பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 27, 2009

ஹா ஹா ஹா தமிழ்மணம் விருதுகள்!!! என் 200 வது பதிவு!!!

நெம்ப நன்னி! தற்போது தனி மனித தாக்குதல் எல்லாத்தையும் தமிழ்மணம் ஒத்துக்குதுங்கோ! அதுவும் கலைஞரை திட்டுவதுன்னா தமிழ்மணத்துக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி!

அதனால் தான் "கலைஞர் என்னும் கயவன்" என்று தலைப்பிட்ட ஒரு பதிவுக்கு முதல் கட்ட தேர்விலே இடம் கொடுத்து தன் நிலை என்ன என்று தமிழ்மணம் காட்டி கொண்டது. நீங்கள் சொல்லலாம் "அது தேர்வு செய்தவர்களை கேட்க வேண்டிய கேள்வி" என்று.

உங்கள் தேர்வு லெட்சனம் தான் தெரியுமே எங்களுக்கு! தமிழ்மணம் பரிந்துரை, சூடான இடுகை எல்லாத்திலும் தெரியுதே! அப்படி இருக்க ஏன் இந்த பதிவை தனிமனித தாக்குதல் என நீக்கி இருக்க கூடாது?

நான் என்னத்த சொல்லி நீங்க கேக்க போறீங்க!

ஆக என் 200 வது பதிவை ரொம்ப அழகா எழுதலாம்ன்னு நினைச்ச எனக்கு இது வாழ்த்து பதிவா இருக்குமா இல்ல ஆப்பு பதிவா இருக்குமான்னு தெரியலை!

February 26, 2009

பக்கத்து வீட்டு பாடாவதி ஹிந்தி வாத்தியார்!!!


பக்கத்து வீட்டிலே இருக்கும் இந்த பாடாவதி ஹிந்தி வாத்தியாரால் நகர் முழுக்க பிரச்சனை தான். ஆனா அவரே பயப்படுவது எனக்கும் அபிக்கும் மட்டும் தான். அவரை கட்டுபடுத்த வேண்டியே தான் அபியை அவர் கிட்ட நகரின் நலம் கருதிடியூஷன் அனுப்பினோம். ஆனா பாருங்க எங்களுக்கே அவர் பல தபா தண்ணி காட்டிடுவாரு. அவரு அப்படி என்ன தான் செஞ்சாரு?


அவர் வீட்டுக்கு பின் பக்க வீட்டிலே உள்ளவங்க ஆறு மாடு வளர்கிறாங்க. அதனால இவர் வீட்டுக்கு கொசு தொல்லை அதிகம் ஆகிடுச்சு. இவர் உடனே ஜனாதிபதி அப்துல் கலாம் சமூகத்துக்குன்னு கடிதம் எழுதிட்டார். இவரோட ஒரு தூரத்து சொந்தம் ராமேஸ்வரத்தில் இருப்பதை எல்லாம் அதிலே போட்டு தாக்கி அப்ப்டீ இப்படீன்னு எல்லாம் எழுதி கடைசியா "ஏன் நீங்க அந்த மாடுகளை ஒழிக்க கூடாது?"ன்னு ஒரு கிடுக்கி பிடி கேள்வியையும் கேட்டு தொலைச்சுட்டார். அதுக்கு பேசாம நகராட்சிக்கு கொசுவை ஒழிச்சு தொலைன்னு எழுதியிருந்தாலாவது எதுனா நடந்து இருக்கும்.

ஆனா பாருங்க ஜனாதிபதிக்கு எழுதினதை அவரு படிச்சாரோ என்னவோ அதல்லாம் தெரியாது. அந்த மனுவை நாகை கலெக்டர் ஆபீஸுக்கு "ஆவன செய்யவும்"ன்னு அனுப்ப, கலெக்டர் அதை எங்க ஊர் ஆர்.டி.ஓ க்கு அனுப்ப அதை அவர் தாசில்தார்க்கு அனுப்ப, அதை அவரு டவுன் ஆர்.ஐ க்கு அனுப்பிட்டார். இதிலே என்ன கூத்துன்னா அந்த ஆர்.ஐ தான் அந்த ஆறு மாட்டுக்கும் ஓனர். அவர் தான் ஹிந்தி வாத்தியார் கிட்ட பேச மாட்டாரா? அதனால அபியை கூப்பிட்டு "இந்த மனுவை ஆவன செய்"னு கொடுத்துட்டார். அபியை ஆவன செய்ய சொன்னா இவ அந்த மனுவிலே ராக்கெட் செஞ்சு அந்த மாட்டை பார்த்து பறக்க விட்டுட்டா. கொள்ளை பசியிலே இருந்த மாடும் அதை அசை போட்டு துன்னுடுச்சு. ஏன்டி இப்படி செஞ்சேன்னு அபிஅம்மா கேட்டதுக்கு "கலாம் அங்கிள் மனுவை பார்த்ததும் எனக்கும் அவர் மாதிரி ராக்கெட் விட ஆசை வந்துடுச்சு"ன்னு பதில் சொல்றா!


இதான் போகட்டும்ன்னு பார்த்தா ஒரு நாள் எனக்கு வந்த ஒரு லெட்டரை போஸ்ட் மேன் அவர் வீட்டுல கொடுத்துட்டார். இவர் அதுக்கு என்ன செஞ்சிருக்கனும். ஒன்னு அதை வாங்கி இருக்க கூடாது. இல்லாட்டி என் கிட்ட கொடுத்து இருக்கலாம். இல்லாட்டி தூக்கி போட்டிருக்கலாம். ஆனா இவரு என்ன செஞ்சாரு தெரியுமா? அதிலே இருந்த என் பெயரில் ஏதோ ஸ்பெல்லிங் தப்பு இருந்துச்சாம்.(கடவுளே என் பெயர்ல கூட ஸ்பெல் மிஸ்டேக்கா?) அதை சிகப்பு பேனாவால் சுழிச்சு அதை திருத்தி 2 தெரு தள்ளி இருக்கும் போஸ்ட் பாக்ஸ்ல போட்டுட்டார்.


பின்ன அந்த லெட்டர் எனக்கு வருது 6 மாசம் கழிச்சு ரெண்டு ரூபாய் பைன் போட்டு. இத்தனிக்கும் அது ஒரு கருமாதி பத்திரிக்கை. அட்ரஸ்ல கை வச்சா 2 ரூபாய் பைனாம்... செத்து போனவருக்கு தெவசமே வரும் நாள் ஆகிடுச்சு. நான் அதை வாங்கி நாக்கா வழிக்க முடியும்? எதுக்கு 2 ரூபாய் தெண்டம்ன்னு விட்டுட்டேன்.


அப்படித்தான் ஒரு நாள் என் வீட்டு தென்னை மரத்தின் கீற்று அவர் வீட்டு மொட்டை மாடியிலே ஒரு 2 அடி வரை நீண்டு அவர் வீட்டுக்கு நிழல் தான் கொடுத்துச்சு. அதை ஒரு அலக்கு குச்சியால சரியா அந்த 2 அடியை மட்டும் வெட்டி விட்டுடார். அந்த 5 தென்னை கீத்தும் வால் அறுந்த கோழி மாதிரி நிக்குது. எனக்கு அப்பவும் அவர் மேல கோவம் வரலை. ஆனா அவருக்கு எதுனா செய்யனுமேன்னு மாத்திரம் நினைச்சுகிட்டேன்.


அவருக்கு இந்த LIC, POST OFFICE இதல்லாம் ரொம்ப பிடிச்ச சமாச்சாரம். அதிலே எல்லாம் எதுனா பாக்கி பணம் வரனும்ன்னா 2ரூபாயா இருந்தாலும் கூட பார்க்க மாட்டார். ஹிந்துக்கு எழுதுவார். அது பப்ளிஷ் ஆகலைன்னா ரிமைண்டர் எழுதுவார். நான் டாட்டா இண்டிகாம் நெட் எடுத்து இருந்தேன். அந்த பாடாவதியை தொலைச்சு தலை முழுகி அதுக்கு கட்டின 500 ரூபாய் டெபாசிட்டை வாங்கவே முடியலை. மெதுவா இவர் கிட்ட "சார் என்னை கண்டா பயப்பட மாட்டானுங்க, நீங்க எப்படியாவது அதை வாங்கி கொடுத்துடுங்க"ன்னு ஒரு பிட்டை போட்டேன்.


அவ்வளவு தான்! மனுஷன் தன்னையும் இந்த நகர்ல ஒருத்தன் மதிக்கிறானேன்னு சந்தோஷப்பட்டு அந்த டாட்டா இண்டிகாம் டீலர் கிட்ட நடையா நடக்க ஆரம்பிச்சு தேஞ்சு போயிட்டார். போன வாரம் கூட அபிகிட்ட இது பத்தி பேசினப்போ கேட்டேன் ஹிந்திசார் அந்த டெபாசிட்ட வாங்கிட்டாரா? எதுனா இம்புரூவ்மெண்ட் இருக்கான்னு கேட்டதுக்கு அபி சொன்னா "ஆமாப்பா நல்லா இருக்கு இவரு நடையா நடந்து ஐந்து அடி நாலு அங்குலமா இருந்தவரு இப்ப தேஞ்சி போய் நாலு அடி ஐந்து அங்குலமா ஆகிட்டாரு"ன்னு சொன்னா!

நல்ல இண்ட்ரஸ்டிங் கேரக்டர் அவரு!

February 25, 2009

மாநக்கல் சிபி! வேண்டாம் என் கிட்ட வம்பு!!!


நானும் எவ்வளவுதான் பொறுத்து பொறுத்து பார்ப்பது. உங்க ஜொல்லுக்கு எல்லையே இல்லாம போச்சு.
என்ன இப்ப நயந்தாரா கலைமாமணி வாங்கியாச்சு அதானே உங்க பிரச்சனை! ஆனா போன வருஷம் நான் தீபாவெங்கட் கலைமாமணி வாங்கிய போது நான் இப்படித்தான் போஸ்ட் போட்டு அலப்பரை கொடுத்தேனா?
இனியும் உங்க ஜொள்ளு தொடர்ந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்! தீபாவெங்கட் வாங்கின ஆஸ்கார், புக்கர், மக்கர் எல்லா விருது போட்டோவும் போடுவேன் என்பதை சொல்லி உங்களை எச்சரிக்கிறேன்!

