பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

March 31, 2009

ஒன்றே குலம் ஒருவனே தேவன்!!

முடியலை என்னால முடியலை! இஸ்லாத்தை பரப்ப இது தான் வழின்னு யார் சொன்னது! என்னால முடியலை! ஒரு வேளை தருமி சார் என் மேல ஏவி விட்டிருப்பாரோன்னு சந்தேகம் கூட வருது!!!

அய்யா தயவு செஞ்சு நீங்க ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்ன அண்ணா வழியில் வந்து ஏன் திமுக கூட்டனிக்கு ஓட்டு போட கூடாது?? இதுவும் நல்ல மதம் தான் அய்யா!

எனக்கு மட்டும் தான் இந்த கஷ்டம் நடக்குதா? இல்லை எல்லாருக்குமா? சொல்லுங்கப்பா!!

March 28, 2009

ஆற்காடு வீர்ராசாமிக்கு ஒரு கிழிந்த கடிதம்!!!



அன்புள்ள ஆற்காடு வீராசாமி அவர்களுக்கு அபிஅப்பாவின் ஒரு கிழிந்த கடிதம்,ஏன்னபடிச்சுட்டு எப்படியும் கிழிக்கதான் போறீங்க. அதனால நானே கிழிச்சு கொடுத்துடுறேன்.


இன்றைக்கு இரவு 8.30 முதல் 9.30 வரை உலக வெப்பமயமாவதை தடுத்து பூமியை காக்கும் பொருட்டு எல்லா சுவிச்சும் ஆஃப் பண்ணிட்டு இருட்டுல குத்த வச்சீருக்கனும்ன்னு உலக புண்ணியவான் எல்லாம் சொல்லியிருக்காங்க.


நீங்களோ தேர்தல் பிசியிலே இருப்பீங்க. தெரியும் இருந்தாலும் சரியா இரவு 8.29க்கு நம்ம தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொடுத்தீங்கன்னா நாங்க 8.30க்கு டாண்னு சுவிட்சை ஆஃப் பண்ணிட்டு உட்காந்துப்போம்.


"போடா வெண்ணை உனக்கு ஏன் அத்தனை கஷ்டம் அதை நானே பார்த்துக்கறேன். தமிழ்நாடு வெப்பம் அடையாம நான் பார்த்துக்குறேன்" அப்படீன்னு நீங்க அடம் பிடிக்க கூடாது.


எங்க வீட்டு சுவிட்சை ஆஃப் பண்ணி பார்க்க எங்களுக்கு ஆசை இருக்காதா. கொஞ்சம் மனசு வையுங்க. எங்களோட இந்த சின்ன ஆசையை பூர்த்தி செய்யுங்க!


அன்புடன்

அபிஅப்பா

March 27, 2009

கடவுளே எங்க கூட்டணிய காப்பாத்திட்ட!!!!

இந்த பாழாப்போன பா.ம க போயிடுச்சு! சனி விட்டுச்சு! அப்பவே தலைவர் டைவர்ஸ் பண்ணியும் தங்கபாலு தான் தொங்கபாலுவா இருந்தார். ஆனா பாருங்க தலைவர் தந்திரமே தனி தான். நைசா பாண்டி நாராயனசாமிய கூப்ப்பிட்டு " தம்பி உங்க சோனியா அம்மையாரையோ இல்லாட்டி ராகுல் தம்பியையோ பாண்டி கொண்டு வாங்க"ன்னு சொல்லி அது போல அவங்களும் வந்து கொங்காய்யாவை அழகா கழட்டியாச்சு.



என் தம்பி முத்துகுமார், மாலன் போன்ற அறிவிஜீவிகள் எல்லாம் எனக்கு 'அட ஆமாம் நீங்க சொன்னது தான் நடந்துச்சு" அப்படின்னு மெயில் பண்ண வாய்ப்பு இருக்கு.



'விடுபட்டவை"யிலே "நான் அப்பவே நெனச்சேன் தீக்குளிப்புகள் தவிர்க பட வேண்டிய விஷயங்கள்' அப்படின்னு சேதி வரும்.



பக்கிபுக் போடுவார் பதிவு "இன்ன இன்ன தேதியிலே இந்த இந்த நேரத்திலே என் பிளாக் ஹாக் செய்யப்பட்டது"



உடன்பிறப்பு பதிவு போடுவார் "நானும் அபிஅப்பாவும் ஒரு லூசு" ஆனா லேபில்ல நகைச்சுவை பதிவுன்னு!!



ஆனா கீகன் கிந்தசாமி "நான் ஒரு லூசு"ன்னு பதிவு போட்டு லேபில்ல சீரியஸ்ன்னு போடுவார்.


எப்போதும் போல வன்னியை கிட்ட நெருங்கி வந்துட்டான் ராஜபக்ஷே ன்னு தினதந்தியிலே 8ம் பக்கம் சேதி வரும்.தோத்து போன விசயகோந்தும்,அவரின் பாதி பர்சண்டேஜ் வாங்கின மருத்துவர் ங்கொய்யாவும் பணம் விளையாடி விட்டதுன்னு சொல்லுவாங்க!


March 26, 2009

துபாயில் ஆலங்கட்டி மழை!!!!!


தலை காட்டி அடி வாங்கி என் வீட்டு


ஐப்பசி மழையில் கப்பல் விட்ட சந்தோஷம்


அம்மா அடிப்பாங்க அப்பா அடிப்பாங்க


எதும் இல்லா சந்தோஷம்


சளி பிடித்தாலும் தெரியாது, எனக்கு


சனி பிடித்தாலும் தெரியா தூரம் அவங்க


இந்றைக்கு தான் என் தலை துவட்டும்


துண்டு மேல கோவம் வருது


நீ தினமும் காணாமல் போவாயே இன்றைக்கு


மட்டும் முன்னே வந்டு நிக்குற


மழையும் , ரயிலும் , கடலும், யானையும்,


காதலும் தான் கவிதையை பெற்ற அப்பனோ!


அப்ப நான் என்ன சுப்பனோ???

March 20, 2009

நட்ராஜுக்கு இதை எல்லாம் சொல்லி கொடுத்தது யாரு?













நம்ம நட்ராஜ் இப்ப வர வர செய்யும் ரவுசு லீலைகள் ரொம்ப அதிகமா போச்சு. அவன் அம்மாவின் செல் தான் அவனுக்கு முக்கிய விளையாட்டு பொருள். அவனுக்காக பொம்மை போன் வாங்கி கொடுத்தா 'அதை நீ வச்சுக்கோ எனக்கு உன் போனை தா" என அடம்.
இப்படித்தான் ஒரு நாள் வீட்டில் ரூமில் அவன் அம்மா கிட்ட போன் கேட்டு அழுதிருக்கான். அழுவதுன்னா சும்மா அழுக மாட்டான். கீழே புரண்டு புரண்டு அழுவான். உடனே என் தங்கமணி அதை கண்டுக்காம ரூம்ல இருந்து கிச்சன் போயிட்டாங்க. அங்க போன பின்னே இவன் அழும் சத்தம் இல்ல. டக்குன்னு அழுகையை நிப்பாட்டிட்டு இவன் நேரா எழுத்து கிச்சன் வந்து அங்கு கீழே படுத்து புரண்டு அழுதிருக்கான்.

அப்பவும் கண்டுக்காம கிச்சனை விட்டு விட்டு ஹால்க்கு போயிருக்காங்க டி வி கிட்ட. இவன் அப்பவும் டக்குன்னு அழுகையை நிப்பாட்டிட்டு ஹால் பக்கம் வந்து என் மனைவிக்கு நேரா படுத்துகிட்டு அழுதிருக்கான்.

