பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 26, 2009

பக்கத்து வீட்டு பாடாவதி ஹிந்தி வாத்தியார்!!!


பக்கத்து வீட்டிலே இருக்கும் இந்த பாடாவதி ஹிந்தி வாத்தியாரால் நகர் முழுக்க பிரச்சனை தான். ஆனா அவரே பயப்படுவது எனக்கும் அபிக்கும் மட்டும் தான். அவரை கட்டுபடுத்த வேண்டியே தான் அபியை அவர் கிட்ட நகரின் நலம் கருதிடியூஷன் அனுப்பினோம். ஆனா பாருங்க எங்களுக்கே அவர் பல தபா தண்ணி காட்டிடுவாரு. அவரு அப்படி என்ன தான் செஞ்சாரு?


அவர் வீட்டுக்கு பின் பக்க வீட்டிலே உள்ளவங்க ஆறு மாடு வளர்கிறாங்க. அதனால இவர் வீட்டுக்கு கொசு தொல்லை அதிகம் ஆகிடுச்சு. இவர் உடனே ஜனாதிபதி அப்துல் கலாம் சமூகத்துக்குன்னு கடிதம் எழுதிட்டார். இவரோட ஒரு தூரத்து சொந்தம் ராமேஸ்வரத்தில் இருப்பதை எல்லாம் அதிலே போட்டு தாக்கி அப்ப்டீ இப்படீன்னு எல்லாம் எழுதி கடைசியா "ஏன் நீங்க அந்த மாடுகளை ஒழிக்க கூடாது?"ன்னு ஒரு கிடுக்கி பிடி கேள்வியையும் கேட்டு தொலைச்சுட்டார். அதுக்கு பேசாம நகராட்சிக்கு கொசுவை ஒழிச்சு தொலைன்னு எழுதியிருந்தாலாவது எதுனா நடந்து இருக்கும்.

ஆனா பாருங்க ஜனாதிபதிக்கு எழுதினதை அவரு படிச்சாரோ என்னவோ அதல்லாம் தெரியாது. அந்த மனுவை நாகை கலெக்டர் ஆபீஸுக்கு "ஆவன செய்யவும்"ன்னு அனுப்ப, கலெக்டர் அதை எங்க ஊர் ஆர்.டி.ஓ க்கு அனுப்ப அதை அவர் தாசில்தார்க்கு அனுப்ப, அதை அவரு டவுன் ஆர்.ஐ க்கு அனுப்பிட்டார். இதிலே என்ன கூத்துன்னா அந்த ஆர்.ஐ தான் அந்த ஆறு மாட்டுக்கும் ஓனர். அவர் தான் ஹிந்தி வாத்தியார் கிட்ட பேச மாட்டாரா? அதனால அபியை கூப்பிட்டு "இந்த மனுவை ஆவன செய்"னு கொடுத்துட்டார். அபியை ஆவன செய்ய சொன்னா இவ அந்த மனுவிலே ராக்கெட் செஞ்சு அந்த மாட்டை பார்த்து பறக்க விட்டுட்டா. கொள்ளை பசியிலே இருந்த மாடும் அதை அசை போட்டு துன்னுடுச்சு. ஏன்டி இப்படி செஞ்சேன்னு அபிஅம்மா கேட்டதுக்கு "கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!


இதான் போகட்டும்ன்னு பார்த்தா ஒரு நாள் எனக்கு வந்த ஒரு லெட்டரை போஸ்ட் மேன் அவர் வீட்டுல கொடுத்துட்டார். இவர் அதுக்கு என்ன செஞ்சிருக்கனும். ஒன்னு அதை வாங்கி இருக்க கூடாது. இல்லாட்டி என் கிட்ட கொடுத்து இருக்கலாம். இல்லாட்டி தூக்கி போட்டிருக்கலாம். ஆனா இவரு என்ன செஞ்சாரு தெரியுமா? அதிலே இருந்த என் பெயரில் ஏதோ ஸ்பெல்லிங் தப்பு இருந்துச்சாம்.(கடவுளே என் பெயர்ல கூட ஸ்பெல் மிஸ்டேக்கா?) அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார்.


