பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label குதிரை. Show all posts
Showing posts with label குதிரை. Show all posts

March 11, 2009

துபாய் குதிரை பந்தயம் - ஒரு பார்வை!!!

இந்த போட்டோவை எல்லாம் எடுத்த நம்ம மகாராசன் என் தம்பி தினேஷ்!(இம்சை அரசி ஜெயந்தியின் கூட பிறந்த என் கூட பிறக்காத தம்பி)
இது ரேஸ்க்கு முன்ன அந்த கைடு குதிரை ஆரம்ப இடத்துக்கு அழைத்து போகும் காட்சி!




இது தான் குதிரை எல்லாம் ரேஸ்க்கு முன்ன ரெஸ்ட் எடுக்கும் இடம்!



இது தான் ரேஸ்க்கு முன்ன பரிசு கோப்பை வச்சிருக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் சுத்தி வரும் புல் இடம்!



இடைப்பட்ட நேரத்தில் ஒரு ஆங்கிலேயர் நடத்தும் மேஜிக் நிகழ்சியும் அதை சுற்றியும் இருக்கும் குழந்தைகளும்



கமான் கமான் என கத்தும் ஒரு நாதாறி:-))(ஆனா அவன் எழுதி போட்ட ஒரு நாயும் ஜெயிக்கலை என்பது உபரி செய்தி)

இது தான் அந்த கைடு குதிரை மத்த குதிரையை அழைத்து வரும் காட்சி!



எல்லாம் தட்டாமாலை சுத்துது! இங்க தான் உள்ளங்கால் பிடிச்சி ஓனர் ஜாக்கியை தூக்கி விடுவார்!



இடைப்பட்ட நேரத்தில் சீட்டு ஆட்டம்!


இரண்டாம் பந்தயத்தில் ஜெயித்த குதிரை! என்ன ஒரு ஜம்பம்? ங்கொய்யால என் குதிரையை தோக்க அடிச்சிட்டல்ல! நீ மட்டுமா 12 குதிரையில் 11 அப்படி தான் செஞ்சுது, ஹும்!!!


என் பரிட்சைக்கு கூட இப்படி படிச்சது இல்லைப்பா!



சரி போனா போவுது வெற்றி எனதே! ஜெயிச்சது எல்லாம் நானே!



\





இது தான் அந்த "ஷேக் முக்டம் கிராண்ட் ஸ்டாண்ட்"
**************************************************


நான் 1987 ல் சென்னையில் சில மாதம் இருந்த போது எல்லாம் கிண்டி பாலத்தில் ஞாயிறு பகல் பொழுதுகளில் கையிலே ஏதோ பாட்டு புத்தகம் மாதிரி வைத்து கொண்டு எதிரே நமீதா நடந்து வந்தா கூட தெரியாத மாதிரி சில ஆசாமிகள் போய் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் இருந்து அந்த புத்தகத்தை தவிர அவர் அரைஞான் கயிறு முதல் கொண்டு யாரும் லவட்டி விடலாம். குதிரை ரேஸ்க்கு போறாராமா! அதுல ஒரு கொடுமை என்னன்னா கிண்டில குதிரை ஓடாதாம். பெங்களூர்ல ஓடும் குதிரைக்கு இங்க பணம் கட்டி லைவ் ரிலே கேட்டு "கமான் கமான்"ன்னு கத்திகிட்டு ச்சே எனக்கு சுத்தமா அதல்லாம் பிடிக்காது.

பாருங்க விதியை நான் இப்போ வேலை பார்ப்பதே உலகின் மிக பெரிய குதிரை பந்தய மைதான கட்டுமான பணி தான். கிட்ட தட்ட அமீரகத்தின் மிக பெரிய பிராஜக்ட். அந்த இடத்துக்கு பக்கத்திலே தான் ஆசியாவின் மிக பெரிய மைதானமும் இருக்கின்றது. அதிலே இப்போ உலக அளவிலான பந்தயம் இப்போது 2 மாதத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றது. எனக்கு அத்தனை இஷ்டமில்லாமல் தான் இருந்தது. ஆனாலும் போய் தான் பார்போமே என போனேன்.


வாரா வாரம் வியாழன், வெள்ளி தான் பந்தயம். மொத்தம் 48 நாடுகள் கலந்து கொள்கின்றன. கலந்து கொள்ளும் குதிரைகளில் பாதிக்கும் மேலாக இந்த நாட்டு ராஜாக்கள் குதிரையும், அவங்க பசங்க குதிரைகளும் தான். மொத்தம் 8 பந்தயம். முதல் பந்தயம் சரியாக அதாவது மிக சரியாக இரவு 7.15 க்கு ஆரம்பம். ஒரு பந்தயத்துக்கும் அடுத்த பந்தயத்துக்கும் இடையே 30 நிமிஷம் இடைவேளை.


