பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 25, 2007

எங்க துபாய்ல வெள்ளின்னா ரெண்டு:-))

இந்த பதிவு என்னான்னு புரியாதவங்க இதன் முதல் பாகத்துல இங்க பாருங்க. "ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க!!! என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற " பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க!!

அது வேற ஒன்னும் இல்லீங்க, எங்க அம்மா அடிக்கடி விடும் டயலாக் தான் அது. நான் பிறந்த போது மருத்துவம் பார்த்தவங்களுக்கு ஃபீஸா பத்து ரூவா கொடுத்தாங்கலாம், அதை தெண்டமாக்க பாத்துட்டனாம். ங்கொக்கமக்கா தஞ்சாவூரு நக்கலுக்கு ஒரு எல்லையே இல்லியா! சரி விஷயத்துக்கு வருவோம், சம்பவம் வெளிவிவகார துறை அமைச்சர் மூலமா முதல்வர் காதுக்கு போக அவரும் சைக்கிளை சீட்டுல உக்காராம ஓட்டிகிட்டே வந்துட்டார் விசாரணைக்கு. அக்க்கியூஸ்டு நான் குத்தவாளி கூட்டிலே நிக்கிறது மாதிரி முற்றத்துல நிக்க எல்லாரும் ரவுண்டு கட்டி நிக்க முதல்வர் நேரா விசாரணையே இல்லாமல் தீர்ப்பு சொல்லிட்டாரு. இனி ரோடு கிராஸ் பண்ணி எதிர்த்தாபோல இதுக்கும் ஔவையார் வேண்டாம். கொல்லை வழியா போய் ஆரியபாலா ஸ்கூல்ல போட்டுடலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி அடுத்த நாள் சித்தப்பா என்னை கொல்லை வழியாக பின் தெருவில் இருக்கும் ஆரிய பாலா ஸ்கூலுக்கு கொண்டு போனாரு. போகும் போதே நல்லா வழிய பார்த்துகிட்டேன்.

அங்க போன பின்ன தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா ஒருத்தனை பார்த்தேன். அப்பல்லாம் நான் அழுவதில்லை. சீனியர்ல்ல! முதல் ஸ்கூல் பார்த்து ரெண்டாவது ஸ்கூல் வந்தாச்சுல்ல. "இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்"ன்னு கிரிமினல் சிந்தனை மட்டுமே இருந்தது எனக்கு. மெதுவா கிட்ட போய் "டேய் உம் பேரு என்னாதா"ன்னு கேட்டேன், அப்போ எனக்கு "டா" வராது. அதுக்கு அவன் "நாதா"ன்னு சொன்னான். அப்ப அவனுக்கு "ரா" வராது. அழுதுகிட்டே ஒரு சாக்லெட் எடுத்து குடுத்தான், அப்ப தெரியாது நாங்க ரெண்டு பேரும் பிற் காலத்துல அடிக்க போகும் கூத்து. அந்த ஸ்கூல் பின்புறம் தான் அவன் வீடு. சரின்னு கொஞ்ச நேரம் ஷேமம் எல்லாம் விசாரிச்சுட்டு அடப்பாவி அப்பா அம்மாக்களே நம்ம வீட்டில தான் இந்த கொடுமைன்னு பார்த்தா உலகம் முழுக்க "குழந்தையீயம்" கொடுமை நடக்குதான்னு அதை உடனே தடுத்தாகனும்ன்னு கிளம்பிட்டோம். "சரிதா ராதா நான் இந்த பக்கமா நேரா போறேன் நீ பின்னாதி நதந்து போ"ன்னு சொல்லிட்டு கிளம்பி வீடு வந்து சேந்தாச்சு.

வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க, இவனை எங்க விட்டாலும் வந்துடுவான். அதனால புது தெரு ஸ்கூல்ல (கொஞ்சம் பின்னால இருக்கு) சேர்த்துடுவோம்ன்னு முடிவு பண்ணி அடுத்த நாள் என் பாட்டி என்னை தூக்கிகிட்டு ஒரு காசி துண்டை என் மண்டையிலே சுத்தி பாகிஸ்தான் வாசிம்கானை படத்துக்கு படம் கோர்ட்டுக்கு அழைச்சுட்டு போவாரே விசயகாந்து அது போல போனாங்க. அங்க போய் தலை கட்டை பிரிச்சு வுட்டா எந்த வாத்தியாரை பார்த்தாலும் வீரப்பா மாதிரியே இருக்கு. "உக்காருடா"ன்னு கரகரன்னு சொல்றாரு சாரு! சரின்னு கதவு ஓரமா உக்காந்து கொஞ்ச நேரம் பின்ன நைசா வெளியே வந்து கால் போன போக்கிலே எங்கே போகும் இந்த பாதைன்னு இளைய ராஜா மாதிரி பாடிக்கிட்டே நடந்தேன். அப்பவும் அந்த மஞ்ச பையும் ஹிண்டு பேப்பரையும் விடலை. அப்ப புது தெருவின் குறுக்கே போகும் வாய்காலின் தண்ணி சத்தம் நல்லா இருந்துச்சு சலசலன்னு. அதிலே இறங்கி காலை தண்ணில விட்டுகிட்டு பையை தலை மாட்டுக்கு வச்சிகிட்டு படுத்துகிட்டு சின்ன சின்ன கல்லா எடுத்து தண்ணில போட்டுகிட்டு ஒரு கவிஞர் ரேஞ்சுக்கு சுகமா இருந்தேன்.

அப்ப பார்த்து நம்ம வெளி"விவகார"ம் ஸ்கூல்ல உளவு பார்க்க போய் அங்க நான் இல்லாமையால் வீட்டுக்கு போய் சொல்லி பாட்டி, அம்மா, முதல்வருக்கு சேதி போய் தலைவரும், பின்ன சித்தப்பாவின் சேக்காளிங்க ன்னு ஆளுக்க்கு ஒரு பக்கமா கிளம்பிட்டாய்ங்க. கடேசில என்னை பிடிச்சு சைக்கிள்ல முன்னால உக்காரவச்சி சித்தப்பா சாத்திகிட்டே வந்தாரு.

அதுக்குள்ள என் பாட்டி "பத்து எருமை வாங்கி மாடு மேய்ச்சாலும் மேய்க்கட்டும் இனி ஸ்கூல் வேண்டாம்"ன்னு அழுத்தம் திருத்தமா தீர்ப்பு சொல்ல (என்னய மாடு மேய்க்க விடுறதிலேயே குறியா இருந்தாங்கப்பா பாட்டி) அப்படியே எல்லாரும் ஒத்து கிட்டு ஒரு வருஷம் போகட்டும். அஞ்சு வயசிலே சேர்த்துக்கலாம்ன்னு விட்டுட்டாங்க.

அடுத்த ஆயுத பூஜை வந்துச்சு. சரி பையன் தெருவிலே இருந்த மூணு ஸ்கூல்லயும் படிச்சுட்டான், இனி மேல் படிப்புக்காக முறைப்படி நேஷனல்ல சேர்த்துடலாம்ன்னு முடிவு பண்ணி மாலை, மிட்டாய் எல்லாம் வாங்கி அப்பா, சித்தப்பா சகிதமா ஸ்கூல் போய் அப்பா சேர்த்து விட்டாங்க. அவங்க ஒன்னாப்பு படிக்கும் போது அன்னபாக்கியம் டீச்சராம். அவங்க கிட்ட தான் நானும் படிக்கனும்ன்னு பிடிவாதமா 1 A விலே சேர்த்தாங்க. அப்பாவுக்கே டீச்சர்ன்னா அப்ப எப்படி இருப்பாங்க, கிட்டதட்ட ரிட்டையர்டு ஆகிற மாதிரி. ஆனா பக்கத்து கிலாஸ் 1 C யிலே நம்ம ராதா. ஒன்னுக்கு போக வெளியே வரும் போது ராதா ரொம்ப பீத்திகிட்டான். "எங்க டீச்சர் தாண்டா அழகு, உங்க டீச்சர் உங்க பாட்டி மாதிரி இருக்காங்கன்னு" என் ஈகோவை தட்டி விட்டான்.

ரெண்டு கிளாசுக்கும் நடுவே ஒரு தட்டி தான். கீழே ஒரு ஆள் புகுந்து போகும் அளவு இடைவெளி இருக்கும். நான் அன்ன பாக்கியம் டீச்சர் கிளாசில் கடைசி வரிசையில் இருந்தனா. அப்படியே கீழ கடல் கன்னி மாதிரி படுத்துகிட்டு பாதி உடம்பு தலை முதல் வயிறு வரை லெஷ்மி டீச்சர் கிலாசில் வைத்து கொண்டு மீதி பாகம் 1 A விலே வச்சிகிட்டு ராதாவோட பேசிகிட்டே பொழுதை போக்கி கொண்டிருந்தேன். அப்போ கால்ல சுள்ன்னு அடி, டக்குன்னு உடம்பை 1 Aக்கு பாம்பு மாதிரி திருப்பி கொண்டு வந்தா பெரம்போட அன்னபாக்கியம் டீச்சர். "உனக்கு லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு தான் போகனும்ன்னா அங்கயே ஓடு"ன்னு சொல்ல அதான் சாக்குன்னு சர்ன்னு அதே தட்டி வழியா பூந்து லெஷ்மி டீச்சர் கிளாஸ்க்கு வந்துட்டேன்.

அப்படித்தான் மக்கா நான் படிக்க??? ஆரம்பிச்சது.

நீயெல்லாம் ஒரு பொம்பளையா?????

பள்ளிகூடம் போகலாமான்னு நம்ம டீச்சர் கொசுவத்தி சுத்தி வச்சு அது நமக்கும் பத்திகிச்சு. சரி நம்ம பங்குக்கும் நாமளும் சுத்திவிடுவோமேன்னு கிளம்பிட்டேன்.

