பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

October 23, 2007

மெஹா ஹிட் புகழ் "வலைமாமணி" பெனாத்தலார் அவர்களுடன் ஒரு நேர்காணல்!!!

"வலைமாமணி" என எங்கள் பாசக்கார குடும்பத்தினர் சார்பாக கண்மணி டீச்சர் அவர்களால் பட்டமளிக்கப்பட்ட அமீரக சிங்கம் "பினாத்தலார்" அவர்களின் அதிரடியான "கனவில் வரக்கூடாத தமிழ்மணம்" பதிவின் மாபெரும் வெற்றிக்கு பின் அவரை பேட்டி காண கரண்தர்பாரில் இருந்து டெல்லிதர்பார் வரை பினாத்தலாரின் பேட்டிக்காக காத்து கிடந்தாலும் அமீரக வலைப்பதிவர்களுக்காக ஒரு தொலை பேசி பேட்டிக்கு ஒப்புக்கொண்டார் நம் பினாத்தலார். அமீரக வலைப்பதிவர்கள் சார்பாக அபிஅப்பா நானே துணிந்து கேள்வி கணைகளை வீச அதிரடியாக பதில் சொல்லிய பினாத்தலாரை இந்த இடத்தில் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதோ பேட்டி ஆரம்பம்!

அபிஅப்பா: வணக்கம் பினாத்தலாரே, நீங்க இந்த மாபெரும் வெற்றி குறித்து எப்படி உணர்க்கிறீர்கள்?

பினாத்தலார்: வணக்கம் அபிஅப்பா, மூணு வருஷமா கட்சி நடத்தி நாலாவது வருஷத்துல அடி எடுத்து வச்சு பல வெற்றிய பார்த்த எனக்கு இதல்லாம் ஜுஜுபி

அ.அ: சரி கேள்விக்கு போவோமா, ஸ்டார் பதிவிலே இருந்து வருவோம், ராமன் பெருங்குடிகாரன் என கலைஞர் பதிவு போட்டாரே அதுக்கு இராமன் சென்னையை அடுத்த "பெருங்குடி" பஞ்சாயத்தை சேர்ந்தவர் எனவும், அல்லது "மேட்டுக்குடி" வர்க்கம் எனவும், அல்லது பெரும் குடிகாரன் எனவும் பல பொருள் தந்து மக்களை குழப்புவதாக பேசிக்கிறாங்களே மக்கள் அது பத்தி உங்க பதில் என்ன?

பினா: ஹி ஹி...இது நான் தன்னிச்சையா சொல்லக்கூடைய பதில் இல்ல. எனவே பொதுக்குகுழு கூடி அதிலே நான் மட்டும் முடிவெடுத்து பின்ன நிருபர்களுக்கு சொல்லிவிடுறேன் அப்ப தெரிஞ்சுக்கோங்க!

அ.அ: சரி, சேது சமுத்திர திட்டத்துக்கு நமீதாவின் ஆதரவு கேட்டு கலைஞர் பதிவு போட்டாரே, அதன் பின்னனியிலே என்ன இருக்கு?

பினா: அதுவா, நீங்க நினைப்பது போல் நமீதா சின்ன ஆள் இல்லை!

அ.அ: ஆமா

பினா: குறுக்க ஜொல்லாதீங்க, அதாவது நமீதா இப்போ ஒரு நீதிபதி ஸ்தானத்துல இருக்கிறாங்க, இது உங்களுக்கு வேணா தெரியாம இருக்கலாம். ஆனா கலைஞ்ர் டி வி பார்க்கும் எல்லோருக்கும் தெரியும் அது பத்தி. அவர் நீதியை மதிப்பவர் என்பதும் உங்களுக்கு தெரியும், அதனாலத்தான் அவர் நமீதாவிடம் ஆதரவு கேட்டார். அத விட கொடுமை உங்க பையன் நட்ராஜ் கிட்ட கூட ஆதரவு கேட்டதாகவும் அதற்கு அவரும் தனக்கு லாலிபாப்பும், தன் டைகருக்கு பெடிகிரியும் வாங்கி குடுத்தா ஆதரவு கண்டிப்பா உண்டுன்னும் சொன்னதா கூட ஒரு தகவல்!