February 23, 2009

அபியும் நானும் திரை விமர்சனம்!!!

நான் 2 நாள் முன்ன அபியும் நானும் படம் பார்த்துட்டேன். 2008 டிசம்பர் 22 க்கு டிக்கெட் எல்லாம் ஒத்தி போட்டு ஒத்தி போட்டு (அந்த படம் 21ம் தேதி ரிலீஸ் என சொன்னதால்) எங்க ஊர்ல அது ரிலீஸ் ஆகாததால் பார்க்க முடியாமையே ஆகிவிட்டது.

அதன் பின்னே லக்கி விமர்சனத்துக்கு வெயிட் பண்ணினேன். அவர் தானே எலி நமக்கெல்லாம். மனுஷன் எல்லா படத்தையும் எப்படித்தான் பார்த்து நம்மை காப்பத்துறாரோ! அதை விடுங்க! நான் பார்த்த “அபியும் நானும்” விமர்சனம் கீழே!


பிரகாஷ்ராஜ் – ஐஸ்வர்யா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்குது. அதன் பேர் அபி. ஒரே குழந்தை. அதான் பிரச்சனையே. அதே தம்பதிகள் நமது ஜெனரேஷனுக்கு முன்னே ஜெனரேஷன்ல இருந்திருந்தா இப்படி ஒரு படம் வந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா இப்ப எல்லா தம்பதிக்கும் ஒரு குழந்தை அதிக பட்சமா போனா ரெண்டு. அந்த காரணத்தால் குழந்தைகளுக்கு அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா போன்ற உறவு மண்ணாங்கட்டிகள் கிடையாது. வேற வழியே இல்லாம அப்பா, அம்மா தான் குழைந்தை கூட விளையாடி தொலைக்கனும்.

இதே அந்த காலமாக இருந்தா குழந்தைகளை பெரியவங்க கிட்ட படுக்க போட்டுட்டுட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிக்கலாம். (இதான் உண்மை). ஆக இப்படியாக பிறக்கும் அந்த ஒரு குழந்தை மேல அப்பா பிரகாஷ்ராஜ்க்கு உயிரோ உயிர். ஆனா அம்மா ஐஸ்வர்யாவுக்கு அப்படி இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா பிராக்டிகலா நல்ல சிந்தனை உள்ளவங்க. அப்படி வளரும் அந்த பொண்ணு ஒரு சர்தார்ஜிய லவ்ஸ் பண்ணுது.

வந்து அப்பாகிட்டே சொல்லும் போது அப்பாவுக்கு பிடிக்கலை. ஆனா அம்மாவுக்கு ஓக்கே. அதன் பிறகு அப்பா திடீர்ன்னு இல்லை கொஞ்சம் கொஞ்சமா ஓக்கேவாகி கல்யாணம்.

கதை என்னமோ சிம்பிள் தான். ஆனா அதை அழகா சொன்ன விதம் அருமை.
எடுத்த விதமும் அருமை. சரளமான அந்த காமடி வசனமும் அருமை. எல்லாரும் படம் பத்தி பிரிச்சு மேஞ்சாச்சு. ஆனா என் பார்வை கொஞ்சம் வித்யாசமா இருக்குதே என்ன பண்ண?

பிரகாஷ்ராஜ் நடிப்பில் குறையொன்றும் இல்லை கண்ணான்னு பாட வைத்தாலும் அம்மாவாக ஐஸ்வர்யா நடிப்பு அருமை.அம்மாவா வாழ்ந்துட்டாங்க! ஒரு சின்ன குழந்தை தான் பாவப்பட்ட காரணத்துக்காக ஒரு பிச்சைகாரனை வீட்டுக்கு கூப்பிட்டு கொண்டு வரும் போது காட்டும் எரிச்சல் அற்புதம்.

* அதே நேரம் அங்கே வரும் அப்பா தன் குழந்தைக்காக அந்த பிச்சைக்காரனை வீட்டில் சேர்த்து கொள்வது கொஞ்சம் அதிகம்.

*அப்படி ஒன்னும் அந்த பிச்சைகாரன் பாவப்பட்ட ஆள் இல்லை. வசந்த் அன் கோ வாசலில் 6 பந்துகளையும் 6 டிவியில் பார்க்கும் ஒரு ஷோக்காளி தான். தனக்கு சென்னை வெய்யில் தாங்க வில்லை என ஊட்டிக்கு வந்த ஒரு புண்ணியவான். அவன் பேரில் அந்த குழந்தைக்கு பாவம் ஏற்ப்பட்டது அந்த குழந்தையின் அறிவின்மையா அல்லது அதை தடுக்காதது அப்பாவின் அறிவின்மையா என தெரியவில்லை.

* எப்போ பார்த்தாலும் அந்த பிச்சைகாரர் “என் அம்மா என் அம்மா “ன்னு அபியை பார்த்து சொல்வது ஓக்கே. ஆனா அப்படி சொல்லும் போதெல்லாம் அந்த திரிஷாவின் முகபாவம் அய்யோ பாவம்.

* அபியை எல்லாருக்கும் படத்திலே பிடிக்குது. அதாவது தலைவாசல் விஜய் முதல் படம் பார்க்கும் பாமரன் வரை. என்ன காரணம்? அவ அழகா இருப்பது மட்டும் தான் அந்த படத்தில் அந்த அபியின் ஒரே சாதனை. ஆனா ஸ்கூல் முதல் மாணவியா? இல்லை ஸ்போர்ட்ஸில் பெரிய ஆளா? அது போன்ற எந்த காரணமும் இல்லாம அபியை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது! அபத்தத்தின் உச்சம்.

* அது போல அந்த சர்தார்ஜியை காதலிப்பது ஓக்கே. அந்த சர்தார்ஜி பிரதமருடன் ஜஸ்ட் லைக் தட் போன்ல பேசறார். அதுக்கு அப்பா அரண்டு போறார். அப்போது பிரகாஷ்ராஜ் நடிப்பு நல்ல காமடியா இருக்கு. அதை விடுங்க அதை அபிகிட்ட கேக்கும் போது”ஆமாப்பா அடிக்கடி பேசுவார்”ன்னு சாதாரணமா சொல்லும் போது “அய்யோ பாவம் இந்த பொண்ணு பிரதமர் மதிப்பு என்னன்னு கூட தெரியாம அப்பா வளர்துட்டாரே”ன்னு அபி மேலயும் அந்த லூசு அப்பா மேலயும் பரிதாபம் வருது.

* அபி அடிக்கடி “I know what iam doing daddy” ன்னு சொல்லும் போது எரிச்சல் அதிகமா வருது.

பிரகாஷ்ராஜ் கிட்டதட்ட ஒரு சைக்கோ கேரக்டர் இந்த படத்திலே. ஆமா அம்மா மேல கொட்டின வென்னீருக்காக அபியை தூக்கிகிட்டு ஆஸ்பத்திரி போக நினைப்பது முதல் அவ சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கும் போது கூட …அவர் ஒரு சைக்கோவா தான் சித்தரிக்கப்பட்டிருக்கார். எத்தனை அப்பன் இது போல சைக்கோவா இருக்கானுங்களோ!

ஆனா அந்த அம்மா கேரக்டர்ல ஐஸ்வர்யா சூப்பரோ சூப்பர். அபி கல்யாணம் ஆகி போகும் போது ஏர்போர்ட்டிலே கலங்குவது அருமை. ஆனா அப்ப கூட லூசு அப்பா தன் நடிப்பை காமிக்க முயற்சிப்பது எல்லாம் ஐஸ்வர்யா நடிப்பிலே அடிபட்டு போகுது.

* ஆனா இதை எல்லாம் தாண்டி படம் அருமையா இருக்கு!

February 21, 2009

இம்சை வெங்கிக்கு என் கண்டனங்கள்!!!


இம்சை வெங்கி அவர்களே! உங்களுக்கு என் கண்டனம்! பார்த்திடுவோம் நீக்களா, நானா, சிபியான்னு!இன்னும் சில ஆதாரங்கள் மங்களூர் சிவா அவர்களிடம் இருக்கு! தேவைப்பட்டால் வெளியிடுவோம்!

குறிப்பு: இதல்லா புரியாதவங்க "mokkaimails''குரூப்ல் சேர்ந்தா தெரியும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்!!!

நான் சின்ன பதிவையே எழுதுவது இல்லியே என ஏக்கப்படும் அன்பர்களே! ரொம்ப சின்ன பதிவா எழுதவா?

என் பிரண்ட், ராமலெஷ்மியும் ஆனந்த விகடனில் வந்தாச்சு! வாழ்த்துக்கள்! (இது ஆனந்த விகடனுக்கு)

நீங்க வாழ்த்து சொல்வதா இருந்தா என் பிரண்ட் கவிதையை வெளியிட்டு தனக்கு பெருமை சேர்த்து கொண்ட ஆனந்த விகடனுக்கு வாழ்த்து சொல்லுங்க!!!

லிங் இங்க இருக்கு

அது போலவே மற்ற 6 நண்பர்களையும் வாழ்த்துங்கள்!!

February 20, 2009

என் பிராஜட் டைரக்டருக்கு 10 கேள்விகள்!!

நான் என்ன பண்ணட்டும் மக்கா! இந்த ஃபீவர்ல நானும் மாட்டிகிட்டேன்:-)) வேற வழியே இல்லை கேள்வி கேக்கனும்ன்னா நான் இவர் கிட்டதான் கேக்கனும்!

1. ஏன் சார் ஏன் சார் நீங்க ஷார்ஜாவிலே இருந்து வரனும் ஆஃபீஸ்க்கு. உங்க டிராபிக் பிரச்சனையால் 8-5 ஆபீஸுக்கு 7.30க்கே வந்துடுடரீங்க, காலை 5 க்கே கிளம்பி! ஆனா நான் 15 நிமிஷத்திலே ஆபீஸ் வந்திடலாம். ஆனா நான் 7.50க்கு வந்தாகூட நீங்க செக்யூரிட்டி பக்கமா நின்னுகிட்டு உங்க கேபினுக்கு போகாம தம் அடிச்சுகிட்டு "ஹாய் மேன் குட் மார்னிங் 7.50 என சொல்கிறீர்களே! ஏன்? கொஞ்சம் லேட்டா தமிழ்மணம் ஓப்பன் பண்ணினா ஓப்பன் ஆகாதா???

