பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

January 22, 2009

அம்மாவின் கால் அசைப்பு!!!

இதுக்கும் அதுக்கு எந்த சம்பந்தமும் இருக்கா?

அம்மா என்னும் அழகி!!!
அம்மா!!! என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான். நான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன். இவங்க அம்மாவை விட அழகா என்ன? ச்சே அப்படி எல்லாம் இல்லை. என் அம்மா தான் அழகு என்றே யாரையும் பற்றி நினைத்து கொள்வேன். அது போல அம்மாவின் ஆளுமைதன்மையும் என்னை பிரமிக்க வைக்கும். தான் நினைத்ததை சாதிக்கும் அம்மாவின் குணம் எனக்கு வியப்பை தரும்.அம்மாவின் உடை உடுத்தும் நேர்த்தியும் என்னை கவரும்.

அம்மாவின் அறிவு என்னை ஆச்சர்யத்தை கொடுக்கும். அம்மாவின் கண்டிப்பு எனக்கு ஆத்திரம் கொடுக்கும். ஆனாலும் அது பிடிக்கும். அம்மா என் தொடையை திருகிய போதெல்லாம் 'கொடூரி' என நினைத்து கொள்வேன். அப்படி அப்போது செய்திருக்காவிடில் நான் இப்போது கொடூரனாய் ஆகியிருப்பேன். அம்மாவின் பிடிவாதம் எனக்கு பிடிக்கும். அது போல விட்டுகொடுத்தலும் பிடிக்கும்.பெரிய ஒரு ரூபாய் நாணய பொட்டும், கத்தரிப்பூ வண்ண பட்டு புடவையும், காதில் ஆடும் ஜிமிக்கியும்,முத்து வைத்த கொலுசும், சடை பின்னியிருந்தால் அதில் குஞ்சமும், பின்னியிருக்காவிடில் பன் கொண்டையும், முழங்கை வரையிலான ஜாக்கெட்டும், மஞ்சள் பூசிய முகமும், ரெமி பவுடர் வாசனையும், அக்குள் வியர்வையில் நனைந்த ஜாக்கெட்டும், அழுத்தி நடந்தால் கேட்கும் மெட்டிஒலியும், இடுப்பிலே குண்டாக என் தம்பியும்,தலையில் தொங்கவிட்ட சந்தனமுல்லையும், பன் கொண்டை போட்டால் அதை சுற்றி கனகாம்பரமும்....அப்படியே அம்மா கையை பிடித்து கொண்டு உலகையே சுற்றி வரலாம் என நினைக்கும் மனது.

அம்மாவின் ஞாபக சக்தி அம்மாவிம் வரம். அம்மா படித்தது என்னவோ ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆனால் லெஷ்மிமுதல், சிவசங்கரி வரை அத்துப்படி. ஐந்து மணிக்கு என்னை எழுப்பி படிக்க சொன்ன போது ஆனந்து மாதிரி எனக்கும் அம்மா இல்லையெனில் நன்றாக இருந்திருக்குமே என அசிங்கமாக நினைத்ததுண்டு. போர்வையை போர்த்தி உட்காந்து கொண்டு ஏதோ அய்யர் மந்திரம் ஓதுவது போல் தூக்கத்தில் படித்தால் வார்த்தை தனக்கும் புரியவேண்டும் என தலயில் அம்மா தண்ணி ஊத்திய போது தாயின் காலடியே நரகம் என நான் தவறாய் நினைத்ததுண்டு. முதல் நாள் படித்து மனப்பாடம் செய்ததை அடுத்த நாளும் படித்தால் தூங்கி கொண்டிருக்கும் அம்மாவுக்கு தெரிந்துவிடும். ஐந்தாம் வகுப்பு படித்த அம்மாவுக்கும் குவாண்டம் தியரிக்கும் போன ஜென்ம உறவு போலிருக்கு என நினைத்து கொள்வேன்.

