பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

September 22, 2007

சத்தியமா இது சோதனை பதிவுங்க!!!

பாடல்: ஒரு முத்தாரத்தில்
திரைப்படம்: சொர்க்கம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
நடிகை: கே.ஆர்.விஜயா
நடிகர்:சிவாஜி கணேசன்


ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

அந்த மாலை இந்த பெண்ணின் சொந்தமானதே
அந்தி மாலை நேரம் பார்த்து ஆடுகின்றதே
பொன்னரங்கம் தன்னில் வந்து
என்னை மட்டும் பாட சொன்னதென்ன
கண்னரங்கம் மின்ன மின்ன காதல் கொண்டதோ
அந்தரங்கம் கண்டு கொள்ள அழைப்பு வந்ததோ
அந்த கிண்ணம் சொந்தம் இல்லை
என்று இன்று கண்டு கொண்டதென்ன

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்

நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே
நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே
காவல் கொண்ட மாலை இன்று சிவந்து போனதே
பாடல் ஒன்று....ராகம் ஒன்று
தாளம் கொஞ்சம் மறிவிட்டதென்ன
கால்ம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்
கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்
இன்று மட்டும் நாளை இல்லை
என்ற சொல்லில் உண்மை இனி இல்லை

ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துகள்
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்க கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
என் நெஞ்சம் அதன் மஞ்சம்................


திஸ்கி: மக்கா ரொம்ப நாளா எழுத விட்டு போச்சு. எப்படி எழுதுவதுன்னே தெரியலை. சரின்னு தகிரியமா எழுத கிளம்பிட்டேன். சரி நம்ப அபிஅப்பாதானேன்னு பதிவு படிக்க ஜாலியா ஜிவாஜி கணக்கா கோட்டு சூட்டு எல்லாம் போட்டுகிட்டு வந்து, பாதில தண்ணிய போட்டுட்டு ரகளை பண்ணாம ஆதரவு கொடுங்க மக்கா! பப்ளிஷ் பண்ணா ஒழுங்கா பப்ளிஷ் ஆகுதான்னு பார்க்க இது ஒரு சத்திய சோதனை பதிவுதாங்க இது!!!!

22 comments:

  1. இதுவும் சத்தியமா சோதனைதான்!!!

    ReplyDelete
  2. சோதனை மேல் சோதனை போதும்டா சாமீ.இது பாட்டு அண்ணா :))

    ReplyDelete
  3. பாட்டு நல்லாத்தானே இருக்கு. இதைப் போயி ஏஞ்சாமி சோதனைன்னு சொல்லுதே? பாட்டை எழுதிப் படிக்குறதுக்குப் பதிலா யாராவது பாட்டைப் படிச்சுப் போட்டிருந்தா நல்லா கேட்டு இருப்போமில்ல...

    ReplyDelete
  4. வாம்மா துர்கா! என் சோதனை உனக்கு சிரிப்பா இருக்காப்பா:-))

    ReplyDelete
  5. வாங்க கொத்ஸ்! பாட்டு என்னமோ நல்ல பாட்டுதான், எனக்கு தான் வரட்சி ஜாஸ்தியா இருக்கு அதான் இப்படி ஒப்பேத்திகிட்டு இருக்கேன்!!

    ReplyDelete
  6. அதானே எவ்வளவு நல்ல பாட்டு இது. அதுவும் சிவாஜியும் விஜயாவும் அவ்வளவு அருமையாக நடித்திருப்பார்கள். நீல வானம் மெல்ல மெல்லச் சிவந்துபோனதென்'' என்று சுசீலா பாடும்போது, சிவாஜியின் கண் சிவப்பைக் காட்டுவார்கள்.

    சோதனைப் பதிவோ என்னவோ நல்லாத்தான் செய்திருக்கீங்க.:))

    ReplyDelete
  7. கொத்ஸ்! நா வேணா பாடிடவா? அது தான் உண்மையான சோதனையா இருக்கும் உங்களுக்கு:-))

    ReplyDelete
  8. இல்லை இல்லை...

    சத்திய சோதனைகளுக்கு இன்னும் இரு நாள் இருக்கு....

    எந்த சோதனையா இருந்தாலும் தாங்கிகுற அளவுக்கு நாங்களுக்கு தயார் ஆகிட்டு தான் இருக்கோம்...