2. காலை 9.30க்கு மட்டும் உங்களுக்கு மூக்கிலே வேர்க்கும் ரகசியம் என்ன? என் பிரேக்பாஸ்ட் நேரம் அதுதான் என நீங்க அனுப்பிய மெமோவை மறந்து போன செலக்டிவ் அம்னீஷியா பேஷண்ட்டா நீங்க? (நீங்க செலக்டிவ் அம்னீஷியா என்பது எனக்கு நல்லா தெரியும்!என் அப்ரைசல் மாத்திரம் ஆப்பு வைக்கும் ஆசாமி நீங்க போங்க சார்)

3. நான் முக்கியமான பதிவை படிச்சுகிட்டு இருக்கும் போது என்னை "உடனே கேபினுக்கு வா"ன்னு கூப்பிட்டு விட்டு எவனோ இத்து போன சப்ளையர் கிட்ட "due to financial crises" ன்னு மொக்கை போட்டுகிட்டே என்னை பார்த்து "I will catch you latteron" ன்னு அனுப்புவீங்களே! என்ன கொடுமை சார் இது? ஒரு பதிவை படிச்சா ஆழ்ந்து படிக்க வேண்டாமா?

4. உங்களுக்கு காலை 11 மணிக்கு பொழுது போகலைன்னா என் கேபினுக்கு வந்து "ஹாய் மேன்!" one important issue is going on ... i need your suggession"ன்னு என் தோளில் கை போட்டு கூட்டிகிட்டே போய் "sorry man i foget it, you can go and do your valuable duty" என சொல்லும் போது எனக்கு எந்த அளவு கோவம் வரும் என நினைத்து பார்த்ததுண்டா?

5. சரி அதுதான் போகட்டும் என நினைத்து வந்து சீட்டில் உட்காந்த்து பார்த்தா ச்சேட் பன்ணிய 8 பேரில் 2 பேர் காணாமல் போயும் மீதி 6 பேர் (டிங்) (டிங்)என கதறியும் இருக்கும் கொடுமையை நீங்க என்றைக்காவது உணர்ந்ததுண்டா?

6. மதியம் 1 மணிக்கு மீட்டிங் கால் நீங்க கொடுக்கும் போது நான் ச்சேட்டிய்வர்களிடம் "மீட்டிங் கால்" என சொல்லும் போது யாருமே நம்பாம இளக்காரமாக சிரிக்கின்றனரே அது உங்களுக்கு தெரியுமா?

7. அது தான் போகட்டும் என நினைத்து நான் கொண்டு வரும் சாம்பார் சாதம், மீன் வறுவல் எல்லாம் முழுங்கிய பின்னே "மேன் ஷேர் திஸ் KFC ன்னு சொல்லும் போது என் குருதி அழுத்தம் அதிகமாகுதே அது உங்களுக்கு தெரியுமா தெரியாதா இல்லை தெரியாதது மாதிரி நடிக்கின்றீரா?

8. ஆளே இல்லாத டீ கடையில் டீ ஆத்துவது போல் என் கேபினுக்கு வந்து "ஒரு 80 ஸ்டோரி பில்டிங் நமக்கு கிடைச்சிருக்கு, கன்சல்டண்ட் குப்பன், கிளையண்ட் சுப்பன்ன்னு பீலா விடிறீங்களே ஏன் சார் ஏன் சார் என்னை நம்பி ச்சேட் பண்ணும் புண்ணியவான்களுக்கு நான் என்ன கண்டின்யூட்டி கொடுக்க முடியும்? சொல்லுங்க, இதனால் என்ன என்ன பிரச்சனை வருது தெரியுமா உங்களுக்கு?

9. " மதியம் 3 மணிக்கு எனக்கு இண்டர்காமிலே கூப்பிட்டு " நான் ரொம்ப பிசி என்னை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்" என நீங்க சொன்ன போது தான் சார் தெரிஞ்சுது நீங்க கூட பிளாக்கர்ன்னு! அது உண்மையா?

10. ஆனா பாருங்க சாயந்திரம் 4 மணிக்கு வந்து என் கேபின்ல உட்காந்து அமரிக்க பொருளாதார வீழ்ச்சியை நீங்க அதன் ஆணி வேர்ல இருந்து கிண்டி கிழங்கு எடுக்கும் போது நான் எவ்வளவு நேரம் தான் புரிஞ்ச மாதிரியே நடிக்கிறது? சொல்லுங்க சார் சொல்லுங்க! அதை விட கொடுமை என்னன்னா அந்த நேரம் பார்த்து நான் "மொக்கை மெயில்ஸ் குரூப்பிலோ அல்லது பண்புடன்லயோ யார் கிட்டயாவது சண்டை போட்டிருப்பேன். பதில் சொல்ல லேட் ஆச்சுன்னா "ஆஹா அபிஅப்பா தோத்துட்டார்"ன்னு கை கொட்டி சிரிப்பாங்களே, அந்த பாவம் உங்களை சும்மா விடுமா சார்?????????????????

ஒரு பத்தினி பிளாக்கரோட சாபம் உங்களை சும்மா விடாது!

February 18, 2009

"வேப்பங்கஞ்சி வித் அபிஅப்பா & இந்திய ஜனாதிபதி!!!

எனக்கு எப்பவுமே நம்ம ஜனாதிபதி மேல ஒரு கோவம் இருந்துகிட்டே இருக்கும். நேத்து ராத்திரி கூட ரொம்ப வருத்தப்பட்டுகிட்டு இருந்தேன் நம்ம நண்பர்கள் கிட்ட! இந்த பத்ம அவார்டு எல்லாம் சும்மா ஏனா தானோன்னு தர்ராங்க. நானும் ஒரு இந்திய குடிமகன் தான, என்னை ஒரு வார்த்தை கேட்டா என்னமா ஐடியா சொல்லுவேன்ன்னு புலம்பிகிட்டே தூங்கிட்டேன்.
பாருங்க நம்ம ஜனாதிபதிக்கு எப்படித்தான் இந்த விஷயம் தெரிஞ்சுதோ.ஒரு வேளை யாரு மானசுல யாரு நிகழ்சி பார்ப்பாங்க போல இருக்கு. கபால்ன்னு ரெண்டு கிங்காரகன் மாதிரி ஆளை விட்டு என்னை துபாய்ல இருந்து டெல்லி தூக்கிட்டு வந்துட்டாங்க. அப்ப விடிகாலை 4 இருக்கும்.
ஓவர் டு டெல்லி.............ஜனாதிபதி மாளிகை!

ஜனாதிபதி: வாங்க அபிஅப்பா வாங்க, இந்த தடவை 'பத்ம" விருது எல்லாம் உங்க கிட்ட கேட்டு குடுக்கலாம்ன்னு பார்க்கிறேன். முதல்ல என்ன சாப்பிடுறீங்க?

அபிஅப்பா: வேப்பங்கஞ்சி

ஜனாதிபதி: ஓ குட் அப்ப "வேப்பங்கஞ்சி வித் அபிஅப்பா"ன்னு மீடியாவுக்கு சொல்லிடலாம். சரி முதல்ல குழந்தைகள் விருது. சிறந்த வீர குழந்தை விருது யாருக்கு தரலாம்ன்னு நெனைக்கிறீங்க?

அபிஅப்பா: சமீபத்துல ஒரு பாட்டு பார்த்தேன் அ ஆ ன்னு ஒரு படம்.அப்படியே ஆன்னு வாயை பொளந்துட்டேன். அதிலே எஸ்.ஏ.சூர்யா ஒரு டைட்டில் சாங் பாடுவாரு. அப்ப ஒரு கட்டத்துல எம்சியார் மாதிரி நெனச்சுகிட்டு ரெண்டு சின்ன பசங்களை தூக்கி கிட்டு ஏகப்பட்ட எக்ஸ்பிரஷனை மூஞ்சில காமிச்சுகிட்டு பாடுவார் என்னவோ ஆறரை கோடி தமிழன் அப்புடி இப்புடின்னு, தூரமா இருந்து பார்க்கும் நமக்கே இப்படி இருக்கே அந்த 2 குழந்தைகள் பத்தி நெனச்சு பாருங்க. இதோ அந்த போட்டோ கூட இருக்குது.அதனால அவங்களுக்கே "வீரதீரர் செயல் புரிந்த குழந்தகள் அவார்டு தரலாம் என்பது அடியேனின் கருத்து.

ஜனாதிபதி: மை காட், பசங்க இப்ப எப்புடி இருக்காங்க. ஏன் இந்த ஆளை வன்கொடுமை சட்டத்துல உள்ளே தூக்கி போட கூடாது?

அபிஅப்பா: போடலாம் ஆனா சிறைக்கைதிகளை கொடுமை படுத்துனதா மனித உரிமை கமிஷன்ல உங்களை தூக்கி உள்ளே போடுவாங்க பர்வால்லயா?

ஜனாதிபதி: ஓ நோ, சரி இப்ப குழந்தைகள் இப்ப எப்படி இருக்காங்க?
அபிஅப்பா: இப்ப ஓக்கே ஆனா படம் வந்த கொஞ்ச நாள் பேஸ்தடிச்ச மாதிரியே இருந்தாங்க. எதை பார்த்தாலும் தெனாலி கமல் மாதிரி அலறி அலறி அழுதாங்க. பின்ன சிம்புதான் சரி பண்ணினார்.

ஜனாதிபதி: வாட், சிம்புவா? அவரும் விஜய் மாதிரி டாக்டரா ஆகிட்டாரா? ஓ காட்!
அபிஅப்பா: இல்லை சிம்பு நேரிடையா உதவி செய்யலை. கடவுள் எந்த காலத்துல நேர்ல வந்து உதவி செஞ்சிருக்கார். ஒரு மனோதத்துவ டாக்டர் அந்த பசங்களுக்கு ட்ரீட் பண்ணினார். தினமும் ஒரு சிம்பு படமா போட்டு காட்டினார். பசங்களுக்கு ஒரு தைரியம் வந்துடுச்சு. "ஆறிலும் சாவு நூறிலும் சாவுடா, இனி இந்த மனசு குஷ்பு வில்லு படத்தில டான்ஸ் ஆடினா கூட பயப்படாதுடா"ன்ற ரேஞ்சுல தேறிட்டாங்க மேடம்.

ஜனாதிபதி: ஓ வெரி குட். அப்ப அந்த பசங்களுக்கும் வீரதீர அவார்டு கொடுத்திடலாம். அது போல அந்த டாக்டருக்கும் ஒரு பத்மஸ்ரீ அவார்டை அள்ளி விடலாம் என்ன சொல்றீங்க அபிஅப்பா.