அ.அ: சரி அப்துல் கலாம் "கனவு (மட்டுமே) காணவேண்டும்" என போட்ட பதிவுக்கு ஏன் ஒரே ஒரு பின்னூட்டம்? அது யார் போட்டது?

பினா: ஓ அதுவா, "ராக்கெட் விட்டால் சோதனையோட்டம், பதிவு போட்டால் சோதனைபின்னூட்டம்" என்னும் கொள்கை படி அவருக்கு அவரே போட்டு கிட்ட சோதனை பின்னூட்டம் தான் அது!

அ.அ: ஓக்கே, கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்ப்போம் என பாஜக பதிவு போட்டது பத்தி?

பினா: அதுவா, மறைமுகமா, நேர்முகமா, பக்க வாட்டிலே என எல்லா பக்கமும் வந்து சொல்லியும் ம.பொ.சி யிம் ஆவி கூட திரும்பி பார்க்காத கோவத்தில் எழுதப்பட்ட பதிவு. ஆனா அதை எழுதிய இல.கணேசன் கூட அதற்க்கு பின்னூட்டம் போட வெக்கப்பட்டதால் சும்மா இருக்குதேன்னு பாவப்பட்டு நம்ம குசும்பம் போய் அதிலே " உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கே"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடி வந்துட்டான். ஆனா பாருங்க வந்த பின்னூட்டத்தை ஏன் விடுவானேன்னு அதையும் பப்ளிஷ் பண்ணிட்டாங்க!

அ.அ: செட்டாப் பாக்ஸ் வைப்பது டிவிக்கும் நல்லது பதிவிலே 12 பின்னூட்டம் விழுந்ததே அது எப்படி?

பினா: அதுவா ரத்தன் டாடா, லெச்சுமி மித்தல், பிர்லா குழும ஆடிட்டர்,முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பில்கேட்ஸ், விஜய் மல்லையா, கோத்ரெஜ், பாஜாஜ், சசிகலா, இளவரசி மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் போட்ட பின்னூட்டம் அதெல்லாம்.

அ.அ: "2011ல் நானும் முதல்வர்"ன்னு சரத்குமார் போட்ட பதிவு பத்தி சொல்லுங்க?

பினா: நல்லா ஏமாந்திங்களா, சிபி, குசும்பன் மாதிரி தான் சரத் குமாரும், நீங்க பதிவு உள்ள போய் பார்த்தீங்கன்னா " 2007 ல் ஒரு "நம்நாடு" 2011ல் "நானும் முதல்வர் - நாயகி இன்னார் இன்னார்ன்னு விளம்பரம் கொடுத்திருப்பார் அவர் நடிக்க இருக்கும் படத்துக்கு. சரியான மொக்கை பதிவுன்னு சர்வேசனும் இந்த வருஷத்துக்கு அவார்டு குடுப்பார் பாருங்க

அ.அ: சரி பினாத்தலாரே! காமடி கொஞ்சம் குறைவா இருப்பதா பேசிக்கறாங்களே இந்த பதிவிலே!

பினா: யார் சொன்னது, சொல்றவங்களை என் முகத்துக்கு நேரா வந்து பேச சொல்லுங்க நான் மூஞ்சிய பேத்துடறேன், இத்தோட நான் பேட்டிய முடிச்சிக்கறேன்......