    ReplyDelete
  9. \எந்த சோதனையா இருந்தாலும் தாங்கிகுற அளவுக்கு நாங்களுக்கு தயார் ஆகிட்டு தான் இருக்கோம்...\\

    ரிப்பீட்டேய்.....

    ReplyDelete
  10. வாங்க புலி சாரே! அந்த நேரத்துல சோதனை வர கூடாதுல்ல்ல அதான்!!

    ReplyDelete
  11. வாங்க வல்லிம்மா! அது சூப்பர் பாட்டு என் மனசுகுள்ளயே இருக்கும் பாட்டு!

    ReplyDelete
  12. கோபி தம்பி வாய்யா இட்துக்கும் ரிப்பீட்டா நல்லா இருப்பா!!

    ReplyDelete
  13. அண்ணாத்தே அபயாம்பிகை கோயிலாண்ட எல்லாரையும் உட்டுப்புட்டு,நீங்க பாட்டுக்கு ஜாலியா தண்ணியில(கடல் தண்ணியிலதான்) கடந்து இப்ப பாட்டு ப்டிக்கீறீங்களா இது சரியா? பாவம்ல நம்ம பிளாக்கர்ஸ்!

    ReplyDelete
  14. வாங்கம்மா! எங்க உதைக்குது! நீங்க என்னா சொல்றீங்கன்னு புரியலையே:-)))

    ReplyDelete
  15. தம்பி ஆயில்யா! வாப்பா! கொஞ்ச நாள் பிஸி ஆகி போச்சு ஆனி அதிகமா ஆயிடுச்சு! தவிர அவயாம்பிகை சதகம் "பச்சை முழு பொன்னிறமுடன்" சதகம் தேஎவைபடுது, எனக்கு சின்ன வயசுல அது மனப்பாடம் இப்ப கொஞ்சம் மறந்து போச்சுப்பா! அதுக்காக வெயிட்டிங்! வரும் வாரம் போட்டிடலாம் கவலை படாதீங்க!!

    ReplyDelete
  16. அண்ணனுக்கு 1 கிடைக்கலைன்னா அத தேடிக்கண்டுபுடிச்சு தர்றதுதானே இந்த தம்பியோட கடமை! (இனி சாக்கு போக்கு சொல்லப்படாது!)


    பச்சை முழுப்பொன் னிறமுடனே
    பளிங்கு பவள முடன்நீலம்
    பருத்த மேக முடன்ஆறாய்ப்
    பரவி யிருக்கும் பசுங்கிளியே
    அச்ச மறவே அதன்மீதில்
    அருண வுதய ரவிகோடி
    அகண் டாகார ரூபமதாய்
    அமர்ந்த சிவமோ கனமாதே
    செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ்
    சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
    சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச்
    சிறியேன் காண அருள்புரிவாய்
    வச்ச உனது பொருள்எனக்கு
    வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
    மயிலா புரியுல் வளரீசன்
    வாழ்வே அபயாம் பிகைத் தாயே

    ReplyDelete
  17. ஆஹா தம்பி ஆயில்யா சூப்பர்! கண்டிப்பா எழுதறேன். அது போலவே "உம்பர் முனிவர் முதலோர்க்கும்" கொஞ்சம் சொல்லிடுப்பா! நன்றி நன்றி நன்றிப்பா!!

    ReplyDelete
  18. sothanaiya sothanai? mmmm? athan therinju irukke intha valai ulakuke sothanai yarukkunu? Kadavule, kapathu valai ulaka peru makkalai! :P :P :P

    ReplyDelete
  19. கீதாம்மா! வலை உலக பெருமக்களை வலி உலக பெருமக்களா ஆக்கிடாம இருக்கனும், பார்ப்போம்:-))

    ReplyDelete
  20. அபி அப்பா.. ப்ரோபைல்ல உள்ள பாப்பா படம் சூப்பர்.

    ReplyDelete
  21. பதிவு அருமை; அபயாம்பிகை சதகப் பாடல்களைக் கேட்க முடிகின்றது. ஆனால் அதன் வரிகளைப் பதிவிறக்கம் செய்ய வழியில்லையே. உங்களிடம் நூல் இருந்தால் அதனைப் பதிவேற்றம் செய்யலாமே.

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))