அபிஅப்பா: டாக்டர்ஸ்க்கு எதுக்கு டாக்டர் பத்மஸ்ரீ தரனும்?

ஜனாதிபதி: அது ஒரு வழக்கம் அபிஅப்பா! போன பிரியட்ல முட்டிகால் ஸ்பெஷலிஸ்ட்க்கு கொடுத்தோம். அது போலத்தான். கொஞ்சம் இருங்க ஒரு போன் வருது, மேடம்ஜி பேசறாங்க ..."ஹல்லோ....மேடம்ஜி ,ஆங்ஜி, ஜிஹாங்...என்னது முதுகு முன்னாடி இதயம் பின்னாடியா ஓக்கே மேடம் ஜி"(போனை வைத்துவிட்டு) ஸாரி அபிஅப்பா முதுகு முன்னாடி, இதயம் பின்னாடி, மனசு கட்ட கடேசிதான்.

அபிஅப்பா: என்ன மேடம் நீங்க என்னவோ வேப்பங்கஞ்சி குடிச்ச மாதிரி பேசறீங்க, சரி விடுங்க அந்த டாக்டருக்கு இப்ப வேண்டாம், சிம்புவை அவர் சரி பண்ணிட்டாருன்னா அப்ப கொடுக்கலாம்.

ஜனாதிபதி: சிம்புவையே அந்த டாக்டர் குணப்படுத்திடுவாரா, அப்ப அவருக்கு "மரணத்துக்கு பிந்தைய விருது"தான்னு சொல்லுங்க. சரி! இப்ப நாம் ஸ்போர்ட்ஸ்க்கு போவோம். சரி உங்க அபிப்ராயம் என்ன?

அபிஅப்பா: இதுவும் வழக்கம் தானே மேடம் நாம எப்போதும் டெண்டுல்கருக்கு தானே கொடுக்கனும். அதானே நம்ம அரசியல் சாசனத்திலே அம்பேத்கார் எழுதி வச்சிருக்கார். தவிர இப்ப ஸ்ரீலங்கா சீரீஸ்ல கூட அவர் பர்பார்மென்ஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சுது. முதல்ல 5 அடுத்து 6 அடுத்து 7ரன் இப்படி நல்ல முன்னேற்றம் இருந்துச்சே

.ஜனாதிபதி: நோ நோ அபிஅப்பா, நான் ஒரு பெண், அதனால ஒரு பெண்ணுக்கு தான் கொடுப்பேன். கர்னம் மல்லேஸ்வரிக்கே கொடுக்கலாம்ன்னு இருக்கேன். நல்ல பளு தூக்கும் பெண் அவங்க. என்ன ஓக்கேவா அபிஅப்பா?

அபிஅப்பா: மேடம் ஒரு பெண்ணுக்கு தான் அந்த அவார்டுன்னு முடிவாகி போச்சு, அப்ப இந்த போட்டோவை பாருங்க. முடிவை நீங்களே எடுங்க.


ஜனாதிபதி: வாவ், கொழந்த அழகா இருக்கா, பாருங்களேன் என அசால்ட்டா அந்த கழுத்து மணிய தூக்கிகிட்டு இருக்கா முகத்திலே அந்த கஷ்டத்தை காமிச்சுக்காம, அப்பீலே இல்லை இவளுக்கு தான் "பத்மஸ்ரீ" பளு தூக்கும் போட்டியிலே.

அபிஅப்பா: அதிலே ஒரு சிக்கல் மேடம்.

ஜனாதிபதி: மணியிலயா, நோ பிராப்ளம் கண்டிப்பா இந்த குழந்தைக்கு தான் "பத்மஸ்ரீ"
அபிஅப்பா: இல்ல மேடம் அவ குழந்தை தானே, அவ பிரண்டு ஒருத்தி இருக்கா அவளுக்கும் பத்மஸ்ரீ அவார்டு கொடுக்கனும்ன்னு இவ அழுவா, அதான் யோசிக்கிறேன்

ஜனாதிபதி: ஓ அவளுக்கு என்ன தனி திறமை இருக்கு?
அபிஅப்பா: ஒன்னு இல்லை மேடம் ரெண்டு திறமை இருக்கு. 1. அவ பேரே பத்மா, 2. அவ இருப்பது இப்ப இத்தாலில!

ஜனாதிபதி: மை காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆட் இந்த திறமை ஒன்னே போதுமே அப்ப ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ரெண்டா கொடுத்திடலாம்!
தொரரும்.....

அடுத்து சிறந்த ஓட்ட பந்தய வீரர் பத்ம அவார்டு, சிறந்த நகைச்சுவையாளர் பத்மஸ்ரீ விருது எல்லாம் இருக்கு. பதிவு பெருசா ஆகிடுச்சு அதான்....வர்ட்டா

February 17, 2009

நடுவே பறக்குது அபி கொக்கு!!!

நான் நேற்றைக்கு அழகா ஆபீஸ்ல இருந்து கோவிலுக்கு போனேன். அது ஒரு 25 கி.மீ. பின்ன திரும்பி என் இடத்துக்கு திரும்பும் போது நல்ல குளிர். நான் 1 கி.மீ முன்னமே இறங்கி வண்டியை அனுப்பிட்டு அந்த ரோட்டின் ஓரமா நடந்து அழகான குளிரை அனுபவிச்சுகிட்டே சூரிய அஸ்தமனமும் சந்திரன் உதயமும் ஒரு சேர வரும் அந்த நடுங்கும் குளிரில் எப்படித்தான் அந்த கொக்கு கூட்டம் ஜீன்சும், குரங்கு குல்லாவும் இல்லாமல் கூட்டமாய் போகின்றது என நினைத்து கொண்டேன்.

அப்பா கொக்கு முன்னம் செல்ல மீதி கொக்குகள் அப்படியே ஒரு போர் விமானம் மாதிரியான வடிவத்தில் போய் கொண்டு இருந்தன. அதிலே ஒரு சின்ன கொக்கு மாத்திரம் அந்த விமான வடிவத்தை கலைத்து கலைத்து அங்கும் இங்கும் செல்வதும் அப்பா கொக்கு "டேய் ஒழுங்கா வா" என்பது போல வெடுக் வெடுக் என தலையை திருப்பி அந்த குஞ்சு கொக்கை பார்ப்பதுமாய் அற்புத காட்சி அது. அனேகமாய் அதன் பெயர் "நட்டு"வாக இருக்கலாம் என அபத்தமாக தோன்றியது.எனக்கு சில சமயம் அப்படி எதாவது ஏடாகூடமா தோணும். மன்மோகன் சிங் ஜெயித்த போது "ச்சே அவர் மட்டும் நம்ம கம்பனியிலே அப்ளை பண்ணினா அக்கவுண்டட் வேலை ஈசியா கிடைச்சு இருக்குமில்லே" என நினைத்தேன். அப்படித்தான் எனக்கு அப்பவும் நினைக்க தோன்றியது.அந்த நட்டு கொக்குக்கு கிரீமி லேயர் பத்தி தெரியாதுல்ல என நானே என்னிடம் கேட்டு கொண்டேன். பின் நானே சிரித்து கொண்டேன். மனம் ஒரு நிலையில்லாமல் திடீர் திடீன்னு தாவியது சம்மந்தா சம்மந்தம் இல்லாமல். கிரீமிலேயர் பத்தி யோசிக்கும் போது அப்பா கொக்குக்கு பின் அழகா பறந்த அந்த அபி கொக்கை பார்த்தேன். சல்லென்று அந்த குஞ்சு கொக்கை அந்த விமான வடிவத்தை விட்டு வேகமாக வந்து தன் இறக்கையால் அனைத்து கொண்டே தன் பக்கத்திலேயே கிடுக்கி பிடி போல வைத்து கொண்டு பறந்தது. அந்த கொக்கின் அந்த செய்கையே எனக்கு அதற்கு 'அபி'என பெயர் வைக்க தோன்றியது.

சரி அந்த அபி கொக்குக்கு கிரீமிலேயர் பத்தி தெரியுமான்னு அடுத்த சந்தேகம் தேவையில்லாம வந்தது. போன தடவை ஊருக்கு போனப்ப அபி கேட்டாள் "அப்பா கிரீமி லேயர்"ன்னா என்னப்பா?