அ.அ: சரி சரி "கேடி" வேலை எல்லாம் செய்யாதீங்க பினாத்தலாரே, கொஞ்சம் இருந்து விளக்கம் சொல்லிட்டு போங்க! கூல் கூல்

பினா: (கொஞ்சம் ஐஸ் வாட்டர் குடிச்சுட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டு) தோ பாருங்க அபிஅப்பா நான் அதிலே மாத்திரம் மொத்தம் 2 இடத்திலே காமடியை அள்ளி இறைத்திருக்கிறேனே, அதனால இந்த சீரியஸ் பதிவுன் நோக்கமே கெட்டுப்போயிடும் அபாயம் இருந்ததால் அத்தோட காமடியை நிறுத்திக்க சொல்லி எனக்கு பல இடத்திலிருந்தும் தந்தி வந்துச்சு அதனால விட்டுட்டேன்.

அ.அ: நீங்க சொல்றது புரியலையே!

பினா: என்ன அபிஅப்பா, சரியான பல்பா இருக்கீங்களே, பரண்ல பாருங்க "வேலூர் நினைவுகள்"ன்னு வைக்கோ எழுதிருப்பார். இதுல ஒரு விஷேஷம் என்னன்னா அந்த பதிவை யாரும் இன்னும் படிக்காமலே அது சூடான இடுகைல வந்துடுச்சு.

அ.அ: அது எப்படி முடியும்?

பினா: அதாங்க வைக்கோ மகிமை! பேரை கேட்டாலா சும்மா அதிருதில்ல தமிழ்மணம். சும்மா பல்லு முளைக்காத குழந்தை முதல் பல்லு போன பாட்டி வரை அப்படி ஒரு சிரிப்பு கொக்கேபிக்கேன்னு, சரி நல்லா வரவேற்ப்பா இருக்கேன்னு அவர் முகத்தை போட்டு அவர் "ஸ்டாலின் கராத்தே கற்ப்பதை தடை செய்ய வேண்டும்" என போட்ட பதிவை படிச்சுட்டு ஹஹ் ஹஹ் ஹஹ் ஹஹ்

அ.அ: சிரிக்காதீங்க சொல்லுங்க

பினா: முடியல அபிஅப்பா, இப்படிப்பட்ட 2 காமடி சீன் வச்சு மருத்துவர் அய்யா, இளங்கோவன் பதிவெல்லாம் ஈயடிக்க வச்சுட்டேனேன்னு பல இடத்துல இருந்தும் எதிர்ப்பு வந்தும் நீங்க காமடி கம்மியா இருக்குன்னு சொன்னீங்களே அதான் எனக்கு கோவம் வந்துச்சு, சரி இன்னிக்கு எனக்கு போரடிக்குது. 67 பின்னூட்டம் வந்துடுச்சு, நான் தூங்க போகிறேன்! பொது மக்கள் இந்த பேட்டிக்கு வரவேற்பு குடுத்தா நாளையும் பேட்டி தொடரும்!!

43 comments:

 1. மக்கா சும்மா ஊலுலூதான், வந்து திட்டறதா இருந்தா பெனாத்தலாரையும், வாழ்த்துவதா இருந்தா இங்கயும் ...உங்க கச்சேரிய நடத்துங்க சாமீ!!!

  ReplyDelete
 2. ஆகா, எங்க பாத்தாலும் பேட்டி தானா? தாங்க முடியலையே!

  ReplyDelete
 3. முதல் இரு கேள்விகளுக்கான பதிலைப் பார்த்ததுமே இது போலி பேட்டி என தெரிந்து விட்டது. கட்சியைப் பற்றிப் பெனாத்தலார் ஒரு பொழுதும் அப்படி சொல்லி இருக்க மாட்டார் என்பது திண்ணம்.

  ReplyDelete
 4. சிம்புவின் காதலிகள் புகைப்படத் தொகுப்பு ,ஆபாசமாக பேசுவது எப்படி என்ற வெ.கொண்டான் பத்தி ஒன்னும் கேக்காத அபி அப்பாவுக்கு கண்டனம்.

  சும்மா சொல்லக் கூடாது பின்னிட்டீங்க

  ReplyDelete
 5. நமீதா சின்ன ஆள் இல்லை!

  ஆமா இல்லை
  ..

  இல்லை

  ..

  ல்லை

  ..

