பெரிய ரேங் வாங்கிருக்கேன் பாருங்க... இஸ்கூல்ல வாங்குன மாதிரியே:-))

tamil blogs traffic ranking

February 6, 2009

எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை!!!

ஒரு பதிவிலே பார்த்தேன்! சுரேஷ் என்பவர் பின்னூட்டம்! நானும் அதை தான் சொல்ல வந்தேன்!

என்ன கொடுமை இது! தேவை இல்லாமல் கலைஞரை திட்டுவது! என்ன இது பேஷன் பைத்தியமா எல்லாரும். இன்னிக்கு கலைஞரை திட்டுவது என்றால் மட்டுமே தமிழ்மணம் ஏத்துக்குமா?

குபீர் ஈழ ஆதரவு பெருகி இருக்கே அதுக்கு என்ன காரணம்.குழலி கூட "அய்யோடா நம் ராமதாசை கொஞ்சமா தான் திட்டினாங்க"ன்னு சந்தோஷபடுறார்.

குசும்பன் தான் தான் குசும்புக்கு ஏதாவது பண்ணுறார்ன்னு பார்த்தா குறும்பன்ன்னு ஒருத்தர் தேவையே இல்லாம தினமணி கார்ட்டூன் எல்லாம் போடூறார்.

லக்கி தம்பியை பத்தி நான் ஏதும் சொல்ல வரவில்லை!என்ன நடக்குமோ எது நடக்குமோ! யான் அறியேன் பராபரமே! ஆனா அவர் பதிவிலே நான் போய் "நானும் "கருணாநிதி" ஒழிக" கோஷம் போட்டு வந்தேன்! காரணம் அவரின் உணர்ச்சி மிகும் பதிவு!

ஆனா ஜாலிஜம்பர், ஜ்வோவ்ராம் பதிவு எல்லாம் அறிவு பூர்வமா இருந்துச்சு!ஆனா அதுக்கு வந்த பின்னுட்டம் சிலவற்றை அவர் கண்டிப்பா நீக்கியிருக்கணும் அப்படி பார்த்தா கூட சிலர் கண்மூடிதனமாக வெறியுடன் இருப்பதாக தெரியுது.

இவர்கள் எல்லாம் சொல்லும் காரணம் "ஜெயலலிதா புலிகளின் எதிரி, அதனால் அவரை விட்டுவிடுவோம் ஆனால் கலைஞர் புலிகளின் துரோகி" இது தானே! ஆமாம் அப்போது 1984-86 ல் "சிறீ சபா ரத்னம் புலி பிரபாகரனால் கோரக்கொலை" என திமுக போஸ்டர் அடிச்சு ஒட்டிச்சே! அப்போதிருந்தே புலி எதிர்ப்புதானே! ஆனால் அந்த சமயத்தில் அதிமுக தானே புலி ஆதரவு. ஆனால் அந்த கட்சியை வளைத்து போட்ட ஜெயலலிதா நல்லவர். அப்படித்தானே!

பல கோடிகளை செலவழித்து சிறீசபா ரத்தினம் செய்த 2 விமானங்கள் அப்போதே குண்டு வைத்து தகர்க்கப்பட்டதே புலிகளால்! அது எல்லாம் பழைய கதை!

அதை எல்லாம் விடுங்க. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். தமிழ் இனைய வழியாககூக்குரல் விட்டாலும் கூட அதிக ப்ட்சம் 5000 பேர் வரை தான்சேரும் உங்கள் வாய்ஸ்! ஆனா கலைஞர் புத்திசாலி!! அவரின் செய்திகளுக்கு முன்னே போடும் செகண்ட்ஸ்ல போடும் செய்தி கூட உலகம் பூராவம் எதிரொலிக்கும்! அதை தயவு செஞ்சு புரிஞ்சுகோங்கப்பா!

குறிப்பு: எப்போதும் போடும் நாய் இன்னிக்கு போடலை, என்னிக்காவது போடும் மகராசி இன்னிக்கும் போடலை

43 comments:

  1. /பல கோடிகளை செலவழித்து சிறீசபா ரத்தினம் செய்த 2 விமானங்கள் அப்போதே குண்டு வைத்து தகர்க்கப்பட்டதே புலிகளால்! /

    enna kindalaa?

    ReplyDelete
  2. \\ Anonymous said...
    /பல கோடிகளை செலவழித்து சிறீசபா ரத்தினம் செய்த 2 விமானங்கள் அப்போதே குண்டு வைத்து தகர்க்கப்பட்டதே புலிகளால்! /

    enna kindalaa?\\

    இல்லை அனானி அய்யா! முதன் முதலில் ஒரு போராளி இயக்கம் விமானம் செய்தது ஸ்ரீசபாரத்னம் தலைமையில் இருந்த டெலோ (Tamil Elam Libratin Organaisatiion) தான்!

    இல்லை என சொல்ல சொல்லுங்கள் யாரையாவது!

    வரலாறு முக்கியம் அனானியாரே!

    ReplyDelete
  3. வரலாற்றைப் பொய் ஆக்காதீர்கள் அபி அப்பா. சபாரத்தினம் அப்்படி ஒன்றுறும் விமானப்படை உருவாக்கவில்லை. யாரும் அறியாத புதுக்கதை ஒன்றை நீங்கள் விடுகின்றீர்கள்....தவிர சபா தலைவராக இருந்ததுது, 3 வருடங்கள் தான்.

    ReplyDelete
  4. இல்லை அனானி! நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இதிலே! எனக்கு நல்லா தெரியும்! அப்போ 1983-89 வரை ஈழம் - தமிழ்நாடு எங்களுக்கு ஒரே மாதிரிதான் இருந்துச்சு! நாங்கள் எல்லாரையும் பார்த்திருக்கோம்!

    ReplyDelete
  5. புலி ஆதரவு பிறகு புலி எதிர்ப்பு - இது ஜெயலலிதாவின் நிலை.

