சிவாஜி படம் பல இடங்களில் சக்கை போடு போட்டாலும் பல இடங்களில் மொக்கை போட்டு கொண்டிருக்கிறது. காரணம் எத்தனை தியேட்டர் எத்தனை தியேட்டர். இந்த படத்தை பொறுத்தவரை எத்தனை நாள் ஓடுகிறதுன்னு பார்ப்பது முக்கியமில்லை. கலக்ஷன் என்ன என்பது மட்டுமே முக்கியம். ஆக படம் ஜெயித்துவிட்டது. அது போகட்டும். தசாவதாரம் என்னா ஆச்சுன்னு இனிமே நம்ம வலைப்பதிவர்கள் ஆராய கிளம்பிடுவாங்க. அதுக்கு வடம் புடிச்சு குடுத்துட்டேன் இந்த தலைப்பின் மூலமாக. ரெடி ஸ்டார்ட் மீசிக். என் தொழில் இதுவல்ல. ஏதாவது காமடின்கிற பேர்ல குப்பைய கொட்டிகிட்டு இருப்பது மாத்திரமே. மக்களே தலைப்பை பார்த்து வந்தாச்சா அபிஅப்பா பதிவுக்கு! இப்ப நம்ம கச்சேரி!
"மக(ள்)ராசனா போயிட்டு வாய்யா"ன்னு "தம்பி" ஒரு பதிவு போட்டு அனுப்பி வச்சாரு மயிலாடுதுறைக்கு. அந்த வாழ்த்து ஆண்டவன் காதிலே போய் சேர்ரத்துக்குள்ள மறுவி போய் "மவ(ன்)ராசனா போயிட்டு வாய்யா"ன்னு விழுந்து அவரும் "ஆமின்" போட்டுட்டாரு. நான் அங்க போன 3 நாள் பின்ன பையன் பொறந்துட்டான்.
அந்த முதல் 3 நாளும் நான் தங்கமணிக்கு செஞ்ச பணிவிடைகளை நம்ம டெல்லி சகோதரி நேரிடையா பார்த்து கண்கலங்கிட்டாங்க.(முத்துலெஷ்மியக்காவ், பாலிஷா விட்டுடுவோம் எதா இருந்தாலும் பேசி தீர்த்துப்போம்).
சரி! 23ம் தேதி நம்ம பாசக்கார குடும்பம் வரும் முன்னமே டெல்லி சிங்கம் சென்ஷி அவர் அம்மா சகோதரியோடு வந்து பார்த்துட்டுட்டாங்க. சரி 23ம் தேதி நம்ம பாசகார குடும்பத்தின் சந்திப்பின் விஷயங்களை எழுதுவோம்ன்னு பார்த்தா முதல்ல கண்மணி டீச்சர் கலக்கி எடுத்து ஒரு பதிவு, பின்னாலேயே தங்கச்சி காயத்ரி ஒரு பதிவு, நம்ம சென்ஷி ஒரு பதிவு, அதோட இல்லாம நம்ம முத்துலெஷ்மி ஒரு பதிவுன்னு தூள் கிளப்ப அமைதியான நம்ம "ஜி" ஒரு பின்னூட்டம் ரெடி பண்ணி எல்லா பதிவிலும் காபி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கார். அனேகமா இந்த பதிவிலும் அதை அவர் செய்வார் என்று நம்ப தகுந்த வட்டாரம் சொல்வதால் இந்த பதிவிலே நான் அந்த வேலையை செய்து அவரின் பாரத்தை நானே சுமக்கிறேன்.
சரி நீ என்னத்த கிழிச்சன்னு கேட்பவர்களுக்கு - இலங்கையில் இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கு நீங்கள் என்ன கொள்கை ரீதியான முடிவு எடுத்திருக்கிறீர்கள்? என 1947 ஆகஸ்ட் 15 முதல் ஒரு ரெடிமேட் கேள்வி எல்லா நிருபரும் நேரு முதல் மன்மோகன்சிங் வரை கேட்கும் போது ஒரே பதில் வரும் "மத்திய அரசு நிலமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறது"ன்னு. (இத்தினி வருஷம் இவ்வள்வு உண்ணிப்பாக கவனிச்சா கண்ணு அவுஞ்சி போயிடாது!!)...நானும் அந்த சந்திப்பில் அப்படித்தான்"நிலமையை உண்ணிப்பாக கவனித்து வந்தேன்". சரி கவனிச்சதையாவது சொல்லித்தொலை என்றால் அதுவும் முடியாது. காரணம் "என் பதிவை மீள் பதிவு செய்ய நீ யார்"ன்னு யாரும் நாக்கு மேல பல்லு போட்டு ஒரு கேள்வி கேட்க்கப்படாது. அதான்.
சரி இந்த பதிவிலே என்ன சொல்லப்போறேன்னு கதறும் கண்மணிகளுக்கு ...அதான் சொல்லிட்டேனே தலைப்பிலேயே 'ஒரு டிரைலர்". ஆம் அபி அப்பா ரொம்ப நாளா காணுமேன்னு (சந்தோஷமா) இருப்பவர்களுக்கு இது ஒரு டிரைலர் பதிவு! அவ்வளவே!
சரி ரொம்ப பீலா உட்டது போதும் என்னதான் எழுதி கிழிக்க போற அடுத்த பதிவிலேன்னு கேட்டா ஒரே நாள் இரவிலே மயிலாடுதுறையின் அத்தனை தாவணிகளும் திருட்டுபோய் அதுக்கு பதில் சுடிதாரை கொண்டு வந்து கொட்டிய குஜராத்தி/ராஜஸ்தானிய பாசிசம் பத்தி எழுதுவதா அல்லது கொஞ்சம் கூட குறையாத மயிலாடுதுறையின் குசும்பு பத்தி எழுதுவதா அல்லது எங்க ஊர் ரோடு அழகு பத்தி எழுதுவதா(மயிலாடுதுறை நகராட்சியே ரோட்டில் உள்ள குழிகளை மூடு அல்லது அரசாங்கமே டாஸ்மாக்கை மூடு) நெறைய விஷயம் இருக்கு மக்கா! பின்னி பெடல் எடுக்க! கொஞ்சம் பின்ன வர்ரேன்.
அதுக்கு முன்ன பாசக்கார குடும்ம சந்திப்பு பத்தி முத்துலெஷ்மி பதிவிலே எழுதியிருந்தாங்களே "கல்யாணம் முடிஞ்ச பின்ன சுத்தி சேர் போட்டு ரவுண்டு கட்டி உக்காந்து ரகளை அடிப்போமே"ன்னு அது சத்தியம். எல்லாரும் அன்று ஊருக்கு போன பின் என் பாடு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி! நெகிழ்வான சந்திப்பு! இந்த அண்ணாச்சிக்காக வந்த அத்தனை என் சொந்தங்களுக்கு கண்மணி டீச்சர்/கோபி/ஜெயந்தி/முத்துலெஷ்மி&மாதினி/சபரி/ராம்/ஜி/காயத்3/அவங்க அம்மா/எங்க அக்காகோதை/அபிபாப்பா எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்வேன்!
அதுபோல் ரகளை நடந்து கொண்டிருக்கும் போதே போனில் கலந்து கொண்ட மங்கை/அவங்க சரிபாதி/அவந்திகா/நம்ம புலி மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி!!!