சமீபத்தில் பதிவர் தெக்கிகாட்டானை நம்ம நாமக்கல் சிபி கலாய்ச்சி ஒரு பதிவு போட்டிருந்தார். அந்த பதிவுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். எப்போதும் போல ஒரு நாள் ஓவர் டைம் போட்டு தமிழ்மணத்தில் இரவு 12 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த போது டொங்க்ன்னு நம்ம சிபி ஜி சேட்டுல வந்து "ஹாய்"ன்னு சொன்னாரு. அந்த சேட்டிங்க் தான் இந்த பதிவு!.
"ஹாய் அபிஅப்பா"
"ஹாய் சிபி, என்ன நடுராத்திரில"
"மா.அ.மா எழுதிக்கிட்டு இருக்கேன் 7ம் பாகம்"
ஆஹா, மா.அ.மா ன்னா என்னன்னு தெரியலையேன்னு நெனச்சு கிட்டு அவசர அவசரமா அவர் லிங்க்கு ஓடிப்போய் (மனுசன் எத்தனை பிளாக்குப்பா வச்சிருக்காரு) மாங்கு மாங்குன்னு தேடி ஒரு வழியா பிடிச்சுட்டேன். மா.அ.மா ன்னா மாதங்களிள் அவள் மார்கழின்னு பின்ன சேட்டுல வந்து...
"அப்படியா சிபி, சூப்பர் மாதங்களிள் அவள் மார்கழி தலைப்பே கவிதைங்க சிபி"
"அப்படியா, நீங்க அதை படிக்கிறீங்களா?" இது சிபி!
"என்னய அவமான படுத்தாதீங்க சிபி, நான் எத்தன பேருக்கு அந்த லிங் குடுத்து படிக்க வச்சேன் தெரியுமா, இப்ப எல்லாரும் சிபி எப்ப அடுத்த பாகம் போடுவாருன்னு என்னய போட்டு புடுங்குறாங்க தெரியுமா"
"அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அபிஅப்பா, சரி உங்க விமர்சனம் என்னா அந்த கதை பத்தி"
"அருமையான எழுத்து நடை" இது நான்!
"ரொம்ப நன்றி அபிஅப்பா, வேற?"
"எதிர் பாராத முடிவுகள் ஒவ்வொறு பாகத்திலும்"
"ஆமா அபிஅப்பா, அப்படி ட்விஸ்ட் குடுத்தாதான் அடுத்த பாகம் எப்ப வரும்ன்னு எதி பார்ப்பாங்க ம் வேற"
ஆஹா அடுத்து அடுத்து கதை உள்ள போயிடுவாரோன்னு பயந்து போய் அவசர அவசரமா அந்த கதைக்குள்ள கண்ணை ஓட்டினேன். நந்தினின்னு ஒரு பேர் தென்பட்டுச்சு. திரும்ப சேட்டுக்கு வந்து...
"ஹீரோ டயலாக் எல்லாம் சூப்பர்" ஆண்டவா கண்டிப்பா ஹீரோ இருக்கனும். இவர் பாட்டுக்கு புதுமை செய்கிறேன் பேர் வழின்னு ஹீரோவே இல்லாம எழுதியிருந்தார்ன்னா, அப்படித்தான் அவந்தி ஒரு கதை எழுத நான் போய் "ஹீரோயின் டயலாக் சூப்பர்"ன்னு சொல்ல போக "அண்ணாஆஆஆ....இது ரெண்டு சின்ன பசங்க கதை இதிலே ஹீரோயினே இல்லை"ன்னு திட்ட அது போல இப்பவும் ஆகிட கூடாதேன்ன்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டேன்.
"அப்படியா, நான் கதை எழுதும் போது அது உள்ளயே போயிடுவேன். ஹீரோ டயலாக் எல்லாம் நானே என்னை ஹீரோவா ஆக்கி அனுபவிச்சு எழுதுவேன், அது சரி ஹீரோயின் பத்தி ஒன்னும் சொல்லலையே அந்த கேரக்டர் எப்படி?"
ஆஹா இவர் நம்மை இன்னிக்கு மாட்டாம விட மாட்டாருன்னு நெனச்சு கிட்டு சரி நந்தினி பேரை யூஸ் பண்ணுவோம், ஆனா அது கதாநாயகியா இல்லாம விசிறி வீசும் பொண்னா இருந்தா என்னா பண்றது, சரி கல்ல விட்டு பார்ப்போம்ன்னு நெனச்சுகிட்டு...
