பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 26, 2007

கல்யாண்வீட்டுக்கு சமைக்க போன கதை பாகம் #2

அந்த தேக்சாவின் சைஸ் பார்த்ததுமே பசங்க மெர்ஸ் ஆகிட்டானுங்க. கண்டிப்பா பஸ் உள்ள ஏத்த மாட்டாங்க , பஸ் மேல வச்சுக் கட்டிக் கிட்டி இதல்லாம் சரியா வராதுன்னு முடிவு பண்ணி "மாமா கிடக்காருடா நாம ஒரு ஆட்டோ வச்சுகிட்டு போய் கல்யாண வீட்டிலே வண்டி சத்தம் வாங்கிப்போம் "ன்னு ராதா சொன்னதை ஒத்துக்கிட்டு ஆட்டோ பிடிச்சு போய் சேர்ந்துட்டோம் .


நாங்க இருந்த கெட்டப்புல ஒரிஜினல் சமையல் காரங்க தோத்துடுவாங்க . போய் இறங்கின உடனே கக்கத்துல பேக் வச்சிருந்த கடாமீசை ஆள்கிட்ட " நாங்க மணி அய்யர் ஆளுங்க சமையலுக்கு வந்துருக்கோம் , வண்டி சத்தம் குடுங்க" ன்னு கேட்டதுக்கு அவரு " அப்புடியா வாங்க தம்பி அய்யரு எங்க" ன்னு கேட்டார். ராதாவுக்கு அவர் மீசை பார்த்ததுமே லைட்டா உதறுது, இருந்தும் சமாளிச்சுக் கிட்டு "மாமாக்கு பேதியாகறது அவா அம்மா பாலாஜி டாக்டர்ட கூட்டிண்டு போயிருக்கா "ன்னு கரெக்டா உளறினான். அதுக்கு அவர் " என்னாது அய்யருக்கு பேதியா அப்ப அவர் வரமாட்டாரா அவர் வரலைன்னா ஒத்த பைசா தரமாட்டேன் "ன்னு கடுப்பாக, பின்ன நான் சமாளிச்சுகிட்டு " அய்யய்யோ இல்லீங்க அவர் சம்சாரத்துக்கு பேதி இவர் கூட்டிட்டு போயிருக்கார்" ன்னு பெனாத்த தாஸ் உடனே " இவனும் தப்பா சொல்றாங்க அவரு அம்மாவுக்கு பேதி அவரு வந்துடுவாரு" ன்னு சரி பண்ண கடாமீசை " டேய் பசங்களா யாருக்கு பேதி கரெக்டா சொல்லணும் இப்ப "ன்னு மிரட்டும் தொனியில சொல்ல அதுக்கு ராதா " சார், இப்படி வரிசையா கேள்வி கேட்டா எங்களுக்கு பேதியாகிடும் எங்களைச் சமைக்க விடுங்க சார்" ன்னு கெஞ்ச " சரி சரி நீங்க சமைச்சு எங்களுக்கு பேதியாகாம இருந்தா சரி இந்தாங்க வண்டி சத்தம் "ன்னு கொடுத்தார் .


கல்யாண வீட்டுக்கு பின் பக்கம் மாட்டு தொழுவத்தை சுத்தம் பண்ணி எட்டு அடி நீளத்துக்கு ஒரு அடி அகலத்துக்கு ஆழமா குழி வெட்டி வச்சிருந்தாங்க அது தான் அடுப்பாம் .(கோட்டை அடுப்பு) பார்த்த உடனே பக்குன்னு இருந்துச்சு . ஆஹா நமக்காகவே வெட்டி வச்ச மாதிரி இருக்கேடான்னு நெனச்சுகிட்டு நான் ராதாவை பார்த்து "டேய் உக்கிராண அறையிலே ஒரு இன்சார்ஜ் இருப்பார் அவர்கிட்ட சமையல் பாத்திரம் எல்லாத்தையும் வாங்கிட்டு சாமானையும் வாங்கிட்டு வாடான்னு சொன்னேன் . சரின்னு போனான் ஆனா கொஞ்ச நேரத்துல அந்த இன்சார்ஜ் சின்ன கடாமீசை ராதா கையை பிடிச்சுகிட்டு வந்துச்சு வந்து " டேய் பசங்களா எந்த சமையல்காரன் முதல்ல முந்திரி திராச்சை குடுன்னு கேப்பான்"ன்னு சத்தம் போட்டுச்சு . பின்ன கணேசன் சமாளிச்சு " இல்ல சார் முதல்ல அடுப்பு பத்த வைக்கும் முன்ன ஒரு நைவேத்தியம் பண்ணி சூடம் பத்த வச்சு அடுப்பிலே போட்டு ஆரம்பிக்கனும் நீங்க எல்லா முந்திரி திராட்சையும் தர வேண்டாம் ஒரு நாலு பேருக்கு வர்ர மாதிரி தாங்க"ன்னு சமாளிச்சு பின்ன வந்த திராட்சை முந்திரி தின்னுட்டு உக்காந்திட்டோம். அந்த பக்கம் வந்த பெரிய கடா மீசை "என்னங்கடா உக்காந்துட்டீங்க, சமைக்கலையா " ன்னு உறும ராதா அதுக்கு " என்ன சார் விவரமில்லாம இருக்கீங்க ஞாயித்து கிழமை நாலரை ஆறு ராகுகாலம் இல்லியோ அடுப்பை அக்னி பகவானை தொடலாமோ உங்காத்து கல்யாணம் நல்லா நடக்க உங்காத்துகாரங்களை விட கை நீட்டி அட்வான்ஸ் வாங்கின எங்களுக்கு அக்கறை ஜாஸ்தி"ன்னு அவரு நெஞ்சை நக்கி நீட்டு டயலாக் விட்டுட்டு அடுப்பிலே காபி போட பால் வார்க்காம எங்க நெஞ்சிலே பாலை வார்த்தான்.