அம்மாவின் சமையல் போல இனி இந்த ஜென்மத்தில் எங்கும் நான் சாப்பிடபோவதில்லை. அப்பா சாப்பிடும் போது மட்டும் பக்கத்தில் இருந்து பரிமாறும் அம்மா பார்க்கவே அழகாய் இருக்கும். அப்பா மோர் சாதம் சாப்பிடும் போது கையில் உருண்டையில் கட்டை விரலால் சின்ன குழி செய்து அதில் அம்மா கொஞ்சமாய் குழம்பு ஊத்தும் போது எனக்கும் அப்படி அம்மா செய்யாதா என ஏங்கியது உண்டு. அம்மா என்னை கொஞ்சியதாக ஞாபகம் இல்லை. அம்மாவின் கண்டிப்புகளே ஞாபகத்தில் இருக்கின்றன.

முதன் முதலாக அம்மா அப்பாவிடம் "விகடன் படிக்க முடியவில்லை. கண்ணாடி போடனும் போல இருக்கு" என சொல்லிய போது நான் கொஞ்சம் ப்யத்துடன் வெட்கப்பட்டேன். ஓ அம்மாவுக்கும் வயசாகுமோ? அப்போதும் அம்மா அழகாய் தான் இருந்தது. பின்பு நெற்றி ஓர நரை விழுந்தது அம்மாவுக்கு. அப்பாவின் மீசைக்கான கருப்பு மை பென்சிலால் அல்லது கண்மையினால் அம்மா அதை மறைத்து கொண்ட போது கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.பெரியக்கா வயதுக்கு வந்த போது அம்மா அழுதது ஞாபகம் இருக்கு. ஆனால் அப்போது காரணம் தெரியவில்லை. எதற்குமே நீ கவலைப்பட மாட்டாயே அப்போது ஏன் அழுதாய் என இப்போது புரிகின்றது. பொறுப்பு சுமை அதிகமான கவலை போலிருக்கு அப்போது உனக்கு. கொஞ்ச நேரம் தான் பின்னே அதன் பின்னே அம்மா எப்போதுமே எதற்குமே கலங்கியது இல்லை.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே அம்மாவிடம் சண்டையிட்டு 27 பக்க கடிதம் எழுதி வீட்டின் வாசலில் தபால் பெட்டியில் போட்டு அடுத்த நாள் "சார் போஸ்ட்" என கூவிய தபால்காரரிடம் இருந்து நான் வாங்காமல் "மேடம் உங்களுக்கு தான்"" என உன்னிடம் சொல்லி அடுக்களை வேலையாக இருந்த அம்மாவை விட்டு வாங்க சொல்லி அதை வாங்கிய அம்மா 1 வாரம் அதை பிரிக்காமல் என்னை சித்ரவதை செய்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அதன் பிறகு நானும் அதை மறந்து விட்டேன். அதன் பின் பல வருஷம் கழித்து எனக்கு திருமணம் எல்லாம் ஆன பின்பு ஒரு நாள் அம்மாவின் பெட்டியை குடைந்த போது அந்த கடிதம் கண்டேன். அப்போது அம்மா சொன்னது "உன் கடிதத்தை படித்து பார்" என்று. படித்த எனக்கு சிரிப்பையும் கண்னீரையும் அடக்க முடியவில்லை. "இன்னுமா இதை வைத்திருக்கிறாய்" என கேட்ட போது சொன்னது"எனக்குன்னு தனியா ஏது சொத்து. இதல்லாம் தான்"என்றது. அதிலே நான் எழுதி இருந்தது எல்லாமே வாழ்த்துப்பா இல்லை. என் அதிக பட்ச கோவத்தை காட்ட எண்ணி "**" என என் தேள் கொடுக்கால் கொட்டியிருந்தேன். அது அம்மாவுக்கு சொத்தாம். நான் என்ன சொல்ல இதற்கு மேல்!

அம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது. ஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா "எப்புடுடீ இருக்க??" என கேட்ட போது உடைந்து அழுதேன். இத்தனை வருஷம் கூடவே இருந்தேனே அப்போது ஒரே ஒரு தடவை இப்படி கொஞ்சலாக கேட்டிருந்தால் நான் உன் காலையே சுற்றி வந்திருப்பேனே என தோன்றியது. அம்மாவை நான் அப்போது தான் முதன் முதலாக நேசிக்க தொடங்கினேன் என நினைக்கிறேன்.