    கருணாநிதி நிலை என்ன ?

    மாசத்துக்கு ஒரு தடவ மாத்தி மாத்தி பேசி மனுஷன் உயிர் வாங்கறார். ஆனா எல்லாரும் கும்மரா மாதிரி நான் கும்ம மாட்டேன். இலங்கை பிரச்சனை அவரோட ஆட்சி கலைப்புக்கு வேணா உபயோகப்படும். ஆனா வோட்டுக்கு உபயோகப்படாது. திரும்பி ஜெயிக்க உபயோகப்படாது. கருணாநிதி எடுக்கும் எந்த முடிவாலும் ஈழ பிரச்சனையில் இன்றைய அளவில் எந்த ஒரு பாதிப்பும் / மாற்றமும் இருக்காது. ஆனா அவரு இதை வச்சி பண்ற அரசியல் அசிங்கமா இருக்கு. ராஜினாமா, இன்று ஒரு முடிவு, நாளை ஒரு சால்ஜாப்பு. இது தான் இந்த அளவு வெறுப்பை கிளப்பி இருக்கிறது.

    ReplyDelete
  6. மணி! என்ன நீங்க தப்பா சொல்றீங்க! எப்ப புலி ஆதரவுன்னு அவரு சொன்னாரு! நீங்களே கற்ப்பனை பண்ணிகிட்டா திமுக பொறுப்பாகுமா?

    யாரு ராஜினாமாவ வேண்டாம்ன்னு சொன்ன, இப்ப ஈழ தமிழரால் போற்றப்படும் சில தலைவர்களால் அந்த விஷயத்தை விட்டார்ன்னு கேளுங்க அது சரியா இருக்கும்!

    ReplyDelete
  7. வணக்கம் அபி அப்பா சிறீ சபாரத்தினம் விமானம் செய்தாரா? எங்கோ எப்பொழுது ?? அதனை புலிகள் குண்டு வைத்து தகர்த்தனரா?? தயவு செய்து நீங்களும் பொய் பரப்புரைக்கு பலியாகி விடாதீர்கள்.முதன் முதலில் விமானம் செய்யத் தொடங்கியது புலிகள் இயக்கமே. அதன் விபரங்கள் நானே ஒரு பதிவில் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.ஏனெனில் அதன் ஆரம்ப முயற்சிகளில் நானும் ஈடுபட்டவன் என்கிற அனுபத்திலேயே எழுதுகின்றேன்.நன்றி

    http://sathirir.blogspot.com/2007/03/blog-post_30.html

    ReplyDelete
  8. ஒரு வரைவுத் திட்டத்தை அன்றைய காலகட்டத்துல, அன்றைய அலட்சியப் படுத்தப்பட்ட தலைவர்கிட்டவும் பெருசு போயி காட்டிட்டு வரச் சொல்ல, சிறுசுக, அலட்சியத்தைக் காலவதியான பெருச்சாலின்னு விட்டுட்டாக‌... அப்புறம் தசரத குமார மதியன்களும் பண்டங்களோட ஆரிகளும் அவனுகளும் இவனுகளும் சேந்துகிட்டு போனாங்க, வந்தாங்க... அலட்சியம் என்னத்த செய்யும்... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கி ஒரு காலம் வரும்ன்ட்டு சுருண்டு முடங்கிடுச்சி.... இன்னைக்கு அந்த பூனையோட காலம் போல‌...ஆனாலும் அது தாய்ப்பூனைதேன்... இஃகிஃகி!

    ReplyDelete
  9. மன்னிக்கனும் அபிஅப்பா!

    கலைஞர் செய்றது சரியில்லே. இதை எல்லா திமுக காரனும் ஒத்துக்குவான். தப்பை, தப்புன்னு நெஞ்ச நிமித்தி சொல்றதுதான் தைரியம். அதிமுக, கண்டிப்பா செய்ய மாட்டாங்க. அதான் வித்தியாசம். அம்மா, என்ன பண்ணினாலும் புண்ணியம்பாங்க.

    ReplyDelete
  10. நான் சாத்திரிக்காகத்தான் வெயிட்டிங்! வந்துட்டாங்க!

    நண்பா! சாத்திரி உன் வயது என்ன? நான் அப்போ உழைத்து கொடுத்த விமானம் அல்ல அது நாங்கள் பிச்சை எடுத்து காசுசேர்த்து செய்த விமானம்
    அது போன போது எங்கள் மானம் போச்சு
    அது சம்மந்தமா அப்போதைய பேப்ப்ர் எல்லாம் எடுக்க சொல்லி என் "சாந்திரி"க்காக எடுங்கப்பான்னு சொல்லிட்டேன்! வரும் வரை காத்திரு தம்பியே!!!

    ReplyDelete
  11. அபி அப்பா

    டெலோ இயக்கம் விமானம் செய்ததாக அவர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மானிப்பாய் என்ற இடத்தில் மயூரன் என்ற புலிகள் இயக்க பிரதேசத் தலைவர் மேற்பார்வையில் விமானம் ஒன்று செய்யப்பட்டது. டெலோ இய‌க்க‌ம் உங்க‌ளிட‌ம் விமான‌ம் செய்வ‌தாக‌ச் சொல்லிக் காசு வாங்கியிருக்க‌லாம் போல‌ ;)

    கலைஞர் டெலோவுக்கு வழங்கிய ஆசியும் ஒத்துழைப்பும் வரலாற்றில் இருக்கு. ஆதாரமாக அந்த நேரத்தில் உள்துறைச் செயலராக இருந்த டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர். நிஜமும் நிழலும் நூலில் சொல்லியிருக்கு. ஆனா எதிர்ப்போ ஆத‌ர‌வோ அந்த விஷ‌ய‌த்தில் தெளிவா இருக்க‌ணும். த‌மிழ்ச்செல்வ‌னுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லியும் சைக்கிள் கேப்பில் க‌ண்ட‌ன‌மும் போட்டு தானும் குழ‌ம்பி எல்லோரையும் குழ‌ப்புறார். இன்த‌ விஷ‌யத்தில் புர‌ட்சித் த‌லைவியின் தெளிவு மெச்ச‌த் த‌க்க‌து.