இவங்க அப்பவும் அவனை கண்டுக்காம ரூம் பக்கம் போயிருக்காங்க. அவன் அப்பவும் விடாம அழுகையை நிப்பாட்டிட்டு நேரா ரூம்க்கு போயிருக்கான். அங்கயும் கீழே படுத்து புரண்டு சத்தம் போட்டு அழுது கிட்டே என் மனைவி காலை சொறிஞ்சு "அம்மா தம்பி பாரு தம்பி பாரு"ன்னு சொல்லியிருக்கான். என்ன ஒரு வில்லத்தனம்?

இதை எல்லாம் யார் சொல்லிகொடுத்தது??

March 14, 2009

என் மூஞ்சி அவனுக்கு நியாபகம் வரக்கூடாது ஆண்டவா!!!


மூன்று நாள் முன்ன ஒருத்தனை (மீண்டும்) சந்திச்சேன். என் கம்பனியிலே சப்காண்டிராக்ட் கம்பனில ஒரு இஞினர். அவன் ஒரு மலையாளி. என்னை அவன் பார்த்ததுமே அவன் கண்ணில் ஒரு பிரகாசம்.


"சாரே நீங்க தானே அது நான் தான் பைஜு நியாபகம் இருக்கா என்னை? உங்களை என்னால மறக்க முடியாது சாரே "


எனக்கு தலையும் புரியலை. காலும் புரியலை. நான் உடனே " அட என்னங்க என்னை நீங்க எப்ப பார்தீங்க"ன்னு கேட்டேன்.


"சார் ஒரு ரெண்டு வருஷம் இருக்கும் நானும் நீங்களும் துபாய்ல இருந்து டாக்ஸில அபுதாபி போனோம். என்னை தெரியுதா/"


இதை அவன் கேக்கும் போதே கண்ணில் ஒரு கொலவெறி இருந்துச்சு. எனக்கு சொரேர்ன்னு ஆகிடுச்சு. ஆஹா அவனா இவன்ன்னு நெனைச்சு என் மனசு கொசு வத்தி சுத்த ஆரம்பிச்சுது

*************************
ஒரு நாள் காலை நான் வேலைக்கு போன பின்னே ஒரு மாஸ் கான்கிரீட் இருந்துச்சு. ஆரம்பிச்சா 36 மணி நேரம் தொடர்ந்து கான்கிரீட். ஒரு உலக சாதனையா செய்ய போவதா மீடிங்ல சொன்னாங்க. வேற வழி இல்லை. தூக்கம் இல்லாம தொடர்ந்து செய்யனும். அதுக்கு அடுத்த நாள் அபுதாபி தமிழ் சங்கத்திலே பட்டிமன்ற புகழ் ராஜா வின் நிகழ்சி. அதுக்கு போன் மேல போன். சரின்னு எல்லாம் முடிச்சுட்டு அடுத்த நாள் மாலை 6க்கு வீட்டுக்கு வந்து படுத்தா செம தூக்கம்.

அப்பன்னு பார்த்து போன் "அபி அப்பா உடனே வாங்க உங்களுக்காக வெயிட்டிங்" அப்படின்னு திரும்ப திரும்ப போன்.


சரி நடப்பது நடக்கட்டும்ன்னு டாக்ஸி ஸ்டாண்டுக்கு போனேன். போய் டிரைவர் பக்கத்து முன் சீட்டுல உக்காந்த அடுத்த நிமிஷம் தூங்கினேன். அப்ப தான் அந்த பைஜு பின் சீட்டிலே இருந்து என்னை தட்டி " சாரே வந்து பின்னால என் பக்கத்திலே உட்காருங்க. நீங்க தூங்கி அதனால டிரைவரும் தூங்கி என்களை நிம்மதியா தூங்க வச்சிடாதீங்க"ன்னு சொன்னார்.


சரின்னு நானும் பின்னால வந்து உட்காந்தேன். அப்பவே அவர் கிட்ட சொன்னேன். "சாரே நான் ரொம்ப டயர்டு அதனால தூங்குவேன் பரவாயில்லயா"ன்னு கேட்டதுக்கு, அவர் 'அட சாரே நல்லா தூங்குங்க அதுனால என்ன பிரச்சனை"ன்னு சொன்னாரு.


நான் அப்ப கூட அவர் கிட்ட சொல்லியிருக்கலாம். நான் தூங்கும் போது மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை வரும்ன்னு. நானும் நல்ல பிள்ளையா வந்து அவர் கிட்ட பக்கத்துல உக்காந்து கிட்டேன்.


எனக்கு ஒரு கெட்ட பழக்கம். நான் மாயவரத்தில் இருந்து சென்னைக்கு பஸ்ஸில் வந்தா கூட மாயவரத்தின் புறநகர் எல்லாம் பார்த்ததில்லை. பஸ்ட்டாண்டு திரும்பி காவிரி வந்துச்சுன்னா பார்பேன். அத்தோட அவுட். பின்ன தாம்பரம் தான் கண்ணுக்கு தெரியும்.


சரின்னு வந்து அவன் பக்கத்திலே உட்காந்து தூங்க ஆரம்பிச்சேன். வண்டி போகும் வேகத்திலே நான் முன் சீட்டிலே முட்டி முட்டி நெத்தி புடைச்சு போனதை பார்க்க சகிக்காமல் ' சாரே என் மேல சாஞ்சுகுங்க"ன்னு சொல்லி சனியை இழுத்து பாக்கெட்ல போட்டுகிட்டான்.


ஆச்சு எனக்கு என்ன? அப்படியே தூங்க ஆரம்பிச்சேன். ஆனா நான் தூங்கினாலும் என் போன் தூங்குமா? அது வைப்ரேஷன் வேற. என் பாகெட்ல வச்சது நேரா அவன் இதயத்தை துளைக்க அவன் எடுத்து எடுத்து என்னவோ ப்பதில் சொல்ரான். கிட்ட தட்ட அரை மணி நேரத்தில் 25 போன். கான்கிரீட் என்ன ஆச்சு? இன்னும் பங்ஷனுக்கு வரலியா அப்படின்னு. பாவம் மனுஷன் நொந்துட்டான்.


ஒரு கட்டத்திலே அவன் என்னை பிடிச்சு நேரா உட்கார வச்சு ரெண்டு கையாலயும் பிடிச்சு சாத்தி கிட்டே தூங்க ஆரம்பிச்சான். அப்பவும் டமார் டமார்ன்னு அவன் தலையை குறி வச்சே முட்டினேன். சரின்னு அவன் தூங்குவதை விட்டுட்டு என்னை பிடிச்சுப்பதிலேயே தன் முழு கவனமும் செலுத்தினான்.அப்படியே 10 நிமிஷம் போச்சு. அவனும் லைட்டா தூங்க ஆரம்பிச்சான்.


எனக்கு அடுத்து ஒரு கெட்ட பழக்கம். அசந்து தூங்கினா பல்லை கடிப்பேன். கடின்னா சும்மா உங்க வீட்டு கடி என் வீட்டுகடி இல்லை. திடீர்ன்னு கர்முர்ன்னு சந்தம் கேட்ட பின்ன ஏதோ சைலன்சர் தான் புட்டுகிச்சோன்னு டிரைவர் வண்டிய நிப்பாட்ட, நம்ம மலையாளி 'சார் தான் அது"ன்னு வெளக்கி சொல்லி வண்டிய எடுத்துட்டங்க.