அப்பாடா 6.00 மணி வரை ராகு பகவான் காப்பாத்திட்டார் . பின்ன மெதுவா ஒண்ணரை மணி நேரம் ஓட்டினா மாமா வந்துடுவார்ன்னு நிம்மதியா உக்காந்தா நேரம் அன்னைக்குன்னு பார்த்து சர்ருன்னு பறக்குது .கரக்டா ஆறு மணி ஆன பின்ன ஒரு அம்மா கையில குழந்தையோட வந்து "என்னாங்க இன்னும் அடுப்பு பத்த வைக்கலை குழந்தை அழுவுது காபி போடுங்க "ன்னு கத்திட்டு போச்சு . சரிவேற வழியே இல்ல மாமா கவுத்துட்டார் குஞ்சு குளுவான் கூட அப்டி இப்டின்னு சொல்லி கவுத்துட்டாரானு அடுப்பை பத்த வைக்க ஏற்பாடு பண்ண ரெடியாகும் போது அதே பெரிய கடாமீசை வந்துச்சு. "இன்னும் ஆரமிக்கலையா"ன்னு ஒரு அதட்டல் . ராதா இப்பவும் அதே ஆயுதம் எடுத்தான் " சார் குரு ஹோரைல ஆரம்பிச்சா நள பாகமா இருக்கும் செவன் தர்டிக்கு குரு ஹோரை ஸ்டார்டிங்"ன்னு சொல்ல கடாமீசை "ஒரு மயிரு ஹோரையும் வேணாம் வேலைய பாருங்க "ன்னு சொல்லிட்டு போச்சு.


சரி முதல்ல அடுப்பை பத்த வைக்க என்ன செய்யலாம்ன்னு யோசிச்சு விறகு கட்டை எல்லாம் சுத்தியும் வச்சு சூடத்தை கொளுத்தி அதன் உள்ள போட்டு மண்ணெண்ணை ஊத்தி தக தகன்னு மாட்டு தொழுவம் கீத்து கொட்டாய் உச்சி வரை தொடுவது மாதிரி எரியுது பின்ன பெரிய பெரிய பாத்திரம் பெரிய இட்லி பானை எல்லாம் அது மேல வச்சு தண்ணிய புடிச்சு அதுல ஊத்தி கிட்ட தட்ட 5 பெரிய பானைல தண்ணி கொதிக்குது தள தளன்னு . அதுக்குள்ள கல்யாண வீட்டுல இருந்த பொம்பளைங்க எல்லாம் வேடிக்கை பார்க்க வந்துட்டாங்க சுத்தியும் நின்னு அதுல ஒண்ணு " இங்க பாரு சரோசா சின்ன பசங்க நாலும் என்னமா சமைக்குதுங்க வர்ர பொண்ணு வூட்டு காரங்க குளிக்கிறத்துக்காக வெந்நீர் போடுதுங்கன்னு கமெண்ட் வேற . அட பாவி அய்யரே எங்களை சர்க்கஸ் கோமாளி மாதிரி ஆக்கிட்டீங்களேன்னு நெனச்சுகிட்டு நான் கடுப்பாகி "டேய் ராதா , கணேசா , தாஸு எல்லா இட்லி தட்டுலயும் மாவை ஊத்துங்கடா " ன்னு சவுண்ட் விட்டு தலைமை குக் ஆகிட்டேன் . வேற வழி சமாளிச்சாகணுமே ! ஒரு வழியா இட்லி வேக ஆரம்பிச்சுது . அதுக்குள்ள நாங்க படும் பாட்டை பார்த்துட்டு ஒரு அம்மா "தம்பிகளா நான் வேணா காப்பி போட்டு தாரேன் உள்ள கொண்டு போய் குடுங்க "ன்னு சொல்லி காப்பி போட போனாங்க . மணி ஏழரை ஆச்சு , அய்யர் வரலை எங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆச்சு .