    ReplyDelete
  12. அபி அப்பா, இந்தக் கதையை உங்களைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்கவில்லை என நினைக்கின்றேன். சபாரத்தினம் கூட அறிந்திருப்பாரோ அறிறேன்

    ReplyDelete
  13. /Blogger அபி அப்பா said...

    நான் சாத்திரிக்காகத்தான் வெயிட்டிங்! வந்துட்டாங்க!

    நண்பா! சாத்திரி உன் வயது என்ன? நான் அப்போ உழைத்து கொடுத்த விமானம் அல்ல அது நாங்கள் பிச்சை எடுத்து காசுசேர்த்து செய்த விமானம்
    அது போன போது எங்கள் மானம் போச்சு
    அது சம்மந்தமா அப்போதைய பேப்ப்ர் எல்லாம் எடுக்க சொல்லி என் "சாந்திரி"க்காக எடுங்கப்பான்னு சொல்லிட்டேன்! வரும் வரை காத்திரு தம்பியே!!!//

    எனது வயதிரக்ட்டும் அபி அப்பா அது சம்பந்தமா வந்த பேப்பர் எல்லாத்தையும் எடுங்க போடுங்க எங்கை விமானம் செய்தாங்க எங்கை குண்டு வைச்சாங்க எண்டதையும் போடுங்க அதுவரை நான் காத்திருக்கிறேன். ஏனெனில் நானும் நீங்கள் சொன்ன ஆண்டுகளில்தான் ஈழத்திலும் இந்தியாவிலும் இருந்திரக்கிறேன் நன்றி

    ReplyDelete
  14. //

    February 6, 2009 3:35 AM
    Blogger கானா பிரபா said...

    அபி அப்பா

    டெலோ இயக்கம் விமானம் செய்ததாக அவர்களே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மானிப்பாய் என்ற இடத்தில் மயூரன் என்ற புலிகள் இயக்க பிரதேசத் தலைவர் மேற்பார்வையில் விமானம் ஒன்று செய்யப்பட்டது. டெலோ இய‌க்க‌ம் உங்க‌ளிட‌ம் விமான‌ம் செய்வ‌தாக‌ச் சொல்லிக் காசு வாங்கியிருக்க‌லாம் போல‌ ;)

    கலைஞர் டெலோவுக்கு வழங்கிய ஆசியும் ஒத்துழைப்பும் வரலாற்றில் இருக்கு. ஆதாரமாக அந்த நேரத்தில் உள்துறைச் செயலராக இருந்த டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர். நிஜமும் நிழலும் நூலில் சொல்லியிருக்கு. ஆனா எதிர்ப்போ ஆத‌ர‌வோ அந்த விஷ‌ய‌த்தில் தெளிவா இருக்க‌ணும். த‌மிழ்ச்செல்வ‌னுக்கு க‌ண்ணீர் அஞ்ச‌லியும் சைக்கிள் கேப்பில் க‌ண்ட‌ன‌மும் போட்டு தானும் குழ‌ம்பி எல்லோரையும் குழ‌ப்புறார். இன்த‌ விஷ‌யத்தில் புர‌ட்சித் த‌லைவியின் தெளிவு மெச்ச‌த் த‌க்க‌து.//

    பிராபா அந்த விமானம் நீங்கள் சொன்ன எங்கள் ஊரிலேயே செய்யப்பட்டது அதை தயாரித்தவர்களில் ஒருவன் சொல்லுவதையே அபி அப்பா நம்புகிறாரில்லை என்னத்தை செய்ய

    ReplyDelete
  15. அபி அப்பா said...

    \\ Anonymous said...
    /பல கோடிகளை செலவழித்து சிறீசபா ரத்தினம் செய்த 2 விமானங்கள் அப்போதே குண்டு வைத்து தகர்க்கப்பட்டதே புலிகளால்! /

    enna kindalaa?\\

    இல்லை அனானி அய்யா! முதன் முதலில் ஒரு போராளி இயக்கம் விமானம் செய்தது ஸ்ரீசபாரத்னம் தலைமையில் இருந்த டெலோ (Tamil Elam Libratin Organaisatiion) தான்!

    இல்லை என சொல்ல சொல்லுங்கள் யாரையாவது!

    வரலாறு முக்கியம் அனானியாரே!

    ஈழப்போராட்டத்தின் தலைமையை யாரிடம் கொடுப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களிடம்தான் இருக்கின்றது நாளய அரசியல் சூழ்நிலை கலைஞ்ஞரை டக்ளஸுக்காக கூட பரிந்து பேசும் நிலைக்கு கொண்டு வரலாம், அப்போதும் கலைஞ்ஞரை நியாயப்படுத்த தற்போது உள்ள கூட்டம் வரிந்து கட்டிக் கொண்டுதான் வரும். அதன் பிறகு டக்ளஸ் தயாரித்த செய்மதி ஒன்று புலிகளால் அழிக்கப்பட்டது என்ற செய்தியும் கொண்டுவருவார்கள். கொள்கைக்காக கலைஞ்ஞரை விரும்பியவர்கள் இப்போது உண்மை புரிந்து வெறுக்கின்றார்கள், மீதிப்பேர் இப்படித்தான்.

    ReplyDelete
  16. //கலைஞர் டெலோவுக்கு வழங்கிய ஆசியும் ஒத்துழைப்பும் வரலாற்றில் இருக்கு. ஆதாரமாக அந்த நேரத்தில் உள்துறைச் செயலராக இருந்த டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர். நிஜமும் நிழலும் நூலில் சொல்லியிருக்//

    அவரு எந்த காலத்திலே உள்துறை செயலரா இருந்தாரு! இப்ப உங்க போன் நம்பர் குட்டுத்தா கூட பேச சொல்லுவேன்!