நான் படிக்க வந்ததே ஒரு விபத்துங்க. பள்ளிகூடத்தில் சேர்க்கப்பட்டேன்ன்னு சொல்றது தப்பு. துரத்தி விடப்பட்டேன்:-) அப்படி என்ன தப்பு செஞ்சேன் அந்த நாலு வயசிலே, என்ன எல்லா பிள்ளைகளும் செய்யும் வால் தனம் மாதிரி ரெண்டு மடங்கு அதிகமா செஞ்சுட்டேன். அதுக்கு போய் அத்தன பெரிய தண்டனை. அதல்லாம் ரொம்ப ஓவர். அம்மா தேங்காய் துருவினால் அந்த பூ எடுத்து தின்பதில்லை. முழு மூடியா வேணும். அதில் என் எலிபல்லுக்கு எட்டிய தூரம் வரை ரவுண்டா கடிச்சுடுவேன். தொழில் சுத்தமா இருக்கும்.கடிச்ச தேங்காவை வாயிலே வச்சிகிட்டு கொஞ்சம் ஜீனியையும் வாயிலே கொட்டிகிட்டு என் அம்மாவை விட ஸ்பீடா ஓடுவேன். அய்யாவை பி(அ)டிக்க முடியாதுல்ல!! ரேழியில் கிடக்கும் செருப்பை எல்லாம் எடுத்து வாசலில் இருக்கும் சாக்கடையில் டபக் டபக்ன்னு போட்டுட்டு அதிலிருந்து வரும் பொலக் பொலக் சத்தத்தை ரசிப்பேன். வீட்டுக்கு விருந்தாளி வந்தா ஒரு மஞ்ச பையோடத்தான் வரணும், செருப்பை அதிலே போட்டு எரவானத்திலே மாட்டிடனும், அது அப்போ எங்க வீட்டிலே எழுதப்பட்ட சட்டமாக இருந்தது.

அக்காவின் பென்சில் எடுத்து என் கைக்கு எட்டிய தூரம் வரை வீடு முழுக்க சுவத்திலே மாடர்ன் ஆர்ட் வரைந்து விடுவேன். பார்க்க அப்படி ஒரு அம்சமா இருக்கும்.அதை ரசிக்க தெரியாத அப்பாவுக்கு சுண்ணாம்பு அடிக்கும் செலவு மட்டுமே மனதில் நிற்க்கும். (இப்போ கூட தங்கமணிகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் அபிபாப்பா சுவத்திலே கிறுக்காம பார்த்துக்கோன்னு) அப்பாவின் சைக்கிள் காத்தை மெதுவா பிடுங்கிவிட்டு அதன் மேல் உள்ளங்கை வைத்து எனக்கு நானே கூசிக்கிட்டு புளகாங்கிதமடைவேன். அப்பா என்னவோ அவங்க காத்தை பிடுங்கி விட்டமாதிரி ஆபீஸ் போகும் சமயத்தில் குய்யோ முறியோன்னு கத்துவாங்க.

இப்படியாக கிருஷ்ணலீலைகள் அதிகமாக அதிகமாக வீட்டில் பொதுக்குழு கூடி "அதை" நிறைவேற்றும் பொருப்பு வீட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சராகிய என் சித்தப்பாவுக்கு தரடப்பட, அடுத்த நாள் ஆரவாரமாக எனக்கு குளியல் எல்லாம் போட்டு சாம்பிராணி எல்லாம் போட்டு விஷயத்தை என்னிடம் சொல்ல வச்சேன் பாருங்க கச்சேரி, வீட்டையே தூள் கிளப்பிட்டேன். ஒரு வழியா சமாதான பேச்சு வார்த்தை நடந்தது என்னிடம். புஸ்தக மூட்டை இருந்தால் தான் போவேன்ன்னு ஒரு கோரிக்கை வைக்க அம்மா டபடப்ன்னு ஓடிப்போய் பீரோவில் மடித்து "ஜாக்கிரதையா" சேமித்து வைத்த "நியூ கொழும்பு ஸ்டோர்" மஞ்ச பைய தூக்கிட்டு வர நான் புஸ்தகம் எங்கேன்னு கேக்க அம்மா மாவு சலிக்க தந்திஆபீசர் வீட்டிலே இருந்து வாங்கி வத்த ஹிண்டு பேப்பரை எடுத்து நாலா மடிச்சு கண்ணீரோடு மஞ்ச பையிலே திணிக்க(பாவம்ன்னு விட்டாதான் என்னா) புஸ்தக மூட்டை ரெடி, சரின்னு சித்தப்பா என்னை தூக்கிக(ரொம்ப வெயிட் எல்லாம் கிடையாது. சில்லரை காசை சட்டை பையில் போட்டது மாதிரி தான் இருக்கும் வெயிட், ஆனா தம்பிய தூக்க மட்டும் முழு பலபிரயோகம் செய்யனும்) அப்ப தான் அடுத்த கோரிக்கை வைத்தேன். பாட்டியும் கூட வந்தாதான் ஸ்கூல் போவேன்னு.

அதுக்கு அம்மா "மாமி சும்மாதான இங்க உக்காந்து என்கிட்ட நச நசன்னு கிட்டு இருக்கீங்க, கூட போங்க ஓன்னாவது படிச்ச மாதிரியாவது இருக்கும்."...ம் நக்கல்... சரி சித்தப்பாகூட நேர் எதிரே மெயின் ரோட்டை கிராஸ் பண்ணினா இருக்கும் ஔவையார் ஸ்கூலுக்கு ஔவையார் சகிதமா போனேன். அந்த ஸ்கூல்ல மொத்தமே ஒரு சார், ஒரு டீச்சர் தான். ரெண்டு பேருமே தண்ணி வாங்க்கி குடிக்க ஆசுவாசப்படுத்திக்க என் வீட்டுக்கு தினமும் வர்ரவங்கதான். அதனால எனக்கு பெருசா பீலிங் எல்லாம் இல்லை. உக்காந்தாச்சு. எல்லோரும் ஓரோன் ஒன்னு சொல்லும் போது நான் மட்டும் வாயை இருக்கி மூடிக்கிட்டேன். டீச்சர் கெஞ்சி பார்த்த பின் அடுத்த கோரிக்கை வச்சேன். "பாட்டியும் ஓரோன் ஒன்னு சொல்லனும்"ன்னு. வேற வழி! சொன்னாங்க. கும்பலா எங்க கூட என் பாட்டியும் சொன்னாங்க. டீச்சர் எல்லாருக்கும் தனி தனியே வெரிகுட் சொல்லும் போது( அது என்னவோ ஆஸ்கார் மாதிரி பசங்களுக்கு) பாட்டிக்கும் வெரிகுட் சொல்ல அது அவங்களை அவமானப்படுத்தியதா நெனச்சுகிட்டு பாட்டி ஒன்னாவது படிப்பை அன்னிக்கோட டிசி வாங்கிகிட்டு டிஸ்கண்டியூ பண்றதா சொல்லிட்டாங்க, பின்ன அம்மா கெஞ்சி கூத்தாடி அவங்களையும் என்னையும் ஸ்கூல் அனுப்பினாங்க அடுத்த நாள்.

என் கூட சேர்ந்து பாட்டியும் நல்லாதான் படிச்சாங்க, ஆனா கணக்கு சொல்லிகுடுக்கும் போது மட்டும் முந்தானைய தரையில விரிச்சு லைட்டா கண் அசந்துடுவாங்க. பக்கத்திலேயே நானும் படுத்து கண கச்சிதமா வாயில விரல் வச்சுகிட்டு தூங்கிடுவேன். இப்படியா பத்து நாள் போன பின்ன ஒருநாள் திடு திப்புன்னு ஸ்கூல் இன்ஸ்பெக்டர் வந்துட்டார். நாங்க சுகமா தூங்கிட்டு இருக்கும் போது எழுப்பப்பட்டோம். சாருக்கும், டீச்சருக்கும் செம திட்டு கொடுத்துட்டு போயிட்டார் இன்ஸ்பெக்டர். சாரும் டீச்சரும் மெதுவா பாட்டிகிட்ட வந்து "நீங்க இனிமே ஸ்கூல்க்கு வரவேண்டாம்"ன்னு சொல்ல அது பெரிய அவமானமா போயிடுச்சு பாட்டிக்கு.

"என்னைய அவமானப்படுத்திய இந்த ஸ்கூலுக்கு இனி நானும் வரமாட்டேன், என் பேரனும் வரமாட்டான், அவனை மாடு மேய்க்க வச்சாலும் வைப்பேனே தவிர இந்த ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்"ன்னு வீர சபதம் போட்டுட்டு (அடங்கொக்கமக்கா) என் கையை பிடிச்சு தர தரன்னு இழுத்து கிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க. அம்மாவுக்கு தான் ரொம்ப கவலையா போச்சு. ஸ்கூல் எதிர்த்தாபோல தானே, அதனால அடுத்த நாள் அம்மாவே என்னை தர தரன்னு இழுத்துகிட்டு வந்து ஸ்கூல்ல விட்டுட்டு போயிட்டாங்க. கொஞ்ச நேரம் உக்காந்து இருந்தேன். வாசலையே பார்த்துகிட்டு இருந்தேன். அம்மா வீட்டின் உள்ளே போனதுதான் தெரியும் நானும் கிளம்பிட்டேன். வாரு வச்ச தொள தொளா டிராயரும், அரைக்கை தொள தொளா சட்டையும் போட்டு கிட்டு களத்தூர் கண்ணம்மா கமல் மாதிரி இருந்த அபிஅப்பா கிளம்பிடுச்சு வாயிலே விரல் வச்சுகிட்டு புஸ்தக மூட்டையை தோளில் மாட்டிகிட்டு (ஹிண்டு பேப்பரையும், மஞ்ச பையையும் தூக்கி எறிஞ்சுட்டு போனாதான் என்ன...லூசு லூசு). தெனாலில கமல் ரோடு கிராஸ் பண்ணுவது போல ரெண்டு காதையும் பொத்திகிட்டு கண்ணை மூடிகிட்டு ரோட்டை கிராஸ் பண்றேன். அப்படியே கிருஷ்ணருக்கு ஆறு வழி விட்ட மாதிரி ரோட்டின் நடுவே நான் மட்டும் தனி வழில அசால்ட்டா நடந்து வர ஒரே கிரீச் கிரீச்ன்னு சத்தம், வடகரையிலே இருந்து வந்த நாலாம் நம்பரும் வேற ரெண்டு மூணு பஸ்ஸும் சரக் புரக்குன்னு நிக்க ரோட்டோரமா போய்கிட்டு இருந்த ஒரு அம்மா ஓடி வந்து என்னை கையை பிடித்து இழுக்க அந்த டிரைவரெல்லாம் கீழே குதித்து "நீயெல்லாம் ஒரு பொம்பளையா புள்ளைய தனியா விட்டுட்டு முன்னாடி போயிட்டியே"ன்னு திட்ட பின்ன என்ன அந்த அம்மா அவங்களை வண்டை வணடையா வாரிடுச்சு.

