பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking
Showing posts with label நியாயமான கோவம். Show all posts
Showing posts with label நியாயமான கோவம். Show all posts

May 10, 2008

நல்லா இருங்கடே!!!

நான் 50 நாள் முன்னதாகவே இந்த பதிவை போட்டிருக்க வேண்டும். நான் நொந்து நூலாகி போனது அப்போதுதான். சரி ஏதாவது மிராக்கிள் நடந்து 50 நாளில் திருந்தியிருப்பானுங்கன்னு நெனச்சேன். மாறாக இன்னும் அதிகமா கெட்டு போயிட்டானுங்க. திருச்சி ஏர்போர்ட் ஆளுங்கதாங்க. மிக மட்டமான சர்வீஸ். படிச்சவன், படிக்காதவன்,நல்லவன்,(மாங்கொட்டை சிம்பு மாதிரி)கெட்டவன், ஏழை, பணக்காரன், ஊனமுற்றவன், அரசியல்வாதி, விஞ்ஞானி போன்ற எந்த பாகுபாடும் இல்லாத அதாவது கடவுளுக்கு சமமாக எல்லோரையும் பாவிக்கும் ஒரு இடம் எது என்றால் அது திருச்சி ஏர்போர்ட் தான்.

அந்த நாய் கருப்பா இருந்துச்சு. நெத்தியிலே அந்த விடிய காலை 4.30க்கே ஆஞ்சநேயர் செந்தூரம் வச்சிருந்துச்சு. இமிக்ரேஷன்ல உக்காந்து இருந்துச்சு. என்னை மாத்திரம் இல்லை, எல்லோரையும் திருடனை போலவே பார்த்துச்சு. ஒருமையில் விளித்தது. சகட்டுமேனிக்கு திட்டியது. யாரும் எதிர் கேள்வி கேட்க்கவில்லை. நாயை அடிப்பானேன் என எல்லோரும் விட்டிருக்கலாம். அது தன்னை தானே திட்டிக்கொண்டது. தான் ஏதோ கழுதை மேய்க்கும் வேலை பார்ப்பதாக. இந்த வேலை கிடைக்காவிட்ட்டால் அது சத்தியமாக சைக்கிளில் வெங்காய மூட்டை வைத்து கொண்டோ, அல்லது கோல பொடி வித்துகிட்டோ தான் வாழ நேரிடும்.

என்ன ஒரு திமிர். மெட்டிஒலி அப்பா மாதிரி ஒரு பெரியவரை "ந்தா பெருசு, உயிரை வாங்காதே ஒன் ஊரு என்னா,எம்பர்கேஷன் கார்டு பில்லப் பண்ண தெரியல பிளைட் ஏற வந்துட்டியா"ன்னு கேக்குது.

"ஆல் பிளடி இண்டியன்ஸ்" என்பது போல எங்களை பார்த்தது. இதோ இப்போது நான் கொழும்பில் இருக்கிறேன். ஏர்ப்போர்ட் கிளி கொஞ்சுது. டாய்லெட் அம்சமா இருக்கு. ஓக்கே இலங்கை இந்தியாவை விட பணக்கார நாடு தான். திருச்சி ஏர்போர்ட் வருமைக்கு பிறந்ததாக கூட இருக்கலாம். அதற்காக டாய்லெட்டில் அனடாமி பாடம் எடுக்கனுமா என்ன. அந்த எகத்தாலம் பிடிச்ச நாய் கூட அந்த டாய்லெட்குக்கு தான் போகும் போல இருக்கு. அதை எல்லாம் அழிச்சா தான் என்ன!

இந்த நாய் டூட்டி முடிச்சு வீட்டுக்கு போன பின்னே அதன் குழந்தைகள் அதன் காலை கட்டி கொள்ளுமே, அதுக்காகவாவது கொஞ்சம் தன்மையா நடந்துக்க கூடாதா! தலைவலித்தால் சூடா காபி கிடைக்குமே அதற்காகவாவது கொஞ்சம் பரிந்து பேசக்கூடாதா!இவன் சம்பளத்தில் பாதி கொடுத்தா கூட நான் நாய் மாதிரி சேவகம் பண்ணுவேன் அங்கே! நாதாறி பய அவனுக்கு தான் கொடுக்கும் இந்த அரசாங்கம் வேலை.

நான் சம்பாதிச்சு தரும் அன்னிய செலாவனி மாத்திரம் இனிக்குது. ஆனா எங்களை மாத்திரம் நாய் மாதிரி நடத்தனுமா? என்ன அனியாயம்டா இது! நான் சொல்வது தப்புன்னு பட்டுச்சுன்னா சொல்லுங்க மக்கா!