அப்போது தான் அம்மாவின் உருவத்தை மனதில் நினைத்து பார்த்து கொண்டேன். நான் நினைவு தெரிந்து பார்த்த அம்மாவுக்கும் அப்போது இருந்த அம்மாவுக்கும் நிறைய வித்யாசம் இருந்தது. ஆனால் அம்மாவை நினைத்தாலே வருமே ஒரு அம்மா வாசனை அது மட்டும் மாறவேயில்லை. அந்த வாசனையை எப்படி சொல்வது, ஒரு மாதிரியாக மஞ்சள் வாசனை மாதிரி, ஒரு வித குங்கும வாசனை மாதிரி அதை வர்ணிக்க முடியவில்லை எனக்கு. நான் அபுதாபி வரும் முன் என் கையை பிடித்து கொண்டது அம்மா. அது என்ன அந்த கைக்கு மட்டும் அப்படி ஒரு பொச பொசப்பு. அப்படியே ஃபிரிட்ஜில் வைத்த வாழை தண்டு மாதிரி ஒரு ஜில் அம்மா கையிலே இருந்தது.அதுவரை அம்மாவின் ஸ்பரிசம் என்னை அடிக்க மட்டுமேயாக இருந்தமையால் அப்போது அந்த மென்மை புரியவில்லை எனக்கு. ஆனால் "என்னை விட்டு வெகுதூரம் போகிறாயா"என அம்மா மனதில் நினைத்து கொண்டே என்னை ஸ்பரிசித்தது அம்மாவின் மென்மையை உணர வைத்தது. புகைவண்டி நிலையத்தில் அம்மா பேசவேயில்லை. இலவச அறிவுரை ஏதும் சொல்லவில்லை. மெதுவாக கேட்டது, "தம்பி ரொம்ப தூரம் போற .....அப்பாவுக்கு எதுவும்ன்னா ஒடனே வருவியா?"...எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது அம்மா அப்படி கேட்ட போது.அப்பா அப்போது ((இப்போதும் தான்) ஒன்றும் சுகவீனமாக இல்லை. நன்றாகவே இருந்தார்கள்.

நான் கேட்டேன் அம்மாவிடம் "ஏம்மா உனக்கு எதுனா ஆச்சுன்னா வர வேண்டாமா?"அம்மாவின் பதில் என் மனதை பிழிந்தது. "ப்ச் எங்கடா, நான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும் உன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...தவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ" அம்மா பேசியதை நினைத்து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.

என் வெளிநாட்டு வாழ்க்கையில் அந்த முதல் ஒரு வருடத்தில் அம்மா ஏக்கம் எனக்கு நாளுக்கு நாள் அதிகமானது என்றே சொல்ல வேண்டும். முதன் முறை லீவுக்கு வந்த போது விமான நிலையத்தில் அம்மாவை தேடினேன். காரணம் வர சொல்லியிருந்தேன். அப்பா மட்டுமே வந்திருந்தார்கள். அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை என்று காரணம் கூறப்பட்டது. சென்னையிலிருந்து என் ஊருக்கு 7 மனி நேர பஸ் பயணம். எனக்கு அந்த 7 மணி நேரமும் நரகமாக இருந்தது. என் ஊரை நெருங்க நெருங்க இறங்கி பேருந்தை முந்தி கொண்டு ஓடலாமா என்றிருந்தது.முடிவாய் வந்து சேர்ந்த போது அம்மா திண்ணையிலேயே படுத்து இருந்தது. என்னை கூப்பிட அப்பா சென்னைக்கு வரும் போதிலிருந்து அம்மா திண்னையிலேயே தான் இருந்திருக்கிறது.