"ஏன் இப்படி நடு ரோட்டிலே திட்டிகிறாங்க இண்டீசண்ட் ஃபெல்லோஸ்"ன்னு மனசுல நெனச்சுகிட்டு வீட்டு படி ஏறினேன், சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா என் கண்ணுக்கு கல்கத்தா காளி மாதிரியே தெரிஞ்சாங்க!!! என்ன பிரச்சனை அம்மாவுக்குன்னு தெரியலையேன்னு நெனைச்சுகிட்டு கிட்ட போனேன். அம்மாவும் வாடா என் ராசாங்க்குற மாதிரி கைய நீட்ட கிட்ட ஓடினேன். அப்படியே ஆசையா என் புறங்கழுத்த பிடிச்சு ஆசை தீர_____________________(மிருகவதை சட்டம் அம்மாவின் மேல் பாய எந்த மகன் ஒத்துப்பான்) அதுல நடுவே டயலாக் வேற " பாவி பயலே பத்து ரூவா தெண்டமாக்க பாத்தியே"ன்னு. இது என்னான்னு புரியாதவங்க பதிவின் இரண்டாம் பாகம் பாருங்க!!


டிஸ்கி:: அப்பாடா, நீயெல்லாம் ஒரு பொம்பளையா ன்னு ஒரு பதிவு போடனும்ன்னு நெனச்சு இத போடலீங்க, சத்தியமா கண்மணி டீச்சர் போட்ட ஆட்டோகிராபின் பாதிப்பால் சுத்துன கொசுவத்தி தான். அந்த வார்த்தை வந்த பின்ன அதையே தலைப்பா வச்சுட்டேன். நீங்க ஆதரவு குடுத்தாலும் குடுக்காட்டியும் நான் ஒன்னாப்பு படிச்சதை அடுத்த பாகத்திலே சொல்லியே தீர்ப்பேன் என்பதை அவையடக்கத்துடன் சொல்லிக்கறேன்:-))

October 23, 2007

மெஹா ஹிட் புகழ் "வலைமாமணி" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்காணல்!!!

"வலைமாமணி" என எங்கள் பாசக்கார குடும்பத்தினர் சார்பாக கண்மணி டீச்சர் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட அமீரக சிங்கம் "பினாத்தலார்" அவர்களின் அதிரடியான "கனவில் வரக்கூடாத தமிழ்மணம்" பதிவின் மாபெரும் வெற்றிக்கு பின் அவரை பேட்டி காண கரண்தர்பாரில் இருந்து டெல்லிதர்பார் வரை பினாத்தலாரின் பேட்டிக்காக காத்து கிடந்தாலும் அமீரக வலைப்பதிவர்களுக்காக ஒரு தொலை பேசி பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் நம் பினாத்தலார். அமீரக வலைப்பதிவர்கள் சார்பாக அபிஅப்பா நானே துணிந்து கேள்வி கணைகளை வீச அதிரடியாக பதில் சொல்லிய பினாத்தலாரை இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதோ பேட்டி ஆரம்பம்!

அபிஅப்பா: வணக்கம் பினாத்தலாரே, நீங்க இந்த மாபெரும் வெற்றி குறித்து எப்படி உணர்க்கிறீர்கள்?

பினாத்தலார்: வணக்கம் அபிஅப்பா, மூணு வருஷமா கட்சி நடத்தி நாலாவது வருஷத்துல அடி எடுத்து வச்சு பல வெற்றிய பார்த்த எனக்கு இதல்லாம் ஜுஜுபி

அ.அ: சரி கேள்விக்கு போவோமா, ஸ்டார் பதிவிலே இருந்து வருவோம், ராமன் பெருங்குடிகாரன் என கலைஞர் பதிவு போட்டாரே அதுக்கு இராமன் சென்னையை அடுத்த "பெருங்குடி" பஞ்சாயத்தை சேர்ந்தவர் எனவும், அல்லது "மேட்டுக்குடி" வர்க்கம் எனவும், அல்லது பெரும் குடிகாரன் எனவும் பல பொருள் தந்து மக்களை குழப்புவதாக பேசிக்கிறாங்களே மக்கள் அது பத்தி உங்க பதில் என்ன?

பினா: ஹி ஹி...இது நான் தன்னிச்சையா சொல்லக்கூடைய பதில் இல்ல. எனவே பொதுக்குகுழு கூடி அதிலே நான் மட்டும் முடிவெடுத்து பின்ன நிருபர்களுக்கு சொல்லிவிடுறேன் அப்ப தெரிஞ்சுக்கோங்க!

அ.அ: சரி, சேது சமுத்திர திட்டத்துக்கு நமீதாவின் ஆதரவு கேட்டு கலைஞர் பதிவு போட்டாரே, அதன் பின்னனியிலே என்ன இருக்கு?

பினா: அதுவா, நீங்க நினைப்பது போல் நமீதா சின்ன ஆள் இல்லை!

அ.அ: ஆமா

பினா: குறுக்க ஜொல்லாதீங்க, அதாவது நமீதா இப்போ ஒரு நீதிபதி ஸ்தானத்துல இருக்கிறாங்க, இது உங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா கலைஞ்ர் டி வி பார்க்கும் எல்லோருக்கும் தெரியும் அது பத்தி. அவர் நீதியை மதிப்பவர் என்பதும் உங்களுக்கு தெரியும், அதனாலத்தான் அவர் நமீதாவிடம் ஆதரவு கேட்டார். அத விட கொடுமை உங்க பையன் நட்ராஜ் கிட்ட கூட ஆதரவு கேட்டதாகவும் அதற்கு அவரும் தனக்கு லாலிபாப்பும், தன் டைகருக்கு பெடிகிரியும் வாங்கி குடுத்தா ஆதரவு கண்டிப்பா உண்டுன்னும் சொன்னதா கூட ஒரு தகவல்!

அ.அ: சரி அப்துல் கலாம் "கனவு (மட்டுமே) காணவேண்டும்" என போட்ட பதிவுக்கு ஏன் ஒரே ஒரு பின்னூட்டம்? அது யார் போட்டது?

பினா: ஓ அதுவா, "ராக்கெட் விட்டால் சோதனையோட்டம், பதிவு போட்டால் சோதனைபின்னூட்டம்" என்னும் கொள்கை படி அவருக்கு அவரே போட்டு கிட்ட சோதனை பின்னூட்டம் தான் அது!

அ.அ: ஓக்கே, கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்ப்போம் என பாஜக பதிவு போட்டது பத்தி?

பினா: அதுவா, மறைமுகமா, நேர்முகமா, பக்க வாட்டிலே என எல்லா பக்கமும் வந்து சொல்லியும் ம.பொ.சி யிம் ஆவி கூட திரும்பி பார்க்காத கோவத்தில் எழுதப்பட்ட பதிவு. ஆனா அதை எழுதிய இல.கணேசன் கூட அதற்க்கு பின்னூட்டம் போட வெக்கப்பட்டதால் சும்மா இருக்குதேன்னு பாவப்பட்டு நம்ம குசும்பம் போய் அதிலே " உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கே"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடி வந்துட்டான். ஆனா பாருங்க வந்த பின்னூட்டத்தை ஏன் விடுவானேன்னு அதையும் பப்ளிஷ் பண்ணிட்டாங்க!

அ.அ: செட்டாப் பாக்ஸ் வைப்பது டிவிக்கும் நல்லது பதிவிலே 12 பின்னூட்டம் விழுந்ததே அது எப்படி?

பினா: அதுவா ரத்தன் டாடா, லெச்சுமி மித்தல், பிர்லா குழும ஆடிட்டர்,முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பில்கேட்ஸ், விஜய் மல்லையா, கோத்ரெஜ், பாஜாஜ், சசிகலா, இளவரசி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் போட்ட பின்னூட்டம் அதெல்லாம்.

அ.அ: "2011ல் நானும் முதல்வர்"ன்னு சரத்குமார் போட்ட பதிவு பத்தி சொல்லுங்க?

பினா: நல்லா ஏமாந்திங்களா, சிபி, குசும்பன் மாதிரி தான் சரத் குமாரும், நீங்க பதிவு உள்ள போய் பார்த்தீங்கன்னா " 2007 ல் ஒரு "நம்நாடு" 2011ல் "நானும் முதல்வர் - நாயகி இன்னார் இன்னார்ன்னு விளம்பரம் கொடுத்திருப்பார் அவர் நடிக்க இருக்கும் படத்துக்கு. சரியான மொக்கை பதிவுன்னு சர்வேசனும் இந்த வருஷத்துக்கு அவார்டு குடுப்பார் பாருங்க

அ.அ: சரி பினாத்தலாரே! காமடி கொஞ்சம் குறைவா இருப்பதா பேசிக்கறாங்களே இந்த பதிவிலே!

பினா: யார் சொன்னது, சொல்றவங்களை என் முகத்துக்கு நேரா வந்து பேச சொல்லுங்க நான் மூஞ்சிய பேத்துடறேன், இத்தோட நான் பேட்டிய முடிச்சிக்கறேன்......

அ.அ: சரி சரி "கேடி" வேலை எல்லாம் செய்யாதீங்க பினாத்தலாரே, கொஞ்சம் இருந்து விளக்கம் சொல்லிட்டு போங்க! கூல் கூல்

பினா: (கொஞ்சம் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டு) தோ பாருங்க அபிஅப்பா நான் அதிலே மாத்திரம் மொத்தம் 2 இடத்திலே காமடியை அள்ளி இறைத்திருக்கிறேனே, அதனால இந்த சீரியஸ் பதிவுன் நோக்கமே கெட்டுப்போயிடும் அபாயம் இருந்ததால் அத்தோட காமடியை நிறுத்திக்க சொல்லி எனக்கு பல இடத்திலிருந்தும் தந்தி வந்துச்சு அதனால விட்டுட்டேன்.