    ஆனந்தம் சீரியல் வில்லி அதாவது நீண்ட முடி பெண்ணின் அப்பா தான் அது!

    இப்ப சொல்லுங்க பேச சொல்லவா?

    ReplyDelete
  17. \\ஈழப்போராட்டத்தின் தலைமையை யாரிடம் கொடுப்பது என்பதை தீர்மானிக்கும் உரிமை ஈழத்தமிழர்களிடம்தான் இருக்கின்றது நாளய அரசியல் சூழ்நிலை கலைஞ்ஞரை டக்ளஸுக்காக கூட பரிந்து பேசும் நிலைக்கு கொண்டு வரலாம், அப்போதும் கலைஞ்ஞரை நியாயப்படுத்த தற்போது உள்ள கூட்டம் வரிந்து கட்டிக் கொண்டுதான் வரும். அதன் பிறகு டக்ளஸ் தயாரித்த செய்மதி ஒன்று புலிகளால் அழிக்கப்பட்டது என்ற செய்தியும் கொண்டுவருவார்கள். கொள்கைக்காக கலைஞ்ஞரை விரும்பியவர்கள் இப்போது உண்மை புரிந்து வெறுக்கின்றார்கள், மீதிப்பேர் இப்படித்தான்\\

    இல்லை தேவன்! ஸ்ரீ சபாரத்தினமும் த்ம்பி பிரபாகரனும் ஒரே ரேங் தான்! இருவரும் சம காலத்தில் ஒருசேர புகழ் பெற்றவர்கள்! அதாவது ஒருவர் திமுக அடுத்தவர் அதிமுக!

    ஆனால் அப்போது தெரியவில்லை புலிகளுக்கு இவர் இத்தன்னை நாள் இருப்பார்ர், அவர் அதுக்குள்லவே மாண்டு விடுவார்ன்னு!

    அதான் பிரச்சன்னி வந்த காரணம்!

    ReplyDelete
  18. \\ILA said...
    மன்னிக்கனும் அபிஅப்பா!

    கலைஞர் செய்றது சரியில்லே. இதை எல்லா திமுக காரனும் ஒத்துக்குவான். தப்பை, தப்புன்னு நெஞ்ச நிமித்தி சொல்றதுதான் தைரியம். அதிமுக, கண்டிப்பா செய்ய மாட்டாங்க. அதான் வித்தியாசம். அம்மா, என்ன பண்ணினாலும் புண்ணியம்பாங்க
    \\

    நான் கற்பழிச்சுட்டேன்" ன்னு சொம்ன்னா யோக்கியமாம்!

    "இல்லைய்யா இல்லையா நான் அதை பார்த்துக்கிட்டு தாஅன் இருந்தேன்" என சொன்னா அயோக்கியமாம்!

    இதுக்கு வரும் பின்னூட்டத்துக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்!

    ReplyDelete
  19. \\பிராபா அந்த விமானம் நீங்கள் சொன்ன எங்கள் ஊரிலேயே செய்யப்பட்டது அதை தயாரித்தவர்களில் ஒருவன் சொல்லுவதையே அபி அப்பா நம்புகிறாரில்லை என்னத்தை செய்ய\\

    சாத்திரி நண்பா! நானும் இதைத்தான் ஆரம்பம் முதல் சொல்லுகிறேன்!

    முதல் விமானம் ஒரு போராளி செய்தது புலி இல்லை ஸ்ரீ சபாரத்னம் தான்ன்னு!

    ReplyDelete
  20. // பழமைபேசி said...
    ஒரு வரைவுத் திட்டத்தை அன்றைய காலகட்டத்துல, அன்றைய அலட்சியப் படுத்தப்பட்ட தலைவர்கிட்டவும் பெருசு போயி காட்டிட்டு வரச் சொல்ல, சிறுசுக, அலட்சியத்தைக் காலவதியான பெருச்சாலின்னு விட்டுட்டாக‌... அப்புறம் தசரத குமார மதியன்களும் பண்டங்களோட ஆரிகளும் அவனுகளும் இவனுகளும் சேந்துகிட்டு போனாங்க, வந்தாங்க... அலட்சியம் என்னத்த செய்யும்... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கி ஒரு காலம் வரும்ன்ட்டு சுருண்டு முடங்கிடுச்சி.... இன்னைக்கு அந்த பூனையோட காலம் போல‌...ஆனாலும் அது தாய்ப்பூனைதேன்... இஃகிஃகி
    //

    பழமை பேசி!

    ஒன்னியும் பிரியலை:-))

    ReplyDelete
  21. அபி அப்பா


    எம்.ஜி.ஆர் நிஜமும் நிழலும் இதன் ஆங்கில வடிவத்தை இங்கே இணைத்திருக்கின்றேன். படிச்சிட்டு சொல்லுங்க

    http://www.tamilnation.org/books/Politics/mgr.htm

    ReplyDelete
  22. பிரபா! நான் ஏற்கனவே படிச்சு இருக்கேன் அந்த புத்தகத்தை!

    ஆனாலும் தம்பி சொன்னதுக்காக இன்னும் ஒருதடவையும் 8 பார்வேர்டு மெயிலும்:-))

    பிரபா ! ஓரு சந்தோஷம் இது ஒரு அழகான விவாதமாக இருப்பதால்:-))

    ReplyDelete
  23. அபி அப்பா ..உங்கள வைச்சு காமை கீமடி பன்னலியே...ஏன்னா அண்ணன் சிரியோ அவங்க கட்சியோ இது வரை மூச்சு விடலியே அது தான்...

    நீங்க சரியா சொன்னா உங்க வார்த்தை சரித்திரமாகும்...

    சாத்திரி வேர தான் தான் விமானம் செய்தாரின்னு உரிமைக்குரல் எழுப்பிராரு....