அவன் என்னை எழுப்பி " சாரே எதுனா ஹாஸ்பிட்டல் போயிடலாமா"ன்னு கேட்க நான் "இல்ல சாரே தூங்கனும்ன்னா எதுக்கு ஹாஸ்பிட்டல் எல்லாம் டாக்சியே போதும்"ன்னு சொல்லிட்டு அவன் மேலயே தூங்கிட்டேன்.
அவனும் அவன் விதியை நொந்துகிட்டே என் போனுக்கும் ஆன்சர் பண்ணிகிட்டு லைட்டா தூங்கிட்டான். ஆனா மக்கா என் அடுத்த கெட்ட பழக்கம் இப்ப சொல்லியே ஆனனும். நல்லா அசந்து தூங்கினா எனக்கு வாணி ஒழுகும். அதாங்க ஜொள்ளு ஊத்தும். அவனோ எதுனோ பங்கஷன் போறத்துக்காக லூயி பிளிப் சட்டை எல்லாம் போட்டு இருந்தான். அப்படியே அவன் சட்டை முழுக்க ரெண்டு உள்ளம் கை அள்விலே ஜொள் வடிச்சு வடிஞ்சு அந்த ஈரம் பட்டு எனக்கே தூக்கம் போயிடுச்சுன்னா பார்த்துகோங்க. முழிச்சு பார்த்தா அவன் சட்டை தொப்பரையா இருக்கு. எனக்கு பயம் வந்துடுச்சு. அந்த இடம் உமல்நார்ன்னு பேர். அங்க இருந்து அபுதாபிக்கு 3 திர்காம் தான் டாக்ஸிக்கு. வண்டி நின்னுச்சு.


மெதுவா நான் அவன் தூக்கம் கலைக்காமல் இறங்கிட்டேன். அவன் முழிச்சு பார்த்தா கொலை தான் விழும்.


மெதுவா இறங்கி 'ஆண்டவா என் முகம் அவன் நியாபகத்திலே இருந்து மறையட்டும்"ன்னு வேண்டிகிட்டே நின்னேன். அந்த டாக்ஸி கிளம்பிடுச்சு. பார்த்தா அந்த லூசு ஜன்னல் வழியே முழிச்சுகிட்டு எட்டி பார்த்து என்னை ஏதோ திட்டுது. என் காதில் அதல்லாம் விழலை! நான் வேற டாக்ஸி பிடிச்சு அபுதாபி போயிட்டேன்.
*********************************
அதல்லாம் விடுங்க. இப்ப 3 நாளா அந்த லூசு வந்து "சாரே நீங்க தானே அது நீங்க தானே அதுன்னு கேக்க "அய்யா நான் துபாய் வந்து 3 மாசம் தான் ஆகுது, ரொம்ப புதுசு. தவிர அபுதாபி எல்லாம் நான் பார்த்ததே இல்லை. இது விசயகாந்து மேல சத்தியம்"ன்னு சொல்லிகிட்டு இருக்கேன். என்ன பண்ணலாம் அவனை????


March 11, 2009

தேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..!!!!

நான் என்ன பண்ணட்டும் என் இளவல் ராதாகிருஷ்ணன் எழுதிய அதே பதிவு தான் இது. (யப்பா உடனே இது ஈயடிச்சான் காப்பின்னு அவார்டு கொடுத்துடாதீங்கப்பா) நான் தேடி அலையாமல் அழகா தேர்ந்தெடுத்து சொன்ன ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நன்னி!!

***********************************

நிலவரி ரத்து, இலவச மின்சாரம், வட்டியில்லாக் கடன்,தவிர அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள்..ஆறாவது ஊதியக்குழுவின் இடைக்கால நிவாரணமாக 4500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள் மட்டும் 15 லட்சம் இருப்பர்.குடிநீர் திட்டம், ஊரக வேலைவாய்ப்பு என 3849 கோடி செலவிடப்பட்டுள்ளது..இவர்கள் எண்ணிக்கை 3.4 கோடி.,மெட்ரோ ரயில், சிறந்த பேருந்து போக்குவரத்து..வெள்ள நிவாரணம், இலவச டி.வி., என நகர்ப்புற மக்கள் வாக்கு 2.7 கோடிவெளி மார்க்கெட்டில் அரிசி 35 ரூபாய் விற்கும் நிலையில் ரேஷனில் 1 ரூபாய்க்கு போடப்படுகிறது..இது பொருளாதார நிலையில் பின்தங்கியவர் ஆதரவை பெருக்கும்.

பொறுத்தவரை இன்று இலவசங்கள் சாதனையைப் படைக்கும்..தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.மேலும் பா.ம.க., எப்போதும் வெற்றி பெறும் கூட்டணியையே விரும்பும்...ஆகவே கடைசி நேரத்தில்..அவர்களும் இந்த அணியிலேயே தொடர்வர்..விஜய்காந்தையும் இந்த அணியில் சேர்க்க முயற்சி நடக்கிறது.

இலங்கை பிரச்னை பிரமாதமாக ஓட்டளிக்கும் போது மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.மேலும் ..இன்று அனைத்துக் கட்சிகளுமே...இதை வைத்து அரசியல் செய்துக்கொண்டிருக்கும் நிலையில்...கலைஞரைத் தவிர வேறு யாரையும்..சாமான்யனால் நினைத்துப் பார்க்க முடியாது.இன்று தேசிய நலனையும்..அரசியல் நலனையும் வைத்துப் பார்த்தால் கலைஞரை விட்டால்..வேறு மாற்று இல்லை

துபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!

இந்த போட்டோவை எல்லாம் எடுத்த நம்ம மகாராசன் என் தம்பி தினேஷ்!(இம்சை அரசி ஜெயந்தியின் கூட பிறந்த என் கூட பிறக்காத தம்பி)
இது ரேஸ்க்கு முன்ன அந்த கைடு குதிரை ஆரம்ப இடத்துக்கு அழைத்து போகும் காட்சி!




இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!



இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!



இடைப்பட்ட நேரத்தில் ஒரு ஆங்கிலேயர் நடத்தும் மேஜிக் நிகழ்சியும் அதை சுற்றியும் இருக்கும் குழந்தைகளும்



கமான் கமான் என கத்தும் ஒரு நாதாறி:-))(ஆனா அவன் எழுதி போட்ட ஒரு நாயும் ஜெயிக்கலை என்பது உபரி செய்தி)

இது தான் அந்த கைடு குதிரை மத்த குதிரையை அழைத்து வரும் காட்சி!



எல்லாம் தட்டாமாலை சுத்துது! இங்க தான் உள்ளங்கால் பிடிச்சி ஓனர் ஜாக்கியை தூக்கி விடுவார்!



இடைப்பட்ட நேரத்தில் சீட்டு ஆட்டம்!


இரண்டாம் பந்தயத்தில் ஜெயித்த குதிரை! என்ன ஒரு ஜம்பம்? ங்கொய்யால என் குதிரையை தோக்க அடிச்சிட்டல்ல! நீ மட்டுமா 12 குதிரையில் 11 அப்படி தான் செஞ்சுது, ஹும்!!!


என் பரிட்சைக்கு கூட இப்படி படிச்சது இல்லைப்பா!



சரி போனா போவுது வெற்றி எனதே! ஜெயிச்சது எல்லாம் நானே!



\





இது தான் அந்த "ஷேக் முக்டம் கிராண்ட் ஸ்டாண்ட்"
**************************************************


நான் 1987 ல் சென்னையில் சில மாதம் இருந்த போது எல்லாம் கிண்டி பாலத்தில் ஞாயிறு பகல் பொழுதுகளில் கையிலே ஏதோ பாட்டு புத்தகம் மாதிரி வைத்து கொண்டு எதிரே நமீதா நடந்து வந்தா கூட தெரியாத மாதிரி சில ஆசாமிகள் போய் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இருந்து அந்த புத்தகத்தை தவிர அவர் அரைஞான் கயிறு முதல் கொண்டு யாரும் லவட்டி விடலாம். குதிரை ரேஸ்க்கு போறாராமா! அதுல ஒரு கொடுமை என்னன்னா கிண்டில குதிரை ஓடாதாம். பெங்களூர்ல ஓடும் குதிரைக்கு இங்க பணம் கட்டி லைவ் ரிலே கேட்டு "கமான் கமான்"ன்னு கத்திகிட்டு ச்சே எனக்கு சுத்தமா அதல்லாம் பிடிக்காது.