பின்ன அந்த லெட்டர் எனக்கு வருது 6 மாசம் கழிச்சு ரெண்டு ரூபாய் பைன் போட்டு. இத்தனிக்கும் அது ஒரு கருமாதி பத்திரிக்கை. அட்ரஸ்ல கை வச்சா 2 ரூபாய் பைனாம்... செத்து போனவருக்கு தெவசமே வரும் நாள் ஆகிடுச்சு. நான் அதை வாங்கி நாக்கா வழிக்க முடியும்? எதுக்கு 2 ரூபாய் தெண்டம்ன்னு விட்டுட்டேன்.


அப்படித்தான் ஒரு நாள் என் வீட்டு தென்னை மரத்தின் கீற்று அவர் வீட்டு மொட்டை மாடியிலே ஒரு 2 அடி வரை நீண்டு அவர் வீட்டுக்கு நிழல் தான் கொடுத்துச்சு. அதை ஒரு அலக்கு குச்சியால சரியா அந்த 2 அடியை மட்டும் வெட்டி விட்டுடார். அந்த 5 தென்னை கீத்தும் வால் அறுந்த கோழி மாதிரி நிக்குது. எனக்கு அப்பவும் அவர் மேல கோவம் வரலை. ஆனா அவருக்கு எதுனா செய்யனுமேன்னு மாத்திரம் நினைச்சுகிட்டேன்.


அவருக்கு இந்த LIC, POST OFFICE இதல்லாம் ரொம்ப பிடிச்ச சமாச்சாரம். அதிலே எல்லாம் எதுனா பாக்கி பணம் வரனும்ன்னா 2ரூபாயா இருந்தாலும் கூட பார்க்க மாட்டார். ஹிந்துக்கு எழுதுவார். அது பப்ளிஷ் ஆகலைன்னா ரிமைண்டர் எழுதுவார். நான் டாட்டா இண்டிகாம் நெட் எடுத்து இருந்தேன். அந்த பாடாவதியை தொலைச்சு தலை முழுகி அதுக்கு கட்டின 500 ரூபாய் டெபாசிட்டை வாங்கவே முடியலை. மெதுவா இவர் கிட்ட "சார் என்னை கண்டா பயப்பட மாட்டானுங்க, நீங்க எப்படியாவது அதை வாங்கி கொடுத்துடுங்க"ன்னு ஒரு பிட்டை போட்டேன்.


அவ்வளவு தான்! மனுஷன் தன்னையும் இந்த நகர்ல ஒருத்தன் மதிக்கிறானேன்னு சந்தோஷப்பட்டு அந்த டாட்டா இண்டிகாம் டீலர் கிட்ட நடையா நடக்க ஆரம்பிச்சு தேஞ்சு போயிட்டார். போன வாரம் கூட அபிகிட்ட இது பத்தி பேசினப்போ கேட்டேன் ஹிந்திசார் அந்த டெபாசிட்ட வாங்கிட்டாரா? எதுனா இம்புரூவ்மெண்ட் இருக்கான்னு கேட்டதுக்கு அபி சொன்னா "ஆமாப்பா நல்லா இருக்கு இவரு நடையா நடந்து ஐந்து அடி நாலு அங்குலமா இருந்தவரு இப்ப தேஞ்சி போய் நாலு அடி ஐந்து அங்குலமா ஆகிட்டாரு"ன்னு சொன்னா!

நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!

36 comments:

  1. பாவம், அவரு மத்தவங்கள படுத்தினரோ இல்லையோ, நீங்க மொத்த குடும்பமே அவருக்கு டார்சர் கொடுத்து இருக்கிங்க.