    பார்த்துங்க அப்புரம் ..லா அண்ட் ஆர்டர் புறாப்ளம் ஆகிடும்...

    ReplyDelete
  24. //அதுக்கு வந்த பின்னுட்டம் சிலவற்றை அவர் கண்டிப்பா நீக்கியிருக்கணும் அப்படி பார்த்தா கூட சிலர் கண்மூடிதனமாக வெறியுடன் இருப்பதாக தெரியுது.//

    நீங்க கண்மூடித்தனமா ஆதரிக்கும் போது, சிலர் கண்மூடித்தனமா எதிர்ப்பதில் உங்களுக்கு என்ன கவலை!

    நாங்கள் கேள்வி கேட்க காரணம் உங்களுக்கு இப்போ வந்த விழிப்புணர்வு எங்களுக்கு முன்னரே வந்துவிட்டது.

    நீங்கள் கண்ணை கட்டி கொண்டிருந்ததால் தெரியவில்லை

    ReplyDelete
  25. //"ஜெயலலிதா புலிகளின் எதிரி, அதனால் அவரை விட்டுவிடுவோம் ஆனால் கலைஞர் புலிகளின் துரோகி" //

    நீங்க புலியை வச்சு கொழம்பு வையுங்க யாருக்கு என்ன கவலை!
    இந்தியாவில் இருந்து ஆயுதம் போனது ஊர்ஜிதம் ஆகிவிட்டது, அந்த மத்திய அரசுடன் ஏன் கூட்டணி என்று கேட்டால் செயலலிதாவை கேட்டாயா என்று எதிர்கேள்வி.

    தி.மு.க காரங்களுக்கு பதில் சொல்லவே தெரியாதா?
    கேள்வி கேட்க தான் தெரியுமா?

    ReplyDelete
  26. தான் புலிகளுக்கு எதிரானவர் என்பதை கலைஞர் தெளிவாகவே சொல்லி இருக்கின்றார். மற்ற ஈழத்தமிழ் சொந்தங்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தன்னாலான முயற்சிகள் செய்தார். எல்லோரும் ராஜினாமா செய்வோம் என்ற பயமுறுத்தல் வரை.

    உண்மையில் ராஜினாமா செய்து போய் இருக்க வேண்டும் என்பதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களா? அதை ராமதாஸ் அய்யாவிடம் சொல்லிப் பார்க்கலாமே. பின்னால் கிரீஸ் தடவி அனுப்பி விடுவார்.

    யாரும் தம்மடைய இருப்பையே கேள்விக் குறியாக்கி மற்றவர்களுக்கு உதவ முடியுமா? அவ்வாறு ஏதும் செய்தால் அது பைத்தியக்காரத்தனம் என்று நாளை உலகம் பழிக்காதா?

    வெறுமனே புலிகளுக்காக தம் வீட்டின் வசதியான அறைகளிலிருந்து கொண்டு பதிவெழுதுபவர்கள் இப்போது புலிகளின் அத்தியாவசியத் தேவையான ஆயுதம் தரிக்க களமுனைக்குச் சென்றிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். அவரவர்களுக்கு தத்தமது இருப்பின் மீது....

    அருமையான தலைப்பு அபிஅப்பா.

    ReplyDelete
  27. வால் தம்பி! நான் ஜாலிஜம்பர் பதிவிலே நீ போட்ட பேயாட்டத்தை தான் அவர் அனுமதிச்சு இருக்க கூடாதுன்னு சொன்னேன். இல்லாவிடில் அந்த பதிவிலே நல்ல விவாதம் நடந்திருக்க வாய்ப்பு இருந்துச்சு!

    ReplyDelete
  28. Good good Romba Nidharsanam

    ReplyDelete
  29. Good Romba Nidharsanamana Pathivu.

    Ingu Tamil Nattil 1000 thil oruvarukku kooda Tamil Elaththai patri kavalai illai!

    Idhu than Unmai.Indian Airlines, Raiways, Passport, etc ellam Tamilil illai.

    But Sri Lanka Airlines, Airport, Passport ellavatrilum Tamil.

    So my opinion is that, Sri Lankan Government do the best for Tamils and Tamil than Indian Govt.

    So the Elam fighters in Tamil Nadu should fight against Indian Govt. for giving more previlages to Tamil Nadu Tamils as like the SriLankan Govt. giving to Elam Tamils

    ReplyDelete
  30. தலைப்பைப் பார்த்து மறுபடி கலக்கற சந்துரு மாதிரி சிரிக்க வைக்கற மேட்டர்ன்னா... இது ரொம்ப சீரியஸா இருக்கே சார்...

    மீ த எஸ்கேப்பூ...

    ReplyDelete
  31. ஜெயலலிதா மிகத்தெளிவாக உள்ளார்.. கருணாநிதி போல் ஆட்சி போனால் கவலையில்லை என்று சொல்வது அப்புறம் அய்யய்யோ என் ஆட்சி கவிழ்க்க சதி பன்றாங்கோனு ஒப்புபாரி வெக்கல..
    மிகத்தெளிவா சொல்லிட்டாஙக்.. 1991 க்கு முன்னர் வரை புலி ஆதரவு. நம் தேசத்தின் பிரதமரை கொன்ற வினாடியில் இருந்து தெளிவான புலி எதிர்ப்பு. இப்படி தெளிவான, ஸ்திரமான முடிவெடுக்கும் தைரியம் துனிவு ஜெயலலிதாவிற்கு தான் உண்டு.. பயந்து போய் ஆஸ்பிட்டல்ல போய் ஒளியல,.. !

    நீங்கள் சொன்னதில் ஒன்று மிக உண்மை இந்த வலைப்பதிவில் இருக்கும் ரு 5000 பேரு மட்டும் மக்கள் என்ற மனநிலை தான் இந்த பதிவர்களுக்கு.. இவங்க இங்கே பேசுறது தான் ஒட்டு மொத்த தமிழக கருத்துனு ஒரு நினைப்பு..