அ.அ: நீங்க சொல்றது புரியலையே!

பினா: என்ன அபிஅப்பா, சரியான பல்பா இருக்கீங்களே, பரண்ல பாருங்க "வேலூர் நினைவுகள்"ன்னு வைக்கோ எழுதிருப்பார். இதுல ஒரு விஷேஷம் என்னன்னா அந்த பதிவை யாரும் இன்னும் படிக்காமலே அது சூடான இடுகைல வந்துடுச்சு.

அ.அ: அது எப்படி முடியும்?

பினா: அதாங்க வைக்கோ மகிமை! பேரை கேட்டாலா சும்மா அதிருதில்ல தமிழ்மணம். சும்மா பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன பாட்டி வரை அப்படி ஒரு சிரிப்பு கொக்கேபிக்கேன்னு, சரி நல்லா வரவேற்ப்பா இருக்கேன்னு அவர் முகத்தை போட்டு அவர் "ஸ்டாலின் கராத்தே கற்ப்பதை தடை செய்ய வேண்டும்" என போட்ட பதிவை படிச்சுட்டு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்

அ.அ: சிரிக்காதீங்க சொல்லுங்க

பினா: முடியல அபிஅப்பா, இப்படிப்பட்ட 2 காமடி சீன் வச்சு மருத்துவர் அய்யா, இளங்கோவன் பதிவெல்லாம் ஈயடிக்க வச்சுட்டேனேன்னு பல இடத்துல இருந்தும் எதிர்ப்பு வந்தும் நீங்க காமடி கம்மியா இருக்குன்னு சொன்னீங்களே அதான் எனக்கு கோவம் வந்துச்சு, சரி இன்னிக்கு எனக்கு போரடிக்குது. 67 பின்னூட்டம் வந்துடுச்சு, நான் தூங்க போகிறேன்! பொது மக்கள் இந்த பேட்டிக்கு வரவேற்பு குடுத்தா நாளையும் பேட்டி தொடரும்!!

October 22, 2007

கவுண்ட மணி போட்டிருக்கோம்ல! அதனனல ஒரு "தேவ்" அவர்களின் மீள் பதிவுங்கோ!!

துபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..


மனுசனுக்குத் தான் பாஸ்போர்ட் வேணும் மனச்சாட்சிக்கு எதுக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம்..

நேத்து வெட்டிக்கு மெயில் அனுப்பி பேட்டி எடுத்த மனச்சாட்சி.. இன்னிக்கு மெயில் குள்ளே நுழைஞ்சு அமீரகம் போயிட்டே வந்த்ருச்சு... அபி அப்பா அபி அப்பாங்கறாளே ஒரு வேளை அமிதாப்பசன் தான் தமிழ்ல்ல பதிவு போட இப்படி ஒரு புது பெயர்ல்ல வந்துருக்காரோன்னு ஒரு டவுட்..

அடேய் மனச்சாட்சி.. அமிதாப்பசன் பையன் பேரு அபிஷேக்பச்சன்.. நம்ம அபி அப்பா பாப்பா பேரு அபிராமி.. போட்டுக் குழப்பாதேன்னு சொல்லியும் மனச்சாடசி கேக்கல்லையே.. கிளம்பிப் போயிருச்சு..

அங்கேப் போய் விசாரிச்சுட்டு அவர் அமிதாப்பச்சன் இல்லப்பா.. ஆனா ஒண்ணு அமிதாப் கூடப் பேசுனாக் கூட இவ்வளவு சிரிக்க முடியுமா தெரியாது.. மனுசன் சும்மா சிரிப்பைச் சட்டைப் பாக்கெட்டுக்குள்ளே ஷாசேப் பாக்கேட்டாப் போட்டு வச்சுருக்கார்..

கேக்காமலே அள்ளி அள்ளிக் கொடுக்குறார்.. இந்தா இனி ஓவர் டூ ஸ்டார் ரிப்போர்ட்டர் அன்ட் அபி அப்பா..

உங்களுக்கு ஏத்த ஒரு பட்டம் சொல்லுங்களேன்?

வேற என்ன, "phd" தான். அபிஅப்பா டாக் ன்னு சொல்றவங்க டாக்.அபிஅப்பான்னு சொல்லுவாங்களே-:))

**உங்களுக்கு மகளா இருக்க அபி பாவமா? இல்ல அபிக்கு அப்பாவா இருக்க நீங்க பாவமா?

இதில பாவம்ன்னு பாத்தா தங்கமணியும், தமிழ்மணமும் தான்! என் பதிவுல எப்பவுமே அபி ஜாலியாதான் இருக்கும். அது போல நானும். ஆனா தங்கமணி தான் நாங்க அடிக்கிற கூத்துல கஷ்டப்படுவாங்க.அதுவும் sportive வா எடுத்துப்பாங்க.


அபி அப்பாவின் பதிவுகள் வெறும் நகைச்சுவைக்கு மட்டுமா இல்ல உள்குத்துக்கள் எதாவது இருக்கா?

வெறும் நகைச்சுவைன்னு சொல்ல மாட்டேன். நிறைய உள்குத்து இருக்கும். இதோ இந்த பதிவிலே முதல் பாரா கூட உள்குத்துதான். என் தம்பி கூட அதை எடுத்துவிடுன்னு சொன்னான். நான் செய்யலை. அது போல் சில தலைப்புகள் கூட உள்குத்து இருக்கும். சில உள்குத்துகள் சம்மந்தபட்டவர்களுக்கு மட்டுமே புரியும் என்பதால் அந்த உள்குத்து புரியாதவர்களுக்கு அது காமடியா தெரியும். அந்த பதிவில் அந்த முதல் பாரவுக்கு இம்சை அரசியிடம் வந்த பின்னூட்டத்தை பாருங்கள்.

இது ஒரு உதாரணம் மட்டுமே.


குழந்தைகளின் மீது பெற்றவர்கள் தம் ஆசைகளைத் திணிப்பது சரியா? உங்கள் பதிவில் அது குறித்து நிறைய உதாரணங்கள் காண முடிகிறது.. உங்க பதில் என்ன?

குழந்தைகள் மீது தன் ஆசையை திணிப்பது தவறு. திணிப்பதை நானும் சரி, தங்கமணியும் சரி ஏற்றுக்கவே மாட்டோம். நானும் என் சகோதர சகோதரிகளும் சிறு வயதாய் இருந்த போது எங்கள் விருப்பம் நிராகரிக்கப்பட்டது. அதற்காக எங்கள் குழந்தை மீது அந்த ஆசையை திணிக்க நினைக்கவில்லை. அப்படியே எங்களை அறியாமல் நாங்கள் அந்த தப்பை செய்யும் போது தெள்ள தெளிவாக குழந்தைகள் நிராகரிக்கின்றன. இந்த பதிவில் கூட "என்னய கேட்டுகிட்டா டான்ஸ் கிளாசில் சேத்தீங்க"ன்னு பாப்பா சொல்வதை பாருங்கள்.

அதே போல் இந்த பதிவில் கூட அபிபாப்பாவின் குணமறிந்து தான் இ.ஆ.ப என்று முடிவு செய்யப்பட்டதாக பதிவில் சொல்லியிருப்பேன்.

பதிவுலகில் குறுகியக் காலத்தில் கவனிக்கப்படும் பதிவராக ஆகணும்ன்னா என்னப் பண்ணனும்ன்னு சொல்லுங்களேன்?

புதிதாக பதியவரும் எல்லோருக்கும் பயனுள்ள கேள்வி. ஆனால் இதை என்னிடம் கேட்டதில் ஏதும் உள்குத்து உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் எனக்கு தெரிந்த அள்வு சொல்கிறேன்.

1. இந்த வலைப்பூவை நம் சொந்த குடும்பமாக பாவியுங்கள்.

2. கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். ஏனனில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதை உணரவும். உங்கள் கண்ணியத்தை பார்த்துதான் "சரி இவன் ஆபத்தில்லாதவன், இவன் பதிவை பாராட்டியோ, குறைகூறியோ பின்னூட்டமிட்டால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை" என்று உணர வையுங்கள்.

3. உங்களுக்கு எது எழுத வருமோ அதை எழுதவும். தெரியாததை எழுதி கையை சுட்டுக்க வேண்டாம்.(சொந்த அனுபவம்) இங்கே ஒவ்வொருவருக்கும் தனி தனி திறமை அதிகமாகவே உண்டு என்பதை புரிந்து கொள்ளவும்.

4. தனிமனித தாக்குதல் கண்டிப்பாக கூடாது.

5. குறிப்பாக நீங்கள் உள்ளே நுழையும் போது தமிழ்மணத்தில் எந்த தலைப்பு அப்போது பிரபலமாக இருக்கிறதோ அதில் புகுந்து கொள்ளவும். அதாவது நாய் சேகர்(தலைநகரம் - வடிவேலு)மாதிரி "நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்னு கூவிகிட்டே போலீஸ் வண்டியில் ஏறிவிடவும். உதாரணத்துக்கு இப்போ நுழைந்தால் இந்திய கிரிக்கெட் அணியை துவைத்து தொங்க போடலாம்.

6. தாராளமாக மற்ற பதிவுகளில் போய் பின்னூட்டம் போடவும்.

7. உங்கள் பதிவில் மற்ற பதிவர் பெயர்களை குறிப்பிட்டு முடிந்தால் லிங்க் கொடுத்து பாராட்டவும். இது நல்ல பலனை தரும்.

எனக்கு தெரிந்து இவ்வளவே.


நகைச்சுவை என்பது பதிவுகளில் எந்த வரையறைக்குள் நிற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?


எனக்கு தெரிந்து இந்த உலகில் எதுக்குமே வரையறை கிடையாது. எனக்கு சரின்னு பட்டது மற்றவர்களுக்கு தவறு என படலாம். ஆனாலும் தனி மனித தாக்குதல் அதனால் கிடைக்கும் நகைச்சுவையில் எனக்கு உடன்பாடு கிடையாது.

உதாரணத்துக்கு வேறு யாரையும் சொல்ல விரும்பவில்லை. நம்ம "தம்பி" யின் இந்த பதிவிலே சில வரிகள் எனக்கு உடன்பாடு இல்லை என தம்பியிடமே கூறினேன்.அந்த எல்லையின் விளிம்பு வரை போயிருப்பார் அதிலே.