பாருங்க விதியை நான் இப்போ வேலை பார்ப்பதே உலகின் மிக பெரிய குதிரை பந்தய மைதான கட்டுமான பணி தான். கிட்ட தட்ட அமீரகத்தின் மிக பெரிய பிராஜக்ட். அந்த இடத்துக்கு பக்கத்திலே தான் ஆசியாவின் மிக பெரிய மைதானமும் இருக்கின்றது. அதிலே இப்போ உலக அளவிலான பந்தயம் இப்போது 2 மாதத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றது. எனக்கு அத்தனை இஷ்டமில்லாமல் தான் இருந்தது. ஆனாலும் போய் தான் பார்போமே என போனேன்.


வாரா வாரம் வியாழன், வெள்ளி தான் பந்தயம். மொத்தம் 48 நாடுகள் கலந்து கொள்கின்றன. கலந்து கொள்ளும் குதிரைகளில் பாதிக்கும் மேலாக இந்த நாட்டு ராஜாக்கள் குதிரையும், அவங்க பசங்க குதிரைகளும் தான். மொத்தம் 8 பந்தயம். முதல் பந்தயம் சரியாக அதாவது மிக சரியாக இரவு 7.15 க்கு ஆரம்பம். ஒரு பந்தயத்துக்கும் அடுத்த பந்தயத்துக்கும் இடையே 30 நிமிஷம் இடைவேளை.


6 மணிக்கே பார்வையாளர்கள் அனுமதி. யார் காரில் வந்தாலும் அதுக்குன்னு இருக்கும் பார்கிங்ல போட்டுட்டு வரிசயிலே நின்னு அவங்க மினி பஸ்ல தான் அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் "ஷேக் முக்டம் மில்லீனியம் கிராண்ட் ஸ்டேண்டு"க்கு கூட்டி போவாங்க. மிக அழகான உகாண்டா நாட்டு கருத்த பையன்கள் செக்யூரிட்டியால மிக அழகா வரிசையா எல்லாரும் உள்ளே போனோம். நுழைவாயிலிலே இலவச குலுக்கல் கார் (ஃபோர்டு கார்) பரிசுக்கான கூப்பன், பின்னே நம்ம IAS பரிட்சை மாதிரி ஒரு கம்பியூட்டர் கேள்விதாள், பின்னே ஒரு 8 பக்க புக்லெட், அதிலே எத்தனை பந்தயம், எந்த எந்த மணியில் ஆரம்பம், குதிரை பேர் என்ன, ஜாக்கி பேர் என்ன, ஓனர் பேர் என்ன, ஜாக்கி வெயிட் என்ன, குதிரை வயசு என்ன, குதிரை நாடு எது, அதன் அப்பா யாரு அம்மா யாரு, எத்தனை சுழி, இதுக்கு முன்ன ஜெயிச்ச வரலாறு, அதன் பேரு எல்லா கந்தாயமும் இருக்கு.
முதல் பந்தயம் இந்த இலவசகாரர்களுக்கு இல்லை. எல்லாம் கிளப் மெம்பர்களுக்கு. கிளப் மெம்பர்ன்னா ஏ.சி. முத்தையா, விஜய் மல்லையா போன்ற சிலரே இந்தியர்கள்!
ஒரு பந்தயத்துக்கு சராசரியா 10 குதிரைகள். அதிகமா 14 குதிரை, குறைவா 6 குதிரை.

நமக்கு கொடுத்த அந்த IAS கேள்வி தாளில் நாம சுழிக்கனும் எந்த பந்தயத்தில் எது முதல்ல வரணும் என்று. அதை முடித்து ஒரு டப்பாவில் போடனும். அது எல்லாம் கம்பியூட்டர்ல ஃபீட் செய்யப்படும்.

குதிரைக்கு எல்லாம் மாலை 5 க்கே வந்துடும் கிரவுண்டுக்கு. அதுக்கு ஒரு இடம் இருக்கு. அதிலே அந்த குதிரை ரெஸ்ட் எடுக்கும். அது வருவதே சூப்பரான ஏ.சி கோச் கேரவன்ல! கேரவன் - குதிரை எல்லாம் வச்சி நீங்க எதுனா நினைச்சா நான் பொறுப்பு இல்லை. இந்த குதிரை எல்லாம் டிரஸ் இல்லாமத்தான் இருக்கும். ஜெயிச்சா ஒரு போர்வை போத்துவாங்க அத்தனையே

டிரஸ் தான் இல்லியே த்விர எல்லா குதிரைக்கும் 4 பேர் தனி தனியா முடி வெட்ட, சடை பின்ன, அதன் முதுகில் டிசைன் டிசைனா டைமன், ஆட்டின், ரோஜாப்பூ, இப்படி டிசைன் பண்ண, ஆயில் மசாஜ் பண்ண இப்படி ராஜ போக வாழ்க்கை. எல்லாம் 6 அடி உயரம் இருக்கு.

சரி வந்தாச்சா இதான் அந்த கிரவுண்ட்! முதல்ல DIRT என்னும் புல் தரை ட்ராக், அதை அடுத்து TURF என்னும் புல் தரை. அதுக்கு அடுத்து ஒரு தார் ரோடு. அதிலே இரு ஜீப்பிலே மூவி கேமிராவை கிரேனில் கட்டிய ஜீப், அதுக்கு முன்னும் பின்னுமாக 2 ஆம்புலன்ஸ்.


மேட்ச் தூரம்ன்னு பார்த்தா 1200 மீட்டர், 1600 மீட்டர் இப்படியாக அதிக பட்சமாக 2400 மீட்டர். அத்தனையே. இந்த 8 பந்தயத்தில் 5 புள் டிராக் போட்டி. மீதி 3 மண் தரை போட்டி!

மண் தரை போட்டியிலே அதிக குதிரை கிடையாது. சும்மா 7 அல்லது 8 தான்.
குதிரை பேர் எல்லாம் என்ன தெரியுமா? ALMAJIT, BEAVER PATROL, GRANTLY ADAMS, LEAGUE CHAMPION, LEANDROS,NIGHT CROSS, NOTA BENE, PRINCE TAMINO, MISS GORICA, MONTPELLIER, CONFUCHIES, LIPOCCO, CONCEAL எதுனா உங்களுக்கு புரியுதா? சரி விடுங்க! அந்த குதிரைக்கு அந்த பெயர் புரியுமான்னு சோதிக்க miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.

ஒரு பந்தயம் ஆரம்பிச்ச உடனே அதாவது 10 நிமிஷம் முன்ன பரிசு கொடுக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் வரும் ஆனா அதன் மேல ஜாக்கி இருக்க மாட்டாங்க. அதன் பராமரிப்பாளர் 2 பேர் வதன் கடிவாளத்தை பிடிச்சுகிட்டு அந்த பரிசு கோப்பையை சுத்தி வருவாங்க. கூடவே அதன் ஓனர் வருவார். அவர் குதிரையை தடவி கொடுத்துகிட்டே ஓடிவருவார். அவர் அந்த குதிரைக்கு முத்தம் கொடுப்பதும், அது அவருக்கு முத்தம் கொடுப்பதும் காண கிடைக்காத காட்சி. பின்ன தான் ஜாக்கி ரோல்ஸ்ராய் காரிலே வருவார். ஆனா பாருங்க அந்த ஜாக்கி வெயிட் குறைந்த பட்சம் 40 கிலோ, அதிக பட்சம் 57 தான். எல்லாம் முதுகிலே கார்டு, காலில் கம்பூட்டு, தலையில் ஹெல்மெட் சகிதம் வருவாங்க. அதுல பாருங்க இந்த கோடீஸ்வர ஓனர் தான் இவரின் இடது உள்ளம் காலை தூக்கி விடனும். இவரும் அப்ப ஒரு ஜம்ப். அவர் குதிரை மேல உட்காந்துடுவார்.