    காலேஜ் மூடின ஒடனே எல்லாம் வீட்டுல ஜாலியா கம்ப்பூட்டர் கேம் ல .. ஒக்காந்தாச்சு.. காலேஜ் பசங்க 80% பேருக்கு இலங்கை பிரச்சனை என்னனே தெரியாது.. புலிகள் நு சொன்னா ராஜிவை கொன்னாங்களே அவங்க நு தான் சொல்வாங்க.. இங்க வலைப்பதிவுல மட்டும் தான் புலி எதிர்ப்புனு சொன்னாலே கசக்குது..

    வரிசைல நின்னு ஓட்டு போட போற 80% பேருக்கு இலங்கை, புலிகள் எல்லாம் பிரச்சனை அல்ல..
    ஓட்டு போடாத ஒயிட் காலர் கம்ப்யூட்டர் ஆளுங்க சில ஆயிரம் பேரு இங்கே பேசிட்டா அது தான் தமிழக மக்கள் எண்ணமா?

    ReplyDelete
  32. //வால் தம்பி! நான் ஜாலிஜம்பர் பதிவிலே நீ போட்ட பேயாட்டத்தை தான் அவர் அனுமதிச்சு இருக்க கூடாதுன்னு சொன்னேன். இல்லாவிடில் அந்த பதிவிலே நல்ல விவாதம் நடந்திருக்க வாய்ப்பு இருந்துச்சு! //

    வமர்சனங்களை தாங்கி கொள்ளும் பக்குவம் எங்கூர்(மதுரை)காரருக்கு இருக்கு, மாயவரத்துகாரருக்கும் இருக்கும்னு நம்புறேன்.

    நான் தலைமை என்ற சொல்லுக்கே எதிரானவன்.
    தலைவன் என்று யாருமில்லை, அவர்கள் ஒரு வழிகாட்டிகளே! அதன் பின் வேறொரு வழிக்காட்டி! அது அவர்களின் கடமை! அதற்க்காக அவர்களுக்கு கொடி பிடித்து துதி பாடுவது பகுத்தறிவுக்கு எதிர்பதம்.

    இப்போது தலைவர்கள் என்று சொல்லிகொள்ளும் எவரும் அந்த சொல்லுகே லாயக்கற்ற சுயநலவாதிகள்!

    ஏன் நான் கலைஞரை ஆதரிக்கிறேன் என்று பழைய காரணங்களை சொல்வதும். விஜய் காதலுக்கு மரியாதை படத்தில் நன்றாக நடித்தார் அதனால் அவர் என்ன படத்தில் நடித்தாலும் நான் அவரது ரசிகன் தான் என்று சொல்லும் மூடத்தனமும் ஒன்று!

    கருணாநிதியை கேள்வி கேட்டால் உடனே அவன் செயாவுக்கு ஆதரவு,
    பார்ப்பனன் என்ற பொதுபுத்தியை விட்டு வெளியே வாருங்கள்!

    மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வெகுகாலம் ஆகிவிட்டது!

    நீண்ட நாளைக்கு பொய்யும், பணமும் உங்களின் தலைமையை காப்பாற்றாது!

    ReplyDelete
  33. தலைப்பை பார்த்துட்டு வழக்கமான நக்கல் பதிவா இருக்கும்னு தான் நேரம் கிடைக்கும் போது பொறுமையா படிக்கலாம்னு இருந்தேன்.

    விமானம் பற்றிய தகவலால் பதிவின் நோக்கம் ரொம்ப அழகாவே திசை திரும்பிவிட்டது. அதை தாண்டி யாரும் விவாதிக்கவில்லை.

    கலைஞரை திட்றது, சோனியா காந்தி உருவ பொம்மை எரிக்கிறது, தமிழக காங்கிரசை அசிங்கமா திட்றது என்று கன ஜோராக ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நடக்கட்டும் விட்டு விடுவோம்.

    இதைத் தாண்டி இந்த நல்லவர்கள் அனைவராலும் புனிதர்களாகக் போற்றப் படும் புதிய ஈழப் பாச வேஷதாரிகளை பற்றி யாரும் உண்மையை பேசுவதில்லை. இந்த வேஷதாரிகளான வைகோ, திருமாவளவன், ராமதாஸ், கம்யூனிஸ்டுகள் எல்லாரும் ஈழ மக்களுக்காக உருப்படியாக செய்து கிழித்தது என்ன என்று யாராவது சொல்கிறார்களா?

    குரல் குடுக்கிறார்களாம். இதனால் என்ன பயன்? நோகாமல் நோம்பி கும்பிடுவது தான் இந்த குரல் கொடுக்கும் சமாச்சாரம். அதைத் தாண்டி என்ன கிழித்தார்கள்?. சரி அதைத் தாண்டி என்ன செய்ய முடியும்? கள்ளத் தோணியில் போய் போர்க்களத்திலும் நிர்க முடியாது. அப்போ மாதிரி இப்போ இல்லை. சரி அதை விட்ருவோம்.

    அங்க வாழ முடியாமல் தொப்புள்கொடி உறவுகளை நம்பி தமிழகம் வந்து அகதிகளாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அல்லல்படுகிறார்களே அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமே. அபப்டி என்ன செய்து கிழித்தார்கள் என்று தெரிந்துக் கொள்ளலாமா?

    நேற்று கோவையில் ஈழத் தமிழர் ஒருவர் தன் மனைவியயும் மகனையும் தவிக்க விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். காரணம் தெரியுமா? .. கந்து வட்டிக் கொடுமை. அவர் கன்னடன் அல்லது மளையாளி அல்லது சிங்களன் கிட்ட வட்டிக்கு பணம் வாங்கலை.. தொப்புள்க் கொடி உறவுகிட்ட தான். வட்டியாகவே பல லட்சம் கொடுத்தும் இன்னும் கொடுமை தாங்காமல் தான் தன்னையே மாய்த்துக் கொண்டிருக்கிறார். இனி அவர் குடும்பத்தின் நிலை?