6 மணிக்கே பார்வையாளர்கள் அனுமதி. யார் காரில் வந்தாலும் அதுக்குன்னு இருக்கும் பார்கிங்ல போட்டுட்டு வரிசயிலே நின்னு அவங்க மினி பஸ்ல தான் அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் "ஷேக் முக்டம் மில்லீனியம் கிராண்ட் ஸ்டேண்டு"க்கு கூட்டி போவாங்க. மிக அழகான உகாண்டா நாட்டு கருத்த பையன்கள் செக்யூரிட்டியால மிக அழகா வரிசையா எல்லாரும் உள்ளே போனோம். நுழைவாயிலிலே இலவச குலுக்கல் கார் (ஃபோர்டு கார்) பரிசுக்கான கூப்பன், பின்னே நம்ம IAS பரிட்சை மாதிரி ஒரு கம்பியூட்டர் கேள்விதாள், பின்னே ஒரு 8 பக்க புக்லெட், அதிலே எத்தனை பந்தயம், எந்த எந்த மணியில் ஆரம்பம், குதிரை பேர் என்ன, ஜாக்கி பேர் என்ன, ஓனர் பேர் என்ன, ஜாக்கி வெயிட் என்ன, குதிரை வயசு என்ன, குதிரை நாடு எது, அதன் அப்பா யாரு அம்மா யாரு, எத்தனை சுழி, இதுக்கு முன்ன ஜெயிச்ச வரலாறு, அதன் பேரு எல்லா கந்தாயமும் இருக்கு.
முதல் பந்தயம் இந்த இலவசகாரர்களுக்கு இல்லை. எல்லாம் கிளப் மெம்பர்களுக்கு. கிளப் மெம்பர்ன்னா ஏ.சி. முத்தையா, விஜய் மல்லையா போன்ற சிலரே இந்தியர்கள்!
ஒரு பந்தயத்துக்கு சராசரியா 10 குதிரைகள். அதிகமா 14 குதிரை, குறைவா 6 குதிரை.

நமக்கு கொடுத்த அந்த IAS கேள்வி தாளில் நாம சுழிக்கனும் எந்த பந்தயத்தில் எது முதல்ல வரணும் என்று. அதை முடித்து ஒரு டப்பாவில் போடனும். அது எல்லாம் கம்பியூட்டர்ல ஃபீட் செய்யப்படும்.

குதிரைக்கு எல்லாம் மாலை 5 க்கே வந்துடும் கிரவுண்டுக்கு. அதுக்கு ஒரு இடம் இருக்கு. அதிலே அந்த குதிரை ரெஸ்ட் எடுக்கும். அது வருவதே சூப்பரான ஏ.சி கோச் கேரவன்ல! கேரவன் - குதிரை எல்லாம் வச்சி நீங்க எதுனா நினைச்சா நான் பொறுப்பு இல்லை. இந்த குதிரை எல்லாம் டிரஸ் இல்லாமத்தான் இருக்கும். ஜெயிச்சா ஒரு போர்வை போத்துவாங்க அத்தனையே

டிரஸ் தான் இல்லியே த்விர எல்லா குதிரைக்கும் 4 பேர் தனி தனியா முடி வெட்ட, சடை பின்ன, அதன் முதுகில் டிசைன் டிசைனா டைமன், ஆட்டின், ரோஜாப்பூ, இப்படி டிசைன் பண்ண, ஆயில் மசாஜ் பண்ண இப்படி ராஜ போக வாழ்க்கை. எல்லாம் 6 அடி உயரம் இருக்கு.

சரி வந்தாச்சா இதான் அந்த கிரவுண்ட்! முதல்ல DIRT என்னும் புல் தரை ட்ராக், அதை அடுத்து TURF என்னும் புல் தரை. அதுக்கு அடுத்து ஒரு தார் ரோடு. அதிலே இரு ஜீப்பிலே மூவி கேமிராவை கிரேனில் கட்டிய ஜீப், அதுக்கு முன்னும் பின்னுமாக 2 ஆம்புலன்ஸ்.


மேட்ச் தூரம்ன்னு பார்த்தா 1200 மீட்டர், 1600 மீட்டர் இப்படியாக அதிக பட்சமாக 2400 மீட்டர். அத்தனையே. இந்த 8 பந்தயத்தில் 5 புள் டிராக் போட்டி. மீதி 3 மண் தரை போட்டி!