    ReplyDelete
  2. ஹிஹி, டாட்டா இன்டிகாம் காரர்களை பத்தி கீதா மேடத்துகிட்ட கேளுங்க. என்னவோ நான் ஏவி விட்டு தான் அவங்க கீதா மேடத்துக்கு தண்ணி காட்றதா மேடத்துக்கு ஒரு சந்தேகம் இன்னும் இருக்கு. :))

    அபி அப்பா, உங்க இந்தி எதிர்ப்பை நைசா இப்படி உள்குத்து வெச்சு எழுதிட்டீங்க இல்ல? :))

    ReplyDelete
  3. //"இந்த மனுவை ஆவன செய்"னு கொடுத்துட்டார். அபியை ஆவன செய்ய சொன்னா இவ அந்த மனுவிலே ராக்கெட் செஞ்சு அந்த மாட்டை பார்த்து பறக்க விட்டுட்டா.//

    இது சூப்பர், நானா இருந்தா போட் செய்து விட்டு இருப்பேன்.. இல்லனா சுருட்டி காது குடைந்து இருப்பேன்.. :) அபி'க்கு என்னோட வாழ்த்துக்கள்... ராக்கெட் அனுப்பினதுக்கு :)

    ReplyDelete
  4. // கோவி.கண்ணன் said...
    பாவம், அவரு மத்தவங்கள படுத்தினரோ இல்லையோ, நீங்க மொத்த குடும்பமே அவருக்கு டார்சர் கொடுத்து இருக்கிங்க.//

    இதை வழிமொழிகிறேன்

    ReplyDelete
  5. அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார். //

    ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)

    ReplyDelete
  6. ஆக கலாமுக்கு எழுதினதாலே ஏதோ வேல நடந்திருக்குதுன்னு தெரியுது. மாட்டை ஒழிக்கத்தானே எழுதினார். அதான் அபி பாப்பா அத ராக்கெட்டா செஞ்சு மாட்டு மேல ஏவிடுச்சே. சில ராக்கெட் புஸ்வானமாத்தான் போகும். அதல்லாம் கண்டுக்கப்படாது. முயற்சி நடந்திருக்கு. அதப் பாராட்டனும்.

    கலாம் வாழ்...... குளம்புதே
    இப்ப கலாம் வாழ்கன்னு சொல்லனுமா இல்ல அபி பாப்பா வாழ்கன்னு கூவனுமா?

    ReplyDelete
  7. யோவ் தொல்காப்பியன்,

    எனக்கு தமில் தெரியாதுன்னு தானயா இப்படி பதிவு பொட்டே

    நா இந்தில நாலு பதிவு உன்பத்தி எழுதி உன்னை நாரடிக்ல ... நான் இன்டி வத்யார் இல்லை

    ReplyDelete
  8. //இதிலே என்ன கூத்துன்னா அந்த ஆர்.ஐ தான் அந்த ஆறு மாட்டுக்கும் ஓனர். //

    அங்க தான் ஸ்டோரில ஒரு ட்விஸ்ட்டு.

    ReplyDelete
  9. // கோவி.கண்ணன் said...
    பாவம், அவரு மத்தவங்கள படுத்தினரோ இல்லையோ, நீங்க மொத்த குடும்பமே அவருக்கு டார்சர் கொடுத்து இருக்கிங்க//

    வாங்க கோவியாரே! என்ன அப்படி சொல்லீட்டிங்க! நம்ம ஹிந்தி சாருக்கு நாங்க ஒரு கடிவாளம் தான். நகர் நல்லா இருக்கனும் இல்லியா அதான்!

    ReplyDelete
  10. டாடா இண்டிகாம் ஒரு விளங்காத சர்வீஸ்.

    நானும் டாடா இண்டிகாம் மொபைல் வைத்திருந்தேன். அப்போதெல்லாம் போன் EMI-ல் தருவார்கள் நான் முழு பணமும் கொடுத்து வாங்கியிருந்தேன்.