பின்ன ஒரு மணி அடிக்கப்படும். பின்ன எல்லா குதிரையையும் ஒரு "கைடு" குதிரை அழைச்சுகிட்டு போகும் போட்டி துவங்கும் இடத்துக்கு. அதாவது நாம் பார்க்கும் கிராண்ட் ஸ்டாண்டு இருக்கே அது போட்டி முடியும் இடம் தான். ஆனா போட்டி துவங்கும் இடம் நமக்கு கண்ணுக்கு தெரியாது. ஆனா 3 பெரிய 70 mm ஸ்கிரீன் இருக்கும். அங்கே எல்லா குதிரையும் போன பின்ன ஒரு கூண்டு மாதிரி இருக்கும். அதிலே அடைத்து மூடிவிட்டு சரியான நேரத்திலே திறந்து விட்டா செம ஓட்டம் தான்!

நம்ம கிட்ட குதிரை 1 நிமிஷத்துல வந்துடும். மண் தரையா இருந்தா புழுதி பறக்கும். ஜெயிச்சவனுக்கு பரிசா 1 லட்சம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை பரிசு.

சரி 6.45க்கு ஆரம்பிச்ச குதிரை பந்தயம் 6.46க்கு முடிஞ்சுதா? மீதி அரை மணி நேரம் என்ன செய்வது என கவலை வேண்டாம். ஃபேஷன் ஷோ இருக்கு, மேஜிக் இருக்கு, இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான். அதை எல்லாம் விட பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம்.


இரவு 10.45க்கு முடியும் அந்த பந்தயத்துக்கு பின்ன 11 மணிக்கு இலவச பரிசு கூப்பன் முடிவு வரும் மைக்கிலே. பின்ன ஒவ்வொறு பரிசா வரும். நாம இப்ப அபீட் ஆகலைன்னா வண்டிக்கு 1 மணி நேரம் கியூவிலே நிக்கனும் அப்பீட் ஆகுவுமா?

March 6, 2009

ஆ.வியில் வந்த இந்த பாவி:-)) (மீண்டும்)

எங்க ஊர் பக்கம் ஒரு பழக்கம் உண்டு. இந்த கும்மி, கோலாட்டம் எல்லாம் இருக்கே சும்மா ஆடிட முடியாது. கும்மி கோலாட்டம் எல்லாம் ஆட நல்ல டைமிங் சென்ஸ் கொண்ட, அந்த நளினம் தெரிந்த பெரிய பெரிய ஜாம்பவிங்களால் மட்டுமே முட்டியும். இதுல பாடிகிட்டே வேற ஆடனும்.

பெரிய பில்டிங் கட்டும் போது சர்வேயர் வேலை இருக்கே அது ரொம்ப முக்கியம். அந்த சர்வேயர் பாயிண்ட் எடுத்து கொடுத்த பின்னே அந்த பாயிண்ட்டை மையமா வச்சுகிட்டு தான் அந்த வேலையே நடக்கும். அது போல கும்மி, கோலாட்டத்துக்கும் நடுவே ஒரு சின்ன ஆம்பள பையனை கூட்டி "நீ தான் இன்னிக்கு புள்ளயாராம்"ன்னு (அதாவது செண்டர் பாயிண்ட்) சொல்லி நடுவே அவனை குத்தவச்சு அவனை சுற்றியும் கோலாட்டம் தான்.

இதுல டைமிங் தப்பாச்சுன்னா புள்ளையார் மண்டை பணால். கிட்ட தட்ட தலைமேல ஆப்பிள் வச்சு சுடுவது மாதிரி.

அப்படித்தான் நம்ம ஆனந்த விகடன் - சக்தி 2009 மகளிர் தின சிறப்பு மலரில் எனக்கு அந்த பொன்னான வாய்ப்பை அதாங்க செண்டர் பாயிண்ட் புள்ளயார் வாய்ப்பை விகடன் கொடுத்தது

அது போல கும்மி, கோலாட்ட ஜாம்பவிகள்,உஷாஅண்ணி,ஷைலஜா, பிரண்ட் ராமலெஷ்மி(இவங்க தான பாடிகிட்டே ஆடினது, அதாவது கவிதையும்கட்டுரையும்),புதுகை தென்றல்(தலைப்பு மாதிரியே போட்டோவிலும் சிரிப்பு),மதுமிதா ஷக்திபிரபா, தங்கச்சி ரம்யா ,
கவிநயா ,சகோதரி சந்தனமுல்லை , லெஷ்மி(இந்த எழுத்த எங்கயோ முற்றத்தில் உட்காந்து படிச்ச மாதிரி இருக்கே), பொன்ஸ்(ஹாங் இது அப்பளம் சுடுவது எப்படி மொக்கை புகழ் பொன்ஸ் அக்கா) ஆகியோர்.

எல்லா இந்த ஜாம்பவிகள் என்னும் மலர்களுக்கு மத்தியில் இந்த அபிஅப்பா என்னும் நார் கூட வாசம் பெற்றது. ஆனந்த விகடனுக்கு நன்றி!

முகப்புக்கு இங்க வாங்க!

March 4, 2009

கலைஞரின் ராஜதந்திரம்!! தொகுதி பங்கீடு! தே.வ.ஆ.ஓ. வந்தேன் பாகம் #2


நான் நேத்து எழுதிய பாகம் #1 படிச்சுட்டு எனக்கு பலபேர் தனி மடலிலும், "not to publish" என பின்னூட்டம் போட்டும், தொலை பேசியும், நேரிலும், தனிப்பட்ட தூதுவர்கள் மூலமாகவும்"என்ன அபிஅப்பா திடீர்ன்னு ரிசல்ட் வரை போயிட்டீங்க, அதுக்கு முன்ன தொகுதி பங்கீடு பத்தியெல்லாம் சொல்லலையா? " ........இப்படியெல்லாம் சொல்லாத காரணத்தால் வேற வழியே இல்லாம நானே எழுத வேண்டியதா போச்சு!
****************************
தலைமை கழக அறிவிப்பு நாள்: ஏப்ரல் 8, இடம் அறிவாலயம்:


கலைஞர்: நாம் இப்போ கூடியிருப்பது எனக்கு நம் பொதுக்குழுவும் , செயற்குழுவும் எடுத்த முடிவின் படித்தான். உங்க எல்லோரும்தான் நம்ம கூட்டணியை முடிவு பண்ண போகும் என் உடன்பிறப்புகள்! நீங்க என்ன முடிவெடுத்தாலும் நான் ஒத்துப்பேன்! ஆனா இருதி முடிவு எல்லா குழுவும் எனக்கு தான் என சொல்லியிருக்காங்க அதை நியாபகம் வச்சுகுங்க!


ஆற்காடு: தலைவரே! நாம தே.மு.தி.க வை கூட்டணியிலே சேர்த்துக்கலாம்

!
கலைஞர்: ஏன் அப்படி சொல்றீங்க! எதாவது சிறப்பு காரணம் இருக்கா?


ஆற்காடு: ஆமாம் தலைவரே! முள்லை முள்லாலத்தான் எடுக்கனும்.


கலைஞர்: எனக்கு புரியலை, தவிர செயற்குழு, பொதுக்குழு முடிவு பண்ண மாதிரி யாருக்கும் புரியலை!