  லை

  ReplyDelete
 6. //அபி அப்பா said...
  மக்கா சும்மா ஊலுலூதான், வந்து திட்டறதா இருந்தா பெனாத்தலாரையும், வாழ்த்துவதா இருந்தா இங்கயும் ...உங்க கச்சேரிய நடத்துங்க சாமீ!!!//

  பெனாத்தலார் நல்லவர், உங்களை மாதிரி இல்லை.

  ReplyDelete
 7. ஒத்துக்கறேன்..

  உங்கள் வலையுலக வாழ்க்கையில முதல் முறையா ஒரு பதிவை முழுமையா படிச்சிருக்கீங்கன்னு மட்டும் :-)

  ReplyDelete
 8. வலை உலகிலே தான் இருக்கீங்களா? ஊருக்கு வந்துட்டீங்க, அதான் காணோம்னு இல்லை நினைச்சேன். அப்புறமா வந்து படிக்கறேன். ஏதோ, என்னால் ஆனது ஒரு வருகைப் பதிவு, நீங்க வராட்டியும், நான் நினைப்பு வச்சுட்டு வந்து போட்டுட்டுப் போறேன். :P

  ReplyDelete
 9. அபி அப்பாவின் பேட்டி பிரமாதம் - அதை விடப் பிரமாதம் பெனாத்தலாரின் பதில்கள்

  ReplyDelete
 10. இதை ப்ரைம் ஸ்லாட்ல ஒரு நியூஸ் சேனல்ல விடுவோமா தல? :))

  ReplyDelete
 11. வலையுலக கரன் தப்பார் அபி அப்பா வாழ்க வாழ்க!!

  ReplyDelete
 12. பினாத்தல் சுரேஷ் said...
  ஒத்துக்கறேன்..

  உங்கள் வலையுலக வாழ்க்கையில முதல் முறையா ஒரு பதிவை முழுமையா படிச்சிருக்கீங்கன்னு மட்டும் //////

  ரிப்பீட்டேய்:)

  ReplyDelete
 13. அனானியா வந்த களவாணி! வாங்க வாங்க!!!

  ReplyDelete
 14. கொத்ஸ்! வாங்க அப்படீன்னா 2ம் பாகத்திலே பெனாத்தலாரின் பேச்சு வாய்ஸ் ரிக்கார்டு போட வேண்டியதுதான் வேற வழியேயில்லை!!!

  ReplyDelete
 15. டீச்சர்!! இது நீங்க வலைமாமணி குடுத்ததுகான அவசர பதிவு! வியாபாரம் சரியா ஆனா 2ம் பாகத்தில் மீதி எல்லாம் போடலாம் ஓக்கேவா!!!

  ReplyDelete
 16. வாய்யா மங்களூர் சிவா! கருத்தை எல்லாம் விட்டுடு நமீதாவை மாத்திரம் பிடிச்சுக்கோ!!!

  ReplyDelete
 17. இளா! சங்ககத்து சிங்கமே! ஒரு தபா பெனாத்தலார் சங்கத்துல எழுதினா நெம்பத்தான் சப்போர்ட்டா?? சரி சரி ரைட்டு விடும்!!!

  ReplyDelete
 18. வாங்க வாங்க டாக்கர்!!! உங்களுக்காகத்தான் எதிர் பார்த்தேன், பெனாத்தலாருக்கு வக்காலத்து வாங்க!! நல்லா இருங்க!!!:-))

  ReplyDelete
 19. //வியாபாரம் சரியா ஆனா 2ம் பாகத்தில் மீதி எல்லாம் போடலாம் //

  அபி அப்பா வியாபாரம் பத்திலாம் நீங்க கவலைப்படலாமா? டிமாண்ட் சரக்காச்சே உங்களுது.