"அதுவா என் அப்பா ஒரு சாதாரண குமாஸ்தா, அவர் உன் அத்தைகளையும் என்னையும், உன் சித்தப்பாவையும் அந்த சொற்ப சம்பளத்தில் படிக்க வைக்க சிரமம் இருந்தது. அவர் அரசாங்க உத்யோகஸ்தராக இருந்த காரணத்தால் எங்களுக்கு எந்த வித சலுகையும் இல்லை. ஆனால் நம்ம கல்யாண சுந்தரம் மிராசு பையன் ஸ்காலர்ஷிப் பணத்தை வாங்கி ஹெசெம்டி வாட்ச் வாங்கி கட்டி கொண்டு என்னிடமே ஆட்டி காண்பித்தான். அதே ஸ்காலர்ஷிப் எனக்கு கிடைச்சு இருந்தா நான் கொஞ்சம் டியூஷன் அது இதுன்னு வச்சி இன்னிக்கு இதை விட நல்ல நிலமைக்கு வந்திருப்பேன். இன்னும் சில பேருக்கு உதவி செஞ்சி இருப்பேன். இதல்லாம் சட்டத்தின் ஓட்டைகள். இத அரசாங்கம் சரி செய்வதை விட நாமா பார்த்து செய்யனும் எதுனாவது. அதாவது நம் ரெக்கார்டு படி உன் அப்பா நான் துபாயில் சம்பாதிக்கவேயில்லை என்று சொன்னால் சட்டபடி அரசாங்கம் நம்பும். உனக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும். ஆனா அது இன்னும் ஒரு உண்மையான ஏழைக்கு போவதை தடுக்கும்"உண்மையிலேயே கிரீமி லேயர்கான உதாரணம் சரியாக இதுவல்ல என எனக்கு தெரிந்திருந்தும் இடஒதுக்கீடு அது இதுன்னு சொல்லி அவளை குழப்ப மனமில்லை. கிரீமிலேயரின் கான்செப்டை மட்டும் புரிய வைத்தேன். அதுவே அவளுக்கு போரடித்து இருக்கும் போல. அதனால் "அப்பா சந்தோஷ் சுப்ரமணியம்" படம் போவுமா பியர்லெஸ்ஸில்" என கேட்ட போது சரி என்றேன்.படம் பார்த்து வீட்டுக்கு வந்த போது நான் சொன்னேன் அவளிடம் "ஜெலீனீனா சரியான லூசா நடிச்சு இருக்கு". அவள் பதில் சொன்னா "இல்லப்பா ஜெயம் ரவி தான் சரியான லூசு" எனக்கு தூக்கி வாரி போட்டது. பின் அவளே சொன்னா "பின்ன என்னப்பா பிரகாஷ்ராஜ் கிட்ட எக்கசக்க பணம் இருக்கு. அவரும் பிசினஸ் பண்ண தரேன் என சொல்லியும் இவன் போய் பேங்கிலே நிக்கிறான் லோனுக்கு. இவன் அவனோட அப்பா பணத்திலே செய்யாம கவர்மெண்ட் பணத்திலேயே கொழிக்க பார்க்கிறான். இந்த படம் கூட கிரீமி லேயர் சம்மந்தப்பட்ட படம் தானப்பா" நான் கொஞ்ச நேரம் உறைந்துவிட்டேன். நான் இந்த கோணத்திலே பார்க்கவில்லையே என. நான் கூட படம் பார்க்கும் போது நினைத்தேன் "பய அப்பன் காசை எதிர்பார்க்காமல் சொந்த காலில் நிற்க ஆசைப்படுறான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன்"ன்னு. மறைமுகமாக அடுத்த ஏழையின் பிரட்டை திருடி திங்க ஆசைப்படுறான் என அபி சொல்லிய போது ஆச்சர்ய பட்டு போனேன்.நான் அதை நினைத்து கொண்டே இருக்கும் போது கொக்கு கூட்டம் போய் விட்டிருந்தது. குளிர் கொஞ்சம் அதிகமானது. இனி குளிர் தாங்காது என நினைத்து "டாக்ஸி' என கத்தினேன்! கோவிலுக்கு போய் தியானம் செய்ததை விட அந்த கொக்கு கூட்டம் பார்த்தது மனசு லேசாச்சு!

February 15, 2009

சூடான இட்லியும் + நெய்யும் + ஜீனியும் (15/02/2009)


அமரிக்க பொருளாதாரம் சரிஞ்சுதோ என்னவோ தெரியலை, ஆனா துபாய் சரிஞ்சு போச்சு. எல்லா கட்டுமான கம்பனி நிலையும் "அம்மா தாயே" லெவலுக்கு போயாச்சு. பெரிய ஜெயண்ட் என் கம்பனி சூப்பரோ சூப்பர். ஹெட் ஆபீஸ் வாசல்ல எம்ப்ளாயின்மெண்ட் ஆபீஸ் கூட்டம் போல கூட்டம். அத்தனை பேர் அனுப்பபட்டுகிட்டு இருக்காங்க. என் பிராஜட்ல டைரக்டர்ஸ் சுத்தி சுத்தி வராங்க எவனாவது வேலை செய்யாட்டி உடனே டிக்கெட் தான். எனக்கு தான் ஒன்னும் பிரச்சனை இல்லியே! நான் தான் லொட்டு லொட்டுன்னு பொட்டி தட்டிகிட்டு இருப்பனே!


அதிலே பாருங்க ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு டோமி புரூமோன்னு ஒருத்தன் டெக்னிக்கல் டிபார்ட் மெண்ட்ல. பிராஜக்ட் பிசியா இருந்தப்ப எல்லாம் வேலையே செய்யாம டிமிக்கி கொடுத்துகிட்டே இருப்பான். ஆனா பாருங்க ஒரு மாசமா மாஞ்சு மாஞ்சு வேலை செய்யறான். ஒரு பிரிண்டர் கால்குலேட்டர்(இப்ப எல்லாம் யாருமே அதை யூஸ் பன்ணுவதில்லை) வச்சிகிட்டு எதையோ கூட்டிகிட்டெ இருக்கான். பின்ன பிரிண்ட் ஆகி ரிப்பன் ரிப்பனா வரும் அந்த ரிசல்ட்டை அழகா ஓட்டி போட்டு பைல் பண்றான். இப்படியாக 6 பைல் முடிச்சு முடிச்சு அடுக்கி அடுக்கி வைக்கிறான்.
அவன் டிபார்ட்மெண்ட்ல எல்லா ஆளும் போயாச்சு. இவன் மாத்திரம் பாக்கி. ஆனா அப்பவும் இவன் நல்ல சுறு சுறுன்னு தேனி மாதிரி வேலை பார்க்கிறான். நேத்து டைரக்டர் வந்து அவன் கிட்ட "என்ன பண்ணிகிட்டு இருக்க"ன்னு பார்த்தாரு. பின்ன அவர் கேபினுக்கு அவனை தோள் மேல கைபோட்டு அழைச்சுகிட்டு போனார். அவன் அப்படி என்ன செஞ்சான்னு கடைசியா சொல்றேன்.

*********************************

தமிழ்மணத்திலே சூடு கொஞ்சம் குறைந்து ஒரே பிங் மயம். நானே சமீபத்திலே திருந்தினேன் கவிதை விஷயத்திலே. நான் திருந்தின நேரம் பார்த்து காதலர் தினம் வரனுமா? விதி யாரை விட்டது. எல்லா கவிதையும் படிச்சேன். பின்னூட்டமும் போட்டேன். அங்க தான் விதி விளையாடுச்சு. காலை முதல் "காதலனே"ன்னு ஒரு கவிதை முகப்பிலே இருந்துச்சு. சரி பின்ன படிப்போம் பின்ன படிப்போம்ன்னு இருந்துட்டேன். பின்ன டைம் கிடைச்சப்ப ஓப்பன் பண்ணி பார்த்தா ...மை காட்.... எனக்கு ஒரு மாசம் லீவ் கொடுங்க கவிஞர்களே! நான் கொஞ்சம் பயந்த சுபாவம். ஆனா "கார்த்திகை பாண்டியன்" என்ற "கெட்டவர்":-)) மாத்திரமே அதை படித்ததாக சிலர் ஜொள்ளி கொண்டனர். எனக்கு அது பத்தி எல்லாம் ஒன்னும் தெரியலை. ஆனா பாருங்க அது சூடான இடுகைல வரும். ஒரே ஒரு கார்த்திகை பாண்டியன் பார்த்து அது சூடாச்சுன்னா அவர் பார்வை எத்தனை உக்கிரம்ன்னு அவருக்கு தமிழ்மண விருது கொடுக்கலாம், நான் சிபாரிசு செய்கிறேன்.

***********************************************

ஜி ராகவன் இன்னிக்கு என் கிட்ட ச்சேட்டிகிட்டார்ன்னு சொல்வதை விட மாட்டிகிட்டார்ன்னு சொல்லலாம். அப்படியே நல்லவனாட்டம் பேசிகிட்டே இருந்தேன். ஊர்ல நாம ரிலாக்ஸா வீட்டில் இருக்கும் போது எவனாவது பக்கத்து தெருகாரன் வந்து சகஜமா பேசினா நாம மயங்கிட கூடாது. திடீர்ன்னு மஞ்ச பையில இருந்து நன்கொடை புக் எடுத்து நீட்டுவான். பார்த்தா முதல் பக்கத்திலே வேலுச்சாமி 500 ரூபாய்ன்னு எழுதி இருக்கும். அந்த வேலுச்சாமிய வித்தாகூட அத்தனை கிடைக்காது. ஆகா வேலுச்சாமியே இத்தனி கொடுத்தானான்னு குழம்பி போய் நாம 50 எழுதினா பக்குன்னு வாங்கி வந்தவரை லாபம்ன்னு பையில போட்டுகிட்டு போயிடுவான்.


அதே போல ஜி ரா கிட்ட பேசிகிட்டு இருக்கும் போதே திடீர்னு நல்ல சந்தர்ப்பம் பார்த்து என்னோட இந்த பதிவை படிச்சீங்களான்னு கேட்டு அவர் கிட்ட என் லிங் ஒன்னை தட்டிவிட்டேன். அவரும் அழுதுகிட்டே படிச்சி தொலைச்சிருப்பார்.


அவர்கிட்ட பேசிகிட்டு இருக்கும் போது கேயாரெஸ் - நந்தனார் - நிருத்ய சபை அதிலே இந்த கருத்து கந்தசாமி பத்தி ஏதோ சொல்ல ஜிரா அதுக்கு "இல்ல தொல்ஸ் அவர் நந்தனாரை ஏற்க்கனவே நிறுத்திய சபைன்னு சொல்லிருப்பார், நீங்க நிருத்ய சபைன்னு தப்பா நெனச்சுகிட்டீங்க, எப்போதும் போல எழுத்து பிழை உங்களுக்கு"ன்னு சொன்னார். டைமிங் இந்த டைமிங் ஜோக் கேட்ட போது எனக்கு நாகேஷ் நியாபகம் தான் வந்தது.


எதிர்நீச்சல் படத்திலே சவுகார்ஜானகி நாகேஷ்கிட்ட "நேத்து நேக்கும் என் ஆத்துகாரர்க்கும் சண்டை"ன்னு சொல்லி முடித்த அடுத்த வினாடி நாகேஷ் "யார் ஜெயிச்சா"ன்னு கேட்பார். என்னா டைமிங் என்னா டைமிங்!
பின்ன பெப்சி உமா கிட்ட பேசும் எல்லாரும் சொல்லும் டயலாக்கை அவர் கிட்ட சொல்லிட்டு வடை பெற்றேன். அனேகமா அவர் ச்சேட்ல என்னை பிளாக் பண்ணியிக்கலாம்ன்னு நெனைக்கிறேன்!