"சிபி, எனக்கு ஒரு சந்தேகம், அந்த பேரை ஏன் கதாநாயகிக்கு வச்சீங்க, பொன்னியின் செல்வன் படிச்ச பாதிப்பா இல்ல தாகூர் கவிதை பாதிப்பா, சூப்பர் பேர் நந்தினி, எனக்கு அடுத்து பொண்ணு பொறந்தா உங்க கதாநாயகி நந்தினி பேர் தான் வைப்பேன்"
சிபி உணர்ச்சி வசப்பட்டு தாரை தாரையா ஆணந்த கண்ணீர் வடிச்சு மூக்கு சிந்துவது என் மானிட்டரில் தெரிஞ்சுது.
"வாவ் அபிஅப்பா எனக்கு இப்ப எப்படி தெரியுமா இருக்கு இப்படி ஒரு ரசிகரா நீங்க, சும்மா வரிக்கு வரி ரசிச்சு படிச்சு இருக்கீங்களே, என் தங்கமணியும் தான் இருக்காங்களே, எத்தனை தடவை சொன்னாலும் படிக்க மாட்டங்குறாங்க"
"அட போங்க சிபி என் தங்கமணி என் பதிவை கூட அவ்வள்வா படிக்க மாட்டாங்க ஆனா மா.அ.மா படிச்சுட்டு அழுவாங்கன்னா பார்த்துகோங்க சிபி"
"எதுக்கு அழனும், ஸ்மூத்தா தான போகுது"
ஆஹா மாட்டிகிட்டனே...சரி சமாளிப்போம்....
"அட நீங்க வேற சிபி அது ஆனந்த கண்ணீர்ங்க"
"ஓ , தெரியுமா சேதி நந்தினி இந்த பாகத்துல பொக்கே குடுக்க போறா?"
"அடங்கொக்க மக்கா, என்னா சிபி நான் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை, இது தான் சிபி உங்க கிட்ட எனக்கு பிடிச்சது, வாவ்"
"அபிஅப்பா, என் அருமையான ரசிகருக்காக இப்போ இந்த பாகத்தை இப்போ பப்ளிஷ் பண்ன போறேன், ஆனா தமிழ்மணத்துல இணைக்க மாட்டேன், முதல்ல நீங்க படிங்க பின்ன தமிழ் மணத்துல இணைச்சு கறேன், இது நான் என் ரசிகருக்கு தரும் அன்பு பரிசு"
"ரொம்ப தேங்ஸ் சிபி, நானே கேக்கனும்ன்னு இருந்தேன், இது என் பாக்கியம், பப்ளிஷ் பண்ணுங்க"
அப்படியே 3 நிமிஷம் போச்சு....
"அபி அப்பா படிச்சுட்டீங்களா"
"இருங்க டிஸ்டர்ப் பண்ணாதீங்க, மா அ மா படிக்கும் போது அபிபாப்பா டிஸ்டர்ப் பண்ணாவே கடந்து கத்துவேன், ப்ளீஸ் டோண்ட் டிஸ்டர்ப்"
"ஸாரி ஸாரி ஸாரி...படிங்க்"
பத்து நிமிஷம் கழிச்சு திரும்பவும் சேட்ல.....
"அபி அப்பா "
"ம்"
"இன்னுமா படிக்கறீங்க"
"படிச்சுட்டேன்"
"எப்படி"
"ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல சிபி, என்னை 1 மணி நேரம் தனியா விடுங்க.....நான் அந்த பாதிப்புல கொஞ்சம் சந்தோஷமா இருக்கறேன்"
"ஓக்கே ஓக்கே நாளை பார்ப்போம் பை டேக் கேர், குட் நைட்"
"குட் நைட் சிபி"
அடுத்த நாள் கதையின் கிளைமாக்ஸ் கூட சொன்னார், தகுந்த சம்மானம் அனுப்பினா தனி மடலில் முடிவு சொல்லப்படும் "யாரிடமும் சொல்லாதீங்கன்னு சத்தியம் வாங்கி கிட்டு.......