    கனெக்ஷன் வேண்டாம் என டிஸ்கனக்ட் செய்தும் போனை திரும்ப கொடுக்கவில்லை என கலெக்ஷன் ஏஜெண்ட்கள் என் அலுவலகத்திற்கு குறைந்தது 25 தடவையாவது வந்திருப்பார்கள்.

    ஷிப்ட் முறையில் வேலை என்பதால் மற்றவர்கள் பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள்.

    ஒருமுறை நான் இருக்கும் போது வந்து டாடா இண்டிகாமிலிருந்து வந்திருக்கிறோம் என்றபோது அவர்களின் ஐடியை காண்பி என் ஸ்டேட்மெண்ட் எங்கே எவ்வளவு அவுட்ஸ்டாண்டிங் அது இது என குடாய்ந்தபோது அவர்கள் கலெக்ஷன் ஏஜண்ட் மட்டும்தான் மீதி விவரம் எல்லாம் டாடா இண்டிகாம் அலுவலகத்தில் இருக்கிறது எனவும் போன் (hand set)திரும்ப தரும்படியும் சொல்ல வந்தது கோபம் திட்டிய திட்டில் நாளைக்கு விவரத்துடன் வருகிறோம் என எஸ்க்கேப் ஆனவர்கள் இன்றுவரை காணோம்.

    ReplyDelete
  11. // ambi said...
    ஹிஹி, டாட்டா இன்டிகாம் காரர்களை பத்தி கீதா மேடத்துகிட்ட கேளுங்க. என்னவோ நான் ஏவி விட்டு தான் அவங்க கீதா மேடத்துக்கு தண்ணி காட்றதா மேடத்துக்கு ஒரு சந்தேகம் இன்னும் இருக்கு. :))

    அபி அப்பா, உங்க இந்தி எதிர்ப்பை நைசா இப்படி உள்குத்து வெச்சு எழுதிட்டீங்க இல்ல? :))//

    வாங்க அம்பி! கீதாம்மாவுக்கு டாட்டா இண்டிகாம் மட்டுமா தொல்லை கொடுக்குது? கம்பியூட்டர்ல இருக்கும் 287 பாகமும் தனி தனியால்ல வந்து தொல்லை கொடுக்குது!

    ஹிந்தி எதிர்ப்பு உள் குத்து எல்லாம் இல்லை. நீங்க யாரும் இந்தி படிக்காதீங்க, ஆனா எனக்கு இந்தி தெரியும்" அப்படீன்னு கொள்கையிலே தெளிவாத்தான் இருக்கேன்:-))

    ReplyDelete
  12. // கவிதா | Kavitha said...
    //"இந்த மனுவை ஆவன செய்"னு கொடுத்துட்டார். அபியை ஆவன செய்ய சொன்னா இவ அந்த மனுவிலே ராக்கெட் செஞ்சு அந்த மாட்டை பார்த்து பறக்க விட்டுட்டா.//

    இது சூப்பர், நானா இருந்தா போட் செய்து விட்டு இருப்பேன்.. இல்லனா சுருட்டி காது குடைந்து இருப்பேன்.. :) அபி'க்கு என்னோட வாழ்த்துக்கள்... ராக்கெட் அனுப்பினதுக்கு :)

    ஆஹா! நீங்க செஞ்சாலும்செய்வீங்க! உங்க வீட்டுக்கு 2 நாள் அபியை டியூஷன் படிக்க அனுப்பினா போதும், சுத்தம் பின்ன நீங்க ஆட்சியை பிடிச்சாலும் பிடுச்சிடுவீங்கப்பா!:-))


    //ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)//

    அவர் தெளிவுதான் நகரே குழப்பமா ஆகிடுமே! அந்த அளவு தெளிவு அவரு:-))

    ReplyDelete
  13. // மிஸஸ்.டவுட் said...
    // கோவி.கண்ணன் said...
    பாவம், அவரு மத்தவங்கள படுத்தினரோ இல்லையோ, நீங்க மொத்த குடும்பமே அவருக்கு டார்சர் கொடுத்து இருக்கிங்க.//

    இதை வழிமொழிகிறேன்//

    வாங்க டவுட் அக்கா! அப்ப கோவியாருக்கு சொன்ன பதிலையே படிச்சுகோங்க:-))

    ReplyDelete
  14. என்னாது பதிவை பத்தி எதும் சொல்லணுமா????