பொன்முடி: ஆமாம் ஆமாம் தலைவர் வாழ்க!
(அப்போது தலைவர் வாய்வு தொல்லையால் அவதி பட்டதை கூட சண்முகநாதன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு குறிப்பெடுக்க விவாதம் தொடர்கின்றது)


ஆற்காடு: தலைவா! நான் தே.மு.தி.கவை சேர்த்துக்க சொன்னது கூட உங்க பாணியிலே சொன்ன மாதிரி முள்லை முள்லால் எடுக்கும் தந்திரம் தான். இப்ப விசயகாந்து என்ன பண்ணுறாரு? தனக்கு பிடிக்காத டைரக்டரை வச்சு படம் எடுப்பாரு, சில சமயம் அந்த டைரக்டர் ஏடுகுண்டலவாடா திருப்பதிசாமிகிட்டயே போய் சேர்ந்துடுவாங்க சில பேர் பேரரசுவா இருந்தாகூட பிச்சை காரனா ஆகிடுவாங்க! அவர் தன் எதிரி எல்லாரையும் அப்படித்தான் பழி வாங்குவார்! அதனால நாமும் இப்ப இருக்கிற இருட்டுல ஸாரி மூடுல அவரை சேர்த்து அவரை பழி வாங்கிடலாம்! என்ன சொல்றீங்க?


கலைஞர்: அதுல உங்களுக்கு என்ன சந்தோஷம்


ஆற்காடு: ஆமா தலைவா! நாயுடுன்னா நான் தான்! கோவையிலே கேட்டு பாருங்க! இதுல யாரு இவர் குறுக்க வர?


கலைஞர்: நான் சாதிக்கு அப்பாற்பட்டவன்! அடுத்து சொல்லுங்க!


கனிமொழி: அய்யா! நாம ஏன் சரத்குமாரை சேர்த்துக்க கூடாது?


ஆற்காடு: ரிஜக்டட்!


தலைவர்: இல்லை ஆற்காடு! இதை நீங்க சொல்ல கூடாது! நான் தான் சொல்லுவேன், ய்ம்மாடி அதான் பூங்கோதை என்னும் கோதைக்கு நான் ஆஸ்பத்திரியிலே இருந்தபோதும் கொடுத்து தொலைச்சாச்சே! சும்மா கிட!


பொன்முடி: அய்யா நான் ஒன்னு சொல்லவா?


தலைவர்: வேண்டாம்! ஆதிசங்கர் ..கூ..பிடுங்கய்யா டாக்டரை முதுகுவலிக்குது!


கோசி.மணி: தலைவா! நான் ஒன்னு சொல்லவா?


தலைவர்: இல்ல! தஞ்சையை உன் தொல்லைக்காகவே காங்கிரஸ் இல்ல வேற எதுனா பிச்சை காரன் வந்தா கூட போட்டுடலாம்ன்னு இருக்கேன்.


தயாநிதி: தாத்தா! வாசல்ல வேட்டிய கிழிச்சுகிட்டு மணிசங்கர் அய்யர் நிக்கிறார்!


தலைவர்: அப்படியா!இப்பல்லாம் கிழிஞ்ச வேட்டிய விட ஆம்லெட் வேட்டிதானே பேமஸ்! சரி கூப்பிடு


மணி சங்கர் அய்யர்: வணக்கம் அய்யா!
தலைவர்: அய்யோ விபச்சாரம் ஸாரி அபச்சாரம்! நீங்க என்ன வெள்ளை வேட்டில வந்துட்டீங்க முட்டை அடிச்ச மஞ்ச வேட்டி தான் உத்தமம் நேக்கு!ஆனா உங்க தைரியம் நேக்கு பிடிச்சுடுத்து நோக்குதான் மாயவரம்!


வெளியே வந்த அய்யர் : நேக்கு பங்கீட்டிலே பரம திருப்தி! எல்லாம் ஷேமமா நடக்கும் பாருங்கோ"இது நிருபர்களிடம்!


தயாநிதி: தாத்தா! நான் என்ன பண்ணட்டும், மத்திய சென்னையை?


தலைவர்: பிளாஷ் நியூஸ் போடு உன் டிவில!


சன் பிளாஷ் நியூஸ்:::: நடை பெற போகும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தேர்தலில் தயாநிதி மாறன் அவர்கள் 29 லட்சத்து 69 ஆயிரத்து நூத்து 21 வாக்குகள் வித்யாசத்தில் ஜெயித்தார்...........

.
தலைவர்: தம்பி! உன் ஆர்வம் புரியுது! ஆனா அந்த தொகுதியில் எத்தனை பேர்ன்னு தெரியுமா உனக்கு! உன் சன் டிவில இருக்கும் ஆள் எல்லாமே அப்படித்தானா? வராத படத்துக்கு அதாவது படிக்காதவன், தீ எல்லாத்துக்கும் கூட "வெற்றி நடை போடும்"அப்படின்னு சொன்ன மாதிரி சொல்லுறியே? இது அடுக்குமா? அங்க பாரு "கலைஞர் டிவில நீ வெறும் 9 லட்சத்து 999 ஆயிரம் ஓட்டுல தான் ஜெயிச்சு இருக்கே'ன்னு பிளாஷ் நியூஸ்ல வருது மனசுல வச்சுக்க"


தயாநிதி: தாத்தான்னா தாத்தாதான் பாட்டின்னா பாட்டிதான்


அழகிரி: அப்பா எப்பவும் சென்னை தானா என் பக்கம் திரும்புங்க! வாசல்ல திருமா வேற நிக்கிறார்!


தலைவர்: அப்படியா உடனே கூப்பிடு!


திருமா: அய்யா வணக்கம்!


தலைவர்: வாப்பா வா! என்னது நடந்து நடந்து கால் வலிக்குதா? என் மடி மீது உன் காலை வச்சிக்கோ!


திருமா தேம்பி தேம்பி அழுகிறார்!


தலைவர்: அழுவாதே தம்பி! நானும் திருசெந்தூர் வரை நடந்தேன் ஆனா வைர வேல் கிடைக்கலை, ஆனா அதைவிட ஒரு பிளாட்டின வேல் கிடைச்சுது. எப்பவும் உன் பக்கத்திலே உட்காந்து இருக்குமே அனைத்து கட்சி கூட்டத்தில் அந்த பிளாட்டினம் தான். சரி அதை விடு! அவருக்கு சொன்னது தான் உனக்கும்!உனக்கு என் இதயத்திலே எப்பவும் இடம் உண்டு!


திருமா: அய்யோ அய்யா! அப்படி எனக்கு உங்க இடத்திலே எல்லாம் இடம் வேண்டாம்! எனக்கு என் தலித் மக்களுக்கு பாராளுமன்றத்துல இடம் வேண்டும்!


தலைவர்: ஆமாம் நானும் அது பத்தி தான் யோசிச்சுகிட்டு இருந்தேன்! உன் கட்சிக்கு விடுதலை சிறுத்தைக்கு ஒரு சீட் கண்டிப்பா உண்டு!


திருமா: நன்றி அய்யா!


தலைவர்: உனக்கு பெரம்பலூர் தொகுதியை தரலாம்ன்னு இருக்கேன்!


திருமா: அய்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ நன்றி அய்யா நன்றி!


தலைவர்: நன்றி இப்ப சொல்லாதே தம்பி! சில நிபந்தனை இருக்கு!


திருமா: தெரியுமே அய்யா! என் கட்சிதான் அங்கீகாரம் பெறலையே! அதனால உதயசூரியன் சின்னம் தானே! ஒத்துக்கறேன்!


தலைவர்: நீ புத்திசாலி! உன்னை இப்ப அதிபுத்திசாலியா ஆக்கவா தம்பி!


திருமா: அய்யா அப்படியே ஆகட்டும் ("குனிந்து" வணங்குகிறார்)


தலைவர்: தம்பி திருமா! உன் கட்சி வேட்பாளர் பெயர் ஆ.ராசா! அவரை இன்று முதல் ஒரு மண்டலம் உன் கட்சிக்கு தாரை வார்த்து கொடுக்கிரேன் தம்பி!!!!!!!!