எனக்கு முதன் முதலாக அம்மாவை பார்த்து வெட்கம் வந்தது. இது எனக்கு முதல் அனுபவம். ஏன் அப்படி வெட்கம் வந்தது என எனக்கு அப்போது புரியாவிடினும் பின்னர் புரிந்தது. நான் இப்போதும் ஊருக்கு போகும் போதெல்லாம் என் மகள் என்னிடம் வர 1 மணி நேரமாவது ஆகும். நான் கொண்டு செல்லும் அவளுக்கான பொருட்களை வேறு யாருக்காவது கொடுத்துவிடுவேன் என்ற்றெல்லாம் சொல்லி பின்னரே என்னிடம் வருவாள். இதே நிகழ்வுதான் எனக்கு அப்போது நடந்தது. என்ன தான் வயதானாலும் தாய்க்கு மகன் குழந்தை தானே!அம்மா நான் ஊருக்கு போகும் போது இருந்த மாதிரி இல்லை. மிகவும் வயதான தோற்றத்துடன் எண்ணெய் இல்லா நரை முடியோடும், கடைவாய் பல் விழுந்தும், தோல் சுருங்கியும் இருந்தது.ஒரு வருட இடைவெளி இப்படியா புரட்டி போடும். ராகுகாலம் முடியும் வரை வீட்டின் உள்ளே போகவேண்ண்டாம் திண்ணையிலேயே இருப்போம் என்றது. அதன் குரலும் முன்பு போல இல்லை. படுத்துக்கோ என்றது. தலையை தூக்கி மடியில் வைத்து கொண்டது. தலைமுடி கோதிவிட்டது. எதுனா சாப்பிடுறியா என்றது. அம்மா உடலளவில் மாறி போயிருந்தாலும் அம்மாவின் வாசனை அப்படியே இருந்தது. அதன் சுங்கடி புடவை வழ வழவென இருந்தது. தைல பாட்டில் எடுத்து வந்தியா என கேட்டது. எனக்கு பெண் பார்க்க வேண்டும் என்றது. எனக்கு திருமணத்துக்கு பெண் பார்த்தது!!அதன் பொக்கை வாய் பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது!!! அம்மா நீ எப்பவும் அழகும்மா!!! அடிக்கடி சீமாச்சு அண்ணன் சொல்லுவார் "அம்மான்னா அழகுடா"ன்னு அது சரி தான் அம்மா!!!

49 comments:

  1. /."தீபா"வளி விடுமுறை/

    தீபா வெங்கட்க்கு விடுமுறைன்னு படிச்சிட்டேன்...சாரி...:)

    ReplyDelete
  2. அவுங்கள கலாய்க்க இவ்ளோ........... பெரிசா எழுதறீங்களே. உமது பொறுமை வாழ்க. அணில் குட்டிக்கு நாய் குட்டியா... தாங்கல.
    பசிகலா பேர் நல்லாருக்கே. வெளிய நின்ற ஆட்டோ உங்க வீட்டு பக்கம் வருதா பாருங்க.

    ReplyDelete
  3. சந்தோஷம்!

    மகிழ்ச்சி!

    பதிவை படித்ததும் கண்கள் பனித்தது
    இதயம் இனித்தது (நன்றி சென்ஷி)

    மகிழ்ச்சி பிறந்தது
    நெகிழ்ச்சியாய் இருந்தது

    :))))))))))))

    ReplyDelete
  4. :) ம்ஹூம் நடத்துங்க நடத்துங்க... :))) 50 என்ன 100 பின்னூட்டம் போடலாம் நயன் நாயகன் இன்னும் பார்க்கலையா?

    ReplyDelete
  5. நாய் குட்டி புனிதா: //

    பேரு வைக்க தெரியுதா உங்களுக்கு?!

    நாய் குட்டி நமிதா.. ' ன்னு வைத்து இருக்கலாம் இல்ல?!!

    ReplyDelete
  6. எத்தனை நாளா இப்படி ஓசி மங்களம் பதிவு போடனும்னு உங்களுக்கு ஆசை.. ?!அநியாயத்துக்கு காப்பி அடிச்சி வச்சி இருக்கீங்க.. ?!!