தேவ்! உங்களோட தொடர் "சின்ன குளம்" விமர்சனம் அடுத்ததா போடவா?
me the firstuuuuuuuuu............
ReplyDeleteஅட்டகாசம்... ரெடிமேட் பதில் வச்சிருக்கீங்க ... உங்களைப்பத்தி தெரிஞ்சவங்க ...நல்லா புரிஞ்சு சிரிப்பாங்க வயிறு வலிக்க... :)))))
ReplyDeleteபோஸ்ட் படிச்சுட்டேன்...
ReplyDeleteஎன்ன சார்! உண்மையைப் போட்டு இப்படி உடைக்கிறீர்கள். போதும் சார்! எங்களால தாங்க முடியலை
ReplyDeleteகண்டிப்பாப் போடுங்க.. லிங்க் மறக்காம கொடுங்க... அப்புறம் நம்ம கதையில்ல டைட்டில் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும்ன்னா அதை வச்சு எப்படி வூடு கட்டப் போறீங்கன்னு நான் பாக்கணும்...
ReplyDeleteவெயிட்டீங் வெயிட்டீங் வெயிட்டீங்கோ:)))))))))))))))
அபிஅப்பாகிட்ட பேசும்போது எல்லாரும் உசாரா இருந்துக்கோங்க . எனக்கு பரவாயில்ல. என் பதிவுல போட்டோ மட்டும்தான் தப்பிச்சேன்
ReplyDeleteஅடப்பாவிகளா!!
ReplyDeleteஆனா அந்த ஆளை கலாய்ச்ச க்ரூபில் சேரும் உங்களை நான் வரவேற்கிறேன். :)))
அபி அப்பா,
ReplyDeleteநம்ம தலயே இன்னும் கதையேட முடிவ முடிவு பண்ணலையாம்.
சிபி! கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க! இது சும்மா கலாய்க்கும் பதிவு!!!:-))))
ReplyDeleteரைட்டுண்ணே.....
ReplyDeleteஉங்க கூட சேட் பண்ணின வரலாற்றை ஒன்னை வலையேத்திற வேண்டியதுதான்... :)
எங்க சிங்கதளபதி'யே கலாய்க்கீறீங்களா???
அய்யோ அய்யோ! பாவம் சிபி!
ReplyDeleteரெண்டு வரியில் கதை எழுதினா படிக்க மாட்டீங்க என்கிற உண்மை தெரியாம இப்படி உங்களுக்காக ஸ்பெஸல் பரிசு எல்லாம் கொடுத்து இருக்கிறாரே!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்
இந்த கருமத்தால தான் எந்த பதிவரை பாத்தாலும் என்னோட அந்தப் பதிவை படிச்சீங்களா? இந்தப் பதிவைப் படிச்சீங்களான்னு கேக்குறதேயில்லை...
ReplyDeleteவர.. வர.. நாம எழுதற பதிவை நாமளே படிச்சிக்கிட்டா தான் உண்டுன்னு நெனைக்கிறேன்.
எல்லாரும் என்னைப் போல தான் போல... பதிவை படிக்காம பின்னூட்டம் மட்டும் போடறது...
\\இராம்/Raam said...
ReplyDeleteரைட்டுண்ணே.....
உங்க கூட சேட் பண்ணின வரலாற்றை ஒன்னை வலையேத்திற வேண்டியதுதான்... :)\\\
மாப்பி நீ முதல்ல போடுறியா இல்ல நான் போடாவா :)))
அட கொங்கமக்கா!
ReplyDeleteஅருமையான பதிவு. படித்துவிட்டு பிறகு வந்து பின்னூட்டமிடுகிறேன்
ReplyDeleteஸூப்பர் ஸூப்பர் ஸூப்பர்
ReplyDeleteதகுந்த சம்மானம் அனுப்பினா தனி மடலில் முடிவு சொல்லப்படும்
சம்மானம் ஒரு 1000 பின்னூட்டமா குடுத்துடவா.....
சிபியவே கலாய்ச்சிட்டிங்களா நீங்க...:))
ReplyDelete//ஆனா அந்த ஆளை கலாய்ச்ச க்ரூபில் சேரும் உங்களை நான் வரவேற்கிறேன். //
ReplyDeleteஇந்த ஒரே காரணத்துக்காக நான் பதிவை வெறித்தனமா பாராட்டுகிறேன்....