ஆற்காடு: தலைவா! இவர் மயக்கம் போட்டது பத்தி கவலை படாதீங்க, அடுத்து முஸ்லீம் முன்னேற்ற கழகமும், தமிழநாடு தவ்கீத் ஜமாத்தும் வந்திருக்காங்க! வர சொல்லவா???

தொடரும்....................

March 3, 2009

தேர்தல் வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்! பாகம் 1


ஏப்ரல் 13 : பிரனாப் முகர்ஜி சென்னை வருகை, அவர் கூட கலைஞர், தயாநிதி இருக்கும் போட்டோ


ஏபரல் 14: திமுக 18 தொகுதி, காங்கிரஸ் 18 தொகுதி, வி.சி 1(அதிலே , மு.மு.க , த.முக கூட்டாக ஒரு தொகுதி (அதில் ரெண்டு பேருக்கும் சண்டை வந்ததால் அவர்கள் கட்சி சார்பாக தி.மு.க வேட்பாளர் தான் நிற்கிறார் அது நாகூர் அனீபா), மீதி இருக்கும் 2 தொகுதியும் வ. கம்யூனிஸ்ட் சார்பாக 1ம், இ.கம்யூனிஸ்ட் சார்பாக 1ம் திமுகவே எடுத்து கொள்கின்றது. ஆனா அப்ப பேச்சு வார்த்தைக்கு வந்த குலாம் நபி ஆசாத்துக்கு அவங்க கூட்டனியில் இல்லாதது தெரியலை ! பாண்டியை காங்கிரசுக்கு தாராளமாக காங்கிரசுக்கு தானம் போட்டது திமுக!

ஏபரல் 15: "எனக்கு மனசுக்கு திருப்தி அளிக்கும் தொகுதி பங்கீடு - தங்கபாலு பேட்டி(அவருக்கு சேலம் ஓக்கே ஆகிடுச்சு) அன்று இரவே பொடியன் சஞ்சய் " வாழ்ந்தது தமிழகம் வீழ்ந்தது தமிழீழம்"ன்னு ஒரு போஸ்ட் போட்டு அன்பர்கள் இரண்டு பேரும் அனானி நண்பர்கள் 98 பேரும் கமெண்ட் போட்டு 100 அடிச்சார்!


ஏபரல் 17: ஜெயலலிதா 534 தொகுதிகளிள் போட்டி! எல்லா இந்திய பத்திரிகையும் தலைப்பு செய்தி!
"இது ஒரு கின்னஸ் சாதனை! ஹிந்து பெருமிதம்.
"இப்ப என்னா செய்வீங்க இப்ப என்னா செய்வீங்க: - டுபாக்கூர் மன்னன் பதிவு! எப்போதும் போல 2 பின்னூட்டம். ஆனா பதிவு செம சூடுன்னு டென்கனிகோட்டை ராமசாமியும், கட்டாணிப்பட்டி பெரிய கருப்பனும் டீக்கடையில் அலசல்!


ஏப்ரல் 19" சோ ராமசாமி ஜெ சந்திப்பு! "ஏப்ரல் 1ம் தேதி மட்டும் தான் காலிலே கோழிப்பீன்னு நாம ஏமாத்தி ஏமாத்தி விளையாடனும், இப்ப இல்ல" என கண்டிப்பு!


ஏப்ரல்20: ஜெ எல்லா தொகுதியிலும் வாபஸ்!
"இதுவும் கின்னஸ் சாதனையே" - தி ஹிந்து!
"இப்ப என்ன செய்வீங்க இப்ப என்ன செய்வீங்க" - டுபாக்கூர் மீள் பதிவு!


ஏப்ரல் 21: "தமிழீழம் மலர செய்வோம், திரும்பவும் காந்தி அஸ்தி குடுவை முதல் ராஜீவ் அஸ்தி குடுவை வரை ராமபிரானின் அக்னி அம்பெய்து சிதரடிப்போம்" அத்வானி சூளுரை!
வலைப்பதிவு ஸ்தம்பித்தது. "இல. கணேசன் தான் உண்மை தமிழன்! இனி அவர் மட்டுமே பெரிய பதிவு எழுதலாம்"- குசும்பனின் அரசியல் பதிவு! ஹிட் 1234! பின்னூட்டம் 525!


ஏபரல் 22: ஜெ அதிக தொகுதிகளை பாசகாவுக்கு ஒதுக்கினார். பாசகவுக்கு ஒதுக்கிய தொகுதியில் பாமகவும் தொத்தி கொண்டது. அதாவது பாசக வுக்கு ஒதுக்கிய ஒரே தொகுதியில் ஜெயித்தால் 1 வருடம் பாசகவும் அடுத்தவருடம் அவர் ராஜினாமா செய்து பாமகவும் அப்படியாக பாண்டி பார்முலா இங்கயும் கடைபிடிக்கபடும் என ராமதாஸ் அறிவிப்பு!


மே9: ஆபிச்சுவரியில் ஒரு விளம்பரம் " எனது மகன் கோவில் பட்டி காத்தமுத்து ஈழதமிழருக்காக தீக்குளித்தான் என்பதை வருத்தமுடன் தெரிவித்து கொள்கின்றேன்"( கோவிக்க வேண்டாம் இதான் உண்மை, அந்த நேர்த்தில் அவன் அப்பா காசு கொடுத்து ஆபிச்சுவரில போட்டாதான் உண்டு, அப்ப எந்த பத்திரிகைகாரனும் கண்டுக்க மாட்டான்)


மே10: "திருமங்கலம் திரும்பி வருமா?" பதிவர்கள் கேள்வி!
"பிரியானி செய்வது எப்படி? - பெண் பதிவர்கள் பதிவு!
"5000 ரூபா நோட்டு" பினாத்தலார் பதிவு!
"மாமா பிஸ்கோத்து" இது அழகிரி பிலிம்ஸ் உதய நிதி ஸ்டாலின் புதிய படம்.!


மே 13 : ஒரு துக்க தினம்! இப்படி சொன்னது வைக்கோ(இது வரை சீன்லயே வரலை பாவம் இவருக்கும் ஒரு ரோல்)


மே16: ரிசல்ட்! ஜெயா டிவியில் ரவி பெர்னார்ட் லைவ் ரிலே! காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை ஆரம்பம். ஆனால் காலை 5 மணிக்கு ரவிபெர்னார்ட் "வாழ்க அம்மா புகழ், சற்று நேரம் முன்பு ஒபாமா தொலை பேசியில் அம்மாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் ....." அப்படின்னு சொல்லிகிட்டு இருக்க குசும்பன் போன்ற காமடி பதிவர்கள் தமிழ்மணத்துக்கு கடிதம் எழுதுகின்றனர்" அய்யா தாங்கள் எனக்கு கொடுத்த விருதை......

March 1, 2009

மூக்கணாங்கயிறு!!!

ஒரு நவம்பர் 9 ம் தேதி எனக்கு நிச்சயதார்த்தம் ஆனது. அதன் பின்னே ஒரு நாலு நாள் கழிச்சு வருங்கால மனைவிடம் இருந்து போன் . எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமாக கூட இருந்தது.

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்" என சொன்னாய்.

"ஓ உனக்கா, வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நான் மறந்தே போயிட்டேன் உனக்கு இன்னிக்கு பிறந்த நாளா?"

"இல்லீங்க எனக்கு மார்ச் 2 தான். இன்னிக்கு உங்களுக்கு தான் பிறந்த நாள்"

எனக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. ஓடிப்போய் அம்மாவிடம் கேட்டேன். "அம்மா எனக்கு நவம்பர் 13 பிறந்த நாளாமே நீ ஏன் சொல்லலை?"