  ReplyDelete
 20. பெனாத்தலாரே! ஏன் ஏன் ஏன் இப்படி நான் தான் போனை ரெக்கார்டு பண்ணுவேன்னு உங்களுக்கு நல்லா தெரியுமே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பின்ன என்ன பின்ன என்ன நீங்க சொன்னா 2ம் பாகம் ரெடி! இல்லாட்டி விடுங்க அவ்வ்வ்வ்வ்:-(((

  ReplyDelete
 21. //அனானியா வந்த களவாணி! வாங்க வாங்க!!!//
  இனி நேரடியாவே வருவோம். அப்ப அடுத்த பாகம் ரெடி செய்யலாமே

  ReplyDelete
 22. கீதாம்மா! வாங்க வாங்க!! நல்ல வேளை! பதிவ படிக்காம பின்னூட்டம் போட்டீங்க படிச்சிருந்தா 27 தப்புக்கும் "தலை"யிலயே அடிச்சிகிட்டு வீங்கி போயிருக்கும். அத விட கொடுமை இப்பதான் சேட்ல முத்துலெஷ்மி தல தல்ன்னு அடிச்சிகிட்டு தல வலியோட போனாங்க:-))

  ReplyDelete
 23. அஹா, வாங்க சீனா சார், எங்க தலைவ(லி) கிட்ட வம்பு பண்ணினதா ந்ங்க மந்திரி சபையில புகார் வந்துச்சே!! அதுவா சார் நீங்க!! வாங்க சந்தோஷமா இருங்க! தஞ்சையில் பிறந்த உங்களை மதுரையில் கட்டி குடுத்துட்டோம்! நல்லா இருங்க:-))

  ஆனா எங்க தலைவி, மதுரை மீனாட்சி, வாக்கப்பட்டது தஞ்சை மண்ணுங்கோவ் சாரே!!!

  ReplyDelete
 24. கப்பி சாரே! வாழ்த்துக்களுக்கு நன்றி நன்றி!!!

  ReplyDelete
 25. குசும்பா! காலை 8க்கு வந்து ரிப்பீட்டேய் போடரேன்ன்னு சொல்லிட்டு தான் போனார், பின்ன என்னா நீ ரிப்பீட்டேய்??????

  ReplyDelete
 26. //ஆனா எங்க தலைவி, மதுரை மீனாட்சி, வாக்கப்பட்டது தஞ்சை மண்ணுங்கோவ் சாரே!!!//

  தகவலுக்கு நன்றி நட்டப்பா

  ReplyDelete
 27. //அபி அப்பா வியாபாரம் பத்திலாம் நீங்க கவலைப்படலாமா? டிமாண்ட் சரக்காச்சே உங்களுது.//
  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
  ( இன்னும் மை பிரண்ட் வரலை. அதனால தான்)

  ReplyDelete
 28. [[cheena (சீனா) said...
  //ஆனா எங்க தலைவி, மதுரை மீனாட்சி, வாக்கப்பட்டது தஞ்சை மண்ணுங்கோவ் சாரே!!!//

  தகவலுக்கு நன்றி நட்டப்பா}}}

  நான் தான் உளரிட்டனோ ஓட்ட வாய்டா முதலி உனக்கு:-((

  ReplyDelete
 29. சீனா சாரே! நான் போட்ட பழைய பதிவு எல்லாத்துக்கும் பின்னூட்டமா சந்தோஷம் மகிழ்ச்சி! நான் 100 நெருங்க போறேன், எல்லாதிலயும் ஒன்னு ஒன்னு போட முடிவா.... நடத்துங்க, என் தமிழை படிச்சு நீங்களும் தலையில அடிச்சுக்கனும்னா அது உங்க விதி:-))))

  ReplyDelete
 30. எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். இதோட அபி அப்பாவை கலாய்க்கிறத நிறுத்திக்குங்க. என்ன பெரிய பெனாத்தல். அபி அப்பா ஒரு பதிவு போட்டு விளம்பரம் குடுக்கலைன்னா அது ஹிட் ஆகி இருக்குமா? நானும் பார்த்துகிட்டே இருக்கேன் எல்லாருமே அபி அப்பாவை இப்படி ஓட்டுறீங்க. நிறுத்தனும், இல்லே.. இல்லே ...............................................இப்படி எல்லாம் பேசலாம். ஆனா அபி அப்பாவுக்கு ஏறிக்கும் அதான். அடக்கி வெக்கனும் இவரை