    இது போல் ஏராளமான ஈழத் தமிழர்கள் பல்வேறு முகாம்களிலும் ஊர்களிலும் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கருணாநிதி மற்றும் காங்கிரஸ் ’துரோகி’களை தவிர்த்த புனிதப் பசுக்குகள் புடுங்கியது என்ன என்று தெரிந்துக் கொள்ள ஆசை. ஏசி அறையில் அமர்ந்து சகல சவுபாக்யங்களோடு காட்டுக் கூச்சல் போடும் இணைய ”தமிழர்கள்’ இந்த மக்களுக்காக என்ன செய்தார்கள்?

    இங்கு எல்லோருமே ஈழத் தமிழர்களை வைத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தான் தேடுகிறார்களே ஒழிய , யாருக்கும் நிஜ அக்கறை எல்லாம் இல்லை. பிறகு ஏன் கலைஞர் மற்றும் காங்கிரஸ் மீது மட்டும் வெறி கொண்டு தாக்குதல் நடக்கிறது?.

    கலைஞரின் ராஜினாமா முடிவு நாடகமென்றால் , அவருடன் சேர்ந்து அறிவித்த கம்யூனிஸ்டுகளும் ராமதாசும் என்ன யோக்கியம்? அவர்கள் ராஜினாமா செய்து விட்டார்களா?

    ஏன்?, சம்மனே இல்லாமல் ஆஜரானாரே புனிதப் பசு வைகோ. அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றாலும் தங்கள் எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தாரே.. அவர் செய்தாரா?

    ஆனால் கலைஞர் மட்டும் நாடகம் போடுகிறாராம். என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறிங்க?

    விடுங்க அபியப்பா.. டென்ஷன் ஆவாதிங்க.. எல்லாம் ஆட்டு மந்தைங்க.. ஒரு ஆடு எப்டி திரும்புதோ அதே மாதிரி மத்த ஆடுகளும் திரும்புதுங்க. எதுக்கு என்னன்னு எல்லாம் அதுங்களுக்கு தெரியாது.

    ( இதுக்கும் வழக்கம் போல திட்டு தான் விழும்.. நடக்கட்டும்.. ஆனா அனானியா திட்டாதிங்கடே.. பேரோட வந்தே திட்டுங்க..:) )

    ReplyDelete
  34. //கானா பிரபா said...
    ஆதாரமாக அந்த நேரத்தில் உள்துறைச் செயலராக இருந்த டி.ஜி.பி மோகன் தாஸின் எம்.ஜி.ஆர்.//


    correction
    Mohandas (the Director-General of police)

    ReplyDelete
  35. பதிவுக்கு நன்றி அபிஅப்பா.

    பதவி விலகித்தான் ஈழத்தமிழர் மேல் உள்ள பற்றை நிரூபிக்க வேண்டியதில்லை.இலங்கைப்பிரச்சினை தன் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தெளிவாகவே சொல்லிவிட்டார் கலைஞர்.

    இலங்கைப்பிரச்சினை அணையவிடாமல் பார்த்துக்கொள்வதில் இந்தியாவுக்கு இருக்கும் அக்கறை அலாதியானது.நாராயணன்,சிவசங்கரமேனன் போன்ற உயர்சாதி மிருகங்கள் கோலோச்சும் வரை இலங்கையில் தமிழன் செத்துக்கொண்டு தான் இருப்பான்.

    வல்லான் வகுத்ததே சட்டம் என செயல்படும் ராசபக்சே அரசு அதற்கான விலையைக்கொடுக்கும்.

    ReplyDelete
  36. நல்லதொரு சாட்டையடி பதிவு அபி அப்பா

    ReplyDelete
  37. ஒரு நல்ல பதிவுக்கான அறிகுறி.

    இந்த விசயத்தை பொருத்து நான் பாமரன் பார்வையில் இருக்கிறேன்.

    ஈழ விசயம் என்பது ஒரு அயல் நாட்டு பிரச்சினை.

    இதில் கலைஞரோ, இந்தியாவோ எந்த அளவில் தலையிடலாம்?
    கண்மூடித் தனமாக தலையிடலாம் என்றால், காஷ்மீர் விசயத்தில் பாகிஸ்தான் தலையிடுதல் தவறா?

    ஆதரிக்கிறமோ இல்லையோ ஆனால் ஜெயலலிதா போல் கண்மூடித்தனமாக எதிர்ப்பது எந்த விதத்தில் ஞாயம்?

    ஒரு தலைவராக இருந்து கொண்டு வெளிப்படையான ஆதரவு என்பது நாட்டுக்கு நலனா? உமக்கும் எமக்கும் தெரிந்த பல சின்ன விசயங்கள் விஷயங்களில் ஊறித்திளைத்த கலைஞருக்கு தெரியாமல் இருக்குமா?
    இருக்கும். அவர் பட்டும் படாமல் ஈழ மக்களை காக்கும் செயலில் ஈடுபடுவார் என்றே நம்புகிறேன். நம் பதிவர்களுக்காக ஒவ்வொன்றையும் சொல்லிவிட்டு செய்ய இது சமைல் குறிப்பு அல்ல என்பது என் வாதம்.

    ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா நல்லவர் என்று யாரும் எண்ணினால் அது "கட்டுச் சோற்று பெருச்சாளியே"

    பக்கத்து மாநில விசயத்திலேயே அடக்கி வாசிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கும் பொழுது, அயல் நாட்டு விவகாரத்தில் எந்தளவு செல்லலாம் என்று யாராவது விளக்கினால் நல்லது.