    கவுஜ சூப்பர்!!










    என்னாது கொய்ய்ய்ய்யாலவா???????

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  15. // சந்தனமுல்லை said...
    :-))

    February 26, 2009 2:41 PM


    தமிழ் பிரியன் said...
    :-)))//

    வாங்க முல்லை, தமிழ்ப்பிரியன் நன்றி!

    ReplyDelete
  16. // சுல்தான் said...
    ஆக கலாமுக்கு எழுதினதாலே ஏதோ வேல நடந்திருக்குதுன்னு தெரியுது. மாட்டை ஒழிக்கத்தானே எழுதினார். அதான் அபி பாப்பா அத ராக்கெட்டா செஞ்சு மாட்டு மேல ஏவிடுச்சே. சில ராக்கெட் புஸ்வானமாத்தான் போகும். அதல்லாம் கண்டுக்கப்படாது. முயற்சி நடந்திருக்கு. அதப் பாராட்டனும்.

    கலாம் வாழ்...... குளம்புதே
    இப்ப கலாம் வாழ்கன்னு சொல்லனுமா இல்ல அபி பாப்பா வாழ்கன்னு கூவனுமா?//

    வாங்க வாங்க சுல்தான் பாய்! நீங்க கலாம்க்கோ அபிக்கோ சொல்ல வேண்டாம். நம்ம ஹிந்தி சாருக்கு சொன்னா போதும். அவர் தானே பதிவு போட மேட்டர் கொடுத்தாரு:-))

    ReplyDelete
  17. // இன்டி வாத்யார் said...
    யோவ் தொல்காப்பியன்,

    எனக்கு தமில் தெரியாதுன்னு தானயா இப்படி பதிவு பொட்டே

    நா இந்தில நாலு பதிவு உன்பத்தி எழுதி உன்னை நாரடிக்ல ... நான் இன்டி வத்யார் இல்லை//

    யோவ் இண்டி வாத்தியார், எனக்கு இண்டி தெரியும். ஹி ஹி:-))

    ReplyDelete
  18. // அ.மு.செய்யது said...
    //இதிலே என்ன கூத்துன்னா அந்த ஆர்.ஐ தான் அந்த ஆறு மாட்டுக்கும் ஓனர். //

    அங்க தான் ஸ்டோரில ஒரு ட்விஸ்ட்டு.//

    வாய்யா செய்யது! நன்னி நன்னி!

    ReplyDelete
  19. // மங்களூர் சிவா said...
    டாடா இண்டிகாம் ஒரு விளங்காத சர்வீஸ்.

    நானும் டாடா இண்டிகாம் மொபைல் வைத்திருந்தேன். அப்போதெல்லாம் போன் EMI-ல் தருவார்கள் நான் முழு பணமும் கொடுத்து வாங்கியிருந்தேன்.//

    வாங்க சிவா! நான் அந்த டாட்டா இண்டிகாம் வச்சுகிட்டு பட்ட பாடு! அதை வச்சு தொடர்கதையா எழுதலாம்!

    ஆனா நம்ம பதிவர்கள் ஏன் அது சம்மந்தமா பதிவு போட மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்கன்னு தெரியலை!

    ReplyDelete
  20. / மங்களூர் சிவா said...
    என்னாது பதிவை பத்தி எதும் சொல்லணுமா????

    கவுஜ சூப்பர்!!/

    அடங்கொய்யால:-))

    ReplyDelete
  21. //கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!


    //

    அண்ணே சான்ஸே இல்லை....சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.