இதோ நன்பர் கோவி.கண்ணன் அவர்களின் இந்த நகைச்சுவை பதிவை பாருங்கள். இது பார்த்திபன், வடிவேலு கண்ணில் பட்டால் கொத்திகிட்டு போயிடுவாங்க. நான் கூட இந்த தவரை செய்தேன் ஒரு முறை. சுட்டி காட்டப்பட்ட பின் அப்படி செய்வதில்லை. ஆக மற்றவர் மனம் புண்படாமல் சிரிப்பை வரவழைப்பதே நகைச்சுவையின் எல்லை என்னை பொருத்தமட்டில்.

?தமிழ் பதிவுலகில் நகைச்சுவை உங்கள் பார்வையில் சொல்லுங்களேன்

பதிவில் மட்டுமா நகைச்சுவை! பின்னூட்டங்களை பாருங்கள். சும்மா கலக்கலாக இருக்கும். ஒரு பதிவில் உஷா மேடம் பதிவில் கும்மி என்பதை கும்பி என்று டைப்பிங் தவறு நடந்துவிட்டது. பின்ன நம்ம லக்கியும், கொத்ஸும் வந்து விவாதங்கள் பரபரப்பாக நடந்தது. அதற்கு உஷா மேடம் "நான் கும்மின்னு சொன்னவுடனே இப்டி சர்றுன்னு வந்து நிக்கிறீங்களே"ன்னு ஒரு பின்னூட்டம் போட அதற்க்கு கொத்ஸ்"நீங்க எங்க கும்மின்னு சொன்னீங்க, நாங்க வந்து சர்றுன்னு வந்து நிக்கிறத்துக்கு"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டார். வெடிச்சிரிப்புதான்.

அது போல் செந்தழல்ரவி போடும் மொக்கை பதிவுகளும், லக்கி,பாலபாரதியின் பதிவுகளிள் அனானி கும்மிகளும் 100% சிரிப்புக்கு உத்தரவாதம்.

டுபுக்கு, வெட்டிதம்பி, தம்பி, பின்னூட்டதிலேயே காமடி செய்யும் நாகைசிவா, கண்மணி,கைப்ஸ் இப்படி நிறைய சொல்லலாம்.

சிரீயசா யாரும் படிக்க மாட்டாங்கன்னு தானே நகைச்சுவையா எழுதுறீங்க?

அப்படியில்லை. சீரியசாக எழுத நிறைய பேர் இருக்காங்க, தவிர நான் முதலில் சொன்னது போல் தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் என்பதை போல் நான் இப்படியே இருக்கவே ஆசைப்படுகிறேன்.

அமீரக வாழ் பதிவரான நீங்க.. அமீரக வாழ் தமிழர்கள் நிலைப் பத்தி பதிவுகள்ல்ல சொல்லணும்ன்னு நினைத்துண்டா?

அது பற்றி நிறைய எழுதலாம். தனி பதிவே போடும் அளவு செய்திகள் உண்டு. கண்டிப்பாக எழுதுகிறேன். அதிலே காமடிகூட உண்டு. விரைவில் பதிகிறேன்.


பொழுது போகாமாத் தான் பதிவுப் போட வந்தீங்களா? இல்லை வேறு எதேனும் நோக்கம் உண்டா?

உண்மையை சொல்லப்போனால் எப்போதும் லைம்லைட்டில் இருக்கனும். எல்லாரும் என்னை கவணித்துக் கொண்டே இருக்கனும் என்கிற வியர்டுதனம் தான் காரணம். இதை சொல்வதால் என் இமேஜ் பாதிக்காது. காரணம் 90% பேர் அப்படித்தான்.

உண்மையைச் சொல்லுங்க... தமிழ் மணத்துல்ல நகைச்சுவைப் பதிவுகளைப் படித்து அதிகம் சிரித்தீர்களா இல்லை சிரீயஸ் என்று முத்திரைக் குத்தப்பட்ட பதிவுகளைப் படித்து அதிகம் சிரிக்கிறீர்களா?

நான் அதிகம் படிப்பது சீரியஸ் பதிவுகள் தான். அதிலும் நான் தவராமல் படிப்பது லக்கிலுக், வரவனையயன், ஹரிஹரன், டோண்டு, மிதக்கும் வெளி, விடாதுகருப்பு, கால்கரி சிவா, மயிலாடுதுறை சிவா. இந்த சீரியஸ் பதிவுகள் சீரியஸாக இருக்கும். பின்னூட்டங்கள் காமடியாக இருக்கும்.

அடுத்து என் நட்பு வட்டத்தில் உள்ள அனைவரின் பதிவுகளும் படிப்பேன். இதில் நான் அதிகம் சிரிப்பது நன்பர் பால பாரதியின் அனானி பின்னூட்டங்கள், மற்றும் நன்பர் நாகைசிவா வின் பின்னூட்டங்களுக்கே:))


கடைசியா இன்னும் எத்தனை நாளைக்கு அபியை நம்பி உங்க பொழப்பை ஓட்டப் போறீங்க..?

நான் இது வரை போட்ட 26 பதிவுகளிள் 7 பதிவுக்குதான் பாப்பாவை தூக்கிகிட்டு சுத்தினேன். அலுக்கும் வரை சுத்தும் உத்தேசம். யாருக்கு அலுக்கும் என்பது உள்குத்து.

ஒரு கிரிக்கெட் ஜோக் உங்க சொந்தத் தயாரிப்பு சொல்லுங்க நம்ம கச்சேரிக்காக?

கிரிக்கெட் ஜோக்காயிடுச்சு என்பதே ஒரு சோகம். இதுல கிரிக்கெட் ஜோக்கா. சரி, இப்போ நடந்த ஜோக்குன்னா இந்தியா-பர்மூடா மேட்ச்தான். போயும் போயும் இந்தியா கிட்ட போய் தோத்தாங்களே பர்மூடா, ஆக உலகத்திலேயே மோசமான அணி பர்மூடாதான்.

சரி, சொந்த தயாரிப்பா இருக்கனும்ன்னு சொன்னதால இது.

*****************

நேத்திக்கு நானும் என் தம்பியும் நெட், வெப்கேம் சகிதமா பேசிகிட்டு இருந்தோம். அப்போ அபிபாப்பாவும் அங்கதான் இருந்தா.

அபிஅப்பா: என்னடா கிரிகெட் ஜுரம் விட்டாச்சா?

அபிசித்தப்பா: ம். பாவம் பசங்களுக்கு கிரிக்கெட் பத்தி எல்லாம் சொல்லி குடுத்தேன். எல்லார் போட்டோவும் காட்டி சொல்லிகுத்தேன்.

அபிஅப்பா: ம்.. பாஸ்ட் பவுலர் பதிவ பாத்தியா?

அ.சி: பார்த்தேன். அவர் என்ன அடுத்த உ.கோ போட்டிக்கு உத்தேச அணியில சச்சின், திராவிட், கங்குலி எல்லாம் சேத்துட்டார். ஏன் கவாஸ்கர், கபில் கூட சேத்திருக்கலாமே,

அ.அ: லல்லூ கூட ரொம்ப ஆர்வமா இருக்கார். அவரை சேத்தா சரத்பவார் நானும் ஆட்டைக்கு உண்டுன்னு அடம் பிடிப்பார்

அ.சி: டேய்! சொல்ல மறந்துட்டேனே, இந்த போட்டோல்லாம் காட்டி கிரிக்கெட் பத்தி சொல்லிகுடுத்த்னே அப்போ சரத்பவார் படத்தை காட்டி "இவர்தான் நம்ம இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர்"ன்னு சொன்னேன். அதுக்கு அபிபாப்பா "இவர் கூட கிரிக்கெட் விளையாடுவார் சித்தூ"ன்னா. அதுக்கு நான் "அவரு விளையாடி நீ எங்க பாத்த"ன்னு கேட்டேன். அதுக்கு பாப்பா" டி.வி ல பாத்தேன்"ன்னு சொன்னா."அவரு கூட இப்ப என்ன செய்யுவ இப்ப என்ன செய்யுவன்னு ஒரு சின்ன பையன் கிட்ட டான்ஸ் ஆடுவார்"ன்னா. அது என்ன விஷயும்ன்னா S.B.I விளம்பரம் பாரு புரியும்.

அ.அ: பார்த்தேன் பார்த்தேன். பேசாம அந்த தாத்தாஸ் டீமை கூட அடுத்த உ.கோ வுக்கு அனுப்பலாம்டா!!


********

மேலே உள்ள உரையாடல் கூட கொஞ்சம் செதுக்கினா ஒரு நகைச்சுவை பதிவு கிடைக்கும்.

பேட்டிக்கு நன்றி அபி அப்பா...

அடுத்து மீண்டும் மீட் பண்ணுவோம்

திஸ்கி! இது தேவ் அவர்களின் ஸ்டடர் பதிவில் வந்த அபிஅப்பபவின் பேட்டியயக்கும்! இன்னிக்கு வேற ஏதும் மேட்டர் அகப்படலை, ஆனன ஹிட் கவுண்டமணி வேற போட்டாச்சா அதான் இந்த மீள் பதிவு, தேவ் மண்ணிக்கனும்! கேக்ககம போட்டுட்டேன்!!!! இதிலேலிங் ஏதும் தரலை, காரணம் அது கிட்டதட்ட வலைச்சரம் மமதிரி ஆகி பொன்ஸ்க்கு கோவம் வருமேன்னு விட்டுட்டேன்:-))

October 16, 2007

நைனா சபை கோபிஅன்னனுக்கு ஒரு கடிதம்!!!

அன்புள்ள நைனா சபை தலைவர் கோபிஅன்னான் அவர்களுக்கு அபிஅப்பா மிகுந்த கோபத்துடன் எழுதும் தங்கள் பார்வைக்கு மட்டுமேயான தனி மடல். தங்களிடம் தொலைபேசி வழியாகவும், ஃபேக்ஸ், தந்தி, ஈ மெயில்,சேட் மற்றும் இன்ன பிற தொடர்பு ஊடகங்கள் வழியாகவும் அவ்வளவு ஏன் ஒரு முறை புறா வழியாகவும் செய்தி அனுப்பியும் உங்களிடமிருந்து சரியான பதில் இல்லை. புறா அனுப்பிய போது மட்டும் போன் செய்து ஏப்பம் விட்டீர்கள் புலிகேசி பாணியில். அதன் காரணமாகவே இப்பதிவு.