************************************************
சவுகார்ஜானகி பத்தி நினச்சவுடனே வல்லிம்மா ஞாபகம் தான் வந்துச்சு. நேத்து வல்லிம்மாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் "வல்லிம்மா வல்லிம்மா நான் இப்படி இப்படி ஒருத்தவங்களை கலாய்ச்சுட்டேன் நீங்க தான் பாவமன்னிப்பு தரனும்"ன்னு. "இனிமே அப்படி செய்யாதடா கொழந்தே'ன்னு சொன்னாங்க. சரிம்மா இன்னும் ஒரு மாசத்துக்கு அப்படி யாரையும் கலாய்க்க போவதில்லை. ஏன்னா இந்த கலாய்ப்பு ஒரு மாசம் தாங்கும்:-))

**************************************************
நல்ல பதிவுன்னு சொல்லனும்ன்னா ஓரினச்சேர்கை பற்றிய ஒரு பதிவு. நல்ல பதிவு நல்ல வாத பிரதிவாதங்கள். எப்படித்தான் மூக்குல வேர்த்துச்சோ ஞானிக்கு அவர் வந்து பின்னூட்டம் போட்டதும் பதிவு போட்டு அழகா பதில் சொல்லிகிட்டு இருந்த பதிவர் நண்பர் திடீர்ன்னு "அபியும் நானும்" படத்திலே பிரகாஷ்ராஜ் பிரதமர்கிட்ட பேசும் போது "எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சாஆஆஆர்"ன்னு (ஆனா அசிங்கமா இருக்கும் படத்திலே அந்த சீன்) சொல்வது போல "அய்யோ ஞானியா என் பதிவிலே"ன்னு ஆடிட்டார். அதுக்கு பதிலா அவரும் ஒரு சக வலைப்பதிவர் மாதிரி நினைச்சுகிட்டு இல்லாட்டி ஒரு படி மேலே போய் அவரை சீண்டி விட்டிருந்தா கிண்டி விட்டிருந்தா இன்னும் கருத்து கிடைத்திருக்கும்.


உதாரணத்துக்கு நம்ம வலையுலக ஆழ்வார் கேயாரெஸ் கிட்ட போய் "ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த சுடர்கொடி எல்லாம் ஒரு பொண்ணா, எனக்கு அவ செஞ்சது சரின்னு நினைக்க தோணலைன்னு ஒரு பிட்டை போட்டுட்டு(ஆண்டாள் யார்ன்னு கூட நமக்கு தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை) நாம மாதாந்திர ரிப்போட் எல்லாம் ஆபீஸ்ல முடிச்சு வந்து பார்த்தா அவர் கிண்டி கிழங்கெடுத்து ஒரு அருமையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவை தருவார். நமக்கு தேவை பால்கோவாதானே:-))
ஆனா பதிவர்களே! தின்னவேலி ஆளுங்ககிட்ட கொஞ்சம் கவனம் தேவை. ஏன்னா கிண்டி அல்வா கொடுக்கும் அபாயம் இருக்கு!
**********************************************


சமீபத்து பின்னூட்டங்களில் ஒரு நச் பின்னூட்டம்ன்னு சொன்னா ஸ்வாமி ஓம்கார் பின்னூட்டம். ஒரு பதிவிலே போய் "டெம்பிளேட் நல்லா இருக்கு........எது நல்லா இருக்குதோ அதைத்தானே சொல்ல முடியும்"ன்னு போட்டிருந்தார்.
அதுபோல குசும்பன் பதிவிலே அனானி முன்னேற்ற கழக உறுப்பினர்களின் அட்டகாசம் அருமையா இருந்துச்சு. நான் மாதவன், பழையகை அமானுல்லா, ப்பெரியபையன்... இதல்லாம் யாருப்பா? குசும்ப சித்தருக்கே வெளிச்சம்!

**********************************************
இப்ப நம்ம ஆபீஸ் டோமி புரூனோ என்ன செஞ்சான்ன்னு சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு. அவன் எப்படி வேலையே இல்லாத போது பிசியா இருந்தான்னா 2000 எண்ட்ரி ஆன ஒரு எக்செல் ஷீட்டை பிரிண்ட் வவுட் எடுத்து அந்த லூசு 1-2000 வரை தனி தனியா அந்த கால்குலேட்டரால் கூட்டி கூட்டி அதை பிரிண்ட் வேற எடுத்து அதாவது சீரியல் நம்பரை(?) அதை பைல் பண்ணி வேற வச்சிருக்கான். என்ன கொடுமை ஆண்டவா? "டேய் 1 மாசமா இதைத்தான் பண்ணிகிட்டு இருந்தியா?"ன்னு அவர் கேக்க அவனும் "ஆமாம் சார்"ன்னு சொல்லியிருக்கான். :இன்னும் எத்தனை நாள் இப்படி செய்ய உத்தேசம்"ன்னு கேக்க அவன் சொன்ன பதில் "அமரிக்க பொருளாதாரம் நிமிரும் வரை சார்"ன்னு சொல்லியிருக்கான். அவன் வேலை ஆர்வத்தை பார்த்து ஒழிஞ்சு போன்னு விட்டுட்டாரு. இப்ப அவன் 389,390, 391 ன்னு வேகமா தட்டிகிட்டு இருக்கான்!

February 14, 2009

"காதல் ஜீப்பில் நானும் தொத்திக்கவா?"- காதலர் தின ஸ்பெஷல் மீள் பதிவு!!!

காதலர் தினம் வந்துட்டா போதும் தமிழ்மணம் முழுக்க காதல்வயப்பட்டு போய்விடுகின்றது. நல்ல கவிதைகள் பிரசவமாகின்றன. நிறைய புலம்பல்கள், கொஞ்சம் சந்தோஷங்கள், கொஞ்சம் பெருமூச்சு, கொஞ்சம் பொறாமைகள், கொஞ்சம் கர்வம் இப்படி கலந்துகட்டியான பிரயாணிகளுடன் காதல் ஜீப் போய் கொண்டு இருக்குது தமிழ்மனத்திலே. அடியேனும் ஒரு சின்ன சைஸ் ரவுடிதான், ஸோ எச்சூச்மீ எனக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க, நானும் தொத்திகறேன்! ஆனா இது ஒரு மீள் பதிவு தான்! என்ன செய்ய காதலை பத்தின சரக்கு அத்தனையே என் கிட்ட:-))


**********************************************


அந்த தாவணி தேவதையின் பெயர் சூடிக்கொடுத்த சுடர் கொடி. அவளின் வசீகரமே அவள் தலைமுடிதான். மற்ற பெண்களின் சடையின் அடர்த்தி இவள் சடையின் ஒரு பிரிக்கு சமமாக இருக்கும். அத்தனை மொத்தமான சடை அவள் முட்டிகால வரை பிரண்டு ஆட்டம் போடும். அவள் கொஞ்சம் குள்ளமான உருவம். நிறம் என்று பார்த்தால் மாநிறம் தான். அவள் சிகப்பாக இருந்திருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்காது. நல்ல திருத்திய முகம். ஆனால் எப்போதுமே ஒரு மெல்லிய சோகம் இழந்து ஓடும் உதடுகள். கண்கள், அதன் உள்ளே ஓடி விளையாடும் அந்த கருப்பு திராட்சகள் கிட்ட தட்ட ஆண்கள் அத்தனை பேரையுமே "அட" போட வைக்கும்.


என் வீட்டுக்கு எதிர் வீடு அவளின் உறவினர் வீடு. அவள் வீடு எங்கள் ஊரிலிருந்து 20 கி.மீ தள்ளி இருந்தது. +2 வரை அங்கே படித்துவிட்டு கல்லூரிக்காக உறவினர் வீட்டுக்கு வந்து விட்டாள். ஒரு காலை நேரத்தில் அவளின் உடமைகள் அடங்கிய ஒரு ஒயர் கூடையோடு அவளின் அப்பா அழைத்து வந்த போது தான் நான் முதன் முதலாக பார்த்தேன். அந்த வினாடியை இந்த நிமிடம் வரை என்னால் மறக்க முடியவில்லை. அவளுக்காகவே நான் தட்டச்சு பயிற்சிக்கு சென்றேன். அவளை கவர எத்தனை முயற்சிகள்.


ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்காதமையால் ஒரு நாள் தட்டச்சு பயிற்சி பள்ளியின் வாசலில் இருந்த அவள் சைக்கிளோடு என் சைக்கிளையும் இணைத்து பூட்டிவிட்டு காத்திருந்தேன். வந்து பார்த்த அவள் கொஞ்சமும் கோபிக்கவில்லை. "என்னங்க நம்ம சைக்கிளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்க" என சொல்லிவிட்டு மெல்லியதாக சிரித்தாள். எனக்கு ஆயிரம் வண்ணத்து பூச்சிகள் மனதில் பறக்க தொடங்கி விட்டது. என்னை இந்த உலகமே கவனிக்க தொடங்கியது போல ஒரு நினைவு. என்னை சுற்றி ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். என் வேடிக்கை பேச்சுகளால் நான் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். என்னுடைய அந்த குணம் தான் அவளுக்கு பிடித்ததாம். குசூலோடித்கொதுடுங்த்கதன்.சுடர்கொடி என எல்லாம் கிருக்க தொடங்கினேன். எந்த மரத்தை பார்த்தாலும் இதயம் வரைய ஆரம்பித்தேன். ஒரு சீப்பும் கொஞ்சம் முக பவுடரும் நிரந்தரமாக என் சட்டை பையில் வந்து குடியிருக்க தொடங்கியது. எந்த காரை பார்த்தாலும் அந்த கார் கதவின் கண்ணாடியில் என்னை பார்க்க தொடங்கினேன். ஏனனில் அதில் மட்டுமே கொஞ்சம் குண்டாக தெரிந்தேன்.


அவள் கூந்தலுக்கு பூ வைக்க ஆசைப்பட்டேன். அவள் என் கூடவே இருக்க ஆசைப்பட்டேன். நண்பர்களை விட்டு தனியே வந்து சிந்திக்க தொடங்கினேன். அபத்த கவிதைகள் பொங்கி பொங்கி வந்தன. பொங்கியதை எல்லாம் பேப்பரில் வாந்தியாக எடுத்தேன். நானே படித்து மகிழ்ந்தேன். என்னை நம்பாமல் சலூன் கடைகாரரை நம்பினேன் மீசை திருத்த!அம்மாவின் சமையல் பிடிக்காமல் போனது. அப்பாவின் பேச்சுகள் அலுப்பாக இருந்தன. நான் என்ன வண்ணத்தில் உடை உடுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஆளாள் அவள். வித விதமாக என்னை போட்டோ எடுத்து கொள்ள ஆசையாக இருந்தது. அதை அவள் பார்க்க வேண்டும் என்பதில் அதீத ஆசையாக இருந்தது. அவள் போட்டோவை என் இதயத்துக்கு இணைப்பாக ஒட்டி கொள்ள ஆசையாக இருந்தது. ஒரு குச்சியில் அந்த போட்டோவை கட்டி எனக்கு 1 முழத்துக்கு முன்பாக ஆடிக்கொண்டிருக்க அபத்த யோசனை வந்து தனியே வீட்டின் அறையிலே செய்து பார்க்க தூண்டியது. "தென்றலே என்னை தொடு" படமும் "வருஷம் 16" படமும் எனக்கு ராமாயண மகாபாரதமாக ஆகியது.