காபி ரெடி ஆச்சு, நாங்க வரிசையா பத்து பத்து காப்பியா தட்டுல வச்சி உள்ள எடுத்துட்டு போயி எடுத்துட்டு போய் முதல்ல பெரிய கடாமீசைக்கு குடுத்தோம். அப்ப அது " இன்னுமா அய்யரு வரலை "ன்னு கேட்டுச்சு . ராதா உடனே " பீஸ் கட்ட பணம் பத்தலையாம் உங்க கிட்ட இன்னும் கொஞ்சம் அடவான்ஸ் கேட்டு வாங்கி குடுத்து விட சொல்லி ஆள் அனுப்பியிருக்கார் அப்ப தான் அவர் வர முடியும்" ன்னு சொல்லி டபார்ன்னு 200 கறந்துட்டான். ஆஹா இவன் மேல மேல ஏழரைய கூட்டுறானேன்னு நெனச்சுகிட்டு திரும்பவும் அடுப்பு கிட்ட வந்தா ஏதோ ஒரு நாத்தம் . என்னான்னு பார்த்தா ஒரு சின்ன பாத்திரம் உருகி உள்ள போயிடுச்சு . அதுக்குள்ள இட்லி நல்லா வெந்து போச்சு சரி முதல்ல இட்லியை காப்பாத்துவோம்ன்னு மூடியை திறந்தா ஆவி அடிக்குது மூஞ்சில . அதை பொறுத்துகிட்டு முதல் தட்டு எடுத்தா அது ஒட்டிகிட்டு வரலை . பின்ன உருண்டை ச்வுக்கு விறகு எடுத்து தட்டின் வளையத்துக்குள்ள அத விட்டு தூக்கினேன் . வெளியே வந்துடுச்சு ஆனா என்னால அந்த வெயிட்டை பேலன்ஸ் பண்ண முடியலை மெதுவா சூட்டை பொறுத்துகிட்டு தூக்கினேன் , அது உருண்டை சவுக்கு விறகாச்சா டொய்ங்ன்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சு பக்கத்து பாத்திரத்துல கொதிக்கும் தண்ணில தட்டு விழுந்துடுச்சு . சூடு தண்ணிக்கும் அதுவுமா கரைய ஆரம்பிச்சுது . பின்ன ராதாவும் தாஸும் சேர்ந்து ஜாரணிகரண்டி வச்சு இட்லியை வாற ஆரம்பிச்சானுங்க பின்னஅதை ஒரு தட்டிலே கொட்டினா ஒரு குவியலா பொல பொலன்னு நிக்குது . இதை இட்லின்னு சொன்னா யார் நம்ப போறாங்க ! அய்யோ அய்யரே மணி 9.00 ஆச்சே இன்னும் வராம போயிட்டியே பாவி மனுஷா மீசைக் காரனை நெனச்சாவே பயமா இருக்கு .


சரி இது எல்லாத்துக்கும் காரணம் தீ அதிகமா இருந்தது தான்ன்னு நெனச்சுகிட்டு ஒரு அண்டாவில இருந்த தண்ணியை எடுத்து மெதுவா அடுப்புக்குள்ள ஊத்தினேன் கொஞ்சம் தீ குறையட்டும்ன்னு அப்போ அடுத்த தட்டு இட்லி ஊத்த பெரிய மாவு இருந்த பாத்திரத்தை ராதா தூக்க முடியாம இழுத்துக்கிட்டே வர வர வர என்னோட டிக்கிலோனா விளையாடிட்டான், அவவளவு தான் அத்தனை தண்ணியும் அடுப்புகுள்ள ஊத்திடுச்சு. எல்லா நெருப்பும் அணைஞ்சு அடுப்பு கரி எல்லாம் தண்ணில மிதக்குது. இனி எல்லாம் மண்வெட்டி வச்சு வாரி வெளியே எடுத்து திரும்பவும் உஷ் அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே .... ஒருத்தனுக்கு ஒருத்தன் பார்த்துகிட்டோம் அந்த கொல்லை பக்கம் ஒரே ஒரு வேலி தாண்டினா கடேசி பஸ் பிடிச்சிடலாம். ஒன் டூ த்ரீ எதுவும் சொல்லிக்கலை . அடுத்த 3 நிமிஷம் பஸ்ஸ்டாப் வந்தாச்சு . பஸ்ஸும் வந்துச்சு சரியா, அதில இருந்து மணி அய்யர் இறங்கினார் . கரியும் அழுக்குமா இருந்த எங்களை பார்த்து கேட்டார் "என்னடா எல்லாம் முடிஞ்சுதா" நான் சொன்னேன் "இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு நீங்க போங்க நாங்க வர்ரோம் " விதி வலியது ...


