பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label தற்பெருமை. Show all posts
Showing posts with label தற்பெருமை. Show all posts

July 3, 2007

தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி! எட்டு போட்டேன் என் தங்கச்சி!!

என்னய பார்த்து அதுவும் என்னய பார்த்து எட்டு போட சொன்னா நான் என்னான்னு போடுவேன்! குசும்பன்ல ஆரம்பிச்சு தங்கச்சி ஜெயந்தி வரை தரைல உருண்டு உருண்டு அழுதா போடாம இருக்க முடியுமா, அதான் போட்டுடலாம்ன்னு முடிவு செஞ்சுட்டேன்.

1. நானோ தம்பி பொறந்த சந்தோஷத்தில இருக்கேன். அந்த நேரத்துல போன். அமரிக்காவில இருந்து, நம்ம வெட்டிபாலாஜி இல்ல. புஸ்ஸுங்கொ புஸ். ஒடனே கெளம்பி வா, உங்க ஊரு பொண்ணு மாட்டிகிச்சு மானத்துல. நீ வந்து இஸ்துகினு வான்னு. தங்கமணியோ "ஊர் வேலைய செய்யறதே ஒங்களுக்கு பொழப்பா போச்சு சும்மா இருங்க"ன்னு சொல்ல சரி பிளாஸ்க்க கொண்டா எதித்தாப்புல இருக்குற காளியாகுடிக்கு போய் காப்பி வாங்கியாறேன்ன்னு சொல்லிட்டு பிளாஸ்குல காப்பிய நெறப்பிகிட்டு ஜூட்டு வுட்டுட்டேன். அங்கிட்டு போயி நெலமையை நல்லா மனசுல வாங்கிகிட்டு சர்ருன்னு மானத்துக்கு பறந்து அந்த பொம்பளய பார்த்தா பேயடிச்ச மாதிரி இருக்கு. சரின்னு காப்பிய குடுத்து தேத்தி கூட்டிகிட்டு வந்து சேந்தா இறங்கின பின்ன என் கைய புடுச்சிகிட்டு அழுவாச்சி. சரின்னு மீதி காப்பிய எடுத்து கிட்டு தங்கமணி கிட்ட வந்தா செம டோஸு! எதித்த கடைக்கு போக வர இத்தினி நேரமான்னு. டிராபிக் ஜாமுன்னு சொல்லி சமாளிச்சு பெரிய ரோதனையா போச்சு!

இப்பிடித்தான் ஏதாவது ஏடாகூடமா தோனுது 8 போடலாம்ன்னு பார்த்தா. கொத்தனார் என்னடான்னா போவாத கண்டம் இல்ல பறக்காத் ஹெலிகாப்டர் இல்லன்னு சொல்றார். மங்கை என்னான்னா 250 பேருக்கு பயிர்ச்சி மேலும் 250 பேருக்கு அப்டீன்னு சர்ருன்னு பறக்கறாங்க. முத்துலெஷ்மியோ வயலின்ல பின்னி பெடலெடுத்து ஹய்யோ நான் என்னத்த சாதிச்சு கிழிச்சேன்ன்னு நெனச்சி பார்த்தா ஜீரோ தான். சரி முயர்ச்சி பண்றேன்!

நெசமான 1. 1966 நவம்பர் 13 ஞாயித்து கிழமை விசாக நட்சத்திரம், விருச்சிகராசி, துலா லக்னம், லக்கனத்துல சூரியன் புதன் சுக்ரன் கேது எல்லாம் கூட்டனி போட அதுல சுக்ரன் வேற உச்சம், அடுத்து 2ல சந்திரன், 5ல சனி, வேஷ ராகு, கடகத்துல 10ல குரு உச்சம், லாபத்துல செவ்வாய்ன்னு ஜெக ஜோரா நான் பிறந்ததே ஒரு பெருமையான விஷயம் தானே!

2. படிக்கும் காலம் முதலே சரியான வால் பையன். விஷமம் எங்க அம்மாவால தாங்க முடியாத அளவு வால் பையன். அதே நேரம் என் காது தூங்கும் போது கூட கேக்கும். இப்பவும் எங்க அம்மா அதை சொல்லி சொல்லி மாஞ்சு போவாங்க. "இவன் தூங்கறான்ன்னு ஏதும் பேசிடாதீங்கப்பா"ன்னு சொல்லுவாங்க. இது கூட எனக்கு ஒரு பெருமையான விஷயம்.