//சிபியவே கலாய்ச்சிட்டிங்களா நீங்க...:))//
ReplyDeleteசிபியை கலாய்க்க கூடாது என நம் அரசியல் சட்டத்தில் ஏதும் சொல்லி இருக்கா என்ன?
டிஸ்கி:
இதையும் நம் முதல்வரின் பேச்சையும் வச்சு முடிச்சு போடக் கூடாது சொல்லிட்டேன்...
வர வர பின்னூட்டத்திற்கு எல்லாம் டிஸ்கி போட வேண்டியதா போச்சே...
adra sakkai! adra sakkai!!!
ReplyDelete//ஆனா அது கதாநாயகியா இல்லாம விசிறி வீசும் பொண்னா இருந்தா என்னா பண்றது, சரி கல்ல விட்டு பார்ப்போம்ன்னு நெனச்சுகிட்டு.../
ReplyDeleteithukku enna artham... illa enna arthamnu keakurean..
nijamavea appaaviyaa thaan potteengla..illa ul kuthu irukkaa
:-)
சிபி யே துணுக்கு மாதிரிதான் ஒவ்வொரு பகுதியா போடுறாரு. இருக்கிற எல்லா பகுதியையும் படிக்க 5 நிமிஷம் இருந்தாவே போதுமே.
ReplyDeleteரொம்ப நல்லா கலாய்ச்சிருக்கீங்க
ReplyDelete//
வர.. வர.. நாம எழுதற பதிவை நாமளே படிச்சிக்கிட்டா தான் உண்டுன்னு நெனைக்கிறேன்.
//
இதுக்கு ரிப்பிட்டேய்
கலக்கல் போஸ்ட்
ReplyDelete:)
என்ன கொடுமையிது
ReplyDeleteஎங்க அத்தானை கலாச்சிட்டீங்களே
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
ReplyDeleteஅபி அப்பா said...
சிபி! கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க! இது சும்மா கலாய்க்கும் பதிவு!!!:-))))
//
இதுக்கு பேருதான் புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலும் ஆட்டறதா???
நானும் படிச்சதில்லை
ReplyDeleteகதைனா எனக்கு போரு
:(
அத்தான் இருக்கீங்களா...:)
ReplyDeleteஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் யூ
ஐ லவ் யூ
இச் இச் இச்
அனானி கமாண்ட் போடும் மங்களூர் சிவா வாழ்க
ReplyDelete:)
நான் என்ன விசிறி வீசுற பொண்ணா?
ReplyDeleteஅடுத்தடுத்த பாகத்துல பாருய்யா நம்ம பொசிஸன் என்னன்னு?
நீ தீர்ந்துட்டே பார்த்துக்கோ!
சரியான நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி உங்களுக்கு
ReplyDeleteஐ லவ் யூ அத்தான்
J K said...
ReplyDeleteபோஸ்ட் படிச்சுட்டேன்...
//
என்ன இது சின்னபிள்ள தனமா பதிவெல்லாம் படிச்சிகிட்டு..???
//சிபி! கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க! இது சும்மா கலாய்க்கும் பதிவு!!!:-))))//
ReplyDeleteஇதுலதான் சருக்கிட்டீரு!
இதுக்காகத்தான் கோவிச்சிக்குவேன்!
எனிவே நம்ம கதைக்கு ஒரு விளம்பரம் கிடைச்சிருக்கு!
இதனாலயே நிறைய பேர் படிப்பாங்க!(ன்னு நினைக்கிறேன்)
:)
நன்றி!
அட்வர்டைஸ்மெண்டுக்கு காசெல்லாம் கிடைக்காது!
உம்ம கற்பனை உரையாடல் படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன்.
ரொம்ப நாள் கழிச்சி அபி அப்பா டச் இந்தப் பதிவிலேதான்!
சூப்பர்!
J K said...
ReplyDeleteme the firstuuuuuuuuu............
//
ஆமா இதுதான் இப்ப முக்கியம்
//சிபியை கலாய்க்க கூடாது என நம் அரசியல் சட்டத்தில் ஏதும் சொல்லி இருக்கா என்ன?
ReplyDelete//
அதானே!
அதை நானே கூட சொன்னதில்லையேய்யா!
நாமக்கல் சிபி said...