உங்களிடம் நாங்கள் அப்படி என்ன ஷார்ஜாவையா எழுதி கேட்டோம். ஒரு பதிவு போடுங்கள் கோபி என்றுதானே கேட்டோம். அப்படி என்ன பிடிவாதம் உங்களுக்கு? தாங்கள் களத்தில் இல்லாமையால் நாங்கள் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தங்கள் "நல்ல படம்" என்று விமர்சனம் போட்ட பொறி,தகப்பன்சாமி போன்ற படங்களை பார்க்காமல் தவிர்த்து ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் இப்போது????

வேறு வழி இல்லாமல் காயத்ரியை தமிழ்பட தரநிர்ணய ஆய்வாளராக பதவி பிரமாணம் செய்து வைத்தோம். ஆனால் அவர்களும் கவிதை அழுதும் மன்னிக்கவும் எழுதும் சொந்த பணி நிமிர்த்தமாக தமிழ் சினிமா விமர்சனம் செய்வதில்லை இப்போது. சரி நானே விமர்சன்ம் எழுதி தமிழ்மண ரசிகர்களை காப்பாற்றலாம் என் நினைத்த போது நாமக்கல் சிபி "அபிஅப்பா படம் பார்க்காமல் விமர்சனம் செய்து விடுவார்" என அவதூறு பரப்பி அம் முயற்சியை தடுத்து விட்டார். கேட்டமைக்கு தானே பாதிக்கப்பட்டதாக கண் துடைக்கிறார்.

பதிவு போட உங்களுக்கு நேரம் இல்லை என தம்பி கதிர் அவர்களிடம் வருத்தப்பட்டதாக அவர் என்னிடம் கூறிய போது நான் ஒரு நிமிடம் ஆடித்தான் போய்விட்டேன். தாங்கள் கடைசியா ஆக்கிய கூட்டாஞ்சோறு வெளியிட்டு 50 நாட்கள் ஆகின்றது. ஆனால் அதற்கு பிறகு தாங்கள் மற்ற பதிவர்கள் பதிவில் கொலை வெறியோடு ருத்ர தாண்டவமாடி தனியாகவும், சும்மாஅதிருது, மைபிரண்ட் போன்ற பதிவர்களோடு கூட்டு சேர்ந்தும் போட்ட பின்னூட்டங்களின் எண்ணிக்கை மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை.(அது என்ன அரை என்று கேட்கிறீகளா, இரு பின்னூட்டத்தில் //ரிப்// என்று மட்டும் போட்டிருந்தீர்கள்.

நீங்கள் சப்பைகட்டு கட்டலாம் நான் சும்மா //ரிப்பீட்டேய்// தானே போட்டேன் அது வெறும் ஒரு வார்த்தை தானே அதற்கு எனக்கு நேரம் இல்லாமலா போகும் பதிவு போடுவது என்றால் பல வார்த்தை குறைந்தது 120 வார்த்தைகளாவது வேண்டாமா என்று சாக்கு போக்கு சொல்லலாம். இல்லை கோபி அவர்களே நீங்கள் போட்ட மூன்று லெட்சத்து ஐநூற்று பத்தரை பின்னூடங்களில் ஒரு லெட்சத்து இருநூற்று இருபது பின்னூட்டங்கள் //டபுள் ரிப்பீட்டேய்// ஆக தாங்கள் நான்கு லெட்சத்து எழுநூற்று முப்பதரை வார்த்தைகள் டைப் செய்து சாகசம் செய்துள்ளீர்கள். இந்த நான்கு லெட்சத்து எழுநூற்று முப்பதரை வார்த்தைகள் மட்டும் உண்மைதமிழன் டைப் செய்திருந்தால் முழுதாக மூன்று பதிவுகள் கிடைத்திருக்கும் தமிழ்மணத்துக்கு. இதே சராசரி மற்ற பதிவர்கள் பதிவிட்டிருந்தால் மூவாயிரம் பதிவுகள் கிடைத்திருக்கும். ஆகவே தங்களுக்கு நேரம் இல்லை என கூறி இனி தப்பிக்க முயல வேண்டாம். சமீபத்தில் 1 நாளைக்கு முன்பு கூட ஒரு அப்பா பதிவர் 2 வரியில் பதிவு போட்டதா ஒரு செவி வழி செய்தி கூட உண்டு!!

தாங்கள் முதல் தேதி சம்பளம் வாங்கினால்தான் பதிவு போடுவது என்ற தங்களின் கொள்கை எங்களுக்கும் தெரியும் ஆனால் தாங்கள் இது வரை இந்த மாதத்துக்கான பதிவு போடவில்லை என்பதால் உங்கள் கம்பெனி மீதூ சந்தேகப்படுவதா உங்கள் மீது சந்தேகப்படுவதா?

சரி!உங்களுக்கு உடல்நிலை ஏதும் சரியில்லையோ என நான் சென்ஷி அவர்கலை விட்டு பரிசோதித்தபோது அவர் சொன்ன செய்தி என்னை வியப்புக்கு உள்ளாழ்த்தியது! ஆமாம் அவர் சொன்னது என்ன தெரியுமா? "என்னை யாராவது ஹாய் கோபின்னு ஆபீஸ்ல கூப்பிட்டல் கூட எனக்கு அண்ணாச்சி சொன்னது போல் குருதி அழுத்தம் அதிகமாகிறது" என்றுசொன்னீர்களாம். என்ன கோபியன்னேன் இந்த காரணத்துக்காகவே தான் தம்பி கதிர் அவர்கள் தங்கள் பெயரை "பொறி கோபி" என்றும் அந்த "கப்பியூட்டர் கத்துக்கடா கத்துக்கடா"ன்னு கதறும் அந்த கோபியை "தகடூர் கோபி" எனவும் பெயரை மாற்றி விட்டதாக சொன்னார். அதனால அந்த காரணமும் வீணாகி விட்டது?

இப்போது புதிதாக என்ன காரணம் சொல்ல உத்தேசம்!!

என்னை பூங்காவிலே கூப்பிடவில்லை எனவும் சொல்லமுடியாது, ஏனனில் பூங்கா என்பதே என்னால் அழிக்கப்பட்டுவிட்டது என ஒரு கிசு கிசுவும் இப்போது உலவுகிறது!!

இனிமேல் புதிதாக காரணம் கண்டுபிடிக்காமல் உடனடியாக பதிவு போட்டு எங்கள் வயிற்றில் பீர் வார்க்கவும்!!!

ஸ்மார்ட் ராமசாமி!!!!

இங்கே அமீரகத்திலே ஒரு மிக பெரிய க்ளீனிங் கம்பெனி கிட்டத்தட்ட 40 000 பேர் ஊழியர்கள். அதிலே 30000 பேர் தமிழர்கள் தான். சம்பளம் மிக குறைவுதான். 300 திர்காம்(3000 ரூபாய்) தான் எட்டு மணி நேரத்துக்கு . அதற்கு மேல் ஓவர் டைம். எல்லாம் சேர்த்து 4500 ரூபாய் வரும். ஆனால் தங்குமிடமும் உணவும் கம்பெனி வழங்கிவிடும். சொர்கம்ன்னா அந்த கம்பெனி தான். கவலை இல்லாத மனிதர்களை அங்கே தான் பார்க்க முடியும். ராஜ வாழ்கை வாழ்வார்கள். 3000 ரூபாய் போதும் என ஓவர் டைம் பார்க்காமல் சந்தோஷமாக இருப்பார்கள். சிலர் எட்டு மணி நேரம் மட்டும் பார்த்து விட்டு சில வீடுகளில் அல்லது கடைகளில் பார்ட்டைம் பார்த்து 10 000 வரை சம்பாதிக்கும் திறமைசாலிகளும் உண்டு. அப்படி ரிஸ்க் எடுக்க விரும்பாத சிலர் அதே கம்பெனியில் ஓவர் டைம் பார்த்து 7000 வரை சம்பாதித்து சலிப்படைபவர்களும் உண்டு.

ஒரு கேம்ப்பில் கிட்டத்தட்ட 3000 பேர் வரை இருப்பார்கள். ஒரு ரூமிலே பர்த் டைப் பெட் போட்டு 20 பேர் வரை இருப்பார்கள். பெட்டுக்கு பெட் தனி தனி டிவி, முதற் கொண்டு எல்லா வகை எலட்ரானிக் சாதனுங்களும் கூடவே சன் டிவி முதல் இப்போ வந்த கலைஞர் டிவி வரை வைத்து கொண்டு சகல சௌபாக்கியங்களோடும் வாழ்வார்கள். அந்த கம்பெனி விசாவில் இருப்பவர்களுக்கு தான் நான் மேலே சொன்ன சம்பளம். ஆனால் வெளி கம்பனியில் இருந்து தப்பி வந்து இந்த கம்பெனியில் சேர்ந்தாலோ அல்லது விசா முடிந்து இந்த கம்பனியில் அடைக்கலம் ஆனவர்களுக்கோ 5000 ரூபாய் பேசிக், ஓவர் டைம் சேர்த்து 12000 வரை வரும்(அவர்களை கல்லிவெல்லி ஆட்கள் என சொல்லுவார்கள்) காரணம் இவர்களுக்கான விசா செலவுகளோ அல்லது எந்த வித ரெஸ்பான்ஸிபிலிட்டியும் இந்த கம்பனிக்கு கிடையாதல்லவா அதனால் இவர்களுக்கு சம்பளம் அதிகம்.

