அபி அப்பா இவ்வளவு நல்லவங்களா நீங்க
ReplyDeleteநாமக்கல் சிபி மா.அ.மா விமர்சனம் வாசிக்காமதான் எழுதறேன்:-)
நட்சத்திர வாழ்த்துகள்
///நின்று கொண்டிருக்கும் ஒரு வாத்தியாரின் காலை இரண்டு கைகள் பிடித்து கொண்டிருப்பது போலவும், பின்ன இரண்டு கண்கள் மாத்திரம் வரைந்து அதிலிருந்து தாரை தாரையா கண்ணீர் வருவது போலவும் டிசைன் டிசைனா போடுவான்///
ரொம்ப நல்ல இருக்கு.
புரொபசருக்கு மானசீகமா நன்றி சொல்லுங்க
அன்புடையீர் வணக்கம்,
ReplyDeleteநேற்று பதிவு போட நேரமில்லையென்று ஓர் இடுகை எழுதியிருந்தீர்கள். அதற்கு நேற்று எனக்கு பின்னூட்டம் எழுத நேரமில்லை என்று பின்னூட்டமிட நினைத்து பின்னூட்டமிட நேரமில்லாததால் இன்று ஒரு பின்னூட்டமிட்டு அந்த எழுத நினைத்து நேரமில்லாமல்விட்ட இடுகைக்கு எழுத நினைத்து நேரமில்லாமல்விட்ட பின்னூட்டமாக ஏற்றுக்கொள்ளக்கேட்க நினைத்தால் அந்த இடுகையையே காணவில்லை. நான் எங்கு போய் பின்னூட்டமிடுவது. பின்னூட்டமிட்டு விளக்கவும்
\\26 Comments - Show Original Post
ReplyDeleteCollapse comments
இராம்/Raam said...
மீ த ஃப்ர்ஸ்ட்.....\\
ரைட்டு ஒத்துக்கறேன்! பர்ஸ்ட் தான்!!
ஜேக்கே! அத நான் தான் சொல்லனும்:-))
ReplyDelete\\PPattian : புபட்டியன் said...
ReplyDelete//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க்\\
வாங்க புஞ்சை புளியம்பட்டியானே! என் கை எழுத்ட்துக்கு மார்க் கொடுத்தா மைனஸ்ல போகும்:-))
\\இராம்/Raam said...
ReplyDeleteஇந்த கணக்குனாலே இப்பிடிதாண்ணே..... :((
நாங்கெல்லும் இதேமாதிரி படிச்சிருக்கோம்'லே??? \\
ராம்! எனக்கு கனக்கு பிணக்கு இல்லை, ஏனோ அஸ்ட்ரானமி மாத்திரம் எனக்கு மீன் கழுவின தண்னி குடிச்ச பூனை மாதிரி ஒரு அலர்ஜி:-))
\\J K said...
ReplyDelete//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//
அவருக்கு இந்த பதிவ டெடிகேசன் பண்ணிடுங்க...\\
ரொம்ப முக்கியம் ஜேக்கே! அவருக்கு தான் இப்படி கொஸ்டின் பேப்பருக்கு மார்க போட்டதுதெரிஞ்சா என்னை சபிச்சுட மாட்டாரா:-))
\\முத்துலெட்சுமி said...
ReplyDeleteபரவாயில்லையே நல்லா படிச்சிருக்கீங்க ...நானும் ஒரு தடவை இப்படி என் ப்ரண்டு ஒருத்தியை வீட்டுக்கு கூப்பிட்டு படிக்கறோம் பேர்வழின்னு எதைஎதையோ பேசி பொழுதை கழித்தது நியாபகம் வருது...கம்பைன் ஸ்டடின்னாலே கேலியா தான் பாப்பாங்க எல்லாரும்.. அரட்டை அடிக்க ஒரு சாக்கு..
அன்னைக்கு நானும் என் ப்ரண்டு சுமதியும் விழுந்து விழுந்து அடக்கமுடியாம எதுக்கோ சிரித்தோம் எதுக்கும்ன்னு மறந்துபோச்சு...ஆனா சிரிச்சது மட்டும் தான் நியாபகம் இருக்கு...\\
வாங்க! முத்துக்கா, என் ஜூனியரே! கெமிஸ்ட்ரி வாசு தான் குழந்தைக்கு சொல்லி குடுப்பது போல சொல்லிகுடுப்பாரே, தேவையே இல்லை கம்பைன் ஸ்டடிக்கு, நாங்க ஏதோ ஆம்பள பசங்க ஜாலிக்கு கம்பை ஸ்டடி பண்னுவோம் யூ டூ:-))அது ஜாலியான அனுபவம் இத்தன வருஷம் பின்ன கூட ஞாபகம் வருது பாருங்க:-)
\\Veerasundar said...
ReplyDeleteபதிவு நல்லாருக்கு!! என்னோட, 12 ம் வகுப்பு பரீச்சைக்கு, க்ரூப் ஸ்டடி பண்ணது எல்லாம், நினைவுக்கு வருது!!!