3. ஸ்கூல், காலேஜ் படிக்கும் போதெல்லாம் கலாய்க்கும் போது என் பாணியே தனியா இருக்கும். அதனால என்னை சுத்தி எப்போதும் கூட்டம் ஜாஸ்த்தியா இருக்கும். பெண் நண்பிகளும் அதிகம். காரணம் என் கண்ணியம் அத்தனை பேருக்கும் ஏற்படுத்திய நம்பிக்கை. 1 மாதம் முன்பு கூட பெங்களூரில் இருந்து மாலா(சந்தானம்) என்ற பெண் நண்பி போனில் என்னை அப்படியே கல்லூரிகாலத்துக்கு அழைச்சுட்டு போனா. தேங்ஸ் மாலா!இப்படியாக எனக்கு நட்பு வட்டாரம்...பெருமைக்கு சொல்லலை நிஜாமாகவெ சொல்கிறேன், உங்களை எல்லாம் கம்பேர் செய்தால் ரொம்பவே அதிகம். இது கூட எனக்கு பெருமை தான்.

4. பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம்/பேச்சு/ டான்ஸ் என எல்லாம் கலக்கியது உண்டு. அதே போல் பின்னாலில் அபுதாபிதமிழ்சங்கத்தில் நல்லாவே கலக்கியிருக்கேன். இப்போ நாங்கள் ஒதுங்கி கொண்டு நெறைய புது பசங்க கலக்குறாங்க! விசு/வலம்புரிஜான்/காளிமுத்து/மேத்தா/நித்யாஸ்ரீ/சஞ்சய் சுப்ரமணியம் இன்னும் கணக்கு நீண்டு போகும், எல்லாரையும் கொண்டு வந்து மாரடிச்சாச்சு.( நான் துபாயில் இருந்தாலும் அபுதாபிதான் என் தாய்வீடு மாதிரி)

5. உதவின்னு கேட்டா ஓடிப்போய் நிக்கும் முதல் ஆள்தான் நான். முடிஞ்சதை கண்டிப்பா செய்வேன். அதுக்காக நான் பெருமை பட்டுக்கறேன். என் தற்பெருமையிலே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்சது.

6. என் நெஞ்சு உருதி நான் பெருமைப்படும் இன்னுமொறு விஷயம். நசுக்க நசுக்க மேலே வருவேன். எனக்கு பிளாட்ஃபாரத்தில் படுத்து தூங்கவும் தெரியும். ஹில்ட்டனில் ரூம் போட்டு தூங்கவும் தெரியும். எல்லாத்துக்கும் எப்பவும் தயாராகவே இருப்பேன்.

7. என் கல்யாணம்! வாவ்! இப்போது மட்டுமல்ல எப்போதும் பெருமைப்பட்டுக்கும் விஷயம். 1995 ஜூன் 2ம் தேதியை மறக்க முடியுமா என்னால். கச்சேரி, சாப்பாடு, வந்த வி.ஐ.பிக்கள் என ஒரு கலக்கலான கல்யாணம். வலையப்பட்டிதவில், திருவிழா ஜெய்சங்கர், முதல் நாள், கல்யாணத்துக்கு திருவாலப்புத்தூர் TAK & குரூப், மாலை ரிஷப்ஷனுக்கு கத்ரி கோபால்நாத் ஸாக்ஸ்,கன்யாகுமரி வயலின்,T.H.வினாயக்ராம் கடம், பெங்களூர் ராஜசேகர் மோர்சிங், என தூள் கிளப்பப்பட்ட கல்யாணம்.

8. அதுபோல் நான் பெருமைபட்டுக்கும் விஷயம் இது எனக்கு கடவுள் கொடுத்த வரம் என் ஞாபக சக்தி! இது என் நட்பு வட்டாரம் மட்டுமல்ல என் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஆச்சர்யமாக தோன்றும்.

9. என் நகைச்சுவை. இப்போது கொஞ்சம் பக்குவப்பட்டு விட்டேன். முன்னாடி காலேஜ் சமயத்தில் கண்ணாபின்னான்னு கலாய்ப்பேன். அது அபத்தமாக கூட இருக்கும் அப்படித்தான் ஒரு பால் வண்டி காரர் பஸ்ஸில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவர் வண்டி பால் முழுக்கு அவர் மேல் ஊத்திகிடக்கு. அப்போ நான் "எல்லாருக்கும் இன்னிக்கு செத்தா நாளைக்கு பால், இவரு பால்காராச்சா அதனால இன்னிக்கே பால்"ன்னு கமெண்ட் அடிச்சேன். என் நண்பன் டக்குன்னு என்னை அடிச்சுட்டான். அத்தோட அடுத்தவங்களை புண்படுத்தும் நகைச்சுவைகளை விட்டு விட்டேன்!

10. அபிபாப்பா,தம்பிபாப்பா, அபிஅம்மா இவங்க என் முக்கியமான பெருமைகள்.


ஆஹா! 10 ஆயிடுச்சா, பரவாயில்லை மங்கை/முத்துலெஷமி ஆளுக்கு ஒன்னு குறைச்சு போட்டிருக்காங்க அதனால மீதி 2 அவங்களுக்காகன்னு வச்சுக்கோங்க!