    ReplyDelete
  7. அபிஅப்பா! வேற வழியே இல்ல நாய் பிரியாணி தான்! பின்ன பாருங்களேன், இதை சப்பை மேட்டருன்னு சொல்லுது! நாக்கை நசுக்கனும், வரேன் குழவி கல்லை எடுத்துகிட்டு!:-))

    ReplyDelete
  8. :-)))


    //நாய் குட்டி புனிதா//

    //நாய் குட்டி நமிதா//

    ROTFL

    ReplyDelete
  9. தீபா வெங்கட் வாழ்க.. :(

    இருங்க அந்த போஸ்ட் படிச்சிட்டு வரேன்.. :)

    ReplyDelete
  10. //நாய் குட்டி நமிதா..//

    கவிதா.. மைண்ட் யுவர் டங்கு....

    என் டார்லிங் பார்த்தா உங்களுக்கு நாய் குட்டி மாதிரி இருக்கா..? :((

    அபிஅபபா.. உடனே இந்த பதிவுக்கு அடுத்த பாகம் தயார் பண்ணுங்க..
    அய்ய்கோ நெஞ்சி(க்கு நீதி) பொறுக்குதில்லையே.. :((

    ReplyDelete
  11. ஹாஹாஹா.... எதிர்வினை பதிவா.... :)) கலக்கலு

    ReplyDelete
  12. மேட்டர் தாத்தா ஏன் இங்கிலிபிசு'லே இங்க எதுவும் கருத்து சொல்லலை? :))

    ReplyDelete
  13. எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே!

    ReplyDelete
  14. \\நாய் குட்டி புனிதா: ஆமா எதுக்கு இப்ப இந்த போஸ்டு,? தேவையா இது ? ஏன் அபிஅப்பா, சப்ப மேட்டர் க்கு எல்லாம் பெரிய பில்டப் கொடுத்து ஓவரா எழுதறீங்க.. என்னவோ நல்லா இல்ல சொல்லிட்டேன்... \\

    அபிஅப்பா ஏன் இப்படி

    ReplyDelete
  15. \\கவிதா | Kavitha said...
    நாய் குட்டி புனிதா: //

    பேரு வைக்க தெரியுதா உங்களுக்கு?!

    நாய் குட்டி நமிதா.. ' ன்னு வைத்து இருக்கலாம் இல்ல?!!\\

    கன்றுகுட்டி கவிதா - இப்படி கூட பேர் வைக்கலாம்

    ஹா ஹா ஹா

    :D ;)

    ReplyDelete
  16. கடைசிப் படியிலே கால் தவறி விழுந்து,உடனே எல்லோரையும் கடாசி விட்டு வீட்டிற்குள்ளே போனதைப் பாத்தேளா.
    எள்ளும் கொள்ளூம் வெடிச்சுதாம்.
    ஐதராபாத் பழச் சாரு(மோரெல்லாம் பேஷனில்லே).குடிச்சு அப்புறந்தா வெளியே கிளம்பி அறிக்கை வெடிச்சதாம்.

    ReplyDelete
  17. //50 என்ன 100 பின்னூட்டம் போடலாம் நயன் நாயகன் இன்னும் பார்க்கலையா?//

    பார்த்தாச்சு! பார்த்தாச்சு!

    ReplyDelete
  18. //நாய் குட்டி நமிதா.. ' ன்னு வைத்து இருக்கலாம் இல்ல?!!//

    கப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

    ReplyDelete
  19. //மேட்டர் தாத்தா ஏன் இங்கிலிபிசு'லே இங்க எதுவும் கருத்து சொல்லலை? :))//

    அதானே!

    இங்கே மேட்டர் தாத்தா சொல்லுவார்!

    ReplyDelete
  20. Whenever you meet a person, they do not need to say "Hi" to you!

    ReplyDelete
  21. Comment Moderation Enabled?
    :(

    Hick!

    ReplyDelete
  22. நல்லா ஆபீஸ்ல ரூம் போட்டு யோசிக்கிறீங்க

    ReplyDelete
  23. பசிகலாவா, துபாய்க்கு ஆட்டோ வராதுன்னு ஒரு நம்பிக்கையா :)

    ReplyDelete
  24. //மேட்டர் தாத்தா ஏன் இங்கிலிபிசு'லே இங்க எதுவும் கருத்து சொல்லலை? //

    அதானே!