அம்மா நிதானமா சொன்னுச்சு "யார் சொன்னது"

"என் வருங்கால பொண்டாட்டி"

"அதுக்குள்ள பொண்டாட்டி பேச்சை கேட்க ஆரம்பிச்சுட்டியா? உனக்கு ஐப்பசி 27 அன்னிக்குதான்"

ஓடிப்போய் உனக்கு போன் செஞ்சேன்.

"அல்லோ நான் அம்மா பிள்ளையாக்கும் எனக்கு ஐப்பசி 27 தான் பிறந்த நாள், அம்மா சொன்னாங்க"

"அப்ப நானெல்லாம் பாட்டி பிள்ளையா? நிதானமா யோசிங்க. உணர்வு பூர்வமா சிந்திக்காதீங்க. உங்க அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும் ஐப்பசி 27 தான் போல. படபடப்பா இருக்காதீங்க.நான் இன்னும் 1 மணி நேரம் கழிச்சு போன் பண்றேன்"

கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பின்னே காலண்டர் பார்த்தபோது தெரிந்தது. அன்று நவம்பர் 13 , ஐப்பசி 27 ச்சே...அம்மா கூட என்னை ஏமாத்திடுச்சே.. ஓடி வந்து அம்மாகிட்ட கேட்டேன்.

"அம்மா இன்னிக்கு தான் நவ 13, இன்னிக்கு தான் ஐப்பசி 27 பின்ன ஏன் அது தெரிஞ்சும் எனக்கு பிறந்த நாள்னு சொல்லலை"

"காலையிலே என்ன சாப்பிட்ட?"

"ம்ம் கேசரி"

"எதுக்கு கேசரின்னு கேட்டியா?"

"இல்ல"

"சாப்பிட்டு என்ன சொன்ன?"

"நல்லா இல்லன்னு சொன்னேன். ஸ்வீட் அதிகமா இருந்துச்சு தெகட்டிச்சு அதான் அப்படி சொன்னேன்"

"ஆக தப்பு மட்டும் தான் உன் கண்ணுக்கு தெரியுது. அதன் பின்னே இருந்த என் ஆசை உனக்கு புரியலை இல்லியா?"

என் பிடறியில் அடித்து கொண்டேன்.

"அட ஆமாம்மா, இரு ஒரு போன் பண்ணிட்டு வரேன்"

போன் பண்ணும் போது முன்பு போல அத்தனை படபடப்பு இல்லை. என்ன பேச வேண்டும் உன்னிடம் என தெளிவா இருந்துச்சு மனசு.

"ஹலோ"

"ம் சொல்லுங்க அதான் நானே 1 மணி நேரத்திலே போன் பண்றேன்னு சொன்னனே"

"இல்ல ஸாரி"

"எதுக்கு"

"ஐப்பசி 27 ம் நவம்பர் 13ம் இன்னிக்கு தான், அம்மா சொன்னாங்க"

"அம்மா சொல்லலை, சொல்லியிருக்க மாட்டாங்க, நீங்களா காலண்டரை பார்த்து தெரிஞ்சுகிட்டு அம்மா கிட்ட ஓடி போய் கேட்டிருப்பீங்க, அவங்க கேசரி கதை சொல்லியிருப்பாங்க"

"அட ஆமாம். என் வீட்டு நிகழ்சி லைவ் டெலிகாஸ்ட் ஆகுதா என்ன டிவில?"

"ஹஹ்ஹா, இல்ல காலையிலே உங்களுக்கு வாழ்த்து சொல்ல போன் பண்ணினேன். அம்மா தான் எடுத்தாங்க, கேசரி கதை எல்லாம் சொன்னாங்க, உங்க பிறந்த நாளே உங்களுக்கு தெரியலை ஒரு பிடிமானமே இல்லாம மூக்கணாங்கயிறு இல்லா காளை மாதிரி ஓடிகிட்டு இருக்கீங்கன்னு வருத்த பட்டாங்க, அப்ப நான் கேட்டேன் 'ஏன் நீங்க சொல்லவேண்டியது தானே இன்னிக்கு பிறந்த நாள்ன்னு'ன்னு கேட்டப்ப அம்மா அதுக்கு 'இல்ல அவன் தானா கண்டுபிடிச்சாதான் இனி மறக்க மாட்டான்"ன்னு சொன்னாங்க"

"ஓ இத்தனை நடந்திருக்கா"

"ஆமாம் நமக்கு தெரிஞ்சவங்க ரொம்ப நெருங்கினவங்க பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி பழகுங்க, அப்ப அவங்க சந்தோஷத்தை பாருங்க, பகிர்ந்துப்பது ஒரு நல்ல பழக்கம், சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டா அது ரெட்டிப்பாகும். துக்கத்தை பகிர்ந்துகிட்டா அது பாதியா குறையும்"

"ஆமா இது யார் சொன்னாங்க"

"ம் யாரோ சொன்னாங்க"

"பரவாயில்லை யார் சொன்னா என்ன நல்லாத்தான் இருக்கு சொன்ன விஷயம். இனிமே உன் பிறந்த நாளுக்கு நான் முதல் வாழ்த்தா சொல்லிடறேன் ஆமா உன் பிறந்த நாள் என்னிக்கு?"

"பிப்ரவரி 30"

"அப்ப சரி.......என்னது என்னது பிப்ரவரி 30 ஆ? என்ன கிண்டலா”

“கிண்டல்னு தெரியுதுல்ல அப்ப இந்த கதையின் ஆரம்பம் முதல் படிங்க எனக்கு எப்ப பிறந்த நாள்னு தெரியும்"

******************

நான் இன்றைக்கு போன் பண்ணினேன்!

"ஹல்லோ, அபிஎப்படி இருக்கா, தம்பி என்ன பண்றான்"

"நல்லா இருக்காங்க, ஆமா நான் எப்படி இருக்கேன்னு கேட்டா குறைஞ்சா போயிடும்"

"அட போன்ல காசு கம்மியா இருக்கு, அதல்லாம் கேட்டு காசு வேஸ்ட் பண்ணனுமா?"

"சரி போகட்டும், மார்ச் மாசம் என்ன விஷேஷம்"

"டாக்ஸ் கட்டனும்"

"தலையில கொட்டனும். சரி அது மார்ச் கடைசில இல்ல முதல் வீக்ல என்ன விஷேஷம்"

"பிப்ரவரி மாச சம்பளம் வாங்கனும்"

"அய்யோ இன்னும் ஒரு க்ளூ தரேன்! மார்ச் முதல் வாரத்திலே யாருக்கு பிறந்த நாள்?"

"அட இப்படி வெளிப்படையா கேட்க வேண்டியது தானே"

"சரி சொல்லுங்க""நான் கோவிலுக்கு போனேன் தெரிய்யுமா? ஆபீஸ்ல பெப்சியும் சாண்விச்சும் அய்யா ட்ரீட்"

"ரொம்ப தேங்ஸ், எங்க நீங்க எப்போதும் போல மறந்துடுவீங்களோன்னு நெனச்சேன்"

"ச்சே எப்படி மறப்பேன், 57 வயசாச்சுன்னா இன்னும் நம்பவே முடியலை. இன்னும் இளமை"

"என்ன குழப்பறீங்க எனக்கு 57 வயசா ஆச்சு? ரொம்ப தான் கிண்டல்"

"உனக்கு இல்ல எங்க தளபதிக்கு மார்ச் 1 பிறந்த நாள் அதான் இந்த ட்ரீட் எல்லாம் நீ வேற யாருக்குன்னு நெனச்சுகிட்டே"

போன் டொக்குன்னு வைக்கும் சத்தம் கேட்டுச்சு:-)))))))))))))))))))))

TEST

TEST