பின்ன கொஞ்ச நாள் நாங்க மணி அய்யர் தெரு பக்கம் போகலை , அவர் வந்து வீட்டுல தேடினாலும் அகப்படுவதில்லை ! என்ன நடந்துச்சு அன்னிக்குன்னு அவரை இந்த தடவை ஊருக்கு போகும் போது கேக்கணும் !

33 comments:

  1. மக்கா! நான் போன பதிவிலே சொன்னது போல இன்னும் உடம்பு சரியில்லை அதனால நாளை ஒரு நாள் லீவ் எடுத்துக்கரேன்! முடியலைங்க! பதில் சொல்றேன் கண்டிப்பா வெள்ளிகிழமைக்கு!! ஆனா உங்க ஆதரவு கண்டிப்பா தாங்க வழக்கம் போல!!!

    ReplyDelete
  2. pathivu innum padikala..athuku munna oru doubt...intha pathiva padicha enga vayithuku ethaavathu aaguma? :)))

    ReplyDelete
  3. //
    என்ன ஆச்சு ? அப்புறம்? ஒரு போன் போட்டு மணி அய்யரை கேட்டு சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்கலை..
    நல்லா சிரிச்சாச்சு. :)

    //
    repeat

    Excellent

    ReplyDelete
  4. :)))))

    sooperu!! avar mani aiyar illa..manguni aiyar :))))

    ReplyDelete
  5. ///மணி ஏழரை ஆச்சு , அய்யர் வரலை எங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆச்சு . ///

    அசத்தலான வரி!
    நகைச்சுவை உங்களுக்கு மிக இயல்பாகவெ வசப்ப்ட்டுவிட்ட்து.பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. //என்ன நடந்துச்சு அன்னிக்குன்னு அவரை இந்த தடவை ஊருக்கு போகும் போது கேக்கணும் !//

    என்ன நடந்திருக்கும் கல்யாணந்தேன்.
    பின்ன சமையலா நடந்திருக்கும். அருமை நட்சத்திரமே! ஜொலிங்கோ

    ReplyDelete
  7. Super Sir, Sirissu sirissu vayiru valissirutu. Very Good Flow of Story.

    ReplyDelete
  8. படிச்ச எங்களுக்கே டென்ஷன் பத்திகிச்சி.. மாட்டிகிட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்... நல்ல(?!!?!!?) அனுபவம்.. :)

    ReplyDelete
  9. //என்னடா எல்லாம் முடிஞ்சுதா" நான் சொன்னேன் "இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு நீங்க போங்க நாங்க வர்ரோம் " விதி வலியது ...//

    அண்ணாத்தே அசத்துறீங்க போங்கோ!
    :-)

    ReplyDelete
  10. அதான் "food poison" காரணம் இப்போ வலை உலக மக்கள் அறிந்து கொண்டிருப்பார்களே!, மனசு கேட்கலை, அதான் வந்து காரணமாவது எல்லாரும் தெரிஞ்சுக்கட்டும்னு வந்து சொல்லிட்டுப் போறேன். :P

    ReplyDelete
  11. அதுபாட்டுக்கு வரும் போலும், இல்ல?!

    நல்லா இருக்கு ......

    ReplyDelete
  12. பஞ்சதந்திரம் ல நாகேஷ் வுடன் வர்ற காமெடி சீன் மாதிரி செம டைமிங் எல்லாம்...

    சூப்பராகீது... :)

    ReplyDelete
  13. சுப்பையா வாத்தியார் சொல்லிட்டாரு. இருந்தாலும் என்னால சொல்லாம இருக்க முடியல.

    \" மணி ஏழரை ஆச்சு , அய்யர் வரலை எங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆச்சு ." \

    இது ரொம்ப சூப்பரு அப்பு

    ReplyDelete
  14. ஐயோ..சிரிச்சு சிரிச்சு தல வலிக்குதுங்க..

    ReplyDelete
  15. ஆஹா அட்டகாசம்'ண்ணே....