    பாலஸ்தீன் விசயத்தில் யாசர் அராபத் அமைதி பேச்சு வார்த்தை என்று அறிக்கையில் மட்டு சொல்லிக் கொண்டு போராளிகளுக்க உதவி செய்து கொண்டு இருந்தார்.போராளிகளுக்குத் தெரியும், அராபத் நல்லவரென்று.ஆனால் நம் பதிவர்கள் போன்ற ஊடகம் வழி சென்ற மக்கள் அவரை துரோகி என்றார்கள்.இஸ்ரேலிடம் விலை போயவிட்டார் என்றார்கள். ஆனால் அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவர் எந்தளவுக்கு போராளிகளுக்கு உதவினார் என்று.

    சில பதிவர்களைப் போன்று கலைஞரும் எடுத்தோம் கவுத்தோம் என்று செயல்பட்டால், பெரிதாக என்ன நடக்கும். கலைஞர் ஆட்சி கவிலும். ஜெயா வருவார். ஈழத் தமிழனுக்கு கிடைக்கும் மறைமுக உதவிகூட கிடைக்காமல் போகும்.

    அப்போ குத்துதே குடையுதே என்றால் யாருக்கு லாபம்.

    சிந்திப்பீர்.பதிவிடுவீர்.
    என்னைப் பொருத்து கலைஞர், மூளையுள்ள தமிழ் போராளி.

    ReplyDelete
  38. //பாலஸ்தீன் விசயத்தில் யாசர் அராபத் அமைதி பேச்சு வார்த்தை என்று அறிக்கையில் மட்டு சொல்லிக் கொண்டு போராளிகளுக்க உதவி செய்து கொண்டு இருந்தார்.போராளிகளுக்குத் தெரியும், அராபத் நல்லவரென்று.ஆனால் நம் பதிவர்கள் போன்ற ஊடகம் வழி சென்ற மக்கள் அவரை துரோகி என்றார்கள்.இஸ்ரேலிடம் விலை போயவிட்டார் என்றார்கள். ஆனால் அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவர் எந்தளவுக்கு போராளிகளுக்கு உதவினார் என்று.//


    :):):)

    ReplyDelete
  39. இதே ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால், நினைக்கவே பதறுகிறது.

    உடன் பிறாவாத் தம்பி வைகோவுக்கு ஜெயிலில் களி தின்று கொண்டு இருப்பார்.

    உண்ணாவிரதம் இருந்த திருமா காணாமலே போய் இருப்பார்.

    வீரன் இராமதாஸ் ஏதாவது கிளினிக்கில் ஊசி போட்டுக் கொண்டு இருப்பார்.

    நெடுமாறன் நெஞ்சடைத்து புலம்பிக் கொண்டு இருப்பார்.

    சோவும், சுப்பிரமணிய சுவாமியும் கெக்கரித்து சிரித்துக் கொண்டு இருப்பார்.

    ஹிட் கொடுக்கும் பதிவர்கள் தேள் கொட்டி விழித்துக் கொண்டு இருப்பர்.

    வெளிநாட்டில் வாழும் ஈழப்பதிவர்கள் அடடா தப்பு பண்ணிட்டமே,
    "கலைஞர் ரொம்ப நல்லவரில்ல" என்று உச்சுகொட்டிக் கொண்டு இருப்பர்.

    வேற என்ன பெரிசா நடக்கப் போகுது.

    இப்ப பேசுகிறோமே அந்த பேச்சு சுதந்திரம்கூட இல்லாமல் நொந்து நூலாயி நாமெல்லாம் சட்டையக் கிழிச்சுகிட்டு தெரு தெருவா அலைஞ்சிகிட்டு இருப்போம்.

    லக்கிலுக் "கலைஞர் வாழ்க" என்று பதிவு போட்டு இருப்பார்.
    நாமளும் "அட ஆமால்ல" என்று ஆதங்கப்பட்டிருப்போம்.

    அபி அப்பா...
    எங்களுக்கு எங்களைப் பத்தி தெரியாதா?

    நாங்க எப்பிடி வேணாலும் பேசுவோம். பாராட்டி கமெண்ட் மட்டும் போடுங்க, யார வேணாலும் தாக்குவோம்ல.

    லூஸ்ல விடுங்க தல.

    ReplyDelete
  40. அபி அப்பா has left a new comment on your post "தமிழின் சிறப்பு - பிதாகரஸ் தியரம் (Pythagoras Theo...":

    //அட நல்லா இருக்கு இந்த விஷயம். இந்த விஷயம் எனக்கு புதுசு! நன்றி உழவன்! இப்பதான் உங்க பதிவு ஒண்ணு ஒண்ணா படிச்சுகிட்டு இருக்கேன், நல்லா இருக்குங்க! நட்சத்திர வாழ்த்துக்கள்!//


    தங்களின் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி !
    தொடர்ந்து உங்களது மேலான கருத்துக்களை இடுக.

    உழவன்

    ReplyDelete
  41. Did you findout the evidence abi father??

    ReplyDelete
  42. // Anonymous said...
    Did you findout the evidence abi father??//

    இல்லை அனானி நண்பா! நான் ஒரு அரசியல் குரு என சொல்லப்படும் மயிலாடுதுறை வக்கீல் ராமதாஸ் (ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டவர் சார்பாக வ்வாதிட்டவர்) அவர்களிடம் அப்போது இருந்தது சில் புத்தகங்கள் மற்றும் குறிப்புகள். அதையே நான் சொல்லியிருந்தேன். தொலைபேசிய போது அவர் மறைந்து விட்ட செய்தி தான் எனக்கு கிடைத்தது. ஆனாலும் நான் ஊருக்கு செல்லும் போது அவர் நூலகத்தில் தேடுவேன். நன்றி!

    ReplyDelete
  43. //இல்லை அனானி நண்பா! நான் ஒரு அரசியல் குரு என சொல்லப்படும் //

    என் அரசியல் குரு என திருத்தி படிக்கவும்!

    ReplyDelete

கருத்து சொல்லிட்டுப் போங்க கந்தசாமிகளா:))