    இங்கே மேட்டர் தாத்தா சொல்லுவார்!//

    I too wanted to ask this.. Why peter thatha missing?!!

    i strongly object this post ..!! :(

    ReplyDelete
  25. ஹாஹாஹா.... எதிர்வினை பதிவா.... :)) கலக்கலு//

    hello.. நாங்க போட்டா தனி நபர் தாக்குதல் அபிஅப்பா போட்டா எதிர்வினையா?!!

    இருக்குடீஈஈ!!

    ReplyDelete
  26. /நாங்க போட்டா தனி நபர் தாக்குதல் அபிஅப்பா போட்டா எதிர்வினையா/

    அது அப்படித்தான்!

    ReplyDelete
  27. //I too wanted to ask this.. Why peter thatha missing?!! //

    Thats Why I came here!

    ReplyDelete
  28. பீட்ழர் தாத்தாழான் இங்கிழிபீசுலே பேசளும்?

    நாழும் அப்பழியேவா பேசழும்>

    ஹிக்!

    ReplyDelete
  29. அம்மாவின் கால் உதைப்பு என்று தலைப்பிட்டு இருந்தால் டாப்பாக இருந்திருக்கும்

    ReplyDelete
  30. ஹய்யோ !! எனக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை .! ) ஆயாவும் , நானும் உடனே கைக் கூப்பி வணக்கம் சொன்னோம்.. .சந்தோஷத்தில் அவர்கள் நடித்த வைரம் படத்தின் நியாபகத்தில் இருந்தேன்.. பிறகு நானும் வணக்கம் சொன்னேன்...தீபா வளி அதுவுமாக அம்மாவின் ஆசிர்வாதம் கிடைத்த மகிழ்ச்சி... )///

    என்ன அன்பு!!!
    என்ன அன்பு!!!
    அருமை....
    தேவா........

    ReplyDelete
  31. //பேரு வைக்க தெரியுதா உங்களுக்கு?!

    நாய் குட்டி நமிதா.. ' ன்னு வைத்து இருக்கலாம் இல்ல?!!//

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  32. அநியாயமாக அன்பை பொழியறீங்க நீங்க.. [என்னிடம் தான்!!:)]

    என்ன அபிஅப்பா ஒரு ராத்திரியில் இப்படி ஒரு அற்புதமான பதிவு.. கொடுத்தவைத்தவர்.. அம்மாவை பற்றிய மிக அழகான அன்பான நினைவுகள் :)

    ReplyDelete
  33. இங்க என்ன நடந்துச்சுங்கிற உண்மை எனக்கு தெரிஞ்சு ஆகணும்....பழைய பதிவு எங்க போச்சு?

    ReplyDelete
  34. இப்படி எல்லாம் நடக்குன்னு தெரிஞ்சி இருந்தா ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வச்சிருந்திருப்பேன்!

    ReplyDelete
  35. அபி அப்பா ஏன் இந்த திடீர் மாற்றம்?

    ReplyDelete
  36. இப்ப நீங்க போட்டிருக்கிற பதிவு நான் முன்னமே படிச்சிருக்கிறேன்.....படிச்சிட்டு அழ வச்ச பதிவுன்னு கூட சொல்லலாம்....ஆனா படிக்கும் போதே சிரிக்க வச்ச எதிர் பதிவு ஏன் காணாம போச்சு?????

    ReplyDelete
  37. /நிஜமா நல்லவன் said...

    அம்மா!

    படித்தபின் அழுவதை தவிர வேறு ஒன்றும் எனக்கு செய்ய தோன்றவில்லை!
    September 8, 2008 5:21 AM /


    மீள் பதிவுக்கு மீள் பின்னூட்டம்!