அவள் சடையை பிடித்து இழுக்க ஆசை வந்தது. எங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என எழுதி பார்க்க வைத்தது. யாருடைய கல்யாண பத்திரிக்கையிலோ அந்த மணமக்களுக்கு பதிலாக எங்கள் பெயரை எழுத வைத்தது மனது. அவள் சாதாரண ஜுரத்துக்கு அவள் உறவினர் சைக்கிளில் டாக்டர் வீட்டுக்கு போய் திரும்பியவுடன் நான் போய் டாக்டரிடம் "டாக்டர் அபாய கட்டத்தில் இருந்து தாண்டிவிட்டாளா இல்லையெனில் அப்போலோ கொண்டு போகலாமா" என கேட்டு டாக்டரை மயக்கமடைய வைத்தேன். முப்பத்தி இரண்டு பக்கத்துக்கு எல்லாம் கடிதம் எழுதி அவளிடம் கொடுக்க வைத்தது மனது. பின் அவளிடமிருந்து 37 பக்க பதில் கடிதத்தை உடனே படிக்காமல் நடு மைதானத்துக்கு கொண்டு போய் உரக்க படிப்பது, பின்னே "சூடிகொடுத்த சுடர் கொடி குலோத்துங்கன்" என்கிற அவள் கையெழுத்தை மட்டும் கிழித்து வாயில் போட்டு விழுங்குவது, (அது போயிருக்கும் ஒரு 500 கையெழுத்து வயித்து குள்ளே)பிரசவத்துக்கு அவளை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டு வாசலில் நான் கையை பிசைந்து கொண்டிருப்பதாக நினைத்து கொண்ட்தெல்லாம் கொஞ்சம் அதிகபட்சம் தான்.


நான் அப்போது கல்லூரி மூன்றாம் ஆண்டு. அவளோ பெண்கள் கல்லூரியில் முதல் ஆண்டு. நான் இளமறிவியல் முடித்து அடுத்த கட்டத்துக்கு போகும் போது அவள் இன்னும் அதிகமாகவே என்னை விழுங்கிவிட்டிருந்தாள். காதலி உடையவன் என்கிற கர்வம் எனக்கு தனி அந்தஸ்தை கொடுத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் தான் அவள் வீட்டுக்கு விஷயம் தெரிய வர அவள் படிப்புக்கு பாடை கட்டப்பட்டு அவளின் சொந்த ஊருக்கும் அழைத்து போக பட்டாள். நானும் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை. காதலிப்பது என்பது கற்பு இழப்புக்கு சமமாக அவள் வீட்டார் நினைத்தார்கள்.அவசர அவசரமாக அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க நாலு திக்கும் ஆட்கள் பறந்தார்கள்.(ஆறு மாதங்களுக்கு பின்…………………)அந்த சுடிதார் தேவதையின் பெயர் பிந்தியா. அவள் சேர நன்னாடு. விரித்து விட்ட ஈர தலைமுடியும், நெற்றி சந்தனமும், மயக்கும் கீரி விட்டது மாதிரியான கண்களும்,அவளின் நெடிய உருவமும், எலுமிச்சம் பழ வண்ணமும் ஆண்கள் அத்தனை பேரையும் நின்று பார்க்க வைக்கும். அந்த வண்ணமே அவளின் சிறப்பம்சம், அவள் கொஞ்சம் மாநிறமாக இருந்தால் கூட அத்தனை நன்றாக இருந்திருக்க மாட்டாள். எப்போதுமே அவள் உதடுகளில் ஒரு வித மின்னல் கீற்று மாதிரியான குறும்பு ஓடிக்கொண்டே இருக்கும்.………………… போங்கப்பா பதிவு ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டது …மாற்றம் என்பது மட்டுமே மாறாதது இவ்வுலகில்!!!!!


********************************


குறிப்பு: 1. எதுனா படம் கலர்ஃபுல்லா கேட்டேன் ஜீவ்ஸ் கிட்டே! 5 நிமிடம் ஆகும் பர்வால்யான்னு கேட்டார், அதுக்குள்ள இந்த பதிவை போட்டுடறேன்.


2. இதிலே வர்ர கதாவெசல்ஸ் எல்லாம் அக்மார்க் கற்பனை தான்!


3. ஜீவ்ஸ் எடுத்த போட்டோ வந்தாச்சு! என் கழுத்தில் கத்தி வைத்து அன்பாக "இந்த போட்டோ வரலைன்னா" என கேட்டு கொண்டதன் பேரிலும் படம் மிக அருமையாக இருப்பதன் பேரிலும் பதிவை காறி துப்ப நினைப்பவர்கள் இந்த போட்டோவை பார்த்து விட்டு விட்டு விடுவார்கள் என்கிற தடுப்பாட்ட பாலிசியின் படியும் படம் வெளியிடப்படுகின்றது.

4. ஜீவ்ஸ்ன் படத்தில் இருக்கும் கடலை விவசாயி நான் இல்லை:-))

February 13, 2009

காணவில்லை! காரணம் என்ன? - கோவியார் பெசல் கும்மி!ஸ்வாமி அபியப்பானந்தாவின் வயித்தெரிச்சலை இங்கே கொட்டிகிட்ட சிங்கை ஜிங்கம் கோவியாரின் அழகான குசும்ப சித்தரால் பாடல்பெற்ற ஸ்தலமான அந்த அழகிய செல்ல தொப்பை எங்கே என நாம் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ஆராய்ச்சி செய்தோம்.
அவரின் பழைய அந்த போட்டோ இங்கே!


இப்படியாக இருந்த கோவியார் தனக்கு குசும்ப சித்தரால் ஏற்பட்ட டேமேஜின் காரணமாக இந்த முறை கோவை சென்று ஸ்வாமி ஓம்கார் அவர்களோடு ஆப்பிள் ஜூஸ் குடித்து கொண்டே ஆலோசனை செய்ததோடு மட்டும் அல்ல ஸ்வாமிகளோடு பத்து நிமிடம் தியானத்தில் கலந்து கொண்டு திரும்பி வரும் போது இப்படி ஆகிவிட்டார்! எப்படி இருந்த கோவியார் இப்படி ஆகிட்டார்!

இதை கேள்விப்பட்ட மாநக்கல் சிபியாரும், வடகரை அண்ணாச்சியோடு போய் ஸ்வாமி ஓம்கார் அவர்களை சந்தித்தும் ஆப்பிள் ஜூஸ் கிடைக்காமல் கொண்டு சென்ற பானையோடு திரும்பி வந்தனர் என்பது ஒரு உபரி செய்தி!

மக்கா! இதிலே ஏதும் நுன்னரசியல் பண்ணிடாதீங்க! ஸ்வாமி ஓம்கார் அவர்களும் நல்ல நகைச்சுவை உணர்வுடையவர் என்கிற நம்பிக்கைல தான் அவரை கேட்காமல் அவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது!

February 10, 2009

ஆண்டவன் வச்ச ஆப்பு!!!(இனிமே கவிதையை கிண்டல் பண்ணாதடா அபிஅப்பா)நான் எத்தனை கவிதையிலே போய் 'ஹச், ஹச்"ன்னு தும்மி கிட்டு வந்தேன்! ஆண்டவன் வச்சுட்டாண்டா ஆப்பு!
***********************************

நான் கடந்த நவம்பர் 10ம் தேதி இந்தியா போன உடனேயே கும்பகோணத்தில் டெஸ்ட் அது இதுன்னு ஆகி போச்சு.12ம் தேதி அபிபாப்பா திரும்ப திரும்ப போன் பண்ணி மாயவரம் வர சொன்னாள். சரின்னு 12ம் தேதி இரவு 11 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை போனேன். அப்போ அதிசயமா பாப்பாவும் தம்பியும் முழிச்சுகிட்டு இருந்தாங்க. ரெண்டு பேருமே புதுசா சட்டை போட்டிருந்தாங்க. எனக்கோ ரொம்ப டயர்டு. பாப்பா ஏதோ ஒரு வித ஜாலி படபடபோடும் தம்பி என்னன்னு தெரியாமையே புது சட்டை போட்டு கொண்டும் என்னை பார்த்ததும் ரொம்ப குஷியாகிட்டாங்க.


தம்பி தான் நான் எப்போ வெளியே போனாலும் கீழே விழுந்து புரண்டு அழுவதும் திரும்பி வரும் போதும் அதே மாதிரி சந்தோஷத்திலே புரண்டு சிரிப்பதும் வாடிக்கைதான். நான் வந்த அசதியிலே அப்படியே தூங்கிட்டேன். 12 மணி ஆகும் போது பசங்க 2 பேரும் என் மேலே ஏறி குதித்த போது எனக்கு ஒரு வித எரிச்சலாகவும்(நெசமாவே அப்படி இருந்தது) "கிருஷ்ணா பசங்களை பிடிக்க கூடாதா ராத்திரி 12 க்கு என்ன விளையாட்டு" என கத்திய போது தம்பி தன் சந்தோஷத்தை மறந்து அப்படியே விக்கித்து நிற்க கிருஷ்ணா "ஹேப்பி பர்த்த் டே"ன்னு சொல்ல என் கோவம் முழுவது போய் விட்டது.

நான் அப்படியே சமாளித்து தம்பியை சமாதானமாக்க அவன் "சரி இது அப்பா ச்சும்மா ஊலுலூவாக்கும்''ன்னு கத்தினாங்க போல இருக்குன்னு நெனச்சு கிட்டு பாப்பா சொல்வது மாதிரியே அவன் பாஷையில் ஹேப்பி பர்த் டே சொல்ல பாப்பா ஓடி போய் மறைத்து வைத்த எனக்கான கிஃப்ட்டை எடுத்து வந்து ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்க பிரித்து பார்த்தால் ஒரு அழகிய செடி!