ReplyDelete//சிபி! கோவிச்சுகாதீங்க நான் நெசமாவே அப்புறம் மா.அ.மா படிச்சுட்டேன், வேணும்னா கேள்வி பேட்டு பாருங்க! இது சும்மா கலாய்க்கும் பதிவு!!!:-))))//
இதுலதான் சருக்கிட்டீரு!
இதுக்காகத்தான் கோவிச்சிக்குவேன்!
//
அத்தான் அத்தான்
இந்த அபி அப்பாவை கலாச்சி இந்த வாரம் பூராவும் பதிவு போடுங்க
என் ஆசை அத்தானே...
என் பாச அத்தானே...
ஐய்யோ சிபி!
ReplyDeleteஇந்த போஸ்ட் நான் போட்டதில்லை!
:((
//அட்டகாசம்... //
ReplyDeleteரிப்பீட்டேய்!
கலாய்த்தல் திணை 100 வது போஸ்டுக்கு நீங்கதான் நட்சத்திரமாம்!
ReplyDeleteபார்த்து சூதனமா இருந்துக்குங்க தம்பி!
(என் பெயர் சந்தோஷ் இல்லை, எனக்கு பேன் பிரச்சினையும் இல்லை)
//என் ஆசை அத்தானே...
ReplyDeleteஎன் பாச அத்தானே...//
அட! அடுத்த தொடருக்கு தலைப்பு கிடைச்சிடுச்சே!
:))
ReplyDeletesibi anna oru appaviya..paavam avaru:P
துர்கா|thurgah said...
ReplyDelete:))
sibi anna oru appaviya..paavam avaru:P
//
அக்கா நீங்களுமா..:)
ஏற்கனவே மல்லு குரூப்பும்,மணி அய்யரும் வெயிட்டிங்க்ல இருக்காங்க..! இப்ப
ReplyDelete// எங்க சிங்கதளபதி'யே கலாய்க்கீறீங்களா???//
இது வேறயா?
வேணாம் அண்ணாத்த! நட்சத்திர குஷியில எக்குத்தப்பா போய் மாட்டிக்கிட்டா வழக்கம்போல நீங்களேதான் தப்பிச்சு வரணும்...!?
:-)
//sibi anna oru appaviya..//
ReplyDeleteசிபி அண்ணா ஒரு அப்பாவியா!? என்று ஆச்சரியத்தோடு வினவுகிறார் துர்கா அம்மையார்! ஆனால் பாவம் ஆச்சரியக்குறியும், கேள்விக்குறியும் இட மறந்து விட்டார் போலும்!
ஆயில்யன்
ReplyDeleteஇதெல்லாம் பிலாக்கர் உலகில் சதா'ரண'ம்ப்பா...:)
யாகவா முனிவர் - சிவசங்கர பாபா!
ReplyDeleteதங்கர் பச்சான் - சேரன்!
நாமக்கல் சிபி - அபி அப்பா!
ம்! ஏதோ ஒரு உண்மை தெரியுதே!
ஆமா! தலைப்பு கொஞ்சம் தப்பா இருக்குது!
இது நாமக்கல் சிபியின் "மாதங்களில் அவள் மார்கழி" - விளம்பரம்னல்ல இருக்கணும்!
இந்தப் பதிவைக் கண்ணடித்து தமிழகம் முழுவதும் வருகிற திங்கள் கிழமை பந்த் அனுசரிக்கப் படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொல்கிறோம்!
ReplyDeleteஎச்சூஸ்மி, இங்க கும்மி அலவ்டா? அலவ்டுன்னா கண்மனி அத்தை வந்து திட்ட மாட்டாங்களே?
ReplyDeleteநிலா said...
ReplyDeleteஎச்சூஸ்மி, இங்க கும்மி அலவ்டா? அலவ்டுன்னா கண்மனி அத்தை வந்து திட்ட மாட்டாங்களே?
இங்கயும் கும்மி அலவ் பண்ணாத அபி அப்பா மீது வெறித்தனமான கோவத்தில் நாங்கள்...
அடங்கொக்கமக்கா! இந்த ஆளு கிட்ட கொஞ்சம் ஜாக்க்கிரதையாத் தான் இருக்கணும் போலிருக்குங்கங்கங்கோ!
ReplyDelete:(