    ReplyDelete
  38. அண்ணே...பழைய பதிவை நீங்க டெலிட் பண்ணுனதுக்கு காரணம் தெரிஞ்சி போச்சுண்ணே....இலைக்காரன் ஆட்டோ நேத்து உங்க வீட்டு முன்னாடி நின்னுச்சுன்னு மக்கள்ஸ் பேசிக்குறாங்க....பதிவு போடுறதுக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும்....சரி விடுங்க....:)

    ReplyDelete
  39. இங்க என்ன நடந்துச்சுங்கிற உண்மை எனக்கு தெரிஞ்சு ஆகணும்....பழைய பதிவு எங்க போச்சு?//

    நிஜமா நல்லவன்.. வந்தோமா படிச்சோமா..பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம என்ன சிபிசிஐடி மாதிரி ஓவர் ஆராய்ச்சி..?!! ம்ம்ம்?!!

    பழைய பதிவு நேற்று ராத்திரி காக்கா ஒன்னு வந்து தூக்கிகிட்டு போயிடுத்து ...... அதான்!!

    ReplyDelete
  40. இலைக்காரானா. .அப்ப அவரு தான் அந்த காக்காவா?

    ReplyDelete
  41. / கவிதா | Kavitha said...

    இங்க என்ன நடந்துச்சுங்கிற உண்மை எனக்கு தெரிஞ்சு ஆகணும்....பழைய பதிவு எங்க போச்சு?//

    நிஜமா நல்லவன்.. வந்தோமா படிச்சோமா..பின்னூட்டம் போட்டமான்னு இல்லாம என்ன சிபிசிஐடி மாதிரி ஓவர் ஆராய்ச்சி..?!! ம்ம்ம்?!!
    /

    அக்கா...வாங்கக்கா....நாங்க பதிவை கஷ்டப்பட்டு படிச்சி பின்னூட்டம் போட்டு இருக்கோம்......ஒரு கேள்வி கேக்க கூடாதா????

    ReplyDelete
  42. அக்கா...வாங்கக்கா....நாங்க பதிவை கஷ்டப்பட்டு படிச்சி பின்னூட்டம் போட்டு இருக்கோம்......ஒரு கேள்வி கேக்க கூடாதா????//
    ஓஓ கேட்கலாமே..... அதான் இலைக்காரன் ன்னு பதில் வந்துடுத்தே...

    ReplyDelete
  43. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

    என்னா நடக்குது இங்க? :((


    அணில்குட்டி பிரியானிக்கு ஆசைபட்டு மாத்திட்டிங்களா? :))

    ReplyDelete
  44. அட . இலைக்காரனுக்கு பயந்து தான் இப்டி மாத்திட்டிங்களா?

    தகவலுக்கு நன்றி மெய்யாலுமே நல்லவரே.. :))

    ReplyDelete
  45. அபி அப்பா, பதிவு ந‌ல்லா இருந்துதானு சொல்ல தெரிய‌ல‌.ஆனா ஏனொ என் அம்மாவ‌ உட‌னே பாக்கனும் போல‌ இருக்கு. -‍ வ‌னிதா

    ReplyDelete
  46. நீங்க எழுதுனது கலாய்க்கறதுக்காகவாவ இருந்தாலும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அபி அப்பா.. சூப்பர்..

    ReplyDelete
  47. abi appa neenga ammava pathi solrathu ellam ok than antha pasamana ammava ippovum nalla padiya paarthukuringala ippo amma eppadi irukkanga

    ReplyDelete
  48. தல சான்சே இல்ல உங்க எழுது நடை ஓட்டம் ஜாகிங் எல்லாம் ரெம்ப நல்ல இருக்கு. முக்கியமா வீரசேகரவிலாஸ் தொடர் அப்படியே சாவி, தேவன் எழுத்து மாதிரியே இருக்கு .இந்த அம்மா பதிவு ரெம்ப அருமை அப்படியே ஒரு நிமிஷம் பீலிங் ஆயிட்டேன் (சீரியசா !!) ஆனா இதே பீலிங் அவங்க கூடவே இருந்தா வருமான்னு தெரியல .இன்னும் நிறைய கமெண்ட் போடணும் போல இருக்கு ஆனா டிரஸ் வாஷ் பண்ண போட்டுருக்கேன்.போயி எடுத்துட்டு வந்துட்டு கண்டின்யு பண்றேன்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))