  ReplyDelete
 31. நோ இளா நோ, இப்படி உணர்ச்சி வ்வசப்படக்கூடாது! கட்டை விரலை மடக்கிகிட்டு நாலு விரல் காட்டும் மாத்திரையை சாப்பிட்டு, தம்க்கமணியின் அந்தகாஅல ஞாபக சின்னமான ரிப்பன் இருந்தா தலையிலே கட்டிகிட்டு(இருக்கமா) குழந்தையை கூப்பிட்டு முதுகில் ஏறி மிதிக்க சொல்லிட்டு ந்நிம்மதியா தூங்கினா குருதி அழுத்தம் குறையும்ன்னு சேலம் "குட்டி" சாமியார் சொன்னதா ஒரு பத்திரிக்கையிலே வந்துச்சுப்பா:-)))

  ReplyDelete
 32. படிச்சாச்சி
  பேட்டி சூப்பர்

  ReplyDelete
 33. எங்க அப்பாவை கிண்டல் பண்ணி எழுதிய பினாத்தலை கொளுத்த உத்தரவு போட்டுட்டு திரும்புரத்துக்குள்ள

  இங்க நீ வேற விட்டில் பூச்சீயாய் :(

  ReplyDelete
 34. அபிஅப்பா: வணக்கம் பினாத்தலாரே, நீங்க இந்த மாபெரும் வெற்றி குறித்து எப்படி உணர்க்கிறீர்கள்?
  //

  இப்ப தெரியாது போக போக தெரியும்..!!!

  ReplyDelete
 35. அ.அ: சரி, சேது சமுத்திர திட்டத்துக்கு நமீதாவின் ஆதரவு கேட்டு கலைஞர் பதிவு போட்டாரே, அதன் பின்னனியிலே என்ன இருக்கு?
  //

  பின்னனியில் என்ன இருக்கா

  நீங்க நமிதாவை முன்னாடி பாத்ததில்லையா..


  ஹா ஹா ஹா

  ReplyDelete
 36. தகவல்!

  அ.அ: சரி அப்துல் கலாம் "கனவு (மட்டுமே) காணவேண்டும்" என போட்ட பதிவுக்கு

  //


  மிமியும் இது சம்பந்தமாக ஒரு பதிவு போட்டாரு

  ReplyDelete
 37. நம்ம குசும்பம் போய் அதிலே " உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கே"ன்னு ஒரு பின்னூட்டம் போட்டுட்டு ஓடி வந்துட்டான்.
  //

  குசும்பன் முதுகுல பிறை வடிவத்தில மச்சம் இருக்கு அதனால அந்த இடத்தை நோண்டியே ஆகனும் !!!

  ReplyDelete
 38. பொது மக்கள் இந்த பேட்டிக்கு வரவேற்பு குடுத்தா நாளையும் பேட்டி தொடரும்!!
  //


  நாளாயுமா ஐய்யயோ இது தெரியாமா அடிச்சி ஆடிட்டனே...

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 39. //ஏறி மிதிக்க சொல்லிட்டு ந்நிம்மதியா தூங்கினா //
  தேவர் மகன்ல இப்படித்தான் நடக்கும், அடுத்த சீனே சிவாஜிக்கு கருமாதி பண்ணிருவாங்க. கண்டதை படிச்சு கெட்டுபோறதே உங்க வேலையாய் போயிருச்சு.

  ReplyDelete
 40. வலையுலக கரன் 'தப்பா'ர் வாழ்க!!!

  ReplyDelete
 41. //பினா: அதுவா, நீங்க நினைப்பது போல் நமீதா சின்ன ஆள் இல்லை!

  அ.அ: ஆமா

  பினா: குறுக்க ஜொல்லாதீங்க,//

  ஹாஹா... சூப்பருங்கண்ணா.....

  ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))