    சிரிச்சிட்டே தான் பின்னூட்டம் போடுறேன்..... :)

    ReplyDelete
  16. சீக்கிரம் மணி அய்யரைப்புடிச்சி என்ன ஆச்சின்னு கேட்டு சொல்லிட்டு அடுத்த பதிவு போடுங்க‌

    ReplyDelete
  17. அபி அப்பா said...

    மக்கா! நான் போன பதிவிலே சொன்னது போல இன்னும் உடம்பு சரியில்லை அதனால நாளை ஒரு நாள் லீவ் எடுத்துக்கரேன்! முடியலைங்க! பதில் சொல்றேன் கண்டிப்பா வெள்ளிகிழமைக்கு!! ஆனா உங்க ஆதரவு கண்டிப்பா தாங்க வழக்கம் போல!!!

    Get well soon and come back fast...

    ReplyDelete
  18. என்னய்யா சப்புன்னு முடிச்சுட்டீரு... :))

    ReplyDelete
  19. :):) நல்ல நகைச்சுவை.அய்யரு கிட்ட அடிவாங்கின கதையின் முடிவை இப்படி மறைச்சு எழுதிய அபி அப்பாவுக்கு கண்டனங்கள்.

    ReplyDelete
  20. டெல்ஃபின் சொன்னதுதான்:-)))

    ரிப்பிட்டேய்..............

    ReplyDelete
  21. ஸ்டார் ஆனதுக்கு வாழ்த்ஹ்துக்கள் அண்ணா... ரொம்ப லேட்ட்ட்ட்ட்டாஆஆஆஆ வரதுக்கு மன்னிக்கோனும். எப்பவும் போல கலக்குவீங்கன்னு தெரியும் :)))

    ReplyDelete
  22. டாப் டக்கரு,... மணி அய்யரை விசாரிச்சதாச் சொல்லுங்க தொல்ஸ்

    ReplyDelete
  23. சூப்பர் அண்ணே.

    //" இங்க பாரு சரோசா சின்ன பசங்க நாலும் என்னமா சமைக்குதுங்க வர்ர பொண்ணு வூட்டு காரங்க குளிக்கிறத்துக்காக வெந்நீர் போடுதுங்கன்னு கமெண்ட் வேற .//

    அங்கேயும் கும்மி தானா???

    ReplyDelete
  24. இத்தனை சின்னப் பசங்க இவ்வளவு வேலை செய்தீங்களா. அடப் பாவமே. கதையை முடிக்கலியே.
    என்ன ஆச்சு. மணி அய்யர் எப்படி சமாளீச்சாரோ தெரியலையே. ஒரெ சஸ்பென்ஸ்:))))))))))
    உடம்பு நல்லாகட்டும். அப்புறமே பதில் போடுங்க.

    ReplyDelete
  25. அபி அப்பா! கலக்கிட்டீங்க. ரெண்டு பாகத்தையும் ஒரே மூச்சுல படிச்சி முடிச்சிட்டேன்.

    சூப்பர்
    :)

    ReplyDelete
  26. //இங்க பாரு சரோசா சின்ன பசங்க நாலும் என்னமா சமைக்குதுங்க வர்ர பொண்ணு வூட்டு காரங்க குளிக்கிறத்துக்காக வெந்நீர் போடுதுங்கன்னு கமெண்ட் வேற//

    "சரோசா சாமான் நிகாலோ"ன்னு சவுண்டு வுடாம கம்முன்னா வந்தீங்க? ஷேம் ஷேம் பப்பி ஷேம்.
    :)

    ReplyDelete
  27. adra sakka, super post...
    Phone panni ketu sollunga enna aachunu suspense thaangalai

    ReplyDelete
  28. உடன்பிறப்பே! மணி அய்யர் மேட்டருலே நம்ம கழக கொள்கையை அப்படியே கடைப்புடிச்சீங்க போலிருக்கே :-)))))

    ReplyDelete
  29. தல,

    நம்மூர்க்காரரு இந்த வாங்கு வாங்கறத படிக்கும்போது ஒர்ரே கெக்களிப்புதான் போங்க. இங்க அலுவலகத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், சிரிப்பு ரொம்ப வெளீல தெரியாம இருக்க.

    நடை சூப்பரு. அலட்டிக்காம அட்டகாசம் பண்ணுறீங்க.

    நல்ல நகைச்சுவை சிறுகதை மாதிரி இருக்கு.

    ஆமா எந்த ஊரு ஒமக்கு, பள்ளி கல்லூரி வாழ்க்கைலாம் எப்போ எங்கே ?

    நன்றிகள் பல.

    அன்புடன்
    முத்துக்குமார்

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))