நான் நிஜமாகவே சொர்கத்தை உணர்ந்த தருணம் அது என கூட சொல்லலாம். பின்பு பாப்பா ஏதோ கவிதை ஒன்றை எழுதி அதை வரி வரியாக பிய்த்து என் தலையில் போட தம்பியும் அது ஏதோ சடங்கு மாதிரி நினைத்து அவனும் போட அது தீர்ந்து போனதும் ஓடி போய் ஒரு ஆனந்த விகடனை அவசர அவசரமாக பிய்த்து என் தலைவில் போட அது அவனுக்கு திருப்தியளிக்காத காரணத்தால் பக்கத்தில் இருந்த டம்ளரில் இருந்து தண்ணீரையும் எடுத்து கொட்ட அந்த கவிதையோடு சேர்ந்து என் தலையும் நனைந்தது.

நான் ஊருக்கு வரும் போது பாப்பா அவசர அவசர மாக அதே கவிதையை ஏதோ ஒரு நோட்டு பேப்பரில் எழுதி கிழித்து அதை என் பாக்கெட்டில் வைக்க நான் அத்தோடு அதை மறந்து விட்டேன். ஆனால் இன்று அந்த சட்டையை எடுக்கும் போது அந்த கவிதை கிடைத்தது, அந்த கவிதையை நான் அங்கே ரசித்ததை விட இங்கு ஆயிரம் மடங்கு இங்கே ரசிக்கிறேன். ஸ்பெல்லிங் மிஸ்டேக்(என்னை விடவா) என்பதை எல்லாம் தாண்டி அந்த பாசம் மனதை நிறைத்து விடுகின்றது.ஐந்து நட்சத்திர மங்கிய விளக்கில், முகம் தெரியாமல், ஏதோ தின்று கொண்டாடுவதை விட இது தான் மிக அழியா நினைவாக இருக்கும் என்பதில் உங்களுக்கு எதுனா சந்தேகமிருக்கா?

February 6, 2009

எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை!!!

ஒரு பதிவிலே பார்த்தேன்! சுரேஷ் என்பவர் பின்னூட்டம்! நானும் அதை தான் சொல்ல வந்தேன்!

என்ன கொடுமை இது! தேவை இல்லாமல் கலைஞரை திட்டுவது! என்ன இது பேஷன் பைத்தியமா எல்லாரும். இன்னிக்கு கலைஞரை திட்டுவது என்றால் மட்டுமே தமிழ்மணம் ஏத்துக்குமா?

குபீர் ஈழ ஆதரவு பெருகி இருக்கே அதுக்கு என்ன காரணம்.குழலி கூட "அய்யோடா நம் ராமதாசை கொஞ்சமா தான் திட்டினாங்க"ன்னு சந்தோஷபடுறார்.

குசும்பன் தான் தான் குசும்புக்கு ஏதாவது பண்ணுறார்ன்னு பார்த்தா குறும்பன்ன்னு ஒருத்தர் தேவையே இல்லாம தினமணி கார்ட்டூன் எல்லாம் போடூறார்.

லக்கி தம்பியை பத்தி நான் ஏதும் சொல்ல வரவில்லை!என்ன நடக்குமோ எது நடக்குமோ! யான் அறியேன் பராபரமே! ஆனா அவர் பதிவிலே நான் போய் "நானும் "கருணாநிதி" ஒழிக" கோஷம் போட்டு வந்தேன்! காரணம் அவரின் உணர்ச்சி மிகும் பதிவு!

ஆனா ஜாலிஜம்பர், ஜ்வோவ்ராம் பதிவு எல்லாம் அறிவு பூர்வமா இருந்துச்சு!ஆனா அதுக்கு வந்த பின்னுட்டம் சிலவற்றை அவர் கண்டிப்பா நீக்கியிருக்கணும் அப்படி பார்த்தா கூட சிலர் கண்மூடிதனமாக வெறியுடன் இருப்பதாக தெரியுது.

இவர்கள் எல்லாம் சொல்லும் காரணம் "ஜெயலலிதா புலிகளின் எதிரி, அதனால் அவரை விட்டுவிடுவோம் ஆனால் கலைஞர் புலிகளின் துரோகி" இது தானே! ஆமாம் அப்போது 1984-86 ல் "சிறீ சபா ரத்னம் புலி பிரபாகரனால் கோரக்கொலை" என திமுக போஸ்டர் அடிச்சு ஒட்டிச்சே! அப்போதிருந்தே புலி எதிர்ப்புதானே! ஆனால் அந்த சமயத்தில் அதிமுக தானே புலி ஆதரவு. ஆனால் அந்த கட்சியை வளைத்து போட்ட ஜெயலலிதா நல்லவர். அப்படித்தானே!

பல கோடிகளை செலவழித்து சிறீசபா ரத்தினம் செய்த 2 விமானங்கள் அப்போதே குண்டு வைத்து தகர்க்கப்பட்டதே புலிகளால்! அது எல்லாம் பழைய கதை!

அதை எல்லாம் விடுங்க. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். தமிழ் இனைய வழியாககூக்குரல் விட்டாலும் கூட அதிக ப்ட்சம் 5000 பேர் வரை தான்சேரும் உங்கள் வாய்ஸ்! ஆனா கலைஞர் புத்திசாலி!! அவரின் செய்திகளுக்கு முன்னே போடும் செகண்ட்ஸ்ல போடும் செய்தி கூட உலகம் பூராவம் எதிரொலிக்கும்! அதை தயவு செஞ்சு புரிஞ்சுகோங்கப்பா!

குறிப்பு: எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை, என்னிக்காவது போடும் மகராசி இன்னிக்கும் போடலை

February 3, 2009

குந்தாணிக்கருப்பி!!! - ஒரு தொடர் கதை பாகம் #1

வழக்கொழிந்த தமிழ்ச்சொற்கள் என்பது பற்றி முத்துலெஷ்மி ஒரு பதிவிட்டு என்னையும் Tag பண்ணியிருந்தாங்க. நான் அது பற்றி சும்மா சொல்லாம ஒரு கோர்வையா சொல்ல நினைத்த போது அது ஒரு சிறுகதையா ஆரம்பித்து பின் தொடரா ஆகிவிடும் போலிருந்தது. சரி சொல்ல வேண்டியதை அழகா சொல்லி விடுவோம் என நினைத்து எழுத ஆரம்பித்து விட்டேன். முதலில் அந்த கதையின் சுருக்கம் இதோ!

சீத்தா பிறந்தது வளர்ந்தது ஒரு கிராமத்தில் நல்ல செல்ல செழிப்பான பண்ணை வீட்டில். நல்ல அழகி. சந்தர்ப்ப சூழ்நிலையால் தப்பு செய்பவள். அவள் வாக்கப்பட்டு போவது ஒரு ராணுவவீரன். பின் அவள் வாழ்க்கை வேறு மாதிரியாக ஆகிவிடுகின்றது. இப்போது அவளுக்கு வெளிநாட்டில் வசிக்கும் ஒரு மகன், ஒரு மகள். அவள் இப்போது விதவை. காசு பணம் எதற்கும் குறை வில்லை.

அவள் இப்போதுஅந்த கிராமத்துக்கு வருவது தன் நிலத்தை எல்லாம் விற்று விட்டு பணத்தை வங்கியில் போடத்தான். கிராமத்தில் அவள் நுழையும் போது கதை ஆரம்பம். ஆனால் சீத்தா நம் கதாநாயகி இல்லை.

சீத்தா வீட்டில் வேலை செய்த "குந்தாணி கருப்பி" தான் நம் கதா நாயகி. அந்த கிராமத்துக்கு உள்ளே செல்ல வேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் நடந்து தான் போக வேண்டும். அப்போது தான் சீத்தா குந்தாணி கருப்பியை பார்க்கிறாள்.

நடந்து போகும் போது ஏற்படும் சம்பாஷனைகள், நடக்கும் விஷயங்கள், சீத்தா மனதில் ஏற்படும் பழைய நினைவுகள் இவை தான் கதையை ஆக்ரமிக்க போகின்றன. சீத்தா கிராமத்துக்கு உள்ளே போன பிறகு நடக்கும் மாற்றங்கள் தான் கதை.

நம்ம குந்தாணிக்கருப்பிக்கு தேதி வருஷம் எல்லாம் தெரியாது. உனக்கு எப்போ கல்யாணம் ஆச்சுன்னு கேட்டா "சோபா நாண்டுகிட்டு செத்துச்சே அப்பக்கா" என சொல்லும் வெள்ளேந்தி. குந்தாணிக்கு எல்லாமே சினிமாதான். இப்போ கூட தான் செத்து போனா விஜய் வந்து தூக்கி போடுவார் என நினைத்து கொண்டிருக்கும் ஒரு அப்பாவி.

குந்தாணிக்கு ஒரு புருஷன் கூட உண்டு. சிவலிங்கம். அவனுக்கு என்ன குறை? குந்தாணிக்கு ஊரில் என்ன வேலை? ஊரில் மாட்டுக்கு காளை சேர்ப்பது, உழவு காளைக்கு காயடித்து, நெற்றியில், முதுகில் சூடு வைப்பது, நிறை மாச கர்பினி பெண் குழந்தை பிறந்தால் கொடுக்கும் 'காரைக்கா மருந்து" வாங்க பூவம் போவது, பண்ணை வீட்டில் எதாவது தப்பு நடந்தா அந்த பழியை தான் ஏற்ப்பது...இப்படி சகல வேலையும்.

சீத்தாவின் அழகை வர்னிக்க போகும் நான் குந்தாணிக்கருப்பியின் அழகை வர்ணிக்க போவதில்லை. அதற்கு பதில் உண்மையான குந்தாணியை தான் வர்ணிக்க போகிறேன். கதையின் கடைசியில் யார் அழகு என நீங்களே சொல்லுங்கள். எது உண்மையான அழகு என்பதை சொல்லுங்கள்.

தயவு செய்து குந்தாணி என்பதை கெட்ட வார்த்தையாக நினைக்க வேண்டாம். கிராமத்தில் நெல் கொட்டி வைக்கும் பத்தாயம் என்பது போலத்தான் குந்தாணி. இதுவும் ஒரு வழக்கொழிந்த சொல் தான்.

இதில் நம் கதாநாயகி பேசும் தஞ்சை கிராமத்து மொழியில் அனேகமாக நிறைய சொற்கள் அது போல வரும். அதற்கான விளக்கத்தை நான் பின்னூட்டத்தில் சொல்கிறேன்!

தொடரும்....