    :))

    ReplyDelete
  22. //நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!//

    aanaa neenga????:P

    ReplyDelete
  23. // எம்.எம்.அப்துல்லா said...
    //கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!


    //

    அண்ணே சான்ஸே இல்லை....சிரித்துக் கொண்டே இருக்கின்றேன்.//

    வாப்பா அப்து! சிரிச்சா சந்தோஷம் தான்! நன்றி நன்றி!

    ReplyDelete
  24. // Sasirekha Ramachandran said...
    //நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!//

    aanaa neenga????:P//

    வாங்க பத்மா அம்மா! அப்ப நான் வெரி இண்ட்ரஸ்டிங் கேரக்டர்:-))

    ReplyDelete
  25. நல்ல கவனிச்சு ஒரு ஆளை அப்படியே காமெடியனாக்கிடறீங்க.. :)

    ReplyDelete
  26. என்னதான் நீர் திமுகக்காரன் என்றாலும் ஒரு ஹிந்தி ஆசிரியரை இப்படி வதைப்பதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கின்றேன்.

    ReplyDelete
  27. அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார். //

    ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)

    repeatteeeee

    ReplyDelete
  28. // முத்துலெட்சுமி-கயல்விழி said...
    நல்ல கவனிச்சு ஒரு ஆளை அப்படியே காமெடியனாக்கிடறீங்க.. :)//

    வாங்க முத்துலெஷ்மி!
    அதான தொழிலே! நக்கலு நையாண்டி இப்படியே தான் போகுது...:-))

    ReplyDelete
  29. // இலவசக்கொத்தனார் said...
    என்னதான் நீர் திமுகக்காரன் என்றாலும் ஒரு ஹிந்தி ஆசிரியரை இப்படி வதைப்பதை நான் வன்மையாகக் கண்டனம் செய்கின்றேன்.//

    ஆஹா கொத்ஸ்! தேரை இழுத்து தெருவிலே விட பாக்குறீங்களே! ஏற்கனவே அம்பிக்கு சொன்ன அதே பதிலை ரிப்பீட்டிகிறேன்:-))

    ReplyDelete
  30. // அமிர்தவர்ஷினி அம்மா said...
    அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார். //

    ரொம்ப தெளிவாக இருக்கிறார்.. :) நீங்க அவரை பார்த்து பொறாமை படப்பிடாது.. :)

    repeatteeeee//

    வாங்க அமித் அம்மா! கவிதாவை ரிப்பீட்ட்டா! அப்ப அதே பதிலை நானும் ரிப்பீட்டு:-))

    ReplyDelete
  31. //இப்ப தேஞ்சி போய் நாலு அடி ஐந்து அங்குலமா ஆகிட்டாரு//

    இந்தப் பதிவைப் படிச்சாருன்னா நொந்த நூடுல்ஸும் ஆகிடுவாரு:))!

    ReplyDelete
  32. தொல்ஸ்,

    என்னதான் ஹிந்தி வாத்தி உங்களுக்கு வேண்டப்பட்ட விரோதியா இருந்தாலும், டாடா இண்டிகாம் காரங்கிட்ட மாட்டிவிடக்கூடதுங்க பாவம்.

    எனக்கு 3 மாசத்துக்கு ஒருக்கா வக்கீல் நோட்டீஸ் வரும் ரூ 196 பாக்கியக் கட்டுங்கன்னு. விபரம் சொல்லுங்கன்னா ஒருத்தனுக்கும் தெரியாது.

    ReplyDelete
  33. ரொம்ப சிரிச்சுட்டேன் அபி அப்பா:-)

    ReplyDelete
  34. அபி அப்பா,
    இந்த பதிவு படிக்கும் போது எனக்கு பாக்கியராஜ் படத்துல(தாவணி கனவுகள்??) வரும் 'ஏக காவுன் மே ஏக கிசான் ரகு தாத்தா' தான் ஞாபகம் வருது.
    கிளாசிக் காமடி :-)

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))