இங்கே நான் சொல்ல போவது ஒரு ஸ்மார்ட் ராமசாமியை பற்றிய கதை. நம்ம ராமசாமி முதலில் வந்து இறங்கிய இடம் அபுதாபியிலே. அந்த கம்பனியின் அபுதாபி பிரிவில் 3000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து முதல் 2 மாதம் ஓட்டினார். பின்பு ஈத் பெருநாள் லீவ் வந்தது மூன்று நாட்கள். அப்போது அபுதாபி பிரிவிலிருந்து ஷார்ஜா பிரிவிற்க்கு கம்பனியில் இருந்து இலவசமாக பஸ் விடவே நம்ம ராமசாமியும் துபாய் சுற்றி பார்க்கும் ஆசையில் ஏறிக்கொண்டார். அவருக்கு ஷார்ஜாவில் யாரும் தெரிந்தவர்கள் கிடையாது. ஆனாலும் ஏறி ஷார்ஜா வந்து சேர்ந்துவிட அங்கேயும் எல்லாருமே தமிழர்கள் தானே அங்கே ஒரு ரூமில் தங்கி கொண்டு புதிய நண்பர்கள் பிடித்து கொண்டு சந்தோஷமாக இரண்டு நாட்கள் கழித்தார். இது போல நேரத்தில் எல்லோர் ரூமிலும் விருந்தாளிகள் அதிகமாக கூடுவர். அப்போது தான் கேம்ப்பாஸ் தங்களுக்கு தேவையான கல்லிவெல்லி ஆட்களை எடுப்பார்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப. அப்படி ஆள் எடுக்கும் போது நம்ம ராமசாமியும் வரிசையில் நிற்க அவருக்கும் யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டு, அவருக்கும் பெட் ஒதுக்கப்பட்டு அடுத்த நாள் முதல் வேலையும் கொடுக்கப்பட்டு அதே கம்பெனியின் அதிகாரபூர்வ ஆனால் கல்லிவெல்லி ஊழியராக ஆக்கப்பட்டு விட்டார். தொடந்து இரண்டரை வருடம் அப்படியே அதே கம்பெனியில் தன் கூட வந்தவர்கள் அபுதாபியில் 4500 வாங்க இவர் மட்டும் 8000 வாங்கி சந்தோஷமாக இருந்தார். அப்படியே சந்தோஷமாக போய் கொண்டு இருந்த அவருக்கு விசா முடிவடையும் நாள் வந்தது. உடனே கிளம்பி அபுதாபி வந்து தன் அலுவலகத்தில் 'மன்னிப்பு' கடிதமும் 5000 ரூபாய் அபராதமும் கட்டி திரும்பவும் விசா அடித்து கொண்டார். அந்த இடைப்பட்ட காலத்தில் தன் பழைய நண்பர்களோடு 3000 ரூபாய் பேசிக் சம்பளத்தில் இரண்டு மாதம் வேலை செய்து விட்டு விசா அடித்த பின் பழைய படி ஷார்ஜா வந்து திரும்பவும் கல்லிவெல்லியாக அதிக சம்பளத்தில் சேர்ந்து விட்டார்.

நம் ராமசாமிக்கு வாயும் கொஞ்சம் அதிகம். ஹிந்தியும், அரபியும் கூட பேச கற்று கொண்டார். அணைவரையும் சுலபத்தில் கவந்து விடுவார்.இப்படி சந்தோஷமாக போய் கொண்டிருந்த ராமசாமி வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் அதிரடியாக போலீஸ் சோதனை நடந்தது. யாரெல்லாம் கல்லிவெல்லி ஆட்களோ அவர்களை பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றவே அந்த சோதனை. மற்ற எல்லோரிடமும் "பத்தக்கா" எனப்படும் வேலை செய்வதற்கான அடையாள அட்டை இருக்கவே இவர் மட்டும் தன்னிடம் இல்லை என சொல்லி போலீஸ் வாகனத்தில் ஏறி கொண்டார். இப்படி கல்லிவெல்லி ஆட்களை வேலைக்கு வைத்தால் அந்த கம்பெனிக்கும் அரசாங்கத்தால் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அதே கம்பெனி அடையாள அட்டைதான் நம்ம ராமசாமி சட்டை பையில் இருக்கிறதே. ஆனால் எல்லோருக்கும் முன்பாக எடுத்தால் அவரும் அந்த கம்பெனி ஊழியர் தான் என தெரிந்து விடுமே என்று தான் போலீஸ் வண்டியில் ஏறி கொண்டார். பின்பு போகும் வழியில் போலீசாரிடம் காட்டி அவர்கள் இறக்கி விடவே வந்து சேர்ந்து விட்டார். கம்பனிக்கும் அபராதத்தில் இருந்து தப்பித்தோமே என சந்தோஷம். ராமசாயிடம் எப்படி போலீஸ் விட்டது உங்களை என கேட்ட போது தான் தன் அரபி புலமையை வைத்து சாமர்த்தியமாக தப்பி வந்த தாக கூறவும் இவரின் திறமையை மெச்சி அவருக்கு சூப்பர்வைசர் வேலை தரப்பட்டது. அவருடைய சம்பளமோ கிட்டதட்ட 18000 ஆகிவிட்டது. ஆனால் அவர் கூட வந்தவர்களின் சம்பளமோ 4500 தான்.

பிறகு சிறிது நாட்கள் கழித்து ராமசாமி தனியான பிராஜக்ட்க்கு சூப்பர்வைசராக ஆகி தன் திறமையை கம்பெனிக்கு காட்டி பின் உண்மையை சொல்லி கம்பெனியும் இவரை மன்னித்து இப்போது அவர் அந்த கம்பெனியின் அதிகாரபூர்வ ஊழியர். மேலும் ஊதிய உயர்வும் பெற்று நல்ல நிலையில் இருக்கிறார். ஆனால் அவர் கூட வந்தவர்கள் இன்னமும் அதே 4500 மட்டும் வாங்கி கொண்டிருக்கிறார்கள்.

இவர் செய்தது சரியா தவரா என எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அந்த திறமை எனக்கு பிடிக்கிறது. இந்த விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் அவரின் திறமை எனக்கு பிடிக்கும். என்றைகாவது பதிவு போட ஒன்னும் தோன்றாத போது அவரின் மற்ற விஷயங்களை சொல்கிறேன்.

திஸ்கி: தலைவர் பேர் ராமசாமி இல்லீங்க ,நான் சும்மா மாத்தி போட்டிருக்கேன்!!

October 14, 2007

பொறாமை பிடித்தவர்களின் பின்னூட்டம் பிரசுரிக்க பட மாட்டாது!!!


எனக்கு சைக்கிளே ஓட்டதெரியாது என தம்பியிடம் சொல்லிய கோபி! அது தவிர நான் அதற்காக என்னை நானே நிரூபித்து போட்ட பதிவிலே வந்து எகத்தாள்ம் செய்த மகளிர் அணி உருப்பினர்களே, அந்த பதிவெலே வந்து கும்மாளமிட்ட குசும்பனே, இதோ இப்போ என்னை நிரூபிக்கிறேன் நான் யார் என்று!! தரையில் ஓட்டியதை அப்போ பார்த்தீர்கள்! தண்ணியில் ஓட்டியதை இப்போ பாருங்க, இந்த பதிவிலும் விளையாடினா அடுத்து அபி அப்பாவின் லீலைகள் அடுத்தடுத்து வெளியிடப்படும்!! இது எச்சரிக்கை இல்லை கட்டளை கட்டளை கட்டளை!!!!

வாழ்த்துக்கள் அன்பு நண்பர் ஆசீப் மற்றும் அவர் குடும்பத்தினனர்களுக்கும், நம்ம பாஸ்ட் பவுலர், அவரோட தம்பி லொடுக்கர் மற்றும் அவங்க குடும்பத்தினர்கள், தவிர புது மாப்ளயாக போகும் மின்னல், மற்றும் அன்பு தங்கை ஜஸீலா,தங்கமச்சான்,பாப்பா, ஜுஃபர், சுல்தான் பாய், ஷாஜகான் அண்ணன்,நிலவு நண்பன்,எல்லோருக்கும் என் அன்பான ரலலான் வாழ்த்துக்கள்!!

October 8, 2007

தென்னவன் புகழ் காமடி நடிகர் விஜய்காந்துக்கு பிடிக்காத வார்த்தை எனக்கு வேண்டும்!!!

நம்ம குசும்பர் கொஞ்சநாள் முன்ன கதிர் தம்பியை ரொம்பவே கலாய்ச்சி எடுத்து தம்பி கோவிச்சுகிட்டு மாடில இருந்து குதிக்க போறேன்னு என் கிட்ட மிரட்டல் விடுத்து அதுக்கு நான் "கொஞ்சம் இருப்பா, அவனை கண்டிக்கிறேன்"னு சொல்லிட்டு பின்ன ஒரு நாள் குசும்பனை கூப்பிட்டு நாங்க 5 பேர் அவர் கூட ஹோட்டலுக்கு போய் "6 கல்கண்டு பால் அதிலே 5 நல்லா ஆத்தி தாங்க 1 பால் கொதிக்க கொதிக்க தாங்க"ன்னு சொல்லி வாங்கி சூடு பாலை குசும்பரிடம் குடுத்து விட்டு நாங்கள் அவசர அவசரமாக குடித்து விட்டு வெளியே வந்து குசும்பர் பர்ஸை பழுக்க வச்சி பின்ன தன் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல் "நான் இனி நல்ல பிள்ளையாக இருப்பேன், தம்பியை கலாய்க்க மாட்டேன்"ன்னு போடும் படி ஆகியது. அது போல நானும் ஸ்டேட்டஸ் மெஸேஜ்ல் போடாமல் பதிவு போட்டு சொல்லப்படும் அளவு ஒரு விஷயம் நடந்து போச்சுங்க. நான் இந்த பதிவின் மூலமாக சொல்லிக்க போவது இது தாங்க. "நான் போனில் இனி யாரையும் கலாய்க்க மாட்டேன், நல்ல பிள்ளையாக இருப்பேன் எனவே பொது மன்னிப்பு தாங்க".

நடந்த விஷயம் இது தாங்க, மங்களூர் சிவா தான் எல்லாத்துக்கும் காரணம். நான் பாட்டுக்கு பேசாம சேட்டி கிட்டு தாங்க இருந்தேன். அப்ப அவரு தான் "என் பிரண்ட் ஒருத்தன் துபாய்ல இருக்கான் பேர் சங்கர், ரொம்ப நல்ல பையன்"ன்னு சொன்னார். அப்படியான்னு கேட்டுட்டு போயிருந்தா இந்நேரம் இந்த பதிவு போட வேண்டி வந்திருக்காது. நானும் ஆர்வமா "நம்பர் குடுங்க கலாய்ப்போம்"ன்னு வாங்கினேன். விதி வலியது. இழுத்து கொண்டு விட்டுடுச்சு!

ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

அபி அப்பா: "ஹலோ வணக்கம் சங்கர்"

சங்கர்: "வணக்கம் நீங்க யாரு"

அ.அ:"எல்லாம் தெரிஞ்சவங்க தான் இப்பதான் துபாய் வந்தேன், ராமு உங்க நம்பர் குடுத்தாரு, சரி எப்படி இருக்கீங்க"

சங்கு: "எந்த ராமு, சரி நீங்க யாரு"

அ.அ: "கண்டுபிடிங்க பார்ப்போம்"

சங்கு: முடியலைங்க ப்ளீஸ் சொல்லுங்க

அ.அ: அதல்லாம் சொல்ல மாட்டேன், சரி அந்த ஓட்டு வீட்டு விஷயம் என்னா ஆச்சு?

எல்லா ஊர்லயும் நிச்சயமா ஓட்டுவீடு இருக்கும், அதிலே ஏதாவது ஓட்டு வீட்டிலே கண்டிப்பா தாவணி பொண்ணுங்க இருக்கும், நிச்சயம் எல்லா பசங்களும் ஜொல்லு விட்டிருப்பானுங்க, இப்படி சும்மா கேட்டு போட்டு வாங்குவோம் பதிவு போட வசதியா இருக்கும்ன்னு நெனச்சு கேட்டேன். அதுக்கு பதில் வந்துச்சு!

சங்கு: ஓ அதுவா 3000 குடுத்து முடிச்சுட்டேன்.

ஹையோ குழப்புராரே! என்னாத்த 3000 குடுத்து முடிச்சார், நான் கேட்டது என்ன அவர் சொல்றது என்ன...

சங்கு: ரொம்ப நாளா விலை படியாம இருந்துச்சா 3000 ரூவாய்ல பிசிறிகிட்டு இருக்க கூடாதுன்னு இந்த தடவை போனப்போ அந்த ஓட்டு வீட்டை ரிஜிஸ்டர் பண்ணிட்டேன், ஆங் இப்ப கண்டுபிடிச்சிட்டேன் நீங்க யாருன்னு!!

அட ஆண்டவா கலாய்த்தல் இன்னிக்கு ஒர்கவுட் ஆகாது போல இருக்குன்னு நெனச்சுகிட்டே மேல பேசினேன்

அ.அ: "சொல்லுங்க நான் யாரு"

சங்கு: "அதை என் வாயால சொல்ல மாட்டேன்"

ஆகா முதல் தடவையா அபிஅப்பாவுக்கு சறுக்கிடுச்சே, பார்ட்டி ஏடாகூடமான ஆள் மாதிரி இருக்கே, மங்களுர் சிவா "பையன் பசு மாதிரி"ன்னு சொன்னாரே ஆனா அப்படி தெரியலையேன்னு நெனச்சுகிட்டு ஒரு வேளை நான் யாருன்னு தெரிஞ்சிருக்குமோன்னு ஒரு க்யூரியாசிட்டில தொடர்ந்தேன்.

அ.அ: நெசமாவே கண்டுபிடிச்சீங்களா ப்ளீஸ் சொல்லுங்க நான் யாரு?

சங்கு: நான் தான் சொல்லமாட்டேன்னு சொல்றனே பின்ன என்ன நொய்யி நொய்யின்னு சரி எப்ப கொண்டு வந்து தாரீங்க"

அ.அ: என்னாத்த்த்த்த

சங்கு: என்னாது என்னாத்தயா, பணம் தலைவா பணம் பத்தாயிரம்ன்னா சும்மாவா?

அ.அ: ஹல்லோ பத்தாயிரமா பணமா ராங் நம்பருங்க, நான் யாருன்னு நெனச்சுகிட்டீங்க, யாருக்கு நான் பத்தாயிரம் தரனும் எனக்கு ஒன்னுமே புரியலைங்க

சங்கு: ஹலோ பண விஷயத்துல விளையாடாதீங்க, என் நம்பரை உங்களுக்கு குடுத்தாரே ராமு அவர்கிட்ட விசாவுக்கு பத்தாயிரம் வாங்கிட்டு வந்தீங்ளாம் அதனால தான் என் நம்பரை குடுத்தாராம், என்னய வாங்கி அனுப்ப சொன்னாரு, சரி முதல் மாச சம்பளம் வாங்கியாச்சா?

அ.அ:ஹலோ நான் 15 வருஷமா இங்க இருக்கேன், நீங்க யாருன்னு நெனச்சுகிட்டு பேசறீங்க,

இப்படியாக நான் என் பற்றிய முழு விபரமும் சொல்லியும்,அங்க அடையாளம், குலம் கோத்திரம், பக்கத்து வூட்டுகாரன், பால்காரன் பத்தி எல்லாம் சொல்லியும் ச்சும்மா கலாய்க்க இப்படி போன் செஞ்சேன் என கெஞ்சியும் சங்கு விடாபுடியாக பத்தாயிரத்திலேயே இருந்தது. இப்படியாக தினமும் 15 நாட்களாக போன் பண்ணி பத்தாயிரம் கேட்க ஆரம்பிச்ச சங்கு நேத்திக்கு ராத்திரி ஒரு மணிக்கு நான் சொர்க்கத்தில் சைக்கிள் ஓட்டி கொண்டிருந்த போது எழுப்பி பத்தாயிரம் எங்கேன்னு கேட்டுச்சு. "என்னப்பா அர்த்த ராத்திரிலன்னு கேட்டதுக்கு அதுக்கு நேத்து முதல் நைட்டூட்டியாம், இனிமே அந்த டைம் தான் வசதி படுதாம் போன் பண்ண, ஆண்டவா காப்பாத்துப்பா!

பின்ன யோசிச்சு பார்த்தேன், நான் போனில் யாரையோ கலாய்ச்சி அந்த பாவம் தான் திருப்பிகிட்டு போட்டு தாக்குதுன்னு குரங்கு ராதாவை போன்ல எழுப்பி மன்னிப்பு கேட்டுடலாம்ன்னு எழுப்பினா "மாப்ள நான் மீட்டிங்க இருக்கேன்"ன்னு சொல்றான். இது ஒரு ஃபேஷனா போச்சுப்பா, மீட்டிங்ல இருக்கேன்னு சொல்றது. சைக்கிள்ல வெங்காய மூட்டை விக்கிறவன்ல இருந்து பஸ்டாண்டு கக்கூஸ் காண்டிராக்டர் வரைக்கும் "மீட்டிங்"ல இருப்பானுங்க. ராதாவுக்கு ரொம்ப நாள் ஆசை போலருக்கு யாராவது போன் பண்ணினா "மீட்டிங்ல இருக்கேன்"ன்னு சொல்ல. அதுக்கு நான் தான் கிடச்சனா? அதுவும் அர்த்த ராத்திரில என்னடா மீட்டிங்! (குசும்பா நான் உன்னை ஏதும் சொல்லலை)

சரி விஷயத்துக்கு வாரேன், தனி தனியா மன்னிப்பு கேட்டு போன்ல காசு போவதை விட ஒரு பதிவே போட்டு பொதுமன்னிப்பு கேட்டுவோமேன்னு தான் இந்த பதிவு, மத்தபடி அபிஅப்பாவுக்கு பதிவு போட ஒன்னும் மேட்டர் கிடைக்கலை அதனால தான் தம்பி கதிர் மாதிரி பஸ்ல பேசிக்கிறதை பதிவா போடுறது, போன்ல பேசறதை பதிவா போடுறதுன்னு ஆரம்பிச்சுட்டார்ன்னு யாரும் சொல்ல பிடாது ஆமாம்!!! கதிர் சாரே உடனே சர்ன்னு கோவிச்சுகிட்டு வந்துடாதே "மாசாமாசம் 1ம் தேதி சம்பளம் வாங்கிட்ட உடனே ஸ்வீட் வாங்கிட்டு வரும் அப்பாக்கள் போல கோபி ஒரு பதிவு போடுவானே மாச பதிவு, அதும் இந்த மாசம் அதையும் போடல அவனை கலாய்க்காம எங்கிட்ட ஏன் வர்ரீங்க"ன்னு கேட்டுகிட்டு!!!

October 3, 2007

என் புதிய தோழன் DXB - 11690

எனக்கு நாளை முதன் இவன் புதிய தோழன். இவன் துபாய்க்கு வந்து 4 வருடம் ஆகிவிட்டன,மூக்கு சப்பைக்காரன், ஆனால் ஜப்பான் காரன் இல்லை. ஷேக் சையது சாலையில் சும்மா 120 கி.மீ வேகம் போறான். சக்குன்னு நிக்கிறான். சர்ருன்னு திரும்புறான். கூட வரும் சக வண்டிகளை அனாயசயகமாக முந்துகிறான். வெள்ளைகாரனாட்டம் கலரு இவன்.

காலையில் நான் அலுவலகம் போக கிளம்பி வெளியே வந்தால் எனக்கு முன்னமே குளிச்சு முடிச்சுட்டு ரெடியா நிற்ப்பதாக சொல்லியிருக்கான். அருமையா ஸ்டீரியோ எபக்டில் பாடுகிறான்.

ஆனா இவனுக்கு ஷேக்சையது சாலையில் டோல்கேட் எங்கே என சரிவர தெரியாது. ஆனாலும் பிரச்சனை இல்லை,அதான் எனக்கு தெரியுமே, நான் சொல்லி கொடுத்துப்பேன். நான் இனி எந்த நேரத்திலும் நடுநிசியிலும் எப்ப நெனச்சாலும் சர்ன்னு போய் சினிமா பார்த்துட்டு வரமுடியும்.

நினைத்த நேரத்தில் சிம்ரன் ஆப்பகடை போகலாம். கோவிலுக்கு போகலாம்.ஆபீஸில் போரடிச்சா எப்போ வேண்டுமானாலும் வீட்டுக்கு வரலாம். வீட்டிலே வெள்ளிகிழமை போரடிச்சால் ஆபீஸ் போகலாம்!

வாடா என் இனிய தோழா DXB 11690