மண் தரை போட்டியிலே அதிக குதிரை கிடையாது. சும்மா 7 அல்லது 8 தான்.
குதிரை பேர் எல்லாம் என்ன தெரியுமா? ALMAJIT, BEAVER PATROL, GRANTLY ADAMS, LEAGUE CHAMPION, LEANDROS,NIGHT CROSS, NOTA BENE, PRINCE TAMINO, MISS GORICA, MONTPELLIER, CONFUCHIES, LIPOCCO, CONCEAL எதுனா உங்களுக்கு புரியுதா? சரி விடுங்க! அந்த குதிரைக்கு அந்த பெயர் புரியுமான்னு சோதிக்க miss gorica ன்னு கூவினேன்! ஒரு அரபு பொண்ணு திரும்பி பார்த்தா நான் அப்படியே வாயை நாமக்கல் ஆஞ்சனேயர் மாதிரி வாயை மூடிகிட்டேன்.

ஒரு பந்தயம் ஆரம்பிச்ச உடனே அதாவது 10 நிமிஷம் முன்ன பரிசு கொடுக்கும் இடத்துக்கு எல்லா குதிரையும் வரும் ஆனா அதன் மேல ஜாக்கி இருக்க மாட்டாங்க. அதன் பராமரிப்பாளர் 2 பேர் வதன் கடிவாளத்தை பிடிச்சுகிட்டு அந்த பரிசு கோப்பையை சுத்தி வருவாங்க. கூடவே அதன் ஓனர் வருவார். அவர் குதிரையை தடவி கொடுத்துகிட்டே ஓடிவருவார். அவர் அந்த குதிரைக்கு முத்தம் கொடுப்பதும், அது அவருக்கு முத்தம் கொடுப்பதும் காண கிடைக்காத காட்சி. பின்ன தான் ஜாக்கி ரோல்ஸ்ராய் காரிலே வருவார். ஆனா பாருங்க அந்த ஜாக்கி வெயிட் குறைந்த பட்சம் 40 கிலோ, அதிக பட்சம் 57 தான். எல்லாம் முதுகிலே கார்டு, காலில் கம்பூட்டு, தலையில் ஹெல்மெட் சகிதம் வருவாங்க. அதுல பாருங்க இந்த கோடீஸ்வர ஓனர் தான் இவரின் இடது உள்ளம் காலை தூக்கி விடனும். இவரும் அப்ப ஒரு ஜம்ப். அவர் குதிரை மேல உட்காந்துடுவார்.

பின்ன ஒரு மணி அடிக்கப்படும். பின்ன எல்லா குதிரையையும் ஒரு "கைடு" குதிரை அழைச்சுகிட்டு போகும் போட்டி துவங்கும் இடத்துக்கு. அதாவது நாம் பார்க்கும் கிராண்ட் ஸ்டாண்டு இருக்கே அது போட்டி முடியும் இடம் தான். ஆனா போட்டி துவங்கும் இடம் நமக்கு கண்ணுக்கு தெரியாது. ஆனா 3 பெரிய 70 mm ஸ்கிரீன் இருக்கும். அங்கே எல்லா குதிரையும் போன பின்ன ஒரு கூண்டு மாதிரி இருக்கும். அதிலே அடைத்து மூடிவிட்டு சரியான நேரத்திலே திறந்து விட்டா செம ஓட்டம் தான்!

நம்ம கிட்ட குதிரை 1 நிமிஷத்துல வந்துடும். மண் தரையா இருந்தா புழுதி பறக்கும். ஜெயிச்சவனுக்கு பரிசா 1 லட்சம் டாலர் முதல் 3 லட்சம் டாலர் வரை பரிசு.

சரி 6.45க்கு ஆரம்பிச்ச குதிரை பந்தயம் 6.46க்கு முடிஞ்சுதா? மீதி அரை மணி நேரம் என்ன செய்வது என கவலை வேண்டாம். ஃபேஷன் ஷோ இருக்கு, மேஜிக் இருக்கு, இல்லாட்டி சீட்டுகட்டு எடுத்து போனா சொர்கம் தான். அதை எல்லாம் விட பீர் எடுத்து போன புண்ணியவான் நல்லா குடிச்சுட்டு குதிரை வராத நேர்த்திலும் "கமான் கமான்'ன்னு கத்திகிட்டு இருக்கலாம்.


இரவு 10.45க்கு முடியும் அந்த பந்தயத்துக்கு பின்ன 11 மணிக்கு இலவச பரிசு கூப்பன் முடிவு வரும் மைக்கிலே. பின்ன ஒவ்வொறு பரிசா வரும். நாம இப்ப அபீட் ஆகலைன்னா வண்டிக்கு 1 மணி நேரம் கியூவிலே நிக்கனும் அப்பீட் ஆகுவுமா?