\\
வாங்க வீர சுந்தர்! முதல் வருகையா மிக்க நன்றி!:-))
\\நிலவு நண்பன் said...
ReplyDelete//அஸ்ட்ரானமின்னு ஒரு பாடாவதி சப்ஜெட்ல என் கொஸ்டின் பேப்பருக்கு 86 மார்க் போட்ட புண்ணியவான் புரபசரை இன்னிக்கு வரை தேடிகிட்டு இருக்கேன்.//
ரொம்ப கஷ்டமான பேப்பர் அது எப்படி அத்தனை மார்க் எடுத்தீங்க..? ஒருவேளை ஆசிரியர் கண்ணாடி அணியாமல் திருத்திட்டாரோ..?
\\
வாங்க நிலவு நண்பன்! நெம்ப கஷ்டமான பேப்பர் தான்! ஆனா என் புரபசர் திரு.ராஜ்மோகன் சூப்பரா சொல்லிகுடுப்பார், ஆனா பாருங்க நாங்க வுட் ஹெட் ஆச்சா அதான் பிச்சுகிச்சு:-))
\\நாகை சிவா said...
ReplyDeleteநமக்கு இந்த் கம்பைன் ஸ்டடி எல்லாம் வேலைக்கு ஆவாது. இருந்தாலும் Study Holidays ல ஊர் ஊரா போய் கம்பைன் ஸ்டடி பண்ணுவோம். அதிலும் நாகூர் ல அடிச்சு கூத்து எல்லாம் மறக்க முடியாது கூத்துக்கள்...
ப்ரீட்சைக்கு முதல் நாள் மட்டும் தனியா வர்கார்ந்து படிச்சு(???) பாத்து அடுத்து நாள் நம்ம பாத்ததுக்கு ஒரு திரைகதை ரெடி பண்ணி எழுதுவோம். அதுக்கு இது வரைக்கும் மார்க் போட்டு பாஸ் பண்ணி விட்டு இருக்கானுங்க... அவங்க எல்லாம் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்\\
புலியாரே அப்பத்தில இருந்து திரைக்கதைலதான் ஓடுதா:-))
\\இம்சை அரசி said...
ReplyDeleteஹாஹாஹாஹா.... சூப்பர் அண்ணா... இப்படியெல்லாம் படிக்கணும்னு எனக்கு சின்ன வயசுலயே சொல்லி கொடுத்திருந்தா ஒழுங்கா படிச்சிருப்பென் இல்ல... இப்ப பாருங்க இப்டி கஷ்டப்படறேன்ன்\\
வாடா செல்லம்! இப்பதான் வழி தெரிஞ்சுதா நல்லது! அடப்பாவி ஹேண்ட் பேக் நெறைய சம்பளம் வாங்கிட்டு கஷ்ட படுவதாவா சொல்ற:-)) நல்லா இருப்பா:-))
:)))))) படிப்பு சிரிப்பா சிரிக்குது... :))
ReplyDeleteசூப்பர் அபி அப்பா! ஒரே ஒரு தடவை கம்பைன் ஸ்டடி பண்ணி ஒரே ஒரு தடவை கோட்டடிச்ச ஞாபகத்தை எல்லாம் போட்டு கெளற வச்சிட்டீங்களே? செம காமெடி பதிவு. கலக்கல்.
ReplyDeleteகூட்டுப் படிப்பு என்பது 3 அல்லது 4 மாணவர்கள் இருக்கும் வரை சரியாக இருக்கும். எண்ணிக்கை கூடினாலோ படிப்பு போய் விடும். திட்டமிடுதல், செயல் படுத்துதல், நாள் பார்த்தல், இறை வணக்கம் என்று சரியாகத் தான் ஆரம்பித்திருக்கிறீர்கள். நடுவில் டீக்கடை, நெய் பிஸ்கட், மாலா, தனம், இரவுக் கனாக்கள், பசங்களுக்கே உரித்தான அனைத்துமே மனதில் அலை பாயும். என்ன செய்வது. வயசுக் கோளாறு. கண்ணகியைக் கும்பிட கடற்கரையில் கொட்டம். ம்ம்ம்ம். இத்தனையிலும் தப்பித்து மயிலாடு துறையிலிருந்து துபாய் வரை பயணம்.
ReplyDeleteநாங்க எப்டின்னா, கம்பைன் ஸ்டடின்னா, கண்டினுவஸ் சீட்டாட்டம் தான். பயங்கரமான செட்டு. பொறியியல் தேறி உயர்ந்த பதவிகள் வகிக்கிறோம். சிலர் பாரின் - சிலர் தாய்த் திரு நாட்டின் மீதுள்ள பற்று காரணமாக - தேச பக்தி காரணமாக இங்கேயே குப்பை கொட்டுறோம்.
எல்லொரும் நல்லா இருக்கொம். கடவுளுக்கு நன்றி